பின்பற்றுபவர்கள்

7 ஜூலை, 2010

தமிழ்மணம் வாசகர் பரிந்துரை !

முன்பு தமிழ்மணத்தின் வழியாக வெளியாகும் இடுகைகள் வாசிப்பு எண்ணிக்கையிலான தொகுப்புகள் சூடான இடுகைகள் என்பதாக வாசகர் பரிந்துரை பகுதியில் இடம் பெற்றன. அதில் இருந்த குறைபாடு (சூடான) தலைப்புகளில் வெளியாகும் குப்பையை உள்ளடக்கிய இடுகைகள் கூட இடம் பிடித்தது. அந்த பகுதியில் இடம் பிடிக்கவே சூடான தலைப்புகளில் பதிவர்கள் இடுகையை வெளி இடுவது வாடிக்கையானது. அந்த தவறுகளை ஒரு சில இடுகைகள் வழியாக நானும் செய்து இருக்கிறேன். மட்டின்றி நல்ல எழுத்து நடையில் எழுதுபவர்கள் என்பதாக நம்பட்ட பதிவர்களின் இடுகைகளும் அப்பகுதியில் துண்டு போட்டிருந்தன. சூடான இடுகைகளில் வரவேண்டும் என்பதற்காகவே சர்சைகளை கச்சைக் கட்டி எழுதுகிறார்கள் என்ற குற்றச் சாட்டில் ஒரு ஆண் மற்றும் பெண் பதிவர்கள் தமிழ்மணம் திரட்டியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவனர். பிறகு இதற்கு தீர்வே இல்லை என்பதாக முடிவு செய்த தமிழ்மணம் திரட்டி 'வாசகர் பரிந்துரை' என்னும் பகுதியையும் வாக்களிக்க பதிவர்களுக்கு நுழைவு பெயர் மற்றும் கடவுச் சொல்லுடன் புதிய பகுதியை அறிமுகப்படுத்தியது, அது இன்று வரை செயல்பட்டு வருகிறது.

இதில் இருக்கும் குறைபாடு ஒரு சில பதிவர்கள் பத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு பெயர்களில் நுழைவு பெயர்களை பதிவு செய்து தங்களுக்கு தாங்களே வாக்களித்து வாசகர் பரிந்துரையில் பட்டா போட்டுக் கொள்கிறார்கள். இன்னார் என்று பெயரை நான் குறிப்பிடாவிட்டாலும் தொடர்ந்து தமிழ் மணம் திரட்டி வழியாக படிக்கும் பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு இவ்விவரம் தெரிந்தவையே. தாங்கள் எழுதுவது அனைவரையும் அடையக் கூடிய எழுத்தின் தன்மை கொண்டதொரு ஆக்கம் என்பதாக இவர்களே முடிவு செய்து வாசகர்களை இம்சிப்பது தொடர்கதையாகவே நடக்கிறது. இத்தகைய சூழலில் வாசகர் பரிந்துரை என்னும் பகுதியின் நோக்கமான நல்ல பதிவுகள் பல்வேறு பதிவர்களால், வாசகர்களால் படிக்கப்பட வேண்டும் என்கிற அடிப்படை நோக்கம் முற்றிலுமாக தகர்பட்டுள்ளது. குழுவாக மாறினால் அல்லது குழுவுக்குள் அடக்கிக் கொண்டால் தான் எழுத்தைச் சந்தைப்படுத்த / சர்சைப் முடியும் என்பதாக பல்வேறு பதிவர்கள் அவர்கள் சார்புடைய இடுகைகளுக்கும் பதிவர்களுக்கும் வாக்களித்துட்டு வாசகர் பரிந்துரை பகுதியை முற்றிலுமாக தங்கள் விருப்பம் போல் வளைத்துவிட்டனர்.

இந்த ஒரு சீர்கெட்ட சூழலால் புதிதாக திரட்டியில் நுழையும் ஒருவர் இத்தகைய குப்பைக் கூழங்களை பரிந்துரை என்ற பெயரில் தொடர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டால் பதிவுலக எழுத்துகளின் தன்மை பக்கச் சார்ப்பு உள்ளவையே என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி வாசிக்கும் வழக்கத்தை தடை செய்யும் வாய்ப்பு இருக்கிறது. உலமகா பிரச்சனைகளை தாங்கள் கையாளுவதாக எண்ணிக் கொள்ளும் (நான் பெயர் குறிப்பிடாத) பதிவர்கள் எவரும் ஏன் இப்படி கோவிலுக்கு முன் துண்டு போட்டு இடம் பிடிப்பது போல் பிடிக்கிறோம் ? என்பதாக எண்ணிப் பார்ப்பது போல் தெரியவில்லை என்பதற்கு அவர்கள் பதிவு எழுதிய 10 ஆம் நிமிடமே வாசகர் பரிந்துரையை அடைவதில் இருந்து அறியலாம். நோக்கம் பரப்பரப்பை உண்டாக்குவது தவிர்த்து எதுவுமே இல்லை என்ற சூழலில் இவர்கள் தானாக திருத்திக் கொள்வார்கள் என்பது வீனான எண்ணம்.

இச்சூழலில் வாக்களிப்பு வழியாக தேர்வு செய்யப்படும் வாசகர் பரிந்துரைகளை முற்றிலுமாக நீக்கிவிட்டு அல்லது முகப்பு அல்லாத வேறொரு பக்கத்திற்கு மாற்றிவிட்டு பழைய படி முகப்பில் ஹிட் எண்ணிக்கையிலான பரிந்துரைகளைக் கொண்டுவருவது தற்போதைய நிலைமை அளவுக்கு சீர் கெட்டது அல்ல என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். இந்த முறையில் 500 ஹிட்டுகளுக்கும் மிகுதியாக பெரும் இடுகைகள் 'மிகுதியாக வாசிக்கப்பட்ட இடுகை' பகுதியில் வரும். மற்றபடி மேற்சொன்ன பரபரப்புத் தலைப்புகள் இதில் இடம் பெறுவது தவிர்க்க முடியாதது என்றாலும் நாளடைவில் பரப்பரப்புக்காக தலைப்பு வைத்து எழுதப்படும் இடுகைகள் குறிப்பிட்ட பதிவர்களது என்பதாக புறந்தள்ளுவதை பதிவு வாசகர்களே செய்துவிடுவார்கள்.

இடுகைகளை படிக்காமலேயே இவன் எதிரி நண்பன் என்பதாக வாக்குகளை +/- குத்தி வாசகர் பரிந்துரையில் ஏற்றிவிடுகிறார்கள். வாகர் பரிந்துரை அல்லது சூடான இடுகைகள் என்பது மிக முதன்மையாக அனைவரும் அறிந்து கொள்ள பரிந்துரைக்கப்பட்ட எழுத்துகள் அடங்கிய இடுகை என்பது புரிந்து கொள்ளாது அதில் இடம் பிடிக்க மட்டுமே நினைப்பது எழுதி இடம் பிடிக்கும் அன்றைக்கு வேண்டுமானால் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும் ஆனால் அதே இடுகையை இரண்டு நாள் சென்று பார்த்தால் எழுதியவருக்கு இதையெல்லாம் வாசகரை படிக்க வைத்து தமிழ் கூறும் நல் பதிவுலகை கெடுத்த உறுத்தல் கொஞ்சமாவது இருக்கனும், இல்லை என்றால் நானும் எழுதுகிறேன், எழுத்தின் வழியான சமூகச் சேவை என்கிற நினைபெல்லாம் வெறும் சுயசொரிதலே.

28 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இதுக்கும் +1 போட்டிருக்கேன்!

நிகழ்காலத்தில்... சொன்னது…

ஓட்டுப்போட்டு என் ஆதரவை தெரிவிக்கிறேன் ...

Karthick Chidambaram சொன்னது…

மிக ஆழமான பதிவு. நீங்கள் சொல்லும் பல விடயங்கள் பற்றி எனக்கு தெரியாது.நான் பதிவு உலகிற்கு கொஞ்சம் புதியவனே.

சவ்மியன் நற்குணன் சொன்னது…

கூட்டம்கூடி கும்மியடிப்பதற்கும், தனக்குப்பிடிக்காத மதம்,இனம்,ஜாதியில் யாரும் எழுதுவது சரியானதாக இருந்தாலும் அவர்களை எவ்விதத்திலாவது தாக்கி தாங்களே தமிழ் கூறும் நல்
வலைப்பூவின் ”நாட்டாமைகள்”என மற்றவர்களை மிரட்டும் வகையில் கருத்துக்களை வலைப்பூக்களில் பார்ப்பது ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை.தங்களின் வக்கிரங்களுக்கு வடிக்காலாகப் பயன்படுத்துவதை தங்களைப் போன்ற மூத்த பதிவர்கள் பக்குவமாகச் சொல்லியிருக்கும் இப்பதிவு பாராட்டுக்குறியது.

பிரியமுடன் பிரபு சொன்னது…

ஓட்டுப்போட்டு என் ஆதரவை தெரிவிக்கிறேன் ...

ஆனாலும் பாருங்கோ எந்த அம்பியோ மைனஸ் பொட்டுடன்

கபிலன் சொன்னது…

"இதில் இருக்கும் குறைபாடு ஒரு சில பதிவர்கள் பத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு பெயர்களில் நுழைவு பெயர்களை பதிவு செய்து தங்களுக்கு தாங்களே வாக்களித்து வாசகர் பரிந்துரையில் பட்டா போட்டுக் கொள்கிறார்கள்."

ரொம்ப நேர்த்தியான உண்மை. who voted sectionஐ தொடர்ந்து பார்த்து வந்தால் இது ரொம்ப தெளிவா தெரியுது.

அதே மாதிரி தெரிஞ்சவங்களுக்கு பாசிட்டிவ் ஓட்டு குத்துறது. எனக்கு ஓட்டு போட்டியா...உனக்கும் ஓட்டு போடுறேன்...நண்பர்களை ஊக்குவிக்கிறேன் என்று சொன்னாலும் இது தவறான போக்கு.

பதிவர்கள் அல்லாத பொது வாசகர்கள் அதிகமாக தளத்திற்கு வந்தால் மட்டுமே இவை போன்ற சூழ்ச்சிப் பதிவுகளில் இருந்து தப்பிக்க முடியும். நல்ல பதிவுகள் வெளியுலகிற்கு தெரியும்.

கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

யோசனையெல்லாம் சரிதான்! தமிழ்மணம் என்றில்லை, வேறெந்தத் திரட்டியின் நிர்வாகி அல்லது உரிமையாளர்கள் கேட்பார்களா?

அவர்கள் திரட்டி உயிரோடு இருப்பதற்கே இந்த மாதிரி வாசகர் பரிந்துரை அல்லது முன்னணி இடுகைகள் பட்டியல் தானே காரணம்!

இங்கே ஒருபிரச்சினை கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தபோது தமிழ்மணம் ரொம்ப நியாயவான் மாதிரி வாசகர் பரிந்துரையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது!
அதற்கு மாற்றோ, நிரந்தரமான தீர்வோ காண முடியாமல், மறுபடியும் கும்மியடிப்பவர்கள் கையில் போய் விட்டதே!

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரியமுடன் பிரபு said...
ஓட்டுப்போட்டு என் ஆதரவை தெரிவிக்கிறேன் ...

ஆனாலும் பாருங்கோ எந்த அம்பியோ மைனஸ் பொட்டுடன்
//

மைனஸ் வாக்கு 2 ஆயிடுத்து.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனாலும் பாருங்கோ எந்த அம்பியோ மைனஸ் பொட்டுடன்
//

அம்பியாருன்னு கண்டுபிடிப்பது கஷ்டம் இல்லை. வாசகர் பரிந்துரையில் துண்டு போடும் பதிவர்களின் பரிந்துரை பட்டியலில் இருக்கும் வாக்களர்கள் பெயரை ஒப்பிட்டால் தெரிந்துவிடும். :)

BIGLE ! பிகில் சொன்னது…

http://bikeel.blogspot.com/2010/06/blog-post_06.html

அண்ணே இதே கருத்து எழுதிய எனது பதிவு. இணைப்பு கொடுங்கன்னே....

..:: Mãstän ::.. சொன்னது…

good suggestion, already I wrote about this... தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்

ஜோதிஜி சொன்னது…

போகப் போக புரியும். மனதில் சிரித்துக் கொள்வதுண்டு. நீங்கள் வெளிப்படையாக உடைத்து விட்டீர்கள்.

ராஜ நடராஜன் சொன்னது…

தலைப்புக்கள் வா என்று வரவேற்பவையாக இருந்தாலும் பக்கசார்புகள் இல்லாமல்,படிக்காமல் நான் யாருக்கும் பின்னூட்டமிடுவதில்லை.எனவே எனது பின்னூட்டம் பெறுபவர்கள் இடுகை படிச்சவனய்யா என்று தாரளமாக மகிழலாம்:)

ராம்ஜி_யாஹூ சொன்னது…

கிருஷ்ணா மூர்த்தியின் பின்னூட்டத்தையே நான் வழி மொழிகிறேன்.

திரட்டிகளே இந்த மாதிரி சூடான, தனி நபர் தக்குதல் சார்ந்த பதிவுகளை தான் முகப்பில் போட விரும்புகின்றனர் (அது ஹிட்ஸ் வழியாகவோ, வாக்குகள் வழியாகவோ). அப்படி போட்டால் தான் திரட்டிகளுக்கும் கூட்டம் வரும், தொலைகாட்சி சானல்கள் போல தான்.

ஒருநாள் கூட வேளாண்மை சார்ந்த பதிவோ, குழந்தை கல்வி சார்ந்த பதிவோ, சேக்கிழார் குறித்த பதிவோ முகப்பு பக்கத்தில் நான் பார்த்தது இல்லை. போட்டால் கூட்டம் வராது என்பதும் நிதர்சன உண்மை.

பல நேரங்களில் திரட்டிகளே எப்போதோ முடிந்து போன போலி டோண்டு, பதிவர்களின் கார்டூன்ஸ் போன்ற தனி நபர் சார்ந்த பதிவுகளையே முதல் பக்கத்தில் போடுகின்றன.

திரைப்படங்கள் சலிப்படைந்து டோளைக்கட்சிகளை தேடினோம், தொலைகாட்சி சலிப்பு அடைந்து பதிவு க்குள் வந்தாம்., சீக்கிரமே வேறு ஒரு பொழுதுபோக்கு சாதனம் வந்து விடும், அப்போது நமக்கு திரட்டிகளிடம் இருந்தும் விடுதலை கிடைக்கும்.

மதார் சொன்னது…

and read also this one

http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/03/blog-post_4758.html

தமிழ் மதுரம் சொன்னது…

வணக்கம் சகோதரா! தங்களின் அலசல் அருமை. விடயங்கள் ஏதுமில்லாத வெறும் உப்புமாப் பதிவுகள் பல தொடர்ந்தும் வாசகர் பரிந்துரையில் இடம் பெறுவது அழகல்ல. உரியவர்களும், ஊக்குவிப்பாளர்களும் இதனை உணர்ந்து கொண்டால் நல்லது. ‘’திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

டி.பி.ஆர் சொன்னது…

இது பல மாதங்களாகவே தொடர்கிற அட்டூழியம். ஆனால் இதற்கு சரியான தீர்வு நம் போன்ற பதிவர்களிடம் மட்டுமே உள்ளது. எந்த பட்டியலில் வந்தாலும் வராவிட்டாலும் நல்ல பதிவுகளை தேடிப்பிடித்து மக்கள் வாசிக்கத்தான் செய்கின்றனர். ஆனால் நீங்கள் கூறியபடி அதிக ஹிட் கிடைக்கும் பதிவுகளை பட்டியலிடுவதன் மூலமும் இதற்கு தீர்வு கிடைத்துவிடாது. படிக்காமலேயே வந்துவிட்டு செல்வார்கள். ஒருவரே பலமுறை ஹிட் செய்துவிட்டு செல்லவும் வாய்ப்புள்ளது.

கிரி சொன்னது…

தமிழ்மணத்தில் எனக்கு அந்த கவலை இல்லை.. :-)) தமிழிஷ் ல் குழுவுல இல்லேன்னா ஓட்டு வருவதில்லை.

// மற்றபடி மேற்சொன்ன பரபரப்புத் தலைப்புகள் இதில் இடம் பெறுவது தவிர்க்க முடியாதது என்றாலும் நாளடைவில் பரப்பரப்புக்காக தலைப்பு வைத்து எழுதப்படும் இடுகைகள் குறிப்பிட்ட பதிவர்களது என்பதாக புறந்தள்ளுவதை பதிவு வாசகர்களே செய்துவிடுவார்கள்//

கோவி கண்ணன் இப்ப மட்டும் என்ன நடக்குது! அதே தான்.. பரிந்துரை பகுதில யார் யார் தொடர்ந்து வருகிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.. இப்ப நீங்க சூடான இடுகைக்கு சொல்வதை தான் பரிந்துரைக்கு பகுதிக்கு அனைவரும் செய்து கொண்டுள்ளார்கள்.

சூடான இடுகை பற்றி எனக்கு உடன்பாடு இல்லை அது வந்தால் இதை விட கேவலமாகத்தான் இருக்கும். இதிலாவது மொக்கை பதிவுகள் தான் வருது அது வந்தால் தமிழ்மணம் நாறி விடும்.

ஆக மொத்ததுல தமிழ்நாட்டுக்கு விடிவு காலம் இல்லை என்பது மாதிரி.. பதிவுலகிற்கு என்றும் விடிவு காலம் இல்லை. அங்கே எப்படி புலம்பிட்டு வாழ்க்கையை ஓட்டுற மாதிரி இங்கேயும் அதையே செய்வோம் ;-)

ILA(@)இளா சொன்னது…

கொஞ்சம் வருடம் முன் பின்னூட்டத்துக்கும், பிறகு சூடான் இடுக்கைக்கும், இப்போ பரிந்துரைக்கும். எல்லாம் ஒரே செய்திதானே கோவியாரே. இதையே டெம்ப்ளேட்டா வெச்சுக்குங்க. ... நாளைக்கு வேற ஒன்னு வரும்ல அதுக்கு உபயோகப்படும்

கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

ஹிட்ஸ் எண்ணிக்கையை வைத்து முன்னணி இடுகையைத் தீர்மானிப்பது என்றால் மஜா மல்லிகா ரகப் பதிவுகள் தான் எப்போதும் முன்னணி வகிக்கும்! காரணம் சொல்ல வேண்டியதே இல்லை!

அதையும் தாண்டி,அதிக ஹிட்ஸ் வாங்கும் பதிவுகளைக் கொஞ்சம் ஆராய்ந்தால், அதை எழுதுகிறவர்களே இரண்டாவது தரம் படிக்க விரும்பாத குப்பையாக இருப்பதைப் பார்க்க முடியும்.

திரட்டிகள் செய்ய வேண்டியதெல்லாம், பதிவுகளைத் தேதி வாரியாக, பதிவர்வாரியாகப் படிக்க வழி செய்து கொடுப்பது தான்!எந்தப் பதிவைப் படிப்பது, அதில் எது அபிமானத்துக்கு உரியது எது என்பதை பதிவைப் படிக்கும் வாசகர்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்று விட்டு விட வேண்டியது தான்.

இரண்டுமே நடக்கக் கூடிய சூழல் இப்போது தெரியவில்லை!

கிரி சொல்லும் அனுபவம், என்னுடைய அனுபவத்தோடு ஒத்துப் போகவில்லை. ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான அனுபவம் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

தமிழ்மணம், தமிழிஷ் நிர்வாகத்திடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன் , பதிவுகளுக்கு சீரியல் எண்கள் கொடுங்கள் என்று.

இரண்டு திரட்டிகளும் சரி என்று பதில் போட்டார்கள், ஆனால் இன்னும் நடை முறையில் வர வில்லை.

இதன் மூலம் படிக்கும் நாங்கள் உஷாராக இருப்போம், இன்று இந்த நம்பர் வரை பதிவு படித்தாகி விட்டது என்று குறித்தும் கொள்ளலாம்.

படித்த பதிவையே மீண்டும் கிளிக் செய்யும் அவசியம் ஏற்படாது.

வவ்வால் சொன்னது…

Kovi,

top la vara mudiyatha vagutherichalil ippadi pesuringa! Ippadi naan solla maatten, "avunga" solvanganne!

10 id vachu suya sevai mattuma, positive vote mattum vizha vaikkiranganum makkal solluthe.

Hits vachu thervu seyrathum vambu thaan.

Pesaama mosamana pathivukal appadinum pattiyal vaikkanum, athiga minus vaangi mugappil vanthaal asingamnu intha "nallavanga" thiruntha koodum.

Intha pattiyalukku "pulippu maanga" ena peyar vaikkalam! Eg sour orange awards in hollywood.
*
@Ramji,

meendum paditha pathivai padikiringana, thalaippu,pathivar peyar ninaivil illinu artham,appo no mattum marakka maattingala? Romba kashtam!

உமாபதி சொன்னது…

நானும் திரட்டிகளுக்கு புதிது தங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்

ராம்ஜி_யாஹூ சொன்னது…

வௌவால் எனக்கு இந்த பதிவு வரிசை எண்ணின் தேவை பெரும்பாலும், திரைப்பட விமர்சனம் சார்ந்த பதிவுகளுக்கு அவசியம் ஆகிறது.

ஆயிரத்தில் ஒருவன், அங்காடி தெரு, இராவணன் போன்ற படங்கள் வெளி வந்ததும், புற்றீசல்கள் போல ஆயிரம் விமர்சனப் பதிவுகள். எனவே என்னால் ஞாபகத்தில் வைக்க முய்ய வில்லை, பதிவர்களின் பெயர்கள, தலைப்பை.

இப்போதே பயமாக இருக்கிறது இந்திரன் படத்தை நினைத்து. படம் வந்த இரண்டு நாட்களுக்குள் இரண்டாயிரம் விமர்சனப் பதிவுகள் வரப் போவது உறுதி.

வரிசை என் இருந்தால் என் கணிணியில்,அல்லது அலைபேசியில் இந்த என் பதிவு வரை படித்தாகி விட்டது என்று குறித்து கொள்வேன்.

I could note down until this number blog, I have read on this date

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... சொன்னது…

கோவி சார் : சரியாக சொன்னீர்கள்.....

வருண் சொன்னது…

Kovi:

இக்கரைக்கு அக்கரைப் பச்சை! சூடான இடுகைகளில் பயன்பெற்ற அளவு வாசகர் பரிந்துரையில் பயனடையதவன நானும்தான்.. ஆனால் வாசகர் பரிந்துரையில் இதுபோல் 10 ஐ டி வைத்து தன்னைத்தானே ப்ரமோட் செய்றவங்க எல்லாம் ஒரு சிலர் இருக்கலாம். உண்மையிலேயே ம்யூச்சுவல் ஹெல்ப் செய்யும்பதிவர்களின் பதிவுகள் பரிந்துரைக்கப்படுவதாக நான் நம்புகிறேன்.

Since I am not aware of multiple ids, I think this (readers' recommendation) is better than "hot topics"! That is just my opinion :)

வருண் சொன்னது…

***கிரி


தமிழ்மணத்தில் எனக்கு அந்த கவலை இல்லை.. :-)) தமிழிஷ் ல் குழுவுல இல்லேன்னா ஓட்டு வருவதில்லை.

// மற்றபடி மேற்சொன்ன பரபரப்புத் தலைப்புகள் இதில் இடம் பெறுவது தவிர்க்க முடியாதது என்றாலும் நாளடைவில் பரப்பரப்புக்காக தலைப்பு வைத்து எழுதப்படும் இடுகைகள் குறிப்பிட்ட பதிவர்களது என்பதாக புறந்தள்ளுவதை பதிவு வாசகர்களே செய்துவிடுவார்கள்//

கோவி கண்ணன் இப்ப மட்டும் என்ன நடக்குது! அதே தான்.. பரிந்துரை பகுதில யார் யார் தொடர்ந்து வருகிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.. இப்ப நீங்க சூடான இடுகைக்கு சொல்வதை தான் பரிந்துரைக்கு பகுதிக்கு அனைவரும் செய்து கொண்டுள்ளார்கள்.

சூடான இடுகை பற்றி எனக்கு உடன்பாடு இல்லை அது வந்தால் இதை விட கேவலமாகத்தான் இருக்கும். இதிலாவது மொக்கை பதிவுகள் தான் வருது அது வந்தால் தமிழ்மணம் நாறி விடும்.

ஆக மொத்ததுல தமிழ்நாட்டுக்கு விடிவு காலம் இல்லை என்பது மாதிரி.. பதிவுலகிற்கு என்றும் விடிவு காலம் இல்லை. அங்கே எப்படி புலம்பிட்டு வாழ்க்கையை ஓட்டுற மாதிரி இங்கேயும் அதையே செய்வோம் ;-)

9:13 PM, July 07, 2010 ***

Giri: Very well said. Somehow you made me LOL when I was reading about "vidivi kaalam for TN or/and blog world". You sounded like philosophical rajni himself! :))

ஜோதிஜி சொன்னது…

அம்பியாருன்னு கண்டுபிடிப்பது கஷ்டம் இல்லை. வாசகர் பரிந்துரையில் துண்டு போடும் பதிவர்களின் பரிந்துரை பட்டியலில் இருக்கும் வாக்களர்கள் பெயரை ஒப்பிட்டால் தெரிந்துவிடும். :)

உண்மை...........


தலைப்புக்கள் வா என்று வரவேற்பவையாக இருந்தாலும் பக்கசார்புகள் இல்லாமல்,படிக்காமல் நான் யாருக்கும் பின்னூட்டமிடுவதில்லை.எனவே எனது பின்னூட்டம் பெறுபவர்கள் இடுகை படிச்சவனய்யா என்று தாரளமாக மகிழலாம்:)

உண்மை..................

ஒருநாள் கூட வேளாண்மை சார்ந்த பதிவோ, குழந்தை கல்வி சார்ந்த பதிவோ, சேக்கிழார் குறித்த பதிவோ முகப்பு பக்கத்தில் நான் பார்த்தது இல்லை. போட்டால் கூட்டம் வராது என்பதும்

நிதர்சன உண்மை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்