பின்பற்றுபவர்கள்

5 அக்டோபர், 2011

இவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா ?

'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய)
ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா ?

16 கருத்துகள்:

விழிப்பு சொன்னது…

இவர்கள் எல்லாம் பூசை போட்டால் அப்புறம் யாரு வேலையை பாக்குறது?
எல்லா வேலையையும் சுத்தமா செஞ்சுட்டு சாயங்காலமா வீட்டுப் பக்கமா வந்தா கடலை, பொறி கொடுப்போம். அத‌ வாங்கி தின்னா அடுத்த பிறவில மேல் சாதில பொறக்கலாம்.

- எத்தனை பெரியார் வந்தாலும் இதை மாத்த விடமாட்டோமில்ல...

Unknown சொன்னது…

எனக்கு தெரிந்து, கார் பணிமணையில் வேலை செய்பவர்களின் ஸ்க்ரூ டிரைவர், சுத்தி, ஸ்பான்னர் முதற்கொண்டு, கொல்லைவெளி காப்போரின் கைத்தடி வரை பூசை போட்டு பார்த்திருக்கிறேன்.
ஏன் இந்து மதத்தை சேர்ந்தவரின் கசாப்புகடை அரிவாள், கறி வெட்ட பயன்படும் மரக்கட்டை போன்றவற்றையும் பார்த்திருக்கிறேன்.
ஆனால் தாங்கள் கேட்ட இந்த மூன்று கருவிகளையும் இதுவரை நான் பார்த்ததில்லை :(

அதற்கு ஒருவேளை சுகாதாரம் தான் காரணமோ என்னமோ ?!?!?

கோயிலுக்கு வெளியே செருப்பை கழட்டி வைத்து விட்டு போவது போலவும் இருக்கலாமோ....

கோவி.கண்ணன் சொன்னது…

//அதற்கு ஒருவேளை சுகாதாரம் தான் காரணமோ என்னமோ ?!?!? //

என்ன சுகாதாரம் ?

:)

பூஜை அறையை யாரும் நாவால் நக்கி சுத்தம் செய்வதில்லையே. அதற்கும் தொடப்பம் தானே பயன்படுகிறது.

//கோயிலுக்கு வெளியே செருப்பை கழட்டி வைத்து விட்டு போவது போலவும் இருக்கலாமோ....//

செருப்புக் கூட பல இடங்களில் தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுகிறது.
:)

போட்ட செருப்பின் தூய்மை இன்மை என்பதால் வீடு, கோவிலினுள் உள்ளே எடுத்துச் செல்வது தூய்மைக் கேடு தடுக்க என்பது சரிதான். ஆனால் அது புனிதமற்றது என்று சொல்ல ஒன்றும் இல்லை.

14 ஆண்டு பரதன் செருப்பை தானே வைத்து அரசாண்டான் என்று சொல்லுகிறார்கள்.

Yoga.s.FR சொன்னது…

ஆயுத பூஜைக்கும் தெய்வக் குற்றமா?இந்திய ஜனநாயகம் வாழ்க!!!!!!

K சொன்னது…

அருமையான விழிப்புணர்வு பதிவு நண்பா!

Unknown சொன்னது…

ஆயுத பூஜைக்குமா இப்படி

ஜோதிஜி சொன்னது…

இவர்களை பார்க்கும் போது என் மனதில் வந்து போவது இவர்களின் குழந்தைகளாவது இந்து தொழிலுக்கு வராத அளவுக்கு கல்வி ரீதியில் முன்னேறிவிட வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் நண்பரே
பொட்டில் அடித்தது போல் இருக்கிறது.இந்நிலை மாற வேண்டும்.
நன்றி

இனியா சொன்னது…

நல்ல பதிவு கோவி. செய்யும் தொழிலே தெய்வம்னு சொல்றதை விட்டுட்டு...
எந்தத் தொழில் செய்பவரும் தெய்வம்னு அவங்களை நாம் வணங்க வேண்டும்.

Astrologer sathishkumar Erode சொன்னது…

நிங்களாவது பூஜை போட்டீங்களே..மதிப்பு கொடுத்து ;-))

அறிவு ஜீவி சொன்னது…

ஆகா அறிவாள்ளான்னா சும்மாவா, ஏதாச்சும் திருநாள்ன்னா குதர்கமாக பேசனும், அறிவாளி மாதிரியே நடிக்கனும். ஆனா வீட்டு புதுமனை புதுவிழாக்கு மட்டும் பார்பனர்களை கூப்பிட்டு வைதீக காரியம் செய்யனும்.
அறிவு ஜீவின்னா சும்மாவா?

வந்தவாசி ஜகதீச பாகவதர் சொன்னது…

நம் இடது, வலது கைகளையே வேறுபடுத்தி, பாரபட்சமாக நடத்துகிறோம். இடது கையில் பணம் வாங்கும்போது, பணம் கொடுப்பவரின் முகத்தை பாருங்கள்.

பகுத்தறிவை, சிற்சில விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதை விடவேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வந்தவாசி ஜகதீச பாகவதர் said...
நம் இடது, வலது கைகளையே வேறுபடுத்தி, பாரபட்சமாக நடத்துகிறோம். இடது கையில் பணம் வாங்கும்போது, பணம் கொடுப்பவரின் முகத்தை பாருங்கள்.

பகுத்தறிவை, சிற்சில விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதை விடவேண்டும்.//

இடது கையை பணம் வாங்கினால் மதிப்பு குறைஞ்சுடுமா ? நான் எந்தக் கையால் கொடுத்தாலும் வாங்குவேன், தம் தம் உடலுக்குள் ஒரு உறுப்பை ஒதுக்கி வைத்து உறுப்புத் தீண்டாமை செய்துவருவது இந்தியர்களின் கேவலமான பழக்க வழக்கங்களில் ஒன்று, மசால் வடையை இடது கையில் வைத்து தான் தட்டித் தருகிறார்கள், ருசி குறைவதில்லை.
:)

இன்னொன்னு இடது கை இல்லை என்றால் கழுவதற்கும் சாப்பிடுவதற்கும் ஒரே கை தான்.
மனசரிந்து ஒரு கையை ஒதுக்கி வைக்காதீர்கள், இது பற்றி முன்பே ஒரு இடுகை இட்டுள்ளேன். கழுவுற கையால் சாப்பிடலாமா ?

dondu(#11168674346665545885) சொன்னது…

நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் துப்புரவு தொழிலாளிகள் அவர்கள் பயன்படுத்தும் எல்லா கருவிகளையும் கழுவி, பொட்டு வைத்து, பூஜை செய்கிறார்கள் (துடைப்பம், சாக்கடி குத்தும் மூங்கில், தள்ளுவண்டி ஆகியவை).

இது பற்றி நான் ஒரு துப்புரவு தொழிலாளியிடம் கேட்டு உறுதி செய்துதான் இப்பின்னூட்டத்தை இடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்