பின்பற்றுபவர்கள்

16 டிசம்பர், 2010

திமுகவை காவு கொடுக்கும் காங்கிரஸ் !

கொள்கை முரண் உள்ள கட்சிகள் கூட்டணி சேர்ந்தால் அரசியல் ஆதாயத்திற்கு மட்டுமே சேரும், அதில் லாப நட்ட வேறுபாடுகள் இருந்தால் அடித்துக் கொண்டு தெருவில் நிற்பார்கள் என்பதற்கு கூட்டணி ஆட்சிகள் சாட்சியாக இருகின்றன, இந்தியாவில் மாநிலங்களில் ஏற்படும் கூட்டணிகள் என்றாலும் சரி, நடுவண் அரசு கூட்டணியாக இருந்தாலும் சரி, பழைய பாஜக கூட்டணி மற்றும் அண்டை மாநில குமாரசாமி கூட்டணி தற்போதைக்கு காங்கிரசு கூட்டணி இவைகளிடையேயான விரிசல்கள் இப்படித்தான். அரசியல்களம் என்பது சேவை மையம் என்பதை மறந்து அதிகாரத்தைக் / பதவி வசதிகளைக் கைப்பற்றும் போட்டித்தளம் என்பதாக மாறிப் போனது மக்களாட்சியின் கேலிக் கூத்துகளாக மாறிப் போய் உள்ளன.

*****

இந்தியாவில் செல்வாக்கு இழந்த காங்கிரஸ் கூட்டணி உத்திக்குள் நுழைந்தற்குக்காரணமும் நேரு குடும்பத்தின் அதிகாரம் தொடரவேண்டும் என்பதற்குத்தான். இதனால் இராஜிவ் கொலைக்குப் பழிக்கு பழிவாங்க முடியும் மற்றும் போஃபர்ஸ் உள்ளிட்ட ஊழல்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ளமுடியும் என்பதுடன் மாநில அளவில் செயல்படும் பண்ணையார்களின் செல்வாக்குகளை பழையபடி உயர்த்திக் கொள்ள முடியும் என்பதனால் தான். மாநில அளவிலான கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பதவி ஆசைகாட்டுவதன் மூலம் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று காங்கிரஸ் சாதித்துக் கொண்டுள்ளது.

மாநிலங்களில் கொள்ளையடிப்பது போதாது கொள்ளைத் திட்டம் இந்தியா அளவுக்கு விரிவு படுத்துவதன் மூலம் தாம் தொடர்புடைய / தொடங்கியுள்ள இந்தியா தழுவிய நிறுவனங்களைக் காப்பாற்றி வளர்க்க முடியும் என்கிற பேராசையும் மாநில கட்சிகள் பலியாகிவிடுகின்றன, என்பதற்கு தற்போது திமுக சந்திக்கும் சிக்கல் கண்கூடு. திமுகவுடன் ஆதரவுடன் ஈழப் போராட்டதை நசக்க இலங்கைக்கு ஆதரவு கொடுத்த காங்கிரஸ், துவக்கத்தில் திமுவின் ஸ்பெக்டரம் தொடர்பில் நடைபெற்றவற்றைக் கண்டு கொள்ளாமல் தான் இருந்துவந்திருக்கிறது. பேசிய பேரம் படியவில்லை என்பதால் இன்றைக்கு 1.75 லட்சம் கோடிக்கான ஊழல் வெளியே வந்திருக்கிறது என்று கருதவேண்டியுள்ளது. தனக்கும் கீழ் பணிபுரியும் அமைச்சரின் செயல்பாடுகள் தனக்குத் தெரியவில்லை என்றும், தன் சொல்வதை தன்னுடைய அமைச்சர் கேட்கவில்லை என்பதையும் ஒரு பிரதமரால் கூசாமல் சொல்லமுடிகிறது. பிரதமர் என்பவர் அமைச்சரின் செயல்பாடுகளை அனுமதிப்பவர், சரி இல்லை என்றால் அமைச்சரையே மாற்றிவிடுபவர் என்பது தானே நடைமுறை. திமுக - காங்கிரசு கூட்டணி ஆட்சியில் அமைச்சகங்கள் என்பவை ஒற்றைத் தலைமையில் கட்டுப்படுத்த முடியாதவை அல்லது அவ்வாறு செய்து கொண்ட ஒப்பந்தம் அதாவது என் எல்லைக் கோட்டிக்குள் நீ வராதே என்று சொல்வதைப் போன்ற ஒப்பந்தம் என்பதாக இருந்தால் மட்டுமே ராசா தன்னிச்சையாகச் செயல்பட்டார் என்றே சொல்லமுடியும்.

ராசாவை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பிரதமர் ஒப்புதல் கொடுத்திருக்கிறார். அந்த ஒரு சூழலில் ராசாவின் நடவடிக்கைகள் திட்டமிட்டே பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளிதழ் தகவல்களாக வந்தவற்றில் நீரா ராடியா ராசா, கனிமொழி மற்றும் இராசாத்தி அம்மாளுடன் பேசியவை என்கிற உரையாடல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் நீரா ராடியா இவர்களுக்காக காங்கிரசின் எந்த தலைவர்களுடன் என்னப் பேசினார் என்பதை இதுவரை அமலாக்கப் பிரிவினரோ, சிபிஐயோ வெளி இடவில்லை, இவர்கள் அல்லாது டாடாவுடன் பேசியவை வெளியாகி உள்ளன. அவையும் டாடாவுக்கும் மாறன் சகோதர்களுக்கும் இடையேயான கசப்புகளைச் சொல்வதை அன்றி டாவின் காங்கிரசு தொடர்புகள் எதையும் வெளி இடவில்லை. டாடாவின் இந்த பேச்சுகளை வெளி இடுவதால் டாடாவுக்கும் காங்கிரசுக்கும் எந்த ஒரு சிக்கலும் ஏற்படவில்லை, டாடா - மாறன் நேரடிப் (தொழில்) போட்டி என்பதாக மட்டுமே அந்தப் பேச்சுகள் சொல்லுகின்றன. இதுவும் திமுவிற்குள் இருக்கும் உள்கட்சிப் பூசல்களை எடுத்துச் சொல்லும் ஒரு பேச்சு அதில் பண பேரம் இவை திமுகவிற்கு மேலும் தலைகுணிவு ஏற்படுத்தும் என்கிற நோக்கத்தில் வெளி இடப்பட்டிருக்கின்றன.

நோக்கம் தான் என்ன ? ஸ்பெக்டரம் விவாகரத்தை எதிர்கட்சிகள் கண்டுபிடித்ததா ? எதிர்கட்சிகள் தன்னிச்சையாக கண்டு பிடித்திருந்தால் அதற்கு முன்கூட்டியே நீரா ராடியாவின் பேச்சுகள் பதிவு செய்யப்பட்டிருக்காது. ஸ்பெக்டரம் விவகாரத்தில் புழங்கிய கோடிகளுக்கு குறிப்பிட்ட அளவு பங்கு போய் சேர்ந்திருக்காது, வெளியான பேச்சுகள் எதிலும் ஸ்பெக்டரம் தொடர்பான உரையாடல்கள் எதுவும் இல்லை, அவை எல்லாம் அமைச்சர் பதவியின் பேரங்கள் மட்டுமே. நடந்த அமலாக்கப்பிரிவு மற்றும் வருமானவரி சோதனைகள் முதலில் இராசாவின் உறவினர்கள், அலுவலகங்கள் என்பதாகவும், தற்போது நக்கீரன் இணையாசிரியர் காமராஜ் உள்ளிட்ட திமுகவிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே (இதுபற்றி நக்கீரன் பெட்டிச் செய்தி கூட வெளி இடவில்லை, ரொம்ப நடுநிலை, இன்னொரு முரசொலி). இவ்வளவு தொடர்புடைய இராசாவிற்கு நெருக்கமான காங்கிரசார் யாருமே இல்லையா ? ஏன் அவர்களிடம் சோதனைகள் எதுவும் நடைபெறவில்லை, ஏன் இராசவின் ஸ்பெக்டரம் தொடர்பான உரையாடல்கள் வெளியிடப்படவில்லை ? என்று நினைக்கும் போது, காங்கிரஸ் திமுகவை பலமிழக்கச் செய்ய அனைத்து வல்லமைகளையும் உத்திகளையும் பயன்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. நமக்குத் தெரிந்த ஊகங்கள் திமுக தலைவர் கருணாநிதிக்குத் தெரியாதா ? இருந்தும் கூட்டணியை உதராமல் இருப்பது ஏன் ? ராசாவின் ஊழல்கள் ஏறக்குறைய நிருபணம் செய்யக் கூடியச் சூழலில் இருப்பதாலும், காங்கிரசிடம் பேசிய பேரங்களை செயல்படுத்ததாலும் ஊமைக்கண்ட கனவாக சிக்கித் தவிக்கிறார். காங்கிரசிற்கும் மடியில் கனமில்லை என்றால் கூட்டுக் குழு விசாரணைக்கு ஒப்புக் கொண்டு பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்தி இருக்கலாமே. எனவே ஸ்பெக்டரம் விவகாரத்தில் திமுகமீதான காங்கிரசின் நெருக்குதல் பங்குகளின் விழுக்காட்டில் ஏற்பட்ட எரிச்சலே ஆகும்.

காங்கிரசை ஒழிக்க உருவான திமுக, கொள்கைகளை மறந்து வாரிசுகளின் பேராசைக்கும், பதவி சுகத்திற்கும் அடிமையாகி அதே காங்கிரசின் 'கை'களினால் அழிகிறது. குட்டியை விட்டு ஆழம்பார்பதாக இளங்கோவனின் திமுக சாடல்கள் அதை நிருபணம் செய்வதாக இருக்கின்றன. தமிழ் மண்ணில் திமுக இருக்குமா இருக்காதா என்பதைவிட காங்கிரஸ் வளர்வதைத் தடுப்பது மட்டுமே தமிழக மீனவர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழர்களின் நலனாக அமையும்.

16 கருத்துகள்:

தமிழ்மலர் சொன்னது…

ஆட்டம் எல்லாம் பெருசு ஓய்வுபெரும் வரைக்கும் தான். ஆட்சியாளர்கலோடு ஒட்டிக்கொண்டு இருக்காவிட்டால் காங்கிரசின் சுவடெ தமிழ்நாட்டில் இருக்காது.

vijayan சொன்னது…

1967 -க்கு முன் தமிழ்நாட்டில் மாநில அரசில் ஊழல் இல்லை.DMK 1961 -இல் சென்னை மா நகராட்சியை பிடித்தவுடன் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டனர். குப்பை லாரி வாங்கியதில்,மஸ்டர் ரோல் என படிப்படியாக வளர்ந்து இன்று 2G ஊழலில் சாதனை புரிந்துள்ளனர்.இதற்க்கு உற்ற துணையாயிருந்து அவர் காரியம் யாவைக்கும் கை கொடுத்தது அன்னை இந்திராவின் கை.

தமிழ் திரட்டி சொன்னது…

தமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

http://tamilthirati.corank.com/

கோவி.கண்ணன் சொன்னது…

// vijayan said...
1967 -க்கு முன் தமிழ்நாட்டில் மாநில அரசில் ஊழல் இல்லை.DMK 1961 -இல் சென்னை மா நகராட்சியை பிடித்தவுடன் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டனர். குப்பை லாரி வாங்கியதில்,மஸ்டர் ரோல் என படிப்படியாக வளர்ந்து இன்று 2G ஊழலில் சாதனை புரிந்துள்ளனர்.இதற்க்கு உற்ற துணையாயிருந்து அவர் காரியம் யாவைக்கும் கை கொடுத்தது அன்னை இந்திராவின் கை.

12:12 PM, December 16, 2010//

யார் சொன்னது 1967க்கு முன் ஊழல் இல்லைன்னு. 'பத்துலட்சம் பக்தவட்சலம்' பிரபலமான முழக்கம் அப்போது :)

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// காங்கிரசை ஒழிக்க உருவான திமுக, கொள்கைகளை மறந்து வாரிசுகளின் பேராசைக்கும், பதவி சுகத்திற்கும் அடிமையாகி அதே காங்கிரசின் 'கை'களினால் அழிகிறது.//

பரிணாமம் ..பரிணாம வளர்ச்சி. :)

மாலோலன் சொன்னது…

ஆச்சர்மா இருக்கு சார்!இதுகெல்லாம் காரணம் பாப்பான்,அவர்களை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்னு ஒரு வரி எதிர்பார்த்தேன்:)

கோவி.கண்ணன் சொன்னது…

//மாலோலன் said...
ஆச்சர்மா இருக்கு சார்!இதுகெல்லாம் காரணம் பாப்பான்,அவர்களை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்னு ஒரு வரி எதிர்பார்த்தேன்:)

4:13 PM, December 16, 2010//

எப்பவும் நடக்கும் ஒன்றை இப்பத் தனியாகச் சொல்ல ஒன்றும் இல்லைன்னு விட்டுவிட்டேன்னு வைத்துக் கொள்ளுங்களேன்.

NAGA சொன்னது…

//காங்கிரசை ஒழிக்க உருவான திமுக, கொள்கைகளை மறந்து வாரிசுகளின் பேராசைக்கும், பதவி சுகத்திற்கும் அடிமையாகி அதே காங்கிரசின் 'கை'களினால் அழிகிறது//
சத்தியமான,நிதர்சனமான வார்த்தைகள்.
அரவரசன்.

vijayan சொன்னது…

திராவிட நாடு, மூணுபடி அரிசி என்பது போல் பத்து லட்சம் பக்தவத்சலம் என்பதும் dmk -வின் புருடா.சமீபத்தில் நாங்கள் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்று மூகா சத்யம் செய்துள்ளார்.

seeprabagaran சொன்னது…

ஸ்பெக்டரம் ஊழலில் 60 விழுக்காடு பங்கு சோனியாகாந்தி சென்றுள்ளதாக சுப்புரமணியசாமி கூறியுள்ளார். பிரதமரையும் சோனியாவையும் விசாரிக்கும் அதிகாரமும் துணிவும் சி.பி.ஐ.க்கு இல்லை. நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு மட்டுமே பிரதமரையும் சோனியாவையும் விசாரிக்கும் அதிகாரம் உள்ளது.

அதனால்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு காங்கிரஸ் அஞ்சுகிறது. எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு ஊழல் பேர்வழி சோனியாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராவணன் சொன்னது…

காங்கிரஸ் இப்போது இருப்பது போலவே எப்போதும் தமிழ்நாட்டில் இருக்கும்.மத்திய ஆட்சி அதற்குக் காரணம்.இல்லாவிட்டால் அது தெருநாயின் சாணி போன்றதே.

உடன்பிறப்பு சொன்னது…

அப்படியா?

உடன்பிறப்பு சொன்னது…

அப்படியா?

bandhu சொன்னது…

//எப்பவும் நடக்கும் ஒன்றை இப்பத் தனியாகச் சொல்ல ஒன்றும் இல்லைன்னு விட்டுவிட்டேன்னு வைத்துக் கொள்ளுங்களேன்//
இந்த வரி ஒன்று என்னை உங்கள் blog -ஐ தவிர்க்க வேண்டியவை பட்டியலில் சேர்த்து விட்டது. இனி வரமாட்டேன்..

கோவி.கண்ணன் சொன்னது…

//bandhu said...
//எப்பவும் நடக்கும் ஒன்றை இப்பத் தனியாகச் சொல்ல ஒன்றும் இல்லைன்னு விட்டுவிட்டேன்னு வைத்துக் கொள்ளுங்களேன்//
இந்த வரி ஒன்று என்னை உங்கள் blog -ஐ தவிர்க்க வேண்டியவை பட்டியலில் சேர்த்து விட்டது. இனி வரமாட்டேன்..

11:56 PM, December 16, 2010//

நீங்க எதையோ பற்றிப் பேசும் போது மற்றொருவர் வெறதையோ தொடர்புபடுத்தினால் எரிச்சல்வருமா ?

ஒருவர் அரசியல்ரீதியாக விமர்சனம் செய்யும் போது இன்னொருவ்ர் ஒருத்தர் வந்து நீ எங்க அக்காவை திட்டி இருப்பே ன்னு நினைச்சேன், அப்படி இல்லைன்னு சொன்னால் எரிச்சல் வருமா வராதா ?

vignaani சொன்னது…

//ஆச்சர்மா இருக்கு சார்!இதுகெல்லாம் காரணம் பாப்பான்,அவர்களை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்னு ஒரு வரி எதிர்பார்த்தேன்:)//

These words would be okay in the blog of M.K., who has once again referred to Dravida/Arya in the Raasa case even after tonnes of material in the press. We do not expect such reference in a non-social issue in the blog of Kovi.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்