பின்பற்றுபவர்கள்

16 செப்டம்பர், 2011

64 ஆம் நாயன்மார் தேவநாதர் வரலாறு !

பின்னொரு காலத்தில் தேவநாதரைப் பற்றி அறிந்து கொள்ளவும், தேவநாதரை 64 ஆவது நாயன்மாராக ஆக்க வேண்டுகோள் வைத்துள்ள சிவ அன்பர்களைப் போற்றி, சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் இடம்பெறத் தக்க பேறு பெற்ற தேவநாதர் நாயன்மார் வரலாற்றை சுறுக்கமாக எழுதத் தலைப்(ப)பிட்டுள்ளேன்.

முதுபெரும் அரசியல்வாதிகளும், மாமன்னர்களும், சைவ வைணவ சமய குரவர்களும் வாழ்ந்த நற்பூமியாம் பல்லவ நாட்டின் தலைநகராம் காஞ்சி மாநகரம், கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடுமென்பர் அது போல் காஞ்சி மாநகர் குறித்த மற்றொரு முதுமொழி உண்டு, 'காஞ்சிக்கு சென்றால் காலாட்டிப் பிழைக்கலாம்' என்பதே அது, அதன் பொருள் அறியா மூடர் சிலர், அவர்களின் சோம்பேறிகளாகப் பலர், காஞ்சிக்குச் சென்றால் காலாட்டிக் கொண்டே இருந்தால் சாப்பிட்டுவிடலாம் என்று காஞ்சி வந்து காலாட்டி கால்வீங்கிப் பின்னர் பிச்சைக்காரர்களாக அங்கேயே தங்கிவிட்டனர். மூடர் அறியாரோ முதுமொழி ? என்னும் பழமொழிக்கேற்ப அடே மடையர்களே காஞ்சியில் காலாட்டிப் பிழைப்பது என்பது அவ்வூரில் புகழ்பெற்ற நெசவுத் தொழில் என்பதாம், அஃதாவது கால்களால் ஆட்டி ஆட்டி தறிபோடும் தொழில் தான் காலாட்டிப் பிழைக்கும் தொழில் என்பர். காஞ்சி மாநகருக்கு நெசவு மட்டுமா புகழ் ? உலகுக்கே ஆன்மிகப் பேரொளி வீசம் ஶ்ரீஶ்ரீஶ்ரீ காஞ்சி காமகோடிப் பீடம் அமைந்துள்ள நகர் தான் காஞ்சிமாநகர், ஆதிசங்கரர் நான்முகமாய் நான்கு நகரங்களில் சங்கரமடங்களை நிறுவிவிட்டு பஞ்சரத்தினமாக காஞ்சியில் ஒன்று அமைக்க முடிவு செய்திருந்த போது முக்தி அடைந்தார், ஆதி சங்கரரின் சங்கல்பம் (எண்ணம்) அறிந்த கும்பகோண மடப் பெரியவாக்கள் தங்கள் மடத்தை காஞ்சிக்கு இடம் பெயர்த்து சங்கரரின் சங்கல்பம் பூர்த்தி பெற்று அருளாசி வழங்கிவருகின்றனர். காஞ்சிமடம் எதைச் சேர்ந்தது என்று கேட்டால் வரலாறு தெரியாதவர்கள் அறிந்து கொள்ளட்டும் என்றே நான் இந்த பிட்டுகளை இங்கே போட்டு வைக்கிறேன். காஞ்சிக்கு பெருமை மட்டும் தானா ? சிறுமையும் கூட இருக்கிறது, நாத்திகன் ராமசாமியின் சீடன் அண்ணாத்துரை பிறந்து வளர்ந்ததாம் இவ்வூர், நல்லோர் நல்லூரின் நரிகளும் வாழ்ந்திருக்கின்றன என்பதைச் சுட்டவே யாம் இங்கு அண்ணாதுரைப் பற்றிச் சுட்டியுள்ளோம். நல்லது தேவநாதருக்கும் காஞ்சிக்கும் என்ன தொடர்ப்பு ? ஏன் காஞ்சியைப் பற்றி பெருமை பொங்க எழுதுகிறீர்கள் என்று நீங்கள் கேட்பது அறிவோம்,

சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் நாயன்மார்கள் வரலாறு எழுதும் போது அவர்கள் வாழ்ந்த சென்ற ஊர்களின் பெருமைகளை எழுதி பின் அவர்களைப் பற்றிச் சொல்வது பக்தி இலக்கிய வழக்கம் என்று வழிசொல்லி இருக்கிறார். யாமும் அதைப்பின் ஒற்றியே தேவநாதர் வாழ்ந்துவரும் காஞ்சிமாநகர் தம் பெருமைகளை எடுத்துரைத்தோம். அப்பேரு பெற்ற காஞ்சி மாநகரில் மச்சேஸ்வர நாதர் என்ற பெயரில் உலகாளும் உமையாளின் மனாளன் கோவில் ஒன்றில் குடிகொண்டிருந்தார். அம்மச்சேஸ்வர நாதர் ஆலயத்தில் ஆறுகாலப் பூஜைகளுடன் நடுச்சாம பூஜைகளையும் செவ்வனே செய்து வாழ்ந்து வந்தார் தேவநாதக் குருக்கள், தேவநாதர் தம் பெயருக்கு ஏற்படியே தேவந்திரனை தலைவராக கொண்ட பிராமணச் சமூகத்தில் விளைந்த பிராமண குலக் கொழுந்து, சாதா காலமும் இறைச் சேவை செய்து கொண்டிருந்தாலும் தேவநாதரின் நாட்டம் அர்சனைக்கு வரும் பெண்கள் மீதே இருந்தது. இதனை மச்சேஸ்வரர் அறிவாரா ? உலகாளும் ஊர்த்தாண்டவர் ஒவ்வொரு உயிர்களின் உள்ளத்திலும் ஆடுகிறார், தேவநாதரின் சிந்தை அறியாமல் இருப்பாரோ ?

மச்சேஸ்வரநாதருக்கு பக்தர்களை அடிக்கடி சோதனை செய்து பார்ப்பது வழக்கம், பக்தர்களை மட்டுமா ? என்கிறீர்ளே நான் அர்சகர்களையும் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன் என்பதை காட்ட விரும்பிய பெருமானார் மச்சேஸ்வர,ர் ஒரு நாள் பக்தை வடிவில் அர்சனைத் தட்டுடன் வந்தார். அப்போது குருக்கள் பணியில் இருந்த தேவநாதர் 'அப்பப்பா இம்மண்ணுலகில் இவ்வளவு அழகான பெண்ணா ? ' வியந்தார், காமம் தலைக்கேறியது, மயக்கும் மஞ்சளாக செவ்வானம் லேசான தென்றல், மல்லிகை மணம், உள்ளத்தை கொள்ளையடிக்கும் குமரிப் பெண், ஒரே கண் ஜாடையில் சம்மதம் பெற்றார் தேவநாதர். கருவறைக்கு அழைத்துச் சென்று அவள் ஆடையைக் களைய.........ஆவேசம் அடைந்த பெருமானார் பெண் உரு மறைய சடாமுடிகளுடன் தன் உருபெற்று நெற்றிக்கண் திறக்க 'தேவ நாதா நீ என்ன காரியம் செய்கிறாய் ? இது என் கருவறை என்று தெரியாதா ? உன்னை எரித்துவிடுகிறேன்.......என்று சொல்ல, அங்குள்ள மணிகளெல்லாம் கிண் கிண் என அடிக்கின்றன, பதட்டம் அடையாத தேவநாதர் மிகப் பொருமையாக 'ஐயனே தங்கள் தரிசனம் பெற்று பாக்கியம் பெற்றேன், ஆனாலும் நீங்கள் கோபப்படும் அளவுக்கு ஒன்றும் நடந்துவிடவில்லை' என்று கூறினார், கருவறையில் கசமுசா செய்வது தவறு என்றே உமக்குத் தெரியாதா ? என்று மேலும் சினமானார் இறைவர். ஐயனே நீர் இல்லாத இடம் ஏது ? என் வீட்டுப் படுக்கையறையிலும் பஞ்சுத் தலையிணையிலும் கூட நீர்தான் இருக்கிறீர். காணும் இடங்களில் எல்லாம் பரம்பிரம்பம் உமை தரிசிக்கும் எனக்கு கருவறை ஒன்றும் தனித்த இடமாகத் தெரியவில்லை, தவறிருந்தால் என்னை மன்னியுங்கள். இருந்தாலும் நான் தவறாக எதையும் செய்துவிடவில்லை என்று கூறினார்.

தேவநாதரின்ன் மெய்யறிவை மெச்சிய பெருமானார் மகிழ்ந்து பார்வதியை வரவழைத்து தம்பதி சகிதமாக காட்சி தந்து 'நீயே உண்மையான சிவ பக்தன்.....வா என்னோடு' என்று கையிலாயம் அழைத்துச் சென்றார்.

கருவறை ஈசனவன் காட்சிதந்தவனைக் கேட்க,
நில்லா இடமென்றோ செல்லா இடமென்றோல்லாமல்
எல்லாவிடத்திலிருக்கும் எம்மீசன், இவ்விடத்தில் மட்டும்
நிற்கானோ என்றுரைத்த தேவநாதன்

தேவநாதர் வரலாறு முற்றிற்று.

*****

தேவநாதருக்கு மச்சேஸ்வரர் காட்சிக் கொடுத்த மார்க்ழி திங்கள் 11 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் தேவநாதர் பிறந்த பழைய சீவாரம் மக்கள் வெகு விமர்சியாகக் கொண்டாடிவருகிறார்கள். ஆண்டு தோறும் மச்சேஸ்வரர் கோவிலுக்கு வந்து தேவநாதர் பெயரில் ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்கின்றனர்.

சைவ சமயத்தில் மட்டும் தானா இம்மாதிரி கசமுசா கதைகள் உள்ளன ? வைணவத்திலும் உண்டு அவர்களில் சிலர் ஆழ்வார்கள் ஆகியுள்ளனர், 'சிந்தாமணி' என்ற பொதுமகளிடம் 'லீலா சுகர்' என்ற வைணவர் அடிமைப்பட்டிருந்து பின்னர் திருந்தினாரே?​ 'தேவ தேவி' என்னும் விலைமகளிடம் விப்ர நாராயணர் சரணடைந்திருக்க,​​ அரங்கன் அவரை மீட்டாரென்பது வரலாறு

*********

இந்தக் கதைகளை நான் பக்தியாளர், நெறியாளர் ஐயா இராம கோபாலன் அவர்களுக்கு சமர்பிக்கிறேன். ஏனெனில் அவர் தான் நாத்திகர் அண்ணாதுரைக்கு கோவிலில் வைத்து மரியாதைச் செய்வதை தார்மீக ரீதியில் எதிர்த்து,

அண்ணாதுரை ஆழ்வாரா அல்லது நாயன்மாரா?: ஜெயலலிதாவுக்கு கேள்வி எழுப்பினார்

9 கருத்துகள்:

மீனாட்சி சுந்தரம் சொன்னது…

அன்பின் பெரியவா....
மன்னிக்கவும் இது போன்ற எழுத்துக்கள் தங்களின் தரத்தினை குறைக்கிறது..
எவனோ செய்த தவறுக்காக அந்த சமயத்தினையோ அல்லது 63 நாயன்மார்களோ இணைத்து திரித்து இதுபோன்ற தரமற்ற இடுகைகள் எழுவது தமிழுக்கும் வரலாற்றும் ஒருவகையில் பாவமே...இன்னும் 20 அ 30 ஆண்டுகள் கழித்து படிப்பவர்கள் இன்புறும் வகையில் எழுதாமல் இப்படி எழுவதால் தாங்கள் எதிர்காலத்திற்கு தீமையேயன்றி நன்மையளிக்கிற எழுத்துக்களை தருவதில்லை...
உங்களின் மீதுள்ள அன்பின் மிகுதியால் மட்டுமல்லாமல் இதுபோன்ற தரமற்ற எழுத்துக்கள் தமிழுக்கும் வரலாற்றும் அவசியமன்று என்பதால் இதனை கூற விளைகிறேன்...
நகைச்சுவைக்கு என்றாலும் கூட அந்ந நகைச்சுவை உணர்வு மற்றவர்களை புண்படுத்தக் கூடாது.

மன்னிக்கவும். நீங்கள் இதுபோன்று எழுதுவதும் காம கதைகள் எழுவதும் என் பார்வையில் ஒன்றே என தோன்றுகிறது.

உங்களுக்கு அம்மதம் பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி இருங்கள். அதற்காக மற்றவர்கள் நம்பிக்கையில் கை வைக்க வேண்டாம்.

பதிவுகள் மூலம் நற்பெயர் எடுக்க முடியுமெனில் எழுதுங்கள்..இல்லையேல் சற்றே அமைதியாக அமர்ந்து யோசியுங்கள்..இத்தகைய எழுத்துகளால் மொழிக்கும் இனத்திற்கும் என்ன நன்மை தீமை விளையும் என்று.

அதிகம் எழுதியிருந்தால் மன்னிக்கவும...இது இந்த இடுகைக்கான பின்னூட்டமல்ல..பொதுவானது..

கோவி.கண்ணன் சொன்னது…

//மன்னிக்கவும். நீங்கள் இதுபோன்று எழுதுவதும் காம கதைகள் எழுவதும் என் பார்வையில் ஒன்றே என தோன்றுகிறது.//

மன்னிக்கவும் நான் படிச்ச நாயன்மார் வரலாறு மற்றும் ஆழ்வார்கள் வரலாறு இன்னும் மோசமாகக் கூட இருக்கின்றன.

குறிப்பாக இயற்பகை நாயனார் மற்றும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் கதையும் முடிஞ்சா தேடிப்படிங்க. கேமரா இல்லாவிட்டால் தேவநாதன் கூட நாயனார் ஆகி இருப்பார் என்று சுட்டவே இதனை எழுதினேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பதிவுகள் மூலம் நற்பெயர் எடுக்க முடியுமெனில் எழுதுங்கள்..இல்லையேல் சற்றே அமைதியாக அமர்ந்து யோசியுங்கள்..இத்தகைய எழுத்துகளால் மொழிக்கும் இனத்திற்கும் என்ன நன்மை தீமை விளையும் என்று.//

என்னுடைய கருத்துகளினால் எனக்கு நற்பெயர் கிடைக்கும் என்று நான் விரும்பதில்லை, பிறர் மனம் புண்படும் என்றால் பழமைவாதங்களைப் பற்றி யாருமே பேசமுடியாது. நான் பெரியாரோ அண்ணவோ கூட ஆகும் தகுதி இல்லை, அவர்களின் கருத்துகளில் துளியையாவது பின்பற்றுவதற்கு பரிந்துரைக்கிறேன், மற்றபடி திருவாளர் இராமகோபாலன் அண்ணா பிறந்த நாளில் அண்ணாவை கேவலப்படுத்தாவிடில் நானும் இதை எழுதி இருக்கப் போவதில்லை.

காலில் செருப்புப் போட்டு நடப்பதால் கூட பிறர் மனம் புண்படும் என்ற காலம் கூட இருந்தது சின்னவா

மீனாட்சி சுந்தரம் சொன்னது…

//குறிப்பாக இயற்பகை நாயனார் மற்றும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் கதையும் முடிஞ்சா தேடிப்படிங்க.//

ஏன் உங்களை போல அக்காலத்தில் எழுதியிருக்கலாம் அல்லவா..

அப்படியே இருந்தாலும்.. அதை படிக்க வேண்டிய அவசியமில்லை..நற்கருத்துகளை பல இருக்க அதை அனைத்தையும் படிக்க நேரமில்லாது போது எப்படி இதில் கவனம் செலுத்த முடியும்.
எவ்வளோவோ நற்செய்தி இவ்வுலகத்தில் நடந்து கொண்டிருக்க தீமைகளை மட்டும் முன்னே கொண்டு வருகிறீர்கள்.


//என்னுடைய கருத்துகளினால் எனக்கு நற்பெயர் கிடைக்கும் என்று நான் விரும்பதில்லை//
நற்பெயர் உங்களுக்கு அல்ல உங்களின் கருத்துக்கு..திருக்குறளுக்கு நற்பெயர் எனில்..திருவள்ளுவருக்கும் தான்.

//நான் பெரியாரோ அண்ணவோ கூட ஆகும் தகுதி இல்லை, அவர்களின் கருத்துகளில் துளியையாவது பின்பற்றுவதற்கு பரிந்துரைக்கிறேன்//

இவர்களின் சமூக கருத்துக்களின் மீது ஒரளவேனும் நான் மதிக்கிறேன்..ஆனால் இவர்கள் மதக் கருத்துக்கள் சுத்த குப்பைகள். அவர்களை நேரடி சீடர்களே இதற்கு இன்றய சிறந்த உதாரணம்.
மேற்கூரியவர்கள் தான் உங்கள் முன்மாதிரி என்றால்.நான் இதற்கு மேல் கருத்து கூற விரும்பவில்லை.கூறிய கருத்துக்களை திரும்ப பெறுகிறேன்.உரக்க பேசுபவர்கேள் உண்மை பேசிகள் என்கிற கூட்டம் அந்த கூட்டம்.

//காலில் செருப்புப் போட்டு நடப்பதால் கூட பிறர் மனம் புண்படும் என்ற காலம் கூட இருந்தது சின்னவா//

விதாண்டவாதம் பேச ஆரம்பித்தால் அனைத்திலும் பேசலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஏன் உங்களை போல அக்காலத்தில் எழுதியிருக்கலாம் அல்லவா..//

சேக்கிழார் என்னைப் போல் எழுதி இருந்தார் என்றால் நீங்கள் பெரியபுராணத்தைத் தூக்கிப் போடுங்கள் என்று சொல்லலாமே, சேக்கிழாரின் பெரிய புராணத்தில் தான் இயற்பகை நாயனார் கதை வரும்.

//எவ்வளோவோ நற்செய்தி இவ்வுலகத்தில் நடந்து கொண்டிருக்க தீமைகளை மட்டும் முன்னே கொண்டு வருகிறீர்கள்.//

உங்களுக்கு நற்செய்திகள் தெரிகிறது எனக்கு நித்தி, தேவநாதன் போன்ற கயவர்கள் தெரிகிறார்கள், நீங்கள் நெல்விளைய உரம் இட்டால் போதும் என்கிறீர்கள், நான் களையெடுத்தால் நன்கு விளையும், விளைச்சலிலும் கலப்பு குறையும் என்கிறேன்.

//ஆனால் இவர்கள் மதக் கருத்துக்கள் சுத்த குப்பைகள். அவர்களை நேரடி சீடர்களே இதற்கு இன்றய சிறந்த உதாரணம். //

நான் அவர்களின் சீடர்கள் பற்றி இங்குமுட்டுக் கொடுக்கவில்லை, அதற்கான தேவையும் இல்லை, வாரிசுகளே தந்தையை பின்பற்றாத காலத்தில் சீடர்கள் எப்படி பின்பற்றுவார்கள் ? மேலும் அவர்கள் மதம் குறித்து சொன்னவை கருத்துக் குப்பைகள் என்று சொன்னதற்கு எனது கடுமையான கண்டனம். ஒருவேளை நீ தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தால் இப்படிச் சொல்லி இருக்கமாட்டாய், ஏனெனில் மதக் குப்பைதான் தாழ்த்தப்பட்டவர்கள் என்று பலரை ஒதுக்கி வைத்திருக்கிறது. மேலும் தாழ்த்தப்பட்டவராக இருப்பவர் நீ கூறும் மதக் கோவிலுக்கு செல்லும் விழிப்புணர்வும், உரிமையும் அவர்கள் தான் பெற்றுத் தந்தனர்.

மீனாட்சி சுந்தரம் சொன்னது…

மேற்கூரியவர்கள் தான் உங்கள் முன்மாதிரி என்றால்.நான் இதற்கு மேல் கருத்து கூற விரும்பவில்லை.கூறிய கருத்துக்களை திரும்ப பெறுகிறேன்.உரக்க பேசுபவர்கேள் உண்மை பேசிகள் என்கிற கூட்டம் அந்த கூட்டம்.

சுல்தான் சொன்னது…

சமீபத்தில் நீலகண்டன் பதிவில் எதையேனும் திரும்ப வாசித்தீர்களா ஜிகே.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
சமீபத்தில் நீலகண்டன் பதிவில் எதையேனும் திரும்ப வாசித்தீர்களா ஜிகே.

11:24 PM, September 17, 2011//

நான் அவர் பதிவெல்லாம் படிப்பதில்லை நீங்கள் படிப்பீர்கள் போல :)

padmapadan சொன்னது…

மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

இங்கே சொடுக்கவும்

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்