பின்பற்றுபவர்கள்

13 அக்டோபர், 2009

தண்ணீருக்கு மட்டும் விக்கல்: போங். தம்.பிக்கள்

அலும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள தமிழ் மக்களுக்கு நிவாரண உதவிகளோ, வேறு தேவைகளோ அவசியமாக இல்லை. அவர்கள் தங்களை சொந்த ஊரில் குடியமர்த்த வேண்டும் என்பதைவிட தொடர்ந்து இங்கேயே இருக்க விரும்புவதையே பிரதான கோரிக்கையாக முன் வைத்தனர். முகாம்களில் உள்ள மக்கள் அனைத்துலக தலை விதிகளின்படி பராமரிக்கப்படுகிறார்கள் என்று மமுக - போங்கிரஸ் கூட்டணிக் குழுவில் இடம் பெற்றுள்ள 2 போங்கிரஸ் தம்.பிக்கள் கூறியுள்ளனர்.

குடிநீர் குடிப்பதில்தான் விக்கல் நிற்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தலங்கை அரசால் அமைக்கப்பட்டுள்ள இடம் பிடுங்கப்படோர் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிவதற்காக மமுக, போங்கிரஸ், தறுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தம்.பிக்கள் அடங்கிய ஒரு குழு தலங்கை போயுள்ளது.

இவர்கள் கவுனியாவில் உள்ள மிகப் பெரிய முகாமின் சில பகுதிகளைப் பார்வையிட்டு அங்குள்ள தமிழர்களைச் சந்தித்து நிறைகளைக் கேட்டறிந்தனர்.

பாதுகாப்புக்காகத்தான் முள் வேலி...

இதுகுறித்து போங்கிரஸ் சார்பில் இடம் பெற்றுள்ள தம்.பி. பதர்சன காட்சியப்பன் கூறுகையில்,

போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு கவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் அனைத்துலக தலை விதிகளுக்கு ஏற்றார் போல அமைக்கப்பட்டு உள்ளன. காட்டு மிருகங்களிடம் மக்களை பாதுகாக்க அங்கு பாது"காப்பு"க்காகவே முள்வேலி போடப்பட்டுள்ளது.

முகாமில் இருப்பவர்கள் தங்கள் ஊருக்கு உடனடியாக போக விருப்பம் இல்லை என்று கோரிக்கை விடுகிறார்களே தவிர வேறு எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.

முகாமில் எல்லா இடங்களுக்கும் நாங்கள் சுதந்திரமாக சென்றோம். யாரையும் சந்திக்க கூடாது என்று எங்களுக்கு தடை விதிக்கவில்லை. மக்கள் நிறைகளையும், நிறைவேற அபிலாசைகளையும் கேட்டறிந்தோம்.

அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளோ, வேறு தேவைகளோ எந்த காலத்திலும் அவசியமாக இல்லை. அவர்கள் தங்களை சொந்த ஊரில் குடியமர்த்த வேண்டாம் என்பதையே பிரதான கோரிக்கையாக முன்வைத்தனர். முகாம்களில் உள்ள மக்கள் அனைத்துலக தலைவிதிகளின்படி பராமரிக்கப்படுகிறார்கள் என்றார்.

அவலம் எல்லாம் ஒன்றும் இல்லை...

ஜே.ஜே. வாரூண் கூறுகையில்,

இடம் பெயர்ந்து முகாம்களில் இருக்கும் தமிழர்கள் ஊடகங்களில் வந்த தகவலை போல எந்த அவலங்களை எதிர் நோக்கவில்லை. முகாம்களை நேரில் சுற்றி பார்த்தன் மூலம் இந்த உண்மைகளை கண்டறிந்துள்ளோம். இங்கு எல்லோருடன் அமர்ந்து பொதுவில் 'இருப்பது' தான் மகிழ்ச்சியாக, அமைதியாகவும் 'இருப்பதாகவும்', நிலச்சோறு சாப்பிடுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்

காய்கறிக்கு மட்டும்தான் சிக்கல்...

முகாம்களில் உள்ள மக்கள் குடிநீர் மற்றும் காய்கறி போன்றவற்றை பெற்றுக் கொள்வதில் விக்கல்களை எதிர்நோக்கி வருவதாக மட்டும் தெரிவித்தனர். நிறைய தண்ணீர் காட்டப்பட்டு இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்படும் என்று கவுனியா கலெக்டர் உறுதியளித்து உள்ளார்.

காந்தியா திரும்பியதும் இது தொடர்பாக பிரதமர் கல்மோகன்சிங், முதல்- அமைச்சர் அருணாநிதி , போங்கிரஸ் தலைவர் சானியாசாந்தி ஆகியோரிடம் விளக்கம் அளிக்க உள்ளோம்.

மத்திய அரசின் மூலம் இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கனாக் காணப்படும் என்றார் வாரூண்.

பின்குறிப்பு: பதிவுக்கும் இந்த செய்திக்கும் தொடர்பில்லை

12 கருத்துகள்:

பாசக்கார பயபுள்ள... சொன்னது…

விட்டா இவனுங்க மொத்த தமிழினத்திற்கே மொட்டையடிச்சு, காதுகுத்தி காதுல பூவும் வச்சுருவானுங்க.. படுபாவி பயலுக...

பாசக்கார பயபுள்ள... சொன்னது…

"ரோசா" பாக்ஸே தெனமும் கடா வெட்டி சோறு போடுறாருனு இப்ப தான் ம.மு.க தம்.பி M.K வாலு சொல்லிருக்காரு.

ஷாகுல் சொன்னது…

பனிமொழி கருத்து தெரிவிக்க வில்லையா?

கொடுமை. இவர்கள் சென்றிருக்கவே வேண்டாம்.

G.Ragavan சொன்னது…

what I heard through links is that.. they are planning a bridge between India and Srilanka. Indian government thinks that is safe for India. And that contract is going to Mr.Kanimozhi. For that discussions also the gang went from here. All for money. Not for people. To ensure the tests (whether the bridge can be constructed or not) are done in "correct" way, already some official arrangements are done.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தலங்கை அரசால் அமைக்கப்பட்டுள்ள இடம் பிடுங்கப்படோர் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிவதற்காக மமுக, போங்கிரஸ், தறுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தம்.பிக்கள் அடங்கிய ஒரு குழு தலங்கை போயுள்ளது.//

தமிழர்களை தமிழர்கள் என்று குறிப்பிட்டதை மதிக்கிறேன்.

மத்த நாயிகள் ஆதாயம் இல்லாம ஆத்த கட்டி எறைக்காதுன்னு நல்லாத் தெரியும்.
இந்த பயணத்தின் வெற்றி தோல்விக்கு அளவுகோல் என்ன?

அதை நிர்ணயித்திருக்கிறதா இந்த கு(பு)ழு!?

Matra சொன்னது…

This reminds me of tours conducted in the Soviet Union and the communists who went there as part of these.

These idiots used to go there to see what the Russians wanted them to see, met those the Russians wanted them to meet and came back with great stories of the so called great life out there.

There were enough idiots to believe the stories brought back by these idiots.

Hopefully, this time the people wake up and don't believe these stories.

aathirai சொன்னது…

எம்பிகளுக்கும் இப்படி 5 நட்சத்திர வசதிகளோடு முள்வேலி பாதுகாப்போடு ஒரு பிக்னிக் கேம்ப் அமைத்து கொடுக்க சோனியாவிடம் கோரிக்கை வைத்தால் என்ன ?

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//aathirai


எம்பிகளுக்கும் இப்படி 5 நட்சத்திர வசதிகளோடு முள்வேலி பாதுகாப்போடு ஒரு பிக்னிக் கேம்ப் அமைத்து கொடுக்க சோனியாவிடம் கோரிக்கை வைத்தால் என்ன ?//

ரிபீட்ட்ட்ட்

SanjaiGandhi சொன்னது…

//aathirai


எம்பிகளுக்கும் இப்படி 5 நட்சத்திர வசதிகளோடு முள்வேலி பாதுகாப்போடு ஒரு பிக்னிக் கேம்ப் அமைத்து கொடுக்க சோனியாவிடம் கோரிக்கை வைத்தால் என்ன ?//

நல்ல யோசனை.. யாரங்கே.. இவருக்கு ஒரு நோபல் பரிசு பார்சல் போடுங்க.. ஒபாமா கூட இப்டி ஓசன சொல்லியே தான் நோபுல் வாங்கினார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi said...
//aathirai


எம்பிகளுக்கும் இப்படி 5 நட்சத்திர வசதிகளோடு முள்வேலி பாதுகாப்போடு ஒரு பிக்னிக் கேம்ப் அமைத்து கொடுக்க சோனியாவிடம் கோரிக்கை வைத்தால் என்ன ?//

நல்ல யோசனை.. யாரங்கே.. இவருக்கு ஒரு நோபல் பரிசு பார்சல் போடுங்க.. ஒபாமா கூட இப்டி ஓசன சொல்லியே தான் நோபுல் வாங்கினார்.
//

அந்த விருதுக்கு நான் அன்னை சானியாசாந்தியை முன்மொழிகிறேன்

SanjaiGandhi சொன்னது…

கோவிஜி, *த்து ஸ்பெஷலிஸ்டான நீங்க கூட தகுதியானவர் தான். அண்ணன் நோ என் சமீபத்திய பதிவில் பின்னி பெடலெடுக்கிறார். கவனிச்சிங்களா? :))

http://www.blog.sanjaigandhi.com/2009/10/blog-post_10.html

கோவி.கண்ணன் சொன்னது…

// SanjaiGandhi said...
கோவிஜி, *த்து ஸ்பெஷலிஸ்டான நீங்க கூட தகுதியானவர் தான். //

உங்களுக்கு இல்லேன்னு சொல்ல வர்றிங்களா ? அவ்வ்வ்வ்

//அண்ணன் நோ என் சமீபத்திய பதிவில் பின்னி பெடலெடுக்கிறார். கவனிச்சிங்களா? :))//

NO NO ...அவரை மதித்து, அவர் ஆபாசமாக எழுதாததால் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுத்து பின்னூட்டங்களை அனுமதிப்பதுடன் சரி. படிப்பதெல்லாம் கிடையாது.

ரசிக சிகாமணிகள் மிகுதியாக இருப்பதால் தனியாக
அவர் பதிவு தொடங்கி எழுதலாம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்