பின்பற்றுபவர்கள்

21 செப்டம்பர், 2011

பக்திப்பட இயக்குனர் ஏபி நாகராஜன் !

திரைப்படங்கள் பொழுது போக்குத் தொழில் என்றாலும் பண்டைய இயல் இசை நாடகக் கலைகளின் தொகுப்பான / நீட்சியான இன்றைய வடிவம் தான் திரைப்படங்கள் என்பதால் அவை வெறும் பொழுது போக்குச் சார்ந்தவை என்று ஒதுக்கிவிட முடியாது. வாழ்வியல், இசை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை மக்களிடம் கற்று அதைத் தொகுத்து மக்களுக்கே அளித்துவருபவை தான் அவை. எல்லாவற்றையும் வியாபாரப் பொருள்களாக ஆக்கிப் பார்க்கும் இன்றைய உலகில் சிக்கிச் சீரழிந்து வருபவைகளில் இந்தப் பொழுது போக்கு கலையுலகும் ஒன்றாகும். எளிதில் மக்களைச் சென்று அடையும் வியாபாரப் பொருள் மற்றும் அதில் அறிமுகம் ஆகுபவர்கள் அனைவருக்கும் தெரிந்தவர் ஆகிறார்கள் என்பதால் புகழும் பணமும் ஒரு சேர நாடுவோருக்கு திறமையின் அடிப்படையில் அவற்றை வாரி வழங்குவது திரைப்படத் தொழிலின் சிறப்பாகும். அதில் கிடைக்கும் பேரும் புகழும் அரசியல் நாற்காலியை அசைத்துப் பார்க்கும் அல்லது கைப்பெற்றும் என்பதால் திரையுலகம் மக்கள் வாழ்வியலை, ஆட்சி அதிகாரத்தை மாற்றும் சக்தி படைத்தவை என்றால் அதில் மறுக்க எதுவும் இல்லை. திரைப்படங்கள் மூலம் நல்ல தமிழை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் நல்ல உரையாடல்களை எழுதியவர்கள் மிகச் சிலரே, அதில் குறிப்பிடத்தக்கவர் ஏபி நாகராஜன்.

*****

இன்றைய காலகட்டத்தில் படங்களில் உரையாடல்கள் குறைவு காட்சியும் மக்களின் புரிந்துணர்வும் உரையாடல்களின் தேவைகளைக் குறைத்துவிட்டன, தற்போதைய படங்கலில் நீள உரையாடல்கள் வந்தால் மக்கள் விரும்புவதில்லை, 30 ஆண்டுகளுக்கு முன்புவரை உரையாடல்களுக்காகவே பார்க்கப்பட்டவை ஏபி நாகராஜனின் படங்கள். இன்றைக்கும் எப்போதும் பலமுறைப் பார்க்கத் தக்கப் படங்களாகவே ஏபி நாகராஜனின் சரஸ்வதி சபதம், திருவிளையாடல் மற்றும் தில்லானா மோகனாம்பாள் படங்கள் உள்ளன. அருவெறுப்பற்ற நகைச்சுவை, செந்தமிழ் கலந்த சொற்கள் இட்டு நிரப்படுவதுடன் காட்சிக்கு ஏற்ற உரையாடல்களை எழுதுவதில் வல்லவராகவே திகழ்ந்தார் ஏபி நாகராஜன்.

நான் இதுவரைப் பார்த்தப்படங்களில் என்றைக்கும் நினைவில் வருபவையும் பார்க்கப் பார்க்க சலிக்காத படங்களில் ஏபி நாகராஜனின் திருவிளையாடல் மற்றும் தில்லானா மோகானாம்பாள், தில்லானா மோகானம்பாள் பற்றி தனியாகக் குறிப்பிடத் தேவை இல்லை, தமிழ் திரையில் வரலாறு படைத்த படங்களில் அது முதன்மையானது, நாட்டுப்புறக் கலைஞர்களின் (தமிழ் நாட்டின் தனிப்பெரும் கலையை நாட்டுப்புறக் கலை என்று ஒதுக்கி வைத்துப் பார்க்கும் கேவலமான நிலையில் தான் நாம் இருக்கிறோம்) உணர்வுகளை படம் பிடித்ததுடன் தமிழ்நாட்டில் சிலப்பதிகாரத்திற்கு முன்பிருந்தே வாழும் நடனக்கலையான சதிராட்டம் (பரதம்) படத்தின் மையமாக இருந்தது, நடித்தவர்களும் அதில் வாழ்பவர்களாகவே நடித்திருந்தனர்.

பட்டிதொட்டி எங்கும் வசன நடைகளுக்காக பாராட்டுபெற்று இன்றும் அதன் வசனங்கள் 'மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததோ ?' என்று பலரும் பேசும் புகழ்பெற்ற வசனங்கள் இடம் பெற்றத் திரைப்படம், 'அம்மையப்பன் சொல்லுக்கே செவி சாய்க்காத நான், உன் பேச்சைக் கேட்க சற்று நிற்கிறேன் என்றால் அது நீ பேசும் தமிழுக்காகத் தான்' என்று கோவித்துக் கொள்ளும் முருகன் ஒளவைப்பாட்டியிடம் சொல்வதாக கடவுளுக்கும் மேலாக தமிழை பெருமைபடுத்தி இருப்பார் தன் உரையாடல்கள் எனும் பேனா வீச்சால், அதுமட்டுமா தமிழில் இலக்கண இலக்கிய பொருள் பிழைகள் அது கடவுளே செய்தாலும் மன்னிக்க இயலாத ஒன்று என்று நக்கீரன் வழியாக 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று முழங்கி இருப்பார் ஏபி நாகராஜன்.


திருவிளையாடல் திரைப்படத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் அனைத்தும் கவியரசர் கண்ணதாசன் வரிகளில் தெவிட்டாத இசையமுதம இசையில் என்றும் கேட்கவல்லவை. காட்சி அமைப்பு, பாடல்கள்,இசை அனைத்தும் ஒன்றே பொருந்தி பார்பவரை மூன்று மணி நேரம் கட்டிப்போட வைத்திருக்கும் அப்படம், சிவாஜியின் மிகையற்ற நடிப்பு படத்திற்கு மேலும் மெருகு. ஆணவம் மிக்க கர்நாடக சங்கீதப் பாடகராக (ஹேமநாத பாகவதர்) வரும் டிஎஸ் பாலையா மிகச் சிறந்ததொரு நடிப்பை வழங்கி இருப்பார். 'இன்றொரு நாள் போதுமா ?' பாலமுரளியின் இளம் வயதுக் குரல் என்றென்றும் கேட்க இனிமைதான். அதையும் வீழ்த்த அடுத்து டி எம் எஸ் ஆல் பாடப்படும் 'பாட்டும் நானே பாவமும் நானே', இத்தனையும் கோர்த்து நல்லொதொரு சமூகம், பக்தி மற்றும் பொழுது போக்குப்படமாகவே இயக்கி இருந்தார் ஏபி நாகராஜன்.

அக்கம்மாப்பேட்டை பரமசிவன் நாகராஜன் என்ற முழுதான அவர் பெயரின் சுருக்கமே ஏபி நாகராஜன். சிவாஜி கனேசன், எம்ஜிஆர், ஜெமினிகனேசன், சாவித்திரி, பத்மினி மற்றும் ஜெயலலிதா, உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் /நடிகைகளை வைத்து பலப் படங்களையும் இயக்கியும், சில தெலுங்கு படங்களின் கதை / திரைகதை அமைத்துள்ளார்

வடிவுக்கு வலைகாப்பு என்ற 1962ல் தொடங்கிய அவரது இயக்குனர் பயணம் எம்ஜிஆர் நடித்த நவரத்தினம் 1977 வரை நீடித்தது, கிட்டதட்ட 15 ஆண்டுகள் 26 படங்கள் வரை இயக்கியுள்ளார், அவர் இயக்கியவைகளுள் இன்றும் பேசப்படுபவை, பார்க்கப்படுவை அவற்றில் சில

திருவிளையாடல், தில்லானாமோகனாம்பாள், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை ஆகியவை, மேலும் ராஜ ராஜ சோழன், காரைக்கால் அம்மையார், திருமால் பெருமை, திருவருட் செல்வர் உள்ளிட்டவை பக்தி மற்றும் வரலாற்றுப் படங்களாகும், பெரியார் முழுக்கம் தமிழ்நாட்டில் பெரியத்தாக்கம் இருந்தும் ஏபி நாகராஜனின் பக்திப்படங்கள் மிகவும் விரும்பிப்பார்க்கப்பட்டன என்பது இங்கு குறிப்ப்டத் தக்கது, இன்னும் சொல்லப் போனால் பெரியாரின் நாத்திகப் பிரச்சாரங்களையும் அதனால் ஏற்பட்ட மக்கள் உணர்வு அலைகளையும் மறைமுகமாக கட்டுப்படுத்தும் வேலையை இவரது வசனங்கள் செய்தன என்றால் அது மிகையல்ல.

பக்திப்படங்கள் மட்டுமல்லாது நவராத்ரி, மேல்நாட்டு மருமகள், குமாஸ்தாவின் மகள் மற்றும் சில சமூகப்படங்களையும் இயக்கியுள்ளார். நடிகர் திலகம் சிவாஜிகனேசனின் முழுமையான நடிப்பாற்றலை வெளிப்பட வைத்த இயக்குனர்களில் இவரே முதன்மையானவராக நினைக்க முடிகிறது.

தமிழ் திரைப்பட உலகில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திகாட்டி தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கும் பங்காற்றிய ஏபி நாகராஜன் இந்திய அரசால் இன்னும் கவுரவிக்கப்படவில்லை என்பதை பலர் வருத்ததுடன் சொல்கிறார்கள்.
ஏபிநாகராஜனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போனதற்கு அவர் தமிழனாகவும் பிற்பட்டவராகவும் பிறந்தது தான் காரணம் என்றே எண்ண வேண்டியுள்ளது.

தமிழ் கூறும் நல் உலகிலும் ஏபி நாகராஜன் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை, அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் தெரியவில்லை, அவரது பிறந்தத் தேதி வயது உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கவில்லை. அவரைப்பற்றி எழுதப்பட்டுள்ள விக்கிப்பீடியா ஆங்கிலக் கட்டுரையில் அவரது படம் கூட இடம் பெறவில்லை, வரலாறுகள் எழுதப்படாமல் தொலைக்கப்படுவதற்கு நம் அலட்சியமும் காரணம், ஏபி நாகராஜன் பற்றி முழுமையான தொகுப்பை எழுத முடியவில்லை, எதிர்காலத்தில் தகவல்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தகவல் தெரிந்தவர்களும் பகிர்ந்து கொள்ளலாம். பின்னர் அவற்றை இடுகையில் சேர்க்கிறேன்.

(From the Web) A. P. Nagarajan is a veteran Tamil film director, who set a trend in film making in Tamil cinema in 1960s. He started his film career as a dialogue writer for Nalvar (1953), in which he also acted. He founded a production with actor V.K. Ramasamy and made Nalla Idathu Sambandham in 1958. When he started directing, his first few films were based on contemporary themes like the one on a boy guide working in Mahabalipuram (Vaa Raja Vaa). In the mid sixties he directed a series of films on religious subjects like Sarasvathi Sabatham (1966), thereby starting a trend in Tamil film making.

13 கருத்துகள்:

K சொன்னது…

பல இலக்கியங்களுக்கு காட்சி வடிவம் கொடுத்து, அவற்றை எம் கண்முன்னே நிறுத்திய ஏ பி நாகராஜன் அவர்கள் என்றும் எம் நெஞ்சைவிட்டு அகலமாட்டார்!

dondu(#11168674346665545885) சொன்னது…

குருதட்சணை என்னும் சமூகப் படம் சிவாஜி பத்மினி நடித்து இவர் எடுத்தது.

அது பலரது கண்டனங்களைப் பெற்றது. அப்போது விமரிசனத்துக்கு பதிலாக ஒரு கார்ட்டூன் போட்டார்கள். எல்லோரும் ஏபிஎன் மீது கோபத்துடன் அம்புகள் விட இவர் ஒரே ஒரு கேடயத்தை வைத்து, தன்னை காப்பாற்றிக் கொள்கிறார்.

கேடயத்தில் “புராணப் படங்களை எடுத்தப் புண்ணியம்” என்று எழுதப்பட்டிருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

kothai சொன்னது…

சிறிது காலமாய் இவரைப்பற்றி யாரும் பேசாமல் இருக்கிறார்களே என்ற தாக்கம் தங்களின் கட்டுரையை படிக்கவும் தீர்ந்தது.திருவிளையாடல் தொடங்கி சரஸ்வதி சபதத்தில் நிமிர்ந்து கந்தன்கருனையில் வியந்து திருவருட்செல்வரில் பரவசப்படுத்தியவர். பாமரர் மனதிலும் புராணம் மூலமாக ஆன்மீகச் சிந்தனைகளை சேர்த்தவர். அவர் படம் வெளியிட்டதுக்கும் நன்றி.அவர் துணைவியார் வரலக்ஷ்மி தன் கணீர் குரலில் பாடிய 'வெள்ளிமலை மன்னவா....,' 'ஏடு தந்தானடி தில்லையிலே....' பாடல்கள் இன்னும் எதிரொலிக்கின்றன. நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

// kothai said...
சிறிது காலமாய் இவரைப்பற்றி யாரும் பேசாமல் இருக்கிறார்களே என்ற தாக்கம் தங்களின் கட்டுரையை படிக்கவும் தீர்ந்தது.திருவிளையாடல் தொடங்கி சரஸ்வதி சபதத்தில் நிமிர்ந்து கந்தன்கருனையில் வியந்து திருவருட்செல்வரில் பரவசப்படுத்தியவர். பாமரர் மனதிலும் புராணம் மூலமாக ஆன்மீகச் சிந்தனைகளை சேர்த்தவர். அவர் படம் வெளியிட்டதுக்கும் நன்றி.அவர் துணைவியார் வரலக்ஷ்மி தன் கணீர் குரலில் பாடிய 'வெள்ளிமலை மன்னவா....,' 'ஏடு தந்தானடி தில்லையிலே....' பாடல்கள் இன்னும் எதிரொலிக்கின்றன. நன்றி.//

கோதை அம்மா, பாடகி வரலஷ்மி ஏபிஎன் அவர்களின் துணைவியார் என்பது எனக்கு புதுத்தகவல், மேலும் ஏபி நாகராஜன் பற்றிய தகவல் இருந்தால் தெரிவிக்கவும், கட்டுரையில் சேர்க்க வசதியாக இருக்கும். கருத்துக்களுக்கு மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//dondu(#11168674346665545885) said...
குருதட்சணை என்னும் சமூகப் படம் சிவாஜி பத்மினி நடித்து இவர் எடுத்தது.

அது பலரது கண்டனங்களைப் பெற்றது. அப்போது விமரிசனத்துக்கு பதிலாக ஒரு கார்ட்டூன் போட்டார்கள். எல்லோரும் ஏபிஎன் மீது கோபத்துடன் அம்புகள் விட இவர் ஒரே ஒரு கேடயத்தை வைத்து, தன்னை காப்பாற்றிக் கொள்கிறார்.//

மாற்று முயற்சி என்று இறங்கி சுட்டுக் கொண்டாரோ.

//கேடயத்தில் “புராணப் படங்களை எடுத்தப் புண்ணியம்” என்று எழுதப்பட்டிருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

கூடவே நல்ல வசனங்களை எழுதியதன் பாராட்டுகள் என்றும் சொல்லலாம்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
பல இலக்கியங்களுக்கு காட்சி வடிவம் கொடுத்து, அவற்றை எம் கண்முன்னே நிறுத்திய ஏ பி நாகராஜன் அவர்கள் என்றும் எம் நெஞ்சைவிட்டு அகலமாட்டார்!//

நன்றி மணி

கோவி.கண்ணன் சொன்னது…

கோதை அம்மா,

எஸ் வரலஷ்மி ஏபி நாகராஜனின் மனைவி அல்ல.

எஸ்வரலஷ்மி பற்றிய ஆங்கிலக் குறிப்புகள்

Saridey Varalakshmi (1927-2009) was a popular multilingual singing
star who played a variety of roles including the female lead, vamp,
later mother and aggressive mother-in-law in hit movies in Tamil and
Telugu. She left an indelible footprint in the shifting sands of
cinema through her portrayal in movies such as
‘Balaraju’
‘Palnati Yuddham’
‘Maya Lokam’
‘Lava Kusa’ (Telugu)
‘Seva Sadanam’
‘Aayiram Thalaivangi Apoorva Chinthamani’
‘Navajeevanam’
‘Veerapandiya Kattabomman’
‘Chakravarthi Thirumagal’
‘Panamaa Paasamaa.’
Her performance in ‘Poova Thalaiya’ (Tamil) is considered her best.
Her fame and name rippled out thanks to her excellent voice and acting
talent and her knowledge of Carnatic Music, which she learnt as a
young girl. Some of her movie songs such as ‘Kaadhal
Aaginen’ (‘Apoorva Chinthamani’) and ‘Emaatram Thaana En
Vaazhviley’ (‘Chakaravarthi Thirumagal’) were very popular.
Varalakshmi also had a stint in Kannada cinema and played a major role
in the Rajkumar-starrer ‘Babruvaahana’. However she did not meet with
the same success that she did in her other language films.

கோவி.கண்ணன் சொன்னது…

Varalakshmi was born in 1927 in the zamindari town of Jaggampeta (then
in Madras Presidency, now in Andhra Pradesh), and belonged to a middle
class family. Due to circumstances, she grew up in her uncle’s house
in Kurnool, where he was a musician. Spotting her flair for music, he
formally trained her in Carnatic music.
Her debut
During this period, the stormy petrel of Telugu cinema and social
protest filmmaker Gudavalli Ramabramham (‘Mala Pilla’, ‘Raithu Bidda’,
‘Apavaadhu’) was engaged by the pioneer filmmaker K. Subramanyam to
direct the Telugu version of his popular Tamil movie ‘Balayogini’. The
film had many children in major roles and Ramabramham, touring Andhra
looking for fresh talent, spotted young Varalakshmi in Kurnool. With
his encouragement and Subramanyam’s nod, Varalakshmi sailed into the
world of lens and lights with this film in 1938.
Impressed by her looks and singing skills, Subramanyam cast her in his
classic ‘Seva Sadanam’ (1938) with M. S. Subbulakshmi. Varalakshmi
played a young friend of the heroine (M.S.), and thus began a close
friendship between the two, which helped Varalakshmi to hone her
singing skills. She played a young girl’s role in
‘Parasuraman’ (Tamil, 1940) along with T. R. Mahalingam. Little did
she know then that he would play a major role in her life later, both
on and off screen.
T. R. Sundaram, Modern Theatres’ boss, cast her in a major role in his
box office hit ‘Aayiram Thalai Vaangi Apoorva Chinthamani’ (1947). The
title role was played by V. N. Janaki, who had no hero. The hero who
solves the puzzles in the movie (P. S. Govindan) had a heartthrob
(Varalakshmi.) The film was a major success and Govindan and
Varalakshmi made an attractive pair. T. R. Sundaram cast her again in
the lead role in ‘Bhojan’ (1948) with Govindan as hero. This film did
not do as well as expected.

கோவி.கண்ணன் சொன்னது…

மேலும்...

Pasupuleti Kannamba cast her in her Tamil movie ‘Navajeevanam’ (1949),
an emotion-drenched family story about a young man from a poor family
(Sriram) who falls in love and marries a rich girl (Varalakshmi).
Films with Mahalingam
Varalakshmi’s association with T. R. Mahalingam began in 1950. She
played the heroine in ‘Machharegai’ (1951), ‘Mohanasundaram’ (1951),
‘Chinnadurai’ (1952) and ‘Velaikkaran’ (1952). However these were not
successful. ‘Ramabra’ (1945) was the first movie of Akkineni Nageswara
Rao as full fledged hero with two heroines, Varalakshmi and P.
Shanthakumari. It was a box office hit. ‘Balaraju’ (1947) again with
Nageswara Rao, was a major hit and some of Varalakshmi’s songs became
popular. She was also paired with ANR in the classic ‘Palnati Yuddham’
as Manchala who loses her lover in the historic battle. The two sang a
duet (‘Ohoooohooo..Charuseela’), which is still hummed and remembered
by Telugu film buffs.
Varalakshmi acted with all the top heroes of her day including Sivaji
Ganesan (‘Veerapandiya Kattabbomman’), M. G. Ramachandran (‘Maattukara
Velan,’ ‘Needhikku Thalaivanangu’), N. T. Rama Rao (‘Lava Kusa’),
Chittoor V. Nagaiah (‘Nagapanchami’), Ranjan (‘En Magan’) and R. S.
Manohar (‘Maamiyaar’).
K. S. Gopalakrishnan, the star-maker, cast her as an aggressive woman
in ‘Panammaa Paasamma’ in which she excelled as the tough lady. Then
came her crowning glory with K. Balachandar’s ‘Poova Thalaiya’, in
which Gemini Ganesh and Jaishankar played major roles. Here again, she
played a tough woman pitted against Jaishankar.
Later, she came under the influence and intimate association of Al.
Srinivasan, a leader of the Tamil film industry. With the onset of
middle age, opportunities became rare and her health began to suffer.
To keep herself occupied, Varalakshmi lent her voice for some films.
The last years of her life were spent in physical pain, as she
suffered from a hip fracture and was hospitalised often.
The end came on September 22,2009. She was 82.
Varalakshmi’s powerful acting and her lilting melodies shall ever be
remembered by moviegoers of south India.
Courtesy: The Hindu

Amudhavan சொன்னது…

//தமிழ் கூறும் நல் உலகிலும் ஏபி நாகராஜன் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை, அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் தெரியவில்லை//
கோவி.கண்ணன், இந்த வார்த்தைகளைப் படிப்பதற்கே வருத்தமாக இருக்கிறது.அவர் மரணமடைந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. வழக்கமாகப் பத்திரிகைகள் படிப்பவர்களுக்கெல்லாம் இதுபோன்ற சந்தேகங்களெல்லாம் வருவதில்லை. இணையம் வந்தபிறகு இணையத்தைத்தவிர எதையுமே படிப்பதில்லை என்று இளையசமுதாயம் மேற்கொண்டிருக்கும் 'கற்புநெறி' காரணமாகத்தான் இதுபோன்ற பெரும் விபத்துக்களெல்லாம் ஏற்படுகின்றன. இணையவாசகர்கள் கொஞ்சம் நூல்நிலையங்கள் பக்கமும் தங்கள் கவனத்தைத் திருப்பினால் நல்லது. பழையதைத் திரும்பிப்பார்க்கும் வழக்கத்தையும் கொஞ்சம் நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும்.வெறும் வாசிப்பு அனுபவம் மட்டும் வைத்துக்கொண்டிருந்தால் கவலை இல்லை. எழுதவும் வருகிறவர்கள் விஷயஞானத்தை வளர்த்துக்கொள்வது நல்லது அல்லவா?

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி.கண்ணன், இந்த வார்த்தைகளைப் படிப்பதற்கே வருத்தமாக இருக்கிறது.அவர் மரணமடைந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. வழக்கமாகப் பத்திரிகைகள் படிப்பவர்களுக்கெல்லாம் இதுபோன்ற சந்தேகங்களெல்லாம் வருவதில்லை. இணையம் வந்தபிறகு இணையத்தைத்தவிர எதையுமே படிப்பதில்லை என்று இளையசமுதாயம் மேற்கொண்டிருக்கும் 'கற்புநெறி' காரணமாகத்தான் இதுபோன்ற பெரும் விபத்துக்களெல்லாம் ஏற்படுகின்றன. இணையவாசகர்கள் கொஞ்சம் நூல்நிலையங்கள் பக்கமும் தங்கள் கவனத்தைத் திருப்பினால் நல்லது. பழையதைத் திரும்பிப்பார்க்கும் வழக்கத்தையும் கொஞ்சம் நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும்.வெறும் வாசிப்பு அனுபவம் மட்டும் வைத்துக்கொண்டிருந்தால் கவலை இல்லை. எழுதவும் வருகிறவர்கள் விஷயஞானத்ததவளர்த்துக்கொள்வது நல்லது அல்லவா?//

நீங்கள் சொல்வது சரி, திரைப்படத்துறை மூலம் வரலாற்றை பதிவு செய்தவரின் தகவல்கள் இணையத்தில் கிடைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் நினைக்க வேண்டி இருக்கிறது, ஒருவரைப் பற்றி எழுதும் போது அவரது பிறந்த தேதி மறைந்த ஆண்டு இவைகள் தேவை என்று தேடித் தேடிப்பார்த்தேன் தகவல் கிடைக்கவே இல்லை. அவரது மனைவியின் நிழல் படம் தொலைக்காட்சி நடிகர் சிவா என்பவரின் தொகுப்பில் இருந்தே கிடைத்தது, அவரது நெற்றியில் இல்லாத குங்குமம், ஏபி என் உயிருடன் இல்லை என்று சொல்லியது, இருந்தும் எந்த ஆண்டு இறந்தார் என்பதை திரைப்படங்களின் தகவல்களை வைத்து வியாபாரம் செய்யும் நாளிதழ்களில் கூட ஆவணப்படுத்தப்படவில்லை.

vijayan சொன்னது…

தமிழரசு கழகத்தின் மூலம் தேசியத்திற்கு தமிழ் பகையல்ல என்பதை நிரூபித்தவர்.தமிழ் பக்தி இலக்கியத்தையும் இளைய சமுதாயத்திடம் எடுத்து சென்றவர்,கழகங்களின் வறட்டு நாத்திகத்தை எதிர்த்து இடையறாது சமர் புரிந்தவர்.அண்ணாதுரைக்கு அறிஞர் பட்டம் கொடுத்த பொது தன்னுடைய படம் ஒன்றில் அர்த்தம் அனர்த்தம் எல்லாம் தெரிந்த அறிஞர் ஆயிட்டீங்க என்று கிண்டலடித்த துணிச்சல்க்காரர்.எல்லாவற்றிற்கும் மேலாக நலிந்த ஏழை நாடக நடிகர்களுக்கு திரைப்படங்களில் வாய்ப்பு கொடுத்து வாழவைத்தவர்.அவருடைய அந்தகால படங்களில் சில,நால்வர்,பெண்ணரசி,நல்லதங்கை,மக்களைபெற்ற மகராசி,சம்பூரண ராமாயணம் முதலியன.கிடைத்தால் பாருங்கள் நல்ல தமிழ் கிடைக்கும்.

அமுதா கிருஷ்ணா சொன்னது…

டைரக்டர் மறைந்து 30 வருடங்களுக்கும் மேலாகின்றது.அவரது 49ஆவது வயதில் இறந்து விட்டார்.இன்னும் இருந்து இருந்தால் இன்னும் அதிகமான நல்ல படங்கள் நமக்கு கிடைத்து இருக்கும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்