பின்பற்றுபவர்கள்

18 மே, 2008

சென்னை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன்...

17 மே காலை 11 மணிக்கு சென்னையில் தரை இறங்கினேன், இறங்கியவுடன் சூரிய பகவானின் அரவணைப்பில் (வியர்வையால்) உருகிப்போனேன். அன்றுமுழுவதுமே வெளியில் சென்ற இடங்களிலெல்லாம் அனல் காற்று...கத்திரி வையிலாம்...28 ஆம் தேதி வரை இருக்குமாம்.

மே 18 மாலை ஆறுமணிக்கு பதிவர் சந்திப்புக்கு நண்பர்கள் பாலபாரதியும், லக்கிலுக்கும் அறிவிப்பு விட்டதைத் தொடர்ந்து, சென்னை சென்றதும் நான் கலந்து கொள்வதை உறுதிப்படுத்திக் கொண்டு, அதன் படி எனது நண்பரின் 'சொந்த' காரை எடுத்துக் கொண்டு மாலை 5 மணி அளவில் மெரீனா கடற்கரையை அடைந்தோம்...போலிஸ் கூட்டம் பீதியை கிளப்பியது, நண்பர் கேட்டார் 'ஏன் டிராபிக் போலிஸ் இவ்வளவு கூட்டமாக நிற்கிறார்கள்....அப்பா டிராபிக் போலிஸ் தானா ?' வேறு ஒன்னும் இல்லையே ... பாலபாரதி காந்தி சிலைக்குப் பின்னால் லக்கியுடன் நிற்பதை தெரிவித்தார். காரை நிறுத்திவிட்டு சென்றோம்..நேர்கொண்டு கட்டித்தழுவினார்கள்... சரியாக மாலை 5.30 மணிக்கு பிறகு முரளி கண்ணன் வந்தார்..

அதன் பிறகு சகோதரி லிவிங் ஸ்மைல் வித்யா...இராமகி ஐயா.....திரு டோண்டு இராகவன் ...கேஆர் அதியமான்...தருமி ஐயா... டாக்டர் புரூனோ.....ஜ்யோவ்ராம் சுந்தர்....வளர்மதி...மற்றொமொரு சுந்தர்....இன்னும் சிலர்....வந்து 6 மணிக்கு கலை கட்டியது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழலில் பலபதிவர்களை நேர்முகம் கண்டார்கள்.

எல்லோரையில் நேரில் சந்தித்த புதிய அனுபவம் நெகிழ்சியாக இருந்தது.....நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுதுகிறேன்.






20 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//கத்திரி வையிலாம்...28 ஆம் தேதி வரை இருக்குமாம்.//

ஐய்யய்யோ....

புருனோ Bruno சொன்னது…

லக்கி லூக்கின் புகைப்படம் எங்கே :) :)

Thekkikattan|தெகா சொன்னது…

நமக்கெல்லாம் அந்தப் பாக்கியம் எப்பொழுதோ!

அசத்துங்க, கோவி...

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

சந்தித்ததில் மகிழ்ச்சி கோவி.கண்ணன்

cheena (சீனா) சொன்னது…

ஆகா ஆகா - அருமையான சந்திப்பு - வாய்ப்பைத் தவற விட்டு விட்டேனே !! 16 - 17 சென்னையில் தான் இருந்தேன். தெரிந்திருந்தால் 18 சந்திப்பில் கலந்து கொண்டிருப்பேனே !! அண்ணன் தருமி கூடச் சொல்ல வில்லையே சென்னை செல்கிறேன் என்று.
பரவாய் இல்லை - அடுத்த சந்திப்பில் கலந்து கொள்கிறேன்.

இதே இடத்தில், காந்தி சிலையின் பின்புறம் உள்ள இதெ இடத்தில் 17ம் தேதி சனிக்கிழமை அன்புடன் குழும அன்பர்கள் சந்திப்பு நடந்தது. கலந்து கொண்டேன்.

கையேடு சொன்னது…

புகைப்படங்களையும் பதிவையும் படிக்கும் போதே ஒரு நெகிழ்வு.

இனிய பயண அனுபவங்களுக்கு வாழ்த்துக்கள். அதன் பயன் விளையப்போகும் பதிவுகளுக்கும் சேர்த்து இப்போதே வாழ்த்துக்கள்.

VSK சொன்னது…

இறங்கியதுமே தமிழ்[மண]ப் பணியா?
நடத்துங்க!

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

உங்களைச் சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சி. நேரம் கிடைக்கும் போது இன்னும் நிறைய பேசிப் பழக வேண்டும் என்பது என் அவா.

துளசி கோபால் சொன்னது…

விளக்கம் போதாது. சீக்கிரம் எழுதுங்க.

கலை கட்டியது = களை கட்டியது.

வடுவூர் குமார் சொன்னது…

அனல் காற்று கடுமை தான்... பல படங்களில் தெரிகிறது.
:-)

குமரன் (Kumaran) சொன்னது…

மிகச்சிலரை மட்டுமே அடையாளம் தெரிகிறது. எல்லோரையும் குறிப்பிட்டு இனிமேல் எழுதுவீர்கள் என்று எண்ணுகிறேன்.

ஜெகதீசன் சொன்னது…

:)
நல்ல சந்திப்பு....

முரளிகண்ணன் சொன்னது…

சுடச்சுட படத்துடன். விரைவில் விரிவாக எழுதவும்

கே.என்.சிவராமன் சொன்னது…

அன்புள்ள நண்பருக்கு,

பதிவர் சந்திப்பு என்பது எனக்கு பிடித்தமான விஷயம். அறிமுகமில்லாத நண்பர்களையும், அறிமுகமான நண்பர்களையும் ஒரே இடத்தில் சந்திக்க முடியும் என்பதே அதற்கு காரணம்.

அதனாலேயே இந்த சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டுமென்று உறுதியாக இருந்தேன்.. ஆனால், எதிர்பாராமல் வந்த வேலை காரணமாக சந்திப்பில் கலந்து கொள்ள இயலவில்லை.

இதற்காக உங்களிடமும், அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த முறை தாங்கள் சென்னை வரும்போது அவசியம் சந்திக்கிறேன்.
வீட்டில் அனைவரையும் கேட்டதாக சொல்லவும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கிரி சொன்னது…

//இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழலில் பலபதிவர்களை நேர்முகம் கண்டார்கள்//

அப்படியாங்க !!!

களப்பிரர் - jp சொன்னது…

புகை படத்தில் இருப்பவர்கள் யார் என்பதை கூறினால், உபயோகமாக இருக்கும் ( நாளை பின்ன அடி வாங்கினால் யார் அடித்தது என்றாவது தெரிந்து கொள்ள வேண்டாமா )

பொதிகைத் தென்றல் சொன்னது…

தமிழ்பதிவுலக ஜாம்பவான்களின் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.படங்களில் பதிவாளர்களின் பெயர்களை போட்டால் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.

Unknown சொன்னது…

ஏன் சார், வெறும் போட்டோவை மட்டும் போட்டால் போதுமா?
யார், எவர் என குறிப்பிட வேண்டாமா?
அப்புறம் என்னைப்போல பதிவுலகினில் புதியவர்கள் எப்படி அறிந்து கொள்வதாம்.

குசும்பன் சொன்னது…

நல்லா இருங்க இங்கு வந்த பிறகுதான் அங்கு வரனும் என்று இருந்தீங்களா?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வணக்கம் திரு. கோவி கண்ணன்.
தாங்கள் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டது, படம் பிடித்து போட்டது எல்லாம் அருமை.
நானும் இப்போது தமிழகத்தில் தான் இருக்கிறேன். கத்திரி வெயிலை முடித்துக் கொண்டு வரலாம் என்று இருக்கிறேன். அதான் 28 -ம் தேதி.

அன்புடன்,
ஜோதிபாரதி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்