பின்பற்றுபவர்கள்

1 செப்டம்பர், 2011

இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள் !

முன் எப்போதும் இல்லாத ஒரு காலத்தில் மாண்டுகன் என்ற ராட்ஷதன் வாழ்ந்து வந்தான், அவன் பல பராக்கிரமங்களைப் பெற்று இருந்தான். மிகவும் துஷ்டன், மஹா கிராதகன், அவனுக்கு மூன்று லோகத்தையே ஆளவேண்டும் என்ற பேராசை அவா எழுந்தது, அதற்கு அவன் என்ன செய்தான் தெரியுமா ? மூவுலகையும் கைப்பெற்றும் உபாயம் யாது ? என்று கேட்டு காட்டில் கடும் தவம் செய்த ரிஷிகளையெல்லாம் கட்டித் தூக்கி வந்து கட்டிப் போட்டு, உபாயம் சொல்லாதவர்களின் தலைக்கு தீ வைத்தான், எவருக்கும் மூவுலகை கைப்பற்றும் உபாயம் தெரியவில்லை, முனிவர்கள் கண்கலங்கினார்கள், அந்தக் கொடுமைகளையெல்லாம் ஆகாயத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நாரதர், 'நாராயணா நாராயணா லோகத்தில் கலி முத்திடுச்சு.......நாம தான் இந்த சண்டாளனை ஒழிக்க வழிதேடனும்' என்று புறப்பட்டார்

"நாராயணா மாண்டுகனின் அட்டகாசம் பார்த்தீர்களா ? அஜித் படம் அட்டகாசமே நான் பார்க்கல, மாண்டுகன் வேற சினிமாவெல்லாம் நடிக்கிறானா ? என்று குதர்கமாக கேட்காமல் நாரதா, நானே நரகாசுரனை அழித்த நரக வேதனையாக ரொம்பவும் சோர்வாகி படுத்துருக்கேன், என் மச்சான் சிவபெருமானை வேண்டுமானால் பாரேன் என்று பொறுப்பாக பதில் சொன்னார், பகவானாச்சே.....!

அதற்குள் அந்த மாண்டுகன் பிரம்மரிஷி என்னும் ஜடாமாமுனியிடம் உபாயம் கேட்டு, சிவபெருமானை நோக்கி 300 ஆண்டுகள் தவம் முடித்து இருந்தான், அவன் தவத்தை மெச்சிய சிவபெருமான், பக்தா என்ன வரம் வேண்டும் கேள், எனக் கேட்க மாண்டுகனும் தந்திரமாக 'விலங்குகளாலும் மனிதர்களாலும் எனக்கு மரணமே நடக்காமல் இருக்க வேண்டும்' எனக் கேட்க, அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டு உச்சிக்காலப் பூசைக்குச் சென்றுவிட்டார்.

வரம் பெற்ற மாண்டுகன் விடுவானா ? உடனே இந்திர லோகம் சென்று இந்திரனை துவைத்து எடுத்தான், தேவக் கன்னிகைகள் ரம்பை ஊர்வசி மேனகையை அந்தப்புரத்திற்கு தூக்கிவந்தான், இந்திர லோகம் பிடிப்பட்டது....விண்ணுலகு இந்திரலோகம் மண்ணுலகம் ஆகிய மூன்று உலகங்களுக்கு நானே அதிபதி என்று கொக்கரித்தான், தேவர்களுக்கு கிலி பிடித்தது, இதனை பாதிவழியில் வந்து கொண்டிருந்த நாரதர் பார்க்க, இறங்கி வந்து அவர்களைத் தேற்றினார்.

அங்கிருந்து புறப்பட்ட நாரதர் கையாலம் வந்து, 'நாராயணா நாராயணா......பெரபோ......சிவபெருமானே நீங்கள் தான் மாண்டுகனிடம் இருந்து மூன்று லோகங்களையும் மீட்டுத் தந்து தேவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடினார்.

'வரம் கொடுத்த நான் இனி ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கேன்' என்று கையைப் பிசைய. அவரது கையை இழுத்துக் கிள்ளி, நான் பார்த்துக் கொள்வதாகக் கூறினாள் அன்னைப் பார்வதி.

'அதாகப் பட்டது எனது சக்தியை ஒன்று திரட்டி உங்கள் சக்தியை பூசி மொழுகி, நான் விநாயகரை உருவாக்கப் போகிறேன், அவன் அந்த மாண்டுகனை அழிப்பான் என்று கூறினாள். பகவான் பகவதி எண்ணமாச்சே.... பலிக்காமல் போய்டுமா ? அன்னிக்கு நிறைஞ்ச அம்மாவாசைக் கழிஞ்ச நாலாம் நாள், சதுர்த்தி. மனுசாள் உடம்பு, கஜ முகத்தோடு விநாயகர் பொறந்துட்டார், மனுசனும் இல்லை மிருகமும் இல்லை, மாண்டுகனை அழித்தார், துஷ்டன் ஒழிந்தான் என்று கூறி தேவர்கள் அன்றிருலிருந்து விநாயகரைக் கொண்டாடினார்கள், அதே காரணத்திற்காக பகவானை சேவிக்கிற நாமெல்லாம் இன்னிக்கு விநாயகரைக் கொண்டாடுகிறோம்.கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

பிகு: இது விஜய் டிவியில் காலையில் பக்தி பார்த்துவருவதன் எஃபெக்ட், விஜய் டிவில யாரோ ஸ்திரி பிராம்ணாள் , நன்னா ஸ்பஷ்டமாக படிச்சுக் கொடுக்கிறா, நன்னா இருக்கு. இந்த பிள்ளையார் கதையை ஏதேனும் புருட புராணத்தில் சேர்த்தால் காஃபி ரைட் பிரச்சனை எதுவும் வராது என்று நான் உறுதி அளிக்கிறேன். ஏன்னா இந்த மேற்கண்ட (மொக்கை) கதையை நான் தான் எழுதினேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்