பின்பற்றுபவர்கள்

12 நவம்பர், 2007

சத்தியமூர்த்தி பவனில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதா ?

கோஷ்டி தகராறுக்கு பெயர் பெற்ற சத்திய மூர்த்தி பவனில் வெட்டு குத்தாம். இப்பொழுதுதான் வெளியாட்களால் குத்தப்பட்டு தலைவர் கிருஷ்ணசாமி அப்பல்லோவில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் காமராஜருக்கு பின் ஆட்சியிலும் இல்லை, பின்பு ஏன் இவர்களுக்குள் மோதிக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. காங்கிரஸில் இருக்கும் கோஸ்டிகள், வாசன் கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி, திண்டிவனம் இராம மூர்த்தியின் மேல் அனுதாப கோஷ்ட், குமரி அனந்தன் கோஷ்டி, முன்னால் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடியின் அனுதாப கோஷ்டி, ஜெயந்தி நடராஜன் கோஷ்டி, பீட்டர் அல்போன்ஸ் கோஷ்டி, கட்சியில் முதன்மை பொறுப்பு வகிப்பர்கள் ஓவ்வொருவரும் ஒன்று அல்லது இரண்டு கோஷ்டிகளை வைத்திருக்கிறார்கள். எனக்கென்னமோ மாநில கட்சிகளைவிட தேசிய கட்சிகள் செல்(வ)வாக்கு மிக்கவையாக இருப்பதால் இது போல் நடப்பதாக தெரிகிறது.

இனி செய்தி,

இளைஞர் காங். தலைவர் மீது தாக்குதல்: வாசன் கண்டனம்


சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் மீது நடந்த கொலை வெறித் தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை மயூரா ஜெயக்குமாரை ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டித் தாக்கியது. இதில் படுகாயமடைந்த ஜெயக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோஷ்டி மோதல் காரணமாகவே ஜெயக்குமார் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெயக்குமார் ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர்.

ஜெயக்குமார் தாக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் வாசன் உடனடியாக சத்தியமூர்த்தி பவனுக்கு விரைந்து வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது.

இந்த தாக்குதலின் பின்னணியில் கட்சியின் ஒரு பிரிவினரே காரணம் என்று தெரிய வந்துள்ளது. கட்சித் தலைமை அலுவலகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருப்பது வன்மையாக கண்டித்தக்கத்தக்கதாகும்.

இந்த தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கட்சித் தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

சத்தியமூர்த்தி பவனில் இப்படி ஒரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை. இது மிகவும் அநாகரீகமானது, கோழைத்தனமானது.

போலீஸார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றார்.

நன்றி :
தட்ஸ் தமிழ்

4 கருத்துகள்:

TBCD சொன்னது…

சோற்றிலே பூசனிக்காய்யை மறைப்பதைப் பார்த்திருக்கிறோ...பூசனித்தோட்டத்தையே மறைக்கிறார் வாசன்..

எனக்குத் தெரிந்து, சத்யமூர்த்தி பவன் என்று செய்தித் தாளிலே படிக்கும் போதெல்லாம்..ஏதாவது உட்கட்சித் தகராறு காரணமாகவே படித்ததாகவே நினைவு...

நல்ல கதை போங்கள்...

சட்டம் ஒழுங்கை கடைப் பிடிக்க வைக்காத ஆண்டோனியோ மொய்னோ..பதவி விலகுவாரா என்று..நாளைக்கு செயம்மா அறிக்கை ரெடி ஆகுதாம்...பின்னாடி கூட்டனி வச்சா, அது பன்னீர் செல்வம் தான் எழுதினதா சொல்லிக்கத் திட்டமாம்..

ஜெகதீசன் சொன்னது…

//
சட்டம் ஒழுங்கை கடைப் பிடிக்க வைக்காத ஆண்டோனியோ மொய்னோ..பதவி விலகுவாரா என்று..நாளைக்கு செயம்மா அறிக்கை ரெடி ஆகுதாம்...
//
என்னது.... இப்ப எல்லாருமே இலைக்காரன் மாதிரி திங்க் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க....
:)

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

"காந்தி ஏன் சட்டை போடாம இருந்தார் தெரியுமா? சட்டை போட்டுக்கிட்டு காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்துக்குப் போனா கிழிச்சுப்புடுறாங்கன்னு தான்" என்பது எஸ் எஸ் சந்திரன் ஒரு திரைப்படத்தில் சொன்ன வசனம்.

அந்த அளவுக்கு, காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் என்றாலே சட்டை கிழிப்பு சகஜமான ஒரு விஷயம். இப்போது கொஞ்சம் மாடர்னாக தோலையும் கிழிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் போலிருக்கிறது.

ஜமாலன் சொன்னது…

செல்(வ)வாக்கு

பல அர்த்தங்களைத் தரும் வார்த்தை. இதில் செல்லா வாக்கையும் சேர்த்துக் கொள்ளலலாம்.

கட்சி இருப்பதை எப்படித்தான் காட்டிக் கொள்வதாம்?

உங்கள் கண்ணில்படாத கோஷ்டிகள்.. ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு கோஷ்டிதான்.

ஒரு உறுப்பினரான நூறு உறுப்பினர் ஆனமாதிரி..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்