தமிழக முதல்வர் 'எலும்பு நொறுங்கினாலும் நிறைவேற்றுவேன்' என்று பேசி இருக்கக்கூடாது, முதல்வர் நாகரீகம் இன்றி நடந்துவிட்டார், பெங்களூர் கலவரங்களுக்கு காரணம் கலைஞரின் முதிர்சியற்ற பேச்சு என்று பலரும் குற்றம் சுமத்தினார்கள்.
அத்துமீறி ஒக்கேனகல் தமிழக பகுதியில் நுழைந்த இடையூறப்பாவை தடுக்காமல் கலைஞர் அமைதியாக இருந்தது தமிழகத்தைச் சேர்ந்த பலரையும் எரிச்சல் ஏற்படுத்தியது. இது முழுக்க முழுக்க வரப்போகும் கர்நாடகமாநில தேர்த்தலை நோக்காகக் கொண்டது என்பதாலேயே கைது செய்தால் ஒகெனேகல் தியாகியாக கர்நாடக பாஜக சொல்லிக்
கொள்ளப் போகிறது என்பதை உணர்ந்தே அமைதிகாத்தார் என்பதை அரசியல் நோக்கர்கள் (பதிவர் ரத்னேஷ் உட்பட) சிலர் மிகச் சரியாகச் சொல்லி இருந்தனர். அவ்வளவு அமைதியாக இருந்தும், பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரினான வன்முறை தொடரவே, இதெற்கெல்லாம் நாங்கள் அஞ்சி நடுங்கிவிட மாட்டோம் என்ற ரீதியில் கலைஞர் பேட்டி அளித்தார், அதைச் சாக்கிட்டு பெங்களூர் தமிழர்களுக்கு மேலும் தொல்லை கொடுத்தனர் ( அந்த போரட்டத்தை ஏன் தமிழக ஒக்கனேக்கல் / ஓசூர் பகுதியில் இடையூறப்பா முன்பு நுழைநத்து போல் நுழைந்து போராடவில்லை) தமிழ் திரைப்பட திரையரங்கு்கள் இலக்குக்கு எட்டும் தொலைவில் இருக்கிறது என்பதிலும், பெங்களூரில் வாழும் தமிழர்கள் பகுதியில் மட்டுமே அவர்களது வீரத்தைக் காட்ட முடிந்தது.
பெங்களூர் தமிழர்களுக்கு ஆதரவாக சிற்சில விரும்பத்தாக நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்தது, பெரிய அளவில் சென்றிருக்க வேண்டியது, தமிழர்கள் அந்த அளவுக்கு உணர்ச்சிவசப்படவில்லை ( இதை சுரணைக் குறைவு என்றும் சிலர் சொல்கிறார்கள்) நிலைமை கட்டுக்குள் தான் இருந்தது. இது தீவிரம் அடைந்தால் இருபக்கமும் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாது, மேலும் இதை திட்டமிட்டு தூண்டிய பாஜகவின் தேர்தல் நோக்கை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் (நாடாளுமன்ற கூட்டணி தேமுவில் இருப்பதால்) கலைஞர் தேர்தல் முடியும் வரை இதை தள்ளி வைத்ததாக அறிவித்தார். முன்பு கலைஞர் 'எலும்பு' பேச்சு தூண்டியதாக குற்றம் சுமத்தியவர்களில் சிலர் தவிர்த்து பலரும் தற்போது கலைஞர் திட்டத்தை முடக்கிவிட்டார் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள். தமிழக பாஜக இதை வெளிப்படையாக குற்றமாகவே சொல்கிறார்கள். இதற்கு மறைமுக காரணம் இந்த கலவரங்கள் தொடர்ந்து நடந்தால் தான் பாஜக கர்நாடகத்தில் வெற்றி பெரும் என்கிற நப்பாசை. தமிழக / கர்நாடக மக்கள் ரத்தம் சிந்தினாலும் பரவாயில்லை பாஜக கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே இவர்களது எண்ணமாக இருக்கிறது, தமிழக பாஜக இது குறித்து அறிக்கையும் வெளி இட்டுள்ளது.
இவர்களுக்கு ஒக்கனேக்கல் திட்டம் வெற்றி பெற வேண்டுமானால் மத்தியில் இருக்கும் அத்வானிஜியிடம் சொல்லி கர்நாடக பாஜாகவை அடங்கி இருக்கச் சொல்லலாமே, ( சோனியா சொல்லி எஸ் எம் கிருஷ்ணா கொஞ்சம் அடக்கிதானே வாசிக்கிறார்) காங்கிரஸ் போன்றே பாஜக தேசிய வியாதி கட்சியாயிற்றே.
இன்னும் கூட ஒன்று கேட்க ஆசை, இல.கனேசன் அண்ணாச்சி, உங்களுக்கு இந்த திட்டம் உடனடியாக நிறைவேற்றப் படவேண்டும் என்ற உண்மையான ஆசை இருந்தால், கலைஞரிடம் சொல்லி, இந்த திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை எங்களிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் உடனடியாக சாதித்துக் காட்டுகிறோம் என்று சொல்லாமே ? முதல்வர் பதவி / பிரதமர் பதவியை எங்களிடம் கொடுங்கள் தமிழகத்தை / இந்தியாவை ஒளிர வைக்கிறோம் என்று மக்களிடம் தேர்தல் நேரத்தில் சொல்ல முடிகிறது, இந்த பிரச்சனையை மக்களிடம் சொல்லி இதை நாங்கள் நிறைவேற்றுகிறோம், கருணாநிதி அதற்கு சம்மதிப்பாரா ? என்று கேட்கும் துணிவும், அந்த திட்டத்தைப் பற்றிய உண்மையான அக்கறையும் இருக்கிறதா ?
நான் முன்பு சொன்னது போலவே இந்த திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை எதிர்கட்சியினரிடம் விட்டுவிடலாம் :)
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
14 கருத்துகள்:
இப்படி ஒவ்வொன்னையும் எதிர் கட்சிகளிடம், கொடுக்க, பேசாம, ஆட்சியயை எதிர் கட்சிகளிடம் கொடுத்து விடலாம்.
நல்லா இருக்கு உங்க ஆலோசனை.
அவர், திட்டத்தினை முழுமையாக அறியாமல், நாம் கணக்கு போடுறது வீண். இன்னும் கொஞ்ச நாள் தானே...பார்ப்போம், கலைஞரின் சாணக்கியத்தனம் வெல்கிறதா என்று.
//TBCD said...
இப்படி ஒவ்வொன்னையும் எதிர் கட்சிகளிடம், கொடுக்க, பேசாம, ஆட்சியயை எதிர் கட்சிகளிடம் கொடுத்து விடலாம்.
நல்லா இருக்கு உங்க ஆலோசனை.
அவர், திட்டத்தினை முழுமையாக அறியாமல், நாம் கணக்கு போடுறது வீண். இன்னும் கொஞ்ச நாள் தானே...பார்ப்போம், கலைஞரின் சாணக்கியத்தனம் வெல்கிறதா என்று.
11:23 PM, April 06, 2008
//
TBCD ஐயா,
ஒகனேகல் போன்ற பொதுப்பிரச்சனையை அனைத்துக் கட்சிகளையும் ( அதிமுக உட்பட) கூட்டி ஆலோசனைக் கேட்கும் போது, தமிழகத்துக்கு பயன்மிகு திட்டத்தை முதல்வர் என்ற முறையில் நிறைவேற்றும் சிக்கல் இருக்கும் போது
தமிழக நலன் என்ற நோக்கில் எதிர்கட்சியிடம் ஒப்படைத்தால் தவறு அல்ல என்றே நினைக்கிறேன். இதில் தமிழக அரசியல் லாப நோக்கு தவிர்த்து நிறைவேற்றும் வழிகளை கலைஞர் சிந்திக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.
இந்த திட்டம் என்றுமே பிரச்சனையில் தான் முடியும், தற்போது தள்ளிப் போட்டதை தேர்தல் குறித்த ஒரு காரணமாகத்தான் கொள்ள முடியும்.
இந்த எதிர் கட்சியிடம் ஒப்படைப்போம் என்பது, நடைமுறையில் சாத்தியமா..?
எப்படி, செய்வதாக உத்தேசம்...?
கையெழுத்துக்கு, யாரிடம் போகும்..?
புதசெவி..!!
அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது நம் அவா...
நம்முடைய அவாவை எல்லாம், அரசியல் கட்சிகள் நிறைவெற்ற ஆரம்பித்துவிட்டால், பாலாறும், தேனாறும் ஓடாதா..
அத்தைக்கு மீசை முளைக்குமா...
இப்பத்தான் நான் ஒரு பதிவு இது தொடர்பா குழம்பிப் போய் போட்டுட்டு வாரேன், அதுக்கு தொடர்பா நீங்க ஒண்ணு போட்டுறீக்கீங்க.
ஒரு சிம்ப்ல் பிரச்சினைக்கு இத்தனை முகங்களா... அடே சாமீஈஈஈஈ
நல்லா இருக்கப்பா!!
கோவி
உண்மையில் உங்கள் கோபம் யார் மீது? பாஜக மீது தானா அல்லது பல்டி அடித்து விட்ட கலைஞர் மீதா? பாஜக வைத் திட்டி எல்லாம் கலைஞரின் இந்த சறுக்கலை நியாயப் படுத்த முடியாது என்றே எண்ணுகிறேன்.
உண்மையில் ஆட்சி மீதல்லாது தமிழர் நலன் மீது அக்கறை இருந்தால் குறைந்த பட்சம் காங்கிரசை அல்லது மத்திய அரசை சொல்ல வைத்திருக்க வேண்டும் "தேர்தல் முடிந்ததும் இதற்கு சுமுக தீர்வை பேச்சு வார்த்தை மூலியமாக ஏற்பட நாங்களே வழி செய்கிறோம் " என்று. ஓட்டு வங்கியை பாதிக்கும் என்று அதைக் கூட சொல்ல தயாரில்லாத நிலையில் காங்கிரசார் அதையும் கலைஞர் வாயால் சொல்ல வைத்திருக்கிறார்கள். இல்லை அவராகவேதான் மக்கள் நலம் கருதி இந்தக் கருத்தை வெளியிட்டார் என்று சொல்வீர்களானால் அதைப் படிக்கும் (ஒருவேளை படித்தால்) கலைஞரே சிரித்து விடுவார்.
எஸ் எம் கிருஷ்ணா அடக்கி வாசித்தார் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அடக்கி வாசிப்பின் சிறந்த உதாரணம் " தி மு க ஆதரவை விலக்கிக் கொண்டாலும் மத்தியில் ஆட்சி கவிழாது " என்று சொன்னதுதான். :) எனவே அடக்கி வாசித்தார் என்பதை கலைஞரை "அடக்கி" கிருஷ்ணா "வாசித்தார்" என்று வேண்டுமானால் கொள்ளலாம்.:)
பாஜக, எடியூரப்பா மற்ற சில்லரைகள் குறித்து பேச ஒன்றும் இல்லை. அவர்களுக்கு ஓட்டு கிடைக்கும் என்றால் அதற்கு பாதி காரணம் குமாரசாமி & கம்பனியும் மீதி காரணம் தொலை நோக்கில்லாத கலைஞரின் உதார் பேச்சுகளும் என்றுதான் கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளில், விளக்கெண்ணையை எடுத்து ஊற்றியிருக்கிறார் கலைஞர் அய்யா என்றுதான் சொல்லவேண்டும். அவரை நம்பி வீராவசனம் பேசிய தமிழ் உணர்வுள்ளவர்கள் வெளியில் தலை காட்டமுடியாமல் இருக்கிறார்கள்.
கர்நாடகத்தில் பாரதீய சனதா ஆட்சிக்கு வந்துவிடும் என்று கலைஞர் செய்தார் என்று சொல்லி இருக்கிறீர்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு காவிரித் தண்ணீரும் கொடுக்க விரும்ப மாட்டார்கள். ஒகனேக்கல் தண்ணீருக்கும் முட்டுக்கட்டைதான் போடுவார்கள்.
காங்கிரஸ் வரவேண்டும் என்று நினைக்கிறீர்களா? இதுவரை பி.ஜெ.பி ஆட்சியில் இருந்ததே இல்லை. சமீபத்திய நாடகத்தைத் தவிர. மற்றவர்கள் நமக்குத் தண்ணீர் திறந்து விட்டார்களா? நடுவர் மன்றம் சொன்ன 205 டி.எம்.சி.யாவது...!
இந்தியாவை ஆளும் ஒரு சோள கொல்லை பொம்மை (கர்நாடக பொம்மை இல்லை இது வேற, கொஞ்சம் படிச்ச அறிவு ஜீவி) வாயையே திறக்கவில்லை. கொல்லைக்கார அம்மா வந்துட்டு போறாங்க, இதபத்தி ஒண்ணும் சொல்லலை. சிவகங்கைச் சின்னப்பையன் வாயைத் திறக்கலை. அத்துவானி, தன் தத்துப்பிள்ளை இடையுரப்பாவிடம் பொறுப்பைக் கட்டிவிட்டு வேற வேலையப் பாக்கிறார். இந்த வெங்கையா நாயுடு அடிக்கடி தமிழகம் வார்ராரே எந்த முகத்தை வச்சுக்கிட்டு வர்றாரு. கர்நாடகத்துல எம்.பி சீட்டு கொடுத்ததால அவங்க கூட பொய் நமக்கு காவிரித்தண்ணி திறக்கக் கூடாது என்று சொன்னவர் அல்லவா? அதை எல்லாம் யாரும் மறக்கவில்லை.
எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைதான். இவர் சரியா செஞ்சார், அவர் சரியாச் செஞ்சார் என்கிற கருத்தே ஏற்றுக்கொள்ள இயலாதது. நெஞ்சைத்தொட்டுச் சொன்னால் எல்லாம் ஏமாற்றுப் பேர்வழிகள் தான்.
அன்புடன்,
ஜோதிபாரதி.
//TBCD said... அத்தைக்கு மீசை முளைக்குமா...
11:33 PM, April 06, 2008//
முன்பு நடுவன் (மத்திய) அரசு சார்பில் எதிர்கட்சி தலை ஒன்றை எல்லைப் பிரச்சனைக்கோ வேறு எதோ ஒன்றுக்கோ அரசு சார்பில் பேச வைத்த நடைமுறை நடந்தேறி இருக்கிறது. நிகழ்வு சரியாக ஞாபகம் வரவில்லை.
சித்தப்பா சேவிங் பண்ணிக் கொண்டால் சித்தி ஆகமாட்டாங்களா ?
:)
//Thekkikattan|தெகா said...
இப்பத்தான் நான் ஒரு பதிவு இது தொடர்பா குழம்பிப் போய் போட்டுட்டு வாரேன், அதுக்கு தொடர்பா நீங்க ஒண்ணு போட்டுறீக்கீங்க.
ஒரு சிம்ப்ல் பிரச்சினைக்கு இத்தனை முகங்களா... அடே சாமீஈஈஈஈ
நல்லா இருக்கப்பா!!
12:21 AM, April 07, 2008
//
குழம்பிய குட்டை மீன் தெரிவதற்கான அறிகுறி என்பதைவிட குளம் காய்ந்து போகப் போவதன் அறிகுறி என்பதே சரி !
//சரவணகுமார் said...
கோவி
உண்மையில் உங்கள் கோபம் யார் மீது? பாஜக மீது தானா அல்லது பல்டி அடித்து விட்ட கலைஞர் மீதா? பாஜக வைத் திட்டி எல்லாம் கலைஞரின் இந்த சறுக்கலை நியாயப் படுத்த முடியாது என்றே எண்ணுகிறேன்.
//
சரவணகுமார்,
கருணாநிதியின் முடிவும் காங்கிரஸ் நல நோக்கிற்கானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உடனடி உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. யார் கண்டது திட்டம் தள்ளிப் போவதால் எதிர்பின் வீரியம் கொஞ்சம் குறையலாம் என்று நல்லதையே நினைப்பதைத் தவிர்த்து ஒன்றும் சொல்ல முடியவில்லை.
//எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைதான். இவர் சரியா செஞ்சார், அவர் சரியாச் செஞ்சார் என்கிற கருத்தே ஏற்றுக்கொள்ள இயலாதது. நெஞ்சைத்தொட்டுச் சொன்னால் எல்லாம் ஏமாற்றுப் பேர்வழிகள் தான்.
அன்புடன்,
ஜோதிபாரதி.//
ஜோதி நீங்கள் சொல்வது சரிதான், சரவணகுமாருக்கு சொல்லி இருக்கும் பதிலே இங்கு(ம்) பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
கலைஞர் மிகவும் சாதுர்யமாக காய் நகர்த்தியிருக்கிறார் - கர்நாடக மாநில அரசின் நாட்கள் விரல்விட்டு எண்ணப்பட்டு வருகிறது, தற்போது அங்கிருக்கும் கட்சிபேதமில்லாது அரசியல்வாதிகள் அனைவருமே அறிவிழந்து - உணர்ச்சிவசப்பட்டு கொந்தளித்துக்கொண்டிக்கிறார்கள். 'அதுகளிடம்' பேசிப்பயனில்லை என்பதையறிந்தே அடுத்த கட்ட நடவடிக்கையை கலைஞர் சற்று தள்ளி வைத்திருகிறார் அவ்வளவுதான்.
கலைஞரின் தொலைநோக்கு பார்வை கர்நாடக தேர்தலுக்கு பிறகு புரியும் -அவர் பதுங்கியது பாய்வதற்குத்தான் என்பது.
உருப்படியாக எந்தப்பிரச்சைனையும் இல்லாததால் - ஒகேனக்கல் பிரச்சினையை வைத்தே ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற பா.ஜ.க வின் எண்ணத்தில் மண்ணை வாரி போட்டுவிட்டர்.
இந்தப்பிரச்சினை சம்பந்தமாக பொத்திகொண்டிருந்த ஜெயலலிதாவை -வழக்கம்போல ‘பொறுப்பற்றத்தனமாக'வாயை திறக்க செய்து - எவ்வளவு பெரிய ‘வெளக்கெண்ணை' என்பதை அவரைவிட்டே சுயபிரகடனம் செய்ய வைத்திருகிறார்..
நீதி மன்றமும், மத்திய அரசும் பொறுப்பில்லாமல் இருக்கும் வரை யாரும் எதுவும் சாதிக்க இயலாது என்பது வரலாறு. இந்த வரலாற்றை ஆரம்பித்து வைத்ததே கலைஞர்தான். அது மாறினால் மகிழலாம்.
தங்கள் இடுகையில் அனல் பறக்கிறது! வாழ்த்துக்கள் திரு கோவி.கண்ணன்!
இதையும் படியுங்கள்!
ஏ! காவிரித்தாயே!! ஏன் இந்த சோதனை!!!
காய்ந்த நிலங்கள்
பாலம் பாலமாக
விரிந்து கிடக்கின்றன.
காவிரி ஆற்றில் நீரில்லாமல்
மணல் அள்ளப்பட்டு
வழுவிழந்த வாய்க்காலாக.
நீ அணை போட்டுக் கொண்டாய்
ஆயிரம் காலத்துக்கு
உனக்குத் தண்ணீர் உண்டு.
எங்களுக்குக் கண்ணீர் மட்டும் உன்னால்...!
ஏ! காவிரித்தாயே!!
நீ தமிழகத்திலிருந்து உற்பத்தியாகி
கர்நாடகத்துக்குள் பாய்ந்திருந்தால்
அவர்கள் என்ன செய்திருப்பார்கள்.
எண்ணிப் பார்க்கிறேன்.
தமிழன் தாராளமானவன்
தரமானவன்
உனக்குச் சிறை வைத்திருக்க மாட்டான்.
நடுவண் அரசே!
நீ என்ன செய்கிறாய்?
மேந்தண்ணி குடித்த
மாடுபோல் விழிக்காதே!
பிரச்சனை உன்னுடையது
இறை ஆண்மை
இழந்துவிடாமல் இருந்துகொள்!
நீதிமன்றமே!
நிலைகுலைந்துவிட்டாயா?
உன் தீர்ப்புகள்
எழுதப்படுவது மட்டும் தானா?
எத்தனை மன்றங்களையும்,குழுக்களையும்,
தீர்ப்புகளையும் பார்த்துவிட்டோம்
புளித்த ஏப்பம் வருகிறதா?
எங்கே போனது உன் ஆளுமை?
குடிதண்ணீருக்கும்
குதர்க்கம் விளைவித்து
இடையூறு செய்யும்
இடையூரப்பாக்களுக்கும்
சாளு(லு) வாளிகளில்
தண்ணீரைத் தேக்கும்
சாதுர்யக் கழுதைகளுக்கும்
சவுக்கடி கொடு…!
அன்புடன்,
ஜோதிபாரதி.
//ஏ! காவிரித்தாயே!! ஏன் இந்த சோதனை!!!
காய்ந்த நிலங்கள்
பாலம் பாலமாக
விரிந்து கிடக்கின்றன.
காவிரி ஆற்றில் நீரில்லாமல்
மணல் அள்ளப்பட்டு
வழுவிழந்த வாய்க்காலாக.
நீ அணை போட்டுக் கொண்டாய்
ஆயிரம் காலத்துக்கு
உனக்குத் தண்ணீர் உண்டு.
எங்களுக்குக் கண்ணீர் மட்டும் உன்னால்...!
ஏ! காவிரித்தாயே!!
நீ தமிழகத்திலிருந்து உற்பத்தியாகி
கர்நாடகத்துக்குள் பாய்ந்திருந்தால்
அவர்கள் என்ன செய்திருப்பார்கள்.
எண்ணிப் பார்க்கிறேன்.
தமிழன் தாராளமானவன்
தரமானவன்
உனக்குச் சிறை வைத்திருக்க மாட்டான்.
நடுவண் அரசே!
நீ என்ன செய்கிறாய்?
மேந்தண்ணி குடித்த
மாடுபோல் விழிக்காதே!
பிரச்சனை உன்னுடையது
இறை ஆண்மை
இழந்துவிடாமல் இருந்துகொள்!
நீதிமன்றமே!
நிலைகுலைந்துவிட்டாயா?
உன் தீர்ப்புகள்
எழுதப்படுவது மட்டும் தானா?
எத்தனை மன்றங்களையும்,குழுக்களையும்,
தீர்ப்புகளையும் பார்த்துவிட்டோம்
புளித்த ஏப்பம் வருகிறதா?
எங்கே போனது உன் ஆளுமை?
குடிதண்ணீருக்கும்
குதர்க்கம் விளைவித்து
இடையூறு செய்யும்
இடையூரப்பாக்களுக்கும்
சாளு(லு) வாளிகளில்
தண்ணீரைத் தேக்கும்
சாதுர்யக் கழுதைகளுக்கும்
சவுக்கடி கொடு…!
அன்புடன்,
ஜோதிபாரதி.
//
மிகவும் அற்புதமாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
//இதை திட்டமிட்டு தூண்டிய பாஜகவின் தேர்தல் நோக்கை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் (நாடாளுமன்ற கூட்டணி தேமுவில் இருப்பதால்) கலைஞர் தேர்தல் முடியும் வரை இதை தள்ளி வைத்ததாக அறிவித்தார்.//
நிதர்சனம்.சரியானதும் கூட. பல BJP ஆதரவாளர்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. அரசியல் மேதைகள் விசய(மில்லா)காந்த்,சரித்திரகாமெடியன் சரத்குமார்..ஆரம்பிப்பார்கள் போராட்டட்த்தை..இதில் விசயகாந்த்தின் சவுண்டு ஓவராத்தான் இருக்கும்..என்னத்த பண்றது இந்தPMK வ ஒழிக்க விசயகாந்த் வளர்ந்துட்டு போட்டம்னு விட வேண்டியதுதான்
கருத்துரையிடுக