பின்பற்றுபவர்கள்

5 ஜனவரி, 2009

நன்றி தமிழ்மணம், மற்றும் பல(ர்) , ஒரு மொக்கை, ஒரு சீரியஸ் !

எனது இப்பதிவில் இட்ட வேண்டுகோள் படி, தமிழ்மணத்தில் இருந்த தவறிய இணைப்பை, இரண்டே நாட்களில் சரி செய்த தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றி. அப்பதிவில் சொல்லிய படி,

"வரும் ஆண்டு 2009ல் ஆவது இந்த இணைப்பு தவறை தமிழ்மணம் சரிசெய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். வெகுவிரைவில் நிறைவேற்றினால் உடனே பாராட்டி, நன்றி தெரிவித்து ஒரு பதிவும் இடுவேன்."

தமிழ்மணம் இரண்டு நாள் தாமதமாக சரிசெய்ததால், நானும் இரண்டு நாள் தாமதமாகவே பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தாண்டு முதல் மொக்கை பதிவு...வழமை போல் ஆதரவு நல்கவேண்டும்.

*****
அடுத்து ஒரு சீரியஸ்,

தமிலீஷ் ஓனர் யாரு?

வால்பையன் எழுதிய இடுகையைப் படித்தவுடன்,

திரட்டிகள் எல்லாம் ஏன் வெளிப்படையாக செயல்படக் கூடாது ? அதில் என்ன தவறு ? என்ற எண்ணம் ஏற்பட்டது.

உதாரணம் தமிழ்மணம் நிர்வாகம் யாரால் நடத்தப்படுகிறது என்கிற விவரங்களை தமிழ்மணம் அறிவித்து இருக்கிறது, மற்ற திரட்டிகளும் தங்களைப் பற்றியும், அதை நடத்துபவர்கள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கலாமே.

வெறும் புரொபைல் மட்டுமே வைத்திருக்கும் அனானிகள் போலவே விவரங்கள் எதுவும் இல்லாமல் திரட்டும் திரட்டிகளை அனானி திரட்டிகள் என்று சொல்லலாமா ?

*****

* இது மட்டும் இல்லிங்க, தேன் கூடு சாகரன் மறையும் வரை அவர்தான் தேன் கூடு திரட்டியின் உரிமையாளர் என்றே பலருக்கும் தெரியாது, இதுபோல் திடிரென்று தெரியவரும் போது, 'ஐயையோ.....தெரியாமல் போச்சே...முன்பே சொல்லித் தொலைத்திருந்தால் என்ன ?' என்றே நினைக்க வைக்கும்,

* யார் கண்டது....மரணம் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போன்றதே... இவர் 'தமி....' திரட்டியின் உரிமையாளராக இருந்தவர்....... என்று பின்னால் ஒருவர் மறைந்த பிறகு புகழ்பாடுவதைவிட யார் யார் எதை நடத்துகிறார்கள் என்று முன்பே தெரிவது நல்லது. 'திரட்டியின் உரிமையாளர் இவர் என்று முதன்முதலும் கடைசியாகவும் திரட்டி நடத்துபவர் பற்றி மரண அறிவித்தலால் அறிமுகவாவது, திரட்டி நிர்வாகிகளுக்கு கிடைக்கும் நல் அங்கீகாரம், அறிமுகம் அல்ல. :( .

இறந்த பின்பு 'இவர் இந்த திரட்டியின் நிர்வாகியாக இருந்தவர்' என எப்படியும் விசயம் கசிந்துவிடும் என்பதை நினைவில் கொண்டால், கண்ணா மூச்சு ஆட்டம் ஆடுவதை தவிர்க்கலாம்.

* மேலும் திரட்டிகள் தீவிரவாதிகளின் தளம் அல்ல, வெளிப்படையாக யார் அதன் உரிமையாளர்கள், நோக்கம் என்ன என்பதை அறிவிக்கலாம்

* தமிழிஷ் தளத்தில் பார்பனர்களை விமர்சனம் செய்து எழுதினால் பதிவுகள் காணாமல் போய்விடுகிறதாம் (ஒரு பதிவில் படித்தேன்). அதற்கு தமிழிஷ் தளத்தில் இருந்து எதும் சிறப்பான விளக்கம் எதுவும் வரவில்லை. இதுபோன்ற குற்றச் சாட்டுகளை திரட்டிகள் எதிர்நோக்கும் போது இயல்பாகவே திராவிட திரட்டி, ஆரிய திரட்டி என்கிற தேவையற்ற முத்திரைகள் விழும். இதனைத் தவிர்க்க திரட்டி நிர்வாகம் வெளிப்படையாக நடப்பது நல்லது.

முன்பு இது போல் தான் தேன்கூடு பார்பன திரட்டி என்பதாகவும், தமிழ்மணம் திராவிட திரட்டி என்பதாகவும் வதந்திகள் வர.... இரு திரட்டிகளுமே அதனை மறுத்தன.

* தமிழ்மணத்தில் இன்னொரு நல்ல விசயமாக நான் கவனித்தது, பிற திரட்டிகளின் இணைப்பையும் தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறார்கள், பிற திரட்டிகள் இவ்வாறு பெருந்தன்மையாக நடந்து கொள்வதில்லை என்றே நினைக்கிறேன்.

* பதிவர்கள் திரட்டிகளால் புகழ்பெறுகிறார்கள் என்பது போலவே, பதிவர்கள் இல்லை என்றால் திரட்டிகள் காற்றுவாங்கும், பதிவர்களால் தான் திரட்டிகளும் புகழ்பெறுகின்றன. இணைந்து வெளிப்படையாக செயல்படுவது நன்று

* இந்த திரட்டிக்கு அந்த திரட்டி போட்டிங்கிற செய்திகளெல்லாம் கேட்கவே எரிச்சலாக இருக்கிறது, ஊடகத்துறையில் தான் இது போல் போட்டிகள் இருக்கும்

* திரட்டிகள் வெளிப்படையாக இருந்தால் தான் அதன் மீதான நம்பகத்தன்மையில் உறுதி ஏற்பட்டு, பலரால் அறியப்பட்டு புகழ்பெறும்

* திரட்டிகளின் பெருக்கம் தமிழ் பதிவுகள் சூழலில் நலமானதே என்பது எனது தனிப்பட்ட கருத்து.

பின்னூட்டத்தில் இது குறித்தான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

21 கருத்துகள்:

ஆளவந்தான் சொன்னது…

//
இரண்டே நாட்களில் சரி செய்த தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றி
//
Very much Impressive

ஆளவந்தான் சொன்னது…

//
தமிழ்மணம் இரண்டு நாள் தாமதமாக சரிசெய்ததால், நானும் இரண்டு நாள் தாமதமாகவே பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
//
முடியல :)

SP.VR. SUBBIAH சொன்னது…

/////இந்த திரட்டிக்கு அந்த திரட்டி போட்டிங்கிற செய்திகளெல்லாம் கேட்கவே எரிச்சலாக இருக்கிறது, ஊடகத்துறையில் தான் இது போல் போட்டிகள் இருக்கும்////

கரெக்ட் கோவியாரே!

நட்புடன் ஜமால் சொன்னது…

நிஜமாவே சரியாயிடிட்ச்சா

என் பெயர் ஏன் வரமாட்டங்குது

”லிஸ்ட்ல” சேர்த்துட்டாங்களா ...

தேவன் மாயம் சொன்னது…

இன்னும் நிறைய பிரச்சினைகள் சரியாகவில்லைங்க!!!

தேவா...

வால்பையன் சொன்னது…

உங்கள ஏன் தமிழ்மணம் கட்டம் கட்டுனாங்கன்னு இப்போ தான் தெரியுது!

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
உங்கள ஏன் தமிழ்மணம் கட்டம் கட்டுனாங்கன்னு இப்போ தான் தெரியுது!
//

அலோ...நான் பேச்சு மாறாம நன்றி தெரிவிச்சிருக்கேன், உங்களுக்கு கிண்டலா.

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிரை ஜமால் said...
நிஜமாவே சரியாயிடிட்ச்சா

என் பெயர் ஏன் வரமாட்டங்குது

”லிஸ்ட்ல” சேர்த்துட்டாங்களா ...
//

உங்க பிரச்சனை வேற பெரச்சனை, அதுக்கு தமிழ்மணத்துக்கு தனி மடல் போடுங்க, கண்டுகொள்ளவில்லை என்றால் தனிப்பதிவு போடுங்க

:)

கோவி.கண்ணன் சொன்னது…

ஆளவந்தான் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

வாத்தியார் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//thevanmayam said...
இன்னும் நிறைய பிரச்சினைகள் சரியாகவில்லைங்க!!!

தேவா...
//

மற்ற பிரச்சனைகள் என்னன்னு சொல்லுங்க, தெரிய வைப்போம்

வால்பையன் சொன்னது…

அதாவது அதி புத்திசாலிகளை அவர்கள் இப்படி தான் கட்டம் கட்டுவார்களாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
அதாவது அதி புத்திசாலிகளை அவர்கள் இப்படி தான் கட்டம் கட்டுவார்களாம்
//

இதப்படிச்சா இன்னொரு ஆளுக்கு கட்டம் கட்டப் போறேங்கே....
:)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

///இரண்டே நாட்களில் சரி செய்த தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு பாராட்டுக்கள் மற்றும் ///

நன்றி கோவி.

பெயரில்லா சொன்னது…

Good job Govi

SurveySan சொன்னது…

//* இந்த திரட்டிக்கு அந்த திரட்டி போட்டிங்கிற செய்திகளெல்லாம் கேட்கவே எரிச்சலாக இருக்கிறது, ஊடகத்துறையில் தான் இது போல் போட்டிகள் இருக்கும்//

;)

pls vote - திரட்டி அரசியல்

சி தயாளன் சொன்னது…

நல்ல விசயம்..:-)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தமிழ்மணத்தில் சிலவிடயங்கள் ஆச்சர்யப் படத்தக்க வகையில் செய்யப் படுகின்றன. சிரத்தை எடுத்து செய்கிறார்கள். நீங்களும் நிறைய ஆலோசனை சொல்கிறீர்கள். தங்கள் பதிவு சூடான இடுகைகளில் இடம்பெற விரும்புகிறோம். நிறைய வாசகர்கள் படிப்பதற்கு எதுவாக அமையும்.

//'திரட்டியின் உரிமையாளர் இவர் என்று முதன்முதலும் கடைசியாகவும் திரட்டி நடத்துபவர் பற்றி மரண அறிவித்தலால் அறிமுகவாவது, திரட்டி நிர்வாகிகளுக்கு கிடைக்கும் நல் அங்கீகாரம், அறிமுகம் அல்ல. :( .
//

தங்கள் சொல்வது நல்லவிடயமாக இருந்தாலும், கேட்பதற்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

பெரியவா என்னா என்னமோ சொல்றேள், நேக்கு ஒன்னுமே புரியல.

இந்த ஆண்டும் நிறைய பலனுள்ள பதிவுகளை எழுதிக் குவிக்க வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

இராதா கிருஷ்ணன் ஐயா, டொன் லீ, ஜோதி.பாரதி மற்றும் யூசூப் பால் ராஜ் ஐயங்கார்

பின்னூட்ட கருத்துகளுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

சர்வேசன், வடகரை அண்ணாச்சி நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்