பின்பற்றுபவர்கள்

25 அக்டோபர், 2011

திரட்டிகளை பிரபலமாக்குவது எப்படி ?

முன்குறிப்பு : நான் எந்த திரட்டி அமைப்பிலும் நடத்துனராகவோ ஓட்டுனராகவோ இல்லை, சில திரட்டிகளில் இணைந்திருக்கிறேன், நான் இங்கு எழுதுவது கூட திரட்டிகள் வளர்ச்சி பற்றிய விமர்சனம் தான், பிறரை / தனிப்பட்ட திரட்டியை தனிப்பட்ட முறையில் காயப்படுத்தாமல் எதையும் விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்குமே உண்டு, அந்த புரிந்துணர்வில் தான் வலைப்பதிவுலகமும் அவற்றைத் தாங்கிச் செல்லும் திரட்டிகளும் உள்ளன என்கிற அடிப்படை புரிந்துணர்வில் தான் இதை எழுதுகிறேன். பதிவர் நண்பர்கள் சிலர் திரட்டி நடத்துகிறார்கள், உங்களுக்கும் திரட்டி நடத்துவது பற்றி விருப்பம் ஏதேனும் இருந்தாலோ, அதன் தொடர்பிலான மற்ற தகவல்களை தெரிந்து கொள்ள ஆவல் இருந்தாலோ கீழ்கண்டவற்றைப் படிக்கலாம்.

*******

* பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் டேவிட் பெக்கம் பெர்பூயும் (வாசனை திரவிய) நிறுவனம் துவங்கியுள்ளார், அவருக்கு அவர் விற்பதை விளம்பரம் செய்ய அவர் பெயரே போதும், திரட்டி துவங்க வேண்டுமென்றால் முதலில் பிரபல பதிவர் ஆகனும், மூன்றாண்டுக்கு முன்பு துவங்கிய திரட்டிகளில் பிரபலப்பதிவர் அல்லாதவர்கள் துவங்கும் திரட்டிகள் (தமிழ்மணம், தேன்கூடு தமிழிஷ், தமிழ்வெளி தவிர்த்து) வெறெதுவும் பிரபலமாகவில்லை, காரணம் திரட்டி ஓனர்கள் யார் என்று வெளிப்படையாகத் தெரியாததால் திரட்டிகளுக்கு அறிமுகம் கிடைக்கவில்லை. திரட்டித் துவங்க பிரபல பதிவர் அந்தஸ்து மிக மிக அவசியம். உங்களுக்குள் திரட்டி துவங்கும் கனவு இருந்தால் முதலில் பிரபல பதிவர் ஆகுங்கள், பிரபலப் பதிவர் ஆக என்ன என்ன எழுத வேண்டும் என்பதை பிரபலப் பதிவர்களின் பதிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், அதை நானே சொன்னால் விமர்சனம் ஆகிவிடும்.

* பிரபல பதிவர் ஆகி திரட்டி துவங்கியவுடன் அதை அடுத்த கட்ட மார்கெட்டிங்க் செய்வது முக்கியம், அதற்கு உங்களை பிரபலம் ஆக்கிய திரட்டியிலேயே அதையும் செய்துவிட முடியும். உலகிலேயே உன்னதமானது இந்த புது மாடல் டெலிவிசன் தான் என்பது பழைய டிவியில் விளம்பரமாக ஓடும் போது பழைய டிவி எப்படி நாணாதோ அதே போன்று தான் பழைய திரட்டிகள் புதிய திரட்டிகளின் விளம்பரங்களை சகித்துக் கொள்கிறார்கள், காரணம் பழைய திரட்டிகளின் புரிந்துணர்வு அவற்றை போட்டியாக கருதாமல் மாற்றாக இருக்கட்டுமே என்று நினைப்பதாக இருக்கும், எந்த ஒரு பழைய திரட்டியும் புதிய திரட்டிகளின் வருகையை ரசிக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக போட்டியாக நினைப்பது இல்லை என்பதே புதிய திரட்டிகளின் பலம் என்பதை உணர்ந்தாலே உங்கள் திரட்டிகள் அந்த பழைய திரட்டிகள் வழியாக விளம்பரம் செய்ய பிரபலமாகும்.

* பிறகு கூகுள் பஸ், கூகுள் + மற்றும் அனைத்து சமூக இணைய தளங்களிலும் உங்களை நண்பர்களாக நினைப்பவர்கள், இணைத்திருப்பவர்கள் அடிக்கடி உங்கள் திரட்டி பற்றிய விளம்பரங்களை சகித்துக் கொள்வார்களா என்ற எண்ணமெல்லாம் விட்டுவிட்டு நாள்தோறும் திரட்டி பற்றி, வசதிகள் பற்றி எழுதிக் கொண்டே இருங்கள், உங்கள் விளம்பரம் பிடிக்காதவர்கள் அவர்களாகவே ம்யூட் செய்து கொள்வார்கள், உங்களைக் கடிந்து கொள்ள மாட்டார்கள், ஏனென்றால் எந்த பிரபலப் பதிவரையும் நேரடியாக விமர்சனம் செய்ய இணைந்திருப்பவர்கள் தயங்குவார்கள். அப்படியும் எவரேனும் விமர்சனம் செய்தால் அதுவும் பொருட்டல்ல, உலகில் அனைத்து விற்பனையாளர்களின் வெற்றிக்குப் பின்பும் புறக்கணிப்பின் வலி உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

* மிக முக்கியமானது அலெக்சா ரேங்கில் உங்கள் திரட்டியில் இடம் என்ன என்பதை நீங்கள் விளம்பரம் செய்தே ஆகவேண்டும், கூடவே தற்போதைய திரட்டி வரிசையில் நீங்கள் எவ்வளவு தூரம் பிறத் திரட்டிகளைக் புரட்டி முன்னேறி இருக்கிறீர்கள் என்பதையும் விளம்பரமாகச் செய்ய வேண்டும், அதற்கு உங்கள் நண்பர்களும் மதீப்பீடு கொடுத்து சமூக இணையத் தளங்களில் விளம்பரம் கொடுத்து, பிற திரட்டிகளை முடிந்தால் விமர்சனம் செய்து கூட உங்கள் திரட்டிகளை அவர்கள் பிரபலப்படுத்திவிடுவார்கள்

* திரட்டியின் பெயர் ? அது தமிழுக்கு தொடர்ப்பு இல்லாமலும் தமிழிஷ் போல பாதி தொடர்பிலும், இண்டலி, சுண்டலி போல் முற்றிலும் தொடர்பே இல்லாமல் இருக்கலாம், ஆனாலும் நாம் தமிழுக்குத்தான் சேவை செய்கிறோம் என்ற நினைப்பு இருந்தாலே போதும்

* அடுத்து எதாவது ஸ்பான்ஸர் பிடித்து பதிவர்களுக்கான போட்டிகளை நடத்த வேண்டும், இவற்றையெல்லாம் முறையாகச் செய்யும் போது உங்கள் திரட்டி மிக விரைவில் ஆரம்பித்து இரண்டே நாளில் கூட பிரபலமாகிவிடும்

* முக்கியமாக பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் திரட்டியின் விளம்பர வருமானத்தில் பதிவர்களுக்கும் (பதிவுகளின் எண்ணிக்கை அடிப்படையில்) பங்கு கிடைக்கும் என்பதை திரட்டியின் தீமாக வைத்துக் கொள்ளுங்கள்.

* பிரபல இணையத்தளங்கள் நக்கீரன், தினமலர் போல் வெப்டிவியையும் உங்கள் திரட்டிகளில் வைத்திருப்பது மேலும் பதிவர் மற்றும் வருகையாளர் எண்ணிக்கையைக் கூட உதவும்

******

* கடைசியாக மிகவும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆபத்தான தகவல், திரட்டி நடத்துபவரின் ஓய்வு நேரங்களைத் தாண்டி தூக்க நேரத்தையும் திரட்டி தின்றுவிடும், கூடவே பதிவர் பஞ்சாயத்து முதற்கொண்டு, எவரேனும் ஆபாசத் தளங்களை இணைத்திருக்கிறார்களா என்று கண்கொத்திப் பாம்பாக செல் போனை ஆன் செய்துவிட்டு விழிப்போடு இருக்க வேண்டும்.


யப்பாடா பதிவை பிரபலமாக்குவது, பிரபலப் பதிவர் ஆகுவது எப்படி என்று தான் பல பதிவர்கள் மொக்கையாக எழுதியுள்ளார்கள், முதன் முதலில் திரட்டியை பிரபலப்படுத்தவது எப்படி என்கிற (மொக்கை) இடுகையை இட்டு பெருமை எனக்கே சாரும், ஜெமோவும் கூடவே ஞானியும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

11 கருத்துகள்:

எஸ். கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

ஒரு திரட்டி அல்லது போட்டியாக உருவான திரட்டிகள் எந்த அளவுக்குப் பிரபலமாகி, சரிவை சந்தித்தன என்பதற்கு தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளின் சமீப கால வரலாறே சாட்சி!

அடுத்து, திரட்டிகள் தங்களுக்கு த்தாங்களே குழிபறித்துக் கொள்வது எப்படி என்ற தொடர்பதிவையும் எதிர்பார்க்கிறேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

//அடுத்து, திரட்டிகள் தங்களுக்கு த்தாங்களே குழிபறித்துக் கொள்வது //

அதெல்லாம் திரைமறைவில் நடக்கத்தான் செய்யும்.

திரட்டி.காம் சொன்னது…

//திரட்டித் துவங்க பிரபல பதிவர் அந்தஸ்து மிக மிக அவசியம். //

100%

வவ்வால் சொன்னது…

கோவி,
வணக்கம், நலமா?
//திரட்டித் துவங்க பிரபல பதிவர் அந்தஸ்து மிக மிக அவசியம். //

100%//

திரட்டி துவங்கவோ, நடத்தவோ பிரபல்யம் எல்லாம் தேவை இல்லை.காசும், நேரமும் இருந்தால் போதும், பிரபலப்பதிவர்களுக்கு மட்டுமே திரட்டி துவங்கணும் என்ற நமைச்சல் அதிகம் இருக்கும் என்பதே உண்மை.

ரத்தன் டாடா டீசிஎஸ் நடத்துறார் அவர் என்ன சாப்ட்வேர் புலியா?

Sukumar சொன்னது…

1. The blog title should be different or sarcastic title like
"இல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள்"

2. Post lot of comments to their own blogs from different ID's.

3. Publish blogs about kisu kisu and more about cine people and happenings in the cine field.

4. Place few photos and give some meaningful title இவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா ?

5. Add your blog into tamilmanam or udanz etc.

6.Delete all the crticising comments.

7. Criticize about everything happening in the society with our limited knowledge and provide explanations and justifications.

Sukumar சொன்னது…

1. Keep sarcastic titles like

இவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா ?

மதவெறி, இனவெறி !

இறையாண்மை நாட்டாமை வெங்காயம் !

ஆன்மிகம் மிகைப்படுத்துதல், தூற்றுதல் !

இல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் - 1 & 2

Provide rubbish justification and explanation.

2. Post different comments for their blogs from different ID's

3. Put blogs about kisu kisu's in cinema and poltics.

You went to Bathu Caves and shaved your kid's hair and you share that with us with lots of photos. you are following some tradition happening in your family whether you like it it not.

But your crticising about other castes and religion and stating that they should not follw their tradition.

Good job my friend.

வைரை சதிஷ் சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

கோவி.கண்ணன் சொன்னது…

திரட்டி.காம், நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//திரட்டி துவங்கவோ, நடத்தவோ பிரபல்யம் எல்லாம் தேவை இல்லை.காசும், நேரமும் இருந்தால் போதும், பிரபலப்பதிவர்களுக்கு மட்டுமே திரட்டி துவங்கணும் என்ற நமைச்சல் அதிகம் இருக்கும் என்பதே உண்மை.

ரத்தன் டாடா டீசிஎஸ் நடத்துறார் அவர் என்ன சாப்ட்வேர் புலியா?//

வவ்வால் நலமா, தமிழ்சசி பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன், நம்மப் பதிவுக்கும் வருவீங்க என்று எதிர்பார்த்தேன், எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

ரத்தன் டாடா உதாரணத்தைத் தான் நான் டேவிட் பெக்கம் வைத்துச் சொல்லி இருக்கிறேன், எதோ ஒருவகையில் அறியப்பட்டவராக இருந்தால் அவர்களது பிற பிஸ்னஸ்களுக்கு விளம்பரம் தேவை இல்லை என்பது எனது கணிப்பு

கோவி.கண்ணன் சொன்னது…

//You went to Bathu Caves and shaved your kid's hair and you share that with us with lots of photos. you are following some tradition happening in your family whether you like it it not.
//

அட ஆமாம், கிந்து மதத்தை சார்ந்தவர்கள் போலிசாமியார்களை விமர்சிக்க தகுதி இல்லைங்கிற உங்க நிலைப்பாட்டோடு தான் பலர் இருக்காங்கே.

Sukumar சொன்னது…

அட ஆமாம், கிந்து மதத்தை சார்ந்தவர்கள் போலிசாமியார்களை விமர்சிக்க தகுதி இல்லைங்கிற உங்க நிலைப்பாட்டோடு தான் பலர் இருக்காங்கே.

This is not my view. What I said was you have your own belief so do thers so you can't criticize other beliefs, culture and rituals.

I am not supporting any one who claims as samayiar or god.

Belated Deepavali Wishes.

Regards
Sukumar

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்