கணிணி தொழில் நுட்பம் நாளுக்கு நாள் மாறுதல் அடைந்தே வருகிறது, அதற்கான காரணங்களில் முதன்மையானது
போட்டித் தன்மை மிக்க உலகில் வேலையை விரைவாக முடிப்பது மற்றும் குறைந்த செலவில் சேவையை தருவதும் பெறுவதும் ஆகும், இந்த இரண்டு காரணங்களினால் வாடிக்கையாளர்களை தம் வசம் வைத்திருக்க நிறுவனங்கள் விரும்புகின்றன, அதற்காக தொழில் நுட்பங்களை ஆராய்ந்து அவ்வப்போது புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்துகின்றனர். 'போன் என்றால் பேசுறதற்கும் மட்டும் தான்' என்ற நிலையில் அலைபேசி நிறுவனங்கள் செயல்பட்டு அதில் பல்வேறு வடிவம் அமைப்பு வசதிகளை வைத்து அலைபேசி நிறுவனங்கள் இயங்கிவந்தன, குறிப்பாக நோக்கிய 2006 வரை சக்கைப் போடு போட்டது, பின்னர் வந்த ஆப்பிள் நிறுவனம் 'ஸ்மார்ட் போன்' எனப்படும் ஆப்பிள் மொபைலை அறிமுகப்படுத்தி பல்வேறு செல்பேசி நிறுவனங்களை மூட வைத்தது, 'உள்ளங்கையில் உலகம்' என்பதை ஆப்பிள் நிறுவனம் நிருபனம் செய்த பிறகு பல்வேறு செல்பேசி நிறுவனங்களும் 'போன் என்பது பேசுவதற்கு மட்டும் அல்ல' என்பதாக தற்போது வியாபாரங்களில் கடைவிரித்திருக்கின்றன. இருந்தாலும் ஆப்பிளின் தரத்திற்கு பின்னால் தான் அவர்கள் வருகிறார்கள். நோட்புக் எனப்படும் மடிக்கணிணிகள் கூட அலுவலகம் தவிர்த்து வெளியில் எடுத்துச் செல்வோர் வாங்குவது குறைந்து அந்த இடத்தில் புதிய மிண்ணனு பலகைகள் (ஸ்மார்ட் PAD) பிடித்துக் கொண்டுள்ளன. தற்போது பல்வேறு நிறுவனங்கள் 'ஆண்ட்ராய்ட் செயலி' பயன்படுத்தி பலகைகளை தயாரித்து விற்கிறார்கள், மின்னனு பலகையிலும் ஆப்பில் நிறுவனமே முன்னனியில் நிற்கிறது, காரணம் அது போன்ற பலகைகள் ஏற்கனவே விற்பனையில் இருந்தாலும் ஆப்பிள் போனின் நீட்சியாகவும் அதே தொழில் நுட்பத்திலும் இருப்பதால் ஆப்பிள் நுறுவன பலகைகளே பயன்படுத்த எளிது என்ற வகையில் பலகை விற்பனையிலும் முன்னனியில் உள்ளது. சரி அதற்கும் க்ளவுட் கம்யூட்டிங்க் என்பதற்கும் தொடர்பு என்ன ?
குறிப்பிட்ட சிம்கார்ட் (தனிப்பட்ட தகவல் அட்டை) வர்சன் ஏற்றுக் கொள்ளத் தக்க செல்பேசி மாடல்களில், அந்த சிம்கார்ட் எந்த மாடல் / எந்த நிறுவன செல்பேசியிலும் பொறுத்திப் பேசலாம், அதாவது செல்பேசிகளின் விலைக்கும் சிம்கார்டிற்கும் தொடர்பு இல்லை. அதே போன்று அடிப்படை மின்சாரம் என்பது வீட்டில் இருக்கும் அனைத்து மின் சாதனங்களுக்கும் பொதுவானவை, சிலமாற்றிகள் மூலம் ஒரே மின்சாரத்தைத் தான் அனைத்து மின்சாதனங்களும் பயன்படுத்திக் கொள்கின்றன. தற்போதைய கணிணி ஹார்ட்வேர் தொழில் நுட்பங்களுக்கு ஏற்றவாறு தான் மென்பொருள் வடிவமைக்கப்படுகிறது, குறிப்பாக பழைய மாடல் கணிணியில் பழைய மென்பொருள் இயங்கும் ஆனால் புதிய மென்பெருள் இயங்காது, இதை லீகசி சாப்ட்வேர் என்பர், நிறுவனங்கள் புதிய தொழில் நுட்பங்களுக்கு உடனடியாக மாறாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் பயன்படுத்திய மென்பொருள் புதிய தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு இருப்பதில்லை என்பதால் தான். மேலும் ஒவ்வொரு தொழில் நுட்ப மாற்றத்தின் போது பயனீட்டாளர்கள் அல்லது பயன்படுத்துபவர்களுக்கு பயிற்சி கொடுத்தாகவேண்டும் பெருள் செலவு மிகுதியாகப் பிடிக்கும்.
ஸ்மார்ட் போன்கள் மற்றும் பலகைகள் செயல்பாட்டிற்கு வந்த பிறகு பொதுவாக அலுவலகத்தில் பயன்படுத்தும் மென்பொருள்களை பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் இல்லை, காரணம் அவற்றின் தொழில் நுட்பங்கள் வேறுவேறானவை. இந்த சூழலில் மடிக்கணி, அலுவலகக் மேசைக் கணிணி மற்றும் ஸ்மார்ட் போன்கள் ஆகியவற்றில் இயங்கக் கூடிய ஒரே தொழில் நுட்பம் வடிவமைக்க முயற்சித்து இன்றைய இணைய வேகத்தின் நீட்சியை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளதே க்ளவுட் கம்ப்யூட்டிங்க் எனப்படும் புதிய கணிணி தொழில் நுட்பம். இது ஏற்கனவே இருந்த வெப்பேஸ்ட் அப்ளிகேசன்' என்பதன் நீட்சி தான் என்றாலும். அதைத் தாண்டிய பயனீடாக பல்வேறு மென்பொருள்களை இயக்கிக் கொள்வதுடன் அவற்றை கணிணி அல்லது கைபேசியில் நிரந்தரமாக நிறுவத் தேவை இல்லை என்பதை க்ளவுட் கம்யூட்டிங்க் நுட்பம் சொல்கிறது,
இதன்படி எக்சல், வேர்ட், பவர் பாயிண்ட் எழுதி மென்பொருள் போன்றவையும் ஆட்டோகேட், போட்டோ ஷாப் போன்ற வரைவு மென்பொருளையும் ஒருவர் பயன்படுத்த அவற்றை நிறுவிக் கொள்ளத் தேவை இல்லை என்பது தான் இதன் சிறப்பு. டேட்டா சென்டர்கள் எனப்படும் சேவைக்கணிக் கூடங்களில் தேவையான அனைத்து மென்பொருள்களும் நிறுவப்பட்டு, Pay By Service என்ற அடிப்படையில்
தேவைப்படுவர்கள் தங்கள் கணிணியின் இணைய உலாவி வழியாகவே அவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும், மேலும் பயனீட்டாளர் பயன்படுத்தும் கணிணிகள் எந்த வகை தொழில் நுட்பம் இருந்தாலும் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும், கணிணிகள் அல்லாது ஸ்மார்ட் போன்கள் மற்றும் பலகைகள் வழியாகவும் அந்த மென்பொருள்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதனால் பயன் என்ன ?
ஒவ்வொரு மென்பொருளுக்கும் லைசன்ஸ் (உரிமம்) வாங்கத் தேவை இல்லை, அவற்றைப் பயன்படுத்த ஆண்டு / மாத / மணித்துளிகளுக்கான சந்தா செலுத்தினாலே போதும், இவை உரிமப் பெற கொடுத்த விலையைவிட பல்மடங்கு குறைவானது, எடுத்துக்காட்டுக்கு ஒருவர் மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருள் வாங்க 8000 ரூபாய் செல்வளிக்கிறார் என்றால் க்ளவுட் சேவை வழியாகக் கிடைக்கும் அதே சேவைக்கு ஆண்டுக்கு 1000 ரூபாய்க்கும் குறைவாக செலுத்தினாலே போதும் (இது வெறும் உதாரணம் தான்)
குறிப்பாக இந்த தொழில் நுட்ப வல்லுனர்கள் இதை என்ன செய்து விற்பனை செய்கிறார்கள் என்றால் இதற்கு மறுபெயர் க்ரீன் கம்யூட்டிங். இந்த தொழில் நுட்பம் பயனீட்டாளர்களின் ஹார்ட்வேர் தேவைகளை வெகுவாகக் குறைக்கிறது, அதாவது நீங்கள் மிகப் பெரிய சேமிப்பு அளவு உள்ள ஹார்ட் டிஸ்க் வாங்குவதைத் தவிர்க்கலாம், அல்லது பயன்படுத்தும் மென்பொருளுக்கும் ஏற்ற ஹார்ட்வேர்கள் சேர்ப்பதைத் தவிர்க்கலாம். அதாவது ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒருவர் இரண்டாவதாக மடிக்கணிணி வாங்கத் தேவை இல்லை. இதன் மூலம் பயன்படுத்திய எலக்ட்ரானிக் கழிவுகள் வெகுவாக குறையும் என்கிறார்கள்.
தற்போது இணையத்தின் விரைவு (ஸ்பீட்) முன்னேற்றத் தொழில் நுட்பங்களால் அனைத்தும் இணைய வழியான சேவையாக மாறிவருகிறது, விரைவில் டிஸ் ஆண்டனாக்கள் மற்றும் செட்டப் பாக்ஸுகள் ஒழிந்துவிடும் என்றே நினைக்கிறேன். விரைவில் உலக தொலைக்காட்சி சேவைகள் அனைத்தும் இணைய வழியாகவே கிடைக்குமாறு தொழில் நுட்ப முன்னேற்றம் ஏற்படும், அப்போது எங்கும் எப்போதும் எவரும் தொலைகாட்சிகளில் விருப்ப சேனல்களைப் பார்க்க முடியும்.
க்ளவுட் கம்ப்யூட்டிங்க் நிறுவனங்களை மையப்படுத்தித் தான் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பல்வேறு நாடுகளில் இயங்கும் ஒரு நிறுவனம் ஒரே தளத்தில் தனது நிறுவனம் தொடர்பான அனைத்து பணிகளையும் இணைத்துக் கொண்டு செயல்பட முடியும் என்கிறது இந்த புதிய தொழில் நுட்பம், ஏற்கனவே வெப் பேஸ்டு அப்ளிகேசன் எனப்பட்டவைகள் இருந்தாலும் அவை அனைத்தும் கணிணி மற்றும் அதில் இயங்கும் மென்பொருளைச் சார்ந்தே இயங்கி வந்தது, க்ளவுட் கம்யூட்டிங்க் அந்த குறையை தவிர்க்கும் விதமாக அனைத்து வகை ஹார்ட்வேர் நுட்பங்களில் பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாக உள்ளது. நாம் வாங்கும் கணிணி குறைந்த செயல்திறன் மிக்கதாக இருந்தாலே போதும் என்ற அளவில் க்ளவுட் கம்யூட்டிங்க் நுட்பம் அதற்கு கைகொடுக்கிறது.
இதிலும் சில குறைகள் உண்டு, தன்னுடைய நிறுவன தகவல்கள் பாதுகாப்பாக இருக்காது என்று அச்சம் தெரிவிக்கின்றனர் நிறுவன உரிமையாளர்கள், ஆனாலும் இந்த பாதுகாப்புக் குறைபாடு அவர்களுக்கும் அவர்கள் எடுத்திருக்கும் டேட்டா சென்டரின் சேவைத் தரத்திற்கும் உள்ள பிரச்சனை தான் அவை.
டேட்டா சேமிப்பு எனப்படும் தகவல் சேமிப்புகளை க்ளவுட் கம்யூட்டிங்க் வழங்கும் சேவை நிறுவனங்களே கவனித்துக் கொள்கின்றன என்பதால் கணிணி பழுதடைந்து பயனற்றதாகப் போனாலும் அவற்றை வேறொரு கணிணி / ஸ்மார்ட் போன் வழியாக பயன்படுத்தமுடியும். தற்போது மின் அஞ்சல் மற்றும் இணையப் பக்கம் செயல்பாடுகள் ஆகியவற்றிற்கு மட்டுமே பிற டேட்டா செண்டர்களில் நிறுவனங்கள் கணக்கு வைத்திருக்கின்றனர், விரைவில் தங்களது பணித் தொடர்பான அனைத்து மென்பொருள்களின் சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளத் துவங்குவர்.
இது பழைய தொழில் நுட்பம் சிந்தனை தான் என்றாலும் இதனை செயல்படுத்த விரைவான வேகம் கொண்ட இணையம் தேவைப்பட்டது, தற்போது பைபர் (மென்னிலை) இண்டர்நெட் வசதிகளினால் 300 மெகபைட் அளவுக்குக் கூட இணைய வேகம் வாய்ப்பாகி இருப்பதால் தற்போது க்ளவுட் கம்யூட்டிங்க் தொழில் நுட்பம் பரவிவருகிறது
*****
அதற்கு ஏன் க்ளவுட் கம்யூட்டிங்க் என்ற பெயர் வந்தது ? க்ளவ்ட் என்பது இணையத்தைக் குறிப்பிட பயன்படுத்தும் மற்றொரு சொல்லாம் அவ்வளவு தான். இண்டர்நெட் வழியாக / பயனாக வழங்கப்படும் தொழில் நுட்பம் என்பதே அதன் பொருள்.
இந்த நுட்பம் முழுமையான செயல்பாட்டிற்கு வர 10 ஆண்டுகள் கூடப் பிடிக்கலாம், முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் போது உரிமம் முறையில் மென்பொருள் விற்பனை செய்யும் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய மென்பொருள் நிறுவனங்களின் ஆண்டு வருமானம் குறையும்.
இது தொடர்பான விக்கிப்பீடிய ஆங்கிலக் கட்டுரை.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
11 கருத்துகள்:
அருமையான தொழில் நுட்ப பதிவு :)
ஒரு சிறிய ஐயம்.
மொத்தமாக மென்பொருள் வாங்கத் தேவை இல்லைதான். ஆனால், ஒவ்வொரு உபயோகத்திற்கும் கட்டணம் செலுத்த வேண்டி தானே இருக்கும். இருந்தாலும் குறைந்த தேவை இருக்கும் தனி நபருக்கு அது பயன் தரும். ஆனால், நீண்ட காலத் தேவை இருப்பவர்களுக்கு (நிறுவனங்கள்) மென்பொருள் வாங்கத் தான் வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.
ஆனால், இதில் தொழில் நுட்ப வளர்ச்சியையும் நோக்க வேண்டி உள்ளது.
நல்ல அலசல்.
//வேங்கட ஸ்ரீனிவாசன் said...
ஒரு சிறிய ஐயம்.
மொத்தமாக மென்பொருள் வாங்கத் தேவை இல்லைதான். ஆனால், ஒவ்வொரு உபயோகத்திற்கும் கட்டணம் செலுத்த வேண்டி தானே இருக்கும். இருந்தாலும் குறைந்த தேவை இருக்கும் தனி நபருக்கு அது பயன் தரும். ஆனால், நீண்ட காலத் தேவை இருப்பவர்களுக்கு (நிறுவனங்கள்) மென்பொருள் வாங்கத் தான் வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.
ஆனால், இதில் தொழில் நுட்ப வளர்ச்சியையும் நோக்க வேண்டி உள்ளது.
நல்ல அலசல்//
நீங்கள் சொல்வது சரி தான், ஆனால் நான் அறிந்தவகையில்
நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் தொழில் நுட்பங்களில் ஆர்வம் காட்டுவது என்பது குறைவு தான், இன்னும் ஆபிஸ் 97 பயன்படுத்தும் நிறுவனங்கள் உண்டு. காரணம் புதிய மென்பொருள் விலை மிக அதிகம்
//ஸ்வாமி ஓம்கார் said...
அருமையான தொழில் நுட்ப பதிவு //
நன்றி ஸ்வாமி ஓம்கார்
u make it very easierr to understand..gud post
சிறந்த தகவல் கண்ணன் சார் வாழ்த்துக்கள்.
க்ளவுட் கம்ப்யூட்டிங் என்பது பல சர்வர்களிலிருந்து பல்வேறுவேறுபட்ட தகவல்களை பெறுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட முறை. அலைப்பேசியில்தான் இது கட்டண சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு சேவையை பெற அதற்குரிய மென்பொருளை நிறுவ வேண்டியதில்லை. உதாரணமாக, ரிலையன்ஸில் R-menu மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்ய முடியும், விளையாட்டு மென் பொருளை தரவிறக்கம் செய்யமுடியும். இது போல் பல்வேறு சேவைகளை பெறமுடியும்.
இதே காலகட்டத்தில் க்ரிட் கம்ப்யூட்டிங் கொண்டுவரப்பட்டது. இது ஒரே மாதிரியான தகவல்களை கொண்ட பல சர்வர்களின் இணைப்பை உருவாக்குகிறது. உலகத்தின் பல்வேறு புற்று நோய் மருத்துவமனைகளின் சர்வர்களை இணைத்து அதிக D.N.A பற்றிய தகவல்களை பெறமுடியும்.
சசிக்குமார் மிக்க நன்றி
சாகம்பரி, நீங்கள் அளித்துள்ளவை மேலும் சிறப்பான எளியத் தகவல், தனிநபர் பயனுக்கானது, நான் குறிப்பிட்டுள்ளவை நிறுவனங்கள் பெறும் சேவை குறித்தது.
very good post
இதையும் பார்த்து விடுங்கள்
க்ளவுட் கம்யூட்டிங்
கருத்துரையிடுக