பின்பற்றுபவர்கள்

18 ஆகஸ்ட், 2011

அன்னா ஹசாரே சாப் நஹி சப்போர்ட்ஸ் !

இந்தியா என்பது வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்ட நாடு, அதிலிருந்து பிரிந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்றவை தனிநாடுகள். உலகெங்கிலும் பெரும்பாலான நாடுகள் தனித் தனி மொழி அடையாளம் கொண்ட குழுவாக இன்றும் அடையாளம் காணப்படுகின்றன. கடந்த 200 நூற்றாண்டுகளில் உருவான நாடுகள் தவிர்த்து பெரும்பாலனவை மொழிவாரி, இனம் சார்ந்த நாடுகள் தான். வெள்ளையர்கள் இந்தியாவை கைப்பற்றி இருக்காவிட்டால்,இந்தியா மொழிச் சார்ந்து பல்வேறு நாடுகளாக இருக்கும் என்றே கருதவேண்டி இருக்கிறது. இந்திய மக்களுக்கு பொது இன அடையாளம் காணப்படுவதும் கடினம் தான்.

Scientific racism of the late 19th and early 20th centuries divided mankind into three "great races", Caucasoid (white), Mongoloid (yellow) and Negroid (black) in accordance with their own world-view.
The populations of the Indian subcontinent however were problematic to classify under this scheme. They were assumed to be a mixture of an indigenous "Dravidian race", tentatively with an "Australoid" grouping, with an intrusive Aryan race, identified as a sub-race to the Caucasoid race, but some authors also assumed Mongolic admixture, so that India, for the purposes of scientific racism, presented a complicated mixture of all major types.
மேலும் படிக்க

ஆனாலும் மொழிக் குழுக்களின் அடையாளமாக திராவிடர் ஆரியர் என்கிற பகுப்புகள் இருக்கின்றன. அதன் உட்பகுப்பாக மொழி அடையாளங்களே மாநிலங்களாகவும் மாநில மக்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் தென்னிந்தியர் ஒருவரை முகத்தை வைத்து இவர் இந்த மொழி பேசுபவராக இருக்கும் என்று கணிப்பதும் கடினம் தான். பிரச்சனைகள் அதாவது பிறநாட்டினரின் வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பு என்கிற போது இந்திய நிலம் சார்ந்தவர்கள் ஒன்றிணைந்தார்கள், ஆனால் வெள்ளையர்கள் சென்ற பிறகு ஆளுமை / ஆட்சி அதிகாரம் என்று வரும் போது உண்மையில் இந்தியாவின் பிரச்சனைகள் ஒருமைப்பாடு என்பவை கேள்விக்குறியாகவே ஆகின்றன, காரணம் வட இந்தியர்களே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஆகுவதும் தென்னிந்தியர்களுக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை. இந்தியா பகுதிகள் அனைத்திற்கும் பொதுவான ஒரு தலைவர், மாநிலப் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வுச் சொல்லக் கூடிய ஒருவர், பெரும்பாலான மாநில மக்கள் ஏற்கக் கூடிய தலைவர்கள் உருவாகுவதற்கு வாய்ப்பே இல்லை.

100 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் தேசிய கட்சியான காங்கிரஸ் கூட சென்ற தேர்தலும் முந்தைய தேர்தலில் இவர் தான் பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிக்கத் திணறி தேர்தலை சந்தித்து பின் கூட்டணிகள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரம் பெற்று மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கி பின் தொடர்கிறது. வெங்கையா நாயுடுவையோ பிற தென் மாநில பாஜக பொறுப்பாளர்களையோ பாஜக பிரதமர் வேட்பாளராக முன்மொழிய தயாராக இருப்பதே இல்லை, சந்துல சிந்து என்ற அடிப்படையில் தான் தென்னிந்தியர்களான நரசிம்மராவும், குறைந்த நாட்களே தேவ கவுடாவும் கூட பிரதமர் ஆனார்கள், அப்படி பிரதமர் ஆனவர்களுக்குக் கூட அவர்கள் மாநிலங்கள் தவிர்த்து பெரிய ஆதரவோ, மறுமுறை அவ்வாறு ஆகுவதற்கான வாய்ப்போ கிடைக்கவில்லை.

ஒரு மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக ஆளும் தேசிய கட்சிகள் புறக்கணிக்கப்பட்டால், அந்த மாநிலத்திற்கு மத்திய அரசில் பங்கு பெற எந்த ஒரு அமைச்சர் பதவியும் கிடைக்காது, இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அந்தந்த மாநில வளர்ச்சிக்கு உதவும் மத்திய அமைச்சர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே. கூட்டணி என்பதால் சில பதவிகள் கிடைக்கிறது அதையும் கூட திமுக உள்ளிட்டவை ஊழல் செய்யதாகக் கூறப்பட்டு கெடுத்துக் கொண்டுள்ளது. இரண்டு அமைச்சர்களின் பதவிகளை பறித்துக் கொண்டார்கள் கேட்டுப் பெற ஒரு துப்பும் இல்லை.

ஸ்பெக்டரம் விவாகரத்தை பத்திரிக்கைகள் தான் ஊதிப் பெருக்குகின்றன, ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்ற காங்கிரஸ் நீதிமன்ற நெருக்கடியால் சிபிஐ விசாரணையில் குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களை கைது செய்து விசாரணை செய்துவருகிறது. ஊழலே நடக்கவில்லை என்றால் தற்போது சிறையில் இருக்கும் கல்மாடி, ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் அப்பாவிகள் என்று காங்கிரஸ் வெளிப்படையாகவே சொல்லிவரலாமே.

எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை என்று சாதிக்கவே அவர்கள் அவ்வாறு கூறி வந்தார்கள், சில மாதங்களாக அன்னா ஹசாரே கொடுத்துவரும் குடைச்சலாலும், விக்கிலீக் வழங்கியுள்ள ஸ்விஸ் வங்கி கருப்புப்பணப் பட்டியல் வெளி ஆகியுள்ளதால், பிரதமர் சுதந்திர தின உரையில் வெட்கமே இல்லாமல் நாட்டில் ஊழல் பெருகியுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார், அதையும் தாங்களே ஒழிக்கப் போவதாகக் கூடச் சொல்லி இருக்கிறார். எங்கள் ஆட்சியில் ஊழல் நடைபெறுகிறது என்பதை நீங்கள் சொல்லித்தான் நாங்கள் தெரிந்து கொள்கிறோம், நீங்கள் சொல்வது சரியாகக் கூட இருக்கலாம், நாங்களே நடவெடிக்கை எடுக்கிறோம் என்பதாக வெட்கமே இல்லாமல் ஆட்சியைத் தொடர்கிறார்கள். சரி அதுவேறு......

அன்னா ஹசாரே யார் ? யாருக்குத் தெரியும் வட இந்திய செய்தி இதழ்கள் அவரை ஊழலை ஒழிக்க வந்த புதிய அவதாரமாகக் காட்டுகின்றன, அவரும் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்தார் என்றெல்லாம் நாள் தோறும் செய்திகள் வெளியாகின, அன்றைய செய்திக்கு இடம் போக மீதம் உள்ள இடத்தில் தென்னிந்திய செய்தித்தாள்கள் அவற்றை மீள் பதிவு செய்தன, மற்றபடி அன்னா ஹசாரே என்பவர் இந்திய மாநிலங்கள் அனைத்தாலும் அறியப்பட்டவரே இல்லை. அன்னா ஹசாரே என்பவர் நதி நீர் உள்ளிட்ட தென்னிந்திய பிரச்சனைகளுக்கு ஏதேனும் குரல் கொடுத்துள்ளாரா ? தெலுங்கானப் பற்றி ஏதேனும் சொல்லி இருக்கிறாரா ? இந்தியாவை ஆளும் சக்திகளில் தென்னிந்தியர்களுக்கும் முதன்மைத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஏதேனும் போராடியுள்ளாரா ? மாநில மொழி சார்ந்த உரிமைகளுக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுத்து அனைத்து ,மொழிகளையும் ஆட்சி மொழி ஆக்க குரல் கொடுத்துள்ளாரா ? இந்தநிலையில் தென்னிந்தியர்களால் ஓரளவு அறியப்பட்ட அமிதாப்பச்சன் கட்சித் துவங்கினால் தென்னிந்தியர்கள் எந்த அளவுக்கு ஆதரவு கொடுப்பார்களோ அதைவிடக் மிக குறைவாகத்தான் அன்னா ஹசாரேவுக்கு கிடைக்கும், அதுவும் கூட காங்கிரஸுக்கு மாற்றான தேசியக் கட்சியான பாஜகவின் ஆதரவாளர்களால் தான் கிடைக்கிறது.

அன்னா ஹசாரே தேசிய புதிய அவதாரமாக ஊடகங்கள் ஊதிப் பெருக்கி இருந்தாலும் அவர் அதன் பிறகு தென்னிந்திய மாநிலங்கள் எதிலும் கால் வைத்தது போலும் தெரியவில்லை, பிறகு எப்படி அவரை ஒரு பொதுத்தலைவர் மற்றும் சமூகப் போராளியாக தென்னிந்தியர்கள் ஏற்றுக் கொண்டு ஆதரவு கொடுப்பார்கள். மேலும் காங்கிரஸ் ஆட்சிகள் துவங்கி போஃபர்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் நீர்க்கடிக்கப்பட்ட பிறகு ஊழலுக்கு எதிரான கூக்குரல்கள் யாவும் பயனற்றதாகவே போய்விடும் நம்பிக்கையின்மையும் மக்களிடையே இருக்கிறது.

இந்தியை தேசிய மொழியாக திணிப்பதையும், வட இந்தியர் ஆதிக்கங்களைக் குறைத்து, ஆட்சி அதிகாரம், மாநில மொழிக்கு அங்கீகாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தென்னிந்தியர்களுக்கு சம உரிமை கிடைக்கும் வரை எந்த ஒரு வட இந்தியரையும் பொதுத் தலைவராக தென்னிந்தியர்கள் ஏற்றுக் கொள்வது கடினமே. ஆனால் தலைமைத்துவம் சாராத கார்கில் ஊடுறுவல் உள்ளிட்ட பொதுப் பிரச்சனைகளில் தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழ்நாட்டினர் நிறையவே ஆதரவு கொடுத்துவருகின்றனர்.


மேற்கண்ட கட்டுரை வெளியான பின்பு ....

கூகுள் பஸ்ஸில் ஒருவர் ஆவேசமாகக் விமர்சித்துக் கேட்டார்,

அரைகுறை அறைவேக்காட்டு பதிவு

சுத்த ஹம்பக். ஊழல் பொதுப் பிரச்சனை இல்லையா ? ஊழலை ஒழிக்க குரல் கொடுக்க தகுதி வேண்டுமா ? அவரை எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டுமா ?

எதுவுமே தவறு இல்லை. ஊழலை ஒழிக்கக் குரல் கொடுக்கத் தகுதி தேவை இல்லை, திகார் புகழ் ராசா கூட ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கலாம், சாராய உடையார் கூட மது ஒழிப்புக்கு போராடலாம், இவையும் பொதுப் பிரச்சனை தானே, அவர்களும் பொது மக்கள் தானே..... அன்னஹசரே நல்லவரு வல்லவரு அவர் (மதவாதி) மோடியையோ, ஊழல் அமைச்சர்கள், அலுவர்களின் தலைவன் மன்மோகன் சிங்கையோ தனிப்பட்ட முறையில் புகழ்ந்திருந்தால் என்ன தவறு ? :)

ஊழலுக்கு எதிராக போராட தகுதி இல்லை சார்.

15 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

இந்திய அரசியல் கலாசாரத்தில் தமிழ்நாடு ஒரு தாழ்ந்த சமூகம்.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

முதல் மூன்று பாராக்களிலும் மிகத் தவறாகவே விஷயங்களைப் புரிந்து கொண்டு, இந்தப்பதிவைக் கடைசிவரை ஒரு குழப்பத்திலேயே எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது.ஆரிய திராவிட சர்ச்சைகள் ஆதாரமே இல்லாதவை என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் பழைய வாசனையை விடாமல் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அடுத்துக் காங்கிரஸ் கட்சி கூடப் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்க முடியாத குழப்ப நிலையில் இருப்பதாக...!

அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்! நேரு குடும்பத்து வாரிசுகள் அரியணையில் ஏறத் தயாராகும் வரை, மன்மோகன் சிங்கோ, அல்லது வேறு எவரோ, ஒரு டம்மிப்பீஸ் முகமூடியாக வந்து அமர்ந்து கொள்வதை அரசியல் நிகழ்வுகளை மேலோட்டமாகப் பார்க்கிற ஒருவர் கூடச் சொல்லி விட முடியும். ஐமுகூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்று, இரண்டில் கூட, பிரதமராக யார் என்பதை சோனியா முடிவுக்கு விட்டார்களே தவிர, கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக அன்றைக்கு வர்ணிக்கப்பட்ட திமுக கூட, இந்த விஷயத்தில் சகலத்தையும் பொத்திக் கொண்டு, சம்பாதிக்கிற வழியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது சிறுபிள்ளைக்குக் கூடத் தெரியுமே! அறுபத்திரண்டு எம்பிக்களை வைத்துக் கொண்டு முதல் வெர்ஷனில் ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இந்த விஷயத்தில் ஒன்றுமே சொல்லவில்லை.

அண்ணா ஹசாரே யார் என்பது இன்றைக்கு இந்தியா முழுவதும் தெரியும். முக்கியமாக, இரண்டு சந்தர்ப்பங்களில், காங்கிரஸ் அரசு அவர் முன் மண்டியிட்டுத் தோற்றுப் போன கதையைப் பார்த்த பிறகு,தொலைக்காட்சியில் பார்க்கிற இந்தியர் எவருக்கும்,அண்ணா ஹசாரே யார் என்பதில் எந்தக் குழப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை.

அண்ணா ஹசாரேவை ஒரு பொதுத்தலைவராக ஏற்றுக் கொள்ள தென்னிந்தியா ஒருபோதும் சம்மதிக்காது என்ற ரீதியில் உங்கள் பதிவு அடுத்து விரிவது, உங்களுடைய குழப்பத்தின் உச்ச கட்ட வெளிப்பாடு. தென்னிந்தியா, மேற்கிந்தியா என்ற எல்லைகளைக் கடந்து, சராசரி இந்தியர்கள், நாளுக்குநாள் பெருகி வரும் ஊழலை எதிர்த்து, காங்கிரஸ் பூனைக்கு மணிகட்டுவது யார் என்றே ஏங்கிக் கொண்டிருந்ததில், இன்றைக்கு ஹசாரே ஒரு நம்பிக்கைக் கீற்றாகத் தெரிவதில் வியப்பு ஒன்றுமில்லை.

இதே ரீதியில் நீடிக்குமானால், ஹசாரே இந்தியா முழுவதும் ஏற்றுக் கொள்ளபடுகிற பொதுத்தலைவராகிவிடுவார்!ஆனால், அப்படி ஒரு என்னமோ முனைப்போ அவரிடம் இல்லை என்பதுதான் தற்போதைய நிலைமை.

இங்கே சரியான, நேர்மையான தலைவர்கள் இல்லாத வெற்றிடம் ஒன்று நீண்ட நாட்களாகவே இருந்துவருகிறது என்பது மட்டுமே உண்மை.

வெற்றிடத்துக்குத் தெற்கு வடக்கு, கிழக்கு மேற்கு, ஹிந்தி,ஹிந்தி அல்லாதது என்ற பிரிவினைகளோ, அடைமொழிகளோ இல்லை!!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆரிய திராவிட சர்ச்சைகள் ஆதாரமே இல்லாதவை என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் பழைய வாசனையை விடாமல் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.//

நான் விக்கிப்பீடியாவில் இருந்து தான் எடுத்து எழுதினேன், விக்கியை மறுக்க எவருக்கும் உரிமையை விக்கி கொடுத்துள்ளது, அதை மறுக்கவும்.
:)

ஆரியன் இல்லை, திராவிடன் இல்லை, ஆனால் அடிச்சுவடுகளாக ஆரிய பவனில் சூடான பொங்கல் உண்டு, திராவிட வேதம் (நாலாயிர திவ்யபிரபந்தம்) படிக்கும் ஒருவன் அங்கு சாப்பிடத் தடையில்லை.
:)))))))

இந்திக்கு தார் பூசி அழித்த நீங்கள், ஆரிய பவன் ஓட்டலில் தார் பூசி அழித்துவிட்டு அது ஆங்கில சித்தாந்தம் என்று தெளியப்படுத்தலாமே.

//இதே ரீதியில் நீடிக்குமானால், ஹசாரே இந்தியா முழுவதும் ஏற்றுக் கொள்ளபடுகிற பொதுத்தலைவராகிவிடுவார்!ஆனால், அப்படி ஒரு என்னமோ முனைப்போ அவரிடம் இல்லை என்பதுதான் தற்போதைய நிலைமை//

அன்னா ஹசாரே என்பவர் பிஜேபி வகையராக்களின் ஆதரவு தொடரும் வரை அவரை மக்கள் சந்தேகக் கண் கொண்டு தான் பார்ப்பார்கள்

இங்கே சரியான, நேர்மையான தலைவர்கள் இல்லாத வெற்றிடம் ஒன்று நீண்ட நாட்களாகவே இருந்துவருகிறது என்பது மட்டுமே உண்மை.

//வெற்றிடத்துக்குத் தெற்கு வடக்கு, கிழக்கு மேற்கு, ஹிந்தி,ஹிந்தி அல்லாதது என்ற பிரிவினைகளோ, அடைமொழிகளோ இல்லை!!

11:09//

செயற்கையாக அமைந்த நாடு என்பதால் அந்த வெற்றிடம் அப்படியே இருக்கவே வாய்ப்பு இருக்கிறது.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

என்ன ஆச்சரியம் கோவி! காங்கிரஸ் கூட, அண்ணா ஹசாரே இயக்கத்துக்குப் பின்னணியில் ஆர் எஸ் எஸ், பிஜேபி இருப்பதாகக் குற்றம் சாட்டியது. அண்ணா ஹசாரே, அரசியல் சாயமற்றதாகத் தன்னைக் காட்டிக் கொள்ள, அரசியல் கட்சிகள் வலிந்து ஆதரவு கொடுக்க முனைந்ததை நிராகரித்தார். இது நடந்து வெறும் நாலே மாதங்கள் தான் ஆகின்றன!

பாபா ராம்தேவ் என்ற கார்பரேட் முறையில் யோகப் பயிற்சியை விற்றுக் காசு பார்க்கும் சாமியார் ஒருத்தர்,அண்ணா ஹசாறேவை விடத் தம்பட்டத்தை ஓங்கி ஒலித்தார்! மீடியாக்கள் சப்போர்ட் கூட அதிகமாக இருந்தது. பிஜேபி மற்றும் கூட்டாளிகள் ஆதரவும் இருந்தது. என்ன இருந்து என்ன பயன்? வருமான வரி, வருமானம் வருகிற விதம் இவைகளைக் கேள்வி கேட்க ஆரம்பித்துக் கிடுக்கிப்பிடி போட்டு, பாபா ராம்தேவை, அரசியலில் ஒண்ணும் தெரியாத பாப்பா ராம்தேவாக்கி உட்காரவைத்து விட்டது காங்கிரஸ்!

கோவி.கண்ணன் சொன்னது…

திரு கிருஷ்ண மூர்த்தி ஐயா,
நான் ஹசாரேவை ஆயிரம் கோடி அதிபர் ராம் தேவுடன் ஒப்பிடவோ,குற்றம் சொல்லவோ இல்லை, தென்னிந்தியாவில் ஏன் அவருக்கு பெரிய ஆதரவில்லை என்றே குறிப்பிட்டுள்ளேன். இன்றைய வினவு கட்டுரையைப் பாருங்கள் விளக்கமாக எழுதியுள்ளார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//
DrPKandaswamyPhD said...
இந்திய அரசியல் கலாசாரத்தில் தமிழ்நாடு ஒரு தாழ்ந்த சமூகம்.

10:49 AM, August 18, 2011//

ஆமாம் காங்கிரசிடம் அடிநக்கும் கைக்கூலி கூட்டணிகள் இங்குண்டு

virutcham சொன்னது…

வட நாட்டில் இருந்து ஒருவர் தென்னாட்டு பிரச்சனைக்கு குரல் கொடுக்கவில்லை என்று சொல்லி புலம்புவதெல்லாம் சரி. இங்கே இருந்து அதிகாரத்திலும் ஆட்சியிலும், கட்சியிலுமாக டெல்லியில் கொலு வீற்றிருந்த நாம் செம்மொழித் தமிழ் தலைவர்கள் தமிழ் நாட்டை ஊழலில் ஊற்றாக வட மாநிலங்களில் அறிய வைத்தது தவிர நமக்காக என்ன செய்தார்கள்?
நமக்காக எப்போதும் பிறர் போராடவேண்டும் தாமாக முன் வந்து செய்து தர வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே ஒரு தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக நமக்கு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

Unknown சொன்னது…

நல்ல கட்டுரைதான். ஆனால் இப்படி எழுதினாலும், உடனே இந்தியாவின் ஒற்றுமைக்கு களங்கம் விளைவிப்பதாகவே நிறைய தமிழர்கள் நினைப்பார்கள். என்ன செய்வது.

கோவி.கண்ணன் சொன்னது…

//virutcham said...
வட நாட்டில் இருந்து ஒருவர் தென்னாட்டு பிரச்சனைக்கு குரல் கொடுக்கவில்லை என்று சொல்லி புலம்புவதெல்லாம் சரி. இங்கே இருந்து அதிகாரத்திலும் ஆட்சியிலும், கட்சியிலுமாக டெல்லியில் கொலு வீற்றிருந்த நாம் செம்மொழித் தமிழ் தலைவர்கள் தமிழ் நாட்டை ஊழலில் ஊற்றாக வட மாநிலங்களில் அறிய வைத்தது தவிர நமக்காக என்ன செய்தார்கள்?
நமக்காக எப்போதும் பிறர் போராடவேண்டும் தாமாக முன் வந்து செய்து தர வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே ஒரு தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக நமக்கு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது//

ராசா கனிமொழி கல்மாடி இவர்களைத் தவிர்த்து எத்தனை தென்னிந்தியர்கள் அதே வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்? தூண்டியதிலும், துணை போனதிலும் எத்தனை தென்னிந்தியர்கள் சிக்கியுள்ளனர் ?

ராஜ நடராஜன் சொன்னது…

எப்பவும் சரியாகத்தானே விவாதீப்பீர்கள்?இந்த முறை எண்ணைச்சட்டிய தலையில் கவிழ்த்துகிட்ட மாதிரி பேசுறீங்களே:)

கிருஷ்ணமூர்த்தி சரியாகவே உங்களிடம் தர்க்கம் செய்கிறார்.

நமக்கு தகவல் பரிமாற்றங்கள் இல்லாத காரணத்தால் அப்பாவிகள் மாதிரி தெரிகிறோம்.வட இந்திய மாநிலங்களில் டெல்லியைத் தவிர அரசியலில் தமிழகம் ஸ்மார்ட்தான்!அது தில்லுமுல்லு ஊழல் செய்யும் துணிச்சலாக இருந்தாலும் கூட:)

rangarajan சொன்னது…

திராவிடர்கள் என்ற ஒரு பகுதியினர் தமிழகத்தில் மட்டும் வசிக்கிறார்களா? கேரளா, ஆந்திரா, கர்னாடகா போன்ற ஏனைய மானிலங்களிள் வசிக்கவில்லயா??
தமிழன் மட்டும் ஏன் தேசப்பிரச்சினய தேசீய நோக்குடன் அனுகுவதில்லை?? நாம் இந்திய நாட்டை சேர்ந்த வரை ஒருமித்த கருத்து கொள்ள வேண்டும்..

rangarajan சொன்னது…

திராவிடர்கள் என்ற ஒரு பகுதியினர் தமிழகத்தில் மட்டும் வசிக்கிறார்களா? கேரளா, ஆந்திரா, கர்னாடகா போன்ற ஏனைய மானிலங்களிள் வசிக்கவில்லயா??
தமிழன் மட்டும் ஏன் தேசப்பிரச்சினய தேசீய நோக்குடன் அனுகுவதில்லை?? நாம் இந்திய நாட்டை சேர்ந்த வரை ஒருமித்த கருத்து கொள்ள வேண்டும்..

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

கொஞ்சம் இங்கேயும் பார்க்கவும்:

http://thatstamil.oneindia.in/news/2011/08/17/why-no-massive-support-anna-agitation-south-india-aid0091.html

கோவி.கண்ணன் சொன்னது…

// ராஜ நடராஜன் said...
எப்பவும் சரியாகத்தானே விவாதீப்பீர்கள்?இந்த முறை எண்ணைச்சட்டிய தலையில் கவிழ்த்துகிட்ட மாதிரி பேசுறீங்களே:)//

கருணாநிதி ஊழல்வாதி அதுக்காக நாங்கள் ஜெவை முதல்வராக பார்க்கனும் என்பது என்ன நியாயம் என்று பலர் கேட்டனர். அம்மாவின் திடிர் ஈழத்தாய் அவதாரத்தைக் காட்டினோம்.

ஊழல் ஒரு முக்கிய பிரச்சனையே இல்லை என்ற அளவில் தான் பஜாக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நடந்து கொள்கின்றன, இவர்களின் ஆதரவு அன்னா ஹசரேவுக்காம், அவரும் ஊழல் ஆட்சிகளை வெளிப்படையாக சுட்டிக்காட்டியும் பேசவில்லை, எதுக்கு பயப்பட வேண்டும், தைரியமாக காங்கிரஸ் ஊழல், பாஜாக ஊழல் என்று முழங்க வேண்டியது தானே, செவ்வாய்கிரக வாசிகளா ஊழல் செய்தார்கள் ?

Unknown சொன்னது…

அன்னா ஹசாரே என்ற பெரியவரின் போராட்ட உணர்வுக்கு மதிப்பளித்து வணங்குகிறேன்..
அதேவேளையில் ஊழல், லஞ்சலாவண்யம்,வன்முறை வெறியாட்டக் கும்பலைக் கையில்கொண்டு செயல்படும் ஆதிக்கசக்திகள் என்று

முற்றிலும் புரையோடிக்கிடக்கும்
இந்தியாவைக்கண்டு வருத்தம் அடைவதைத்தவிர வேறொன்றும் செய்யமுடியுமா என்றகேள்விதான் எழுகிறது..

ராகுல்காந்தி சொல்லியிருக்கும் விஷயம் போல இந்த சட்டமசோதா தாக்கலினால் மட்டுமே ஊழலை ஒழித்துவிடமுடியுமா என்ற கேள்வி

சிந்திக்கவேண்டிய கேள்வி..
ஊழலை இன்றுவரை வேடிக்கைபார்த்து வளர்த்துவிட்ட மக்களும் இந்த அரசியல்கட்சிகளின் பின்னே இன்றுவரையிலும் மவுனசாட்சியாகப்

பயணித்திருக்கின்றனர்
என்பதுதானே உண்மை..
'ஊழல் ரேசைத் துவங்கி அதிலே ஆழமாக கருத்தூன்றி ஜெயிப்பவருக்குத்தான் வெற்றிமாலை' என்ற கொள்கையை அடிப்படையாய்க்

கொண்டு செயல்பட்ட கட்சிகள்
ஆதிக்கத்தில் மதிமயங்கிக்கிடக்கும் மக்கள் இன்று ஊழல் ரேசில் வெற்றிபெற்றவரை குற்றவாளி என்று தீர்ப்பு எழுதுவதுதான் வேடிக்கையாக

இருக்கிறது..
எதிராளிகள் என்னமோ உத்தமர்கள் போலே..கணக்கிட்டுப்பார்த்தால் இந்தியாவிலே ஊழலற்ற தலைவர்கள் என்று தேடினால்

விரல்விட்டுத்தான் எண்ணமுடியும்..
இப்படி ஒன்றிரண்டு தலைகளை வைத்து இந்தியா போன்ற பெரிய நாட்டை நிர்வகிக்கத்தான் முடியுமா?
வீண் ஜம்பம்தான்..இந்த ஜாம்பவான்கள் லிஸ்டிலே இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்திப்பிடிக்கும் கம்பெனி முதலாளிவர்க்கம்

முழுமுதலாக நிற்கிறதே?
இவர்களை ஊழல்குற்றத்திலே கைதுசெய்துவிட்டு இந்தியா எங்கே போகும்?
ஸ்விஸ்வங்கிப்பணத்தை வெளியில்கொண்டுவந்து யார்யார் கணக்கு வைத்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால்
இந்தியப் பொருளாதாரமும் அரசியல் ஸ்திரத்தன்மையும் ஆட்டங்கண்டுவிடாதா?
பெயர்களை வெளியிடாவிட்டாலும் குறைந்தபட்சம் ஸ்விஸ்வங்கிப்பணத்தை வெளியில்கொண்டுவந்து இந்திய சேமிப்பில் சேர்க்குமா இந்திய

அரசாங்கம்?

உதாரணத்துக்கு இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை எடுத்துக்கொள்வோம்..
ஊழலை முன்னின்று நடத்தியவர்கள் என்ற அடிப்படையில் ராசா கைதுசெய்யப்பட்டதுடன் பின்புலமாக இருந்து செயல்படத்தூண்டிய

நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டதா?
நிறுவன அதிகாரிகள் தண்டிக்கப்பட்டார்களே ஒழிய அதனால் லாபமடைந்த முதலாளிகளைத் தண்டிக்க முடியுமா?
நிறுவனங்கள் அடைந்த லாபங்களை இந்திய அரசாங்கம் மீட்டுக்கொடுக்குமா?
The Comptroller and Auditor-General of India (CAG) சொன்னபடி கிட்டத்தட்ட ஒன்னேமுக்கால் லட்சம்கோடி இந்திய ரூபாயை

மீட்டுத்தருமா?நடைமுறையில் முடியுமா?

எல்லாம் நடக்கும் முன்பே தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரம் படைத்த பிரதமர் கடைசியில் துறைமந்திரியை கைதுசெய்துவிட்டு
விஷயத்தைக் கிடப்பில்போட்டிடுக்கும் அவலநிலையை என்னவென்று சொல்வது?
சீனாவோ,பாகிஸ்தானோ இந்தியாவின் பகுதிக்குள் இன்னும் ஊடுருவி இடங்களைப் பிடித்தபின்
பாதுகாப்புமந்திரியை காரணம் சொல்லி அவரைக் கைது செய்து விட்டால் இழந்த பகுதிகள் இந்தியாவுக்குக் கிடைத்துவிடுமா?
அதுபோலத்தான் இது..
முதுகெலும்பில்லாத தலைவர்களைக் கொண்ட இந்தியாவைப் பற்றிய அவநம்பிக்கைதான் மென்மேலும் வளர்கிறது..
பாவம் இந்தியா..பாவம் தமிழன்..பாவம் காந்தி..பாவம் அன்னா ஹசாரே..

மைனர்வாள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்