பின்பற்றுபவர்கள்

25 பிப்ரவரி, 2008

வளரும் தாதாக்கள் !

விஜயகாந்தை அரசியலில் இருந்து விரட்டப் போவதாக பாமகவும், விசியும் கூட்டறிக்கைவிட்டு இருக்கிறது.விஜயகாந்தின் அரசியல் பலருக்கும் தெரிந்தது தான் அதிமுக, திமுக என அதன் தலைவர்களை வம்புக்கு இழுத்து தினமும் தன் பெயர் செய்தித்தாள்களில் வரும்படி பார்த்து வரும்படியைத் (வெளம்பரம் வரும்படிதான்) தேடிக் கொள்கிறார்.

எதிரிகளை அதிகமாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அரசியலில் வளரலாம் என்பது எழுதப்படாதவிதியோ ? எப்படியும் தேர்த்தல் நேரத்தில் கொள்ளை (எழுத்துப்பிழை அல்ல) அளவில் உடன்பாடு செய்து கொள்வார்கள். அதற்கு முன்பு வரை கடுமையான விமர்சனங்களை வைத்திருப்பார்கள். இராமதாஸ் ஐயாவைப் பொருத்த அளவில் கருணாநிதியைக் கேள்வி கேட்கும் உரிமை ஐயாவுக்குத்தான் இருப்பது போல், கருணாநிதியை விஜயகாந்து குமுதம் பேட்டியில் விமர்சித்ததற்காக விசி திருமாவுடன் இணைந்து விஜயகாந்தை விமர்சித்து அரசியலில் இருந்து விரட்டப் போவதாக அறிவித்திருக்கிறார். நாகரீக( அப்படியெல்லாம்ம் இருக்கிறதா ?) அரசியலில், மக்கள் ஆட்சியில் ஒருவரை ஒரு கட்சித்தலைவரை விரட்டுவேன் என்று சொல்வதற்கெல்லாம் அதிகாரம் இருக்கிறதா ? அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயல் தானே ? விஜயகாந்த் சட்ட அவமதிப்பு என்று வழக்குத் தொடர்ந்தால் 'வெறும் மேடைப் பேச்சுக்காக' சொன்னோம் என்று மட்டுமே இவர்களால் சொல்ல முடியும்.

//பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் போயும், போயும் ஒரு நடிகருடன், அவரது கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வோமா? அந்தத் தவறை நிச்சயம் நாங்கள் செய்யவே மாட்டோம்.
//

நடிகர் என்றால் கேவலமா ? முன்னாள் நடிகையுடன் மட்டும் கூட்டணி வைத்திருக்கலாமா ? இவர்கள் நடிகையுடன் கூட்டணி வைத்தது இல்லையா ? மக்கள் செல்வாக்கு உள்ள கட்சி என்றால் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கத் தயங்கியவர் அல்லர் மருத்துவர் ஐயா. இவர் கூட்டணி சேரும் கட்சியில் விஜயகாந்தும் கூட்டணி வைத்தால் ஐயா எங்கே முகத்தை வைத்துக் கொள்வார் ?

விஜயகாந்த் நேர்மையான அரசியல் வாதியா?, வேசம் போடுகிறாரா ? என்பதெல்லாம் பிறகு தான். அவர் இந்த தமிழக மைந்தன், அவரை அரசியல் களத்தில் இருந்து விரட்டுவேன் என்று சொல்லும் இவர்களது அறிக்கை, அவரது வளர்ச்சியினால் ஏற்பட்ட மறைமுக எரிச்சல், இதன் மூலம் இவர்கள் விஜயகாந்த் வளர்ந்தை ஒப்புக் கொள்கிறார்கள். பாமக - விசி தலைவர்கள் அரசியல் தாதாக்களாக நினைத்துக் கொண்டு விஜய காந்தை விரட்டுவேன் அறிக்கை விடுகிறார்கள். செல்லுபடியாகாது. யார் யார் அரசியலில் இருப்பதென்பதை ஈடுபட நினைப்பவரும், பொது மக்களும் தான் முடிவு செய்யமுடியும்.

பிகு : முழுக்க முழுக்க 100 விழுக்காடு அக்மார்க் அரசியல் பதிவு. இதில் வெறெந்த உள்நாட்டு, உள்குத்'தூ' அரசியலும் இல்லை. அப்படி எதும் இருக்கும் என்று நினைத்திருந்தால் நான் பொறுப்பு அல்ல.

3 கருத்துகள்:

Subbiah Veerappan சொன்னது…

///யார் யார் அரசியலில் இருப்பதென்பதை ஈடுபட நினைப்பவரும், பொது மக்களும் தான் முடிவு செய்யமுடியும்.///

இன்னொரு ஆளை விட்டுவிட்டீர்களே ஸ்வாமி!
அவன்தான் உங்கள் பதிவின் தலைபபிற்கு் அதிபதி் - அதாவது காலதேவன்!

சின்னப் பையன் சொன்னது…

அவர்களே எதிர்காலத்தில் விஜயகாந்த்துடன் கூட்டணி வைத்துக் கொண்டாலும் - மக்கள் விருப்பப்படி - மக்கள் நலனுக்காகதான் கூட்டணி வைத்துக் கொண்டோம் என்று கூறுவார்கள்... அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!!

பிறைநதிபுரத்தான் சொன்னது…

விஜயகாந்த்தின் கட்சி விரைவில் அழியக்கூடிய காளானா அல்லது பா.ம.க - வி.சி க்களை அழிக்கப்போகும் ‘காலனா' என்பதை 'காலம்' சொல்லும்..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்