பின்பற்றுபவர்கள்

13 டிசம்பர், 2010

திருமணம் இன்றி ஒன்றி வாழுதல் !

ஒன்றி வாழுதல் லிவிங்க் டு கெதருக்கு சரியான மொழிப் பெயர்ப்பு என்று நினைக்கிறேன். திருமணம் என்பது வெறும் சடங்கு என்பதைத் தாண்டி சட்டப் பாதுகாப்பு என்று சொல்வதே சரியானது. சடங்கில்லாத, சட்டப் பாதுகாப்பு இல்லாத திருமண வாழ்க்கை, இதை ஏற்கனவே விலங்குகளும் பறவை இனங்களும் ஏனைய உயிரினங்களும் செய்துவருகின்றன. நாம இது ஏதோ புதுசு, சமூக சீரழிவின் முன்னறிவிப்பு என்றெல்லாம் கூப்பாடு போடுகிறோம். மனம் ஒத்த இருவர் சேர்ந்துவாழ சமூகத்தின் முன்பு அறிவிப்பது என்பது தவிர்த்து திருமணம் என்பதன் வேறு பொருள் என்ன ? தனிமனித பாலியல் தேவைக்கு கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு அமைப்பு என்பது தானே திருமணம். அதன் பக்கவிளைவாக மக்கட்பேறு, அதுவும் இருவரின் ஒப்புதலும் உடல் நலமும் ஒத்துழைத்தால் மட்டுமே. மற்றபடி திருமணம் ஆனவர்கள் குழந்தைப் பெறுவது அவர்களின் தனிமனித உரிமை. சந்ததிகளைப் பெறுவது இல்லவாழ்க்கையின் நீட்சி என்பதாகத்தான் வெளிநாட்டுத் திருமணங்களின் புரிதல். நான் சிங்கை வந்த புதிதில் தங்கி இருந்த வீட்டின் (தமிழ்)தம்பதிகள் திருமணம் ஆகதவர்கள் என்பது ஆறுமாதம் கழித்து அவர்கள் தங்களுடைய திருமண அழைப்பிதழை நீட்டிய போது தான் தெரிந்தது வியப்பாக இருந்தது. அவர்களைப் பொருத்த அளவில் சொத்துரிமை மற்றும் வாரிசுகளைப் பெற்றுக் கொள்ளுதல் என்னும் போது சடங்கும் சட்ட ஒப்புதலும் தேவைப்படுகிறது என்னும் போது திருமணம் என்கிற சடங்கில் இணைந்து கொள்கிறார்கள். மற்றபடி மனம் ஒத்த பருவ வயதினருக்கிடையேயான ஈர்ப்பு என்பதில் அவர்களுடைய தேவைகளை அதுவரையில் பகிர்ந்தே வந்திருக்கிறார்கள் எனப் புரிந்தது. இருவருக்கிடையே பெற்றோர்கள் எதிர்ப்பு, எதிர்ப்பார்ப்பு என்கிற தலையீடுகள் எதுவும் இல்லை. அவர்களின் திருமணத்திற்கு முன்பு அவர்களுடைய பெற்றோர்களும் அந்த வீட்டுக்கு வந்து சென்று கொண்டு தான் இருந்தார்கள். இருவரின் திருமணச் சடங்கின் தேவை என்பது வெளி உலகினருக்கும் சமூகத்திற்குமேயன்றி ஒருவருக்கொருவர் புரிதல் தொடர்பானது அல்ல என்பதைப் புரிந்தது. இடையே ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடு என்றாலும் அந்த திருமணமற்ற வாழ்க்கையை சகித்துக் கொண்டிருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் அந்த சூழலில் அவர்கள் பிரிவதற்கும் சமூகத்தின் ஒப்புதல் எதுவும் தேவைப்பட்டிருக்காது என்ற வகையில் அவர்கள் சேர்ந்து வாழுதல் என்பதில் மூன்றாம் நபர் அல்லது சமூக ஒப்புதல் தேவை அற்ற ஒன்று என்பதாகத் தெரிந்தது.

இந்தியாவில் இது போன்று நடந்தால் கலாச்சாரம் பண்பாடு என்கிற பெயரில் கூச்சல் போடுகிறார்கள். இன்றைய சமூக அமைப்பு மற்றும் பொருளியல் வாழ்க்கையில் 30 வயதுவரையில் கூட திருமண பேச்சுகளே நடப்பதில்லை. 30 வயதுவரை தனி ஒருவரின் பாலியல் தேவைக்கு சமூகம் சொல்லும் தீர்வும் ஒன்றுமே இல்லை. எந்த ஒரு கெடுதலும் இல்லாத தன்னின்ப (சுய இன்ப) நுகர்சியைக் கூட சமூகம் ஏற்பது கிடையாது என்பது வெளிப்படை. முற்றும் துறந்தோம் என்று சொல்லிக் கொள்ளும் சாமியார்களும் எதையும் அடக்கமுடியாமல் சிக்கிக் கொள்வதை கண்ணுறும் நாம், 30 வயது வரையான இளைஞர்களின் பாலியல் தேவைக்கான தீர்வு என்பதை 'அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து பச்சைத் தண்ணீரை தலையில் கொட்டிக் கொண்டு சுப்ரபாதம் ஸ்லோகம் சொல்லு' என்கிற எளிய வழியைச் சொல்லிக் கொடுப்பதைத் தவிர்த்து வேறெதும் உண்டா ? இந்துமதத்திலாவது மறைமுகமாக சுய இன்பத்தை அனுமதிக்கிறார்கள், வெளிப்படையாக வேதத்தைக் காட்டி எதிர்ப்பது இல்லை. ஆனால் 30 வயதுவரை திருமணம் ஆகாத பிற மதங்களின் இளைஞர்களுக்கு சொர்கம் / நகரம் பயம் காட்டி அந்த உரிமையும் தடுக்கப்படுகிறது. ஆனாலும் அதை இளைஞர்கள் மீறியே வருகிறார்கள் என்பதை எவரும் ஒப்புக் கொள்வதில்லை. குறிப்பாகச் சொல்லப் போனால் திருமணம் ஆகாத பருவ வயதினரின் பாலியல் தேவைக்கு எந்த மதவாதிகளும், மதமும் எந்த ஒரு தீர்வையும் சொல்லவே இல்லை. காரணம் மதங்கள் எதுவும் காலம் தாண்டி சிந்திக்கவில்லை. மதங்களின் வாழ்வியல் முறையில் பருவ வயதில் திருமணம் என்பதைத்தான் அவை தோன்றிய காலத்தில் பார்த்து வந்திருக்கின்றன. இன்றைய தேதியில் 13 / 14 பருவ வயதில் அரசியல் சட்டங்களும் திருமணங்களை ஏற்பது இல்லை என்னும் போது மதங்களின் பாலியல் சார்ந்த கொள்கைகள் காலம் தாண்டியவை என்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. பருவ வயதின் விதவைகள் - இன்றைய தேதிக்கு மதங்கள் மறுமணத்திற்கு எதிர்ப்புக்காட்டாத நிலையில் அதுபற்றி சொல்ல இங்குத் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரையில் கூட ஒருவர் எத்தனை மனைவிகளை ஒரே நேரத்தில் கொண்டிருக்கலாம் மற்றும் சின்ன வீட்டுக் கணக்குகள் இவை ஆண்களின் பொருளாதாரம் சார்ந்த ஒன்றாக இருந்ததேத் தவிர்த்து சட்டம் அதனை தடை செய்யவில்லை. மேலும் பல மனைவிகளை, சின்ன வீடுகளை உடையவர் என்றால் ஒரு கவுரவத்தையே வழங்கி வந்திருக்கிறார்கள். பழந்தமிழகத்தின் / இந்தியாவின் திருமண வாழ்க்கையின் சாட்சியாக இந்துமத தெய்வங்கள் பல மனைவிகளை உடையவர்களாக காட்டப்பட்டுவருகிறார்கள். கம்ப இராமயணம் தவிர்த்து இராமன் பிறமொழி இராமயணங்களில் வீரத்திற்காகப் போற்றப்பட்டானே யன்றி சீதையை மட்டும் மணந்தவன் என்பதற்கு அல்ல. பின்னர் சமூக மாற்றத்தின் விளைவாக இராமனின் அந்த பண்பு உயர்வாகக் காட்டப்படுகிறது.

திருமணம் செய்யாமல் இருவர் சேர்ந்துவாழலாம் என்பது தனிமனித விருப்பு சார்ந்த ஒன்று அதை சமூகம் தடை போட ஒன்றும் இல்லை. பாலியல் தொழிலாளியிடம் செல்வது, பாதுகாப்பற்ற உடலுறவு, எய்ட்ஸ் பயம் இவை எதுவுமே இல்லாமல் மன ஒப்புதலுடன் கூடிய வாழ்க்கை உடல் நலம் சார்ந்தது ஆகும். பாலியல் தொழிலாளியிடம் செல்வோரை சமூகம் ஒதுக்கி வைக்காத போது சேர்ந்து வாழும் இருவரை சமூகம் விமர்சிப்பது தேவையற்ற ஒன்று. லிவிங் டுகெதர் வாழ்கை முறையை சந்ததிகள் தொடர்ச்சி, மனித இனத் தொடர்ச்சியின் முடிச்சுகளாக நினைப்பதால் நான் ஆதரிக்கவில்லை என்றாலும் அவர்களின் தேவையை புரிந்து கொள்கிறேன், காரணம் தனிமனித பாலியல் தேவைக்கு பாதுக்காப்பான வழி மற்றும் இருவருக்கிடையேயான பிற பகிர்வுகள் என்பதால், அதாவது லிவ்ங்க் டுகெதர் என்னைப் பொருத்த அளவில் தனிமனித ஆண் பெண் இருவருக்கிடையேயான காமம் கலந்த நட்பு. கோகுலத்தில் கண்ணன் கூட கோபியர்களுடன் திருமணம் ஆகாமல் லிவிங்டுகெதர் தானாம் :)

19 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

நல்லதொரு நோக்கு வாழ்த்துக்கள்

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
HUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறது

crazyidiot சொன்னது…

மதம் மற்றும் பாலியல் இரண்டையும் சேர்த்து நான் படித்தவற்றில் உங்களது பதிப்பு மிக நன்று...

http://scrazyidiot.blogspot.com
http://ungalsarans.wordpress.com

கோவி.கண்ணன் சொன்னது…

அனைத்து இடுகைகளுக்கும் தவறாது பின்னூட்டமிடும் ம.தி.சுதா மிக்க நன்றி!

கோவி.கண்ணன் சொன்னது…

//crazyidiot said...
மதம் மற்றும் பாலியல் இரண்டையும் சேர்த்து நான் படித்தவற்றில் உங்களது பதிப்பு மிக நன்று...//

இவை இரண்டும் தான் மனிதனை பாதிக்கும் மிக முதன்மையான ஒன்று !

:)

வடுவூர் குமார் சொன்னது…

அருமை.நேர்த்தியாக வந்துள்ளது.

அறிவிலி சொன்னது…

//கண்ணன் கூட கோபியர்களுடன் திருமணம் ஆகாமல் லிவிங்டுகெதர் தானாம் :)//

:-)))))))))))))))))

vasu balaji சொன்னது…

மிகப் புரிதலுடன் எளிமையான விளக்கம். அருமை கோவி

சிநேகிதன் அக்பர் சொன்னது…

காலம்தான் பதில் சொல்ல வேண்டும் :)

ராவணன் சொன்னது…

லிவிங்டுகெதர் தப்பே இல்லை...ஆனால் அதன் மூலம் பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம்? அதை இந்த சமூகம் பார்க்கும் பார்வை?
எந்த நாடும் எந்த மதமும் திருமண பந்தம் இல்லாமல் இணைந்து வாழ்கின்றவர்களை எப்படிப் பார்க்கும்?
பெண்ணிற்கு மட்டும் அவுசாரிப் பட்டம்...ஆண் எப்போதும் தப்பிவிடுவான்.

அதனால், நீங்கள் வாழும் சமுதாயத்தில் நிலவும் சட்ட திட்டங்களை அனுசரித்தே உங்கள் உறவுமுறை இருக்கவேண்டும்.

Karthick Chidambaram சொன்னது…

கமல் ஹாசன் ஒன்றி வாழும் கட்சிதானாம்.

Test சொன்னது…

//கோவி.கண்ணன்
//crazyidiot said...
மதம் மற்றும் பாலியல் இரண்டையும் சேர்த்து நான் படித்தவற்றில் உங்களது பதிப்பு மிக நன்று...//

இவை இரண்டும் தான் மனிதனை பாதிக்கும் மிக முதன்மையான ஒன்று !

:)//

@ரீபீட்டு

ராவணன் சொன்னது…

சேர்ந்து வாழ்வதில் தவறு ஒன்றும் இல்லை...ஆனால் பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு?
அதற்கு சமூகத்தில் என்ன மதிப்பு?

எந்த நாடும் எந்த மதமும் அந்த வாழ்க்கை முறையை ஒத்துக்கொள்ளவில்லை.

சின்னவீடு, வப்பாட்டி எல்லாம் காலப்போக்கில் மனைவி..துணைவி என்று மாறினாலும்..கூத்தியா புள்ளைகள் என்று பெண்ணை மட்டுமே குறைகூறும். இங்கும் ஆண் இனம் safe.

இதுதான் உங்கள் விருப்பமா?

கோவி.கண்ணன் சொன்னது…

வடுவூர் அண்ணன், அறிவிலி அண்ணன், வானம்பாடிகள் ஐயா

மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

அக்பர் நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//ராவணன் said...
லிவிங்டுகெதர் தப்பே இல்லை...ஆனால் அதன் மூலம் பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம்? அதை இந்த சமூகம் பார்க்கும் பார்வை?//

குழந்தைப் பெற்றுக் கொள்ளும் சூழலில் அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். முறையான திருமணத்தின் போதும் கணவன் ஓடிவிட்டால் எதுவும் செய்ய முடியாது.


//எந்த நாடும் எந்த மதமும் திருமண பந்தம் இல்லாமல் இணைந்து வாழ்கின்றவர்களை எப்படிப் பார்க்கும்?//

மதம் பற்றிக் கருத்து இல்லை. நாடு ? எல்லா நாட்டிலும் நீங்கள் நினைக்கும் நிலை இல்லை. நம்ம நாட்டில் கவுதமியையும் கமலையும் என்ன நினைக்கிறார்கள் ?

//பெண்ணிற்கு மட்டும் அவுசாரிப் பட்டம்...ஆண் எப்போதும் தப்பிவிடுவான்.// அதெல்லாம் அந்தக்காலம்

கோவி.கண்ணன் சொன்னது…

//Karthick Chidambaram said...
கமல் ஹாசன் ஒன்றி வாழும் கட்சிதானாம்.

12:24 AM, December 15, //
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சின்னவீடு, வப்பாட்டி எல்லாம் காலப்போக்கில் மனைவி..துணைவி என்று மாறினாலும்..கூத்தியா புள்ளைகள் என்று பெண்ணை மட்டுமே குறைகூறும். இங்கும் ஆண் இனம் safe.

இதுதான் உங்கள் விருப்பமா?

9:50 PM, December 15, 2010//

நான் குறிப்பிட்டது திருமணம் என்னும் சடங்கில் விருப்பம் இல்லாதவர்கள் பற்றி. அப்படி இணைந்திருப்பவர்கள் காலப்போக்கில் திருமணத்திற்கு மாறி இருக்கிறார்கள். இன்றைய காதலர்கள் எவருமே கடைசிக் கட்டம் போகாதவர்கள் எத்தனை பேராக இருக்கும் ? அதுக்கு லிவிங்க் டுகெதர் பெட்டர் இல்லையா ?

ராவணன் சொன்னது…

நீங்கள் ஒரு மணி நேரமோ, ஒரு நாளோ, ஓர் ஆண்டோ, இல்லை நூறு ஆண்டுகளோ திருமண பந்தம் இல்லாமல் லிவிங் டுகெதராக இருக்கலாம்.அதை நான் தவறாகக் கூறவும் மாட்டேன்.எனக்கும் பிடிக்கும். ஏனென்றால் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லையே.

திருமண பந்தம் இல்லாமல் பிறக்கும் குழந்தைகளின் சமூக அந்தஸ்து என்ன? தேவதாசி பரம்பரையை மீண்டும் கொண்டு வரலாமா?

சமூகத்தை மாற்றமுடியுமா?

எந்த நாட்டிலும் இது போன்ற ஓடுகாலிகளின் குழந்தைகள் மனச் சிதைவுடனேயே வளரும்.திருமண பந்தத்தை முறித்தவர்களின் குழந்தைகளின் மனநிலை நீங்கள் அறிந்ததுண்டா? திருமண உறவு இல்லாமல் பிறக்கும் குழந்தைகளின் மனநிலை?

குழந்தை பெற்றுக்கொள்ளும் சூழலில் அவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்களா? எதற்கு? யாருக்குப் பயந்து? அப்படியே இருக்கலாமே? இதிலிருந்து அவர்கள் செய்தது தவறு என்று அவர்களே ஒப்புக்கொள்கின்றார்கள்.

திருமணம் என்ற பந்தத்தில் விருப்பம் இல்லாதவர்கள் இணைந்து வாழ்வது செய்வது விபச்சாரம்.அது கமலகாச அய்யங்கராக இருக்கட்டும்,கவுத்தமி ஆக இருக்கட்டும்.ஏன் நானாக இருந்தாலும் சமூகம் சொல்வது அதுதான்.

திருமண பந்தத்தில் தவறே நடக்காது என்று கூறமாட்டேன்.அங்கு சமூகத்தின் பாதுகாப்பு,சட்டத்தின் பாதுகாப்பு உள்ளது. பிரபுதேவா, நயன்தாரா விசயத்தில் பிரபுதேவாவின் மனைவியான ரம்லத் சட்டப்படி நீதி கேட்கலாம். நயன்தாராவை இந்த சமூகம் எப்படிப் பார்க்கும்.

என் பார்வை வேறு?

இதெல்லாம் நமக்கு எதற்கு? எனக்கு லிவிங் டுகெதெருக்கு நிறையப் பேர் கிடைப்பார்கள்.
நான்கூட பலமுறை ஒருமணிநேரம் லிவிங் டுகெதராக வாழ்ந்துள்ளேன்.
சிங்கை ஒன்றும் இந்தியா போன்று கட்டுப்பெட்டியாய் இல்லையே.

எஞ்சாய் மாடி!!!!!!!

priyamudanprabu சொன்னது…

பாலியல் தொழிலாளியிடம் செல்வோரை சமூகம் ஒதுக்கி வைக்காத போது சேர்ந்து வாழும் இருவரை சமூகம் விமர்சிப்பது தேவையற்ற ஒன்று
///
சரியான பார்வை

..
ராவணன் என்ன சொல்ல வாறிங்க??
சேர்ந்து வாழ்ந்த தப்பு , ஒரு ராத்திரி(பகலவும் இருக்கலாம்) போன தப்பில்லையா?
ஒரு அறைக்குள் பல பெண்களுடன் இருந்த தப்பில்லை அது வெளியே தெரியாமல் பர்துகனுமோ ?
கமலும் கவுதமியை அறையோடு நிறுத்தி இருந்த நல்லவரா இருப்பாரோ ?
..
குழந்தைன்னு வரும் பொது யோசிக்கத்தான் வேணும் .
எந்த வாழ்கையிலும் அவமானம் ,எமாற்றம் என்பது எல்லாம் அவரவர் எதிர்பார்ப்பை பொறுத்தது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்