ஞாயமாக இந்த தலைப்பில் கிழக்கு வெளியிடுகள் தான் சூட்டோடு சூடாக 100 ரூபாய் புத்தகம் வெளி இட்டிருக்கனும். அச்சில் இருக்கிறதோ அல்லது பா.ரா பிசியோ என்னவோ :)
90களின் இறுதியில் நித்தியின் புகைப்படங்கள் கட்டுரைகள் குமுதம் போன்ற நாளிதழ்களில் வெளியான காலகட்டங்களில், 'இவன் என் பிரண்ட் அரவிந்த் க்ளாஸ்மெட்' என்று ஒரு வாரப்பத்திரிக்கையில் அவன் படத்தைப் பார்த்த என் தம்பி எனக்கு சொன்னான். என் தம்பியின் நண்பன் டிப்ளமோ படித்தவர். நித்தியும் டிப்ளமா தான். அப்போதெல்லாம் நித்தியின் புகைப்படங்கள் விவேகநந்தர் பாணியில் காவி உடையில் தலையில் முண்டாசுடன் 21 ஆம் நூற்றாண்டு புதிய விவேகநந்தர் போன்ற போஸுடன் காணப்படும். பெயரும் விவேகநந்தர் மற்றும் இராமகிருஷ்ண மடங்களின் சந்நியாசிகளுக்கு கொடுப்பது போலவே 'ஆனந்தா' வில் முடியும் பெயருடன் இருந்தார். நித்தியின் ஆசிரமத்தின் பொறுப்பில் இருப்பவர்களுக்கு எல்லாம் ஆனந்தாவில் முடியும் பெயர்கள் தான் சூட்டப்பட்டு இருப்பதாக தற்போதைய செய்திகள் வாயிலாக அறிகிறேன்.
விவேகநந்தர் வேடத்திற்கு பிறகு நித்தி புத்தர் போஸ்கள் கொடுக்கத் தொடங்கினார். புத்தரைப் போன்ற வெள்ளை உடை, ஆலமரம் அடியில் தியானம் செய்வது போன்ற போஸ். இந்தகாலகட்டத்தில் நித்தி தன்னை கார்ப்ரேட் அந்தஸ்திற்கு உயர்த்திக் கொண்டிருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு, பணக்காரர்களின் பொருள் உதவி என வேகமாக வளர்ந்திருக்கிறார். சாய்பாபாவைப் போன்ற அவதாரம் தேவைப்பட முண்டாசைக் கழட்டிவிட்டு பம்பல் முடி வளர்க்க முயற்சித்த் அவரது முடியால் முடியாமல் போக அது குறும் கூந்தல் வளர்க்கத் தொடங்கி இருக்க வேண்டும். பொதுவாக கார்ப்ரேட் சாமியார்கள் அனைவருமே கடவுள் படத்தை தூக்கிப் போட்டுவிட்டு நான் தான் சிவன் அவதாரம் என்பார்கள். சாய்பாபா விஷ்ணு அவதாரமாம், போட்டி வேண்டாமே என்று நினைத்த நித்தி சிவன் அவதாரம் ஆகிவிட்டார். சிவலிங்கத்திற்கு முண்டாசு கட்டிவிட்டு பூசைக்காக பெயரளவில் வைத்துவிட்டு, இவர் படத்தையே இவரது அடியார்கள் வணங்கும் படி வைத்தார். சாய்பாபா செய்துவருவதும் அப்படியே. சாய்பாபா சமீதிகளில் அவரது படமும், ஒரு நாற்காலியும் இருக்கும், இதன் பொருள் சாய்பாபா அங்கே அமர்ந்திருப்பதாக உணரனுமாம், சிலருக்கு அப்படியே தோன்றுமாம் (மன பிராந்தி, விஸ்கி என்று இதைத்தான் சொல்லுவார்கள்), அதே பாணியில் நித்தியும் நித்தியின் படங்களை முன்னிறுத்தி சீடர்களையும், நம்பிக்கையாளர்களையும் வணங்கச் செய்தார். படத்தை வணங்கச் சொல்லுவது பங்காரு அடிகளாரும் என்றாலும் சாய்பாபா தான் நித்திக்கு முன்னோடி.
கார்ப்ரேட்டுகளாக வளர்ந்த பிறகு உலக அளவில் பரவவேண்டுமென்றால் 'அடியார்கள் அருள் பெற்ற' கதைகள் எழுதவேண்டும். படத்திலிருந்து விபூதி கொட்டியது, 'மெடிக்கல் மிராக்கல்' என்று மருத்துவர்களே வியப்படையும் படி நோயாளிகள் குணமடைந்தார்கள் போன்ற பல கதைகள் உலவ விடப்படவேண்டும். இந்த வேலையை சாரு போன்ற பிரபல எழுத்தாளர்கள் எழுதி நித்திக்கு பெரும் புகழ் சேர்த்தனர். கார்ப்ரேட் சாமியார்களின் பக்தர்கள் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டால் பிறகு வெளி நாடுகளில் மடம் திறக்க அது பெரியவழியாக அமையும். அவர்களின் முன்னேற்பாடுகளில் கிளை கிளையாக தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளில் நித்தியும் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். 1000 என்ற எண்ணிக்கையில் ஆசிரமங்கள், யோக நிலையங்கள், தனிப்பட்ட கோவில்கள் என நித்திக்கு உலக அளவில் செல்வாக்கு உயர்ந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் நித்தி வளர்ந்த அசுர வளர்ச்சி 32 வயதிற்குள் 1000 கணக்கில் யோகா நிலையங்கள், 1000 ஏக்கர் கணக்கில் ஆஸ்ரம நிர்வகத்திற்கு பல்வேறு நாடுகளில் சொத்துகள், மில்லியனில் பணம் இவையெல்லாம் நித்தியின் தனிப்பட்ட சாதனைதான், இந்த வயதில் இவ்வளவு வளர்ந்தவர்கள் தொழில் துறையிலும் பன்னாட்டு நிறுவனம் என்ற அளவில் கூட குறைவே.
சாய்பாபா போன்றே பெரிய பெரிய ஆசனங்களில் அமர்ந்து பேசினார். தன்னை சிவனவதாரம், ஜீவன் முக்தி அடைந்தவன் (வாழ்வில் முக்தி அல்லது வாழும் போதே மோட்சம் பெற்றவன் என்று பொருள், அதனால் தான் அவர் பெயர் நித்திய ஆனந்தா)
நித்தி போன்றவர்கள் போதிப்பதே உண்மையான ஆன்மிகம் என்று ஆன்மிக நாட்டம் உடையவர் நம்பிவிட்டால், மகுடிக்கு மயங்கிய பாம்பு போல மயக்கம் அடைந்துவிடுவார்கள், அதன் பிறகு சரணாகதி அடைந்தவர்களாக அந்த அப்பாவிகள் 'ஜீவன் முக்தி' கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பெற்றோர்களைத் துறந்து, இல் வாழ்க்கையை துறந்து நித்தி போன்றவர்களின் ஆஸ்ரமங்களில் சேவைக்கு சரணாகதி அடைந்துவிடுவார்கள், நித்தி போன்றவர்கள் போலி என்று அடையாளம் காணும் போது ஆசிரமத்தில் சரண் அடைந்த ஆண்கள் பரவாயில்லை, இவன் ஒரு ஏமாற்றுப்பேர்வழி என்று அதனை விட்டு 'மனப்'பூர்வமாக விடுதலை அடைய முடியும். பெண்களாக இருந்துவிட்டால் அவர்கள் எதிர்காலமே கேள்விக்குறி, 'இவளும் அங்கே படுக்கையை பகிர்ந்திருப்பாளோ' என்று உறவினர்களாலேயே கேவலமாகப் பேசப்பட்டு அந்த பெண் வாழ்நாள் முழுவதும் ஒடுங்கியே இருக்க வேண்டியதான். நித்தியின் ஆசிரமத்தில் சரணடைந்த பெண்களின் எண்ணிக்கை 600க்கும் மேலாம், இதில் இந்தியாவில் தான் உண்மையான ஆன்மிகம் என்று விரும்பி வந்த வெளிநாட்டினர்களும் உண்டு. நித்தியின் கார்பரேட் கட்டுமானத்தில் வெற்றிகரமாக ஆசிரமம் நடத்தியவர்களின் அனைத்து அம்சங்களும் உண்டு.
ஆன்மிகத்தில் மாயை என்று சொல்லுவார்கள், கண்ணில் தெரியும் காட்சி உண்மை அல்ல என்பது இதன் பொருளாம். அபிரதமான வளர்ச்சி அடைவது அது பணமாக இருந்தாலும் புகழாக இருந்தாலும் அது மாயைதான். ஏனெனின்றால் அது இயல்பான வளர்ச்சியே அன்று. குதிரை பந்தயம், பெரும் திருட்டு, ஏமாற்றுதல் இதன்வழியாக பெரிய பணம் கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டால், அது விட்டுப் போக வெகு குறைவான நாட்களே எடுத்துக் கொள்ளும், நித்தியின் கட்டுபாடற்ற வளர்ச்சியும் கூட அப்படித்தான், சீட்டுகட்டு மாளிகைப் போல் ஒரே நாளில் தரைமட்டமானது.
நித்தி விவேகநந்தாராக, புத்தராக, சிவ அவதாரமாகி கடைசியில் மன்மதன் அவதாரம் எடுத்த போது வீழ்ந்துவிட்டார். :)
மக்களும் எந்த அவதாரத்தையும் போற்றி வணங்குகிறார்கள், லட்சக் கணக்கில் கட்டணம் செலுத்தி பாத பூசைகூட செய்கிறார்கள் மன்மத அவதாரம் என்றால் பொங்கிவிடுகிறார்கள். :)
கடவுள்களுக்கு ஏற்கபட்டும் மன்மத அவதாரம், சாமியார்களும் எடுக்கும் போது ஏற்றுக் கொள்ளாதது மக்களின் ஓரவஞ்சனை. ஆக மக்கள் மனதில் எந்த ஒரு சாமியாரையும் கடவுள் அல்ல அவன் மனிதன் தான் என்று புரிந்து கொள்ள சூழல் தான் தேவைப்படுகிறது. மற்றபடி மக்கள் முட்டாள்களே அல்ல.

10 கருத்துகள்:
அட நாந்தான் முதலில் !!!கட்டுரை பற்றி எனக்கு எந்த கருத்துமில்லை
:)
கடைசி படத்தை நன்றாக கவனியுங்கள்.,
நித்தியின் உடலில் தோன்றும் அந்த ஆன்மீக ஜுவாலையைப் பாருங்கள்...
மாயை மாறும், புது யுகம் தோன்றும்.,
புது சாமியார் வருவாரூ....
மக்கள் நிம்மதி அடைவார்கள்.,
ஆழ்ந்த புரிந்துணர்வு இல்லாதவர்களால் இது போன்ற படைப்புகளை இத்தனை தெளிவாக படைக்க இயலாது. வாழ்த்துகள்.
அடுத்தது யாரு அவர் இடத்தை பிடிப்பார்.
ஆவலாக உள்ளது.
Nalla katturai...!
// நித்தி விவேகநந்தாராக, புத்தராக, சிவ அவதாரமாகி கடைசியில் மன்மதன் அவதாரம் எடுத்த போது வீழ்ந்துவிட்டார். :)//
Good one :)
சின்னவயசுச் சாமியார் வேணாம்ப்பா.
கொஞ்சம் முதியவர்களா இருந்தால் குறைஞ்சபட்சம் மன்மதன் ரோல் பண்ண மாட்டாங்க.
அதிலும் பெண் சாமியாரிணிகள் என்றால் கொஞ்சம் பரவாயில்லைதானே?
ஐடியா வந்திருக்கு. இந்தக் கல்ட் ஒர்க் அவுட் ஆனாலும் ஆகலாம்:-)
நித்தியின் தவறு!
தன்னாலே கூட அனுஸ்டிக்க முடியாத, பிரமச்சரியத்தைப் போதித்தது, இதை விட்டு இல்லறத்தில் பேரின்பம் , பெண்சுகத்தில்
நித்தியானந்தம் என கூறியிருந்தால் சிக்கல் வந்திராது.
இன்று அவர் தளத்தில் தோன்றி தன்மேல் பழி சுமத்தியுள்ளதாக நம்பவேண்டாம், ஆதரவாக நிற்கும்
அனைவருக்கும் நன்றி என்றார்.
முகத்தில் கவலை ரேகை பளிச்சிடுகிறது,செயற்கையாகச் சிரிக்கிறார்.
இவன் போனால் இன்னொருவன் வருவான்
http://vanakkamnanbaa.blogspot.com
Chitra has left a new comment on your post "நித்தியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் !":
ஆக மக்கள் மனதில் எந்த ஒரு சாமியாரையும் கடவுள் அல்ல அவன் மனிதன் தான் என்று புரிந்து கொள்ள சூழல் தான் தேவைப்படுகிறது. மற்றபடி மக்கள் முட்டாள்களே அல்ல.
............. :-)
கரெக்ட். ஆனால், மக்கள் அதை ஏற்று கொள்ளும் விதம்தான் வித்தியாசமாக உள்ளது.
கருத்துரையிடுக