"அண்டாகா கசம், அபுக்காகாகசம் திறந்துவிடு சிசே..." அலிபாபா குகையைத் திறக்கப் பயன்படுத்தியதாக கதைகளில் சொல்லப்படும் மந்திரச் சொல் அது. இது போன்ற ஒரு மந்திர சொற்களே மதங்களின் முதுகெலும்பாக இருக்கிறது என்றால் அது 100 விழுக்காடு உண்மை தான்.
ஒருவர் கிறித்துவ மதத்தில் காட்டும் சுவர்கம் செல்ல வேண்டுமென்றால் "திரித்துவத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்கிற பற்றுறுதி எடுத்துக் கொண்டு, "பரம பிதாவே என்னை நரகத்தில் இருந்து விடுவிக்கிறார், அவரே மகனாவும் (ஏசு), ஆவியானவராகவும் இருக்கிறார்" என்று நம்பினால் நீங்கள் ஒரு கிறித்துவர் ஆகிவிடுகிறீர்கள். அதற்கான சடங்குகள் கூடத் தேவை இல்லை, பைபிளை நம்புவராக இருந்தால் உங்களுக்கு கிறித்துவ சுவர்க்கம் கிடைக்கும் என்கிறது அடிப்படை கிறித்துவ தர்மம்.
"அல்லாவே மிகப் பெரியவன், முகமது நபியே இறுதி இறைத் தூதர்" என்ற சொற்களின் மீது நம்பிக்கையை நீங்கள் ஏற்படுத்திக் கொண்டால் உங்களுக்கு இஸ்லாமியர்கள் காட்டும் சுவனத்தின் கதவுகள் திறந்திருக்கும், ஏனென்றால் அது மதமல்ல மார்க்கம் என்று இஸ்லாமியர்களால் சொல்லப்படுகிறது.
"புத்தம் சரணம் கச்சாமி" என்ற சொற்களின் மீது நம்பிக்கைக் கொண்டால் உங்களுக்கு புத்தமதத்தின் சுவர்க்கம் திறந்து வைக்கப்பட்டு பரிநிர்வாண நிலை எனும் மோட்சம் அடைவீர்கள்
"நமசிவாயம் வாழ்க, நாதன் தாழ்வாழ்க" என்று சொல்லிவிட்டால் உங்களுக்கு கையிலாயத்தின் நுழைவு சீட்டுக் கிடைத்துவிடும்.
"ஓம் நமோ நாராயணா" என்று நாராயணனைத் துதித்தால் நீங்கள் வைகுண்டத்தின் வாசலுக்கு இட்டுச் செல்லப் படுவீர்கள்.
எத்தனை எத்தனை மதங்களடா அதில் எத்தனை எத்தனை மந்திரங்களடா, மதங்களின் துறத்தல்களில் இருந்து ஓடினேன் ஓடினேன் என்று ஓடி ஓடி ஒளியும் / ஒழியும் வரை இந்த மதங்கள் விடாது துறத்துகின்றன.
மதங்கள் சுட்டிக்காட்டும் சுவர்கமும் நரகமும் உத்திரவாதம் எதுவும் இல்லாத ஒரு நம்பிக்கை மட்டும்தான் என்பதை மதவாதிகள் புரிந்து கொள்வதே இல்லை. இறந்த பிறகு போவாய் என்று சொல்லப்படும் சொர்கத்துக்கு நுழைவு சீட்டுகளை கட்டாய விற்பனை மூலம் அதற்கான எந்த ஒரு உறுதியும் இல்லாது நம்பிக்கைக் கொள் என்று மட்டுமே கூறி தலையில் கட்டுவதுதான் மதவாதிகளின் தலையாய கடமையாக இருக்கிறது. இந்த நம்பிக்கை எதுவுமே இல்லாத காட்டுவாசிகள் விருப்பக் கடவுளை வழிபட்டுவிட்டு அமைதியாக காலத்தை ஓட்டுகின்றனர். நாகரீக மனிதர்கள் என்று கூறிக் கொள்ளும் நகரமனிதர்கள் தான் அடித்துக் கொண்டு சாகிறார்கள்.
அனைத்து வல்லமை கொண்டக் கடவுள் பல மதங்களைப் படைத்து இறுதியாக ஒரே ஒரு மதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் / அல்லது ஏற்காவிட்டால் உங்களுக்குள் அடித்துக் கொல்லுங்கள் என்று சொல்கிறார் என்பது நம்பக் கூடியதும், அறிவுக்கு ஏற்றவையா ?
மதங்களை ஒழிக்காமல் மனிதர்களுக்கு எந்த ஒரு விடுதலையும் ஏற்பட்டுவிடாது.
* மனிதவேறுபாடுகளை ஒழிக்க மதங்களை ஒழிக்காமல் வேறு எதை ஒழிப்பது ?
* மதங்களை ஒழிக்காமல் மதத் தீவிரவாதங்களை ஒழிக்க முடியுமா ?
* மதவேறுபாடுகளை மறந்து மதத்தின் பெயரால் செயல்படும் தீவிரவாதத்தை தடுப்பதற்கான கூறுகள் உள்ளனவா ?
* மதம் வேறு மதத் தீவிரவாதம் வேறு என்றால் எந்த புள்ளியில் வேறுபடுகின்றன ?
* மதம் தீவிரவாதிகளுக்கு உடமையானது இல்லையா ? பிறகு ஏன் அவர்கள் மதத்தின் பெயரால் செய்கிறார்கள் ?
* மதத்தீவிரவாதம் காலத்தின் கட்டாயம் அல்லது அந்த சூழல் அமைந்திருக்கிறது என்றால் அதில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமே பலியாகுவது ஏன் ?
* மதத் தீவிரவாதம் பொதுமக்களுக்கான போர் பாதிக்கப்படுவதால் பாதகமில்லை என்றால் மதம் யாருக்காக ?
இந்தக் கேள்விகளுக்கு விடைதெரிந்தால் சொல்லுங்கள்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
57 கருத்துகள்:
எல்லா மதத்திலும் சொர்க்கம் செல்வது ரொம்ப சுலபம் போலிருக்கே :)
பதிவில் இருக்கும் படத்தில் விநாயகர், புத்தர் என அனைவர் படம்மும் இருக்கு.. இதில் முகமது நபி படம் எங்கே?
ஏதோ என்னால முடிஞ்சது...
- காமன் மேன் :)
so there is a place called heaven available?
;)
//பதிவில் இருக்கும் படத்தில் விநாயகர், புத்தர் என அனைவர் படம்மும் இருக்கு.. இதில் முகமது நபி படம் எங்கே?
ஏதோ என்னால முடிஞ்சது...//
ஸ்வாமிக்கே இவ்வளவு குசும்பா :)
//ஸ்வாமி ஓம்கார் said...
பதிவில் இருக்கும் படத்தில் விநாயகர், புத்தர் என அனைவர் படம்மும் இருக்கு.. இதில் முகமது நபி படம் எங்கே?
ஏதோ என்னால முடிஞ்சது...
- காமன் மேன் :)
//
அதில் ஒரு முகமதியர் படம் இருக்கு, அதை முகமது நபியாக நினைத்துவிடக் கூடாது என்பதை காமன்மேன்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.
:)
//ஜோ/Joe said...
எல்லா மதத்திலும் சொர்க்கம் செல்வது ரொம்ப சுலபம் போலிருக்கே :)
//
இன்னும் கொஞ்ச நாளைக்கு பிறகு செல்போன் நிறுவனங்களின் சிம்கார்ட் ரேஞ்சுக்கு அந்தந்த மதங்களின் சொர்கத்திற்கு டிக்கெட் பெட்டிக்கடைகளில் கிடைக்கலாம்
:)
//யாசவி said...
so there is a place called heaven available?
;)
//
ஏழுகடல் ஏழு மலைகள் தாண்டிச் சென்றால் வருமோ என்னவோ !
:)
இந்த ஏழுகடல் கான்சப்டை நம்ம ஆட்கள் பெருங்கடலாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்
//ஜோ/Joe said...
//பதிவில் இருக்கும் படத்தில் விநாயகர், புத்தர் என அனைவர் படம்மும் இருக்கு.. இதில் முகமது நபி படம் எங்கே?
ஏதோ என்னால முடிஞ்சது...//
ஸ்வாமிக்கே இவ்வளவு குசும்பா :)
//
அவருக்கென்ன சொல்லிவிட்டு நிஷ்டயில் அமர்ந்துவிடுவார்.
//இந்தக் கேள்விகளுக்கு விடைதெரிந்தால் சொல்லுங்கள்.//
எனக்கும் தெரியவில்லையே!
சொர்க்கம் என்று இருந்தால் அதில் நான் மட்டுமே இருப்பேன் என்பதுதான் என் நம்பிக்கை
//சொர்க்கம் என்று இருந்தால் அதில் நான் மட்டுமே இருப்பேன் என்பதுதான் என் நம்பிக்கை//
நீங்க அங்கே போனா அங்கே இருக்கிறவங்க எல்லோரும் அடிச்சு பிடிச்சு வெளியேறிடுவாங்கன்னு சொல்லுறீங்களா? :)
எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும்போது அங்கே அவியல் வராது! அவியலுக்குக் கூட, எது எது எந்த விகிதத்தில் இருந்தால் சரியாக வரும் என்ற நிர்ணயம் இருக்கிறது!
இந்த மாதிரிக் குழப்பிக் கொள்வதில் வருவது ஒன்றே ஒன்று தான், குழப்பம்.
முதலில், சுவர்க்கம் நரகம் என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான எதிர்பார்ப்புக்கள், கற்பனைகள் இருக்கின்றன. அதையொட்டி, ஒவ்வொரு நம்பிக்கையும் அதற்குத் தகுந்த மாதிரி, யோசிக்க ஆரம்பிக்கிறது.
அப்படி யோசிக்க ஆரம்பித்த சமயங்கள், நம்பிக்கைகள் ஏதோ ஒரு கட்டத்தில் தேங்கிப் போய் விடுகின்றன.காரணம், அந்த சிந்தனையை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார் இல்லாததே. ஆக, ஒரு தருணத்தில் உண்மையாகத் தெரிந்தது, காலம் செல்லச் செல்ல, கேள்விகள் தொடர்ந்து வரும்போது பதில் சொல்ல முடியாததால் என்று மட்டும் இல்லை, பதிலைத் தேடுவாரும் இல்லை என்பதாலேயே, பழையதாகி, மூட நம்பிக்கைகள் என்றும் ஆகி விடுகின்றன.
உதாரணமாக, இஸ்லாம் தோன்றிய காலத்தில், அந்த நேரத்தில் கண்டறியப்பட்ட அறிவியல் உண்மைகளையும் உள்ளடக்கி இருந்தது. ஆப்ரகாமைட் மதங்களில் கொஞ்சம் முற்போக்கானதாகவும், அதே நேரம், அரேபியப் பாலைவனத்துக் கடுமையைத் தாக்குப் பிடிப்பதாகவும் இருந்தது என்னவோ உண்மை. ஆனால், நபிகளுக்குப் பின்னால், கலீபாக்களின் காலத்திலேயே அது தேங்க ஆரம்பித்து விட்டது.
அதே நேரம், கீழைய நாடுகளில் தத்துவ விசாரம் என்பது தடையில்லாமல் வளர்ந்து கொண்டிருந்தது. வேற்றுமைக்குள்ளும், ஒற்றுமையைக் காண முடிந்த இந்தப் பிறவியின் அதிசயத் தன்மையைக் கண்டறிந்தது. எங்கோ கடவுள் என்பதை, ஒரு ஆரம்பமாகச் சொன்ன போதிலும், கடவுள் என்பது உனக்குள்ளேதான் என்பதையும் சொன்னது. புரிந்துகொள்வதன் ஒவ்வொரு படித்தரத்துக்குத் தகுந்த மாதிரி, வெளிச்சத்தை நோக்கிப் படிப்படியாக உயரும் பாதையாக இந்தியத் தத்துவ மரபு மிக ஆழமாகவே சொல்லியிருக்கிறது.
சமணம், பவுத்தம் என்று, இந்தத் தத்துவ மரபின் மூலக் கூறுகளை எடுத்துக் கொண்டு வெறும் சடங்குமயமாவதை மட்டுமே நிராகரித்த பிரிவுகளும், நாத்திகத்தையும் உண்மையைக் காண்பதற்கான ஒரு வழியாகவும், இப்படி எல்லாவிதமான சாத்தியக் கூறுகளையும், அல்லது எதையுமே நிராகரிக்காமல், எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிற ஒரு பக்குவ நிலைக்குத் தயார் செய்வதில் இந்தியத் தத்துவ தரிசனத்துக்கு நிகர் ஏதுமில்லை.
கொஞ்சம் ஆரவாரங்களை ஒதுக்கி விட்டுச் சிந்திப்போமேயானால், ஒளியை நோக்கி உயர்கிற தாவரம் போல, இங்கே இந்திய தத்துவ மரபு சொல்வதும்,ஒவ்வொரு படியாக...!
கோவி அவர்களே,
மதம்,தீவிரவாதம் குறித்தான உங்களுடைய 7 கேள்விகளுக்கு
என்னுடைய பதில்கள்:
அடிப்படையில் தீவிரவாதம் குறித்து ஒரு விஷயத்தை புரிந்து
கொள்ளுங்கள்.
மதம் தான் தீவிரவாதத்தை தூண்டிவிடுகிறது என்ற ஆணித்தரமான
உங்கள் மூடநம்பிக்கை முற்றிலும் தவறு.
உலகமெங்கும் பிரச்சினையாக கருதப்படும் இசுலாமிய பயங்கரவாதம்
காஃபீர்களை அழிக்க வேண்டும் என்ற இசுலாமிய மதவெறியிலிருந்து உருவாகவில்லை
ஒவ்வொரு நாட்டிற்கும், பகுதிக்கும் தனித்தனியான வரலாற்றுக்காரணங்கள் உள்ளன. ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தை அகற்றுவதற்காக தாலிபான்களையும், பின்லாடனையும் வளர்த்து விட்டது அமெரிக்கா. காஷ்மீர் மக்களின் போராட்டத்தை, ஆரம்பத்தில் மதச்சார்பற்றதாக இருந்த இயக்கங்களை மதவாதத்தில் மூழ்கவைத்து சிதைக்கும் வேலையை இந்திய அரசு செய்தது. பின்னர் பாக்கிஸ்தான் அதை நன்கு பயன்படுத்திக்கொண்டது. இந்தியாவின் பல இடங்களில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு மதவெறியர்களின் கலவரங்கள் காரணமாக இருக்கின்றன. கோவை குண்டுவெடிப்பெல்லாம் பாக்கின் மேற்பார்வையில் நடக்கவில்லை. நியாயம் கிடைக்காத முசுலீம் இளைஞனின் கோபமே அதை சாத்தியமாக்குவதற்கு போதுமானதெனும்போது ஐ.எஸ்.ஐக்கு என்ன தேவை இருக்கிறது?
எனவே இங்கு இஸ்லாமிய மார்க்கத்தின் தேவையும் என்ன இருக்கிறது.
பாலஸ்தீனின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா, ஈராக்கின் போராளிகள் எல்லாரும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்காக போராடுகிறார்கள். இவர்கள் எல்லோரையும் முசுலீம் பயங்கரவாதம் என சித்தரிப்பது எந்த விதத்தில் நியாயம் கோவி சார் ??
இது இசுலாமிய பயங்கரவாதம் குறித்த பிரச்சினை மட்டுமல்ல இன்று தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் காலத்தில் வாழ்க்கைப்பிரச்சினைகள் , தற்கொலைகள், வேலையிழப்பு அதிகரித்து வரும் நிலையில் எல்லா அரசுகளும் அதற்கு மாற்றாக பயங்கரவாதங்களை எதிரிகளாக வைத்து மக்களைக் காப்பாற்றுவதாக சித்தரிக்கின்றன. அமெரிக்காவில் வீடுகளை ஜப்தியில் இழப்பதை விட ஆப்கானில் பின்லேடனைத் தேடுவது முக்கியமானது; விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை செய்வதை விட காஷ்மீரில் இராணுவத்தை குவித்து மக்களை ஒடுக்குவது முக்கியமானது; இலங்கையில் பொருளாதாரம் போரினால் ஆட்டம் கண்டாலும் புலி ஆதரவாளர்களை முற்றிலும் ஒழிப்பது என்பதற்காக இராணுவத்தை இரண்டுமடங்காக பெரிதுபடுத்துவது முக்கியமானது, தொழிலாளிகள் இழந்து வரும் தொழிற்சங்க உரிமைகளைவிட தடா, பொடா போன்ற சட்டங்களைக் கொண்டு வருவது முக்கியமானது…
இப்படித்தான் உலகெங்கும் அரசுகள் மெல்ல மெல்ல பாசிசமயமாகி வருவதை நியாயப்படுத்திக் கொள்கின்றன.
இந்த அடிப்படை உண்மை தெரியாத நம்மை போன்ற
காமன் மேன்கள் தான் மதம்,மதம் என்ற பழைய விளையாட்டையே
விளையாடி கொண்டிருக்கிறோம்.
( Thanks:vinavu )
//அ.மு.செய்யது said...
கோவி அவர்களே,
மதம்,தீவிரவாதம் குறித்தான உங்களுடைய 7 கேள்விகளுக்கு
என்னுடைய பதில்கள்:
//
வினவோட பதிவை நான் ஏற்கனவே படித்துவிட்டேன்.
அவர் சொல்லுவது இஸ்லாமியத் தீவிரவாதம் என்பது தூண்டப்பட்ட ஒன்று என்பதே. கட்டுரை எழுதிய அவருக்கு அவர் சொல்வது சரி என்கிற ரீதியில் எழுதினாலும் அதைப் படிக்கும் நீங்கள் அதை இங்கே எடுத்து ஒட்டி இருப்பதைப் பார்க்கும் போது உங்களுக்கு அவரது அந்தக் கருத்துக்கு உடன்பாடு இருப்பது போல் தெரிகிறது.
அந்தக் கருத்தின் வழி சொல்லாமல் இருந்தாலும், புரிகின்ற மற்றொரு செய்தி "இஸ்லாம் மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சியால் வீழ்ந்துவிட்டது...அல்லது இஸ்லாமியர்கள் இஸ்லாமை மறந்து மேற்கத்திய தூண்டுகோலில் சிக்கி தீவிரவாதிகள் ஆகிவிட்டார்கள்" என்பதே ஆகும்.
உங்களுக்கு சாதகமான ஒன்றை நீங்கள் கருத்தாக எடுத்துவரும் போது அதில் இருக்கும் மறைமுக செய்திகளையும் கண்கொண்டு பாருங்கள். நான் இங்கே வினவு பொடி வைத்து எழுதி இருக்கிறார் என்று சொல்ல வரவில்லை ஆனால் அந்த செய்திவழி மற்றொரு புரிதலாக இஸ்லாம் நம்பிக்கை வீழ்ச்சி பெற்றிருப்பதாகவும் அறியமுடிகிறது
என்ன பாஸ் இது எல்லாம் ஒரு நம்பிக்கை தான். எனக்கு கூடத்தான் டாஸ்மார்க்ல மப்பு போட்டா நிறைய சென்னை மந்திர வார்த்தைகள் வரும். அதும் குடிச்சுட்டு நடுரேட்ல மந்திரம் சொல்லறானுங்க பாருங்க. ரொம்ப கொடுமை. என்ன பண்ணறது. அந்த காலத்துல பெரிய மனுசன் அப்பிடி இப்படினு ஒரு நாகரிகம் இருந்தது. இப்பத்தான் திராவிடக் கலாச்சாரத்தில் அந்த மாதிரி பொது இட நாகரிகம் எல்லாம் இல்லை. அதுனால எங்க வேனா இந்த டாஸ்மார்க் மந்திரம் சொல்லலாம்.
//பித்தனின் வாக்கு said...
என்ன பாஸ் இது எல்லாம் ஒரு நம்பிக்கை தான். எனக்கு கூடத்தான் டாஸ்மார்க்ல மப்பு போட்டா நிறைய சென்னை மந்திர வார்த்தைகள் வரும். அதும் குடிச்சுட்டு நடுரேட்ல மந்திரம் சொல்லறானுங்க பாருங்க. ரொம்ப கொடுமை. என்ன பண்ணறது. அந்த காலத்துல பெரிய மனுசன் அப்பிடி இப்படினு ஒரு நாகரிகம் இருந்தது. இப்பத்தான் திராவிடக் கலாச்சாரத்தில் அந்த மாதிரி பொது இட நாகரிகம் எல்லாம் இல்லை. அதுனால எங்க வேனா இந்த டாஸ்மார்க் மந்திரம் சொல்லலாம்.
//
என்னது சோமபானம் நாகரீகம் திராவிடர்களதா ? தமாஸ் பண்ணாதிங்க ஜி
வினவுடைய கருத்தோடு நான் முழுமையாக
ஒத்துப் போகிறேன்.
//இஸ்லாம் மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சியால் வீழ்ந்துவிட்டது...அல்லது இஸ்லாமியர்கள் இஸ்லாமை மறந்து மேற்கத்திய தூண்டுகோலில் சிக்கி தீவிரவாதிகள் ஆகிவிட்டார்கள்"// கோவியின் கருத்து.
வினவின் கட்டுரைக்கான உங்களுடைய புரிதல்
மிகவும் வருத்தமளிக்கிறது.
உங்களுடைய இந்த கருத்து, எந்த விதத்திலும்
நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ அவர் கட்டுரையில்
குறிப்பிட படவில்லை.
கட்டுரையை முழுமையாக படித்தீர்களா ??
தீவிரவாதம் எப்படி உருவாகிறது ?? ஏன் தீவிரவாதத்திற்கு
மத அடையாளம் பூசக்கூடாது என்பதை மட்டுமே
அவர் சொல்லியிருக்கிறார்.
//கொஞ்சம் ஆரவாரங்களை ஒதுக்கி விட்டுச் சிந்திப்போமேயானால், ஒளியை நோக்கி உயர்கிற தாவரம் போல, இங்கே இந்திய தத்துவ மரபு சொல்வதும்,ஒவ்வொரு படியாக...!
12:08 PM, October 02, 2009
//
:)
அருமை அருமை.
இருட்டு அறையில் இருக்கும் விழியற்றவர்களாகிப் போன மதவாதிகளுக்கு எந்த ஒரு வெளிச்சமும் புதிரானது, புலப்படாது இல்லையா ?
இந்திய தத்துவமரபா ? வெளிநாடுகளில் 'தாந்திரா, காமசூத்திரா' என்ற பெயரில் விபச்சாரம் பண்ணுவதற்குத் தான் இப்பொழுது பெரிதும் பயன்படுகிறது ஐயா. மற்ற மரபெல்லாம் எல்லோருமே கிட்டதட்ட மறந்துவிட்டார்கள்
//அவர் சொல்லுவது இஸ்லாமியத் தீவிரவாதம் என்பது தூண்டப்பட்ட ஒன்று //
Total misconception Mr.kovi.
I request you to be honest to give your statements.
உங்களுடைய இந்த கருத்தை வினவு படித்தால், அவருக்கு பைத்தியம் பிடித்து விடும்.
//அ.மு.செய்யது
வினவுடைய கருத்தோடு நான் முழுமையாக
ஒத்துப் போகிறேன்.
//இஸ்லாம் மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சியால் வீழ்ந்துவிட்டது...அல்லது இஸ்லாமியர்கள் இஸ்லாமை மறந்து மேற்கத்திய தூண்டுகோலில் சிக்கி தீவிரவாதிகள் ஆகிவிட்டார்கள்"// கோவியின் கருத்து.
வினவின் கட்டுரைக்கான உங்களுடைய புரிதல்
மிகவும் வருத்தமளிக்கிறது.
உங்களுடைய இந்த கருத்து, எந்த விதத்திலும்
நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ அவர் கட்டுரையில்
குறிப்பிட படவில்லை.
கட்டுரையை முழுமையாக படித்தீர்களா ??
தீவிரவாதம் எப்படி உருவாகிறது ?? ஏன் தீவிரவாதத்திற்கு
மத அடையாளம் பூசக்கூடாது என்பதை மட்டுமே
அவர் சொல்லியிருக்கிறார்.
1:58 PM, October 02, 2009 //
நானும் அவர் உள்நோக்கத்தோடு அப்படி குறிப்பிடுகிறார் என்று சொல்லவில்லை. அதில் மற்றொரு புரிதல் ஏற்படுகிறது என்றே குறிப்பிட்டேன் உதாரணத்துக்கு,
ஒருவன் ஏன் கூலிப்படையில் சேருகிறான் என்பதற்கான விளக்கம் போல் அதை எழுதி இருக்கிறார். அதில் ஒரு தனிமனிதன் எப்படி ஒரு குழுவின் சூழ்ச்சிக்கு பலியாகி கூலிப் படையில் ஒருவாகினாகிறான், அவனும் அப்பாவிகளும் எப்படி பலியாகிறார்கள் என்பதாக ஏன் புரிந்து கொள்ளக் கூடாது ?
// அ.மு.செய்யது said...
//அவர் சொல்லுவது இஸ்லாமியத் தீவிரவாதம் என்பது தூண்டப்பட்ட ஒன்று //
Total misconception Mr.kovi.
I request you to be honest to give your statements.
உங்களுடைய இந்த கருத்தை வினவு படித்தால், அவருக்கு பைத்தியம் பிடித்து விடும்.
2:00 PM, October 02, 2009
//
"பார்பனர்களின் சூழ்ச்சியால் சூத்திரர்கள் ஆனோம், என்று குறிப்பிடும் போது, நாங்களெல்லாம் வாயில் வாழைப்பழம் வைத்திருந்தோம்" என்கிற ஒப்புதல் அதில் இருக்கிறதா இல்லையா ? அது போன்று தான், இதில் குழம்ப என்ன இருக்கிறது.
ஆனாலும் அத்தகைய கருத்தை பார்பனரல்லாத மற்ற உயர்வர்க்க சமூகம் தங்கள் செயல்களைத் தற்காத்துக் கொள்ள மறைத்துக் கொள்ள பழியை இடம் மாற்றிப் போடுவதாகவே புரிந்துக் கொள்ளப் படவேண்டும், உணர்ச்சிவசப்பட்டவன் "பார்பனர்களை மட்டுமே குறை கூறுவது உண்மையா ?" என்று கூடப் பார்க்க மாட்டான்
//அ.மு.செய்யது said...
வினவுடைய கருத்தோடு நான் முழுமையாக
ஒத்துப் போகிறேன்.
//
வினவு இஸ்லாமியர்கள் மீது குறை சொல்லி இருந்தால் தானே ஒப்புக் கொள்ளமாட்டீர்கள், அவர் தான் இஸ்லாமியர்கள் அப்பாவி என்கிற கருத்து போல் எழுதி இருப்பதாக உங்களுக்கு புரிகிறது போலும்.
நீங்கள் இஸ்லாமியர்கள் அப்பாவிகள் சூழ்ச்சிக்கு பலியாகிவிட்டார்கள் என்று அவர் எழுதி இருப்பதாக நினைப்பதை, நான் வீழ்ச்சியடைய வைத்துவிட்டதாகவும் புரிந்து கொள்கிறேன். இதில் தவறு என்ன ?
//உலகமெங்கும் பிரச்சினையாக கருதப்படும் இசுலாமிய பயங்கரவாதம்
காஃபீர்களை அழிக்க வேண்டும் என்ற இசுலாமிய மதவெறியிலிருந்து உருவாகவில்லை
ஒவ்வொரு நாட்டிற்கும், பகுதிக்கும் தனித்தனியான வரலாற்றுக்காரணங்கள் உள்ளன. //
:) உங்கள் வசதிக்கேற்ப ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு வரும் போது அது குறித்து நான் ஏன் கேள்வி கேட்க்கக் கூடாது ?
இதே போன்று இந்துத்துவம் சார்ந்த தீவிரவாதத்திற்கும் புறத்தூண்டுதல்கள் குறித்தக் கட்டுரையை அதே வினவு எழுதி இருந்தால் ஒப்புக் கொள்கிறேன் என்று கூறி 'இந்துவம்' இந்தியாவின் அமைதி மார்க்கம் என்று சொல்லத் துணிவீர்களா ?
இந்துத்துவ வெறிக்கும் நீண்டவரலாறு ஞாயங்கள் இருப்பதாகவும் அதற்கு ஞாயம் கிடைக்க காந்தி கொலைவரை சென்றதாக இந்துதுவாக்கள் சொல்வதையும் சரி என்று ஒப்புக் கொள்வீர்களா ?
கோவி.கண்ணன் மறுமொழியில் சொன்னது
/இந்திய தத்துவமரபா ? வெளிநாடுகளில் 'தாந்திரா, காமசூத்திரா' என்ற பெயரில் விபச்சாரம் பண்ணுவதற்குத் தான் இப்பொழுது பெரிதும் பயன்படுகிறது ஐயா. மற்ற மரபெல்லாம் எல்லோருமே கிட்டதட்ட மறந்துவிட்டார்கள்/
கொஞ்சம் கசப்பாக இருந்தாலும், மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒப்புக் கொள்ளவேண்டிய யதார்த்தம் தான் இது!
சிந்திக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே சிந்திக்கவிடாமல் வெறும் சடங்குகளை மட்டுமே விற்பனை செய்பவர்கள் ஒரு புறம்,நாங்கள் பகுத்தறிவு வாதிகள், சுய மரியாதைக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டே சடங்குகளை ஏளனம் செய்து கொண்டே அதே நேரம் தங்களுடைய பிராண்ட் சடங்குகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்களும் செய்து கொண்டிருக்கிற தவறு இன்னொருபுறம்!
அதைத் தானே நானும்,
/அப்படி யோசிக்க ஆரம்பித்த சமயங்கள், நம்பிக்கைகள் ஏதோ ஒரு கட்டத்தில் தேங்கிப் போய் விடுகின்றன.காரணம், அந்த சிந்தனையை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார் இல்லாததே. ஆக, ஒரு தருணத்தில் உண்மையாகத் தெரிந்தது, காலம் செல்லச் செல்ல, கேள்விகள் தொடர்ந்து வரும்போது பதில் சொல்ல முடியாததால் என்று மட்டும் இல்லை, பதிலைத் தேடுவாரும் இல்லை என்பதாலேயே, பழையதாகி, மூட நம்பிக்கைகள் என்றும் ஆகி விடுகின்றன./
கழுதை தேய்ந்து எப்படிக் கட்டெறும்பு ஆகிறது என்பதை கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன்!
////அ.மு.செய்யது said...
வினவுடைய கருத்தோடு நான் முழுமையாக
ஒத்துப் போகிறேன்.
//
வினவு இஸ்லாமியர்கள் மீது குறை சொல்லி இருந்தால் தானே ஒப்புக் கொள்ளமாட்டீர்கள், அவர் தான் இஸ்லாமியர்கள் அப்பாவி என்கிற கருத்து போல் எழுதி இருப்பதாக உங்களுக்கு புரிகிறது போலும்.
நீங்கள் இஸ்லாமியர்கள் அப்பாவிகள் சூழ்ச்சிக்கு பலியாகிவிட்டார்கள் என்று அவர் எழுதி இருப்பதாக நினைப்பதை, நான் வீழ்ச்சியடைய வைத்துவிட்டதாகவும் புரிந்து கொள்கிறேன். இதில் தவறு என்ன ?//
எந்த விதத்திலும் நான் தீவிரவாதிகளின் செயலை நியாயப்படுத்த
முயலவில்லை என்ற என்னுடைய நிலைப்பாட்டை
தெளிவு படுத்தி கொள்ள விழைகிறேன்.
//:) உங்கள் வசதிக்கேற்ப ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு வரும் போது அது குறித்து நான் ஏன் கேள்வி கேட்க்கக் கூடாது ?//
கேள்வி கேட்பது உங்கள் உரிமை.அந்த கேள்வியில் எத்தனை
அர்த்தம் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள
வேண்டியது உங்கள் கடமை.
மதம்,மதம் என்ற குண்டு சட்டியில்,சாரி குறுகிய வட்டத்திலே
நாம் சிந்தித்து கொண்டிருக்கிறோமோ..அதையும் தாண்டி
இன்னும் அரசியல் காரணங்கள் ஒளிந்திருக்கின்றனவே !!!
இல்லை அதெல்லாம் எனக்கு தெரியாது.இல்லை தெரியாதது
போல் நான் நடிப்பேன்.தீவிரவாதத்திற்கு மதம் தான்
காரணமென்று,வறட்டு பிடிவாதம் பிடிப்பேன் என்றால்
ரைட்டு நடத்துங்க !!!!!
எனக்கு நேரத்தை வீணடிப்பது பிடிக்காது.விவாதம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
//இதே போன்று இந்துத்துவம் சார்ந்த தீவிரவாதத்திற்கும் புறத்தூண்டுதல்கள் குறித்தக் கட்டுரையை அதே வினவு எழுதி இருந்தால் ஒப்புக் கொள்கிறேன் என்று கூறி 'இந்துவம்' இந்தியாவின் அமைதி மார்க்கம் என்று சொல்லத் துணிவீர்களா ?
//
இந்துத்துவம் அமைதியான மார்க்கம் என்று நான் இப்போதே
ஒத்து கொள்கிறேன்.
இதிலென்ன ஐயம் ??
கோவி அவர்களே,
ஒரு பிராண்ட் நியூ, பி எம் டபிள்யூ காரை, நான் ஓட்டத்தெரியாமல்
ஆங்காங்கே மோதி, ஸ்கிராட்சுகளுடன் புளிய மரத்தில்
மோதி உடைக்கிறேன் என்றால் ..
அங்கே காரை குற்றம் சொல்வீர்களா ?? இல்லை கார் ஓட்டிய
என்னை குற்றம் சொல்வீர்களா ??
அந்த காரை போன்று தான் மதங்களும்.அதை ஓட்டுபவர்களாகிய
மனிதர்களிடையே தான் இருக்கிறது தவறுகள்.
//இல்லை அதெல்லாம் எனக்கு தெரியாது.இல்லை தெரியாதது
போல் நான் நடிப்பேன்.தீவிரவாதத்திற்கு மதம் தான்
காரணமென்று,வறட்டு பிடிவாதம் பிடிப்பேன் என்றால்
ரைட்டு நடத்துங்க !!!!!
எனக்கு நேரத்தை வீணடிப்பது பிடிக்காது.விவாதம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.//
மதத்தினால் விளையும் நன்மைகள் என்று ஒரு பட்டியல் இட்டுவிட்டு பேசினால் நன்றாக இருக்கும். எனக்குத் தெரிந்து மனித இனங்களையும் மனங்களையும் கூறு போட்டது தவிர்த்து மதங்கள் எந்த சாதனையையும் நிகழ்த்திவிட வில்லை.
மதவாதம் பற்றிப் பேசும் போது ஒட்டுமொத்த அனைத்து மதவாதத்திற்கும் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வது போன்ற உங்கள் பின்னூட்டம் எனக்கு பிடித்து இருக்கு :)
மற்றபடி ஒற்றைதன்மையுடைய, தட்டையான நம்பிக்கையாளர்களிடம் விவாதிப்பது வீன்விரயம் என்று எனக்கும் தெரியும்.
எனது எழுத்தில் மதநம்பிக்கையாளர்களுக்கு அறிவுரையாக நான் எதையும் கூறவில்லை. அவர்களிடம் இருந்து விலகி இருக்க விரும்புவர்களுக்கு ஒத்த சிந்தனை உடையவர்களுக்கே நான் எழுதுகிறேன்.
பிற மதங்களை விமர்சனம் செய்யாதவர்கள் எனது மதம் சார்ந்த கருத்துகளுக்கு விவாதங்களை வைக்கலாம். மற்றவர்கள் சார்பு நிலை உடையவர்கள் என்பது எனக்கும் தெரியும்
//அ.மு.செய்யது said...
கோவி அவர்களே,
ஒரு பிராண்ட் நியூ, பி எம் டபிள்யூ காரை, நான் ஓட்டத்தெரியாமல்
ஆங்காங்கே மோதி, ஸ்கிராட்சுகளுடன் புளிய மரத்தில்
மோதி உடைக்கிறேன் என்றால் ..
அங்கே காரை குற்றம் சொல்வீர்களா ?? இல்லை கார் ஓட்டிய
என்னை குற்றம் சொல்வீர்களா ??
அந்த காரை போன்று தான் மதங்களும்.அதை ஓட்டுபவர்களாகிய
மனிதர்களிடையே தான் இருக்கிறது தவறுகள்.
2:55 PM, October 02, 2009
//
கார் ஓட்டி நல்லவர் தான், கார் கண்டிசனில் இல்லை எனும் போது அல்லது டப்பாக் கார் என்று அறியாமலேயே ஓட்டி மோதல் நடந்துவிட்டால் அதை ஓட்டுபவனின் குறையாக நான் பார்ப்பது இல்லை
//அ.மு.செய்யது said...
//இதே போன்று இந்துத்துவம் சார்ந்த தீவிரவாதத்திற்கும் புறத்தூண்டுதல்கள் குறித்தக் கட்டுரையை அதே வினவு எழுதி இருந்தால் ஒப்புக் கொள்கிறேன் என்று கூறி 'இந்துவம்' இந்தியாவின் அமைதி மார்க்கம் என்று சொல்லத் துணிவீர்களா ?
//
இந்துத்துவம் அமைதியான மார்க்கம் என்று நான் இப்போதே
ஒத்து கொள்கிறேன்.
இதிலென்ன ஐயம் ??
2:52 PM, October 02, 2009
//
ரைட்டு !
//அ.மு.செய்யது said...
கோவி அவர்களே,
ஒரு பிராண்ட் நியூ, பி எம் டபிள்யூ காரை, நான் ஓட்டத்தெரியாமல்
ஆங்காங்கே மோதி, ஸ்கிராட்சுகளுடன் புளிய மரத்தில்
மோதி உடைக்கிறேன் என்றால் ..
//
:) எந்தக் காரும் ப்ராண்ட் நீயு கார் இல்லை. எல்லாம் பழமை வாத காயிலான் கடைக் கார். அதை யார் ஓட்டினாலும் விபத்தே ஏற்படுத்தும்
//மற்றபடி ஒற்றைதன்மையுடைய, தட்டையான நம்பிக்கையாளர்களிடம் விவாதிப்பது வீன்விரயம் என்று எனக்கும் தெரியும்.
எனது எழுத்தில் மதநம்பிக்கையாளர்களுக்கு அறிவுரையாக நான் எதையும் கூறவில்லை. அவர்களிடம் இருந்து விலகி இருக்க விரும்புவர்களுக்கு ஒத்த சிந்தனை உடையவர்களுக்கே நான் எழுதுகிறேன்.//
என்னை பொறுத்த மட்டில்,உங்களுடைய எழுத்தில்
எந்த வித சமுதாய அக்கறையோ நலனோ, இணக்கத்தை
ஏற்படுத்துவதற்கான கருத்துகளோ இடம் பெறுவதில்லை
என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
மேலும் இது போன்ற வறட்டு விவாதங்கள், புரிதலை நோக்கி
செல்வதை விட, கருத்தியல் வன்முறைகளை ( idealogical violence )
மட்டுமே தோற்றுவிக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
என்னுடைய விவாதம் முற்றிலும் பதில் சொல்லும் நோக்கிலே
இருக்க வேண்டுமே என்று நினைப்பேனே ஒழிய, கருத்துகளை
திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
மற்றவை உங்கள் புரிதலுக்கே விட்டு விடுகிறேன்.
:) எந்தக் காரும் ப்ராண்ட் நீயு கார் இல்லை. எல்லாம் பழமை வாத காயிலான் கடைக் கார். அதை யார் ஓட்டினாலும் விபத்தே ஏற்படுத்தும் //
ha ha ha..typical kovi..
Perceptual Biased !!!
//என்னை பொறுத்த மட்டில்,உங்களுடைய எழுத்தில்
எந்த வித சமுதாய அக்கறையோ நலனோ, இணக்கத்தை
ஏற்படுத்துவதற்கான கருத்துகளோ இடம் பெறுவதில்லை
என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.//
இருந்துவிட்டுப் போகட்டும், என்னைப் படிக்கும் மடையர்களும் இருக்கிறார்கள் என்று கூடுதலாகவும் நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் எண்ணத்துக்கு நான் தடைபோட முடியுமா ?
'உங்களுக்கு ஏன் எரிச்சல்' என்பது போன்ற அதிபுத்திசாலித் தனமான பாராட்டுச் சொற்களை மறுமொழி இடுபவர்களை நோக்கி வீசத்தெரியாத துர் அதிர்ஷ்டசாலி என்று கூட என்னைப் பற்றிச் சொல்லுங்க நான் அலட்டிக் கொள்வது இல்லை
//மேலும் இது போன்ற வறட்டு விவாதங்கள், புரிதலை நோக்கி
செல்வதை விட, கருத்தியல் வன்முறைகளை ( idealogical violence )
மட்டுமே தோற்றுவிக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
//
ரைட்டு
//என்னுடைய விவாதம் முற்றிலும் பதில் சொல்லும் நோக்கிலே
இருக்க வேண்டுமே என்று நினைப்பேனே ஒழிய, கருத்துகளை
திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
மற்றவை உங்கள் புரிதலுக்கே விட்டு விடுகிறேன்.//
ஆமாம் கருத்துகளை விட கருத்து சொல்பவர்களின் மீது பொறாமையா பொச்சரிப்பா என்றெல்லாம் கூட சொல்லத் தெரியாது, பாயத் தெரியாது என்ற கூடுதல் புரிதல்களையும் சேர்த்துக் கொள்வோம்.
//இந்துத்துவம் அமைதியான மார்க்கம் என்று நான் இப்போதே
ஒத்து கொள்கிறேன்.
இதிலென்ன ஐயம் ??//
"இந்துத்துவம்" என்று நான் குறிப்பிட்டிருப்பது அதன் கொள்கைகளை
மட்டுமே.மாறாக, இந்துத்துவ தீவிரவாதிகளை அல்ல.
எல்லா மதங்களுக்கும் இது பொருந்தும் !
//'உங்களுக்கு ஏன் எரிச்சல்' என்பது போன்ற அதிபுத்திசாலித் தனமான பாராட்டுச் சொற்களை மறுமொழி இடுபவர்களை நோக்கி வீசத்தெரியாத துர் அதிர்ஷ்டசாலி என்று கூட என்னைப் பற்றிச் சொல்லுங்க நான் அலட்டிக் கொள்வது இல்லை
//
நான் வால்பையனின் பதிவில் உங்களை அவ்வாறு குறிப்பிட்டது
தவறு என்று ஒத்து கொள்கிறேன்.அதற்காக மன்னிப்பு கேட்கவும்
தயாராக இருக்கிறேன்.
ஆனால் நான் கூறியதன் உள்ளார்ந்த அர்த்தத்தை நீங்கள் புரிந்து
கொள்ள வில்லை.
இஸ்லாமியர்கள்
மஸ்ஜிதுக்குள் அரபியில் தொழுகை நடத்துவதால்
எந்த வித பெரிய,சிறிய சமுதாய தாக்கமோ ஏற்பட போவதில்லை
என்கிற பட்சத்தில், அதையும் ஒரு பொருட்டாக எடுத்து கொண்டு
விவாதிப்பதில் உங்களுக்கு என்ன பயன் இருக்கிறது ??
என்ற கேள்வியை தான் "நான் உங்களுக்கு ஏன் மன உளைச்சல்"
என்று கேட்டு அந்த உரையாடலை நான் கொன்றேன்.
இது குறித்து நான் வாலுக்கு அலைபேசியில் அழைத்து
வருத்தம் தெரிவித்து கொண்டதென்னவோ உண்மை தான்.
இதுல எனக்கு புடிச்சதே...இவ்வளவு சொல்லிட்டு...அதனுடைய தொகுப்புக்கு நீங்க கொடுத்த தலைப்பு தான் : )
பதிவர்: கோவி.கண்ணன் at 10/02/2009 09:26:00 AM
தொகுப்பு : ஆன்மீகம்
//கபிலன் said...
இதுல எனக்கு புடிச்சதே...இவ்வளவு சொல்லிட்டு...அதனுடைய தொகுப்புக்கு நீங்க கொடுத்த தலைப்பு தான் : )
பதிவர்: கோவி.கண்ணன் at 10/02/2009 09:26:00 AM
தொகுப்பு : ஆன்மீகம்
//
உங்களுக்கு மதவாதம் ஆன்மிகமாகத் தெரிந்தால் எனக்கு மதவாத எதிர்ப்பு ஆன்மிகமாக தெரிவதில் வியப்பென்ன ?
எந்தக்கடவுள் என் பேரால் அடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறது ?
கோ, தீவிரவாதத்திற்கு வர்க்க அடையாளம் பூசுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எந்த மதமும், இனமும், மொழியும் தீவிரவாதம் செய்யச்சொல்வதில்லை. தீவிரவாதிகள் தங்களுக்கு நியாயம் சொல்ல அதை பயன்படுத்திக்கொள்கின்றனர்.
சரி... மதத்தீவிரவாதம் என்று எதைச்சொல்ல வேண்டும், சொல்லலாம் ' தீவிரவாத தாக்குதலின் போது ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்கள் மட்டும் தாக்கப்படும் போது அதை மதத்தீவிரவாதம் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. (துரதிஷ்டவசமாக இங்கு மாறாக சொல்லப்படுகிறது) பொதுவாக அனைத்து பொதுமக்களும் பாதிக்கப்படும் போது அதை பொதுத்தீவிரவாதம் என்று வகைப்படுத்தி, பொதுமக்கள் அனைவரும் எதிர்ப்பது தான் சரியாகும். (என் பதிவில் உங்கள் பின்னூட்டத்திற்கான பதிலாகவும் இதை கொள்ளுங்கள்)
//எந்தக்கடவுள் என் பேரால் அடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறது ?//
குட் கொஸ்டீன் கோ, இதையேத்தான் நானும் கேட்கிறேன்..
தெரிந்த நீங்களே 'அடித்துக்கொள்பவர்களுக்கு' கடவுள் பெயரை சொல்வதேன்?
//ஒரு பிராண்ட் நியூ, பி எம் டபிள்யூ காரை, நான் ஓட்டத்தெரியாமல்
ஆங்காங்கே மோதி, ஸ்கிராட்சுகளுடன் புளிய மரத்தில்
மோதி உடைக்கிறேன் என்றால் ..
அங்கே காரை குற்றம் சொல்வீர்களா ?? இல்லை கார் ஓட்டிய
என்னை குற்றம் சொல்வீர்களா ??//
சகோதரரே ,ஒரு நிகழ்வை வைத்து முடிவுக்கு வர முடியாது.
அதே நேரம் ,காலப்போக்கில் சாலையில் நடக்கும் விபத்துகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பி .எம்.டபிள்யூ காரினாலேயே நடைபெறுமானால் , அந்த மாடல் காரில் ஏதாவது கோளாறோ என பொது ஐயம் வருவது இயற்கையே .அதை பி.எம்.டபிள்யூ தயாரிப்பவர்களோ ,அல்லது அதை உபயோகிப்பவர்களோ கவனத்தில் கொண்டு சந்தேகத்தை விலக்க வேண்டியது நல்லது.
//மதத்தீவிரவாதம் என்று எதைச்சொல்ல வேண்டும், சொல்லலாம் ' தீவிரவாத தாக்குதலின் போது ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்கள் மட்டும் தாக்கப்படும் போது அதை மதத்தீவிரவாதம் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. (துரதிஷ்டவசமாக இங்கு மாறாக சொல்லப்படுகிறது) பொதுவாக அனைத்து பொதுமக்களும் பாதிக்கப்படும் போது அதை பொதுத்தீவிரவாதம் என்று வகைப்படுத்தி, பொதுமக்கள் அனைவரும் எதிர்ப்பது தான் சரியாகும்.//
உங்கள் மதிவில் சொன்னதுதான் ...
வேறு எதற்க்காக குண்டு வைக்கிறார்கள் நண்பரே ?
ஒரு கொள்கை சார்ந்து செய்யப்படும் எந்த செயலும் அந்த கொள்கையால்தான் குறிக்கப்படும் ,
உதா ... நக்சலிஸம் தீவிரவாதம், அயர்லாந்து வ் , போடோலேண்ட் தீவிரவாதம் ...
இதே போல்தான் உலகமே இஸ்லாமியமயமாகவேண்டும் என்ற கொள்கையுடம் பயங்கரவாதத்தில் ஈடிபடும்போது அது இஸ்லாமிய தீவிரவாதம் எனப் படுகிறது .
பாலஸ்தீனில் அராபத் போராடியபோது பாலஸ்தீனிய தீவிரவாதம் என அழைக்கபட்டது , ஹமாஸ் அதை இஸ்லாம் பெயரால் செய்ய துவங்கியவுடன் இஸ்லாமிய தீவிரவாதமாகி போனது .
பயணத்தில் இருப்பதால் எழுத்து பிழைகளை பொருத்தருளுக
....
//ஜோ/Joe said...
அதே நேரம் ,காலப்போக்கில் சாலையில் நடக்கும் விபத்துகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பி .எம்.டபிள்யூ காரினாலேயே நடைபெறுமானால் , அந்த மாடல் காரில் ஏதாவது கோளாறோ என பொது ஐயம் வருவது இயற்கையே .அதை பி.எம்.டபிள்யூ தயாரிப்பவர்களோ ,அல்லது அதை உபயோகிப்பவர்களோ கவனத்தில் கொண்டு சந்தேகத்தை விலக்க வேண்டியது நல்லது. //
நல்ல பாயிண்ட் ஜோ.
பீர் பதிவில் இயேசுவின் விருத்தசேதனம் ??? (சுன்னத்) பற்றிய விளக்கத்திற்கு நன்றி
கார் பிரச்சனை பெரும் பிரச்சனைதான் ஜோ
***
ஆனால் கார் வாங்கியவர்கள், தங்கள் காருக்கு இணையாக மத்த காரை கனவில்கூட யோசிக்கமாட்டோம் என்று சொல்லும் காரோட்டிகள். காருக்கு ஒப்புக்கொடுத்தவர்கள். அப்படி சொல்லத்துணியமாட்டார்கள்.
இதோ இப்படித்தன் இருக்கும் அவர்களின் வாதம்.
----
1. காரால் நன்மை ஏற்படுமாயின் அது காரின் பெருமை காரோட்டியின் பெருமையல்ல. எல்லாப் புகழும் காருக்கும் காரு தாயாரித்த்வருக்கு.
2 .ஆனால் காரினால் நடக்கும் விபத்து அந்த காரோட்டியுடையதே. ஒரு காரோட்டியின் தவறுக்கு காரைக் குறை சொல்லாதீர்கள்.காரு தாயாரித்த்வரை குறை சொல்லாதீர்கள்
எல்லா இகழ்வும் காரோட்டிக்கே.
வாழ்க காரும் கார் தாயரிப்பாளர்களும்.
***
காரினால் புகை, மாசு,தூசு ,ஆக்சிடெண்ட்..இன்னபிற துயரங்கள்.
அவசரமாக போக விரும்புவர்களுக்கே காரும் கார் தயாரிப்பாளர்ன் சேவையும் தேவை. எங்களைப் போன்ற நடராசக்களுக்கு காரும் வேண்டாம் அந்த காரின் தயாரிப்பாளரிடம் தொங்கவும் வேண்டாம்.
ஏதோ பொடிநடையாட போய்ச்சேருகிறோம். :-))))))))
காரை வாங்கி ஓட்டாமலே இப்படிச் சொல்லப்படாது என்று யாரும் சொல்ல வேண்டாம். காரை நீங்கள் ஓட்டினாலும், உங்களின் ட்ராபிக் சண்டையிலும் , உங்கள் கார் விடும் புகையிலும் இருந்தே எங்களைப் போன்ற நடராசக்களுக்கு அதன் கேடு புரிவதால் இப்படியே இருக்கோம்.
***
:-))))
//கார் பிரச்சனை பெரும் பிரச்சனைதான் ஜோ //
:)))
//இதே போல்தான் உலகமே இஸ்லாமியமயமாகவேண்டும் என்ற கொள்கையுடம்//
லாஜிக் உதைக்குதே... உலகமே இஸ்லாமாக வேண்டும என்றால் அமைதி வழியில் செல்வானா? இல்லை... தீவிரவாதம் செய்வானா? எல்லாரையும் கொன்னுட்டா.. அப்புறம் இஸ்லாம் எங்க இருக்கும்?
//பயணத்தில் இருப்பதால் எழுத்து பிழைகளை பொருத்தருளுக//
பாதகமில்லை.. இன்னும் நேரமுண்டு, பயணம் முடிந்த பின்பு பேசுவோம். அதற்கு முன்பு நீங்கள் யார்? உங்கள் கருத்து என்ன? ஆதரவு யாருக்கு? என்பதை ஒரு பதிவு போடுங்கள்... மற்றவர் பதிவில் வந்து தாவு தீர்வதை விட நம் கருத்தை நம் தளத்தில் சொல்வது நான் நியாயமாக... தீர்க்கமாக இருக்கும்.
//கார் பிரச்சனை பெரும் பிரச்சனைதான் ஜோ //
எனக்கும் தாங்க... ஒரு கார் வாங்கி, ஏண்டா வாங்கினோம்னு ஆகிப்போச்சு...
இப்பல்லாம்... இரு சக்கர வாகனம் தான்.
நல்ல மைலேஜ் தர்ர, மெயின்டனன்ஸ் குறைவான வண்டி (ஸ்ப்லென்டர் தவிர) வேறு ஏதாவது இருந்தா யாராவது சொல்லுங்க..
ஒரு இரு சக்கர வாகனம் வாங்கற எண்ணம் இருக்கு... :)
சைக்கிள் ??? சும்மா தமாசு
//பீர் | Peer said...
கோ, தீவிரவாதத்திற்கு வர்க்க அடையாளம் பூசுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எந்த மதமும், இனமும், மொழியும் தீவிரவாதம் செய்யச்சொல்வதில்லை. தீவிரவாதிகள் தங்களுக்கு நியாயம் சொல்ல அதை பயன்படுத்திக்கொள்கின்றனர்.
//
மதத்தை விட்டுத் தள்ளுங்கள் அது பற்றித்தான் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கிறதே, இனமும் மொழியும் தீவிரவாதம் செய்யவில்லை என்ற கூற்று உண்மையெனில் இலங்கை, பாலஸ்தீனம் அமைதி பூங்காவாக இருக்கும்.
//பொதுத்தீவிரவாதம் என்று வகைப்படுத்தி, பொதுமக்கள் அனைவரும் எதிர்ப்பது தான் சரியாகும்.//
பொதுமக்கள் என்றால் யார் இந்தியர்களா ? தீவிரவாதம் இந்தியாவில் குறைவு, மற்ற நாடுகளில் முன்வரும் பொதுமக்கள் யார் ?
//மதி.இண்டியா said...
பயணத்தில் இருப்பதால் எழுத்து பிழைகளை பொருத்தருளுக
//
பயணத்தில் இருந்தாலும் உங்கள் கடமை உணர்ச்சி....க்கு ஒரு ஓ
:)
கல்வெட்டு,
கலக்கல், நீங்கள் காரை பிரிச்சு மேய்ந்ததை ரசித்தேன்.
:)
ஆஹா ஒரு பெரிய கும்மியே நடக்குதா இங்கே??
நடத்துங்க
/
ஜோ/Joe said...
எல்லா மதத்திலும் சொர்க்கம் செல்வது ரொம்ப சுலபம் போலிருக்கே :)
/
:))))))))))))))))
கோவியானந்தா,
மதம் என்பது ஒரு போதை போலத்தான், பேசும் அனைவரும் தனது மதத்தை விட்டு விடாமல் பேசுகிறார்கள்.
நான் கடவுளை நம்புகிறேன். அதே நேரத்தில் மதத்தை நம்ப வில்லை. மதத்தை நோக்கி செல்பவன் கடவுளை மறுக்கிறான்.
===================
"நமசிவாயம் வாழ்க, நாதன் தாழ்வாழ்க" என்று சொல்லிவிட்டால் உங்களுக்கு கையிலாயத்தின் நுழைவு சீட்டுக் கிடைத்துவிடும்.
"ஓம் நமோ நாராயணா" என்று நாராயணனைத் துதித்தால் நீங்கள் வைகுண்டத்தின் வாசலுக்கு இட்டுச் செல்லப் படுவீர்கள்.
===================
தப்பா புரிந்து கொண்டீர்கள் கோவியானந்தா சரஸ்வதி சன்முகானந்த ஸ்வாமிகள் அவர்களே, ஈசன் நாமமோ, ஹரி நாமமோ உச்சரித்தால் மட்டும் ஒருவர் சொர்க்கம் செல்வதில்லை, தான் செய்த நன்மை தீமை பொருத்து திறவுகோல்.
தேடுதலுடன்
குரங்குஜி.
All religion is one and the same....man needs faith to understand the awesome one which is beyond the sense of mankind......
when some one is needed to attain the greatness he/she needs to realize the greatness....so one faith is required in life...instead of religion one should have faith in god...
//மதங்கள் சுட்டிக்காட்டும் சுவர்கமும் நரகமும் உத்திரவாதம் எதுவும் இல்லாத ஒரு நம்பிக்கை மட்டும்தான் என்பதை மதவாதிகள் புரிந்து கொள்வதே இல்லை.//
மதவாதிகள் சரியாகத்தான் புரிந்து கொண்டுள்ளனர். பூசாரிக்கு தானே சரியாக தெரியும், உள்ளிருப்பது கடவுளா, இல்லை கல்லா என்று!!!
//
"நமசிவாயம் வாழ்க, நாதன் தாழ்வாழ்க" என்று சொல்லிவிட்டால் உங்களுக்கு கையிலாயத்தின் நுழைவு சீட்டுக் கிடைத்துவிடும்.
"ஓம் நமோ நாராயணா" என்று நாராயணனைத் துதித்தால் நீங்கள் வைகுண்டத்தின் வாசலுக்கு இட்டுச் செல்லப் படுவீர்கள்.
//
அப்படியா? நான் கேள்விப்பட்டதே இல்லையே! நம் கலாச்சார மற்றும் கடவுள் நம்பிக்கை படி ஒருவன் செய்யும் நன்மை தீமை பொருத்தே அவனுக்கு கைலாயமா/வைகுண்டமா அல்லது எமலோகமா என்பது.
//மதத்தீவிரவாதம் என்று எதைச்சொல்ல வேண்டும், சொல்லலாம் ' தீவிரவாத தாக்குதலின் போது ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்கள் மட்டும் தாக்கப்படும் போது அதை மதத்தீவிரவாதம் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. (துரதிஷ்டவசமாக இங்கு மாறாக சொல்லப்படுகிறது) பொதுவாக அனைத்து பொதுமக்களும் பாதிக்கப்படும் போது அதை பொதுத்தீவிரவாதம் என்று வகைப்படுத்தி, பொதுமக்கள் அனைவரும் எதிர்ப்பது தான் சரியாகும்//
அதாவது, குஜராத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டால் அது மதத்தீவிரவாதம். அதே குண்டுவெடிப்பால் அனைத்து மதத்தினரும் கொல்லப்படும் போது அது பொதுத்தீவிரவாதம்...;) நல்லா காமடி பன்றீங்க.
கொல்பவன் எந்த நோக்கத்திற்காக கொல்கிறான் என்பதை வைத்தே அது எந்த தீவிரவாதம் என்று முடிவு செய்யவேண்டும். "அல்லா 'மட்டுமே' கடவுள். அதற்காக காபிர்களை சொல்வேன்" என்றால் அது மத்தீவிரவாதம் தான். என் மதம் மட்டுமே மேன்மையானது. அந்த மத்திற்காக அடுத்த மதத்தினரை கொல்வேன் என்றால், அதுவும் மத்தீவிரவாதம் தான்.
/////
//இதே போல்தான் உலகமே இஸ்லாமியமயமாகவேண்டும் என்ற கொள்கையுடம்//
லாஜிக் உதைக்குதே... உலகமே இஸ்லாமாக வேண்டும என்றால் அமைதி வழியில் செல்வானா? இல்லை... தீவிரவாதம் செய்வானா? எல்லாரையும் கொன்னுட்டா.. அப்புறம் இஸ்லாம் எங்க இருக்கும்?
/////
லாஜிக் எல்லாம் உதைகவில்லை. உங்களுக்கு லாஜிக் என்றால் என்னவென்றே தெரியவில்லை. அவன் எல்லோரையும் கொல்லவில்லை. உலகமே இஸ்லாமியமயமாகவேண்டும் என்ற கொள்கையுடன் உள்ள ஒருவன், அடுத்தவன் பேசாமல் இஸ்லாம் மதம் மாறினால் பிரச்சினையே இல்லை. ஆனால், மாறமாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களை தான் அவன் தீவிரவாதம் மூலம் கொல்கிறான். இந்த லாஜிக் எப்படி?
கருத்துரையிடுக