பின்பற்றுபவர்கள்

19 நவம்பர், 2007

ஆண்டிகள் கூடி மடம் கட்டினால்...

தென்னிந்தியாவின் குஜராத்தாக மாற இருந்த கர்நாடகத்தில் மீண்டும் குழப்பம், கவுடாவின் 20அம்ச கோரிக்கையை பிஜேபி ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து பிஜேபிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்குமாறு கவுடா குடும்பம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த தேர்த்தலில் பிஜேபிக்கு, காங்கிரசுக்கு அடுத்த நிலையில் இருந்தது தான் மதச்சார்பற்ற ஜனதா தளம்.

மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் கொட்டம் அடங்கனும் என்ற பிஜேபியின் காங்கிரஸ் எதிர்ப்பு காரணமாக, குரங்கு அப்பம் பிட்ட கதையாக தந்திரமாக பிஜேபியின் தயவால் 20 மாதங்கள் ஆட்சி நடத்தியது மசாஜெத. பதவியில் இருந்த ஆசை கவுடா குடும்பத்தை விடவில்லை. இன்னொரு குஜராத் உருவாக்கும் ஆசை பிஜேபியை விடவில்லை. முடிவில் தற்பொழுது பதிவி ஏற்ற இரண்டொரு நாளில் கவிழ இருக்கிறது பிஜேபி.

20 அம்ச கோரிக்கைகள் மூலம் பிஜேபியை பொம்ம்மை அரசாங்கமாக ஆக்கி ஆட்டிப்படைக்க நினைத்தார் கவுடா. கடிவாளத்தை கொடுத்துவிட்டு முதுகில் சவாரி செய்ய விடும் குதிரை ஏற்றம் வேண்டாம் என்று பிஜேபி தலைமையும் முடிவு செய்துவிட்டு, இடையூறப்பாவை ( எழுத்துப்பிழை இல்லை) பதவி விலக சொல்லி இருக்கிறது.

கர்நாடக மக்கள் வரும் தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளின் கேலிக் கூத்தைப் பார்த்து ஓரம் கட்டுவார்களா தெரியலை. ஏனென்றால் சாதி அரசியல் மற்ற மாநிலங்களை விட அதிகமாகவே கர்நாடகாவில் நடக்கிறது. கவுடர் சாதி கர்நாடகாவில் பின் தங்கிய வகுப்பில் பெரும்பாண்மை சமூகம். தேவ கவுடாவைத்தான் ஆதரிப்பார்கள்.

ஆண்டிகள் கூடி மடம் கட்டினால் அது கனவில் தான் என்பதற்கு சாட்சியாக கர்நாடகவின் கூட்டணி ஆட்சி தத்துவம். ஒட்டுண்ணி அரசியல் எத்தனை நாளைக்கு எடுபடும் ? கர்நாடக பிஜேபியின் தற்போதைய நிலைமை 'சொத்து கால் பணம் அதன் சுமைக்கூலி முக்கால் பணம்'.

8 கருத்துகள்:

Me சொன்னது…

பா.ஜ.க அடிபட்ட புலியா இல்லை இடிபட்ட புளியா ன்னு சீகிரமே தெரிஞ்சுடும். கர்நாடகம் காவிக்கூட்டத்திடமிருந்து தற்காலிகமாக தப்பித்தது. இருந்தாலும் தமிழன் மனதில் எழும் எண்ணம் " யார் ஆண்டா என்னாங்க? காவிரில தண்ணியா தொறந்து விடப்போறாங்க?".

ரூபஸ் சொன்னது…

ஆமாங்க.. அப்பாவும், புள்ளையும் சேர்ந்து நாடகமடுகிறார்கள்..

TBCD சொன்னது…

இருக்கையிலே...சரியாக அமுருமுன்னே..நீங்க பதிவு போட்டுடீங்க...
மடம்..கட்ட சரியான ஆதரவு கிடைக்கவில்லை..மத சார்பற்ற ஜனதா தளம், தன் மதச் சார்பின்மையயை காப்பாற்றிக் கொண்டது... ஹய்யோ...ஹய்யோ...

கோவி.கண்ணன் சொன்னது…

//Collapse comments

உறையூர்காரன் said...
பா.ஜ.க அடிபட்ட புலியா இல்லை இடிபட்ட புளியா ன்னு சீகிரமே தெரிஞ்சுடும். கர்நாடகம் காவிக்கூட்டத்திடமிருந்து தற்காலிகமாக தப்பித்தது. இருந்தாலும் தமிழன் மனதில் எழும் எண்ணம் " யார் ஆண்டா என்னாங்க? காவிரில தண்ணியா தொறந்து விடப்போறாங்க?".
//

உறையூர்காரன் சார்,

நம்ம ஊரு இல.கனேசன் ஐயா சொன்னாரு, கர்நாடகத்தில் பாஜக ஆட்சி என்றால் கவேரியில் பாலையே விடுவாங்களாம். ( பாலை என்றால் பாலைவனமான்னு கேட்காதிங்க ) :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ரூபஸ் said...
ஆமாங்க.. அப்பாவும், புள்ளையும் சேர்ந்து நாடகமடுகிறார்கள்..

5:22 AM, November 20, 2007
//

கவுடா கட்சியா... கவுருடா கட்சியா தெரியலை. கவுடா ஐயா பிரமராகவேறு இருந்திருக்கிறார். குடிமக்கள் நலனில் அக்கரையைப் பார்த்தேல். ஹூம் என்னத்த சொல்ல:(

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
இருக்கையிலே...சரியாக அமுருமுன்னே..நீங்க பதிவு போட்டுடீங்க...
மடம்..கட்ட சரியான ஆதரவு கிடைக்கவில்லை..மத சார்பற்ற ஜனதா தளம், தன் மதச் சார்பின்மையயை காப்பாற்றிக் கொண்டது... ஹய்யோ...ஹய்யோ...
//

குதுர வியாபரம் படியல, வேறென்ன செய்வது, நீங்க சொல்வது போல் பல்டி அடிச்சிட வேண்டியது தான்.

ILA (a) இளா சொன்னது…

கோவி, உங்கள் பதிவு பிஜேபிக்கு எதிராக என்றால் என் கருத்து எதுவுமில்லை. தேவ கவுடா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி காங்கிரஸ்சுக்கு அல்வா குடுத்தாரு. அப்போ அப்பா மகனும் அடிச்சுகிட்ட மாதிரி நாடகம். அதுல குடும்ப பிரச்சினையயும் சமாளிச்சாரு. அதாவது ஒரே கல்லுல மூனு மாங்கா. இப்பவும் கிரானைட் குவாரி பிரச்சினைதான் காரணம்னு மக்கள் பேசிக்கிறாங்க.. இப்படி நெறையா இருக்க உங்க பதிவு எதை நோக்கி அப்படின்னு நீங்கதான் சொல்லனும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கவுடா என்கிற பித்தலாட்ட பேர்வழியா இந்தியாவின் பிரதமராக இருந்தது என்று நினைக்கும் போது ரொம்ப அவமானமாக உள்ளது. Deva Gouda means Double Game. Am i right to say that.

அன்புடன் ஜோதிபாரதி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்