பின்பற்றுபவர்கள்

28 மே, 2012

ஒரு இடைத்தேர்தலும் எதிர்கட்சி வெற்றியும் !


தமிழகத்தில் இந்தியாவில் இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சியின் வெற்றி கணிக்க முடியாதது என்று சொல்ல ஒன்றும் இல்லை, கண்டிப்பாக ஆளும் கட்சிதான் வெற்றிபெறும் இதற்குக் காரணம் பணமழை மற்றும் வாக்களர்களுக்கு லஞ்சம் என்று சொல்லப்பட்டாலும், அடுத்து பொதுத் தேர்தலுக்கு முன்பு எதிர்கட்சிக்கு வாக்களிப்பதால் எந்த நன்மையும் கிடைக்காது என்பதும் பெரிதளவும் உண்மை. மீறியும் வாக்களித்தால் ஆளும் கட்சியின் சினத்துக்கு ஆளாகி தொகுதியின் வளர்ச்சி பணிகள் முடங்கிவிடும் என்று மக்கள் கருதுவார்கள், இப்படித்தான் ஆளும் கட்சிகள் வெற்றிபெறுகின்றன அத்தகைய வெற்றி நல்லாட்சி நடைபெற்றதற்கான வெகுமதி என்று ஆளும் கட்சி வெளியே பெருமையாகக் கூறிக் கொள்ளும், தொடர்ந்து இடைத்தேர்களில் இமாலய வெற்றி பெறும் எந்தக் கட்சியும் அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய வரலாறு இல்லாததால் ஆளும் கட்சியின் தற்பெருமைகள் மிகவும் நாடகத்தனமானது என்பதை அரசியலே அறியாத வாக்காளர்களும் உணர்ந்து தான் உள்ளனர்.

இடைத்தேர்தல் என்பதே அரசின் பணவிரயமும், பொது மக்களின் நேரவிரயமும் தான் எதிர்கட்சியினரின் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தல் அந்தக் கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் இழப்பு என்பதைத் தவிர வேறெதும் இழப்பு இல்லை. இடைத்தேர்தல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை, கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வெற்றி என்பவை கட்சிக்கு கிடைக்கும் வெற்றி தான், தனிப்பட்ட செல்வாக்கினால் வெற்றிபெறுபவர்கள் இல்லை எனும் போது தேர்தல் ஆணையம் புதிதாக தேர்தல் நடத்தாமல் வெற்றிபெற்ற கட்சியினர் பரிந்துரை செய்யும் வெறொருவருக்கு பதவியைக் கொடுத்துவிடலாம். எல்லாவற்றையும் முறைப்படுத்த முயலும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலுக்கான விதிகளை அமைத்தால் நல்லது, கட்சி சார்பில் போட்டியிடும் வாக்களர் வெற்றி தனிப்பட்ட வெற்றியாக கருதப்படாது கட்சி விரும்பினால் எவரையும் மாற்றிக் கொள்ள முடியும் என்ற அறிவித்தல் இருந்தால் இடைத்தேர்தல் செலவுகள் பெரிதாகக் குறைக்கப்படும். இதில் இருக்கும் சிக்கல் குறிப்பிட்ட வெற்றிபெற்ற வேட்பாளரை கட்சி சுதந்திரமாக செயல்படவிடாமல் 'மாற்றிவிடுவேன்' என்கிற மிரட்டல் இருக்கும் என்பது உண்மை தான். தொகுதி மக்களுக்கே பிடிக்காதவரை கட்சி பரிந்துரைத்தாலும் அவர்களின் பதவிகாலம் ஐந்தாண்டுக்கு குறைவே தவிர பிடிக்காதவரை பரிந்துரைத்த கட்சியை மக்கள் மீண்டும் ஆதரிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் இடைத்தேர்தல்களை தவிர்க்க முடியும்.

******

சிங்கப்பூரில் சென்ற சனிக்கிழமை ஒரு இடைத்தேர்தல் நடந்து முடிந்தது, அந்த தொகுதி வழக்கமாக கடந்த 20 ஆண்டுகளாக எதிர்கட்சியே வெற்றிபெரும் தொகுதி. தொகுதியை வென்ற நாடாளுமன்ற உறுப்பினரின் நடத்தை ஒழுங்கீனம் காரணமாக கட்சி அவரை பதவி விலகச் சொல்லியது. இதனால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. ஆளும் கட்சியின் பெரும் குறையான அந்தத் தொகுதியை மக்கள் அதிருப்தியின் காரணமாக வென்றுவிடமுடியும் என்று நம்பியது. ஆனாலும் வெறும் மூன்று விழுக்காட்டு வாக்குகளே ஆளும் கட்சிக்கு கூடுதலாக கிடைக்க எதிர்கட்சி அந்த தொகுதியை தக்க வைத்துக் கொண்டது.
இதெல்லாம் தமிழகத்தில் இந்தியாவில் நடக்க வாய்ப்பிருக்கிறதா ?

இடைத்தேர்தல் என்றாலே முதலமைச்சர், அமைச்சர், அரசு அலுவலர்கள் என அனைத்து அரசு எந்திரங்களும் ஆளும் கட்சிக்கு பம்பரமாகச் செயல்பட எதிர்கட்சி இடைத்தேர்தலில் வெல்வது கனவிலும் நடைபெறாத ஒன்று. சிங்கப்பூர் ஜெனநாயகம் பற்றி உலக நாடுகளில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் பொது மக்களை பயமுறுத்தி அல்லது எதிர்கட்சியை முடக்கி தேர்தலில் வென்றுவிடலாம் என்று அவர்கள் முயற்சிப்பது கிடையாது காரணம் உண்மையான ஜனநாயகம் இருந்தால் ஆளும் கட்சி மீது எல்லா தரப்பினருக்கும் நம்பிக்கை இருக்கும் என்று நினைக்கிறார்கள், இந்த நம்பிக்கை இல்லாமல் செயல்படும் தமிழக, இந்திய ஆளும் கட்சி அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் வெறும் பிம்பங்களை ஏற்படுத்திவிட்டு அடுத்த பொதுத்தேர்தலில் எதிர்கட்சி வரிசையில் அமர்கிறார்கள், சில ஆளும் கட்சிக்கு அந்த வாய்ப்புக் கூட கிட்டாமல் போய்விடுகிறது.

மக்களாட்சியில் அரசு என்பது மக்களுக்கான சேவை நிறுவனங்கள் என்பதை மறந்து ஆளுமை செலுத்தும் மன்னராட்சி அமைப்பாகவும், அதன் பதவி இன்பங்கள், பிற் சலுகைகள், ஆட்சியில் இருக்கும் வரை விஐபி மதிப்பு இவைகளினால் ஆளுமைப் போட்டி என்ற அளவில் அரசியல் கட்சிகள் முனைந்து செயல்படுகின்றன. இவர்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வது கிடையாது, பதவியில் இருக்கும் வரை தனிவிமானங்களில் நாடுகளைச் சுற்றிப் பார்த்து இராஜ மரியாதைகளைப் பெற்று சுகபோக வாழ்கை வாழ்ந்துவருகிறார்கள், இவர்களை ஒப்பிட மன்னர் ஆட்சி முறைகளே தேவலாம், அதில் அதிகார வர்க்கம் என்று ஒன்று தான் இருக்கும், ஆனால் மக்களாட்சியிலோ வருண பேதம் போன்று அடுக்கடுக்கான அதிகார அமைப்புகள். ஜென நாயகம் என்பது மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அமைப்பிற்கெல்லாம் தலைமையானது என்று சொல்லும் படிதான் நடந்து கொள்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகளால் மக்கள் ஆட்சிகள் நம்பிக்கையற்றவையாகும் காலம் தொலைவில் இல்லை.

8 கருத்துகள்:

raghs99 சொன்னது…

Sir

Where is democracy is singapore, it is an autocratic land.
dont joke too much

கோவி.கண்ணன் சொன்னது…

//Sir

Where is democracy is singapore, it is an autocratic land.
dont joke too much//

ஜெனநாயகமோ வேறு எந்த நாயகமாக இருந்தாலும் மக்களுக்கு வசதி செய்து கொடுத்து வேலை வாய்பளித்தால் சரி தானே.

சிங்கப்பூரில் பெண்கள் நல்லிரவில் வீடு திரும்ப முடியும்

சிங்கப்பூர் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு இருக்கிறது

சிங்கப்பூர் குடிமகன்களில் வேலை அற்றவர்கள் சிறிய விழுக்காடு அளவுக்கே

சிங்கப்பூருக்கு வேலை வாய்ப்புத் தேடிவருபவர்களுக்கு வாய்பளிக்கிறது

சிங்கப்பூரில் அரசியல் சூழலும், மக்களின் வாழ்க்கைச் சுழலும் அமைதியாக இருக்கிறது

சிங்கப்பூரில் நன்கு படித்தவர்களின் உழைப்பை மட்டுமே உரிஞ்சாமல் விருப்பமுள்ளவர்களுக்கு குடியுரிமை தகுதியும் வழங்குகிறது

உழைப்புக்கு இங்கே மரியாதையும், தனிமனிதனின் தனிப்பட்ட உரிமைகள் பிறருக்கு துன்பம் இல்லை என்றால் அனுமதிக்கப்படுகிறது

பெண்களால் சுதந்திரமாக செயல்படவும், அவர்களுக்கு சமமான வாய்ப்பும் வழங்கப்படுகிறது

திருநங்கைகள் கேவலமாக நடத்தப்படுவதில்லை

அரசியல்வாதிகளுக்காக சாலைகள் போக்குவரத்து தடுக்கப்படுவதில்லை.இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், ஜெனநாயகம் இருக்கும் என்று நம்பும் நாடுகளில் இவையெல்லாம் இருந்தால் நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்ளலாம்

ராஜ நடராஜன் சொன்னது…

நீங்க எப்ப சகோ.சுவனப்பிரியன் கட்சியிலே சேர்ந்தீங்க!விட்டா ஜெர்மன் தேர்தல் முறையையே இந்தியாவுக்கும் கொண்டு வந்து விடலாமென ஆம் போடுவிங்க போல இருக்குதே:)

எகிப்தெல்லாம் ஒரு தேர்தலுக்கே தடுமாறும் நிலையில் நமது ஜனநாயக தேர்தல் முறையில் குறைகள் இருந்தாலும் கூட ஆசிய நாடுகளில் தேர்தல்களை சிறப்பாக நிகழ்த்துவதில் இந்தியா ஒஸ்திதான்.

Barari சொன்னது…

நீங்கள் வசிக்கும் நாட்டில் நடக்கும் நல்லவைகளை நம் நாட்டுடன் ஒப்பிட்டு ஆதங்கப்படுகிறீர்கள் சரி. ஆனால் இதே போல் மற்றவர்கள் எழுதும் போது அந்த நாட்டுக்கு ஜால்ரா தட்டுவதாக விமர்சிக்கிறீர்கள்.உங்களுக்கு ஒரு அளவுகோல் அடுத்தவருக்கு வேறா

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் வசிக்கும் நாட்டில் நடக்கும் நல்லவைகளை நம் நாட்டுடன் ஒப்பிட்டு ஆதங்கப்படுகிறீர்கள் சரி. ஆனால் இதே போல் மற்றவர்கள் எழுதும் போது அந்த நாட்டுக்கு ஜால்ரா தட்டுவதாக விமர்சிக்கிறீர்கள்.உங்களுக்கு ஒரு அளவுகோல் அடுத்தவருக்கு வேறா//

நல்ல காமடி சார், சுவனப்பிரியன் குறிப்பிட்ட பதிவில் பாலைவனத்தில் சவுதி அரேபியாவில் விவசாயம் செய்கிறார்களாம் அதை ஏன் இந்தியா பின்பற்றவில்லை என்று அபத்தமாக எழுதி இருந்தார். சிங்கப்பூரில் தண்ணீர் கடன்வாங்கி அதனை தூய்மைப்படுத்தி மக்களுக்கு கொடுக்கிறார்கள், அதையே ஏன் இந்தியா பின்பற்றக் கூடாது என்று நானும் அபத்தமாக எதையாவது எழுதி இருந்தால் நீங்கள் சுட்டலாம், நான் குறிப்பிட்டு இருப்பது நாட்டின் வளம் குறித்து அல்ல, அரசியல் மற்றும் நம்பகத்தன்மை நல்வாழ்கை குறித்து குறிப்பாக பெண்கள் நலன் குறித்து இந்தியா சவுதியிடம் இருந்து கற்றுக் கொள்ள ஒன்றும் இல்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜ நடராஜன் கூறியது...
நீங்க எப்ப சகோ.சுவனப்பிரியன் கட்சியிலே சேர்ந்தீங்க!விட்டா ஜெர்மன் தேர்தல் முறையையே இந்தியாவுக்கும் கொண்டு வந்து விடலாமென ஆம் போடுவிங்க போல இருக்குதே:)//

ராஜ்,

முதலில் உங்கள் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை, பிறகு சுவனப்பிரியன் தேர்தல்பற்றி எழுதி இருக்கிறார் என்று அறிந்தேன், நான் இதை எழுதிய போது அவரது படிவை நான் பார்க்க / படிக்கவில்லை

raghs99 சொன்னது…

Hi Kannan,

I was also in singapore and had a feeling of someone is watching us always.
indha kilikku thanga koondu pidicha saridhann

Kind regards
Raghs

கோவி.கண்ணன் சொன்னது…

//Hi Kannan,

I was also in singapore and had a feeling of someone is watching us always.
indha kilikku thanga koondu pidicha saridhann

Kind regards
Raghs//

சமூக குற்றவாளிகளுக்கு தான் அத்தகைய பயம் இருக்கனும். நமக்கு ஏன் ? நம்ம படுக்கை அறையை / குளியல் படம் எடுக்காத வரை ஓகே தான்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்