பின்பற்றுபவர்கள்

5 நவம்பர், 2007

மதச்சார்பின்மையாம் ம...ராம்...!

பாரதிய ஜனதா கட்சி- இதன் பொருள் இந்திய ஜனநாயக கட்சியாம். மற்றதெல்லாம் பாகிஸ்தான் ஜெனநாயக கட்சியா ? நம்ம சு.சாமி ஒரு முறை அப்படித்தான் பிஜேபி யை பார்த்து கேட்டார். இந்துவெறி, இந்துத்துவா இதுகளை பொதுமக்களுக்கு பசுத்தோல் போர்த்தி அறிமுகப்படுத்தப்பட்ட பட்ட பெயர் தான் பாரதிய ஜனதா கட்சி. அவிங்களும் நாங்க மதச்சார்பற்றவர்கள் என்று காட்டுவதற்கு பலி ஆடுகளாக இரண்டு இஸ்லாமிய பாரளுமன்ற உறுப்பினரை வைத்திருந்தார்கள். அவர்களின் தேசிய சாயம் அவ்வப்போது வெளுத்து காவியாவதைப் பார்த்த மற்ற கட்சிகள் பிஜேபி ஒரு மதவாத கட்சி என்று சொல்ல ஆரம்பித்தார்கள். காங்கிரஸ் கொள்கை (?) காரணமாக பிஜேபியிடம் கூட்டணி வைக்கல. மற்ற எல்லா கட்சிகளும் எதோ ஒரு சந்தர்பத்தில் அவர்களிடம் கூட்டணி வைத்து பிஜேபி மதவாத கட்சியல்ல என்று தத்தம் தேர்தல் அறிகையில் ஒன்றாக அந்த வசனத்தை விசனப்படாமல் வைத்தார்கள். இவிங்க அதாவது மத்த கட்சி காரங்கே தெரிஞ்சே தான் வாக்காளர்கள் மொகத்துல கரிய பூசுறாங்கே நாதாரின்னு சொல்லிட்டு போய்டலாம்.

ஆனா உயர்ந்த பதவியில் ஒட்கார்ந்து வேட்டியை தேச்ச நம்ம கவுடா ஐயா, 'மதச்சார்பற்ற' என்றே அக்மார்க் தூய பெயரை கட்சிக்கு வச்சு நாறடிக்கிற மாதிரி இந்தியாவில் இருக்கிற எந்த கட்சிக்கும் யோசனை வரலை பாருங்க. மதச்சார்பற்ற என்ற பெயரை கட்சிக்கு வைத்துக் கொண்டு மதவாத கட்சியோடு கூட்டு(களவானி) ஆட்சி செஞ்சு 20 மாசம் ஓடி போச்சு. அப்பறம் பதவிய விட்டு எறங்கினோன .. திரும்பவும் பாஜக மதவாதக் கட்சி என்று தேவ கவுடா அண்ட் சன்ஸ்க்கு திடீர் ஞான ஒதயம். அப்பப்பா கேட்ட உடனே புல்லரிக்குது. இது தெரியாம இந்த 'அப்பாவி'ங்க 20 மாசமா ஏமாந்து விதான் சவுதாவுக்கே தெய்வ குத்தம் பண்ணிப்புட்டோமேன்னு நெனச்சு அறிக்கை விட்டாங்க பாருங்க... பிஜேபி மட்டும் சொன்னபடி கேட்டாதா ? ன்னாங்கே ... இப்ப மட்டும் கிருஷ்ணதேவராயரோ, திப்பு சுல்தானோ உயிரோடு இருந்தால் தேவ கவுடாவை மதிமந்திரி ஆக்கி இருப்பார். தேர்தல் வச்சா தேறுமோ என்னமோ, அட்ஜிஸ்ட் பண்ணிக்கிட்டு அள்ள முடிஞ்ச வரை அள்ளலாம்னு திரும்பவும் பிஜேபி காட்டுற வாலைப்பழத்துக்கு கரணம் போட முடிவெடுத்தாதலும். கரணம் போடறததுக்கும் பர்மிசன் எங்களுக்கு நாங்க தான் கொடுத்துக்குவோம், 10 அம்ச கோரிக்கையை வச்சு மொதலமச்சர் பதவியை கை மாத்தி விடப் போறாங்களாம்... எப்போ கரணம் போடனும்னு முன்னாலேயே சொல்லிடனும் னு கோரிக்கையை வச்சி...குரங்குகள் அணிவகுப்பு நடத்தி... எல்லாம் சரியா இருக்கான்னு காட்ட டெல்லிக்கு கூட்டிட்டு போயிருக்காராம்.

அழுவுற பிள்ளைக்கு கிலுகிலுப்பை காட்டுவது மாதிரி மந்திரிங்களுக்கெல்லாம் கிளுகிளுப்பை காட்ட மசாஜாம்.

'மதச்சார்பற்ற' ஜனதா தளம் ? மதச்சார்பின்மை பேர வச்சு எதுக்குடா அப்பறம் மதச்சார்பு கூட்டணியோட ? ... போலி மதச்சார்பின்மையை வச்சிக்கிட்டு....அடப்போங்கடா... மதசார்பின்மையாம்... ம.... ராம்.

கன்னட மக்களிக்கே கெட்ட கால சுறுவாயித்தே......! அடுத்த தடவையாவது ஒரே கட்சிக்கு பெரும்பாண்மை கொடுங்க... விதான் சவுதா குராங்காட்டி வித்தை காட்டுற எடமா போச்சு

:))

7 கருத்துகள்:

ஜமாலன் சொன்னது…

உங்கள்து உணர்வகளை பகிர்ந்து கொள்கிறேன். பாராட்டுக்கள்.

கன்னிப் பெண்ணை கிழவி என்பதைப் போலத்தான் இந்த மதத்சார்பின்மை ஜனதா தளம் என்பதும். பதவிக்காக எதையும் செய்யும் குரங்குவித்தை என்பதை அருமையாக தோலுரித்துள்ளீர்கள்.

நல்ல உணர்வுபூர்வமான கட்டுரை.

ஆணால் சு.சாமி என்பது உங்கள் உணர்வினால் வந்த சுருக்கமாக கொள்கிறேன். ஒரு படத்தில் சுனா சாமி என்ற பெயரில் நகைச்சவை நடிகர் எஸ்.எஸ். சந்திரன் நடித்திருப்பார். அந்த நினைவுதான் வந்தது. அதிமுக மகளர் அணி தங்களது புடவையைத்தூக்கி காட்டிய பிறகும் அக்கட்சியை ஆதரித்தவர் அவரை அப்படி அழைப்பதிலும் தப்பில்லைதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

ஜமாலன்,

சு.சாமி என்றால் பலருக்கும் தெரியும். உணர்வினால் சொல்லவில்லை.

சு.சாமி பற்றி நீங்களே தெரிந்து கொள்ளுங்க்கள் .... கூகுள் பொய் சொல்லுமா ?

பாராட்டுக்கு நன்றி!

G.Ragavan சொன்னது…

கோவி, உண்மையிலே சொன்னா மதச்சார்பின்மைங்குறது நல்லா விக்குற சரக்காயிருச்சு. அதுனாலதான் ஒவ்வொரு கட்சியும் நல்லாவே காச்சுது. பத்வீல இருக்குறப்போ அதக் காப்பாத்திக்க எல்லாப் பயகளும் எதையாவது வெச்சி யாவரம் பண்றான். மக்களும் வாங்குறாங்க. மதம், மொழி, இனமெல்லாம் நல்லா விக்குற சரக்குக. விக்காம இருக்க முடியுமா? பாஜகாவுக்கு எந்த விதத்துலயும் கொறைஞ்சதில்லை காங்குரசு, ஜனதாதளம். பேருதான் வெவ்வேறயே தவிர உள்ளயிருக்குற சரக்கு ஒன்னாத்தான் இருக்கும் போல இருக்கு.

சீனு சொன்னது…

//மதச்சார்பற்ற என்ற பெயரை கட்சிக்கு வைத்துக் கொண்டு மதவாத கட்சியோடு கூட்டு(களவானி) ஆட்சி செஞ்சு 20 மாசம் ஓடி போச்சு.//

அடடா! உங்களுக்கு பேசிக் லாஜிக்கே தெரியலையே. "மதச்சார்பற்ற" என்று கட்சியின் பயரில் சேர்த்தாத்தானே வசதியாக "மதச்சார்புள்ள" கட்சியுடன் கூட்டு வைக்க முடியும்? அப்படி பேரு வெக்கலைன்னா ரெண்டும் ஒரே கட்சி மாதிரித்தானே!

கோவி.கண்ணன் சொன்னது…

//சீனு said...
அடடா! உங்களுக்கு பேசிக் லாஜிக்கே தெரியலையே. "மதச்சார்பற்ற" என்று கட்சியின் பயரில் சேர்த்தாத்தானே வசதியாக "மதச்சார்புள்ள" கட்சியுடன் கூட்டு வைக்க முடியும்? அப்படி பேரு வெக்கலைன்னா ரெண்டும் ஒரே கட்சி மாதிரித்தானே!//

சீனு ஐயா,

opposite pole attraction என்று சொல்கிறீகள். சரிதானே ? நம்ம அரசியல் வாதிகள் ஒன்னும் தெரியாதவங்க. நீங்க வேற சொல்லிக் கொடுத்து புண்ணியம் தேடிக் கொள்கிறீர்கள்
:)

ESMN சொன்னது…

இந்தி எதிர்ப்பால் தமிழ்நாட்டின் ஆட்சியை பிடித்த கலைஞர் அவர்களின் பேரனுக்கு நன்றாக இந்தி தெரியும். அது தான் அரசியல் சாக்கடை.....

ESMN சொன்னது…

இந்தி எதிர்ப்பால் தமிழ்நாட்டின் ஆட்சியை பிடித்த கலைஞர் அவர்களின் பேரனுக்கு நன்றாக இந்தி தெரியும். அது தான் அரசியல் சாக்கடை.....

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்