உத்தபுர தீண்டாமை சுவரை இடித்துவிட்டார்கள் என்பதற்கு பிள்ளைமார் சமூகம் அந்த இடத்திலிருந்து இடம் பெயர்ந்து தற்காலிகமாக எதோ மலைப்பகுதியில் வசிக்கிறார்களாம். இதுபோன்ற சுவர்கள் பிள்ளைமார்களுக்கு இடையேயும், முதலியார்களுக்கு இடையேயும் இருந்தது உடைக்கப்பட்டால் இது போன்றே மலைக்கு குடியேறச் சொல்வார்களா ?
பார்பனீயம், பிள்ளைமார் பித்தளை, வன்னீயம், தேவரீயம், கவுண்டன்செம்பு, நாயுடு அலுமினியம் ( கீழவெண்மணி கொடுமை) போன்ற உயர்சாதி மனப்பான்மை எல்லா சாதிக்காரர்களிடமும் இருக்கிறது, தன்னைவிட உயர்ந்த சாதி என்றால் தான் அடிமைப்படுத்தப்படுவது தவறல்ல என்றே நினைக்கிறான். மலையில் குடியேறிய பிள்ளையாண்டைகளை கண்டுகொள்ளாமல் விடுவதே நல்லது, பலத்த மழை பொழிந்தால் போனவழியே திரும்பி வரத்தான் போகிறார்கள். எதற்க்காக ஆட்சியாளர்களையெல்லாம் அனுப்பி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சொல்ல வேண்டும் ?
ஒரு நாளைக்கு 200 வகையான தாவரங்களை உணவுபொருள்கள், கட்டில், மேசை, நாற்காலி என அதன் வடிவங்களைப் பயன்படுத்துவது போலவே மாற்று சாதிக்காரனின் உதவி இல்லாமல் எவருமே வாழமுடியாது. எந்த உயர்சாதிக்காரனாவது தன் சாதியிலேயே முடித்திருத்தம் செய்துக் கொள்ள ஏற்பாடு தன் சாதி ஆட்களையே ஏற்பாடு செய்து கொள்கிறானா ? பிணத்தை எரிக்க தன் சாதி ஆட்களையே வைத்திருக்கிறானா ?
தாழ்த்தப்பட்டவர்கள் அறுத்து எடுக்காத நெல் மற்றும் தானிய வகைகளை பயன்படுத்தாத உயர்சாதிக்காரன் எவன் இருக்கிறான் ? எல்லோருடைய சிறுநீரும் ஆவியாகி, மலம் எருவாகி மறுசுழற்சியாக எல்லோருக்குமே தண்ணீர், தானியமாக மறுவடிவத்தில் கிடைக்கிறதே ? இது எல்லாம் எவருக்கும் தெரியாத ஒன்றா ? தலித் ஒருவரின் சிறுநீரும், வியர்வையும் ஆவியாக மாறி மழைத்துளிகளின் துகள்களில் ஒன்றாக கலந்து இருப்பதை நாள் தோறும் தண்ணீராக அருந்துகிறோம் என்று எவரும் நினைத்துப் பார்பதே இல்லையா ?
காசுகள் முதல் மற்றதுக்கெல்லாம் தண்ணீர் தெளிச்சு தீட்டு கழிக்கிறார்கள், மழையாக கொட்டி குடிநீராக மாறிய தண்ணீருக்கு எப்படி கழிப்பது ?தீட்டுக்கழிக்க முடியாதற்கெல்லாம் தீட்டு இல்லையாம், தாழ்த்தப்பட்டவர்கள் கறந்து கொடுத்தாலும் பால் தீட்டு இல்லையாம். என் வீட்டு புதுமனை புதுவிழாவிற்கு புரோகிதம் செய்ய வந்தவர் 'பால் மாத்ரம் கொடுங்கோ' என்று வாங்கிக் குடித்தார்.
உயர்சாதிக்காரர்களின் அன்றாட குடிநீரிலும், இயற்கையாக மறுசுழற்சி செய்யப்பட்டு உப்பு நீங்கிய, தூய்மையான தண்ணீர் என்ற வடிவத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் சிறுநீரும், வியர்வையும் கலந்தே இருக்கிறது.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
21 கருத்துகள்:
அதிரடிக்கார மச்சான் மச்சான் மச்சானே என்று முதலவர் பொறுப்பில் இருப்பவர்கள் இருக்க முடியாது என்று எண்ணுகிறேன்.
இருந்தாலும், சுவற்றை இடித்து தள்ளியிருக்க வேண்டாமா, நிலைவாசல் வைப்பது என்பது என்ன தீர்வோ விளங்கவில்லை.
புதசெவி
மலைக்குப் போனவர்கள் இடம் அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் என்று ஒரு அரசு ஆணைப் போட்டால், எல்லாரும் ஓடி வந்துடுவாங்க.
தமிழனுக்கு தமிழன் தீட்டா..கொடுமை.
உயர் சாதி என்று தலைப்பில் இருப்பது அப்படி ஒன்று இருப்பதாக அல்லவா சொல்லுது..
உயர்த்தப்பட்ட சாதி, அல்ல ஆதிக்கம் செலுத்திய(வந்த) என்று சொல்லலாமோ...?
தலித் ஒருவரின் சிறுநீரும், வியர்வையும் ஆவியாக மாறி மழைத்துளிகளின் துகள்களில் ஒன்றாக கலந்து இருப்பதை நாள் தோறும் தண்ணீராக அருந்துகிறோம் என்று எவரும் நினைத்துப் பார்பதே இல்லையா
மிகச்சரியான பதிவு
//இருந்தாலும், சுவற்றை இடித்து தள்ளியிருக்க வேண்டாமா, நிலைவாசல் வைப்பது என்பது என்ன தீர்வோ விளங்கவில்லை.//
இடித்துத் தள்ளி நிலைவாசல் வைப்பது யாருக்கும் சொந்தம் இல்லாத நிலம் .இடிக்காமல் இருப்பது ஒருவருடைய சொந்த நிலம் ..மற்றவர் நிலத்தில் உள்ள சுவரை எப்படி இடிக்க முடியும் ?
ஒரு சாதி ஓட்டைப் பற்றி கவலைப்படாமல் சுவரை இடித்த கலைஞர் அரசை பாராட்ட வக்கில்லை ..ஆ.. ஊன்னா நொட்டை கண்டுபுடிக்க வந்திடுறாங்க.
கண்டுகொள்ளாமல் ஒதுக்குதலும் தனித்து விடுதலுமே இவர்களை நேர்வழிப்படுத்தும்.மலையிலேயே எத்தனை நாட்கள் இருக்கப்போகிறார்கள்?..
ஜாதி இரண்டே என்றான் பாரதி..மேல் சாதி,கீழ் சாதி என்ற இரண்டை நினைத்து விட்டார்களோ இந்த நிலை கெட்ட மானிடர்கள்??
///என் வீட்டு புதுமனை புதுவிழாவிற்கு புரோகிதம் செய்ய வந்தவர் 'பால் மாத்ரம் கொடுங்கோ' என்று வாங்கிக் குடித்தார்//
Why u invited???I really wonder.
எதற்கு புரோகிதரரை உங்கள் வீட்டிற்கு அழைத்தீர்கள்??
பதிவுகளில் மட்டும்தான் பகுத்தறிவா???
//Dharan said...
எதற்கு புரோகிதரரை உங்கள் வீட்டிற்கு அழைத்தீர்கள்??
பதிவுகளில் மட்டும்தான் பகுத்தறிவா???
//
தரண்,
திருமணம் ஆன ஆண்கள் தங்கள் விருப்பப்படியே தான் வீட்டில் இருப்பவர்களின் விருப்பத்தை மாற்றிக் கொள்ளச் சொல்ல வேண்டுமா ?
பொதுவாக உணர்வுகள் அவரவர்களுக்குள்ளவை மதிக்கப்பட வேண்டும் என்று நினைப்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.
தண்னீரைவிட முக்கிய விசியம் : ரத்த வங்கி
ஒரு அவசர சிகிச்சைக்கு ரத்தம் உடனடியாக தேவைப்பட்டால், ரத்த வங்கியில்
இருக்கு ரத்ததை (அதை கொடுத்தவர் யார், எந்த சாதி, மதம், இனம் என்று பார்க்காமல், கவலைப்படாமல்)வாங்கி உபயோகிப்பது மிக சகஜம். அவசர சிகிச்சை அளிக்கும் மருத்துவர், நர்ஸ் மற்றும் இதர பணியாளர்களின் ஜாதி, மதமும் பற்றியும் எந்த 'உயர்ஜாதி' இந்துவும் கவலைப் படுவதில்லை.
சமத்துவம் இங்கேதான். !!!
இந்தச் சுவர் இடிப்பை குறித்து எனக்கு இருக்கும் முதல் கவலை சுவர் பிரிவினையின் அடையாளம் மட்டுமே. சுவரை இடித்துவிட்டதும் பிரிவினை தீர்ந்துவிடப்போவதில்லை. சுவற்றை இடிக்கும்போதே இரு பக்கத்தையும் ஒருங்கிணைக்கும் வழிகளைச் செய்தல் வேண்டும்.
ஆதிக்க சாதியினர் எல்லா இடங்களிலும் 'பலம்' பொருந்தியவர்களாக இல்லை சில இடங்களில் தங்களை அவர்கள் பாதுகாக்கப் போராடவேண்டியும் உள்ளது.
முந்தைய கலவரத்தின்போது அரசு என்ன செய்தது, அதன் வடுக்களை நீக்கி மக்களை ஒன்றாக்க என்ன செய்வது என்பது சுவற்றை இடிப்பதையும் விட முக்கியமானது.
எய்ட்ஸ், குடும்பக்கட்டுப்பாட்டுக்கு பிரச்சாரம் செய்வதைப்போல சமத்துவத்தை முன்வைத்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.
கண்டிக்கிறோம், வன்மையாகக் கண்டிக்கிறோம் போஸ்டர்களுக்குப் பதில் ஒன்றுபடுவோம், வேற்றுமை பாராட்டமாட்டோம் எனும் போஸ்டர்கள் வரவேண்டும். சமத்துவம் அப்படிப்பட்ட உயரிய மனபாங்குகளினாலேயே மலரும்.
//TBCD said... உயர்த்தப்பட்ட சாதி, அல்ல ஆதிக்கம் செலுத்திய(வந்த) என்று சொல்லலாமோ...?//
TBCD ஐயர்,
தங்கள் வேண்டுகோளை ஏற்று தலைப்பை மாற்றியாச்சு. மிக்க நன்றி !
//புதசெவி
மலைக்குப் போனவர்கள் இடம் அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் என்று ஒரு அரசு ஆணைப் போட்டால், எல்லாரும் ஓடி வந்துடுவாங்க.//
திரும்பிவருபவர்களுக்கு ஒரு லட்சம் அன்பளிப்பு கொடுக்கப்படும் என்று சொன்னாலும் ஓடிவந்துடுவாங்க. அங்கு மலையில் வீம்புக்காக உட்கார்காந்திருக்கும் முகங்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களின் முகங்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை, பின்னே ஏன் ? வீன் சாதிப்பெருமை தான்.
ஹூம்
// கென் said...
மிகச்சரியான பதிவு//
கென்,
பாராட்டுக்கு நன்றி !
//ஜோ / Joe said...
இடித்துத் தள்ளி நிலைவாசல் வைப்பது யாருக்கும் சொந்தம் இல்லாத நிலம் .இடிக்காமல் இருப்பது ஒருவருடைய சொந்த நிலம் ..மற்றவர் நிலத்தில் உள்ள சுவரை எப்படி இடிக்க முடியும் ?
ஒரு சாதி ஓட்டைப் பற்றி கவலைப்படாமல் சுவரை இடித்த கலைஞர் அரசை பாராட்ட வக்கில்லை ..ஆ.. ஊன்னா நொட்டை கண்டுபுடிக்க வந்திடுறாங்க.
//
ஜோ,
20 ஆண்டுகளாக அங்கே சுவர் இருக்கிறதாம், அதற்குள் மூன்றுமுறை முறை முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கிறார் கலைஞர். பிறர் அதன் மீது போராட்டம் நடத்தியதும் தான் திமுக அரசின் சாதனையாக இதனைக் காட்ட இடிக்க உத்தரவிட்டு இருக்கிறார்.
//narsim said...
கண்டுகொள்ளாமல் ஒதுக்குதலும் தனித்து விடுதலுமே இவர்களை நேர்வழிப்படுத்தும்.மலையிலேயே எத்தனை நாட்கள் இருக்கப்போகிறார்கள்?..
ஜாதி இரண்டே என்றான் பாரதி..மேல் சாதி,கீழ் சாதி என்ற இரண்டை நினைத்து விட்டார்களோ இந்த நிலை கெட்ட மானிடர்கள்??
6:47 PM, May 09, 2008
//
narsim,
சரியான கருத்து. மிக்க நன்றி !
// K.R.அதியமான். 13230870032840655763 said...
தண்னீரைவிட முக்கிய விசியம் : ரத்த வங்கி
ஒரு அவசர சிகிச்சைக்கு ரத்தம் உடனடியாக தேவைப்பட்டால், ரத்த வங்கியில்
இருக்கு ரத்ததை (அதை கொடுத்தவர் யார், எந்த சாதி, மதம், இனம் என்று பார்க்காமல், கவலைப்படாமல்)வாங்கி உபயோகிப்பது மிக சகஜம். அவசர சிகிச்சை அளிக்கும் மருத்துவர், நர்ஸ் மற்றும் இதர பணியாளர்களின் ஜாதி, மதமும் பற்றியும் எந்த 'உயர்ஜாதி' இந்துவும் கவலைப் படுவதில்லை.
சமத்துவம் இங்கேதான். !!!
8:58 PM, May 09, 2008
//
K.R.அதியமான் சார்,
ரத்தம் எந்த சாதிக்காரனது என்று தெரியாமல் இருப்பதால் வாங்குகிறார்கள், தெரிந்தால் அதிலும் வீன் பிடிவாதம் பிடித்து இறப்பதே மேல் என்றெல்லாம் வசனம் பேசுவார்கள்.
//20 ஆண்டுகளாக அங்கே சுவர் இருக்கிறதாம், அதற்குள் மூன்றுமுறை முறை முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கிறார் கலைஞர். பிறர் அதன் மீது போராட்டம் நடத்தியதும் தான் திமுக அரசின் சாதனையாக இதனைக் காட்ட இடிக்க உத்தரவிட்டு இருக்கிறார்.
//
இது வரை கலைஞர் கவனத்துக்கு இதை யாராவது கொண்டு வந்தும் கலைஞர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீங்கள் குறை சொல்லுவதில் நியாயம் உண்டு.
இப்போது தெரிந்திருக்கிறது .சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
முதல்வராய் இருப்பவர்க்கு முன்பே தெரிந்திருக்க வேண்டாமோ என்று விதண்டாவாதம் பேசினால் என்னிடன் பதில் இல்லை.
சிறில்,
உங்க பின்னூட்டம் வேடிக்கையாக இருக்கிறது .நாட்டில் எல்லோரும் நல்லவர்களால மாறி விட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று சுருக்கமாக சொல்லியிருக்கலாம் ..ரொம்ப சுலபமான தீர்வு.
//ஜோ / Joe said...
சிறில்,
உங்க பின்னூட்டம் வேடிக்கையாக இருக்கிறது .நாட்டில் எல்லோரும் நல்லவர்களால மாறி விட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று சுருக்கமாக சொல்லியிருக்கலாம் ..ரொம்ப சுலபமான தீர்வு.
//
ஜோ,
சிறிலுக்கு எப்படி சுறுக்கமாக (சுறுக்கென்று இல்லை) பதில் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன், சுலபமாக்கிவிட்டீர்கள்.
மான்கெளெல்லாம் புலியாக மாறிவிட்டால் அப்பறம் புலி பற்றிய பயம் இருக்காதாம். புலிக்கு பசிப்பது கூட யோசிக்க வேண்டிய விசயம் என்கிறார்.
:)
//சிறில் அலெக்ஸ் said...
இந்தச் சுவர் இடிப்பை குறித்து எனக்கு இருக்கும் முதல் கவலை சுவர் பிரிவினையின் அடையாளம் மட்டுமே. சுவரை இடித்துவிட்டதும் பிரிவினை தீர்ந்துவிடப்போவதில்லை. சுவற்றை இடிக்கும்போதே இரு பக்கத்தையும் ஒருங்கிணைக்கும் வழிகளைச் செய்தல் வேண்டும்.//
சிறில்,
அது பரவாயில்லை அப்படியே விட்டு இருக்கலாம் என்கிறீர்களா ? விளங்கவில்லை. :(
//ஆதிக்க சாதியினர் எல்லா இடங்களிலும் 'பலம்' பொருந்தியவர்களாக இல்லை சில இடங்களில் தங்களை அவர்கள் பாதுகாக்கப் போராடவேண்டியும் உள்ளது.//
அவர்கள் பலம் இல்லாமல் இருப்பதற்கு நீங்கள் கவலைப்படுகிறீர்களா ? மற்ற இடத்தில் பலமாக இருந்தால் பலம் குறைந்தவர்களை நசுக்க முழு உரிமை இருக்கிறது, அது சரி என்றும் கொள்ளலாமா ?
//எய்ட்ஸ், குடும்பக்கட்டுப்பாட்டுக்கு பிரச்சாரம் செய்வதைப்போல சமத்துவத்தை முன்வைத்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.//
இதுசரிதான், ஆனால் அதிரடி நடவடிக்கைப் போன்று உடனடியாக எதுவும் கைகொடுக்காது.
//கண்டிக்கிறோம், வன்மையாகக் கண்டிக்கிறோம் போஸ்டர்களுக்குப் பதில் ஒன்றுபடுவோம், வேற்றுமை பாராட்டமாட்டோம் எனும் போஸ்டர்கள் வரவேண்டும். சமத்துவம் அப்படிப்பட்ட உயரிய மனபாங்குகளினாலேயே மலரும்.
10:46 PM, May 09, 2008 //
இதெல்லாம் அந்த (பிள்ளைமார்) சமூகத்தில் உள்ள முற்போக்கு இளைஞர்கள் முன்வந்து செய்தால்தான் உண்டு.
////கோவி.கண்ணன் said...
//Dharan said...
எதற்கு புரோகிதரரை உங்கள் வீட்டிற்கு அழைத்தீர்கள்??
பதிவுகளில் மட்டும்தான் பகுத்தறிவா???
//
தரண்,
திருமணம் ஆன ஆண்கள் தங்கள் விருப்பப்படியே தான் வீட்டில் இருப்பவர்களின் விருப்பத்தை மாற்றிக் கொள்ளச் சொல்ல வேண்டுமா ?
பொதுவாக உணர்வுகள் அவரவர்களுக்குள்ளவை மதிக்கப்பட வேண்டும் என்று நினைப்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை./////
நன்றி. மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பது என்பதற்கான அளவுகோள் என்ன என்பதினைப்பற்றி ஒரு விவாதம் தேவைப்படுவதனால்,இதற்கு இங்கு பதில் எழுதினால், மிக நீளமாகிவிடும் எனவே விரைவில் ஒரு பதிவாக உங்களுக்கு பதில் அளிக்கிறேன்
//மலைக்குப் போனவர்கள் இடம் அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் என்று ஒரு அரசு ஆணைப் போட்டால், எல்லாரும் ஓடி வந்துடுவாங்க.//
நல்ல தீர்வு tbcd.
மலைக்குப் போனவர்கள் இடங்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவு நாள் அவர்களின் கொடுமைக்கு பகரமாக அதை அந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கே கொடுத்திடலாம்.
நல்ல பதிவு ஜிகே.
//நன்றி. மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பது என்பதற்கான அளவுகோள் என்ன என்பதினைப்பற்றி ஒரு விவாதம் தேவைப்படுவதனால்,இதற்கு இங்கு பதில் எழுதினால், மிக நீளமாகிவிடும் எனவே விரைவில் ஒரு பதிவாக உங்களுக்கு பதில் அளிக்கிறேன்//
தரண்,
நாத்திகம் பேசுபவர்கள் ஆத்திகரை திருமணம் செய்து கொள்ளலாமா ? என்று ஒருவிவாதமும் வையுங்கள், அப்படி செய்தால் யார் யாரைப் பின்பற்றலாம் என்றும் சொல்லுங்கள்.
:)
கருத்துரையிடுக