பின்பற்றுபவர்கள்

19 ஜூலை, 2010

கோமணமின்றி புழங்குதல் பற்றி பயமோகன் !

“கோமணம் பற்றிஅக்கறையே இல்லாமல் வாழக்கூடிய வாழ்க்கை என்பது நல்லதுதான். அது ஓர் இலட்சிய வாழ்க்கையும்கூட. சன்யாசிகளைத் தவிர்த்து அது எந்த அளவுக்கு நடைமுறைச் சாத்தியம் என்றுதான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். ‘நான் யாருடைய கோமணத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள முயல்வதே இல்லை’ என்று அப்பாவித்தனமாக அல்லது சுய ஏமாற்றாகச் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அது நம்முடைய ஊரில் சாத்தியமே அல்ல.

அப்பட்டமாக்ச் சொல்கிறேனே, குறைந்தபட்சம் நம் சூழலில் ஒருவர் கோமணமின்றி இருக்கிறாரா என்று தெரிந்துகொள்ளாமல் பழகுவது என்பது சாத்தியமேயல்ல. சாத்தியமல்ல என்பதுடன் அது அபாயமும்கூட. கோமணமின்றி இருப்பவர்கள் தாம் கோமணம் இன்றி இருக்கிறோம் என்ற சுய உணர்ச்சி இல்லாதவர்கள் அனேகமாக இல்லை. அந்த சுய உணர்ச்சி நம் மரபின் சென்றகால இழிமுறைகளில் இருந்து அவர்களிடம் ஏற்றப்பட்ட ஆழமான தாழ்வுணர்ச்சியால் ஆனது. இன்றைய பொதுச்சூழலில் சாதாரணமாகச் சொல்லப்படும் சொற்கள்கூட அவர்களின் (கோ) மன உணர்ச்சிகளை தீவிரமாகப் புண்படுத்திவிடும். ஒருவர் கோமணம் அல்லது ஜட்டி அணிந்திருக்கிறாரா என்று தெரியாமல் நட்பின் அடிப்படையில் அவரது கிழிந்த பாக்கெட்டுகளில் கைவிட்டுப் பார்ப்பது, அப்படி அவர்களைப் புண்படுத்துவதென்பது அநீதியானது, நட்புகளை உடைக்கக்கூடியது, பொது அமைப்புகளில் பல சங்கடமான நிலைமைகளை உருவாக்கக்கூடியது. ஆகவே நம்சூழலில் அத்தனை பேரும் இந்தக் கவனத்துடன் தான் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

என்னுடைய அனுபவம் ஒன்று. பலவருடங்களுக்கு முன் எனக்கு நெருக்கமான இலக்கிய நண்பர் ஒருவர் இருந்தார். மாற்றுத் துணி கூட இல்லாதவர் அவர் எங்கே கோமணம் அணிந்திருக்கப் போகிறார் என்பது என்னுடைய பிரக்ஞையில் இருந்தது இல்லை. திடீரென என்னிடமிருந்து முற்றாக விலகிச் செல்ல ஆரம்பித்தார். நட்பை நீட்டிக்க நான் பலவேறு வழிகளில் முயன்றேன். அவரது மனக்குறை என்ன என்று விசாரித்தேன். நான் செய்த தவறு என்ன என்று அறிய முயன்றேன்.பலனில்லை. ஆழமான மனச்சோர்வுடன் நானும் விலகிக்கொண்டேன். தீவிர இலக்கியமறிந்த இரண்டே நண்பர்களில் ஒருவரை இழப்பது அந்தவயதில் பெரிய சோகம்.

நான் அந்த ஊரில் இருந்து மாற்றலாக வந்து சிலவருடங்களுக்கு முன் பழைய சங்கத்தோழர் ஒருவர் பேசும்போது நான் அந்த இலக்கிய நண்பரின் மனச்சிக்கலுக்குக் காரணத்தைச் சொன்னார். நான் அவரை வைத்துக்கொண்டே வேறு ஒருவரிடம் அவரது கோமணம் கூட இல்லாதவர் என்றுச் சொல்லி இழிவாகப்பேசினேன் என்றும் அது அவரது மனதை புண்படுத்திவிட்டது என்றும் அநத இலக்கிய நண்பர் தோழரிடம் ஒரு கோவணத்திற்கான துணியை கிழித்துக் கொண்டு பேசிக்கொண்டிருக்கும்போது சொல்லியிருக்கிறார்

நான் அந்த கடைசி உரையாடலை சொல்சொல்லாக நினைவுகூர்ந்தேன். ஏனென்றால் அத்தனைநாளும் அதை அத்தனை முறை மனதில் ஓட்டிக்கொண்டிருருந்தேன். என்ன பிழை நிகழ்ந்தது என்று துருவித்துருவி ஆராய்ந்துகொண்டிருந்தேன். நடந்தது இதுதான். நான் அன்றிரவு அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது என் அப்பாவின் குணநலன்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்பா நிலப்பிரபுத்துவகால முரட்டுத்தனமும் நிலப்பிரபுத்துவகால அறமும் ஒருங்கே அமைந்த ஆத்மா. ஒருவன் வீட்டுக்குள் புகுந்து திருடிவிட்டான். அவனை கையும் களவுமாக பிடித்து தென்னையில் கட்டி வைத்திருந்தார்கள். ‘இவன் கோவணத்தை அறுங்கடா’ என்று அப்பா சொன்னதாக நான் சொன்னேன். அவன் ‘பசிக்காக’ என்றதும் சோறுபோட்டு துரத்திவிட ஆணையிட்டார்.

நண்பரை புண்படுத்திய சொல் என்ன என்று சட்டென்று கண்டுகொண்டேன். அப்பா சொன்னதை நான் அப்படியே அவரது உச்சரிப்பு மற்றும் முகபாவனையுடன் சொன்னேன். கோவணமே கட்டாதவரை அறுங்கடா என்று சொன்னால் வேறு எதையோ அறுக்கச் சொல்கிறார் என்பதாக புரிந்து கொண்டு, அதுவரை அவரது எட்டாம் தலைமுறை வரை கோவணமே கட்டாதவர்கள் என்பதால் அவருக்கு அந்தக் கடுங்கோபம் வந்திருக்கக் கூடும்.

நான் சொன்னவற்றை விளக்கியதும் தோழர் ‘அடாடா,நான் அவனிடம் சொல்கிறேன்’ என்றார். அதன்பின் சிலநாட்கள் கழித்து அந்த இலக்கியநண்பர் என்னைக்கூப்பிட்டு மன்னிப்பு கோரினார். மீண்டும் உற்சாகமாக பேச முயன்றார். சில நாட்கள் பேசினோம். ஆனால் நட்புகளைப்பொறுத்தவரை ஒன்றுண்டு, ஒரு நட்பு உடைந்து கொஞ்ச காலம் ஆனால் இரு சாராருமே வாழ்க்கை போக்கில் வெகுதூரம் விலகிச் சென்றிருப்போம். மீண்டும் விரும்பினாலும் கூட எனக்காக அவர் கோவணம் கட்ட முடியாது”.
--------------------------------------------------------------------------------------------

“ஆச்சரியம் என்னவென்றால் தமிழ்நாட்டில் தற்போது பூம்புகார் ஜட்டிக்கும், கோடு போட்ட அண்டர்வேருக்கு மாறினாலும் அன்று கோவணம் கட்டாதவர்களே இல்லை என்பதுதான். ஒரு சிலர் கோவணமே இல்லை என உணர்வதற்கு ஒரு வரலாற்றுப்பின்புலம் உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த இலக்கிய-சமூக-பொருளியல் ஆதிக்கத்தை கையில் வைத்திருப்பவர்கள் பிறரிடம் 'மடியில் கணமில்லை' என்பார்கள், இதைக் வேறுமாதிரியாக புரிந்து கொண்ட சமூகம் ஒருசிலரை கோவணம் கட்டாதவர்கள் என்று அவமதிக்கிறது

பிராமணர்கள் கிட்டத்தட்ட அதே அளவுக்கே புண்பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பது இன்னொரு ஆச்சரியம். மொத்த தமிழகமும் தங்களின் பஞ்சகச்சத்தை கோவணமாக ஏற்கத்தயங்குவதாக அவர்கள் நினைக்கிறார்கள். தாங்கள் அனைத்து ஊடகங்களிலும் வரலாறுகளிலும் பஞ்சகச்சம் குறித்து அவமதிக்கப்படுவதாகவும் அதை தமிழகமே வேடிக்கைபார்ப்பதாகவும் சொல்கிறார்கள். கோமணம் கட்டாதவர்களை வாட்டும் சிறு சொல்கூட பிராமணர்களையும் ஆழமாக புண்படுத்திவிடும்.

என் அனுபவத்தில் நான் இந்த புண்படுத்தல் சிக்கலுக்கு உள்ளானவர்களில் அனேகமாக பெரும்பான்மையினர் பிராமணர்களே. நம்ப மாட்டீர்கள் திருக்குறளில் 'உடுக்கை இழந்தவன் கைபோல' என்ற குறள் குறித்துசொன்ன ஒரு கருத்துக்காக என் நட்பையே முறித்துக் கொண்ட நெடுநாள் நண்பர் ஒருவர் உண்டு. எங்கோ மனம் பறக்கிறது என்பதை கோவணமே பறப்பதாக தவறாக புரிந்து கொண்டோர்களும் உண்டு,
--------------------------------------------------------------------------------------------

“ஒருமுறை ஒரு நண்பர்வட்டத்தில் பேசும்போது நான் சொன்னேன் ”தமிழ்நாட்டில் கோவணம் கட்டாத ஒரே சாதிதான் இருக்கிறது போல் தோன்றுகிறது — சாயர் சாதி !” சாயாக்கடை வைத்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.

ஆகவே கோவணம் கட்டாமல் இருப்பது என்பது துணி கிடைக்கிறதா இல்லையா, அல்லது விருப்பமா என்பது பற்றி மட்டுமே, எல்லாருக்கும் அது சாத்தியமில்லை. காரணம் இப்போது எல்லோரும் ஜட்டிக்கும் மாறிவிட்டார்கள், ஆனால் தமிழகத்து மனச்சிக்கல் என்னவென்றால் கோவணம் சார்ந்த இத்தனை உளச்சிக்கல் இருந்தாலும் பொதுவெளியில் கோவணம் என்பது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது அல்லது எல்லோருமே ஜட்டிக்கு மாறிவிட்டார்கள் என்ற பாவனையை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதுதான். ஆகவே கோவணம் கட்டுவது குறித்து பேசுவது பெரும்பாலானவர்களுக்கு பிடிப்பதில்லை. அது ஒரு பெரும்பான்மை நடைமுறை என்பதனால் ஜட்டியைக் கூட கோவணம் என்றே சொல்லி அதைத்தான் கடைப்பிடித்தாகவேண்டும்.

ஆனால் உள்ளாடை எது அணியப்பட வேண்டும் என்பது குறித்த அடையாளத்தை தொடர்ந்து அந்தரங்கமாகவேனும் பரிசீலனைசெய்துகொண்டிருப்போம், பரிகாசம் செய்துகொண்டிருப்போம். நெருக்கமான நண்பர்களிடமாவது அந்த பாவனைகளையும் இடக்கரடக்கல்களையும் கைவிட்டு பழக முடியுமா என்று முயல்வோம். நான் சொல்வது அவ்வளவே”.

*****

தமிழ் சமூகத்தில் பெயருக்குப் பின்பான சாதிய அடைமொழிகளை நீக்கிக் கொண்டாலும், சாதி ஒழிப்புக்கு எதிரான கருத்துகள் அவ்வபோது ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன, அதனை பிற்போட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவான ஊதுகுழல் போன்ற பாவனையுடன் பலர் ஒலித்துவருகின்றனர். பொதுவெளியில் சாதியின் பயன் உறமுறைத் திருமணம் என்பதன் நீட்சியாகத் தொடர்கிறது என்பது தவிர்த்து வேறெதுவும் இல்லாத சூழலில் சாதிய ஆதரவுக்குரல்கள் நசுக்கப்பட வேண்டும் என்பதை நான் பதியவைக்கிறேன்.

24 கருத்துகள்:

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது

chinnasamy சொன்னது…

பய மோகன் கோமணம் கட்டுவாரா?

Karthick Chidambaram சொன்னது…

சாதி ஒழிப்பில் இன்னும் முழுமையான வெற்றி கிட்டவில்லை. இன்னும் தமிழர்களுக்குள் சாதி இருக்கு.
அது ஒழிந்தாக வேண்டும்.

பிற மாநிலங்களை பார்க்கும் போது நாம் நல்ல நிலையில் உள்ளோம் என்று நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது//

உள்ளடக்கமும் அப்படித்தான் இருக்கும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// chinnasamy said...

பய மோகன் கோமணம் கட்டுவாரா?//

தெரியல, அவரது வாசகர்களில் தீவிரவாசகர்களுக்கு தெரியவரலாம். தெரிந்து கொள்ள ஆர்வமும் இல்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//Karthick Chidambaram said...

சாதி ஒழிப்பில் இன்னும் முழுமையான வெற்றி கிட்டவில்லை. இன்னும் தமிழர்களுக்குள் சாதி இருக்கு.
அது ஒழிந்தாக வேண்டும்.

பிற மாநிலங்களை பார்க்கும் போது நாம் நல்ல நிலையில் உள்ளோம் என்று நினைக்கிறேன்.//

தமிழ் நாட்டில் சாதிப்பற்று 'உனக்கு நான் மட்டமில்லை' என்பதாக முன்னெடுக்கப்பட்டு வருவதால் சாதிகள் முன்னைக் காட்டிலும் முனைப்பாக இருப்பதாக தெரிகிறது.

பிரியமுடன் பிரபு சொன்னது…

ETHIR VINAIYAA??

ENAKKU PURIYALA

கோவி.கண்ணன் சொன்னது…

// பிரியமுடன் பிரபு said...

ETHIR VINAIYAA??

ENAKKU PURIYALA//

செயமோகன் அல்லது டோண்டுவின் இடுகைகளைப் படித்தால் புரியலாம்

நியோ சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நியோ சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ராஜன் சொன்னது…

ஹா ஹா ஹா! தும் ததா! படிச்சுட்டு வர்ரேன்!

ராஜன் சொன்னது…

அங்கு என் கருத்துகள் வெளிவராது என்பதால் இங்கு!

//அப்பட்டமாக்ச் சொல்கிறேனே, குறைந்தபட்சம் நம் சூழலில் ஒருவர் தலித்தா என்று தெரிந்துகொள்ளாமல் பழகுவது என்பது சாத்தியமேயல்ல. //

குரூரமான வார்த்தைகள்... இங்கு யாருக்கு சாத்தியமல்ல என தெரிய முற்பட வேண்டும்.

பார்ப்பனத்தனத்தை சப்பிஅ கட்டு கட்டி முழு எதிர்ப்பையும் மலிந்து போக செய்வதற்கு புதிய வழிகள் நாள்தொறும் வெளிவருகின்றன போலும்

ராஜன் சொன்னது…

//சென்றகால இழிமுறைகளில் இருந்து அவர்களிடம் ஏற்றப்பட்ட ஆழமான தாழ்வுணர்ச்சியால் ஆனது.//

சென்ற கால இழிமுறைகள் யாராலானது?

ராஜன் சொன்னது…

//இன்றைய பொதுச்சூழலில் சாதாரணமாகச் சொல்லப்படும் சொற்கள்கூட அவர்களின் உணர்ச்சிகளை தீவிரமாகப் புண்படுத்திவிடும்.//


பொது சூழலில் சாதாரணமாக....

செருப்பாலடிக்க வேண்டுமடா உன்னை!

ராஜன் சொன்னது…

//பிராமணர்கள் கிட்டத்தட்ட தலித்துக்கள் அளவுக்கே புண்பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பது இன்னொரு ஆச்சரியம்.//


ஆச்சரியமே தான்!

ராஜன் சொன்னது…

//அதற்காக ஒரு பிராமண வெறுப்பை உருவாக்கி வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.//


அவனுக செய்யறது இருக்கட்டும்; பிராமணர்கள் அப்பழுக்கற்றவர்கள் அப்படித்தானே!

ராஜன் சொன்னது…

//மொத்த தமிழகமும் தங்களை வெறுப்பதாகவும் வேட்டையாடுவதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள்.//


ஹா ஹா ஹா ஹா !


அய்யோ காப்பாத்துங்க; கொல பண்றாங்க... கொல பண்றாங்க...

ராஜன் சொன்னது…

//தலித்துக்களைப்போலவே சிறு சொல்கூட பிராமணர்களை ஆழமாக புண்படுத்திவிடும்.//

ஓஹ்! மயிர் நீப்பின்......


அடடா அச்சாடா!

ராஜன் சொன்னது…

//தாங்கள் அனைத்து ஊடகங்களிலும் வரலாறுகளிலும் அவமதிக்கப்படுவதாகவும் அதை தமிழகமே வேடிக்கைபார்ப்பதாகவும் சொல்கிறார்கள். //

மெயினா ஜெயா டீவில ! மொட்டதலயன மொதல்ல மூடிட்டு இருக்க சொன்னீங்கனா கொஞ்சம் டேமேஜ் கம்மியா இருக்கும்!

ராஜன் சொன்னது…

//‘மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட’ கண்ணகியை மணந்தான்?” என்று சொன்னதைக் கேட்டு பார்ப்பான்//

கரெக்ட் பண்ணிதான்

ராஜன் சொன்னது…

//என் அனுபவத்தில் நான் இந்த புண்படுத்தல் சிக்கலுக்கு உள்ளானவர்களில் அனேகமாக பெரும்பான்மையினர் பிராமணர்களே. //


பட்டை குரூப்பா,நாம குரூப்பா!

நியோ சொன்னது…

தோழர் கோவி கண்ணன்,
இந்த பதிவின் இறுதி வரிகள் சார்ந்து சரியான புரிதலின்றி எனது தளத்தில் நானிட்ட இடுகையை சற்றுமுன் நீக்கி விட்டேன்.வருத்தம் தெரிவித்து தளத்தில் எழுதியும் உள்ளேன்.ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.
அன்புடன்,
நியோ.

கோவி.கண்ணன் சொன்னது…

// நியோ said...

தோழர் கோவி கண்ணன்,
இந்த பதிவின் இறுதி வரிகள் சார்ந்து சரியான புரிதலின்றி எனது தளத்தில் நானிட்ட இடுகையை சற்றுமுன் நீக்கி விட்டேன்.வருத்தம் தெரிவித்து தளத்தில் எழுதியும் உள்ளேன்.ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.
அன்புடன்,
நியோ.//

நீக்கி இருக்கத் தேவை இல்லை திரு நியோ, நீங்கள் அடிக்கடி எழுதுவதில்லை, அப்படியான சூழலில் அந்தப் பதிவு அப்படியே இருந்திருக்கலாம் என்பது என்கருத்து.

உங்கள் எதிர்வினையால் எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை.

நியோ சொன்னது…

நன்றி தோழரே, சுடு சொற்கள் சொல்லாமைக்கு! பதிவை நீக்கியது சரியான முடிவு தானென நினைக்கிறேன். நீக்கியிருக்க வேண்டாமென சொல்வது உங்கள் பெருந்தன்மை சார்ந்த விஷயம்! அவ்வப்போது எழுத முயல்கிறேன். மீண்டும் நன்றிகள் தோழர்!
அன்புடன்,
நியோ.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்