நடந்த சென்னை பதிவர் சந்திப்பு பற்றி சிலர் எழுதிவிட்டதாலும், நடந்து முடிந்து 10 நாட்கள் ஆகிவிட்ட பிறகு அதைப் பற்றி எழுத, நினைவில் இருந்து எழுதி கற்காலத்திற்கு கொண்டு செல்ல விரும்பவில்லை. பல புகைப்படங்களை எடுத்தேன். அதில் சிலவற்றையும், சில செய்தி துணுக்குகளையும் பகிர்ந்து கொள்கிறேன்.
* எனது (நண்பரின் சொந்த) மகிழுந்தில் சரியாக மாலை 5 மணிக்கு கிழக்கு பதிப்பகம் வாசலில் இறங்கினேன்.
* அதிஷாவும், கேபிள் சங்கரும் முன்பே நின்று கொண்டு இருந்தார்கள்
* எங்க ஊர்காரான பத்ரி அண்ணனை முதன் முதலில் பார்த்தேன். எலெக்ட்ரிக் ஸ்கூட்டி ஓட்டுவது பற்றி சிறப்பு பாடம் எடுத்தார்
* முகமூடி போட்டுக் கொண்டு பைக் லபக்குவது பற்றி செய்முறை விளக்கம் கொடுத்தார் அதிஷா
* வெள்ளை வெளீரென்ற சட்டையில் பளீரென்று வந்து நின்றார் நர்சிம்
* இவரிடம் பேசியே ஆகவேண்டும் என்று காண்போரை நினைக்க வைக்கும் வெண்பூ. எப்டிங்க எப்போதும் புன்னகையோடு இருக்கிங்க ?
* 'ப்ரஸ்காரங்க என்று சொன்னாலும் விடமாட்டறானுங்க' லக்கி லுக் டிராபிக் காண்ஸ்டபிளிடம் சிக்கிய கதையைச் சொன்னார்.
* இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான மகிழ்ச்சியா ? முரளி கண்ணனை ஆறுமாதத்திற்கு முன்பு பார்த்தைவிட எடை கூடுதலாகவும், முகம் நல்ல பளப்பளப்பாகவும் இருந்தார். குழந்தைக்கு கொடுக்கும் பால் பவுடர் விரைவாக தீருதா, எல்லாத்தையும் நீங்களே கலக்கி குடிச்சிடுறிங்களான்னு கேட்க மறந்துட்டேன்
* உங்க பதிவு தலைப்பில் போட்டு இருக்கும் படங்களும், உங்கள் திரைவிமர்சனங்களும் சூப்பர் பலரும் பாராட்டுகிறார்கள் என்று கேபிள் சங்கரிடம் சொன்னேன். குறுகிய காலத்தில் 75 ஆயிரம் ஹிட்ஸ் குறிப்பிட்டு பாராட்டினேன். சினிமா துறையில் (இருந்து) வலைவீசுபவர், ஏ,பி, சி செண்டர்கள் பற்றிச் சொன்னார். ஏ வும் பி யும் இப்ப ஒன்றாகிவிட்டது என்றார்.
* டோண்டு சார் வழக்கம் போல் இறுக கட்டி அணைத்து எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்
* யெஸ்பா இணையர்கள் தோன்றினார்கள், இல்லறப் பொறுப்பு கூடுதல் ஆகிவிட்டதால் கூட்டம் முடிவதற்குள் யெஸ் ஆகிவிட்டார்
* எங்காவது பெரும் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகையெல்லாம் தேவை இல்லை, டோண்டு சாரிடம் மைக் கொடுத்து இஸ்ரேல் பற்றி பேசச் சொல்லுங்க ஈ காக்காய் கூட அங்கிருக்காது என்று டோண்டு இஸ்ரேல் பற்றி சிறப்பு விவாத உரையாற்றிய போது எழுந்து வந்த நண்பர்கள் கிழே இளைப்பாறிக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தார்கள். 'நீங்களும் வந்துட்டிங்களா கோவி?' புரூனோ சார் கேட்டார். அவர் முதலில் எழுந்து சென்றதாக மற்றவர்கள் சொன்னார்கள். உண்மையா புரூனோ சார் ? :)
* நாடகமே உலகம் - நாடகம் போடுவதற்காக எப்படியெல்லாம் நடிக்க வேண்டி இருக்கிறது - இராதா கிருஷ்ணன் ஐயா தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்
* படித்துறை கனேஷ் - பல விவாதங்களில் கலந்து கொண்டு அசத்தினார். நடந்த விவாதங்களில் மிகுதியா பேசியவர்கள் கனேஷ், பத்திரி, சங்கர், டோண்டு மற்றும் சையத்.
* தோற்றம் மற்றும் பேச்சுகளால் பலரையும் என்னையும் ஈர்த்த மற்றொருவர் அக்னிபார்வை
* புரூனோ சார் ஏனோ மிகுதியாக பேசவில்லை, மேலே நடந்த சந்திப்பை விட கீழே உற்சாகமாக இருந்தார்.
* திரைத்துறையைச் சார்ந்தவர்கள் மூவர் அதுபற்றிய விவாதம் நல்ல முறையில் நடந்தது
* வெட்டப் போகிற ஆடு போல விஜய் ஆனந்த் நடுங்கியது ஏன் என்று தெரியவில்லை
* 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள், அதிஷா எல்லோரையும் வரவேற்றார். பத்திரி அண்ணன் எல்லோருக்கும் தேவையான தண்ணீரை தருவித்து கொடுத்து, இடமும் கொடுத்து பலவற்றைப் தொட்டுப் பேசினார்
* மொட்டைமாடியில் இருந்து கூட்டம் கலைந்ததும் பாதியளவுபேர் டீக்கடையில் தேனிர் அருந்துவிட்டு விடைபெற்றோம்.
* அத்திரி மற்றும் ஜ்யோராம் சுந்தரை எதிர்ப்பார்த்து இருந்தேன், அவர்களுக்கு அம்பத்தூரில் மற்றொரு நிகழ்வுக்காக சென்று இருந்ததை பின்னர் அறிந்தேன்
லக்கி : அடுத்த முறை கூட்டம் போட்டால் அஜண்டாவில் இல்லாததைப் பேசக்கூடாதுன்னு சொல்லனும் என்று முன்பே சொன்னேன். யாராச்சும் சொன்னிங்களா ? இப்ப என்ன ஆச்சு ?
பின்பற்றுபவர்கள்
5 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
39 கருத்துகள்:
பல பதிவுகளில் எழுத்து அதிகமாக இருக்கும் அதற்கு மாற்றாக இந்த பதிவில் படங்களும் சில சிரிப்பு வெடிகளுமாம் (பால் பவுடர்) இருந்தது.
பலரை நானும் முதல் முறையாக படங்கள் மூலம் பார்க்கிறேன்.
"இறுக்க பிடிச்சா இன்ப அதிர்ச்சி" ஏதோ மலையாளப்படம் பெயர் மாதிரி இருக்கு. :-)
படங்களுக்கு நன்றி.
//நடந்து முடிந்து 10 நாட்கள் ஆகிவிட்ட பிறகு அதைப் பற்றி எழுத, நினைவில் இருந்து எழுதி கற்காலத்திற்கு கொண்டு செல்ல விரும்பவில்லை..//
இதுக்கு இன்னொரு பெயர் 'சரித்திரம்':-)
சூப்பரான நகைச்சுவை மிளிரும் பதிவு கண்ணன் சார்..
முரளியிடம் கேட்க வேண்டும் நிஜம்தானா என்று..?
படங்கள் எல்லாம் ஓகே.. உங்களுக்கு எப்படியும் 50 வயதிருக்கும் என்றிருந்தேன்...
சில தவிர்க்க முடியாத காரணங்களால் அன்று என்னால் வர இயலவில்லை...மறுபடியும் சந்திக்கலாம்
பதிவர் சந்திப்பிற்காகவே தங்கள் தாய் நாடான தமிழ் நாட்டிற்கும்(இந்தியா நம்ம நாடு இல்லைன்னு சிலர் சொல்கிறார்கள். ஆனா நான் சொல்லுறேன். இந்தியா என்றொரு நாடுண்டு அங்கு ஏலம் கிராம்பு மிக உண்டும் பொன்னும் பொருளும் பல உண்டு, ஆனால் போக்கறியாதோர் நிரம்ப உண்டு), அண்டை நாடான கர்நாடகாவிற்கும் சென்று வந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.
மற்றபடி, மண்(ன்) மோகனையும், கருணா "நிதி"யையும் ஈழப் பிரச்சனையில் சமாதானப் படுத்தச் சென்றதாக ஒரு வ தந்தி உலவிக் கொண்டிருந்தது. அது பற்றி நீங்கள் வாய் திறக்கவே இல்லையே ஏன்? இறை, ஆ(ண்)மை இதுபோன்ற பிரச்சனைகள் தலை தூக்கும் என்பதாலா?
அது எப்படி எல்லாருமே அதிஷாவை பாத்த உடனே கட்டிப்பிடிக்கிறீங்க.........
//அண்டை நாடான கர்நாடகாவிற்கும் சென்று வந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். //
ஒரு திருத்தம்,
அ(ச)ண்டை நாடான கர்நாடகாவிற்கும் சென்று வந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.
இப்படி இருக்க வேண்டும்
கோவிஜி,
வேலை இப்போது அதிகம். அமர்ந்த இடத்திலிருந்து இங்கும் அங்கும் நகர முடியவில்லை. அதுதான் எடைக்கு காரணம். இனிமேல் ஜாகிங் போகப் போகிறேன்.
உங்கள் கமெண்டுகள் சூப்பர்
நண்பர் பைத்தியக்காரனும் நானும் அன்று நடந்த முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டிலும் பொதுக்கூட்டத்திலும் கலந்த கொள்ளச் சென்றிருந்தோம். அதனால்தான் வர இயலவில்லை :(
வந்தால் உங்களைச் சந்தித்திருக்கலாம். ப்ச்... அடுத்தமுறை பார்ப்போம் :)
நல்லாயிருந்தது....
கலக்கல் கமெண்ட்ஸ் தல
பதிவில் விடுபட்டு போனது..
சந்திப்பில்..கோவி..சிங்கை பதிவர் சார்பில் அனைவருக்கும்..வாழ்த்துக்கள் கூறியது..
அத்திரியை சந்திக்க முடியாதது எனக்கும் வருத்தமே..
//வடுவூர் குமார் said...
பல பதிவுகளில் எழுத்து அதிகமாக இருக்கும் அதற்கு மாற்றாக இந்த பதிவில் படங்களும் சில சிரிப்பு வெடிகளுமாம் (பால் பவுடர்) இருந்தது.
பலரை நானும் முதல் முறையாக படங்கள் மூலம் பார்க்கிறேன்.//
:) இன்னும் கூட படங்கள் இருக்கின்றன. பதிவு திறக்க நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் ஏற்றவில்லை
//"இறுக்க பிடிச்சா இன்ப அதிர்ச்சி" ஏதோ மலையாளப்படம் பெயர் மாதிரி இருக்கு. :-)
//
குமார் அண்ணன், ஜோதி தியேட்டர் பக்கம் நீங்களும் போய் இருக்கிங்களா ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்
//துளசி கோபால் said...
படங்களுக்கு நன்றி.//
பாராட்டுக்கும் நன்றி !
//இதுக்கு இன்னொரு பெயர் 'சரித்திரம்':-)
//
சுய சரித்திரமாக எழுதாதவரை சரித்திரம் சகிக்க முடியும். சரிதானே !
:)
//Cable Sankar said...
சூப்பரான நகைச்சுவை மிளிரும் பதிவு கண்ணன் சார்..
//
நன்றி சங்கர் சார். உங்களைப் போன்ற பெரும்புள்ளிகளை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி !
//Cable Sankar said...
முரளியிடம் கேட்க வேண்டும் நிஜம்தானா என்று..?
//
பால் பவுடர் எந்த கடையில் வாங்குகிறார் என்று பார்த்து, அந்த கடையில் எத்தனை நாளைக்கு ஒருமுறை பால் பவுடர் வாங்குகிறார் என்று கடைக்காரரிடம் கேட்டுப் பாருங்க.
படங்களுடன் சந்திப்பை சுருக்கமாக விவரித்திருந்தது அருமை.
படங்கள் எடுத்தது யாருன்னு சொல்லவேயில்லை
//அத்திரி said...
படங்கள் எல்லாம் ஓகே.. உங்களுக்கு எப்படியும் 50 வயதிருக்கும் என்றிருந்தேன்...//
எல்லோருமே அப்படித்தான் கருதுகிறார்கள். அதற்காகவே அடிக்கடி புகைப்படம் போடுகிறேன் :)
//சில தவிர்க்க முடியாத காரணங்களால் அன்று என்னால் வர இயலவில்லை...மறுபடியும் சந்திக்கலாம்
//
பரவாயில்லை. அடுத்த முறை சந்திப்போம்.
//ஜோதிபாரதி said...
பதிவர் சந்திப்பிற்காகவே தங்கள் தாய் நாடான தமிழ் நாட்டிற்கும்(இந்தியா நம்ம நாடு இல்லைன்னு சிலர் சொல்கிறார்கள். ஆனா நான் சொல்லுறேன். இந்தியா என்றொரு நாடுண்டு அங்கு ஏலம் கிராம்பு மிக உண்டும் பொன்னும் பொருளும் பல உண்டு, ஆனால் போக்கறியாதோர் நிரம்ப உண்டு), //
ஜோபா, கவிஜையா ? இந்தியா நம்ம நாடு இல்லைன்னு சொல்லமாட்டாங்களே, உங்க நாடு இல்லைன்னு தானே சொல்லுவாங்க. :) உள் குத்து அரசியல் கவனமாக படிக்கவும், புரியவில்லை என்றால் போன் செய்து கேட்கவும் :))))
//அண்டை நாடான கர்நாடகாவிற்கும் சென்று வந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.//
பெங்களூர் எனக்கு பிடித்த ஊர்தான்.
//மற்றபடி, மண்(ன்) மோகனையும், கருணா "நிதி"யையும் ஈழப் பிரச்சனையில் சமாதானப் படுத்தச் சென்றதாக ஒரு வ தந்தி உலவிக் கொண்டிருந்தது. அது பற்றி நீங்கள் வாய் திறக்கவே இல்லையே ஏன்? இறை, ஆ(ண்)மை இதுபோன்ற பிரச்சனைகள் தலை தூக்கும் என்பதாலா?//
நான் போன நேரம் இரண்டு பேருமே படுத்துட்டாங்க, அப்பறம் ? பேசாவது வார்த்தையாவது ! :)))))
//அத்திரி said...
அது எப்படி எல்லாருமே அதிஷாவை பாத்த உடனே கட்டிப்பிடிக்கிறீங்க.........
//
அப்படியா சொல்றிங்க, சென்ற முறை ஜூன் மாதத்தில் நான் சென்ற சென்னை சந்திப்புக்கு நானும் வந்திருந்தேன் என்று அவர் சொல்லித்தான் எனக்கு நினைவே வந்தது. இப்ப அதிஷான்னே அதிருதுல்ல அந்த அதிர்ச்சியை உணரத்தான் எல்லோரும் கட்டிப்பிடிக்கிறார்கள்.
//ஜோதிபாரதி said...
//அண்டை நாடான கர்நாடகாவிற்கும் சென்று வந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். //
ஒரு திருத்தம்,
அ(ச)ண்டை நாடான கர்நாடகாவிற்கும் சென்று வந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.
இப்படி இருக்க வேண்டும்
//
மறுபடியும் திருத்தம், தமிழ் நாடு என்பது தனி நாடு அல்ல, தனி மாநிலம். 'நாடு' என்பது பெயர் சொல் மட்டுமே. அது கருநாடகாவிற்கும் பொருந்தும், கருநாடகம் தனி நாடு இல்லை, தனி மானிலம்.
//முரளிகண்ணன் said...
கோவிஜி,
வேலை இப்போது அதிகம். அமர்ந்த இடத்திலிருந்து இங்கும் அங்கும் நகர முடியவில்லை. அதுதான் எடைக்கு காரணம். இனிமேல் ஜாகிங் போகப் போகிறேன்.
உங்கள் கமெண்டுகள் சூப்பர்
//
அதனால் என்ன ? எடைக்கு எடை காணிக்கை செலுத்துகிறேன் என்று வேண்டிக் கொள்பவர்கள் கவலைப் பட வேண்டிய ஒன்று ! உங்களுக்கு எதும் வேண்டுதல் இருந்தால் ஜாகிங் போங்க.
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நண்பர் பைத்தியக்காரனும் நானும் அன்று நடந்த முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டிலும் பொதுக்கூட்டத்திலும் கலந்த கொள்ளச் சென்றிருந்தோம். அதனால்தான் வர இயலவில்லை :(//
அது கேள்வி பட்டேன்.
//வந்தால் உங்களைச் சந்தித்திருக்கலாம். ப்ச்... அடுத்தமுறை பார்ப்போம் :)
//
உறுதியாக !
//ராம்.CM said...
நல்லாயிருந்தது....
//
திரு ராம், நன்றி !
//narsim said...
கலக்கல் கமெண்ட்ஸ் தல
//
நர்சிம் நன்றி !
//T.V.Radhakrishnan said...
பதிவில் விடுபட்டு போனது..
சந்திப்பில்..கோவி..சிங்கை பதிவர் சார்பில் அனைவருக்கும்..வாழ்த்துக்கள் கூறியது..
//
ஐயா,
சந்திப்பில் அதை மட்டும் தான் நான் சொன்னேன் !
//வால்பையன் said...
படங்களுடன் சந்திப்பை சுருக்கமாக விவரித்திருந்தது அருமை.
படங்கள் எடுத்தது யாருன்னு சொல்லவேயில்லை
//
வால்,
பாராட்டுக்கு நன்றி !
நான் இருக்கும் படங்களை எனது நண்பர் எடுத்தார். மற்றவைகள் நானே எடுத்தேன்.
ஐ... எனக்கும் நெரய பேர் தெரியும்.
ம்...உலகம் சுற்றும் பதிவராக மாறுகின்றீர்கள் போல்...
அஜெண்டா சூட்சுமத்தை இப்பதான் நான் புரிந்து கொண்டேன்...:-)
// தேனியார் said...
ஐ... எனக்கும் நெரய பேர் தெரியும்.
//
அப்படியா ? அடுத்தடுத்த பதிவுகளில் இன்னும் பலரை நன்றாக அறிந்து கொள்வீர்கள் !
//’டொன்’ லீ said...
ம்...உலகம் சுற்றும் பதிவராக மாறுகின்றீர்கள் போல்...//
டொன்லீ,
தமிழ்நாடு, பெங்களூர், சிங்கை, மலேசியா இதுதான் உலகமா ?
:)
//அஜெண்டா சூட்சுமத்தை இப்பதான் நான் புரிந்து கொண்டேன்...:-)
//
:)
கோவி.கண்ணன் said...
// K.R.அதியமான் said...
Dear Kovi,
I couldn't call you for the past one week due to personal work and hurry bury. missed meeting you at Adyar ! hope to meet you next time.
pls mail me the link about our birthday to a*****@gmail.com
Writer Gyanai mailed his wishes on seeing your post and we became good freinds after that. :))
anbudan//
அதி,
அப்படியா மகிழ்ச்சி ... இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறீர்கள் கூடுதல் பொறுப்புகள் இருக்கிறது என்பது புரிந்து கொள்ள முடிவது தான். அடுத்த முறை சந்திப்போம் !
மின் அஞ்சல் முகவரி உங்கள் பின்னூட்டத்தில் இருக்கிறது அதனால் எடுத்துவிட்டேன்.
கமெண்டுகள் சூப்பர் கோவி-ஜி!!!
//* எங்காவது பெரும் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகையெல்லாம் தேவை இல்லை, டோண்டு சாரிடம் மைக் கொடுத்து இஸ்ரேல் பற்றி பேசச் சொல்லுங்க ஈ காக்காய் கூட அங்கிருக்காது என்று டோண்டு இஸ்ரேல் பற்றி சிறப்பு விவாத உரையாற்றிய போது எழுந்து வந்த நண்பர்கள் கிழே இளைப்பாறிக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தார்கள். 'நீங்களும் வந்துட்டிங்களா கோவி?' புரூனோ சார் கேட்டார். அவர் முதலில் எழுந்து சென்றதாக மற்றவர்கள் சொன்னார்கள். உண்மையா புரூனோ சார் ? :)//
ஹி ஹி ஹி :)
//* புரூனோ சார் ஏனோ மிகுதியாக பேசவில்லை, மேலே நடந்த சந்திப்பை விட கீழே உற்சாகமாக இருந்தார்.//
கண்ணீர் புகை குண்டினால் ஒரே கண்ணீர். :)
இன்ப அதிர்ச்சி...நன்றி கோவி அண்ணன் அவர்களே !!!!
எங்க போட்டோவ கூட போட்டதுக்கு...
உங்களை சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி !!!
மிகுதியா பேசியது சையத் என்றி போட்டிருக்கிறீர்கள்..
அது நான் இல்லீங்கோ...அவர் பெயர் இஸ்மாயில்...சுனாமி எச்சரிக்கை கருவி
ஆய்வாளர்..அவரே தான்...
dear kannan
i,m arun .
mail my photo to me
sarun566@gmail.com
then very soon i,ll try to start a blog
கருத்துரையிடுக