பின்பற்றுபவர்கள்

8 மே, 2012

சிந்திக்க சில உண்மைகள் !


மதம் தொடர்பான சர்சைகளுக்கு இடமளிக்காத வண்ணம் சில பதிவர்களின் சில இடுகைகளை அண்மையில் நீக்கியது தமிழ் மணம், அதன் தொடர்பில் எனது மூன்று பதிவுகள் நீக்கப்பட்டன. மதவாதச் செயலை தடுப்பதற்காக எனது மூன்று இடுகைகள் நீக்கியதில் எனக்கு மகிழ்ச்சியே. இது பற்றி நான் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

சிந்திக்க சில உண்மைகள் என்கிற பெயரில் ஒரு பதிவு நீண்ட நாள்களுக்கு முன்பிலிருந்தே தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டுள்ளது, இதில் தி.க தலைவர் கி,வீரமணி அவர்களின் படமும், தந்தைப் பெரியாரின் படமும்  போட்டு இருப்பது அன்றி அதில் வரும் தகவல்களுக்கும் பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை நான் அந்தப் பதிவினை தகவல்களை தொடர்ந்து பார்த்துவருவதன் மூலம் அறிந்து கொண்டுள்ளேன்.

பெரியாருக்குப் பிறகான தி.க வின் மீது எனக்கு எந்த ஒரு தனிப்பட்ட பற்றும் இல்லாவிட்டாலும் ஒரு இயக்கத்தின் பெயரில் மதவெறியைப் பரப்ப அதனை வாய்ப்பாகக் கருதும் கூட்டம் தொடர்ந்து இந்திய சமய நம்பிக்கைகளையும், கிறித்துவ சமயத்தையும் மிகவும் கேவலமாக தாக்கிவருகிறது, அதில் மறந்தும் கூட இஸ்லாமின் பிற்போக்குத் தனங்கள் (குறிப்பாக இளம் வயது திருமணம் மற்றும் பலதார மணம்) ஆகியவை கண்டிக்கபடவில்லை என்பதால் இந்த தளம் இஸ்லாமியப் பதிவரால் தான் நடத்தப்படுகிறது என்றே நினைக்கிறேன். அது எனது ஐயமாகவோ, சந்தேகமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். இந்தப் பதிவின் சுட்டிகள் பல்வேறு இஸ்லாமியத் தளங்களில் பின்னூட்டத்தில் சுட்டியாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இது போன்று தொடர்ச்சியாக குறிப்பிட்ட மதத்தின் மீது அவதூறுகளை எழுதி மத ஒற்றுமை சிதைக்கிறது என்கிற அடிப்படையில் தமிழ் மணம் அந்தப் பதிவை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அந்த பதிவை எழுதுபவர் யார் என்றே தெரியாத நிலையில் எனக்கு அந்தப் பதிவர் மீது எந்த காழ்புணர்வும் இல்லை.

பெரியாரின் கடவுள் குறித்த பொதுவான சிந்தனைகள் / முழக்கம் 'கடவுளை நம்புவன் முட்டாள், கடவுளை பரப்புபவன் காட்டுமிராண்டி, கடவுளை மற, மனிதனை நினை' என்பதெல்லாம் அந்தத் தளத்தில் இல்லை என்பதால் அந்தத் தளம் கடவுள் மறுப்புத் தளம் அல்ல, மாறாக அந்தத் தளத்தில் இந்து மதமும், கிறிஸ்துவ மதமும் கடுமையாக தாக்க எழுதப்படுகிறது.

சிந்திக்க சில உண்மைகள் என்கிற பதிவை படிக்கும் கிறிஸ்துவர்களுக்கு பெரியார் மற்றும் கி.வீரமணி மீது வெறுப்பு வருவதற்கு இந்தத் தளம் காரணமாக அமைகிறது என்பதால் இதன் மீதான தமிழ் மணத்தின் தடை தேவையாகப் படுகிறது.



"இந்தப் பொழப்புக்கு...என்று யாரும் காரி உமிழ்ந்தாலும் வெட்கமற்றவர்கள் திருத்திக் கொள்ளவே மாட்டார்கள்" -  இது எந்த மதத்தின் வசனம் ?

- இதையெல்லாம் எந்த இறை வேதத்திலும் தேடாதீர்கள். இறைவேதமெல்லாம் உண்மையில் நல்லது சொல்லி இருந்தால் நம்மிடையே மதவெறியர்கள் இருக்க மாட்டார்கள்.

12 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

+1

priyamudanprabu சொன்னது…

FOLLOW

விழித்துக்கொள் சொன்னது…

aamaam naanum paarththen enna seivadha andhalavukku madhaveripidiththulladhu ivargalukku
nandri

Unknown சொன்னது…

இந்தப் பொழப்புக்கு...என்று யாரும் காரி உமிழ்ந்தாலும் வெட்கமற்றவர்கள் திருத்திக் கொள்ளவே மாட்டார்கள்.

+1

கபிலன் சொன்னது…

அப்படியே வழிமொழிகிறேன் ! எத்தனையோ வருடங்களாக ஆர் எஸ் எஸ், வி எச் பி போன்ற இந்து அமைப்புக்கள் இந்துக்களை ஒன்று சேர்த்து ஒரு சக்தியாக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஒன்னும் வொர்க் அவுட் ஆகல. ஆனால், இது போன்ற படைப்புக்கள் தொடர்ந்தால், இந்து அமைப்புக்களுக்கு வேலையே இருக்காது. சும்மா இருக்கவங்கள கூட, ஒரு வித குழு மனப்பான்மையை உருவாக்கிவிடும் (சமயத்தின் அடிப்படையில்).

வேகநரி சொன்னது…

//மதவாதச் செயலை தடுப்பதற்காக எனது மூன்று இடுகைகள் நீக்கியதில் எனக்கு மகிழ்ச்சியே. இது பற்றி நான் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.//
நிஜாயம் தான். புற்றுநோய்க்கெதிராக செய்யப்பட்ட மருத்துவத்தால் ஏற்படும் பக்கவிளைவுகளை பொறுத்து கொள்வது போல்.

//கபிலன் கூறியது...
சும்மா இருக்கவங்கள கூட ஒரு வித//
இவர்களது மதவாத நடவடிக்கைகளினால் உலகம்பூராகவும் இதே நிலமை தான் ஏற்பட்டுள்ளது.

குடுகுடுப்பை சொன்னது…

கபிலன் சொன்னது…
அப்படியே வழிமொழிகிறேன் ! எத்தனையோ வருடங்களாக ஆர் எஸ் எஸ், வி எச் பி போன்ற இந்து அமைப்புக்கள் இந்துக்களை ஒன்று சேர்த்து ஒரு சக்தியாக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஒன்னும் வொர்க் அவுட் ஆகல. ஆனால், இது போன்ற படைப்புக்கள் தொடர்ந்தால், இந்து அமைப்புக்களுக்கு வேலையே இருக்காது. சும்மா இருக்கவங்கள கூட, ஒரு வித குழு மனப்பான்மையை உருவாக்கிவிடும் (சமயத்தின் அடிப்படையில்).//

நீங்களே ஆர் எஸ் எஸ் காரர்தானே, ஆடு நனைகிறதே என்றாய் ஓநாய் அழுகிறது, இப்படிப்பட்ட கமெண்டுகள் வரும்.

அன்புடன் நான் சொன்னது…

உங்கள் கருத்தில் உடன்படுகிறேன்.
தமிழ்மணம் உடன் நடவடிக்கை உடுக்க வேண்டும்.

J.P Josephine Baba சொன்னது…

கருத்து சுதந்திரத்தில் தமிழ்மணத்திற்க்கு ஏன் இந்த தாக்குதல். எல்லா அறியும் போது தான் நல்லது ஏது கெட்டது ஏது என்று தெரியும். தமிழ்மணம் செய்வது சரியல்ல!

கபிலன் சொன்னது…

"குடுகுடுப்பை சொன்னது…
கபிலன் சொன்னது…
அப்படியே வழிமொழிகிறேன் ! எத்தனையோ வருடங்களாக ஆர் எஸ் எஸ், வி எச் பி போன்ற இந்து அமைப்புக்கள் இந்துக்களை ஒன்று சேர்த்து ஒரு சக்தியாக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஒன்னும் வொர்க் அவுட் ஆகல. ஆனால், இது போன்ற படைப்புக்கள் தொடர்ந்தால், இந்து அமைப்புக்களுக்கு வேலையே இருக்காது. சும்மா இருக்கவங்கள கூட, ஒரு வித குழு மனப்பான்மையை உருவாக்கிவிடும் (சமயத்தின் அடிப்படையில்).//

நீங்களே ஆர் எஸ் எஸ் காரர்தானே, ஆடு நனைகிறதே என்றாய் ஓநாய் அழுகிறது, இப்படிப்பட்ட கமெண்டுகள் வரும்."

ஹி ஹி...அட இங்க பாருடா...குடுகுடுப்பை...நமக்கு கிலுகிலுப்பை காட்டுறார். இந்த டெக்னிக் எல்லாம் ரொம்ப ரொம்ப பழசு சார்....

ஆர் எஸ் எஸ் ஒரு தேச பற்று மிக்க இயக்கம் என்பது என்னுடைய கருத்து. ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் நான் இருந்தால், அதனை வெளிப்படுத்துவதில் எனக்கு எந்த வெட்கம் வெண்டக்காயும், கூச்சம் கோவக்காயும் கிடையாது என்பதை குடுகுடுப்பையாருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் !

வேகநரி சொன்னது…

பெண்கள் உடை க்கு வரம்பு பதிவில்(அங்கே வர அந்த பதிவர் நமக்கு தடா விதித்துள்ளார்)இஸ்லாமியர்களுக்கு அழகாக விளக்கமளித்துள்ளீர்கள்.ஆனா அந்த மதவெறி கும்பலுக்கு எதுவுமே மூளையில் ஏறப்போவது இல்லை. தங்களது வழிகாட்டிய ஏற்று கொள்ளபட்டவர் தனது பாலியல் தவற்றுக்காக பிற பெண்களுக்கு கட்டாயபடுத்திய 1400 வருடங்களுக்கு முற்பட்ட பர்தாவையே பிடித்து கொண்டு நிற்பார்கள். இந்தியாவில் பிற மதத்தாரை கவர்வதற்காக "கண்ணியமான உடை" என்ற ஒரு தந்திரமான சொல்லாடலை பாவித்து கொள்வார்கள். ஜெயலலிதாவின் உடை அவர்களுக்கு பிடிக்குமாம்! தாரளமாக உடனே அணிய வேண்டியது தானே.எதற்க்கு பெண்களை துன்புறுத்தி அடிமைதனமாக பர்தாவால் மூடுவான்.

கோவி.கண்ணன் சொன்னது…

thequickfox பார்த்தேன், உங்கள் புனைப் பெயர் குறித்துக் கேள்விக் கேட்டிருப்பதையும் பார்த்தேன், UFO என்றெல்லாம் மனிதர்கள் பெயர் வைத்திருப்பார்களா ? தன்(னைச் சார்ந்தவர்) முதுகு தனக்குத் தெரியாதாம். அடுத்தவன் கண் பீளை பற்றிப் பேசுவார்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்