பின்பற்றுபவர்கள்

27 ஜூலை, 2010

பூவரசி பெண்ணியம் ஆணியம் சாணியம் !

என்னக் கொடுமைங்க, ஒரு பெண் உணர்ச்சி வசப்பட்டு கொலை செய்ததை ஆணிய / பெண்ணிய வாதிகள், ஆணியம் பெண்ணியம் என்றெல்லாம் வகைப்படுத்தி கச்சைக்கட்டுகிறார்கள். பிரச்சனை சம்பந்தப்பட்ட பெண் ஒரு ஆணின் மீது இருக்கும் ஈர்ப்பு அல்லது வெறுப்பினால் அவனை/ அவனது மனைவியைக் கொல்லாமல் ஒரு குழந்தையை கொடுறுமாகக் கொன்றுவிட்டாளே என்பது தான். குழந்தையைக் கொல்லும் மனநிலை மிகவும் மோசமானது சாதிவெறியர்கள், மதவெறியர்கள், இனவெறியர்கள் தான் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் கொல்லுவார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம், தனிமனிதன் வெறுப்பினால் பிறர் அல்லது தன் குழந்தையைக் கொல்வார்களா என்பது நம்மால் நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று. குழந்தைகளைக் கொல்லும் மன நிலை சமூகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தே வருகின்றன. கணவன் அல்லது மனைவியின் நடத்தை சரி இல்லை என்னும் போது குழந்தைகளும் கொல்லப்பட்டு பின் கணவன் அல்லது மனைவியின் தற்கொலைகள் நடப்பதை நாம் காலம் தோறும் செய்திகள் வழியாகப் படித்தே வருகிறோம், அப்போதெல்லாம் கொல்லப்பட்ட அந்தக் குழந்தைகளுக்கு இது போன்று ஒரு அனுதாபங்கள் கிடைப்பதில்லை, பெற்றக் குழந்தையையே கொல்லவதற்கு எப்படித்தான் மனது வருகிறதோ என்கிற ஆதங்கத்துடன் முடித்துக் கொள்கின்றனர். மற்றவர் குழந்தையைக் கொல்வதைவிட தன் குழந்தையைக் கொல்வது இன்னும் கூட கொடுரமனது வேண்டும் என்பதை 'தன் இறப்புக்கு பின்னால் குழந்தையின் எதிர்காலம் கெட்டுவிடும் என்பதாக அந்தப் பெற்றோர்கள் நினைத்துக் குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டுவிட்டார்கள்' என்பதாக அதை ஒரு பெற்றோரின் இயலாமையினால் செய்யப்படும் உயிர்/கொலைத் தியாகமாகத் தான் சமூகம் பார்க்கிறது.

குழந்தைகளுக்கு எந்த ஒரு சூதுவாதும் தெரியாது, தன்னுடன் அன்பாகப் பழகுபவர்களிடம் பழகும். அதுவும் அன்பாகப் பழகிய பூவரசியிடம் குழந்தையும் இப்படித்தான் பழகி வந்திருக்கிறது, கோபம் எப்போதும் இயலாதவர்களிடம் மட்டுமே எடுபடும் என்பதாக தன்னை ஏமாற்றியவனை விட்டுவிட்டு தன்னை நம்பிய அவனுடைய குழந்தையிடம் காட்டிவிட்டாள் அவள், இது திட்டுமிட்டு நடந்திருக்கவும் வாய்ப்பில்லை, காதல் முற்றினால் காதலனது உடமைகள் அனைத்தும் தன்னுடையதாக நினைக்கும் ஒருவித மனநிலையில் அந்தக் குழந்தையுடன் நெருக்கமாகப் பழகிய அவள், காதலுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தை முற்றலில் தனக்கு எதிர்காலப் பாதுகாப்பு எதுவும் இல்லை என்கிற அவநம்பிக்கையில், அவனை முழுவதும் நம்பி இருந்து அவன் ஏமாற்றியதாக நினைத்த ஒரு நொடியில் தன்னை நம்பிய அவன் குழந்தையிடம் தனது முழு ஆத்திரத்தையும் காட்டி கொலை செய்து, அதை மறைக்க முயன்று, மனநிலை தடுமாற்றத்தில் பாவமன்னிப்பு வரையிலும் கூடச் சென்றிருக்கிறாள் என்பதாக செய்திகள் வழியாகத் தெரிகிறது. குழந்தைக்கு பதிலாக அவன் எதிரில் இருந்திருந்தாலும் கூட அவனை கொலை செய்திருப்பாள், அப்பாவியாக சிக்கிக் கொண்டிருக்கிறது குழந்தை.

இது எல்லையற்ற கோபத்தினால் நிகழ்ந்த ஒரு நிகழ்வு என்று நினைக்க முடிகிறது. கொலையை மறைக்க நடந்த முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை என்றால் ஊடகம் இதைப் பெரிதாக ஊதி இருக்காது, 'கள்ளக் காதலனை பலிதீர்க்க அவனது குழந்தையைக் கொன்ற காதலி' என்பதாக ஒரு நாள் ஓரச் செய்தியாக இவை முடிந்திருக்கும். கொலையின் பிறகு நடந்த நிகழ்வு, கொலை கண்டுபிடிக்கப்பட்டது, அதில் துப்பு துலங்கியது என்பதாக ஒரு துப்பறியும் கதைப் போல நிகழ்ந்துவிட்டதால் ஊடகங்கள் இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து ஆணியம் பெண்ணியம் சார்ந்த நிகழ்வாகவும் உளவியலாகவும் ஊதுகின்றன.

என்னைப் பொருத்த அளவில் இதில் ஆணியம் பெண்ணியம் என்று எதுவுமே இல்லை, காலம் தோறும் எங்கும் இருக்கும் முறையற்ற உறவுகள் அதன் சிக்கலினால் ஏற்படும் விளைவுகள் அவற்றில் இதுவும் ஒன்று. இதிலும் அந்தக் குழந்தையின் தாய் 'தன் கணவன் அப்பாவி என்றும், தன் கணவனை இன்றும் முழுதும் நம்புவதாக சொல்வதை' பேட்டி எடுத்து எழுதி இருக்கின்றன ஜூவி போன்ற செய்தி இதழ்கள். ஒரு பெண் குழந்தையைக் கொல்லலாமா ? அவள் பெண்ணா ? பேயா ? காமவெறி பிடித்தவளா ? அவளுக்கு மட்டும் ஏன் தண்டனை ? அவனும் தானே இவளை இந்த அளவு வெறி எடுக்கும் நிலைமைக்குத் தூண்டியது ? என்றெல்லாம் விவாதிக்கப்படுகின்றன. இன்னும் 30 ஆண்டுகளுக்கு முன்பு என்றால் இந்தச் சமூகம் 'பொண்டாட்டி ஒழுங்க இருந்தா புருசன் ஏன் இன்னொருத்தியை நாடப் போகிறான் ? அவளால் தானே இவ்வளவும் நடந்தது ?' என்றெல்லாம் கூட கணவனுக்கு காமக் குறை வைத்த பெண் என்பதாக ஆண்சார்பில் கூடக் கேட்டு இருக்கும். நல்லவேளை இப்போது யாரும் அவ்வளவு அபத்தமாக கேட்பது இல்லை.

குழந்தைகளை குறிவைத்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல், நரபலி உள்ளிட்ட வன்முறைகள் காலம் தோறும் வரைமுறை இன்றி நடந்துவருகிறது, மேற்சொன்னது போல் பெற்றோர்களின் சண்டைகளின் பிரிவின் போது சில வேளைகள் குழந்தைகள் கூடக் கொல்லப்படுகின்றன, எவனாவது / எவளாவது வெட்டிக் கொண்டு, அடித்துக் கொண்டு சாகுங்கள் குழந்தைகளையாவது விட்டு வையுங்கள் என்று விழிப்புணர்வு ஊட்டலாம். அதைவிட்டு பூவரசியின் குழந்தைக் கொலைச் செயலை ஆணியம் பெண்ணியம் என்று விவாதிப்பது, பேசுவது வீண்.

தொடர்புடைய செய்திகள் : பூவரசி ; அப்துல்கபூர்

இவனையெல்லாம் பிடிச்சு முட்டிக்கு முட்டி...

7 கருத்துகள்:

Karthick Chidambaram சொன்னது…

சானியம்னா என்னாங்க கோவி அண்ணா - சானிய மிர்சவிற்க்கான ஆதருவு இயமா ?
மற்றபடி மீண்டும் உங்கள் சீற்றம்.
//எவனாவது / எவளாவது வெட்டிக் கொண்டு, அடித்துக் கொண்டு சாகுங்கள் குழந்தைகளையாவது விட்டு வையுங்கள் என்று விழிப்புணர்வு ஊட்டலாம்.//
உங்களை வழிமொழிகிறேன். :(((

கோவி.கண்ணன் சொன்னது…

// Karthick Chidambaram said...

சானியம்னா என்னாங்க கோவி அண்ணா - சானிய மிர்சவிற்க்கான ஆதருவு இயமா ?//

சாணியம் - எதாவது சொல்லி சாணி அடிப்பது :)

வால்பையன் சொன்னது…

எந்த ஆணியும் கிடையாது!

பாலியல் வறட்சி காரணமாக உலகெங்கும் நடக்கும் செயல்கள் தான் இவை!

அவரவர் மனநிலைகேற்ப செயல் மாறும், கக்கூஸ்ஸில் எழுதுவதில் ஆரம்பித்து, கொலை வரை!

அறிவிலி சொன்னது…

//அதுவும் அன்பாகப் பழகிய பூவரசியிடம் குழந்தையும் இப்படித்தான் பழகி வந்திருக்கிறது, கோபம் எப்போதும் இயலாதவர்களிடம் மட்டுமே எடுபடும் என்பதாக தன்னை ஏமாற்றியவனை விட்டுவிட்டு தன்னை நம்பிய அவனுடைய குழந்தையிடம் காட்டிவிட்டாள் அவள், இது திட்டுமிட்டு நடந்திருக்கவும் வாய்ப்பில்லை, காதல் முற்றினால் காதலனது உடமைகள் அனைத்தும் தன்னுடையதாக நினைக்கும் ஒருவித மனநிலையில் அந்தக் குழந்தையுடன் நெருக்கமாகப் பழகிய அவள், காதலுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தை முற்றலில் தனக்கு எதிர்காலப் பாதுகாப்பு எதுவும் இல்லை என்கிற அவநம்பிக்கையில், அவனை முழுவதும் நம்பி இருந்து அவன் ஏமாற்றியதாக நினைத்த ஒரு நொடியில் தன்னை நம்பிய அவன் குழந்தையிடம் தனது முழு ஆத்திரத்தையும் காட்டி கொலை செய்து, அதை மறைக்க முயன்று, மனநிலை தடுமாற்றத்தில் பாவமன்னிப்பு வரையிலும் கூடச் சென்றிருக்கிறாள் என்பதாக செய்திகள் வழியாகத் தெரிகிறது//

கோவியாரே,

ஏதாவது கின்னஸ் முயற்சியா?
இல்லை, கீ போர்ட்ல ஃபுல் ஸ்டாப் வேலை செய்யலியா?

அறிவிலி சொன்னது…

///tamildigitalcinema said...
உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/ ///

யாருப்பா அது, பூக்கடைக்கு வெளம்பரம் பண்ண சொல்றது?

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//அவரவர் மனநிலைகேற்ப செயல் மாறும், கக்கூஸ்ஸில் எழுதுவதில் ஆரம்பித்து, கொலை வரை!//

யோசிக்க வேண்டியதுதான்

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவியாரே,

ஏதாவது கின்னஸ் முயற்சியா?
இல்லை, கீ போர்ட்ல ஃபுல் ஸ்டாப் வேலை செய்யலியா?//

மறைமலை அடிகளார் பிறந்த காடம்பாடி என்கிற இடம் எங்க வீட்டுக்கு வெகு அருகில் தான் உள்ளது.

:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்