பின்பற்றுபவர்கள்

12 ஜூலை, 2010

தமிழ் ஓவியா, மாதவராஜ், வினவு மற்றும் சிலர் !

நாம எழுதுற எழுத்தை வாசிப்பதே பதிவர் / வாசகர் அளிக்கும் மிகப் பெரிய அங்கீகாரம் என்று நினைக்கிறோம், அதிலும் சிலர் எழுதும் அத்தனை இடுகைகளும் எல்லோரும் படிக்கக் கூடிய பதிவு என்பதாக பரிந்துரைப்பது மிகப் பெரிய அங்கீகாரம், நான் அறிந்த வரையில் பதிவர்கள் தமிழ் ஓவியா, திரு மாதவராஜ் மற்றும் வினவுக் குழு ஆகியோர் எழுதும் அத்தனை இடுகைகளும் வெளியிட்ட அடுத்த ஒரு மணி நேரத்திற்கும் எப்படியாவது வாசகர்களால் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை தொடர்ந்து பார்க்கும் போது ஏற்படும் வியப்பைத் தாண்டி இவர்களை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ரஜினி தும்மினாலே பத்திரிக்கை செய்தியாகிடும் என்பார்கள் அது போல் இவர்கள் எதை எழுதினாலும் படித்துவிட்டு பரிந்துரைக்க இவர்களுக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டமே காத்திருப்பதைப் பார்க்கும் போது இது இவர்களின் பதிவுலக வெற்றி என்றே நினைக்கிறேன். இவர்கள் வெறும் தலைப்பிட்டு வெளி இட்டாலே வாசகர்களால் பரிந்துரைக்கப்படும் என்பது எனது அவதனிப்பு, மேற்கண்ட அன்பர்கள் வாசகர்களைக் கவரும் ரகசியத்தை வெளி இட்டால் பிறரும் பயன்பெறுவர்.

மேலும் தமிழ்மணத்திற்கு நான் வைக்கும் வேண்டுகோள், வாசகர் பரிந்துரைப் பகுதியை எடுக்காமல் தலைப்பை மற்றும் 'தமிழ் ஓவியா, மாதவராஜ், வினவு மற்றும் சிலர்' என்று வைத்துவிட்டால் தமிழ்மணத்தை திறந்தாலே பளிச்சென்று வாசகர்களை அடைந்து தமிழ்மணம் திரட்டிக்கு மேலும் பல பதிவர்கள் வந்து இணைத்துக் கொள்ளும் ஈர்ப்பாக இருக்கும் என்று கருதுகிறேன், செய்வதும் செய்யாமல் இருப்பதும் தமிழ்மணத்தின் விருப்பம்.

பதிவர்களாகிய நாம் தமிழ் ஓவியா, மாதவராஜ், வினவு ஆகியோர்களின் ஆக்கங்கள் இவ்வளவு சிறப்புற்றிருப்பதற்கு வட்டார அளவில் தனித்தனியாகவோ மொத்தமாகவோ பாராட்டு விழா நடத்தினால் இவர்களை கவுரவப்படுத்தி அங்கீகரிப்பது போல் இருக்கும், தொடர்ந்து சமூகத்திற்காக எழுதித் தள்ளும் இவர்களை நாம் அங்கீகரிக்காவிட்டால் யார் தான் அங்கீகரிப்பது.

என்னோடு சேர்த்து வாசகர்களும் பின்னூட்டத்தில் இம்மூவருக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அடுத்து அவர்களைப் போல்வாசகர் பரிந்துரையில் தொடர்ந்து இடம் பிடிப்போர் பட்டியலும் இருந்தால் தெரிவிக்கவும், அவர்களுக்கும் பாராட்டுகள் அளித்து ஊக்கப்படுத்துவோம்.

தமிழ் ஓவியா, மாதவராஜ், வினவு ஆகியோரின் எழுத்துப்பணி என்றென்றும் வாழ்க, மூவருக்கும் பாராட்டுகள்.

இவர்களைப் போன்று உணர்வு பூர்வமான, சுண்டி இழுக்கும் எழுத்து நடை மற்றும் சமூக எழுத்துகளைப் பெற்றிருக்காத அப்பாவி பதிவர்கள் வாசகர் பரிந்துரையில் துண்டு போடுவது இடம் பிடிப்பது எப்படி என்பது குறித்து எனக்கு தெரிந்த புள்ளி விவரங்களை நாளைப் பார்க்கலாம்.

பின்குறிப்பு : தலைப்பில் போதிய இடம் இல்லாததாலும், இது போன்ற தொடர் சாதனையை தொடர்ந்து செய்யாததாலும் சிலரின் பெயர்கள் தலைப்பில் விடுபட்டுவிட்டது, இந்தப் பதிவை படிக்கும் பதிவர்கள் இதை வாசகர்களுக்கு தமிழ் மணத்தில் பரிந்துரைத்தால், மின் அஞ்சல் வழியாக இணைப்பாக அனுப்பினால் மூவரின் பெருமை மேலும் (கீழும் கூட) பரவும் என்பது எனது அவா.

இந்த இடுகையை இதுவரை பரிந்துரைத்தவர்கள் விவரம் இங்கே

36 கருத்துகள்:

மின்னுது மின்னல் சொன்னது…

:)

பிரியமுடன் பிரபு சொன்னது…

:):):):):):)

பாராட்டு விழாவுல நமிதா ஆட்டம் உண்டா ?

பிரியமுடன் பிரபு சொன்னது…

YOU WILL GET LOT OF MINUS
WAIT

கோவி.கண்ணன் சொன்னது…

//YOU WILL GET LOT OF MINUS
WAIT//

கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்கும்னு சொல்றியா பிரபு !
:)

இரும்புத்திரை சொன்னது…

நான் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. நீங்கள் இப்படியாக எழுதும் போது அது உங்களது சொந்தக்கருத்து என்று சொல்லிவிட்டால், நான் அதை எதிர்கொள்ளவோ /விளக்கவோத்தேவை இருக்காது.

இப்படி என் பதிவுல பின்னூட்டம் போட்டது இந்த அடிக்க தானா..

//மேலும் தமிழ்மணத்திற்கு நான் வைக்கும் வேண்டுகோள், வாசகர் பரிந்துரைப் பகுதியை எடுக்காமல் தலைப்பை மற்றும் 'தமிழ் ஓவியா, மாதவராஜ், வினவு மற்றும் சிலர்' என்று வைத்துவிட்டால் தமிழ்மணத்தை திறந்தாலே பளிச்சென்று வாசகர்களை அடைந்து தமிழ்மணம் திரட்டிக்கு மேலும் பல பதிவர்கள் வந்து இணைத்துக் கொள்ளும் ஈர்ப்பாக இருக்கும் என்று கருதுகிறேன், செய்வதும் செய்யாமல் இருப்பதும் தமிழ்மணத்தின் விருப்பம்.//

இவ்வளவு சீரியஸான பதிவுல கூட காமெடியா..படிச்சிட்டு ரோட்ல நினைச்சி நினைச்சி சிரித்தேன்..

பாராட்டு விழா அப்புறம் முதல்ல தமிழ் மணத்துக்கு தந்தி அடிப்போம்

என்ன வழி அண்ணே..சொல்லுங்க சொல்லுங்க.. பார்ட் டூ நான் போடுறேன்..

சரி புனைவு இல்லன்னா இது என்ன சொற்சித்திரமா இல்லை சொற்சமாதியா

பாவம் அந்த _ய்(கொஞ்சம் நாறும்) அப்படி எழுதினா கூட ஓட்டு விழும்.

செங்கோல் சொன்னது…

எனக்கென்னவோ இது வஞ்சப் புகழ்ச்சி இடுகை போல தெரிகிறது.கண்ணனுக்கே வெளிச்சம்!!!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

சமீப காலமாக புதிய பதிவர்கள் நிறைய வருகின்றனர்.
முன்னவர்களை விட நன்றாகவே எழுதுவதாக மொத்த பதிவர்கள்
சொல்கின்றனர். எது எப்படியோ. எந்தவித குழு அமைப்புகளையும்,
செயற்கையான வழிமுறைகளையும் ,மீறி நல்ல பதிவுகள் பிரபலமாகி வருகிறன்றன
தமிழிஸ் .காம் தளத்தில் என்பது உண்மை. தமிழ் மணத்தில் இருந்து விலகி விட்டேன்.

நீங்கள் குறிப்பிட்ட இந்த ஐயம் எனக்கு பல முறை வந்துண்டு. இவைகள் எல்லாம்
'காலத்தால் " அடிதுச்செல்லபடும் என்று மற்றும் புரிகிறது.விட்டுத்தள்ளுங்கள்.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இந்த வாரம் உங்களுக்குதான் எல்லா பரிந்துரையும்..தல.. உங்க கணக்கு தப்பாது..மற்றபடி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.200 பேர் தளத்துக்கு வருகை தர்றாங்க அதுல 10 பேர் நண்பர்களா பிடிச்சு வெச்சுக்கணும் நு நினைக்கிறேன்... இவங்க மூணு பேர் கிட்டயும் ஒரு எழுத்து ஒற்றுமை இருக்கு ..அநீதிய தட்டி கேட்கிற ராபின் உட் எழுத்து பாணி தான் எல்லோருக்கும் பிடிக்கும்.அதுக்கு அடுத்தது நகைச்சுவை பாணி...அதை கைவர பெற்றவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.ஓ பக்கங்கள் ஞானி உருளைகிழங்கு பற்றி எழுத துவங்கி விட்டதால் ..பாமரனுக்கு பத்திரிக்கை கிடைக்காததால் சாட்டைஅடி விமர்சனங்களை வினவு படித்துதான் ஆற்றிக்கொள்ள முடிகிறது.

கிரி சொன்னது…

//செங்கோல் said...
எனக்கென்னவோ இது வஞ்சப் புகழ்ச்சி இடுகை போல தெரிகிறது//

செங்கோல் இப்படி அப்பாவியா இருக்கீங்களே! ;-)

இந்த உலகம் இன்னுமா கோவி கண்ணனை நம்பிட்டு இருக்கு ஹி ஹி

புன்னகை தேசம். சொன்னது…

இவர்கள் மூவரின் பதிவையும் படிப்பேன் . சில சமயம் எரிச்சலூட்டினாலும், பல சமயம் விஷயம் இருக்கவே செய்கிறது..


எனக்கு துணிவா தட்டி கேட்கும் பதிவுகள் யார் எழுதினாலும் பிடிக்கும்..

குணம் நாடி குற்றமும் நாடி - மன்னிப்போம் , மறப்போம் -- நம்பள்கி பாலிஸி..

மற்றபடி இந்த ஓட்டு ,பிரபலம் , இதெல்லாம் கவனிப்பதில்லை, விரும்புவதுமில்லை..

BIGLE ! பிகில் சொன்னது…

மிக மோசமான பதிவு கோவி கண்ணன். உள்ளபடி நீங்கள் இங்கே விமர்சித்திருக்க வேண்டியது பரிந்துரையில் மகுடத்திலும் நீங்கா இடம் பிடிக்கும் மொக்கை, மரண மொக்கை, மஹா மொக்கை, எதிர் கவுஜை, எதிர்கவுஜைக்கெல்லாம் எதிர்கவுஜை போன்ற அர்த்தமற்ற பிதற்றல்களை எழுதித்தள்ளும் வானம்பாடிகள் போன்ற மொக்கை பதிவர்களைத்தான் ஆனால் கொஞ்சமேனும் சமூக அக்கரையுடனும் எழுதும் பதிவர்களை வம்புக்கு இழுத்திருப்பதிலிருந்து ஒன்று நீங்கள் பொறாமை அல்லது பதிவரசியலுக்கு அல்லது இரண்டுக்குமே பலியாகியிருப்பது தெளிவு

வருத்தங்கள்

BIGLE ! பிகில் சொன்னது…

மிக மோசமான பதிவு கோவி கண்ணன். உள்ளபடி நீங்கள் இங்கே விமர்சித்திருக்க வேண்டியது பரிந்துரையில் மகுடத்திலும் நீங்கா இடம் பிடிக்கும் மொக்கை, மரண மொக்கை, மஹா மொக்கை, எதிர் கவுஜை, எதிர்கவுஜைக்கெல்லாம் எதிர்கவுஜை போன்ற அர்த்தமற்ற பிதற்றல்களை எழுதித்தள்ளும் வானம்பாடிகள் போன்ற மொக்கை பதிவர்களைத்தான் ஆனால் கொஞ்சமேனும் சமூக அக்கரையுடனும் எழுதும் பதிவர்களை வம்புக்கு இழுத்திருப்பதிலிருந்து ஒன்று நீங்கள் பொறாமை அல்லது பதிவரசியலுக்கு அல்லது இரண்டுக்குமே பலியாகியிருப்பது தெளிவு

வருத்தங்கள்

அறிவிலி சொன்னது…

// தலைப்பில் போதிய இடம் இல்லாததாலும், இது போன்ற தொடர் சாதனையை தொடர்ந்து செய்யாததாலும் சிலரின் பெயர்கள் தலைப்பில் விடுபட்டுவிட்டது//

இதுல விட்டுப்போன ஒரு பதிவர் பேரு எனக்கு தெரியும் ஆனா, அதை நான் இங்க வெளிப்படையா சொல்ல மாட்டேன். :-))))))

நெருப்பு சொன்னது…

விடுதலையில் இருந்து COPY -> PASTE கொடுக்கிற தமிழ்ஒவியாவை இதுல சேர்க்கலாமா

வெண்பூ சொன்னது…

இந்த‌ இடுகைக்கு க‌டும் ஆத‌ர‌வு தெரிவித்து அண்ண‌ன்க‌ளின் புக‌ழ் ப‌ர‌வ‌ நான் இதை ரீட‌ர், ப‌ஸ் எல்லா இட‌த்திலும் ஷேர் செய்கிறேன்.

இப்ப‌டிக்கு
உண்மைத் தொண்ட‌ன்
அண்ண‌ன்க‌ள் பேர‌வை

ராம்ஜி_யாஹூ சொன்னது…

நீங்க எந்த அர்த்தத்திலும் , நோக்கத்திலும் (புகழ்ந்தோ/இகழ்ந்தோ) எழுதுவது உங்களின் விருப்பம்.

நான் பண்ணுவதை கூறுகிறேன்.
மாதவராஜ், காமராஜ், அய்யனார், லேகா, ஜ்யோவ்ராம் சுந்தர், தமயந்தி, ஜாக்கி, சித்தார்த், சேக்கிழார் கல்பனா , சுரேஷ் கண்ணன், எட்டயபுரம் போன்ற பதிவர்களின் பெயரை பார்த்ததுமே நான் வாக்கு அளித்து விடுவேன் (படிக்கும் முன்பே) . தமிளிஷ், தமிழ்மணம், தமிழ் என எந்த திரட்டியாக இருந்தாலும்

நான் எல்லாம் ரஜினி, கமல், பாரதிராஜா என்று பிராண்ட் பார்த்து பழகிய மனிதன். பாரதிராஜா என்ற பெயரை பார்த்ததும் திரை அரங்கு ஓடிவிடும் மனப் பான்மை உள்ள ஆள்.

இதற்கு காரணம் அவர்களின் பழைய பதிவுகள் சிறப்பாக் இருந்தன எனவே இந்த பதிவும் , வரப் போகும் பதிவுகளும் சிறப்பாகவே இருக்கும் என்ற லாஜிக் இல்லாத நம்பிக்கை. நேற்று போலவே இன்றும் இருக்கும் என்ற மர்பியின் விதி

வினவு சொன்னது…

வினவு வருவதற்கு முன்னர் சிலர் பதிவுலகில் அறிவு சீவிகளாக காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தனர். அவர்கள் அறிவு சீவித்தனத்தை வினவு திட்டமிட்டு கலைக்கவில்லை. எங்களது சொந்த எழுத்து, சமூகப்பிரச்சினைகளை எங்களது கோணத்தில் பார்ப்பது என்ற முறையில் எழுதிக் கொண்டிருந்தோம். பிறகுதான் புரிந்தது அதனால் சிலர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று. இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் கோவி கண்ணன்? இந்தப் பட்டியிலில் கோவி கண்ணன் இருப்பதாக இதனால் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

மற்றபடி வினவு கட்டுரைகள் வாசகர் பரிந்துரையில் வருவதை தவிர்த்து விட்டு கோவி கண்ணன் கட்டுரைகளும் இடம்பெற என்ன செய்யவேண்டும்? வினவு மாதிரியே எழுதலாமே? அதை யாரும் தடுக்க மாட்டார்களே? வேண்டுமானால் அதற்கு பயற்சி கொடுக்கலாம். ஆனால் மெத்தப்படித்த மேதையான கோவி கண்ணன் அதை விரும்பமாட்டார் என்பதுதான் பிரச்சினை. இதற்குமேல் என்ன செய்வது?

ரிஷபன்Meena சொன்னது…

இந்த மாதிரி ஒட்டு போடுவதை வைத்தெல்லாம் நல்ல பதிவுகளை அடையாளம் காணமுடியாது என்பதே நிதர்சனம்.

பாட்சிலராக இருப்பவர்கள் எங்கேனும் நல்ல மெஸ் இருக்கிறது என்றால் தேடி தேடி போவர்களே, அது போல்
கொஞ்சம் மெனக்கெட்டால் நல்லா எழுதும் பதிவர்களை அடையாளம் காணலாம்.

வருண் சொன்னது…

கோவி!

ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு?! :)

பதிவுலகை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிறீங்க, போலயிருக்கு! ரிலாக்ஸ் ப்ளீஸ்! :)

முகிலன் சொன்னது…

நம்ம மக்களுக்கு sarcasm- க்கு அர்த்தம் தெரிய மாட்டேங்குது

தோழர் மோகன் சொன்னது…

மிக மட்டமான பதிவு கோவி கண்ணண்!!! என் கண்டனங்களை பதிவு செய்கிறேன் வருத்ததுடன்!!!

இனி பதிவுலகளில் மோக்கைகளுக்கு மட்டுமே ஓட்டு போடனும், யாரும் சமூக பிரச்சனையை எழுத கூடாது, கண்டிப்பா ஏன்? எதுக்கு? னு மக்கள் சிந்திக்கவே விடக்கூடாது... விடமா சினிமா விமர்சனமும், வெட்டி மொக்கைகளும் தான் எழுதனும் இப்படி எழுதுரவங்களுக்கு தான் ஓட்டு போடனும் சரியா? கோவி கண்ணண்?

நீங்க சொன்ன மூனு பேரோட பதிவால புதிய பதிவர்களோட பதிவு யாருக்கும் தெரியாம போகுதுனு உண்மையிலே வருத்தபட்டீங்கனா? மாதவராஜ் மாதிரி உங்கள் வளைப்பூவிலே நீங்க படிச்ச நல்ல பதிவுகள அறிமுகம் படுத்துங்க, வினவு போல உங்கள் வாசகர்களிலே யாராவது நல்ல எழுதினா உங்கள் வளைதளத்திலே எழுத சொல்லுங்க, இல்லனா மின்னஞ்சல் மூலமா நீங்க ரசிச்ச பதிவ நண்பர்களோட பகிர்ந்துகோங்க... தமிழ்மணத்திற்கு மின்னஞ்சல் போட்டு புதிய பதிவர்களோட பதிவுகள தனியா வர மாதிறி ஏற்பாடு பண்ண சொல்லுங்க அத விட்டு விட்டு இப்படி வஞ்ச புகழ்ச்சியா ஒரு பதிவு தேவையா? சிந்திச்சு பாருங்க?

தோழமையுடன்,
மோகன்

நியோ சொன்னது…

அன்பு கோவி சார் ...

needa naatgalukku pinnar valai vaasam ...வால் பையன் மற்றும் ராஜன் குறித்து நீங்கள் முன்னர் எழுதிய பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு வந்திருக்கிறேன் ...

"தோழர் தமிழ் ஓவியா, தோழர் மாதவராஜ் , வினவு தோழர்கள்" ... நீங்கள் நினைத்திருந்தால் இன்னும் பலரை சுட்டிக் காட்டியிருக்கலாம் ... விமர்சிக்கப் படுவதற்கும் சில தகுதிகள்,புரிந்துணர்வுகள் தேவையென நீங்கள் கருதுவது குறித்து மகிழ்ச்சி...

தோழர் தமிழ் ஓவியா அவர்களின் பதிவுகளுக்கு பல முறை நான் வாக்களித்திருக்கிறேன் ... தோழர் மாதவராஜ் அவர்களின் பதிவுகளுக்கு சில முறை ... வினவு தோழர்களுக்கு இரண்டொரு முறை (வினவின் தளத்திற்கு செல்ல எனது கணிணி மிக அதிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால் அவர்களின் பதிவுகளை படிப்பது என்னால் இயலாததாக இருக்கிறது ) ...

நான் கூற வருவது என்னவென்றால் ... தோழர் தமிழ் ஓவியா, தோழர் மாதவராஜ் , வினவு தோழர்கள் மூவரும் தங்கள் பதிவுகளுக்கு தாங்களே போலியாக வாக்களிக்கிறார்கள் என்ற பொருள் பட நீங்கள் குறிப்பிடுவது நானறிந்த வகையில் சரியல்ல என்பது தான் ...

அவர்களின் காத்திரமான பதிவுகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் அவர்களைப் போலவே நல்ல பதிவுகளை எழுதிவரும் உங்கள் நண்பர் கோவி கண்ணனுக்கு கிடைக்க வில்லையே என்ற தங்களின் உணர்வு புரிந்து கொள்ளக் கூடியதே!

மேலும் தோழர் தமிழ் ஓவியாவிற்கு வாக்களிப்பவர்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் நான் நன்றாகவே அறிவேன் ... பல முறை பேசியும் உள்ளேன் ...TA.DA உள்ளிட்ட அலவன்ஷ்களுக்கு நீங்கள் உத்திரவாதம் அளிக்கும் பட்சத்தில் தோழர் தமிழ் ஓவியா அவர்களுக்கு வாக்களிக்கும் தோழர்களுடனான சந்திப்பை உலகின் எந்த மூலையிலுள்ள நீங்கள் விருப்பப்படும் ஐந்து அல்லது அதற்கு அதிகமான நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்ய தயாராக இருக்கிறேன் ...

அப்புறம் தோழர் கோவி ... எதிர்மறை வாக்களிப்பது கூடவே கூடாது என்ற மனநிலை உடையவன் நான் ... தற்கொலை செய்து கொள்வதை ஆராதிக்கிறது என முதல் முறை ஒரு கவிதைக்கு ,நகைச்சுவை என்ற பெயரில் குழந்தைகள் குறித்து வக்கிரமாய் இருந்த புகைப்பட பதிவிற்கு இரண்டாம் முறை , வால் பையன் & ராஜனுக்கு வேண்டுகோள் விடுத்த அப்துல்லா அவர்களுக்கு மூன்றாம் முறை ,அப்புறம் நான்காவது தங்களின் இந்த பதிவிற்கு ...

பூனைகளுக்கு கட்டுவதை விட்டு விட்டு காவல் நாய்களுக்கு கட்டுவது ஏற்புடையதன்று தோழர்!

நாளை வருகிறேன் தோழர் !

கோவி.கண்ணன் சொன்னது…

// BIGLE ! பிகில் said...

மிக மோசமான பதிவு கோவி கண்ணன். உள்ளபடி நீங்கள் இங்கே விமர்சித்திருக்க வேண்டியது பரிந்துரையில் மகுடத்திலும் நீங்கா இடம் பிடிக்கும் மொக்கை, மரண மொக்கை, மஹா மொக்கை, எதிர் கவுஜை, எதிர்கவுஜைக்கெல்லாம் எதிர்கவுஜை போன்ற அர்த்தமற்ற பிதற்றல்களை எழுதித்தள்ளும் வானம்பாடிகள் போன்ற மொக்கை பதிவர்களைத்தான் ஆனால் கொஞ்சமேனும் சமூக அக்கரையுடனும் எழுதும் பதிவர்களை வம்புக்கு இழுத்திருப்பதிலிருந்து ஒன்று நீங்கள் பொறாமை அல்லது பதிவரசியலுக்கு அல்லது இரண்டுக்குமே பலியாகியிருப்பது தெளிவு

வருத்தங்கள்//

மனம் திறந்து பாராட்டுகிறேன் என்று ஒரு வரி சேர்க்காதது என் குற்றமா ? இது பாராட்டு பதிவு சத்தியமாக நம்புங்க, இங்கே புது துண்டு கைவசம் இல்லை, இருந்தால் போட்டு தாண்டிவிடுவேன். வருந்தத்தேவை இல்லை, நீங்களும் அவர்களைப் பாராட்டுகிறேன் என்று ஒற்றை வரியில் சொல்லிச் சென்றிருக்கலாம். இப்பவும் பாருங்க, அவர்களை பாராட்டுவது பிடிக்காத இரு பொறாமைக்காரர்கள் மைனஸ் வாக்கு அளித்துச் சென்றிருக்கிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

// நெருப்பு said...

விடுதலையில் இருந்து COPY -> PASTE கொடுக்கிற தமிழ்ஒவியாவை இதுல சேர்க்கலாமா/

இது உங்களுக்கே நல்லா இருக்கா ? திருமுறைகளை சிதம்பரம் தீட்சிதர்கள் பாதுகாப்பாக பூட்டி வைத்தது போல், கருவூலம் காப்பது போல் திக வீரமணி காத்து வைத்திருக்கும் பெரியார் எழுத்தை நீதிமன்றம் சென்றால் தான் திறக்க முடியும் என்ற நிலையில் திரு தமிழ் ஓவியா தமிழ்பதிவர்களுக்காக இலவசமாக இங்கே காபி பேஸ்ட் செய்கிறாரே அது சேவை இல்லையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//புன்னகை தேசம். said...

இவர்கள் மூவரின் பதிவையும் படிப்பேன் . சில சமயம் எரிச்சலூட்டினாலும், பல சமயம் விஷயம் இருக்கவே செய்கிறது..//

ஆமா சார் வெள்ளை சட்டையில் நீல இங்க் பட்டுவிட்டது என்பதற்காக யாரும் அதை நீல சட்டை என சொல்லமாட்டார்கள், ஒப்புக்கொள்கிறேன்


// எனக்கு துணிவா தட்டி கேட்கும் பதிவுகள் யார் எழுதினாலும் பிடிக்கும்..

//

உங்களுக்கு விருப்பம் இருந்தால் அவர்களுக்கு பதிவுலக அஜித், விஜய், தனூஸ், சிம்புன்னு உங்க விருப்ப்பட்டி பட்டங்கள் அளித்து கூட பாராட்டலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

// அறிவிலி said...இதுல விட்டுப்போன ஒரு பதிவர் பேரு எனக்கு தெரியும் ஆனா, அதை நான் இங்க வெளிப்படையா சொல்ல மாட்டேன். :-))))))//

நீங்க சொல்லாததன் காரணம் வெளிப்படையானது, தமிழ்மணம் திரட்டியில் இணையும் போதே நீங்கள் ரகசிய காப்பு உறுதி மொழி எடுத்து இருக்கிறீர்கள், உங்கள் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு :)

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...


செங்கோல் இப்படி அப்பாவியா இருக்கீங்களே! ;-)

இந்த உலகம் இன்னுமா கோவி கண்ணனை நம்பிட்டு இருக்கு ஹி ஹி//

அடப்பாவி, நாலு பேரை நல்லவிதமாக பாராட்டினால் உனக்கு பிடிக்காதா ? ஆவ்வ்வ்வ்வ்வ்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டங்கள் அனைத்துமே மின் அஞ்சலுக்கு வரவில்லை எனவே வெளி இடுவதில் சற்று நேரக்குறைவு ஆகிவிட்டது மன்னிக்கவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வினவு said...

வினவு வருவதற்கு முன்னர் சிலர் பதிவுலகில் அறிவு சீவிகளாக காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தனர். //

சிலர் என்று நழுவும் உங்கள் சாதுர்யம் பாராட்டத்தக்கது. இல்லாவிடில் பதிவுலகம் எங்கள் வருகைக்குப் பிறகு தான் எழுதப்படுகிறது என்று நீங்கள் பெருமை கூறுவதாக நான் எடுத்துக் கொள்ள நேரிட்டிருக்கும். :)

//அவர்கள் அறிவு சீவித்தனத்தை வினவு திட்டமிட்டு கலைக்கவில்லை. எங்களது சொந்த எழுத்து, சமூகப்பிரச்சினைகளை எங்களது கோணத்தில் பார்ப்பது என்ற முறையில் எழுதிக் கொண்டிருந்தோம். பிறகுதான் புரிந்தது அதனால் சிலர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று. இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் கோவி கண்ணன்? இந்தப் பட்டியிலில் கோவி கண்ணன் இருப்பதாக இதனால் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்.//

எல்லாமும் எல்லாமும் பெற வேண்டும் என்பது கம்யூனிச சித்தாந்தம், ஆனால் தொடர்ச்சியாக பரிந்துரையில் துண்டு போடுவது உங்களுக்கு சங்கடமாக இல்லையா என்று கேட்கத் தோன்றுவது ஒன்றும் தவறு இல்லையே சார். தமிழ்மணம் போட்டிகள் குறித்து வரையரைகள் கூறி பதிவிட்ட நீங்கள், வாசகர் பரிந்துரையை ஒழுங்குபடுத்த எந்த ஒருபரிந்துரைகளையும் செய்யாத உங்களின் (கள்ள)மவுனம், உங்கள் கட்டுரைகளின் பரிந்துரைகளையும் பாதிக்கும் என்பதால் என்று நான் ஏன் கருதத்க் கூடாது ? இதற்கு முன்பு ஒரு பதிவில் வினவு குழு சிறப்பாக செயல்படுகிறது என்று நான் என் பதிவில் குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறேன் என்பதால் தான் இதையும் கேட்கிறேன்.

//மற்றபடி வினவு கட்டுரைகள் வாசகர் பரிந்துரையில் வருவதை தவிர்த்து விட்டு கோவி கண்ணன் கட்டுரைகளும் இடம்பெற என்ன செய்யவேண்டும்? வினவு மாதிரியே எழுதலாமே? அதை யாரும் தடுக்க மாட்டார்களே? வேண்டுமானால் அதற்கு பயற்சி கொடுக்கலாம். ஆனால் மெத்தப்படித்த மேதையான கோவி கண்ணன் அதை விரும்பமாட்டார் என்பதுதான் பிரச்சினை. இதற்குமேல் என்ன செய்வது?//

என்னுடைய கட்டுரைகளை பரிந்துரையில் வரவைக்கும் உபாயம் எனக்கு தெரியும் :) அது பற்றி நீங்கள் தனிப்பட்ட யோசனைகள் கூறத் தேவை இல்லை. மற்றவர்களுக்கு உங்கள் யோசனைகளை எழுதலாமே. மேலே சொல்லி இருக்கிறேன், தமிழ்மணம் போட்டியை ஒழுங்குபடுத்த கருத்துகள் தெரிவித்தது போல் உங்கள் சார்பில் இது குறித்த கருத்துகளை தமிழ்மணத்திற்கு தெரியபடுத்துங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//தோழர் மோகன் said...

மிக மட்டமான பதிவு கோவி கண்ணண்!!! என் கண்டனங்களை பதிவு செய்கிறேன் வருத்ததுடன்!!!//

கருத்து சுதந்திரம் ஏற்கிறேன் :) வேறென்ன செய்றது.

// இனி பதிவுலகளில் மோக்கைகளுக்கு மட்டுமே ஓட்டு போடனும், யாரும் சமூக பிரச்சனையை எழுத கூடாது, கண்டிப்பா ஏன்? எதுக்கு? னு மக்கள் சிந்திக்கவே விடக்கூடாது... விடமா சினிமா விமர்சனமும், வெட்டி மொக்கைகளும் தான் எழுதனும் இப்படி எழுதுரவங்களுக்கு தான் ஓட்டு போடனும் சரியா? கோவி கண்ணண்?//

நான் குறிப்பிட்ட மூவர் மொக்கை எதுவும் போடல எல்லாம் முழங்கைதான் :)

// நீங்க சொன்ன மூனு பேரோட பதிவால புதிய பதிவர்களோட பதிவு யாருக்கும் தெரியாம போகுதுனு உண்மையிலே வருத்தபட்டீங்கனா?//

வருத்தமா ? வாசகர் பரிந்துரை என்கிற தலைப்பே தவறு இவர் பெயர்களில் குறிப்பிட்டு இவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து, வாக்களிக்கும் நேர விரயத்தை தவிர்க்க/தடுக்க வேண்டும் என்பதே என் அவா.

//மாதவராஜ் மாதிரி உங்கள் வளைப்பூவிலே நீங்க படிச்ச நல்ல பதிவுகள அறிமுகம் படுத்துங்க, வினவு போல உங்கள் வாசகர்களிலே யாராவது நல்ல எழுதினா உங்கள் வளைதளத்திலே எழுத சொல்லுங்க, இல்லனா மின்னஞ்சல் மூலமா நீங்க ரசிச்ச பதிவ நண்பர்களோட பகிர்ந்துகோங்க... தமிழ்மணத்திற்கு மின்னஞ்சல் போட்டு புதிய பதிவர்களோட பதிவுகள தனியா வர மாதிறி ஏற்பாடு பண்ண சொல்லுங்க அத விட்டு விட்டு இப்படி வஞ்ச புகழ்ச்சியா ஒரு பதிவு தேவையா? சிந்திச்சு பாருங்க?
//
இதெல்லாம் அவங்க உத்தியா ? அப்ப மற்ற பதிவர்கள் சிந்தித்து செயல்படலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

// நியோ said...

அன்பு கோவி சார் ...//

அன்புக்கு மிக்க நன்றி !

// "தோழர் தமிழ் ஓவியா, தோழர் மாதவராஜ் , வினவு தோழர்கள்" ... நீங்கள் நினைத்திருந்தால் இன்னும் பலரை
சுட்டிக் காட்டியிருக்கலாம் ... //

நான் நினைத்து என்ன செய்ய, தலைப்பு நீளமாகப் போய்விடும், பதிவே தலைப்பான்னு கேட்பாங்க :)

//விமர்சிக்கப் படுவதற்கும் சில தகுதிகள்,புரிந்துணர்வுகள் தேவையென நீங்கள் கருதுவது குறித்து மகிழ்ச்சி...// இதுக்கு இப்படி வேற பொருள் இருக்கிறதா ?

// நான் கூற வருவது என்னவென்றால் ... தோழர் தமிழ் ஓவியா, தோழர் மாதவராஜ் , வினவு தோழர்கள் மூவரும் தங்கள் பதிவுகளுக்கு தாங்களே போலியாக வாக்களிக்கிறார்கள் என்ற பொருள் பட நீங்கள் குறிப்பிடுவது நானறிந்த வகையில் சரியல்ல என்பது தான் ...//

நான் அப்படிச் சொல்லவில்லை, நீங்கள் அறிந்தவரையில் அவர்கள் அப்படி அல்ல என்று தாங்கள் தான் சொல்கிறீர்கள்.

// அவர்களின் காத்திரமான பதிவுகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் அவர்களைப் போலவே நல்ல பதிவுகளை எழுதிவரும் உங்கள் நண்பர் கோவி கண்ணனுக்கு கிடைக்க வில்லையே என்ற தங்களின் உணர்வு புரிந்து கொள்ளக் கூடியதே!//

அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார். என்பதிவை பரிந்துரையில் வரவழைக்க எண்ணம் எதுவும் இல்லை. அவர்கள் மீது இருக்கும் அன்பு போலவே என்பதிவிலும் விபத்தாக பரிந்துரைக்கு யாராவது வரவ(வா)ழைவைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்

//மேலும் தோழர் தமிழ் ஓவியாவிற்கு வாக்களிப்பவர்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் நான் நன்றாகவே அறிவேன் ... பல முறை பேசியும் உள்ளேன் ...TA.DA உள்ளிட்ட அலவன்ஷ்களுக்கு நீங்கள் உத்திரவாதம் அளிக்கும் பட்சத்தில் தோழர் தமிழ் ஓவியா அவர்களுக்கு வாக்களிக்கும் தோழர்களுடனான சந்திப்பை உலகின் எந்த மூலையிலுள்ள நீங்கள் விருப்பப்படும் ஐந்து அல்லது அதற்கு அதிகமான நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்ய தயாராக இருக்கிறேன் ...//

ஒரு காலத்தில் டீ வாங்கிக் கொடுத்து போஸ்டர் ஒட்டச் சொன்ன கட்சிகளையும் தொண்டர்களையும் நான் அறிவேன், அவர்கள் TA.DA கேட்பது இல்லை, இப்போது பரிணாமம் பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி, இருந்தாலும் என்னால் அவ்வளவு செலவு செய்ய இயலாது. தங்கள் அன்புக்கு நன்றி

//பூனைகளுக்கு கட்டுவதை விட்டு விட்டு காவல் நாய்களுக்கு கட்டுவது ஏற்புடையதன்று தோழர்!

நாளை வருகிறேன் தோழர் !//

நீங்கள் கூறுவது புது உதாரணம், நாய்களுக்கு லைசன்ஸ் தான் போடுவாங்க மணி கட்டமாட்டாங்க, நீங்கள் கூறுவது பொருள் பிழை.

கோவி.கண்ணன் சொன்னது…

// ராம்ஜி_யாஹூ said...

நான் பண்ணுவதை கூறுகிறேன்.
மாதவராஜ், காமராஜ், அய்யனார், லேகா, ஜ்யோவ்ராம் சுந்தர், தமயந்தி, ஜாக்கி, சித்தார்த், சேக்கிழார் கல்பனா , சுரேஷ் கண்ணன், எட்டயபுரம் போன்ற பதிவர்களின் பெயரை பார்த்ததுமே நான் வாக்கு அளித்து விடுவேன் (படிக்கும் முன்பே) . தமிளிஷ், தமிழ்மணம், தமிழ் என எந்த திரட்டியாக இருந்தாலும்//

உங்களைப் போன்றோர் வாக்களிக்கும் சிரமம் அடையக்கூடாது என்பதற்குத்தான் தமிழ்மணம் வாசகர் பரிந்துரை என்கிற தலைப்பை மாற்றி அவர்களுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்

//நான் எல்லாம் ரஜினி, கமல், பாரதிராஜா என்று பிராண்ட் பார்த்து பழகிய மனிதன். பாரதிராஜா என்ற பெயரை பார்த்ததும் திரை அரங்கு ஓடிவிடும் மனப் பான்மை உள்ள ஆள்.//

இப்படி எல்லாம் ஒரு சிலராவது இருப்பதால் தான் தோல்விபடம் எடுத்தாலும் கூட அவர்களால் அடுத்து படம் எடுக்க வேண்டும் என்கிற ஆவல் ஏற்படுகிறது. உங்கள் பரந்தமனதை பாராட்டுகிறேன்.

// இதற்கு காரணம் அவர்களின் பழைய பதிவுகள் சிறப்பாக் இருந்தன எனவே இந்த பதிவும் , வரப் போகும் பதிவுகளும் சிறப்பாகவே இருக்கும் என்ற லாஜிக் இல்லாத நம்பிக்கை. நேற்று போலவே இன்றும் இருக்கும் என்ற மர்பியின் விதி//

இதுபோன்ற மனநிலையில் தான் ஹிட்லர் கூட சின்ன வயதில் கஷ்டப்பட்டார், நல்லவராகத்தான் இருந்தார் என்று சிலர் பாராட்டுகிறார்கள், உங்களுக்கும் அந்த மனநிலை இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//வருண் said...

கோவி!

ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு?! :)

பதிவுலகை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிறீங்க, போலயிருக்கு! ரிலாக்ஸ் ப்ளீஸ்! :)//

ஒவ்வொருவருக்கும் ஒரு மனநிலையில் உணர்ச்சிகள் வெளிப்படும், உங்களுக்கு டோண்டு இராகவன் :)

கோவி.கண்ணன் சொன்னது…

// வெண்பூ said...

இந்த‌ இடுகைக்கு க‌டும் ஆத‌ர‌வு தெரிவித்து அண்ண‌ன்க‌ளின் புக‌ழ் ப‌ர‌வ‌ நான் இதை ரீட‌ர், ப‌ஸ் எல்லா இட‌த்திலும் ஷேர் செய்கிறேன்.

இப்ப‌டிக்கு
உண்மைத் தொண்ட‌ன்
அண்ண‌ன்க‌ள் பேர‌வை//

நாம அவர்கள் பெயரில் பதிவர் மன்றம் துவங்குவோம் :)

'ழ'கரம் சொன்னது…

நீங்க குறிப்பிட்ட மூணு பேரில் நான் யாரையுமே படிக்கிறதில்லை.

வினவு - அந்த வலைப்பூ திறக்கறதுக்குள்ள தாவு தீந்துடும் , அதனால அங்க போறதில்ல.

தமிழ் ஓவியா - கறுப்பு பேக் கிரவுண்டில கட் அண்ட் பேஸ்ட் பண்ணறதாலயோ என்னமோ ஒரு ஆர்வம் வந்ததில்ல.

மாதவராஜ் - ரொம்ப பெரிய எழுத்தாளராமே , என் நண்பன் சொன்னான்...இருந்தாலும் என்னமோ தெரியல , படிக்க ஆரம்பிச்சாலே கண்ணு மேல போக மாட்டேங்குது.

இதனால சகல ஜனங்களுக்கும் சொல்லறது என்னண்ணா அவுங்க அவுங்களே ஓட்டு போட்டு பரிந்துரையில முன்னுக்கு வந்தாலும், சரக்கிருந்தா மட்டுமே கடை போணியாகும்.

முன்னாடி எல்லாம் தமிழ்மணம் நட்சத்திரம்னா ஆயிரம் ஹிட்ஸாவது வாங்கும்...! ஆனா இப்பவெல்லாம் அதுவும் கடந்து போகும் ங்கிற ரேஞ்சிற்கு யாரும் எதையும் சீண்டுறதில்லை.

அதுக்காக நமக்கு நாமே ஓட்டுப்போடும் திட்டத்துக்கு ஆதரவெல்லாம் இல்லே....என்ன மாதிரி அப்பப்ப ஒண்ணு ரெண்டு ஓட்டுப் போடுறதோட நிறுத்திக்கணும் மக்களே , இல்லாட்டி இப்படிதான் தலைப்புல பேர் போட்டு நார் நாரா கிழிப்பாய்ங்க.

சாக்கிரதை.

NO சொன்னது…

// வினவு வருவதற்கு முன்னர் சிலர் பதிவுலகில் அறிவு சீவிகளாக காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தனர். //
ஆதலால் நங்கள் வந்தபின் எழுதப்படுவதே மெய்யான எழுத்து. வாழ்க கம்யூனிச மதம்!

ஆங்கிலத்தில் Narcissism என்று சொல்லுவார்கள்! தமிழில், மிதிமிஞ்சிய தன்நேசம் அல்லது தன் பெருமைபாடல் அல்லது, மிதி மிஞ்சிய தன் நிலையே உயர்ந்தது
எனும் மன நிலை! என்ன தெனாவட்டு (இந்த வார்த்தை ஒரு நாகரீக வார்த்தை அல்ல என்பது தெரியும். வேறு வார்த்தை சட்டென்று மனதில் வராததால் இதை
உபயோக படுத்துகிறேன். மன்னிக்கவும்) இருந்தால் இவர்கள் இந்த மாதிரி பேசுவார்கள். அதுவும் இப்பாடி பேசி பேசி அழிந்து போன கும்பலுக்கு, உலகெங்கும் அடித்து துரத்தப்பட்ட கும்பலுக்கு இவ்வளவு தலை கனம் இருந்தால், மற்றவர்களுக்கு எவ்வளவு இருக்க வேண்டும்??

//எங்களது சொந்த எழுத்து, சமூகப்பிரச்சினைகளை எங்களது கோணத்தில் பார்ப்பது என்ற முறையில் எழுதிக் கொண்டிருந்தோம். //
ஆமாம் மத்தவனெல்லாம் கடன் வாங்கி எழுதறாங்க!! மேலும் உங்க எழுத்து சொந்த எழுத்தா?? மாவோவிற்கும் ஸ்டாலினுக்கும் தமிழ் தெரியாது என்று எல்லோருக்கும் தெரியும்! நீங்கள் மாவோவிசத்திர்க்கு (ஆமாம் விசத்திற்கு) தமிழக சமூக பிரச்சனை முலாம் அடித்து கடை பரப்புவதால், அது சொந்த எழுத்து என்று சொல்ல முடியாது!! அந்நிய அடிமைகளுக்கு ஏது சொந்த கருத்து??

//பிறகுதான் புரிந்தது அதனால் சிலர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று//
ஆமாம் சிலர் பாதிக்கப்படுவார்கள்!. வினவு என்ற ஏழரை என்ற புரட்சி என்று %%%, ***, *^(*&(*, )(&))*-, போன்ற பல பெயர்களைக்கொண்ட சிலர் நீங்கள் எழுதாமல் இருந்தால் பாதிக்கபடுவார்கள்! அன்றைய பொழுதை எப்படி கழிப்பதென்று! நம்ம ஆளுங் சிலருக்கு சினிமா இல்லையென்றால் வேலை ஓடாது, ஸ்டாலின் துதிபாடிகளுக்கு நீங்க இலைன்ன வேலை ஓடாது! என்ன ரெண்டுமே படும் காட்டுவது!!!

//இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் கோவி கண்ணன்?//
சொன்னா கேட்கவா போறீங்க! அடிவருடி, கடிவருடி, என்று ஏசுவீர்கள்! நம்ம தொழிலே அதுதானே.

//வினவு மாதிரியே எழுதலாமே//
Imitation is the best form of flattery என்று சொல்லுவார்கள்! அதாவது ஒருவரின் தன்மைகளை காப்பி அடிப்பதே அந்த தன்மை உள்ள மனிதருக்கு சேர்க்கும் புகழ்
என்பதாகும்! எனக்கு தெரிந்து நடிகர் திலகம் சிவாஜி விடயத்தில் இது மெய்யாகும்!
வினவு விடயத்தில் - Imitating you guys is the worst form of mockery! அதாவது வினவைப்போல எழுதவும் என்பதின் அர்த்தம், "தரந்தாழ்ந்து, மெய் மறந்து, விடம் தாங்கி வாய்க்கொள்ளா வன்முறையை வசவுகளை வெறியுடன் வெளியிடு " என்பதாகும்!! இதை யாரையாவது செய்ய சொல்லுவது, கண்ணா, நீ திருடன் போல வரணும், பிக் பாக்கெட்டு போல உருப்படனும், ரவுடி போல இருக்கணும் என்று ஒரு குழந்தையை வாழ்த்துவது போல இருக்கும்!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்