பின்பற்றுபவர்கள்

31 ஆகஸ்ட், 2011

கலவை 31/ஆகஸ்ட்/2011 !

ஊகங்களுக்கு அப்பாற்பட்டு தூக்குதண்டனையை நீக்கக் கோரி முதல்வர் ஜெ கொண்டுவந்த தீர்மானம் வரவேற்பு பெற்றிருக்கிறது, விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்காக பொடோ சிறையில் ஒராண்டுகாலம் கழித்த வைகோ 'ஜெயலிதா வரலாற்றுப் புகழ் பெற்றுள்ளார்' என்று வெளிப்படையாக பாராட்டியுள்ளார், என்று என்பதைப் படித்தப்பிறகு இவை வெறும் சட்டமன்ற வழக்கம் இல்லை என்று உணரமுடிகிறது. விடுதலைப்புலிகள், ஈழம், தமிழர் நலம் என்பதில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களில் வைகோ தவிர்த்து ஏனையோர்கள் சொல்லி இருந்தால் இவை வெறும் புகழ்ச்சி என்றே எடுத்துக் கொண்டிருப்பேன். ஏனினெல் வைகோ வாழ்நாளில் ஈழத்தமிழர்களின் நலனுக்காக் சிறைவாசம் உள்ளிட்ட பல அற்பணிப்புகளைச் செய்திருக்கிறார், அந்த நிலைப்பாட்டை தமிழக அரசியல் நிலைப்பாட்டில் கலக்காமல் அவர் ஜெவுடன் கூட்டணி அமைத்த பொழுது எள்ளி நகையாடியவர்களில் நானும் ஒருவர் என்பதை இப்போது நினைக்க வைகோவிடமும் வைகோ தொண்டர்களிடமும் மன்னிப்புக் கேட்கத் தோன்றுகிறது.

******

கருணாநிதியின் லாவனி

2000-ம் ஆண்டில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் ஒருசில ஆண்டுகளே தண்டனையை அனுபவித்திருந்தனர். அப்போதுதான் ராஜீவ் காந்தியின் மறைவுக்குக் காரணமாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டியபோது, தி.மு.க. அமைச்சரவையில் ஒரு முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவினைக்கூட நான் ஜெயலலிதாவைப்போல தன்னிச்சையாக எடுத்துவிடவில்லை. அமைச்சரவையில் வைத்து விவாதத்துக்குப் பிறகுதான் முடிவெடுக்கப்பட்டது. அப்போதுகூட தூக்கு தண்டனைக்கு ஆளான நான்கு பேரில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகிவிடும் என்று நான் தெரிவித்த கருத்தினை ஏற்றுத்தான், அவருக்கு அப்போது கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. - கருணாநிதி

அதாவது மூன்று பேர் குறித்த, ஜெ மரணதண்டனைக் குறைப்புக் குறித்தத் தீர்மானம் தன்னிச்சையானதாம். டமிழின தலிவர் (அப்)பட்டம் முற்றிலுமாக உருவப்பட்டதால் ஏற்பட்ட ஆற்றமையோ ? தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறன் உள்ளவர்கள் தானே தலைவர் ஆகும் தகுதி பெறுகிறார்கள்.......?

*****

செங்கொடியை யாரோ தீயில் தள்ளியதைப் போன்று சிலர் பேசுகிறார்கள், தரம் கெட்டத் தலைவர்களுக்காக தீக்குளிக்கும் தொண்டர்கள் இருக்கும் நாட்டில் இவை நகைப்புக்கும் கேள்விக்கும் இடமாவது வியப்பளிக்கவில்லை, தன் உயிருனும் மேலாக நினைப்பவர்களின் உயிருக்காக தியாகம் செய்வோர் ஒருசிலர் உண்டு, அவர்களின் தியாகம் வரவேற்கத் தக்கதல்ல ஆனால் போற்றுதலுக்குள்ளானவை, இந்த வேறுபாடு தெரிந்தவர்கள் செங்கொடியைப் போற்றுகிறார்கள், மற்றவர்கள் தூற்றுகிறார்கள். ஒரு நாடு பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருக்கும் போது ஒவ்வொரு இராணுவ விரனும் கூட செங்கொடியாகத்தான் போரில் கலந்து கொள்கிறார்கள், தன் நேசத்துகுரியவர்களை காக்க இன்னுயிர் தரும் தற்காப்பு வீரனை கோழை என்று எவரும் சொல்வதில்லை, சொங்கொடி தவறான முன் உதாரணம் என்றாலும் அவரின் தன்னலமற்ற பேரன்பு ? சினிமா ஹீரோக்களுக்கு தீக்குளிக்கும் நாட்டில் செங்கொடிகளை அபத்தம் என்று சொல்வதே அபத்தம். உற்றாரும் உடன்பிறந்தோறும் செங்கொடி செய்தது தியாகம் என்று சொல்லும் போது எதிலும் பாதிக்கப்படாத நாம் தூற்றுவதற்கு முதல் ஆளாக நிற்கிறோமே ஏன் ? ஒரு தாய் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால், பலாத்காரம் செய்வோரை தாக்க முற்படாமல் பார்த்துக் கொண்டு இருந்து காவல் நிலையத்தில் முறையிடு, உன் நடவடிக்கை சட்டப்படியானது என்று சொல்கிறேன் என்கிறது உலகம்.

*****

போபால் விசவாயு கொலையாளி கவுரமாக வெளியேற்றப்பட்டான், தேடப்படும் குற்றவாளியான டக்ளஸுக்கு டெல்லியில் சிவப்புக்கம்பளம் வரவேற்புக் கொடுக்கப்பட்டது, இதனை எதிர்த்து மரணதண்டனைக்கு ஆதரவான எந்த நாயும் குரல் கொடுக்கவில்லை, சங்கராமன் கொலை வழக்கு இழுத்தடிக்கப்பட்டு இன்றும் நடக்கிறது, இதற்கெல்லாம் ஞாயஸ்தன்கள் அவற்றை விரைந்து நடத்த குரல் கொடுக்கக் காணும் சோ இராமசாமியும், சு சாமியும் நீதிக்கு தண்டனையான மரணதண்டனைக்கு ஆதரவாளர்களாம், வெட்கமாக இல்லையா ?

*****

தமிழகத்தின் அன்னா ஹசாரே இவர்கள் தான் என்று சென்ற கலவையில் ஊகமாக எழுதி இருந்தேன், மறுநாள் சுவரொட்டிகளே வந்துள்ளன. ஒபாமாவையும் சேகுவாரவையும் ஓரம் கட்டிட்டு அன்னா ஹசாரே அந்த இடத்தைக் கெட்டியாகப் பிடித்துள்ளார், இதே திமுக ஆட்சி என்றால் அஞ்சா நெஞ்சன் ஒரு ஆள் தவிர்த்து 'தமிழகத்தின் அன்னா ஹசாரே' என்று போட்டுக் கொல்லும் தகுதி பிறருக்கு வாய்திருக்காது :)4 கருத்துகள்:

கோவி சொன்னது…

சினிமா ஹீரோக்களுக்கு தீக்குளிக்கும் நாட்டில் செங்கொடிகளை அபத்தம் என்று சொல்வதே அபத்தம்.

முற்றிலும் உன்மை..

சார்வாகன் சொன்னது…

அருமை
கடைசி இரு ஃபோட்டொ மிக அருமை!!!!!!!!!!
நன்றி

Karikal@ன் - கரிகாலன் சொன்னது…

//வைகோ வாழ்நாளில் ஈழத்தமிழர்களின் நலனுக்காக் சிறைவாசம் உள்ளிட்ட பல அற்பணிப்புகளைச் செய்திருக்கிறார்//
தாமதமாக புரிந்துக் கொண்டிருந்தாலும், தங்களின் இப்போதைய புரிந்துணர்வுக்கு நன்றிகள்.
மேலும் இவ்விஷயத்தில் முதல்வரை பாராட்டாவிடில் முழுமை இருக்காது என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்

JOTHIG ஜோதிஜி சொன்னது…

எப்படியோ பஸ்ஸை விட்டு வெளியே வந்து ஏதாவது எழுதியே ஆக வேண்டும் என்று எழுதியிருப்பீங்க போலிருக்கு. இன்னும் நிறைய விசயங்களைப் பற்றி தொகுத்து எழுதியிருக்கலாம்.

பஸ் (பல சமயம்) கெட்டது.
இடுகை (எப்போதும்) நல்லது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்