ஒரு குழந்தை ஒரு ஆண்டு நிறைவதற்குள் என்ன என்ன வற்றையெல்லாம் கற்றுக் கொள்கிறது வியப்பாகத்தான் இருக்கிறது, நாமும் அவ்வாறு தான் வளர்ந்திருப்போம் என்றாலும் அந்த வளர்ச்சியை நம்மால் உணர்ந்திருக்க முடியாது. முதல் ஒரு மாதத்தில் வைத்த இடத்தில் இருந்து கொண்டு அவ்வப்போது கண்விழித்துப் பார்த்துவிட்டு மெலிதாகச் சிரிக்கும், அங்கும் இங்கும் தலையை திருப்பாமலே அசைவதையெல்லாம் பார்க்கும், பசித்தால் அழும், பால் குடித்துவிட்டு தூங்கிவிடும், அடுத்த மாதம் கால் கைகளை ஆட்டி ஆட்டி உதைத்து அழும், விளையாடும், கொலுசு அணிவித்திருந்தால் அந்த கொலுசொலி எந்த இசைக்கும் ஈடாகாது, நள்ளிரவில் விழித்துக் கொண்டால் தெரிய வேண்டும் என்பதற்காகவே ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்துவிடுகிறார்கள். மூன்றாம் மாதம் தலையை அசைக்கிறது, ஒருக்களித்து படுக்கிறது.
நான்காம் மாதம் துவக்கத்திலேயே தலை நிற்க, யார் வேண்டுமானாலும் தூக்கி வைத்துக் கொள்ள முடியும், ஐந்தாம் மாதம் துவங்கும் முன்பே குப்புறப்படுத்துக் கொள்கிறது, விழித்திருக்கும் எப்போதும் குப்புத்துக் கொள்ளவே விரும்புகிறது, அந்த நிலையில் தலையை எந்த பக்கமானாலும் பார்க்க முடிவதால் அதனை விரும்புகிறது, அதன் பிறகு அப்படியே நகரவும் துவங்கும், அடுத்த இரண்டு மாதங்கள் தண்ணீரில் நீச்சல் அடிப்பது போல் தரையில் உந்தி உந்தி உந்தி நகரும், 8 மாதாம் உட்கார வைத்தால் உட்கார முயற்சிக்கும், பின் சாயும், பிறகு சில நாட்களில் உட்காரவைக்க முடியும், அதுவாக உட்கார்ந்த பிறகு தான் தானே மண்டிப் போட்டு தவழ துவங்குகிறது, எட்டாம் முதலே தவழத்துவங்கும், ஆண் குழந்தைகள் 9 மாதாத்திற்கு பிறகு மண்டியிட்டு செல்லத் துவங்குன்றன, பெண் குழந்தைகள் அதற்கும் முன்பாகவே மண்டியிட்டு நகர்கின்றன. பத்தாம் மாதம் துவங்கும் முன்பே எதையாவது பிடித்து எழுந்து நிற்கும். பத்தாம் மாதம் முடியும் முன்பே முன்னம் பற்கள் மேலே கிழே இரண்டாக முளைத்துவிடுகின்றன. எங்கள் மகன் 11 மாதம் தான் நன்றாக மண்டிப்போட்டு ஊறினான், அதற்கு முன்பு குப்புறப்படுத்து நகர்ந்து வருவான்.

12 ஆம் மாதம் கையைப் பிடிச்சு நடத்தினால் கூடவே நடப்பான், தன்னிச்சையாக எழுந்து கொள்கிறான், நாற்காலியை தள்ளி நடக்கிறான், நடவண்டியையும் தள்ளுகிறான், சாவி துளையில் சாவியை நுழைக்க முற்படுவது, பாட்டில் மூடிகளை கழட்ட முற்படுவது என கற்றுக் கொண்டுள்ளான்.

சென்ற வெள்ளிக்கிழமை 19 ஆகஸ்ட் 2011 அவனது பிறந்த நாள், அடுத்த நாள் சிறிய பிறந்த நாள் விழா முடிந்தும் விட்டது. என்னை நெருக்கமாக கருதிய நண்பர்கள், அலுவலக சீன நண்பர்கள், அக்கம் பக்கம் குடியிருப்பாளர்கள் நேரில் வந்திருந்து வாழ்த்தி, பரிசுகளைக் கொடுத்துச் சென்றனர். கூகுள் பஸ்ஸிலும், பேஸ்புக்கிலும் ஏராளமான நண்பர்கள் வாழ்த்தி இருந்தார்கள், அனைவருக்கும் மிக்க நன்றி. குழந்தை பிறந்தது நேற்று நடந்தது போல் இருக்கிறது அதற்குள் ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. குழந்தை பெற்று வளர்ப்பதில் தூக்கம் கெடுவது, ஓய்வின்மை என பல தொந்தரவுகள் இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு முன்பு அவை ஒன்றுமே இலலை.
பின்குறிப்பு : எனது மற்ற பதிவர் நண்பர்களுக்கு பகிரவே இப்பதிவு.
18 கருத்துகள்:
சிவசெங்கதிர் கொடுத்து வைத்தவர் இப்படி அப்பா கிடைத்ததற்கு...
சிவசெங்கதிர் மாதந்திர போட்டோக்கள் ஆவணப்படுத்தியதில் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன்:))
//நிகழ்காலத்தில்... said...
சிவசெங்கதிர் கொடுத்து வைத்தவர் இப்படி அப்பா கிடைத்ததற்கு...
சிவசெங்கதிர் மாதந்திர போட்டோக்கள் ஆவணப்படுத்தியதில் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன்:))
3:48 PM, August 25, 2011//
இப்ப டிஜிட்டல் கேமரா மற்றும் கேமரா செல் இருப்பதால் எளிது, மற்றபடி இது செயற்கரிய செயல் என்று சொல்ல ஒண்ணும் இல்லை சிவா. என்னுடைய சின்ன வயது நிழல்படம் எதுவும் இல்லாத வருத்தம் என்னோட போகட்டுமேன்னு தான்.
:)
பையன் செம அழகு. துரு துருன்னு இருக்கான். கண்ணுலயே நல்லா தெரியுது !
குழந்தைகள் வளரும் விதத்தை அழகாக வர்ணிச்சிருக்கீங்க. செங்கதிர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
என் ஆசிகளும். அழகன்:)
அருமையாப் பதிவு செஞ்சுட்டீங்க குழந்தை வளரும் விதத்தை!
பெண் குழந்தைகள் இது எல்லாத்திலும் கொஞ்சம் சீக்கிரமே! அவசரக்குடுக்கைகள்:-) பத்து மாதத்தில் நடக்க ஆரம்பிச்சுரும். முதலாம் பிறந்தநாளுக்கு ஓட்டம்தான்.
குழந்தைக்கு எங்க்ள் அன்பும் ஆசிகளும்.
ஆமாம்..... கேக்குலே K போடாமல் G போட்டுருக்காங்க!!!!!!
குழந்தைக்கு என் ஆசிகள்..
பதிவு நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்
சிவ செங்கதிருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!
நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கீங்க. உங்க பின்னாடி இருக்கும் ஓவியமும் நன்றாக இருக்கிறது. என்ன ஓவியம் அது?
நிறைய போட்டோ எடுத்தது பெரிய விஷயமில்லை. அதில் மாதம் ஒன்றாக தேர்ந்தெடுத்து அதை வரிசைபடுத்தி போட்டது மிக அழகு. பாராட்டுக்குரியது கண்ணன். குழந்தைக்கு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்
//மணிகண்டன் said...
பையன் செம அழகு. துரு துருன்னு இருக்கான். கண்ணுலயே நல்லா தெரியுது //
பாராட்டுக்கு மிக்க நன்றி மணி
//
காந்தி பனங்கூர் said...
குழந்தைகள் வளரும் விதத்தை அழகாக வர்ணிச்சிருக்கீங்க. செங்கதிர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி சார்
//வானம்பாடிகள் said...
என் ஆசிகளும். அழகன்:)
11:20 PM, August 25, 2011//
மிக்க நன்றி ஐயா
//துளசி கோபால் said...
அருமையாப் பதிவு செஞ்சுட்டீங்க குழந்தை வளரும் விதத்தை!
பெண் குழந்தைகள் இது எல்லாத்திலும் கொஞ்சம் சீக்கிரமே! அவசரக்குடுக்கைகள்:-) பத்து மாதத்தில் நடக்க ஆரம்பிச்சுரும். முதலாம் பிறந்தநாளுக்கு ஓட்டம்தான்.
குழந்தைக்கு எங்க்ள் அன்பும் ஆசிகளும்.
ஆமாம்..... கேக்குலே K போடாமல் G போட்டுருக்காங்க!!!!!!
6:12 AM, August 26, 2011//
பெயரிலேயே K போடாமல் G தான் இருக்கு, எங்க வீட்டில் மதுரைன்னு உங்களுக்கு தெரியாதா ?
:)
// bandhu said...
குழந்தைக்கு என் ஆசிகள்..//
மிக்க நன்றி
// அருண்மொழித்தேவன் said...
பதிவு நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்
8:44 AM, August 26, 2011//
மிக்க நன்றி
// குமரன் (Kumaran) said...
சிவ செங்கதிருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!
நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கீங்க. உங்க பின்னாடி இருக்கும் ஓவியமும் நன்றாக இருக்கிறது. என்ன ஓவியம் அது?
9:49 AM, August 26, 2//
மிக்க நன்றி, ஓவியம் என்னவென்று பார்க்க இன்னொருமுறை அந்த உணவகத்திற்கு செல்ல வேண்டும்.
:)
//
மோகன் குமார் said...
நிறைய போட்டோ எடுத்தது பெரிய விஷயமில்லை. அதில் மாதம் ஒன்றாக தேர்ந்தெடுத்து அதை வரிசைபடுத்தி போட்டது மிக அழகு. பாராட்டுக்குரியது கண்ணன். குழந்தைக்கு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்
5:23 PM, September 07, 2011//
மிக்க நன்றி. வளரும் குழந்தைக்கு ஒவ்வொரு நாள் புதுநாள், எப்போது வேண்டுமானாலும் வாழ்த்துகள் சொல்லலாம் :)
கருத்துரையிடுக