பின்பற்றுபவர்கள்

8 செப்டம்பர், 2011

தங்க ஏ(மா)ற்றம்.....!

அமெரிக்க நாணயம் மதிப்பு இழந்துவருவதால் தங்கத்தில் முதலீடே பாதுகாப்பானது என்கிற நடைமுறைக்கு உலக மக்கள் மாறியுள்ளனர், இதன் காரணமாக தங்கம் விலையும் தாறுமாறாக உயரத் துவங்கிச் சென்று கொண்டு இருக்கிறது. 2000 ம் ஆண்டும் 16 வெள்ளிக்கு (அப்போது 1 வெள்ளி - 26 ரூபாய்) விற்ற கிராம் தங்கம் இன்றைய நிலையில் கிராம் ஒன்றுக்கு 70 - 72 வெள்ளி (தற்போது ஒரு சிங்கப்பூர் வெள்ளி 38 ரூபாய்). கிட்டதட்ட கிராமுக்கு ரூ 2500க்கும் மிகுதி. இது 916 எனப்படும் 22 கேரட் மதிப்புள்ள தங்கத்தின் விலை, தூயத்தங்கம் இன்னும் விலை மிகுதி.

சிலவாரங்களாகவே செய்திகளில் நகைக்கடைகள் கொள்ளைப் போவது வாடிக்கையாகக் காட்டுகிறார்கள், நகைக்கடைகள் மட்டுமல்லாது நகையை அடகு வைக்கும் அடகுக் கடைகள் கூட கொள்ளைப் போகிறதாம்.

தமிழகத்திலோ, இந்தியாவிலோ வாங்கிய தங்கங்கள் பெரும்பாலும் விற்கப்படுவதில்லை, தற்காலிகமாக அடகு வைத்து கடன் பெற்று பின்னர் மீட்கிறார்கள். ஆனால் ஜப்பான் (டோக்கியோ), தாய்லாந்து (பேங்காக்) போன்ற நகரங்களில் தங்கத்தின் விலை உயர்வு உச்சமாக கருதப்பட்டு தன்னிடம் இருக்கும் பொட்டு நகைகளைக் கூட விற்க வருகிறார்களாம் பொது மக்கள், தங்கத் துகள்களை அரித்து எடுக்கும் வேலைக்கும் பலர் செல்கிறார்களாம். அதானால் நாள் ஒன்றுக்கு 100 டாலர் முதல் 1000 டாலர் வரை அவர்களால் ஈட்ட முடிகிறதாம்.

இன்னொரு புள்ளீவிவரமாக சொல்லுகிறார்கள் மறுவிற்பனை தங்கம் சென்ற ஆண்டின் 30 விழுக்காட்டை ஒப்பிட இந்த ஆண்டு வெறும் 5 விழுக்காடு தானாம், இதற்குக்காரணம் இன்னும் கூட விலை உயரலாம் என்று காத்திருப்பவர்கள் எண்ணிக்கை மிகுதியாம்.

தங்கம் தொடர்பான வழிப்பறிகள், கொள்ளைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன, துபாய், மொரோக்கோ, தென்னிந்தியா நகரங்களில் தங்கம் கொள்ளைப் போவது நாள் தோறும் தொடர்கிறதாம். தங்கச் சங்கிலி பறிப்பு அமெரிக்கா, சீனா , இங்கிலாந்து, இந்திய நாடுகளில் நடக்காத நாளே இல்லை. வடக்கு வியட்நாமில் தங்க நகைக்கடைக்காரர் குடும்பத்தையே கொலை செய்திருக்கிறார்கள் கொள்ளைக்காரர்கள்.

பிரான்ஸ் நாட்டில் கடந்த முதல் ஆறுமாதத்தில் மட்டுமே 183 முறை ஆயுதம் தாங்கிய கொள்ளையர்களால் கொள்ளை நடந்துள்ளது. தங்கம் முதலீட்டுக்கு எவ்வளவு பாதுகாப்பானதோ அந்த அளவுக்கு கொள்ளைக்காரர்களுக்கு அது சொர்க்கவாசலின் கதவு போன்றது என்கிறார்கள்,ஒரு சின்னக் கணக்கு: என் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியின் (24 கேரட்) சின்ன தங்க டாலர் 2.5 கிராம் பழையதாகிப் போனதால் கொக்கி அறுந்து விட்டது, அதை நான் பத்தாண்டுக்கு முன்பு வாங்கும் போது 45 வெள்ளிகள், சரி அதே எடைக்கு புதிதாக மாற்றலாம் என்று வாங்கினால் எனது பழைய டாலரை 150 வெள்ளிக்கு எடுத்துக் கொண்டு புதியதை 225 வெள்ளிக்கு கொடுத்தார்கள், அதாவது நான் கையில் இருந்து 75 வெள்ளிகள் கொடுத்தேன்.

இப்ப திரும்பவும் விற்றால் எனக்கு 150 வெள்ளிகள் தான் கிடைக்கும், இந்த 150 தில் ஏற்கனவே கையில் இருந்து கொடுத்த 75 கழித்தால் எனக்கு மீதம் கிடைப்பது 75 தான், அத்துடன் பழைய விலை 45 ஐ கழிக்க நான் பத்தாண்டு இந்த டாலரை வைத்திருந்ததால் கிடைப்பது வெறும் 30 வெள்ளிகள் தான். ஆனால் இன்றைய விலை 225 என்பது பழைய விலை 45 ஐ விட 5 மடங்கு அதிகம். எனக்கு கிடைப்பது 3.3 மடங்கு அதுவும் மாற்றி வாங்காமல் இருந்தால் மட்டுமே. மாற்றி வாங்கினால் சொற்ப லாபமே. நகை விலை உயர்வினால் விற்பவர்களை விட, அதனை வாங்கும் கடைக்காரர்களுக்குத் தான் கொள்ளை லாபம்.

இணைப்பு : AsiaOne

8 கருத்துகள்:

kamalakkannan சொன்னது…

அண்ணா இந்த பதிவ பஸ் ல போட்டதால ,பின்னுட்டம் இல்லா , லைக் ம் இல்லா

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

id சொன்னது…

24 காரட்டில் தங்க நகைகள் செய்ய முடியாதே, எப்படி உங்களது செயின் 24 காரட் என்கிறீர்கள்?

கோவி.கண்ணன் சொன்னது…

//
id said...
24 காரட்டில் தங்க நகைகள் செய்ய முடியாதே, எப்படி உங்களது செயின் 24 காரட் என்கிறீர்கள்?

8:03 AM, September 09, 2011//

உங்களுக்கு வேண்டுமென்றால் பணம் எடுத்துட்டு வாங்க, நான் வாங்கித்தருகிறேன். நுணுக்க வேலைப்பாடுகள் தான் செய்ய முடியாது, சாதாரண செயின், கொக்கி உள்ள பட்டையான டாலர்கள் செய்து விற்கிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//
kamalakkannan said...
அண்ணா இந்த பதிவ பஸ் ல போட்டதால ,பின்னுட்டம் இல்லா , லைக் ம் இல்லா

10:41 PM, September 08, 2011//

ஐ லைக் திஸ் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Rathnavel said...
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

10:59 PM, September //

மிக்க நன்றி இரத்தினவேல் ஐயா

ரம்மி சொன்னது…

பழைய தங்க நகைகளை,இந்தியாவில் அதே கடையில் கொடுத்து மாற்றினால் கிராமிற்கு ஓரிரு சதம் மட்டுமே குறைக்கிறார்கள்! வேறு கடைகளின் சின்னம் கொண்ட பழைய நகைகளுக்கு 5 சத அளவிற்கு மட்டுமே, தற்போதைய விலையைவிட குறைத்து மதிப்பிடுகினறனர்!

நகைகளைச் செய்ய கூலி,சேதாரம், லாபம் என்று கணக்கிட்டு,சுமார் 12 முதல் 21 சத அளவு வரை கூட்டி விற்கிறார்கள்!( நகையின் வேலைப்பாடுகள் அளவில்)

ஆபரணங்களைப் பொறுத்த வரையில்,ஒரு முறை வாங்கியதை, முடிந்தவரை மாற்ற முயற்சிக்காமல் இருப்பதே நலம்!

கடைக்காரர்களுக்கு விலை ஏறிக் கொண்டிருக்கும் வரையில் லாபம்தான்! ஆனால் அது இருப்பு வைத்திருக்கும் தங்கத்திற்கு மட்டுமே! விற்பனையாகும் தஙத்திற்கு ஈடாக இருப்பை சமன் செய்ய அவர்களும் தங்கத்தை தற்போதைய நிலையிலேயே தான் வாங்க வேண்டும்! மேலும் விலையேறிய இருப்பில் (கணக்கில்) உள்ள தங்கத்திற்கு விலைஏற்றத்திற்கு உண்டான மதிப்பில் 30 சதம் வருமான வரியாக கட்ட வேண்டும்! பிறகு விலை குறைந்தால் கழித்துக் கொள்ளலாம்!

பழைய நகைகளின் விலையை கேரட் அளவும் நிர்ணயம் செய்யும்!91.6சத அளவிற்குக் குறையாமல் இருந்தால் முழுப் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது!

naren சொன்னது…

தங்கம், தங்கம், தங்கம் என்று எல்லோரும் இரத்தக் கொதிப்பை கூட்டிக்கொண்டிருக்க, விலையெற்றத்தால் இர்த்த நாளங்கள் வெடித்துவிடும்.

இந்தி குடிமனின் வாழ்கையில் தங்கம் ஒரு பாதகமான அங்கம்வகிப்பது வருந்ததக்கதுதான்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்