பின்பற்றுபவர்கள்

27 அக்டோபர், 2009

யாதும் நாடே யாவரும் பாரீர் - 2

சொந்த மண்ணில் பண்டிகைகள் கொண்டாடுவதற்கும் வெளி நாடுகளில் கொண்டாடுவதற்கும் வேறுபாடு உள்ளது, சிங்கை போன்று இந்தியர் மிகுதியாக வசிக்கும் நாடுகளில் பண்டிகை நாட்கள் நெருங்குவதற்கான ஒரு சில அறிகுறிகள் இருந்தாலும் அங்கு இருக்கும் குட்டி இந்திய பகுதிகள் தவிர்த்து பிற இடங்களில் பண்டிகை வருவதற்கான பெரிய அறிகுறிகள் தெரியாது. மேலும் தீபாவளி போன்ற பண்டிகைகளில் சிறப்பான பட்டாசு ஓசைகளுக்கு தடை இருக்கும். 'இங்கே தீபாவளி சிறப்பாக இருக்கும், பட்டாசுகள் வெடிக்க அனுமதி இருக்கிறது, தீபாவளிக்கு இலண்டன் வாருங்கள்' என்று உறவினர் (மனைவியின் தங்கையின் கணவர்) கேட்டுக் கொண்ட போது, 'லண்டனில் வெடி வெடித்து தீபாவளி கொண்டாட முடியும்' என்று தெரிந்த மகளுக்கு தீபாவளிக்கு லண்டன் செல்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. 'லண்டனில் பட்டாசு சத்தம் கேட்குமா ?' எனக்கும் வியப்பாகவே இருந்தது.

*****

இலண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்ததும் பெரும அளவில் வெள்ளையர்களையும், அங்காங்கே இந்தியர், ஈழத்தவர், ஆப்ரிக்கர் உட்பட பிற இன மக்களையும் பார்க்க முடிந்தது.

மறுநாள் 17 அக்டோபர் தீபாவளி நாள், ஏற்கனவே முறுக்குமாவு மற்றும் பிற மாவுகளுடன் சென்ற என் மனைவி, தீபாவளி பொதுப் பலகாரங்களை தனது தங்கையுடன் செய்து முடித்து வைத்திருந்தார். அன்றைக்குச் செய்ய வேண்டிய ஈரமாவு பலகாரங்களை (இட்லி, தோசை, வடை மற்றும் சுழியம்) ஆகியவற்றை அதிகாலையில் செய்து முடித்திருந்தார்கள். பயணக் களைப்பு தீர்ந்திருந்தால் நானும் எழுந்துவிட்டேன். எண்ணை, சீயக்காய் ஆடைகளை படைத்துவிட்டு, தலைக்கு எண்ணை வைத்து, குளித்துவிட்டு புத்தாடைகளை உடுத்திக் கொண்டு, பலகாரங்களைப் படைத்துவிட்டு உண்டோம்.

வேட்டிக் கட்டி வெளியே செல்லலாம் என்று நினைத்து புது வேட்டியுடன் இலண்டன் சென்று, பண்டிகைக்கும் அதைக் கட்டி இருந்தேன். 'அடிக்கின்ற கடல் காற்றிற்கும், குளிருக்கும் வேட்டியெல்லாம் இங்கே நம்மை சந்தி சிரிக்க வைத்துவிடும்' என்று கருதி திட்டத்தை கடைசியில் கைவிட்டுவிட்டு குளிர் தாங்கும் ஆடைகளை அணிந்து கொண்டேன்.

மணி காலை 11 ஆகி இருந்தது. 'மாலையில் கோவிலுக்கு அழைத்துச் செல்கிறேன், அங்கு சென்று பட்டாசு வெடிக்கலாம்' என்று சொல்லி இருந்தார் உறவினர். இலண்டனில் எங்கெல்லாம் செல்லாம் என்றெல்லாம் திட்டமிடவில்லை. பட்டாசுகளை எடுத்துக் கொண்டு எங்களையும் அவரது காரிலேயே அழைத்துக் கொண்டு சென்றார். அவர்கள் வீட்டில் நாங்கள் தங்கி இருந்த Sutton என்கிற புறநகர் பகுதியில் இருந்து ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு சென்ற முதல் இடம் பக்கிங்ஹம் அரண்மனை, அங்கு கார் நிறுத்தும் இடம் தேடி அலைந்து, நிறுத்திவிட்டு ஒரு பெரிய பூங்கா போன்ற திடல் வழியாக சென்று, அருகில் இருந்த சிறு கடையில் காஃபி அருந்துவிட்டு, அரண்மனைப் பகுதியை அடைந்தோம்.இந்தியாவையும் இன்னும் பிற நாடுகளையும் வென்ற நாட்டின் அரண்மனை இதுதானா ? என்கிற வியப்பும், அதன் விசாலமான அமைப்பும், அங்குவந்த சுற்றுலாவாசிகளின் கூட்டமும், அந்த இடமும் விழிகளை விரிய வைத்தன. வெள்ளையர்கள் மட்டும் இந்தியாவை வெற்றி கொள்ளாவிடில் நாம் (அனைவரும்) கல்வி கற்று இருக்க முடியுமா ? ஆங்கிலம் பயின்றிருக்க முடியுமா ? அதன் மூலம் பல்வேறு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்க முடியுமா ? வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டதில் பெரும் செல்வங்கள் கைவிட்டுப் போனதைத் தவிர்த்து மற்றதெல்லாம் நன்மையே என்பது என் தனிப்பட்ட கருத்து. சீனா இந்தியாவை மென்பொருள் துறையில் வீழ்த்த முடியாமல் போனதற்குக் காரணம் நாம் பெற்ற, அவர்களிடம் இல்லாத ஆங்கிலக் கல்வியே.
அரண்மனையில் ஸ்காட்லாந்து சிப்பாய்கள் அணிவகுப்பு அன்று நடக்கவில்லை. ஒரு சில சிப்பாய்களே காவல் இருந்தனர்.

இங்கிலாந்து (அரசி அரண்மனையில் இருக்கும் அடையாளமாக) தேசியக்கொடி அரண்மனையில் பறந்தது. சில புகைப்படங்களை எடுத்துவிட்டு, அருகில் பூங்கா அருகில் டயானா நினைவோடையில் ஒரு படத்தை எடுத்துவிட்டு கார் நிறுத்திய இடத்திற்கு திரும்ப,

டயானா நினைவோடை
அந்தக் கொடி :

கார் நிறுத்தி இருந்த இடத்திற்கு சற்று தொலைவில் பெரிய ஊர்வலம் சென்று கொண்டிருந்தது, காரை எடுத்துக் கொண்டு அருகில் சென்ற் போது அந்த ஊர்வலம் ஈழ மக்களின் ஊர்வலம் என்பதை அவர்கள் ஏந்தி இருந்த புலிக் கொடி சொல்லியது. அந்த தொப்புள் கொடிகளின் ஊர்வலத்திற்கான காரணம் எனக்கு சரியாகத் தெரியவில்லை, தட்டிகளை சரியாகவும் படிக்க முடியவில்லை.இந்தக் கொடி:

அதைத் தாண்டி போகும் வழியில் (திரும்பவும் அதே அரண்மனை வழியாக) சென்று கடந்த பிறகு ஓர் இடத்தில் மூவர்ண கொடி, தாஜ் ஓட்டல் வாசலில் பன்னாட்டு கொடிகளுடன் இந்தியக் கொடியும் பறந்தது.அங்கிருந்து Big Ben எனப்படும் இலண்டன் மக்கள் அவை (parliment) பகுதி வழியாக, இலண்டன் ஐ (London Eye) எனப்படும் மிகப் பெரிய இராட்டினம் அமைந்த தேம்ஸ் நதிக்கரைக்கு அருகில் ஒரு கார் நிறுத்ததில் காரை நிறுத்திவிட்டு ஆற்று கரையை ஒட்டி இராட்டினத்தைப் பார்த்துவிட்டு, அங்கேயே மெக்டோனல்ட் கடையில் பொறித்த உருளை கிழங்கு துண்டுகள் (French Fries) மற்றும் பானங்களுடன் முடித்துக் கொண்டு, பார்லிமெண்ட் அமைந்த பகுதிக்கு அங்கு இருந்த பாலம் வழியாக சென்று திரும்பினோம். அதற்குள் மாலை 6 மணி ஆகி இருந்தது.


இலண்டன் பாலம் (London Bridge) மற்றும் இலண்டன் கோபுர பாலம் (London Tower Bridge) ஆகியவற்றின் மேலாக பயணித்து இரண்டையும் பார்த்துவிட்டு அருகில் இருந்த Starbucks ல் காஃபி குடித்துவிட்டு இடத்தை அகல மாலை 7 மணி ஆகி இருந்தது


தீபாவளி பட்டாசு வெடிக்கனும் ? 'இங்கு ஐரோப்பாவின் மிகப் பெரிய இந்து கோவில் இருக்கிறது' என்று ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார் உறவினர். போகும் வழியெங்கும் தொலைவில் தெரிந்தன வானவேடிக்கைகளாக தீபாவளி ராக்கெட்டுகள், அங்காங்கே வேட்டு சத்தம். இடத்தை நெருங்க நெருங்க போக்குவரத்து நெரிசல், சென்ற போது இரவு எட்டு மணி. வட இந்திய வடிவமைப்பில் அமைக்கப்பட்ட கோவில். குஜராத்தியர்களின் ஆளுமையில் இருந்தன. தமிழ் ஆட்களை மருந்துக்கு கூட பார்க்க முடியவில்லை (இந்தியர்கள் என்றாலும் வெளி நாட்டிலும் பல்வேறு இந்திய மாநில மக்கள் சேர்ந்தே வாழ்வதில்லை, 'இந்திய தேசியம்' ஒரு மாயை என்பதன் சாட்சியாக இருந்தது) ஆனாலும் நல்ல கூட்டம், பெரிய உணவுக் கூடம், அங்கு உணவுகளை விற்பனை செய்து கொண்டு இருந்தார்கள். அங்கும் பெரிய வரிசை.வெளியில் கூட்டம் கூட்டமாக வாணவேடிக்கையை எதிர்நோக்கி வாணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பொறுமை காக்க முடியவில்லை. குழந்தைகள் (எனது மகளும், உறவினர் மகளும்) மிகுதியான அசதி அடைந்திருந்தார்கள், கோவில் உள்ளே செல்வதற்கு வழி தற்காலிகமாக அடைக்கப்ப்ட்டு இருந்ததால் காத்திருக்காமல் திரும்பிவிட்டோம். அப்பொழுது வாணவேடிக்கை தொடங்கி இருந்தது. நல்ல பசி, அங்கே திரும்பும் வழியில் Wembley பகுதியில் அமைந்த 'சென்னை தோசா' சென்றோம். அங்கும் நல்ல கூட்டம் அரை மணி நேர காத்திருத்தலுக்கு பிறகு இரவு உணவு முடித்துக் கொள்ள மணி இரவு 10:30 ஆகி இருந்தது.


அங்கே அருகில் கார் நிறுத்திய இடத்திலேயே பட்டாசுகளை எடுத்து ஒவ்வொன்றாக வெடித்தோம். அந்த பகுதி எங்கும் பிற இடங்களிலும் பட்டாசுகள் பிறர் வெடிக்கும் வெடித்த சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தன. வானத்தில் வானவேடிக்கை மத்தாப்புகள் மாறி மாறி ஒளிர்ந்து கொண்டு இருந்தன. நள்ளிரவு 11 மணிக்கு அங்கிருந்து வீடு திரும்பினோம். இரவு 11 மணி வரை இலண்டனில் பட்டாசு சத்தம் கேட்டுக் கொண்டிருந்ததை நினைக்கும் போது 'நாம இருப்பது இலண்டனா ? தமிழ்நாடா ?' என்கிற வியப்பும் ஏற்பட்டது.

பயணக் குறிப்பு : அரண்மனையும், பார்லிமெண்ட் அமைந்த பகுதிகள் நகரப்பகுதிகளாகும், அங்கு சுற்றுலாவிற்கு பேருந்துகளை மிகுதியாக இயக்குகிறார்கள். எல்லாம் மேல்மாடி காலி டைப் பேருந்துகள். அதில் அமர்ந்து சென்றால் அந்தப் பகுதி முழுவதையும் வலம் வரலாம். பயணச் சீட்டு விலை விவரங்கள் ஒரு நாளுக்கு தனி நபர் - 21 பவுண்ட், 4 பேர் கொண்ட இல்லத்தினருக்கு - 54 பவுண்ட். மற்ற விவரங்கள் இங்கே.

மறுநாள் சென்ற இடம் விஐபிகள் நிறைந்த இடம், அங்கு சென்றுவிட்டு, பதிவுலகில் நான் 'பெரியவர்' என்று ஒருவரை நினைத்து, அவரைப் பார்த்ததும் கொஞ்சம் ஏமாந்ததைப் பற்றிச் சொல்கிறேன்.

28 கருத்துகள்:

அப்பாவி முரு சொன்னது…

அந்த அழகிய!? லண்டன் மாநகரிலே.,
தேம்ஸ் நதிக்கரை ஓரத்திலே.,
பகலும் - இரவும் கைகூடும் வேளையிலே.,
கருப்பு, வெளுப்புமான மக்களினிடையே.,


பழுப்பாய் எங்(.)கண்ணன் நின்னுக்கிட்டு இருந்தாரூ


:)))

அப்பாவி முரு சொன்னது…

மேற்காணும் எனது விமர்சனைத்தை மேற்கோள் காட்டி கும்மியடிக்க தடை செய்யப்படுகிறது.

t & c applied.

சின்ன அம்மிணி சொன்னது…

ஸ்காட்லேண்ல கிவியன் இருக்காரே. பாக்க முடிஞ்சதா

பித்தனின் வாக்கு சொன்னது…

/ பகலும் - இரவும் கைகூடும் வேளையிலே.,
கருப்பு, வெளுப்புமான மக்களினிடையே.,


பழுப்பாய் எங்(.)கண்ணன் நின்னுக்கிட்டு இருந்தாரூ //

இந்த நிறவெறிக் கொடுமையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இதுக்கு முருகு அவர்கள் வங்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவர் குழுமத்தால் கண்டிக்கப் படவேண்டியவர். இருந்தாலும் மிகப் பெரிய கவனிப்பு என்ற பரிகாரத்தால் இதை சரி செய்ய வேண்டிமாய் கேட்டுக்கொள்கின்றேன். பதிவும் படங்களும் மிக அருமை கோவியார். மிக நல்ல பதிவு.

இராம்/Raam சொன்னது…

படமெல்லாம் நல்லா வந்திருக்கு.. :)

வடுவூர் குமார் சொன்னது…

Good Pics.

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
அந்த அழகிய!? லண்டன் மாநகரிலே.,
தேம்ஸ் நதிக்கரை ஓரத்திலே.,
பகலும் - இரவும் கைகூடும் வேளையிலே.,
கருப்பு, வெளுப்புமான மக்களினிடையே.,

பழுப்பாய் எங்(.)கண்ணன் நின்னுக்கிட்டு இருந்தாரூ

:)))
//
பாட்டெல்லாம் பட்டையை கிளப்புறிங்க. சின்ன வயசிலேர்ந்தே இப்படித்தானா ?

கோவி.கண்ணன் சொன்னது…

/அப்பாவி முரு said...
மேற்காணும் எனது விமர்சனைத்தை மேற்கோள் காட்டி கும்மியடிக்க தடை செய்யப்படுகிறது.

t & c applied.
//

பொழச்சிப் போகட்டும் என்று ஒரு சான்ஸ் கொடுக்கக் கூடாதா முரு ?

கோவி.கண்ணன் சொன்னது…

//சின்ன அம்மிணி said...
ஸ்காட்லேண்ல கிவியன் இருக்காரே. பாக்க முடிஞ்சதா
//

லண்டனில் யார் யார் இருக்கிறார்கள் என்கிற விவரம் தெரியாது, அதுமட்டுமில்லாமல் வேலை நாட்களில் அங்குள்ளவர்களை தொந்தரவு செய்யவும் விருப்பம் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...

இந்த நிறவெறிக் கொடுமையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இதுக்கு முருகு அவர்கள் வங்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவர் குழுமத்தால் கண்டிக்கப் படவேண்டியவர். இருந்தாலும் மிகப் பெரிய கவனிப்பு என்ற பரிகாரத்தால் இதை சரி செய்ய வேண்டிமாய் கேட்டுக்கொள்கின்றேன்.//
:)

// பதிவும் படங்களும் மிக அருமை கோவியார். மிக நல்ல பதிவு.

12:26 PM, October 27, 2009
//

நன்றி பெரியவரே !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//இராம்/Raam said...
படமெல்லாம் நல்லா வந்திருக்கு.. :)
//

படமெடுக்கும் போது உன்னைத்தான் நினைத்தேன். வளைச்சு வளைச்சு எடுத்துவிட்டு பிறகு கணிணியில் போட்டு பார்க்கும் போது ஒண்ணு கூட தேறாமல் போய்விடப் போகிறது என்கிற ஐயம் இருந்தது இராம்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
Good Pics.
//
நன்றி !

துளசி கோபால் சொன்னது…

அருமை. படங்களும் நல்லா இருக்கு.

மேடம் டுஸாட் போனீங்கன்னு நினைக்கிறேன்!

அகல் விளக்கு சொன்னது…

பதிவும் படங்களும் சூப்பர்...

//மறுநாள் சென்ற இடம் விஐபிகள் நிறைந்த இடம், அங்கு சென்றுவிட்டு, பதிவுலகில் நான் 'பெரியவர்' என்று ஒருவரை நினைத்து, அவரைப் பார்த்ததும் கொஞ்சம் ஏமாந்ததைப் பற்றிச் சொல்கிறேன்.//

யாரு தல அது???

பாசக்கார பயபுள்ள... சொன்னது…

உங்கள் கட்டுரை மிக அருமை. நீங்க என்னும் பகுதிக்கு போகலை போலிருக்கு.. அது நம்ம தமிழ் நாட்டுல இருக்குற பீலிங் கொடுக்கும்.. அங்கதான் இலண்டன் முருகன் கோவில் மற்றும் அஷ்ட லட்சுமி கோவில் இருக்கு..

’டொன்’ லீ சொன்னது…

ம்ம்..லண்டனில் தீபாவளியா..? லண்டனில் நம்மவர்கள் கோயிலும் இருக்கோனும்..

திகழ் சொன்னது…

அருமை
படங்களும் இடுகையும்

அறிவிலி சொன்னது…

படங்கள் அருமை.

// 'இங்கு ஆசியாவின் மிகப் பெரிய இந்து கோவில் இருக்கிறது' என்று ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார் உறவினர்//

அவ்வ்வ்வ்... அத எப்படி அங்க கொண்டு போனாங்க??????

கோவி.கண்ணன் சொன்னது…

// அறிவிலி said...
படங்கள் அருமை.

// 'இங்கு ஆசியாவின் மிகப் பெரிய இந்து கோவில் இருக்கிறது' என்று ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார் உறவினர்//

அவ்வ்வ்வ்... அத எப்படி அங்க கொண்டு போனாங்க??????
//

அண்ணே,

அதுவந்து அதுவந்து ஐரோப்பாவின் என்று இருக்க வேண்டும் தவறுதலாக ஆசியா என்று எழுதிவிட்டேன்.

T.V.Radhakrishnan சொன்னது…

பதிவும் படங்களும் மிக அருமை கோவி..ஆமாம்..நிறைய காஃபி குடிச்சீங்க போல

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நன்று...

தருமி சொன்னது…

உலகம் சுற்றி வேட்டு போடும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
அருமை. படங்களும் நல்லா இருக்கு.

//

மிக்க நன்றி அம்மா

//மேடம் டுஸாட் போனீங்கன்னு நினைக்கிறேன்!
//

அதே !

கோவி.கண்ணன் சொன்னது…

//அகல் விளக்கு said...
பதிவும் படங்களும் சூப்பர்...

//மறுநாள் சென்ற இடம் விஐபிகள் நிறைந்த இடம், அங்கு சென்றுவிட்டு, பதிவுலகில் நான் 'பெரியவர்' என்று ஒருவரை நினைத்து, அவரைப் பார்த்ததும் கொஞ்சம் ஏமாந்ததைப் பற்றிச் சொல்கிறேன்.//

யாரு தல அது???
//

அகல் விளக்கு,

பாராட்டுக்கு நன்றி !

அந்த தல வெ.இராதாகிருஷ்ணன். அடுத்தப் பகுதியில் படத்துடன் விவரம் இருக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
பதிவும் படங்களும் மிக அருமை கோவி..ஆமாம்..நிறைய காஃபி குடிச்சீங்க போல
//

அங்கெல்லாம் 'குடிக்க' நம்ம ஊரு சுவையோடு ஓரளவு ஒத்து வருவது காஃபி தானே.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
நன்று...
//

நன்றி !

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

கண்ணையும் காமெராவையும் திறந்து வைத்துக் கொண்டு ஊர் சுற்றுவது கோவிக்குப் பிடித்த ஒன்று. அருமையான படங்கள் - அழகான பயணக்கட்டுரை.

ஒவ்வொரு இடம் பற்றிய வர்ணனை படிக்கும் போது நாங்கள் சுற்றிய மகிழ்வான நாடகள் நினைவிற்கு வந்தன

நல்வாழ்த்துகள் கோவி

கோவி.கண்ணன் சொன்னது…

//cheena (சீனா) said...
அன்பின் கோவி

கண்ணையும் காமெராவையும் திறந்து வைத்துக் கொண்டு ஊர் சுற்றுவது கோவிக்குப் பிடித்த ஒன்று. அருமையான படங்கள் - அழகான பயணக்கட்டுரை.

ஒவ்வொரு இடம் பற்றிய வர்ணனை படிக்கும் போது நாங்கள் சுற்றிய மகிழ்வான நாடகள் நினைவிற்கு வந்தன

நல்வாழ்த்துகள் கோவி
//

சீனா ஐயா,
தங்கள் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்