பின்பற்றுபவர்கள்

5 அக்டோபர், 2009

பாலியல் தொழில் மற்றும் பக்க சார்பு சட்டங்கள் !

நடிகை புவனேஸ்வரி பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொழில் என்பது அத்தொழிலில் ஈடுபடும் பெண் தன் உடலை வாடகைக்குத் தருகிறாள் என்பது போலவே அதை விரும்பும் ஒரு ஆண் வாடகைக்கு அவ்வுடலை வாங்குகிறான் என்கிற உடல்சார்ந்த வணிகமே பாலியல் தொழில் ஆகும். உடல் இச்சை என்கிற ஆண் விருப்பம் அதைக் கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு, வடிகால் கிடைக்கும் வாய்பு தேடுபவர்களுக்கு, அல்லது பல உடல்களை விரும்பும் ஆண்களின் சபலங்களே பாலியல் தொழிலின் சந்தைத் தேவையாகும் (டிமாண்ட்) , அந்த சந்தையில் வைக்கப்படும் பெண் உடல் சதையே விற்பனைப் பொருளாகும். பாலியல் இச்சையைக் கட்டுப்படுத்த முடியாதவர்களையும், வடிகால் வாய்ப்பு தேடுபவர்களையும் கணக்கில் கொள்ளாவிடிலும் பாலியல் தொழில் சந்தையின் தேவையில் முதன்மையான இடத்தைப் பிடிப்பது பல்வேறு பெண் உடலை விரும்பும் ஆண்களின் நாட்டம் தான். இப்படி பல்வேறு உடலை விரும்பும் ஆண்களில் திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் ஆகிய இருபிரிவினருமே உண்டு. ஆகையால் பாலியல் தொழிலை தடை செய்வதற்கு திருமணம் என்கிற சடங்கு ஆண்களைப் பொருத்த அளவில் வடிகால் அல்ல.

ஒரு சந்தையை உருவாக்குவதில் அதில் விற்பனையாளர்கள் இரண்டாம் இடதையே பிடிக்கிறார்கள், சந்தை உருவாக்குவதில் முதல் இடத்தில் இருப்பது அதன் தேவை தான், வாடிக்கையாளர்கள் தான். வாடிக்கையாளர்களும் தேவையும் இல்லை என்றால் தன்னிச்சையாக உருவாகும் எந்த ஒரு சந்தையும் எதையும் விற்றுவிட முடியாது, இது பாலியல் உடல் சார்ந்த வணிகத்திற்கும் பொருந்தும். பாலியல் சந்தையைப் பொருத்த அளவில் ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதிகளை வைத்திருக்கின்றன. பாலியல் தொழில் என்பது சமூக முன்னேற்றத்திற்கு பின்னடைவு, குறிப்பாக குடும்ப அமைப்புகளுக்கு கேடுவிளைவிப்பது என்பதில் எனக்கு எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. சில நாடுகள் பாலியல் தொழிலை தனிமனித ஒழுக்கம் சார்ந்த ஒன்றாக பார்க்காமல் தனிமனித விருப்பம் சார்ந்த ஒன்றாகவே அங்கீகரிக்கிறது. அதனால் தான் அந்நாடுகள் பாலியல் விருப்பம் எத்தன்மையாயினும் (வயது வந்தவர்களிடையே விருப்பத்துடன் கூடிய பாலியல் புணர்ச்சி, தற்பால் புணர்ச்சி) அவற்றை ஒருசில வரையறைகளுடன் அனுமதிக்கிறது. அத்தகைய நாடுகளில் பாலியல் சார்ந்த குற்றங்கள் நடைபெறுவது மிகக் குறைவு. குறிப்பாக பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டில் பாலியல் வன்புணர்வு அன்றாடச் செய்தி கிடையாது. ஆனால் பாலியல் தொழில் ஒப்புமை கொடுக்காத நாடுகளில், கட்டுப்பாடு மிகுந்த நாடுகளில் பாலியல் வன்புணர்வு, குழந்தைகளையும் குறிவைக்கும் பாலியல் முறைகேடுகள் அன்றாடச் செய்திகள் தாம்.

பாலியல் தொழில் ஒப்புமை இல்லாத நாடுகள் பக்கசார்பாகவே சட்டங்களை வைத்திருக்கின்றன. பாலியல் தொழிலை நாடுபவர்களை கணக்கில் கொள்ளாது, பாலியல் தொழில் செய்பவர்களை மட்டுமே அரசுகள் தண்டிக்கின்றன. தேவையை (டிமாண்ட்) ஏற்படுத்துபவர்கள் தண்டிக்கப்படுவது இல்லை, விற்பனையாளர்கள் (சப்ளையர்) மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். தேவையை ஏற்படுத்துபவர்கள் தண்டிக்கபடாதவரை அவர்கள் விற்பனைத் தேவையை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். புவனேஸ்வரிக்கு 30 ஆயிரம் ரூபாய் என்றெல்லாம் செய்தித்தாள்கள் செய்தி வெளி இடுகின்றன, புவனேஸ்வரி தொழில் செய்ய முடியாத போது வேறு ஒருவரை அந்த 30 ஆயிரம் ரூபாய் தரத் ஆயத்தமாக இருப்பவர்கள் நாடுவார்கள், அல்லது வேறொரு புவனேஸ்வரியை உருவாக்குவார்கள்.

இதுபற்றி தலையங்கம் எழுதி அரசுகளைக் கேள்வி கேட்க வேண்டிய செய்தித்தாள்கள் அதை ஒரு கவர்ச்சி செய்தியாகவே வெளி இடுகின்றன. நடிகைகளின் அந்தரங்கம், கவர்ச்சி ஆகியவற்றை செய்தி விபச்சாரமாகவும், நடிகைகளின் அங்கங்களை காட்சிப் படுத்தும் சிலரின் திரைப்படத் தொழில் மூலம் அதில் மறைமுகமாக பாதிக்கப்படும் விடலைகளின் பாதிப்புகளை ஒப்பிடும் போது ஆண்களின் சபலத்தை மையமாக வைத்து நடைபெறும் விபச்சாரம் மோசமான குற்றமாகத் தெரியவில்லை.

58 கருத்துகள்:

Jawahar சொன்னது…

சிந்தனைக்குரிய தலைப்பை எடுத்திருக்கிறீர்கள். புதிய கோணத்தில் பார்த்திருக்கிறீர்கள். பாலுணர்வு கலாச்சாரத் தொடர்புடையதா என்பதில் எனக்கும் ஐயங்கள் உண்டு. கற்பு என்பதே ஆரோக்யத்தை முன்னிறுத்தி வந்த கலாச்சார மாற்றம் என்றும் எனக்கு ஒரு எண்ணம் உண்டு.

http://kgjawarlal.wordpress.com

Robin சொன்னது…

//நடிகைகளின் அந்தரங்கம், கவர்ச்சி ஆகியவற்றை செய்தி விபச்சாரமாகவும், நடிகைகளின் அங்கங்களை காட்சிப் படுத்தும் சிலரின் திரைப்படத் தொழில் மூலம் அதில் மறைமுகமாக பாதிக்கப்படும் விடலைகளின் பாதிப்புகளை ஒப்பிடும் போது ஆண்களின் சபலத்தை மையமாக வைத்து நடைபெறும் விபச்சாரம் மோசமான குற்றமாகத் தெரியவில்லை.// - சூப்பர் லாஜிக்!
இரண்டும் தவறுதான் என்று ஏன் தோன்றவில்லை?

கோவி.கண்ணன் சொன்னது…

//- சூப்பர் லாஜிக்!
இரண்டும் தவறுதான் என்று ஏன் தோன்றவில்லை?//

பாலியல் விருப்பம் நிறைவேற்றிக் கொள்ள திருமணம் சரியான வழிமுறைதான். ஆனால் திருமணம் செய்ய வாய்ப்பும் வசதியும் இல்லாதவர்கள் பாலியல் தேவைக்கு பாலியல் தொழிலாளியை நாடாமல் வேறு என்ன செய்ய முடியும் ?

ஒரு ஆணுக்கு எதோ ஒரு குடும்பச் சூழலில், சுமைகளினால் திருமணம் நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லாத போது அவன் சாமியாராகவே (சாமியார்களே அப்படி இல்லை) தொடரமுடியுமா ?

பேச்சிலர்களுக்கு, தனக்குத் தானே சமையல் செய்யத் தெரியாதவர்களுக்கு ஓட்டல் உணவு தானே வடிகால் ?
:)

அப்பாவி முரு சொன்னது…

நவீன நாகரீகமிக்க நாடுகளில் ஆண் பாலியல் தொழிலாளர்களும் உண்டு.

ஆக, பலரைத் தேடும் பாலியல் நாட்டம் ஆண், பெண் பேதமற்றதாகத் தானுள்ளது.

Robin சொன்னது…

//ஒரு ஆணுக்கு எதோ ஒரு குடும்பச் சூழலில், சுமைகளினால் திருமணம் நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லாத போது அவன் சாமியாராகவே (சாமியார்களே அப்படி இல்லை) தொடரமுடியுமா ?// - அப்படி அடக்கமுடியாதவன் எதற்காக குடும்ப சூழ்நிலை, சுமை என்று காரணங்களை சொல்லி திருமணம் செய்யாமலிருக்கவேண்டும்? இப்படி விபச்சாரியிடம் செல்பவர்கள் எல்லாரும் நீங்கள் சொல்லும் காரணங்களால் செல்பவர்கள்தானா? பெரும்பாலான ஆண்களுக்கு 27, 28 வயதில்தான் திருமணம் நடக்கிறது. இவர்கள் எல்லாரும் அதுவரை விபசாரியிடமா செல்கிறார்கள்? சுய கட்டுப்பாடோடு இருப்பதில்லை? சொத்தை காரணங்களை சொல்லியே சமுதாயத்தில் பல தவறுகள் நியாயப்படுத்தப்படுகின்றன.

Robin சொன்னது…

//குறிப்பாக பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டில் பாலியல் வன்புணர்வு அன்றாடச் செய்தி கிடையாது. // தவறு.
http://www.wnd.com/index.php?pageId=12616
கட்டுப்பாடுகள் இல்லையென்றால் தவறுகள் நடக்காது என்பது தவறான வாதம்.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/ Jawarlal said...

சிந்தனைக்குரிய தலைப்பை எடுத்திருக்கிறீர்கள். புதிய கோணத்தில் பார்த்திருக்கிறீர்கள். பாலுணர்வு கலாச்சாரத் தொடர்புடையதா என்பதில் எனக்கும் ஐயங்கள் உண்டு. கற்பு என்பதே ஆரோக்யத்தை முன்னிறுத்தி வந்த கலாச்சார மாற்றம் என்றும் எனக்கு ஒரு எண்ணம் உண்டு./

கொஞ்சம் சிலப்பதிகாரம், அதற்கு முன்னால் தனிப்பாடல்களில் தலைவன் தலைவி தம் காமப்பெருந்தீயைத் தோழன்-தோழியுடன் புலம்பும் வகையிலான பாடல்களில் பார்த்தீர்களானால்,
பரத்தைமை என்பது பழைய சமுதாய அமைப்பில் மிக ஆழமாகவும், சாதாரணமாகவும் எடுத்துக் கொல்லப்பட்ட ஒன்றாகவே இருந்தது தெரியும்.

கற்பு என்பது கவசமோ, கலாசார மாற்றமோ அல்ல. மேற்சொன்ன நாட்களிலுமே கூட, அது ஒரு வாழ்வியல் நெறியாக, ஒழுக்கமாகவே இருந்து வந்திருப்பதும் புரியும்!

அப்புறம் திரு கோவி.கண்ணன்! பூனைக்கண் புவனேஸ்வரி கதை இருக்கட்டும்! இங்கே தமிழ்நாட்டில் ஜெயலட்சுமி என்ற ஒரு பெண் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு, ஏகப்பட்ட காவல்துறையினரின் வயிற்றில் புளி கரைக்கிரமாதிரி தொடர்புகள் அம்பலப்பட்டு நின்றது தெரியுமோ? வழக்கில் இன்னமும் தீர்ப்பு வரவில்லை.

மிருகங்களுக்கு பாலுணர்வு ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே எழும். மனிதன் ஒருத்தனுக்குத் தான்
24x7 all 365 days என்று இருப்பதில் தான் இந்தக் கோளாறு.

இதில் ஆண் என்ன பெண் என்ன!

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்படி அடக்கமுடியாதவன் எதற்காக குடும்ப சூழ்நிலை, சுமை என்று காரணங்களை சொல்லி திருமணம் செய்யாமலிருக்கவேண்டும்? இப்படி விபச்சாரியிடம் செல்பவர்கள் எல்லாரும் நீங்கள் சொல்லும் காரணங்களால் செல்பவர்கள்தானா? பெரும்பாலான ஆண்களுக்கு 27, 28 வயதில்தான் திருமணம் நடக்கிறது. இவர்கள் எல்லாரும் அதுவரை விபசாரியிடமா செல்கிறார்கள்? சுய கட்டுப்பாடோடு இருப்பதில்லை? சொத்தை காரணங்களை சொல்லியே சமுதாயத்தில் பல தவறுகள் நியாயப்படுத்தப்படுகின்றன.

12:08 PM, October 05, 2009

//

அடக்க முடியாதவர்கள் அடக்கக் கூடியவர்கள் என்கிற வரையரை எதைப் பொருத்து அமைகிறது ? பல்வேறு மதங்களில் நாங்கள் புனித சேவை செய்கிறோம் என்கிற பெயரில் சாமியார்கள், பாதிரியார்களெல்லாம் பல்வேறு வேத நூல்களைப் படித்தும் பிறருக்குச் சொல்லியும் வாழ்வதாகக் கூறிக் கொள்பவர்களே தடம் மாறும் பொழுது, இல்லச் சூழல்காரணமாக 40 வயது வரை கூட திருமணம் என்கிற சூழல் அமையாதவர்களுக்கு நீங்கள் தரும் நிவாரணம் என்ன ? எந்த ஒரு சுமையும் இல்லாதவர்கள் கூட இல்லம் என்பது பொறுப்புகள் நிறைந்தது என்று திருமணத்தைத் தட்டிக் கழிக்கும் போது, சூழலே வாய்காதவர்களுக்கு சமூகம் சொல்லும் போதனைகள் என்ன ?

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணமூர்த்தி said...


கொஞ்சம் சிலப்பதிகாரம், அதற்கு முன்னால் தனிப்பாடல்களில் தலைவன் தலைவி தம் காமப்பெருந்தீயைத் தோழன்-தோழியுடன் புலம்பும் வகையிலான பாடல்களில் பார்த்தீர்களானால்,
பரத்தைமை என்பது பழைய சமுதாய அமைப்பில் மிக ஆழமாகவும், சாதாரணமாகவும் எடுத்துக் கொல்லப்பட்ட ஒன்றாகவே இருந்தது தெரியும்.//

பரத்தையர் தொடர்புகள் பழந்தமிழ் இலக்கியத்தில் சொல்லப்பட்டும், சமூகம் நிரகரிக்காத வாழ்வியல் முறைகளில் ஒன்று என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதே போன்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தேவதாசி முறைகளுக்காக சமூகம் உருவாக்கிவைத்திருந்ததெல்லாம் சரி என்று என்னால் சொல்ல முடியாது. வேறு வழியின்றி பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களும், அந்தத் தொழிலுக்கு தள்ளப்படுபவர்களின் நிலையும் ஒன்று அல்ல என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

வயிற்றுப்பாட்டுக்கு விபச்சாரம் வடிகால் ஆவது போலவே பெரும்பண ஆசைக்கும் விபச்சாரமே தீர்வு என இரு நிலைகளை பெண்கள் அந்தத் தொழிலை செய்துவருகிறார்கள். இது சமூக அமைப்பின் குற்றமே அன்றி அப்பெண்களை அதில் பலியாகிறார்கள் என்று தான் கொள்ள வேண்டி இருக்கிறது

//அப்புறம் திரு கோவி.கண்ணன்! பூனைக்கண் புவனேஸ்வரி கதை இருக்கட்டும்! இங்கே தமிழ்நாட்டில் ஜெயலட்சுமி என்ற ஒரு பெண் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு, ஏகப்பட்ட காவல்துறையினரின் வயிற்றில் புளி கரைக்கிரமாதிரி தொடர்புகள் அம்பலப்பட்டு நின்றது தெரியுமோ? வழக்கில் இன்னமும் தீர்ப்பு வரவில்லை.//

உங்களுக்கு நினைவுத் திறன் மிகுதியாக உள்ளது. காவலர்களும் கலாச்சாரக் காவலர்கள் தானே அவர்களுக்கு தண்டனையா ?
:)

//மிருகங்களுக்கு பாலுணர்வு ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே எழும். மனிதன் ஒருத்தனுக்குத் தான்
24x7 all 365 days என்று இருப்பதில் தான் இந்தக் கோளாறு.

இதில் ஆண் என்ன பெண் என்ன!

12:22 PM, October 05, 2009//

வளர்ப்பு மிருகங்களுக்கு அதுவும் வாய்ப்பில்லை, காயடித்தே கட்டிவைக்கின்றனர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Robin said...
//குறிப்பாக பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டில் பாலியல் வன்புணர்வு அன்றாடச் செய்தி கிடையாது. // தவறு.
http://www.wnd.com/index.php?pageId=12616
கட்டுப்பாடுகள் இல்லையென்றால் தவறுகள் நடக்காது என்பது தவறான வாதம்.

12:19 PM, October 05, 2009
//

தவறுகள் நடக்காது என்று சொல்லவில்லை, அதற்கான உந்துதல் குறைவு, குற்றமும் குறைவு என்றே சொல்லுகின்றனர்.

அணையாக கட்டிவைக்கிற இடத்தில், தடுத்து வைக்கிற இடத்தில் தானே, அழுத்தம் ஏற்படுவதால் உடைபட முயற்சிப்பதுடன், உடைபட்டால் நீரில் வேகமும் ஏற்படுகிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//Jawarlal said...
சிந்தனைக்குரிய தலைப்பை எடுத்திருக்கிறீர்கள். புதிய கோணத்தில் பார்த்திருக்கிறீர்கள். பாலுணர்வு கலாச்சாரத் தொடர்புடையதா என்பதில் எனக்கும் ஐயங்கள் உண்டு. கற்பு என்பதே ஆரோக்யத்தை முன்னிறுத்தி வந்த கலாச்சார மாற்றம் என்றும் எனக்கு ஒரு எண்ணம் உண்டு.

http://kgjawarlal.wordpress.com
//

மிக்க நன்றி ஜவர்லால்

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
நவீன நாகரீகமிக்க நாடுகளில் ஆண் பாலியல் தொழிலாளர்களும் உண்டு.

ஆக, பலரைத் தேடும் பாலியல் நாட்டம் ஆண், பெண் பேதமற்றதாகத் தானுள்ளது.

11:55 AM, October 05, 2009
//

நாகரீக நாடுகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம், அதன் சட்ட திட்டங்கள் வேறு

அப்பாவி முரு சொன்னது…

//கோவி.கண்ணன்


//அப்பாவி முரு said...
நவீன நாகரீகமிக்க நாடுகளில் ஆண் பாலியல் தொழிலாளர்களும் உண்டு.

ஆக, பலரைத் தேடும் பாலியல் நாட்டம் ஆண், பெண் பேதமற்றதாகத் தானுள்ளது.

11:55 AM, October 05, 2009
//

நாகரீக நாடுகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம், அதன் சட்ட திட்டங்கள் வேறு//


நாகரீக நாடுகள் தானே நவீன நாகரீகத்தின் ஊற்றுக்கண்.

இன்று அவர்கள் செய்வதை, நாளை உலகமே செய்யப்போகிறது. அவ்வலவே.

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகரீக நாடுகள் தானே நவீன நாகரீகத்தின் ஊற்றுக்கண்.

இன்று அவர்கள் செய்வதை, நாளை உலகமே செய்யப்போகிறது. அவ்வலவே.

1:23 PM, October 05, 2009

//

நாம ஒழுங்கீனம் என்று சொல்லும் மேற்கத்திய நாகரீகத்தில் தனிமனிதர்களை மதிக்கிறார்கள், நாம் அவற்றை அளவுகோளாகக் கொள்வதில்லையே. குடும்ப அமைப்பு போற்றும் நம் சமூகத்தில் தனிமனித உணர்ச்சிகள் மதிக்கப்படுவதில்லை அல்லது புரிந்து கொள்ளப்படுவதுமில்லை. ஆகவே நாம் அவர்களைப் போல் மாறும் போது அவர்களை உதாரணமாகக் கொள்ளலாம்.

நான் இங்கு நம்மைப் போல் ஒரு ஏழை நாடான தாய்லாந்தைத் தான் சுட்டினேன்.

Robin சொன்னது…

//சாமியார்கள், பாதிரியார்களெல்லாம் பல்வேறு வேத நூல்களைப் படித்தும் பிறருக்குச் சொல்லியும் வாழ்வதாகக் கூறிக் கொள்பவர்களே தடம் மாறும் பொழுது, இல்லச் சூழல்காரணமாக 40 வயது வரை கூட திருமணம் என்கிற சூழல் அமையாதவர்களுக்கு நீங்கள் தரும் நிவாரணம் என்ன ? // தடம் மாறும் பொழுது என்று சொல்லும்போதே தவறு செய்கிறார்கள் என்றுதானே அர்த்தம். ஒருசில சாமியார்களும் பாதிரியார்களும் தவறு செய்கிறார்கள் என்பதால் சாமானியர்களும் செய்யலாம் என்று அர்த்தமா? சூழல் அமையாதவர்கள் சமுதாயத்தில் எத்தனை சதவீதம் இருப்பர்? இப்படிப்பட்ட விதிவிலக்குகளை வைத்துக்கொண்டு விவாதம் செய்வதை விதண்டாவாதமாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும். உங்கள் வாதப்படியே அப்படிப்பட்ட சுழலில் இருப்பவர்கள் உண்மையான ஆன்மீகத்தில் ஈடுபடுவதன்முலம் தங்களை காத்துக்கொள்ள முடியும்.

குசும்பன் சொன்னது…

ஒருத்திய பிடிச்சாலும் பிடிச்சாங்க, எல்லா பத்திரிக்கையும் இரண்டு எழுத்து நடிகை, மூன்று எழுத்து நடிகை என்று தங்கள் கற்பனையில் இருக்கும் அனைத்து நடிகைகள் பெயரையும் அவர் சொல்லியதாக வெளியிட்டு “சுய இன்பம்” அடைகின்றனர்.

அங்க அவளோடு இருந்தவனையும் போட்டோவோடு போடவேண்டியதுதானே?

குசும்பன் சொன்னது…

அப்புறம் சந்தை சந்தை என்றும் நுகர்வோர் என்றும் எல்லாம் சொல்றீங்க பார்த்து, இதுக்கும் ஏதும் அரசு இலவச சந்தை ஆரம்பிச்சுட போவுது:)

Robin சொன்னது…

//வயிற்றுப்பாட்டுக்கு விபச்சாரம் வடிகால் ஆவது போலவே பெரும்பண ஆசைக்கும் விபச்சாரமே தீர்வு என இரு நிலைகளை பெண்கள் அந்தத் தொழிலை செய்துவருகிறார்கள். இது சமூக அமைப்பின் குற்றமே அன்றி அப்பெண்களை அதில் பலியாகிறார்கள் என்று தான் கொள்ள வேண்டி இருக்கிறது// - வயிற்றுப்பாட்டுக்கு நாட்டில் பல வேலைகள் உண்டு என்பது ஒருபுறமிருக்க பண ஆசைக்காக இந்த தொழிலில் ஈடுபடுபவர்களையும் சமுதாயத்தின் மீது குற்றஞ்சுமத்தி காப்பாற்ற முயல்வது ஏன்?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒருசில சாமியார்களும் பாதிரியார்களும் தவறு செய்கிறார்கள் என்பதால் சாமானியர்களும் செய்யலாம் என்று அர்த்தமா? சூழல் அமையாதவர்கள் சமுதாயத்தில் எத்தனை சதவீதம் இருப்பர்? //

ராபின்,

பாலியல் தொழில் செய்பவர்களும் அவர்களிடம் செல்பவர்களும் கூட பெரும்பாண்மை கிடையாது, அதை சதவிகித கணக்கில் பேச முடியாது. சூழல் அமையாதவர்கள் எத்தனை சதவிகிதம் இருப்பார்களோ, அதைவிட பாலியல் தொழில் செய்பவர்கள் கூடுதலோ, சமமாகவோ குறைவாகவோ எந்த விகிதத்தில் இருந்தால் என்ன ? பாலியல் தொழில் செய்பவர்களும் ஒரு சிலர் தானே

கோவி.கண்ணன் சொன்னது…

//Robin said...
- வயிற்றுப்பாட்டுக்கு நாட்டில் பல வேலைகள் உண்டு என்பது ஒருபுறமிருக்க பண ஆசைக்காக இந்த தொழிலில் ஈடுபடுபவர்களையும் சமுதாயத்தின் மீது குற்றஞ்சுமத்தி காப்பாற்ற முயல்வது ஏன்?

1:39 PM, October 05, 2009
//

பாலியல் தொழிலாளியிடம் செல்பவர்களை விட்டுவிட்டு பாலியல் தொழில் செய்பவர்களை மட்டும் ஏன் தண்டிக்க வேண்டும் ?

கோவி.கண்ணன் சொன்னது…

// கோவி.கண்ணன் said...
//Robin said...
- வயிற்றுப்பாட்டுக்கு நாட்டில் பல வேலைகள் உண்டு என்பது ஒருபுறமிருக்க பண ஆசைக்காக இந்த தொழிலில் ஈடுபடுபவர்களையும் சமுதாயத்தின் மீது குற்றஞ்சுமத்தி காப்பாற்ற முயல்வது ஏன்?

1:39 PM, October 05, 2009
//

தவறு செய்தவர்கள் என் மீது கல்லெறியலாம் என்று சொல்லும் பைபிள் வாசகம் யாருக்கு சொல்லப்பட்டது சமூகத்துக்கா ? விபச்சாரியை காப்பதற்காகவா ?

Robin சொன்னது…

//தவறு செய்தவர்கள் என் மீது கல்லெறியலாம் என்று சொல்லும் பைபிள் வாசகம் யாருக்கு சொல்லப்பட்டது சமூகத்துக்கா ? விபச்சாரியை காப்பதற்காகவா ?// - தவறு செய்யாதவர்கள் கல் எறியலாம் என்று சொல்லப்பட்டது மற்றவர்கலின் குறையை சுட்டிக்கட்டுவதற்காக. அடுத்த வசனத்தில் விபச்சாரியை பார்த்து இனி தவறு செய்யாதே என்று அறிவுரைகூறி அனுப்புகிறார். எனவே இதை தவறு செய்த பெண்ணுக்கு திருந்த கொடுக்கப்பட்ட வாய்ப்பாகத்தான் பார்க்கவேண்டும். ஆனால் நீங்களோ தவறையே நியாயப்படுத்துகிறீர்கள்.

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல கருத்துக்கள், ஆழமான சிந்தனை. நன்றாக எழுதியுள்ளிர்கள். ஆண்களுக்கும் பங்கு உண்டு அவர்களும் தண்டிக்கப் படவேண்டியவர்கள் என்பது நல்ல கருத்து. அப்புறம் ஒரு விசயம் தாய்லாந்தில் பாலியல் அனுமதிக்கப் பட்டு இருந்தாலும் அங்கு உள்ள சிறுமிகள் சிறுவயதில் அவர்களின் பொற்றேர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இத்தொழிலில் பழக்கப்படுத்த விடுகின்றனர். விபச்சாரத்தில் இருக்கும் பெண்களில் பலரும் சூழ்னிலையின் காரணமாக அல்லது இந்த புதைகுழியில் தள்ளப் பட்டு அல்லது பணத்தின் காரணமாக செய்துவருகின்றனர். ஆதலால் இந்த செயலின் குற்றம் எழுபது முதல் எண்பது சதவிகிதம் ஆண்களைச் சாரும்.
ஆமா கட்டுரை ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்கிங்க, இதுல எப்ப டாக்டர் பட்டம் வாங்கினிங்க? ரொம்ப நன்று.

பித்தனின் வாக்கு சொன்னது…

ஒரு ஆணுக்கு எதோ ஒரு குடும்பச் சூழலில், சுமைகளினால் திருமணம் நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லாத போது அவன் சாமியாராகவே (சாமியார்களே அப்படி இல்லை) தொடரமுடியுமா ?

பேச்சிலர்களுக்கு, தனக்குத் தானே சமையல் செய்யத் தெரியாதவர்களுக்கு ஓட்டல் உணவு தானே வடிகால் ?

இந்த வரைமுறை நல்ல கருத்து அல்ல அப்படியானால் இது பெண்களுக்கும் பெருந்தும் அல்லவா, அதை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுமா. ஆண்களால் அடக்க முடியாது ஆனால் இதே நிலையில் இருக்கும் பெண்கள் என்ன செய்வது. இது தவறான கருத்து.

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...

இந்த வரைமுறை நல்ல கருத்து அல்ல அப்படியானால் இது பெண்களுக்கும் பெருந்தும் அல்லவா, அதை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுமா. ஆண்களால் அடக்க முடியாது ஆனால் இதே நிலையில் இருக்கும் பெண்கள் என்ன செய்வது. இது தவறான கருத்து.
//

வெளி நாடுகளைப் பொருத்து ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு பாலியல் அனுபவம் பெற்றிருந்தால் அது பெரிய குற்றமாகக் கருதப்படுவதில்லை. நம் சமூகத்தில் அப்படிக் கிடையாது எனவே பெண்களைப் பற்றி கருத்து சொல்லும் உரிமை பெண்களுக்கே உண்டு.

ஆனால் நம் நாட்டில் விதவைப் பெண்கள் ஆண்களைப் போல் அடுத்த ஆண்டே திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டோ, அல்லது விருப்பப்பட்டோ செய்து கொண்டது கிடையாது. பெண்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு ஆண்களுக்கு கிடையாது எனவே ஒப்பிட்டு தீர்ப்பு சொல்லும் தகுதி ஆண் சமூகத்துக்கு கிடையாது.

நீங்கள் சொல்வது போல் இருக்கலாமா வேண்டாமா என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும் ஏனெனின் அதன் பாதகங்கள் அவர்களுக்குத்தான் ஏற்படும்.

எந்த ஒரு பெண்ணும் ஒரு ஆணைக் குறிப்பிட்டு 'இவன் என்னுடன் இருந்தவன்' என்று சொல்லுவது அவ்வளவு எளிதன்று ஆனால் ஒரு ஆண் ஒரு பெண் அப்படி இருந்தால் அதை வெளியே சொல்வதால் அவளுக்கு அவமானம் ஏற்படுத்த முடியும் என்று பலிவாங்கவதற்கேனும் செய்யத் துணிந்தவன் தான்

கோவி.கண்ணன் சொன்னது…

//Robin said...
//தவறு செய்தவர்கள் என் மீது கல்லெறியலாம் என்று சொல்லும் பைபிள் வாசகம் யாருக்கு சொல்லப்பட்டது சமூகத்துக்கா ? விபச்சாரியை காப்பதற்காகவா ?// - தவறு செய்யாதவர்கள் கல் எறியலாம் என்று சொல்லப்பட்டது மற்றவர்கலின் குறையை சுட்டிக்கட்டுவதற்காக. அடுத்த வசனத்தில் விபச்சாரியை பார்த்து இனி தவறு செய்யாதே என்று அறிவுரைகூறி அனுப்புகிறார். எனவே இதை தவறு செய்த பெண்ணுக்கு திருந்த கொடுக்கப்பட்ட வாய்ப்பாகத்தான் பார்க்கவேண்டும். ஆனால் நீங்களோ தவறையே நியாயப்படுத்துகிறீர்கள்.
//

ஓஹோ தவறு செய்தவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டும் தூண்டியவர்கள் அல்ல என்கிற கருத்து உள்ளவரா நீங்கள். நல்ல நியாயம் நீதியின் தராசுகள் உங்கள் கைகளில் தான் கொடுக்கப்பட வேண்டும்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

தற்பொழுது இந்தியாவில் சட்டம் மாற்றியமைக்கப்படுவதாக கேள்விப்பட்டேன்.பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களைவிட செல்பவர்களுக்கு தண்டனை அதிகமாக்குவது.

Robin சொன்னது…

//ஓஹோ தவறு செய்தவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டும் தூண்டியவர்கள் அல்ல என்கிற கருத்து உள்ளவரா நீங்கள். நல்ல நியாயம் நீதியின் தராசுகள் உங்கள் கைகளில் தான் கொடுக்கப்பட வேண்டும்.// தவறான inference. தவறை தூண்டியவர்கள் தண்டிப்படக்கூடாது என்று நான் சொல்லவில்லை. மேலும் விபச்சாரிகளும் தவறு செய்ய தூண்டுபவர்கள்தான்.

மின்னுது மின்னல் சொன்னது…

தற்பொழுது இந்தியாவில் சட்டம் மாற்றியமைக்கப்படுவதாக கேள்விப்பட்டேன்.பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களைவிட செல்பவர்களுக்கு தண்டனை அதிகமாக்குவது.

//

சட்டங்கள் நேர்மையாக இருந்து இருக்கா?

முன்னாடி கஞ்சா கேஸ் இனி...:)

ஆண்களும் பாவம் !!

மணிகண்டன் சொன்னது…

அங்கீகரித்த நாடுகளில் குற்றங்கள் கம்மின்னு எழுதி இருக்கீங்களே ! இது உங்க சொந்த கண்டுபிடிப்பா இல்லாட்டி எங்கயாவது படிச்சீங்களா ? நான் வசிக்கும் நாட்டுல இது ஒரு சுற்றுலா மாதிரி :)- ஆனாலும் பார்தீங்கனா ஆப்ரிக்காலேந்து தான் பொண்ணுங்க வராங்க தொழில் பண்ண :)- எவ்வளவு பேரு கட்டாயப்படுத்தி வராங்கன்னு சொல்ல முடியாது.

நீங்களா மனசுல ஏதாவது ஒரு கருத்தை நினைச்கிட்டு எழுதும்போது அதை சொல்லிடறது பெட்டர். இல்லாட்டி ஏதாவது reference யூஸ் பண்ணி இருந்தா அதையாவது சொல்லலாம்.

ஒரு தொழிலை நிச்சயமா கட்டுப்படுத்த முடியாதுன்னு தெரிஞ்சா legalize பண்ணி சட்ட திட்டங்கள் கொண்டுவருது தான் பெஸ்ட் ஐடியா. அந்தவகைல உங்க கருத்து ஓகே.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
அங்கீகரித்த நாடுகளில் குற்றங்கள் கம்மின்னு எழுதி இருக்கீங்களே ! இது உங்க சொந்த கண்டுபிடிப்பா இல்லாட்டி எங்கயாவது படிச்சீங்களா ? நான் வசிக்கும் நாட்டுல இது ஒரு சுற்றுலா மாதிரி :)- ஆனாலும் பார்தீங்கனா ஆப்ரிக்காலேந்து தான் பொண்ணுங்க வராங்க தொழில் பண்ண :)- எவ்வளவு பேரு கட்டாயப்படுத்தி வராங்கன்னு சொல்ல முடியாது.

நீங்களா மனசுல ஏதாவது ஒரு கருத்தை நினைச்கிட்டு எழுதும்போது அதை சொல்லிடறது பெட்டர். இல்லாட்டி ஏதாவது reference யூஸ் பண்ணி இருந்தா அதையாவது சொல்லலாம்.

ஒரு தொழிலை நிச்சயமா கட்டுப்படுத்த முடியாதுன்னு தெரிஞ்சா legalize பண்ணி சட்ட திட்டங்கள் கொண்டுவருது தான் பெஸ்ட் ஐடியா. அந்தவகைல உங்க கருத்து ஓகே.
//

பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் பாலியல் குற்றங்கள் குறைவதாகத்தான் புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன.

http://en.wikipedia.org/wiki/Legality_of_prostitution

http://www.ciao.co.uk/What_is_your_opinion_about_legal_prostitution__5288151

பாலியல் தொழில் உரிமம் பெறாத நாடுகள் ஒழுக்க சீலர்களை உருவாக்கவில்லை. தொழிலாளிகள் தான் தண்டிக்கப்படுகின்றனர்.

நான் இங்கே பாலியல் தொழிலை ஞாயப்படுத்தப்படவில்லை. அதன் தேவைகளை நாடுபவர்கள் உள்ளனர் முறைப்படுத்தப்பட வேண்டும் என்றே குறிப்பிட்டுள்ளேன். பாலியல் தொழில் இந்தியாவில் அங்கீகரிக்கப்படாததால் எய்ட்ஸ் விரைவாகப் பரவுவாதாகத்தான் Case Studies சொல்லுகின்றன.

பதிவின் நோக்கம் தண்டிக்கப்பட்டால் குற்றவாளிகளும் தூண்டுவோர்களும் தண்டிக்கப் படவேண்டும் என்பதே.

கோவி.கண்ணன் சொன்னது…

// Robin said...
//ஓஹோ தவறு செய்தவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டும் தூண்டியவர்கள் அல்ல என்கிற கருத்து உள்ளவரா நீங்கள். நல்ல நியாயம் நீதியின் தராசுகள் உங்கள் கைகளில் தான் கொடுக்கப்பட வேண்டும்.// தவறான inference. தவறை தூண்டியவர்கள் தண்டிப்படக்கூடாது என்று நான் சொல்லவில்லை. மேலும் விபச்சாரிகளும் தவறு செய்ய தூண்டுபவர்கள்தான்.

3:00 PM, October 05, 2009
//

அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் யாரையும் வலுக்கட்டாயமாக அழைக்கக் கூடாது என்கிற விதி முறைகள் இருக்கின்றன. விபச்சாரிகள் என்பவர்கள் ஒரே நாளில் அந்த தொழிலுக்கு விரும்பி வருபவர்கள் கிடையாது, அதில் சிக்க வைக்கப்படுபவர்களே மிகுதி. பத்து பாத்திரம் தேய்த்தாவது வயிற்றைக் கழுவக் கூடாதா ? என்று கேட்பதில் ஞாயம் உண்டு, ஆனால் அதே சமயத்தில் பத்து பாத்திரம் தேய்பவர்கள், வீட்டு வேலை செய்யும் பணிப் பெண்கள் ஆடையை விலக்கி பாலியலுக்கு அழைப்பதாக எத்தனையோ திரைப்படங்களில் காட்டுகிறார்கள் அப்படிப் பட்ட உண்மைக்கு புறம்பான திரைப்படங்களை சமூகம் புறக்கணிப்பது இல்லை.

NO சொன்னது…

அன்பான நண்பர் திரு கோவி கண்ணன்,

என்ன சார், இன்னைக்கு சாப்பாடு இந்த subject ஆ!!!!!

சரி சரி........என் அடுத்த ரிலீஸ் ரெடி ஆகிட்டு இருக்கு!!!!

" NO" வழங்கும், கோவி கண்ணன் இன் " கோவியன்"

விரைவில்!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கோவி அண்ணன்அவர்கள் தும்பி, கோவியன், டெமோ என்று மூன்று வித்த்யாச வேடங்களில் தூள் கிளப்ப

ஸ்டார் ஜன் அண்ணன், ஸ்டார் ஜன் ரோலிலே சாகடிக்க

விரைவில் வருகிறார் கோவியன்...................

இந்த வருடத்தின் மிக பிரம்மாண்டமான மாரடைப்பு sorry படைப்பு ...............................

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன்


அப்புறம் சந்தை சந்தை என்றும் நுகர்வோர் என்றும் எல்லாம் சொல்றீங்க பார்த்து, இதுக்கும் ஏதும் அரசு இலவச சந்தை ஆரம்பிச்சுட போவுது:)
//

உழவர் சந்தை போல் உழலும் சந்தைன்னு பேர் வைத்துவிடப் போகிறார்கள் :)

கோவி.கண்ணன் சொன்னது…

// ஆ.ஞானசேகரன் said...
தற்பொழுது இந்தியாவில் சட்டம் மாற்றியமைக்கப்படுவதாக கேள்விப்பட்டேன்.பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களைவிட செல்பவர்களுக்கு தண்டனை அதிகமாக்குவது.

2:46 PM, October 05, 2009
//

மின்னுது மின்னல் சொன்னது போல் நம் நாட்டின் சட்டங்கள் காவல் துறைக்கு வருமானம் ஈட்டித்தரும் துருப்பு சீட்டு

கோவி.கண்ணன் சொன்னது…

Mr No,

பதிவுகள் எழுத விருப்பம் இருந்தால் தனிப்பதிவு எழுதுங்கள். நீங்கள் என் பதிவின் பின்னூட்ட பகுதியை பதிவு எழுதப் பயன்படுத்ததுவதைவிட இன்னும் பலரை சென்று அடையும்.

உ.போ.ஒ தாங்கள் எழுதிய தொடரை நான் படிக்கவில்லை, ஆனால் அதைப் படித்தவர்கள் நன்றாக இருந்ததாக உரையாடியிலும் போனிலும் தெரிவித்தார்கள்.

aathirai சொன்னது…

you are contradicting yourself.

on one hand, you said crimes are less in countries that legitimized the trade. this is the same reason they gave to legitimize devadasi system.

கோவி.கண்ணன் சொன்னது…

// aathirai said...
you are contradicting yourself.

on one hand, you said crimes are less in countries that legitimized the trade. this is the same reason they gave to legitimize devadasi system.
//

வாங்கய்யா,

தேவதாசி முறை என்பது பாலியல் தொழிலுக்காகவே ஒரு சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கும் ஒரு இழி செயல். பாலியல் தொழில் தனிப்பட்ட மனிதர்களின் விருப்ப வெறுப்பைப் பொறுத்தது. இரண்டும் ஒன்று அல்ல

பீர் | Peer சொன்னது…

//ஒரு தொழிலை நிச்சயமா கட்டுப்படுத்த முடியாதுன்னு தெரிஞ்சா legalize பண்ணி சட்ட திட்டங்கள் கொண்டுவருது தான் பெஸ்ட் ஐடியா. அந்தவகைல உங்க கருத்து ஓகே.//

கட்டுப்படுத்த முடியா எல்லா தொழிலையும் legalize பண்ணிட்டா குற்றங்கள் அதிகரிக்குமே..மணி. ;(

பீர் | Peer சொன்னது…

புவனேஷ்வரிய விடுங்க.. அவள் பலரை ஏமாற்றி பணம் நகை பறித்துக்கொண்டதாகவும், அடியாள் வைத்து மிரட்டியதாகவும் வழக்குகள் குவிந்ததால்.. பொறிவைத்து பிடித்திருக்கிறார்கள். புகைப்படம் எடுத்தால் ஆடையை அவிழ்த்துவிடுவேன் என்றும், பிடிக்க வந்த போலீசையும் மிரட்டியிருக்கிறாள்.

பீர் | Peer சொன்னது…

பாலியல் தொழில் நடைமுறைப்படுத்தப்பட்டால், தையல், பாசி மணி மற்றும் இன்னபிற ஒழுக்கமான தொழில் செய்யும் பெண்கள், அதை விட பாலியல் தொழிலில் (அங்கீகரிக்கப்பட்டு பரவலாக்கப்பட்டால்) அதிக வருமானம் வரும் என்பதால், பாலியல் தொழிலை நாடி வரும் ஆபத்து இருக்கிறதே, கோ.

பெண்கள் இத்தொழிலுக்கு வர வேண்டும் என்று நீங்கள் ஏன் ஆசைப்படுகிறீர்கள்?

வராமல் இருக்கவும், இதில் விழுந்து கிடப்பவர்களின் மீள்வாழ்விற்கும் என்ன செய்யலாம் என்பதாக விவாதிக்க மாட்டீர்களா?

கோவி.கண்ணன் சொன்னது…

//பீர் | Peer said...
புவனேஷ்வரிய விடுங்க.. அவள் பலரை ஏமாற்றி பணம் நகை பறித்துக்கொண்டதாகவும், அடியாள் வைத்து மிரட்டியதாகவும் வழக்குகள் குவிந்ததால்.. பொறிவைத்து பிடித்திருக்கிறார்கள். புகைப்படம் எடுத்தால் ஆடையை அவிழ்த்துவிடுவேன் என்றும், பிடிக்க வந்த போலீசையும் மிரட்டியிருக்கிறாள்.
//

:)

பத்திரிக்கைகள் இந்த செய்திக்கு ஏன் இவ்வளவு முதன்மைத்துவம் தெரிகிறது என்று தெரியவில்லை. புவனேஸ்வரி அப்படிச் சொன்னாரா இல்லையான்னு தெரியாது. போலிஸ் கொடுக்கும் செய்தியையுடன் பத்திரிக்கைகளும் விருப்பம் போல் எழுதிக் கொள்ளும்.

ஓசியில் கூப்பிட்டு வரவில்லை என்றால் கூட காவலர்கள் சூரப்புலிகளாக மாறி பிடிக்கமாட்டார்கள் என்று நம்புவோம்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பீர் | Peer said...
பாலியல் தொழில் நடைமுறைப்படுத்தப்பட்டால், தையல், பாசி மணி மற்றும் இன்னபிற ஒழுக்கமான தொழில் செய்யும் பெண்கள், அதை விட பாலியல் தொழிலில் (அங்கீகரிக்கப்பட்டு பரவலாக்கப்பட்டால்) அதிக வருமானம் வரும் என்பதால், பாலியல் தொழிலை நாடி வரும் ஆபத்து இருக்கிறதே, கோ. //

ஆபத்து எல்லா இடங்களிலும் இருக்கிறது பீர். இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதற்காக பல மணம் புரிகிறவர்கள் இருக்கிறார்களா இல்லையா ? அவர்களுக்கு ஒரு மனைவியைவிட பல மனைவிகள் தேவைப்படுவதற்கான காரணங்கள் உண்மையிலேயே ஏற்கக் கூடியதாக உள்ளனவா ? நான் இங்கு இஸ்லாம் உதாரணம் கொடுத்ததற்கு மன்னிக்கவும். ஆனாலும் ஒழுக்கம் ஒழுங்கீனம் ஆகியவற்றை ஷரியத் சட்டம் வழிபார்ப்பவர்களுக்கு அதைச் சுட்டிக் காட்டித் தான் பேச வேண்டி இருக்கிறது. மீண்டும் மன்னிக்கவும்.

//பெண்கள் இத்தொழிலுக்கு வர வேண்டும் என்று நீங்கள் ஏன் ஆசைப்படுகிறீர்கள்?//

ஏன் இந்த திரிப்பு ? நான் ஆசைப்படுகிறேன் என்று எங்காவது சொல்லி இருக்கிறேனா ? சட்டமாக்க வேண்டும் என்றே சொல்லி இருக்கிறேன். அதுவும் ஆண் பெண் பாலியல் தொழிலாளி என்றெல்லாம் தனித்தனியாகச் சொல்லவில்லை பொதுவாகத்தான் சொல்லி இருக்கிறேன். எழுதும் போது தெளிவோடு தான் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன்.

"பாலியல் தொழில் என்பது சமூக முன்னேற்றத்திற்கு பின்னடைவு, குறிப்பாக குடும்ப அமைப்புகளுக்கு கேடுவிளைவிப்பது என்பதில் எனக்கு எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை."

- இது பதிவில் இருக்கும் என்னுடைய வரிகள் தான்.

//வராமல் இருக்கவும், இதில் விழுந்து கிடப்பவர்களின் மீள்வாழ்விற்கும் என்ன செய்யலாம் என்பதாக விவாதிக்க மாட்டீர்களா?
//

அதற்கான வழிகளை நீங்கள் தான் சொல்லுங்களேன் தெரிந்து கொள்கிறேன். பாலியல் தொழில் அங்கீகரிக்காத நாடுகளில் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் மறைமுக மாகக் கூட அந்தத் தொழிலே நடைபெறுவதில்லை என்று சொல்ல மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.

பீர் | Peer சொன்னது…

//போலிஸ் கொடுக்கும் செய்தியையுடன் பத்திரிக்கைகளும் விருப்பம் போல் எழுதிக் கொள்ளும்.//

ம்.. தினமலரில், பிரபல நடிகைகளின் பெயருடன் விலையும் எழுதி இருந்தார்கள்... அதை வாசிக்கும் போதே சந்தேகம் வந்தது.. ட்விட்டரிலும் கேட்டேன். ;(

பீர் | Peer சொன்னது…

//இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதற்காக பல மணம் புரிகிறவர்கள் இருக்கிறார்களா இல்லையா ? /

இஸ்லாம் அனுமதித்தும் பல மணம் புரியும் இஸ்லாமியர்களை விட, அனுமதிக்காத மற்ற மதங்களில் 'வைத்திருத்தல்' அதிகம். இதை மறுக்க மாட்டீர்கள். (இந்தப்பதிவில் மதத்தை இழுக்க எனக்கும் விருப்பம் இல்லை, நீங்கள் சொல்லியதற்கு பதிலளிக்கவே..)

//அதற்கான வழிகளை நீங்கள் தான் சொல்லுங்களேன் தெரிந்து கொள்கிறேன். //

திருமணம் எளிதாக்கப்பட வேண்டும். பல மணம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கட்டுப்படுத்த முடியா எல்லா தொழிலையும் legalize பண்ணிட்டா குற்றங்கள் அதிகரிக்குமே..மணி. ;(//

சாராயம் குடிப்பதை லீகலைஸ் செய்து அரசாங்கமே விற்கும் போது கள்ளச் சாரய சாவுகள் தடுக்கப்படுவதாகத்தான் புள்ளிவிவரங்கள் சொல்லுது.

பீர் | Peer சொன்னது…

//பெண்கள் இத்தொழிலுக்கு வர வேண்டும் என்று நீங்கள் ஏன் ஆசைப்படுகிறீர்கள்?//

இந்த எனது கேள்வியை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பீர் | Peer said...
இஸ்லாம் அனுமதித்தும் பல மணம் புரியும் இஸ்லாமியர்களை விட, அனுமதிக்காத மற்ற மதங்களில் 'வைத்திருத்தல்' அதிகம். இதை மறுக்க மாட்டீர்கள். (இந்தப்பதிவில் மதத்தை இழுக்க எனக்கும் விருப்பம் இல்லை, நீங்கள் சொல்லியதற்கு பதிலளிக்கவே..)
//

மற்ற மதம் தான் உங்களுக்கு மதமே இல்லையே அதன் பிறகு அது எப்படி இருந்தால் என்ன ? நாம சொக்க தங்கம் பற்றிப் பேசுவோம் :)

//அதற்கான வழிகளை நீங்கள் தான் சொல்லுங்களேன் தெரிந்து கொள்கிறேன். //

திருமணம் எளிதாக்கப்பட வேண்டும். பல மணம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
//

பலமணம் இரு பாலருக்கும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று ஒருவர் கேட்டால் என்ன பதில் சொல்லுவீர்கள் ?

செயல்படாத ஆண்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டுமா ? அல்லது திருமணமாக வேண்டாம் மறைவாக வைத்துக் கொள்கிறோம் என்று பெண்கள் சொன்னால் விட்டுவிடுவோமா ?

பெண்கள் அத்தகைய செயல்படாத ஆண்களை விவாகரத்து செய்து கொள்ளலாம் எளிதாக சொல்லிவிட்டுவிடுவோமா ?

ஆண்களையே எடுத்துக் கொள்வோம்,
பணபலம் இருக்கிறவன் பலதாரம் மணம் செய்யலாம் வெறும் சபலம் மட்டுமே இருப்பவன் எப்படி செய்வான் ?

பீர் | Peer சொன்னது…

//சாராயம் குடிப்பதை லீகலைஸ் செய்து அரசாங்கமே விற்கும் போது கள்ளச் சாரய சாவுகள் தடுக்கப்படுவதாகத்தான் புள்ளிவிவரங்கள் சொல்லுது.//

இப்போ காமன் மேனுக்கு கைதுப்பாக்கியும், ஆர்டிஎக்ஸூம் தேவைப்படுதே... :(

கோவி.கண்ணன் சொன்னது…

// பீர் | Peer said...
//பெண்கள் இத்தொழிலுக்கு வர வேண்டும் என்று நீங்கள் ஏன் ஆசைப்படுகிறீர்கள்?//

இந்த எனது கேள்வியை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்.
//

அவ்வளவு மட்டமாக எப்படி நினைத்துப் பார்த்து கேள்வி எழுப்ப முடிந்தது என்று நினைக்கையில் அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருக்கிறது. நல்லது கூடவே உங்கள் வீட்டு பெண்களையும் அனுப்புவீர்களா என்று கேட்காதவரையில் நீங்கள் பழைய விவாதங்களை மனதில் வைக்காமல் கேட்டதாகவே எடுத்துக் கொள்கிறேன்.

ஆனாலும் வருத்தம் வருத்தம் தான்

:(

பீர் | Peer சொன்னது…

//பலமணம் இரு பாலருக்கும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று ஒருவர் கேட்டால் என்ன பதில் சொல்லுவீர்கள் ?//

மார்கெட் டிமாண்ட்...

எந்த பாலர் பாலியல் தொழியாளியை தேடிச்செல்கிறார். எந்த தொழிலாளியை காவல்துறை கைது செய்கிறது.

பீர் | Peer சொன்னது…

//பெண்கள் அத்தகைய செயல்படாத ஆண்களை விவாகரத்து செய்து கொள்ளலாம் எளிதாக சொல்லிவிட்டுவிடுவோமா ?//

நிச்சயமாக சொல்லலாம்.

பீர் | Peer சொன்னது…

//நீங்கள் பழைய விவாதங்களை மனதில் வைக்காமல் கேட்டதாகவே எடுத்துக் கொள்கிறேன்.

ஆனாலும் வருத்தம் வருத்தம் தான்//

விவாதங்களால் நான் கொண்டிருக்கும் நட்பு உடையாது, கோ. இப்பவும் சொல்வேன் என்னை வலையில் எழுத வைத்தவர் நீங்கள்தான். வருத்தத்திற்கு வருத்தம், மிகுந்த வருத்தம்.

பீர் | Peer சொன்னது…

ஒரு சந்தேகம், நீங்கள் யாருக்காக இந்த பதிவை எழுதியிருக்கிறீர்கள்?

புவனேஸ்வரி? மற்ற பாலியல் தொழிலாளரகள்? அல்லது பாலியல் உறவுக்கு அலையும் ஆண்கள்?

(அதாவது.. யாருக்கு ஆதரவாக)

கோவி.கண்ணன் சொன்னது…

//பீர் | Peer said...
//பெண்கள் அத்தகைய செயல்படாத ஆண்களை விவாகரத்து செய்து கொள்ளலாம் எளிதாக சொல்லிவிட்டுவிடுவோமா ?//

நிச்சயமாக சொல்லலாம்.
//

நண்பரே, ஆளைவிடுங்க.

நானும் இதை இஸ்லாமிய விவாதமாக கொண்டு செல்ல வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டெல்லாம் எழுதவில்லை. ஆனால் ஒரு இஸ்லாமிய அன்பர் அல்ல, இஸ்லாமியர் அனைவருமே பாலியல் தொழில் பற்றிய ஒன்று போல் தான் கருத்து கொண்டிருப்பார்கள் அது பீர் சொன்னாலும் வேறும் யார் சொன்னாலும் அப்படியேதான் இருக்கும். நான் பொதுப்பார்வை விவாததத்திற்கே இதை எழுதினேன். உங்களுக்கு அத்தகைய பொதுப் பார்வையில் இதற்கு தனிப்பட்ட ஒரு கருத்து இருக்கும் என்று நீங்கள் நினைக்கமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். அதனால் விட்டுவிடுவோம். இங்கு மட்டுமல்ல பிற அனைத்து மதம் சார்ந்த உங்கள் விவாதங்களுக்குக் கூட நான் வருவதை தவிர்க்கவே விரும்புகிறேன். அதனால் ஆகப் போவதும் எதுவும் கிடையாது.

மணிகண்டன் சொன்னது…

****
//ஒரு தொழிலை நிச்சயமா கட்டுப்படுத்த முடியாதுன்னு தெரிஞ்சா legalize பண்ணி சட்ட திட்டங்கள் கொண்டுவருது தான் பெஸ்ட் ஐடியா. அந்தவகைல உங்க கருத்து ஓகே.//

கட்டுப்படுத்த முடியா எல்லா தொழிலையும் legalize பண்ணிட்டா குற்றங்கள் அதிகரிக்குமே..மணி.
****
பீர்,

இருக்கலாம். அது ஜஸ்ட் என்னோட கருத்து. பிரச்சனை உள்ள தொழில்களை legalize பண்ணும்போது pros/cons யோசிச்சி பார்த்து தான் செய்யணும்..

ஒரு சில வருடங்களுக்கு முன்னாடி ஒரு நிறுவனத்துல வேலைக்கு சேர Group Discussion வச்சாங்க. டாபிக் - should betting be legalized in cricket ? எல்லாரும் கூடாதுன்னு சொன்னபோது "பண்ணனும்ன்னு" சொன்னா, பேசறதுல கூச்ச சுபாவம் உள்ள எனக்கு பேச வாய்ப்பு கிடைக்கும்ன்னு பேசினேன். யோசிச்சு பார்த்த போது pros நிறைய.(பல நாடுகள் legalize பண்ணி இருந்தாங்க.) அதோட பாதிப்பு தான் அந்த பதில்.

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

நல்ல ஓ.கே.. ஆனால்.. பின்னூட்டங்களை படிக்கவில்லை.

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

/ பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டில் /இல்லை அங்கீகாரம் கிடையாது..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்