பின்பற்றுபவர்கள்

14 பிப்ரவரி, 2009

கோக் பெப்ஸிக்கு போட்டியாக மாட்டு சிறுநீர் :

பெங்களூர்: பெப்சி, கோக் ஆகிய குளிர்பானங்களுக்குப் போட்டியாக, பசுவின் சிறுநீரை (கோமியம்) வைத்து தயாரிக்கப்பட்டுள்ள புதிய குளிர்பானத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த குளிர்பானத்திற்கு கெள ஜல் என அது பெயரிட்டுள்ளது.

இந்த குளிர்பானம் தற்போது ஆய்வக சோதனையில் உள்ளதாம். விரைவில் இது மார்க்கெட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக இதுதொடர்பான ஆய்வுக் குழுவின் தலைவரான ஓம் பிரகாஷ் என்பவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த குளிர்பானத்தில் கண்டிப்பாக சிறுநீர் வாசனை அறவே இருக்காது. உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. தற்போது மார்க்கெட்டில் உள்ள கார்போனைட் அடங்கிய குளிர்பானங்களைப் போல உடலைக் கெடுக்காது. எந்த வகையான நச்சுக் கிருமிகளும் இதில் இருக்காது என்றார் ஓம் பிரகாஷ்.

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடந்த 1994ம் ஆண்டு வெளிநாட்டு குளிர்பானங்களையும், நுகர்வோர் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி பெரும் போராட்டத்தையும் மேற்கொண்டது நினைவிருக்கலாம்.

புதிய கோமிய குளிர்பானம் குறித்து ஓம் பிரகாஷ் மேலும் கூறுகையில், நாங்கள் தயாரித்துள்ள கெள ஜல் குளிர்பானம் பசுவின் சிறுநீரைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் சில மருத்துவ மூலிகைகள், ஆயுர்வேத மூலிகைகளின் சாறும் சேர்க்கப்படும்.

இது விலை மலிவானது. விலை குறித்து இப்போது அறிவிக்கும் திட்டம் இல்லை. முறைப்படி தொடங்கப்பட்டவுடன் அனைத்து விவரமும் தெரிய வரும்

மேலும் படிக்க

*******

மாட்டு சிறுநீர் என்று படித்தால் தலைப்பு அருவெறுப்பாக இருக்கும் 'கோமேயம்' என்று படிக்கவும்.


தசவதாரம் படம் பார்த்திருக்காவிட்டால் சவுச்சாலயம் என்றால் எதோ வட இந்திய கோயில் என்றே நினைத்திருப்போம். கழிவரை என்ற பெயர்ச் சொல்லை சமஸ்கிரதத்தில் மொழி மாற்றி எழுதி யாராவது படித்தால் 'ஸ்லோகம்' சொல்வதாக நினைத்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் நம்மவர்கள் இருக்கும் வரை கோமேயம் என்ன அஸ்வமேயம் (குதிரை மூத்(தி)ரம்), வரகாமேயம் (பன்றி மூத்(தி)ரம்) கூட விற்பனைக்கு வரலாம்.

20 கருத்துகள்:

தமிழ்ப்பதிவன் சொன்னது…

இங்கேபடிச்சி சிரிச்சிட்டிருந்தேன். இந்தக் கோமாளிங்களுக்கு வேற வேலயே இல்ல. இப்ப நீங்களும் போட்டுட்டீங்க, அவனுங்களுக்கு ஃப்ரீ வெளம்பரமா!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நாம இங்கு குடிப்பது மறு சுத்திகரிக்கப் பட்ட குளியலறைக் கழிவு நீர். அவர்கள் குடிக்கச் சொல்வது மாட்டு சிறு நீர். மொராஜி தேசாய்.........!

பெயரில்லா சொன்னது…

ரொம்ப நாளாச்சு எங்க பக்கம் வந்து.எங்க ஊர் தண்ணி ஒத்து கிடுச்சா .இன்னும் ஜல தோசம் இருக்கா
http://sathish777.blogspot.com/2009/02/blog-post_4439.html .

பெயரில்லா சொன்னது…

நாம இங்கு குடிப்பது மறு சுத்திகரிக்கப் பட்ட குளியலறைக் கழிவு நீர்//
???????

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
நாம இங்கு குடிப்பது மறு சுத்திகரிக்கப் பட்ட குளியலறைக் கழிவு நீர். அவர்கள் குடிக்கச் சொல்வது மாட்டு சிறு நீர். மொராஜி தேசாய்.........!
//

ஆற்றில் கால்கழுவி வரும் சுத்திகரிக்கப்படாத பெரு(ம்) நீர் குடிப்பதைவிட சுத்திகரிகப்பட்ட சிறு நீர் குடிக்கலாம் என்கிறீர்களா ? இல்லை என்கிறீர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
நாம இங்கு குடிப்பது மறு சுத்திகரிக்கப் பட்ட குளியலறைக் கழிவு நீர்//
???????
//

அது சிங்கை குடிநீர் பெயர் NEWater !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ்ப்பதிவன் 12:10 AM, February 15, 2009
இங்கேபடிச்சி சிரிச்சிட்டிருந்தேன். இந்தக் கோமாளிங்களுக்கு வேற வேலயே இல்ல. இப்ப நீங்களும் போட்டுட்டீங்க, அவனுங்களுக்கு ஃப்ரீ வெளம்பரமா!
//

வெளம்பரமா ? திருடர்கள் எச்சரிக்கை என்றால் திருடர்களுக்கு வெளம்பரமா ?
:)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//அது சிங்கை குடிநீர் பெயர் NEWater !
:)//

:-)))

ramachandranusha(உஷா) சொன்னது…

நெத்தில பட்டை அடிச்சிக்கிட்டு, வாயிலையும் போட்டுகிறீங்களே அதன் மூல பொருள் என்ன :-)

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

கோமி-கண்ணன்.. சாரி. கோவி.கண்ணன்.

அருமையான செய்தி. பஞ்ச கவ்வியம் பற்றி தெரிந்திருந்தால் உங்களுக்கு இந்த செய்தி இனிப்பாக இருந்திருக்கும்.(பானமும் தான் :))

கோமியத்தை மட்டுமல்ல, பஞ்சகவ்வியத்தையே அவர்கள் பானமாக விற்கிறார்கள். இது ஓர் ஆயுர்வேத மருந்து. உடலுக்கு நல்லது. கோக்கை குடித்துவிட்டு தாவரத்தில் ஊற்றினால் அது இறந்து விடும். இந்த பானத்தை ஊற்றினால் தாவரம் வளரும். (இது தான் எனது சீக்கிரெட் ஆப் எனர்ஜியானு கேட்கப்பிடாது ஆமா..;) )

பால் குடிக்கிறோம், பால் வரும் இடத்திலிருந்து சில செண்டி மீட்டர் இடைவெளியில் தானே இது கிடைக்கிறது ;)

கோமியம் விற்கலாம் தவறில்லை..
நரமியம் விற்காமல் இருந்தால் சரி.

வடுவூர் குமார் சொன்னது…

நல்ல வேளை! இங்கு இருந்தால் ஒட்டகத்தை என்ன செய்திருப்பார்களோ!!!

கோவி.கண்ணன் சொன்னது…

// வடுவூர் குமார் said...
நல்ல வேளை! இங்கு இருந்தால் ஒட்டகத்தை என்ன செய்திருப்பார்களோ!!!
//

சாக்லேட்டில் சேர்பதற்காக திருப்பதியில் வெட்டிய முடியை டன் கணக்கில் வாங்குகிறார்களாம். யார் கண்டது எது எதில் என்ன கலந்திருக்கிறதோ.

incredent பார்க்காமல் நான் எதுவுமே வாங்குவதில்லை.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ramachandranusha(உஷா) said...
நெத்தில பட்டை அடிச்சிக்கிட்டு, வாயிலையும் போட்டுகிறீங்களே அதன் மூல பொருள் என்ன :-)
//

நெருப்பில் எரிந்த பின்பு எதுவுமே தூய்மையாகத்தானே ஆகிறது.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
கோமியம் விற்கலாம் தவறில்லை..
நரமியம் விற்காமல் இருந்தால் சரி.//

அப்ப சித்தவைத்தியர்கள் நரமியத்திலும் தாதுக்கள் இருப்பதாக சொல்வதெல்லாம் தவறா ?

மொரார்ஜி தேசாய் காஃபிக்கு பதிலாக டிகாசன் தான் குடிப்பாராமே :)

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
//அது சிங்கை குடிநீர் பெயர் NEWater !
:)//

:-)))
//

சிங்கப்பூர் தண்ணீர் தேவையை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விழுக்காடுகள் அளவில் சேர்க்கப்படுகிறது. குடித்தால் எந்த வியாதியும் வரவே வராது. ! கழிவரை முதல் சமையல் அறை வரை ஒரே தண்ணீர்தான், எங்கும் குடிக்கலாம் :)

சி தயாளன் சொன்னது…

ஹையோ ஹையோ..இவங்களை அடக்க யாருமே இல்லையா..?

பெயரில்லா சொன்னது…

//
உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் இந்த கோமிய குளிர்பானத்தை ஏற்றுமதி செய்யப் போகிறதாம் ஆர்.எஸ்.எஸ்.//

hehe jingapore ku varuma :)))

priyamudanprabu சொன்னது…

///
கோமேயம் என்ன அஸ்வமேயம் (குதிரை மூத்(தி)ரம்), வரகாமேயம் (பன்றி மூத்(தி)ரம்)
///

இதெல்லாம் எங்க ப(பு)டிச்சீங்க????

கோவி.கண்ணன் சொன்னது…

//இதெல்லாம் எங்க ப(பு)டிச்சீங்க????//

பிரபு,

அஸ்வமேதயாகம்,வராக(ன்) அவதாரம் எல்லாம் கேள்வி பட்டதே இல்லையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...
ஹையோ ஹையோ..இவங்களை அடக்க யாருமே இல்லையா..?
//

பெப்ஸி கோக்குக்கு மேல் இருக்கும் இவர்களின் ஆத்திரத்தையா அல்லது மாட்டு மூத்திரத்தையா ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்