பின்பற்றுபவர்கள்

6 மே, 2012

மனதின் முகங்கள் !

இரவு 8 மணி நல்லப் பசி லிட்டில் இந்தியா பக்கம் கோமல விலாஸ் உணவுகத்திற்குச் சென்றேன், என்ன சாப்பிடுறிங்க ? உணவகப் பணியாளர் கேட்க 'நாள் தோறும் தான் இரவு சாப்பாட்டுன்னு ஆகிப் போச்சு' இன்னிக்காவது வேற வித்யாசமாக... இந்திய உணவகத்தில் என்னத்த வித்யாசமாக, வழக்கம் போல் முதலில் இரண்டு இட்லியைச் சொல்லுவோம்' னு நினைத்து 'இரண்டு இட்லி' சொல்லிவிட்டு அமர்ந்தேன், எதிரே உள்ளவர் 'புல் மீல்ஸ்' கட்டிக் கொண்டு இருந்தார், எதிரே உட்கார்ந்து சாப்பிட்டாலும், தமிழ் தெரிந்தவர் என்றாலும் தண்ணி இல்லாத காட்டில் இருந்தால் தான் நமக்கு 'நீங்களும் தமிழா ?' ன்னு கேட்கவரும், இங்கே சிங்கப்பூரில் லிட்டில் இந்தியாவில் தமிழாட்களைப் பார்க்க, பேச ஆவலாக இருப்பார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது, எனக்கு அது போல் முன் பின் தெரியாதவர்களை விசாரிக்கும் மன நிலை வாய்ததது இல்லை. எதிரே இருப்பவர் என்ன சாப்பிடுகிறார், எப்படி சாப்பிடுகிறார் என்பதைப் பார்பது நாகரீகமின்மை இல்லை என்றாலும் நம் கண்ணுக்கு தொலைவில்லாத இடம் என்பதால் பார்வைகள் படுவதை நம்மால் தடுக்க முடியவில்லை, இலையில் உள்ளவற்றில் பெரும்பாலானவற்றை காலி செய்து கொண்டு இருந்தார், சாம்பார் ரவுண்ட் முடிந்து புளிக் கொழம்பை ஊற்றிப் பிசைந்து கொண்டு இருந்தார்.

எனக்கு இட்லி வந்தது, தேங்காய் சட்னி, காரச் சட்னி மற்றும் சாம்பார் உடன் 12 செமி விட்டத்தில் கொஞ்சம் சப்பையாக ஆனால் காய்ந்து போகாத சூடான இட்லி, மொளகாப்பொடி இருந்தால் நல்லா இருக்கும், எதிரே சிறிய பாட்டிலில் மேசை மீது இருந்தது, ஏற்கனவே தின்று பார்த்த அனுபவத்தில் அங்கே அதன் சுவை தெரியும் என்பதால் சட்னி, சாம்பாரிலேயே இட்லியை உருத்தெரியாமால் பிசைந்து தின்று விட்டடேன், இரண்டு இட்லியில் பசி போய்விடுமா என்ன ? அடுத்து என்ன சொல்லலாம் ? உணகப் பணியாளர் அந்தப் பக்கம் கடந்து போக, அழைத்து ஒரு 'ரவா' தோசை' என்று சொல்லிவிட்டு (படத்தில் சாதா தோசை இருக்கேன்னு கேட்காதிங்க) எதிரே கவனித்தேன், புல் மீல்ஸ் பார்டி கிட்டதட்ட இலையில் தயிர் பச்சடி தவிர்த்து எல்லாவற்றையும் முடித்துவிட்டு அடுத்து ரசத்தை குடித்துக் கொண்டு இருந்தார், எனக்கு வேறு தட்டில் வைக்கப்பட்ட தோசை சாம்பரை முற்றிலுமாக உறிஞ்சு வைக்க, உணவகப் பணியாளரை அழைத்து 'கொஞ்சம் சாம்பார்' என்று கூறி அது வரும் தற்காலிக இடைவெளியில் தோசையை சட்னியில் துவைத்துக் கொண்டு இருந்தேன், எதிரே அமர்ந்திருந்தவர், பாயாசத்தைக் காலி செய்து எழுந்து சென்றார், சாம்பார் வந்ததும் நானும் மீண்டும் எஞ்சிய தோசைக்கு சாம்பார் ஊட்டிக் கொண்டு இருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் சற்று தொலைவில் பார்க்க, எதிரே அமர்ந்து சாப்பிட்டவர் அதே உணவகப் பணியாளரிடம் எதோ கேட்டுக் கொன்டு இருந்தார், உணவகப் பணியாளர் நான் சாப்பிடும் மேசைக்கு அருகே அவரை அழைத்து வந்து

'நீங்க கேட்டு இருக்கலாமே சார், இங்கே இவருக்கு தோசைக் கொடுக்கக் கூட டேபிளுக்கு அருகே வந்தேன், அப்பக் கூட நீங்க எதுவும் கேட்கவில்லையே' கொஞ்சம் பணிவானக் குரலில் உணவகப் பணியாளர் விளக்கிக் கொண்டு இருந்தார். அதற்கு புல் மீல்ஸ் பார்டி

'நீங்க தான் வேற எதுவும் வேண்டுமா ? என்று கேட்டு இருக்கனும், எல்லாருமே கேட்கமாட்டாங்க, எதிரே அமர்ந்து சாப்பிடுபவர்கள், இவன் சோத்தை இந்த கட்டுக் கட்டுறானேன்ன்னு நினைப்பாங்கன்னு நினைத்து கூச்சத்தால் கேட்காமலே இருந்துடுவாங்க'

என்னது பேச்சுவாக்குல நம்ம மேல பழியைப் போடுறானே இவன், என்று நினைத்தேன், 'என்ன சார் எதுக்கு என்னை இதில இழுக்கிறிங்க' ன்னு கேட்கலாம் என்று நினைத்தேன்.

அதற்குள் பணியாளர் 'நீங்க சொல்றது புரிகிறது சார், நான் இனிமே மற்றவர்களிடம் அப்படிக் கேட்கிறேன்' என்று சொல்ல புல் மீல்ஸ் பார்டி 'ஓகே ஒகே' என்று சென்றுவிட்டார்.

ஹோட்டலில் காசு கொடுத்து தானே சாப்பிடுகிறோம், ஓசியில் சாப்பிடுவது போல் ஏன் கூச்சப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும், பின்னர் அதை ஏன் பெரிது படுத்த வேண்டும் ? புல் மீல்ஸ் பார்டி கூடுதல் சோறு கேட்க நினைத்தாரா ? மேலும் காய்கறி அப்பளம், சாம்பார் கேட்க நினைத்தாரா ? தெரியவில்லை, எதோ கேட்க நினைத்து தயக்கத்தினால் அமைதியாக இருந்துவிட்டு பின்னர் பணியாளரிடம் புலம்பிவிட்டுச் சென்றார்.

********

இரவு 8 மணி நல்லப் பசி லிட்டில் இந்தியா பக்கம் கோமல விலாஸ் உணவுகத்திற்குச் சென்றேன், காலியாக இருக்கும் டேபிளைத் தேடி அமர, என்ன சாப்பிடுறிங்க ? உணவகப் பணியாளர் கேட்க 'வீட்டுல தான் காலை இட்லி, இரவு அதே மாவில் தோசை இல்லாட்டி சப்பாத்தி, இன்னிக்கு ஒரு நாளாவது ராத்திரியில் நல்லா சாப்பிடனும், அதுவும் உணவகத்தில் நாலஞ்சு காய்கறி மற்றும் சாம்பார், காரக் குழம்பு ரசம் எல்லாம் கொடுபபங்க, பேசாமல் சாப்பாடே சொல்லிடுவோம் என்று முடிவு செய்து 'சாப்பாடு' என்று கூறினேன். வரும் இடைவெளியில் கூகுள் +, தமிழ் வெப்தளங்களில் ஓட்டிவிட ஐந்து நிமிடத்திற்குள் சாப்பாடு வாழையில்ஆவிபறக்க, இதர பரிவாரங்களுடன் வந்தது, சோறு  அளவு சாப்பாடு இல்லை, ஆனால் அளவாக எடுத்துவருவார்கள், நமக்கு போதவில்லை என்றால் கேட்கலாம், சாம்பார், ரசம், காரக் குழம்பு (சில நாட்களில் அது மோர் குழம்பு) தவிர்த்து கூட்டுப் பொறியல் மீது தான் என் நாட்டம் இருக்கும், இன்று வந்தது கத்திரிக்காய் பிரட்டல், பொதுவாகவே நான் கத்திரிக்காயை எப்படிச் செய்தாலும் வேறு வழி இல்லை என்பதைத் தவிர்த்து சாப்பிட விரும்புவதில்லை, கத்த்ரிக்காய் பிரட்டல் தவிர்த்து, புடலங்காய் கூட்டு மற்றும் சவ்சவ் கூட்டும் இருந்தது, கூடவே அப்பளம், கொஞ்சம் காரத் துவையல். நான் வாழைக்காய் பொறியல், காராக் கருணை அல்லது உருளை கிழங்கு மசாலக் கறிகளை எதிர்பார்ப்பேன், சில நாள் கிடைக்கும், சில நாள் கிடைக்காது, அன்று வந்த தொட்டுக்கைகள் அன்று எனக்கு ஏமாற்றம் தான்.

என் எதிரே காலியான இருக்கையில் ஒருவர் அமர்ந்து 'இரண்டு இட்லி' என்று சொல்லிவிட்டு காத்திருந்தார்.

கொண்டு வைத்த கவளச் சோற்றில் கொஞ்சம் ஒதுக்கி வைத்து ஒருதடவை சாம்பார் ஊற்றிச் சாப்பிடலாம், மீதம் இருப்பதை காரக் குழம்பு போட்டுச் சாப்பிடலாம், சாம்பார் ஊற்றி நன்றாக பிசைந்தேன், பட்டும் படாமல் சாம்பார் ஊற்றிச் சாப்பிடப் பிடிக்காது, நிறைய ஊற்றிச் சாபிடுவேன், அவர்கள் சிறிய பிளாஸ்டிக் கப்பில் வைத்த சாம்பார் தீர்ந்தே விட்டது, இன்னும் ஒரு தடவை சாம்பார் ஊற்றிச் சாப்பிட ஆசை இருந்தாலும், அடுத்து காரக் குழம்பு, ரசம், தயிர் வரிசைக்கட்டி கப்புகள் காத்திருக்க, காரக் குழம்பு அடுத்த இலக்காக இருந்தது, எனக்கு பிடிகாதவற்றை முதலில் தீர்க்க வேண்டும் என்பதில் பாதி கத்திரிக்காய் காலியானது.

எதிரே இருந்தவர் இட்லியை முடித்து தோசையை மென்று கொண்டு இருந்தார், நான் என்ன சாப்பிடுகிறேன் என்பதை அவர் பார்க்கிறாரோ என்று நினைத்துக் கொண்டே அவர் என்ன என்ன சாப்பிடுகிறார் என்பதை கவனித்துக் கொண்டு இருந்தேன்.

மீதம் இருந்த வெள்ளைச் சோற்றில் காரக் குழம்பை ஊற்றி பிசைந்தேன், நல்ல காரம் காரக் குழம்புக்கு தோதான துவையல் ஏற்கனவே தின்று தீர்ந்து போய் இருந்தது, உணவகப் பணியாளர் அருகில் இருக்கிறாரா என்று பார்க்க சற்று தொலைவில் வேறொரு மேசைக்கு பறிமாறிக் கொண்டு இருந்தார், எனக்கு பிடிக்குதோ, இல்லையோ உணவுப் பொருள்களை வீணாக்கக் கூடாது என்ற கொள்கையில் மீதம் இருந்த கத்திரிக்காய் பொரியலும் தீர்ந்தது, சோறும் கிட்டதட்ட முடிய, ரசம் அல்லது தயிறுக்காக இன்னும் கொஞ்சம் சோறு இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைத்து கேட்க நினைத்தேன், 'சோத்தைக் கொண்டு வந்து வைத்தப் பிறகு சர்வர் எட்டிக் கூடப் பார்க்கலையே, எதுவும் வேண்டுமா ? என்று கூட கேட்கவில்லையே, இது தான் வாடிக்கையாளர் சேவையா ? இவர்களுக்கெல்லாம் பணம் வந்தால் போதும், மறுபடியும் கேட்டு சாப்பிடும் அளவுக்கு இந்த சாப்பாட்டில் பெரிய விசேசம் எதுவும் இல்லை என்றெல்லாம் நினைத்து பின்னர் ஒருவாறு திருப்தி பட்டுக் கொண்டு, காத்திருந்த ரசத்தை அப்படியே குடித்தேன், பின்னர் பாயாசம். ஒரளவு வயிறு நிறைந்திருந்தாலும் எதோ குறைவாதாக நினைத்து கை கழுவச் சென்றேன்.

கை கழுவிவிட்டு பணம் செலுத்துமிடம் அருகே வர எனக்கு உணவு கொண்டு வந்த பணியாளர் பில்லை நீட்டினார், அவரிடம்  'நீங்களெல்லாம் மீல்ஸ் சாப்பிடுகிறவர் பக்கம் கொண்டு வந்து வைத்த பிறகு வரவே மாட்டிங்களா ?, எதுவும் வேண்டுமா என்று கேட்கவே மாட்டிங்களா ?' என்றேன், அவர் கொஞ்சம் மிரட்சியுடன், அருகே அவரது உணவக மேனேஜர் நிற்பதால் சற்று பயந்து என்னை நான் சாப்பிட்ட மேசை அருகே அழைத்துச் சென்று.

'நீங்க கேட்டு இருக்கலாமே சார், இங்கே இவருக்கு தோசைக் கொடுக்கக் கூட டேபிளுக்கு அருகே வந்தேன், அப்பக் கூட நீங்க எதுவும் கேட்கவில்லையே' கொஞ்சம் பணிவானக் குரலில் உணவகப் பணியாளர் விளக்கிக் கொண்டு இருந்தார். அதற்கு நான்,

'நீங்க தான் வேற எதுவும் வேண்டுமா ? என்று கேட்டி இருக்கனும், எல்லாருமே கேட்கமாட்டாங்க, எதிரே அமர்ந்து சாப்பிடுபவர்கள், இவன் சோத்தை இந்த கட்டுக் கட்டுறானேன்ன்னு நினைப்பாங்கன்னு நினைத்து கூச்சத்தால் கேட்காமலே இருந்துடுவாங்க'

அதற்குள் பணியாளர் 'நீங்க சொல்றது புரிகிறது சார், நான் இனிமே மற்றவர்களிடம் அப்படிக் கேட்கிறேன்' என்று சொல்ல 'ஓகே ஒகே' என்று சொல்லி வந்துவிட்டேன்.

நான் எதிரே உள்ளவங்க தப்பா நினைப்பாங்க என்று சொன்னதை எனக்கு எதிரே இருந்தவர் தன்னைத் தான் சொல்லவதாக நினைத்திருப்பாரோ ? அவர் கேட்டு இருந்தால் நான் உங்களைச் சொல்லவில்லை சார் ஒரு உதாரணத்திற்கு பொதுவாகச் சொன்னேன் என்று சொல்லி இருப்பேன்.

இருந்தாலும் அடுத்து மூளை வேறு ஒன்றைப் பற்றி சிந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் வரை 'வாடிக்கையாளர் சேவை என்பதில் உணவகங்கள் பணியாளர்களுக்கு நிறைய பயிற்சி கொடுக்க வேண்டி இருக்கிறது, இப்படி நடந்து கொண்டு உணவுத் தொழிலாக இருப்பதை உணவுச் சேவை என்று அவர்களும் வெளியே பெருமையாகச் சொல்ல ஒன்றும் இல்லை, நாமும் அதை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்கிற சிந்தனை ஓட்டம் ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தது.

*******

ஒன்றைப் பற்றிய நம் எண்ணங்களில் ஒத்தக் கருத்தும் எதிர்கருத்தும் தோன்றுவது நாம் அதனை எதிர்நோக்கும் சூழல்களால் ஏற்படுகிறது,சூழலே அதை முடிவு செய்கிறது. நான் இட்லி / தோசை சாப்பிடேனா ? சாப்பாடு சாப்பிட்டேனா ? எது சரியான செயல் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டாம்,. விருமாண்டிப் படத்தில் இருவேறுபட்ட மனித எண்ணங்களில் படம் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும், அப்படி ஒருவகையான வாசிப்பு அனுபவமாக மட்டும் கொள்ளவும்.

32 கருத்துகள்:

Unknown சொன்னது…

இரு வேற, எதிரெதிரான சூழ் நிலைகளில் எதிர் எதிர் நிலைப்பாட்டினோடு எதிரெதிர் கண்ணோட்டத்தில் எண்ணங்களை அழகாக பயணம் செய்ய வைத்துள்ளீர்கள்.

மிகவும் அருமை !

வவ்வால் சொன்னது…

கோவி,

அனுபவமா,கற்பனையா, சிறுகதைனும் லேபிள் போட்டு இருக்கீங்க, ஆனாலும் நல்லாத்தான் இருக்கு, இதெல்லாம் இங்கே ரொம்ப சகஜம்.


இங்கும் பெரும்பாலும் மீல்ஸ் க்கு என்ன வேண்டும் என்றெல்லாம் கேட்க வரவே மாட்டார்கள், அதுவும் லிமிட்டட் மீல்ஸ் என்றால் கேட்டால் கூட வராது. சிறிய கிண்ணங்களில் ஐட்டெம் வருமே அதோடு முடித்துக்கொள்ள வேண்டும், சாம்பார்,ரசம் போதவில்லை எனில் கை காய காத்திருக்க வேண்டும்.

சில ஹோட்டல்களில் டிபன் எல்லாம் ஆரம்பத்திலேயே சொல்லிவிட வேண்டும்.இல்லை எனில் ரெண்டு இட்லி சொல்லி சாப்பிட்டுவிட்டு எப்போ ஆசாமி வருவார் என லைட் ஹவுஸ் போல தலையை சுத்திப்பார்த்துக்கொண்டே இருக்கணும்,அவ்ளோ பிசியா இருக்கும் ஹோட்டல் :-))

தி.நகர் ரங்கநாதன் தெருவுக்கு அருகில் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள சரவணபவனுக்கு மாலையில் சென்று பாருங்களேன் , சாப்பிட்டு முடிக்கும் முன்னரே பின்னால் இருந்து ஒருவர் உங்களை தூக்கி வெளியில் வைத்து விடுவார் இடம் பிடிக்க :-))

Citizen சொன்னது…

arumaiyana kathai-citizenrule

கோவி.கண்ணன் சொன்னது…

//வவ்வால் கூறியது...
கோவி,

அனுபவமா,கற்பனையா, சிறுகதைனும் லேபிள் போட்டு இருக்கீங்க, ஆனாலும் நல்லாத்தான் இருக்கு, இதெல்லாம் இங்கே ரொம்ப சகஜம்.//

சிறுகதைன்னு போடலாமான்னு நினைச்சேன், அதில் பாதி கற்பனை தான் என்பதால் சிறுகதை என்றே போட்டேன் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//kari kalan கூறியது...
இரு வேற, எதிரெதிரான சூழ் நிலைகளில் எதிர் எதிர் நிலைப்பாட்டினோடு எதிரெதிர் கண்ணோட்டத்தில் எண்ணங்களை அழகாக பயணம் செய்ய வைத்துள்ளீர்கள்.

மிகவும் அருமை !//

பாராட்டுக்கு மிக்க நன்றி கரிகாலன்

கோவி.கண்ணன் சொன்னது…

//Citizen கூறியது...
arumaiyana kathai-citizenrule//

மிக்க நன்றி

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ

அன்றாட வாழ்வில் நிகழும் ஒரு செயலின் போது வினை,எதிர்வினை இரண்டையும் உண்ரும் வாய்ப்பு அனைவருக்கும் ஏதோ ஒரு சம்யத்தில் கிடைக்கிறது .ஆனால் அதை ஒத்துக் கொள்வது இல்லை.

அருமையான நடை .எனக்கும் முதலில் அந்த ஆள் ஏன் இப்படி சொன்னார் என பிடி படவில்லை.அதே சூழல் நம்க்கு வரும்போது இன்னொருவர் போலவே நட்ப்பது தவிர்க்க இயலாது.அதிக பட்சம் சொற்கள்,எடுத்துரைக்கும் விதம் மாறலாம்.

"உணவகங்களில் சோறு அதிகம் கொடுக்காமல் இதர பாதார்த்தங்கள் அதிகம் கொடுப்பதை தவிர்க்கலாம்".

நன்றி

Unknown சொன்னது…

//எனக்கு இட்லி வந்தது, தேங்காய் சட்னி, காரச் சட்னி மற்றும் சாம்பார் உடன் 12 செமி விட்டத்தில் // சம்பந்தியார் சாப்பிடப் போகும் போதும் அளவுகோளுடன் போகும் பக்குவத்தை நினைக்கும் போது செங்கதிருக்கு மகிழினி செட்டாகுமோ இல்லையோ என்னும் ஒரு பயம் வந்து தொலைப்பதை தவிற்க முடியவில்லை என்பதென்னவோ உண்மைதான்!!

Unknown சொன்னது…

//தி.நகர் ரங்கநாதன் தெருவுக்கு அருகில் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள சரவணபவனுக்கு மாலையில் சென்று பாருங்களேன்// வவ்வால் அவர்களே நம்ம ஜிகே வீடு குடிபுகும் முதல்நாள் அங்கேதான் தமிழ்நாடு ஸ்பெசல் மீல்ஸை இருகை பார்த்தோம் என்பதை இங்கே ஏப்பமுடன் சொல்லிக்கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.

வேகநரி சொன்னது…

நீங்க ஏதோ சொன்னிங்க. என் எண்ணமெல்லாம் தேங்காய் சட்னி, காரச் சட்னி, ரவாதோசை, இட்லி, சாம்பார்,தயிர் பச்சடி, காரக் குழம்பு, ரசம், மோர் குழம்பு, கத்த்ரிக்காய் பிரட்டல், புடலங்காய் கூட்டு, வாழைக்காய் பொறியல், காராக் கருணை கிழங்கு கறி,உருளை கிழங்கு மசாலா கறி இவற்றை சுற்றியே வட்டமிட்டன. நான் நினைக்கிறேன் நீங்க ஏற்கெனவே சுவர்க்த்தில் தான் இருக்கிறிங்க.

துளசி கோபால் சொன்னது…

குறிச்சு வச்சுக்கணுமா!!!!!!!

நல்லா இருக்கு:-)))

ராஜ நடராஜன் சொன்னது…

இது விருமாண்டி பாணியா அல்லது இரண்டு முறை சொன்னதையே சொல்லியிருக்கிறீர்களா எனபதிலேயே எனக்கு குழப்பம்:)

ராஜ நடராஜன் சொன்னது…

வவ்வால்!அதென்ன ரங்கநாதன் தெரு? சரவண பவனின் பெரும்பாலான இடங்களின் அனுபவமே அண்ணன் எப்ப எந்திரிப்பார்,நாற்காலி எப்ப காலியாகும் நிலைதான்.

சிங்கப்பூரா இருந்தாலும் எங்க ஊர் அன்னபூர்ணா,கௌரி சங்கர் ருசி வருமா என்ன:)

dondu(#11168674346665545885) சொன்னது…

ஜெரோம் கே ஜெரோம் அவர்கள் எழுதிய Three men in a boat என்னும் புத்தகத்தில் அவர் ஸ்டீம் லாஞ்சுகள் பற்றி இரு கோணத்திலிருந்து எழுதியதை இங்கே தருகிறேன். உங்கள் இப்பதிவு அதை எனக்கு நினைவு படுத்தியது.

"Steam launch, coming!" one of us would cry out, on sighting the enemy in the distance; and, in an instant, everything was got ready to receive her. I would take the lines, and Harris and George would sit down beside me, all of us with our backs to the launch, and the boat would drift out quietly into mid-stream.
On would come the launch, whistling, and on we would go, drifting. At about a hundred yards off, she would start whistling like mad, and the people would come and lean over the side, and roar at us; but we never heard them! Harris would be telling us an anecdote about his mother, and George and I would not have missed a word of it for worlds.
Then that launch would give one final shriek of a whistle that would nearly burst the boiler, and she would reverse her engines, and blow off steam, and swing round and get aground; everyone on board of it would rush to the bow and yell at us, and the people on the bank would stand and shout to us, and all the other passing boats would stop and join in, till the whole river for miles up and down was in a state of frantic commotion. And then Harris would break off in the most interesting part of his narrative, and look up with mild surprise, and say to George:
"Why, George, bless me, if here isn't a steam launch!"
And George would answer:
"Well, do you know, I thought I heard something!"
Upon which we would get nervous and confused, and not know how to get the boat out of the way, and the people in the launch would crowd round and instruct us:
"Pull your right - you, you idiot! back with your left. No, not YOU - the other one - leave the lines alone, can't you - now, both together. NOT that way. Oh, you --- !"
Then they would lower a boat and come to our assistance; and, after quarter of an hour's effort, would get us clean out of their way, so that they could go on; and we would thank them so much, and ask them to give us a tow. But they never would.
It is very delightful being towed up by a launch. I prefer it myself to rowing. The run would have been more delightful still, if it had not been for a lot of wretched small boats that were continually getting in the way of our launch, and, to avoid running down which, we had to be continually easing and stopping. It is really most annoying, the manner in which these rowing boats get in the way of one's launch up the river; something ought to done to stop it.
And they are so confoundedly impertinent, too, over it. You can whistle till you nearly burst your boiler before they will trouble themselves to hurry. I would have one or two of them run down now and then, if I had my way, just to teach them all a lesson.

அன்புடன்,
டோண்டு ராகவன்

'பசி'பரமசிவம் சொன்னது…

நான் ஒரு சிறுகதைப் பித்தன்; ஆய்வாளன்.
அடுத்தவர் மனப் போக்கை ஆராயும் எதார்த்தமான ’உளவியல்’ கதை இது.
வடிவமைப்பு பாராட்டும்படி உள்ளது.
நம்பிக்கையுடன் தொடருங்கள்.

அகமது சுபைர் சொன்னது…

//நீங்க எதுவும் கேட்கவில்லையே' கொஞ்சம் பணிவானக் குரலில் உணவகப் பணியாளர் விளக்கிக் கொண்டு இருந்தார். அதற்கு புல் மீல்ஸ் பார்டி
//

”அதற்கு புல் மீல்ஸ் பார்டி” என்பது இரண்டாம் பாதியில் தவறாக வந்திருக்கிறது :))

#குற்றம் நடந்தது என்ன? ;))

manjoorraja சொன்னது…

இருவேறு கோணத்தில் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

வடுவூர் குமார் சொன்னது…

கோமளவிலாஸ் - 12B??
இங்கிருந்த(சென்னை) கோமளவிலாஸ்க்கு மூடுவிழா நடத்திவிட்டார்கள் போலும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அகமது சுபைர் கூறியது...
//நீங்க எதுவும் கேட்கவில்லையே' கொஞ்சம் பணிவானக் குரலில் உணவகப் பணியாளர் விளக்கிக் கொண்டு இருந்தார். அதற்கு புல் மீல்ஸ் பார்டி
//

”அதற்கு புல் மீல்ஸ் பார்டி” என்பது இரண்டாம் பாதியில் தவறாக வந்திருக்கிறது :))

#குற்றம் நடந்தது என்ன? ;))//

ஆமாம் கொஞ்சம் கவனக் குறைவு, சுட்டியமைக்கு நன்றி, கட் & பேஸ்டிய போது கவனிக்காமல் விட்டுவிட்டேன்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் கூறியது...
கோமளவிலாஸ் - 12B??
இங்கிருந்த(சென்னை) கோமளவிலாஸ்க்கு மூடுவிழா நடத்திவிட்டார்கள் போலும்.//

கோமலாஸ், கோமலவிலாஸ் இரண்டு இருக்கு அண்ணா, இரண்டும் அண்ணன் தம்பிகளுடையது தான், இதில் கோமலாஸ் தான் பல இடங்களில் உள்ளது, சென்னையில் அவர்கள் தான் திறந்து மூடினார்கள், கோமலவிலாஸ் லிட்டில் இந்தியாவில் அருகருகே மூன்று இடங்களில் உள்ளது, எல்லாம் நடை தொலைவிற்குள் தான்

கோவி.கண்ணன் சொன்னது…

//முனைவர் பரமசிவம் கூறியது...
நான் ஒரு சிறுகதைப் பித்தன்; ஆய்வாளன்.
அடுத்தவர் மனப் போக்கை ஆராயும் எதார்த்தமான ’உளவியல்’ கதை இது.
வடிவமைப்பு பாராட்டும்படி உள்ளது.
நம்பிக்கையுடன் தொடருங்கள்.//

மிக்க நன்றி ஐயா

கோவி.கண்ணன் சொன்னது…

டோண்டு சார், உங்கள் ஆங்கிலக் கதையைப் பிறகு படிக்கிறேன், கூகுளில் போட்டுப் பார்த்தால் மொழிப் பெயர்ப்பு நன்றாக வரவில்லை, பொறுமையாகப் படிக்க வேண்டி இருக்கிறது.

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜ நடராஜன் கூறியது...
இது விருமாண்டி பாணியா அல்லது இரண்டு முறை சொன்னதையே சொல்லியிருக்கிறீர்களா எனபதிலேயே எனக்கு குழப்பம்:)//

இரண்டு முறை திரும்பப் படிச்சா சரி ஆகிடும் :)

கோவி.கண்ணன் சொன்னது…

// துளசி கோபால் கூறியது...
குறிச்சு வச்சுக்கணுமா!!!!!!!

நல்லா இருக்கு:-)))//

உங்க ஊருக்கு சுற்றுலா வரும் போது என்ன என்ன சாப்பாட்டில் வைக்கலாம் என்று குறித்து வைத்துக் கொண்டீர்களா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//thequickfox கூறியது...
நீங்க ஏதோ சொன்னிங்க. என் எண்ணமெல்லாம் தேங்காய் சட்னி, காரச் சட்னி, ரவாதோசை, இட்லி, சாம்பார்,தயிர் பச்சடி, காரக் குழம்பு, ரசம், மோர் குழம்பு, கத்த்ரிக்காய் பிரட்டல், புடலங்காய் கூட்டு, வாழைக்காய் பொறியல், காராக் கருணை கிழங்கு கறி,உருளை கிழங்கு மசாலா கறி இவற்றை சுற்றியே வட்டமிட்டன. நான் நினைக்கிறேன் நீங்க ஏற்கெனவே சுவர்க்த்தில் தான் இருக்கிறிங்க.//

சிங்கப்பூர் எனக்கு நிரந்தர சொர்கம் ஆகி ரொம்ப ஆண்டு ஆச்சு :)

கோவி.கண்ணன் சொன்னது…

//சம்பந்தியார் சாப்பிடப் போகும் போதும் அளவுகோளுடன் போகும் பக்குவத்தை நினைக்கும் போது செங்கதிருக்கு மகிழினி செட்டாகுமோ இல்லையோ என்னும் ஒரு பயம் வந்து தொலைப்பதை தவிற்க முடியவில்லை என்பதென்னவோ உண்மைதான்!!//

மகி, அதையெல்லாம் செங்கதிரும் மகிழினியும் முடிவு செய்வாங்க. இப்பவே கவலைப் பட்டுக்கிட்டு என்ன ஆகப் போவுது

கோவி.கண்ணன் சொன்னது…

// சார்வாகன் கூறியது...
வணக்கம் சகோ

அன்றாட வாழ்வில் நிகழும் ஒரு செயலின் போது வினை,எதிர்வினை இரண்டையும் உண்ரும் வாய்ப்பு அனைவருக்கும் ஏதோ ஒரு சம்யத்தில் கிடைக்கிறது .ஆனால் அதை ஒத்துக் கொள்வது இல்லை.

அருமையான நடை .எனக்கும் முதலில் அந்த ஆள் ஏன் இப்படி சொன்னார் என பிடி படவில்லை.அதே சூழல் நம்க்கு வரும்போது இன்னொருவர் போலவே நட்ப்பது தவிர்க்க இயலாது.அதிக பட்சம் சொற்கள்,எடுத்துரைக்கும் விதம் மாறலாம்.

"உணவகங்களில் சோறு அதிகம் கொடுக்காமல் இதர பாதார்த்தங்கள் அதிகம் கொடுப்பதை தவிர்க்கலாம்".

நன்றி//

நன்றி சார்வாகன், எனக்கு சோறு ரொம்பப் பிடிக்காது, சீனர்கள் வெறும் சோற்றை உண்ணுவார்கள், எனக்கு தண்ணீர் ஊற்றி உப்பாவது போட்டுச் சாப்பிட்டால் தான் பிடிக்கும், மதியம் கொண்டு செல்லும் சோற்றிற்கு குழம்பு தீரும் வரை தான் மதிப்பு. கொழம்பும் செட்டாகாத நாளில் கடுப்பாக இருக்கும், வெளியே சாப்பிடவும் அவ்வளவாக விருப்பம் இல்லை, ஏகப்பட்ட அஜினமோட்டோ சேர்த்து சாப்பிட்டதும் தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்கும் அளவுக்கு வரட்சியை ஏற்படுத்திவிடும்

SathyaPriyan சொன்னது…

நல்ல பதிவு. நல்ல நடை.

//
ஏகப்பட்ட அஜினமோட்டோ சேர்த்து சாப்பிட்டதும் தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்கும் அளவுக்கு வரட்சியை ஏற்படுத்திவிடும்
//

தயவு செய்து அஜினமோட்டோ சாப்பாட்டில் கலந்து கொள்ளாதீர்கள். அது பல தீய விளைவை ஏற்படுத்தும்.

மேலை நாடுகள் பலவற்றில் அதனை தடை செய்துள்ளார்கள்.

அதன் வேதியல் பெயர் மோனோ சோடியம் க்ளூடமேட். கீழே உள்ள சுட்டிகளை பாருங்கள்.

http://en.wikipedia.org/wiki/Monosodium_glutamate

http://www.ezhealthydiet.com/msg-side-effects.html

http://www.healthy-holistic-living.com/msg-side-effects.html

Raghav சொன்னது…

அருமையான பதிவு.. ஒரே சமயத்தில் இருதரப்பையும் கூற முயற்சிதிருகலமோ என்று தோன்றுகிறது. ரொம்பவே ரசித்து படித்தேன்!

ILA (a) இளா சொன்னது…

அடடே! உங்களின் அருமையான பதிவுகளில் ஒன்று இது! டாப் க்ளாஸ்!

kamalakkannan சொன்னது…

லிட்டில் இந்தியா கோமளாஸ் பரவால்லை ,ஜுராங் பிசினஸ் பார்க்கில் இருக்கும் கோமாளாசில் குடிக்க தண்ணீர் கூட தரமாட்டார்கள் கேட்டல் வெறுப்புடன் அளவாக தருவார்கள் அவர்கள் விற்கும் குளிபனத்தை வாங்கி குடிக்க நடக்கும் வியாபார தந்திரம் சாப்பிட வருபவரிடம் குடிக்க தண்ணி தராமல் சம்பாரிக்கும் பணத்தை வைத்து கடையின் முதலை என்ன செய்ய போகிறது என்று கேட்கதோன்றும் .ஆயிரம் தான் இருந்தாலும் சென்னை சரவணபவனில் கிடைக்கும் குளிர்ந்த நீருக்கு அனைத்தையும் மறந்து விடலாம் .

kamalakkannan சொன்னது…

ஹனிபா பக்கத்தில் இருக்கும் "ஆரியா" ஹோட்டல் முயற்சி பண்ணி பாருங்கள் இப்போது எல்லாம் சாந்தி இல் சாப்பிடுவதை விட ஆரியாவில் சாப்பிடுவது நன்றாக இருக்கிறது .

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்