பின்பற்றுபவர்கள்

18 நவம்பர், 2007

ஸெங்கோ எனும் அதிசய தீர்த்தம்.

ஒர் இருமுறை அறிமுகமானவர்கள், நீண்ட நாட்களாக தொடர்பு விட்டுப் போனவர்கள் ஆனால் நெருக்கமானவர்கள் அல்ல, திடிரென்று ஒரு நாள் செல்பேசியில் அழைப்பார்கள். ஆகா இவர் இன்னும் நம்மை நினைவில் வைத்திருக்கிறேரே என்ற மனமகிழ்ச்சியில் 'அப்பறம் சொல்லுங்க சார்' எப்படி இருக்கிங்க என்று கேட்டவுடன் பொறுப்புடன் நம்மைப் பற்றி எல்லாம் விசாரிப்பார்.

"உங்க கூட ஒரு முக்கியமான விசயம் பேசனும்"

"ஓ தாரளமாக, பார்த்து நீண்ட நாள் ஆயிற்று"

"உங்களுக்கு எப்போ நேரம் இருக்கும்"

"நீங்களே சொல்லுங்க"

"எனக்கு ஒன்னும் சிரமில்லை, வீட்டு முகவரியை சொல்லுங்கள் வருகிறேன்"

சொன்னபடி வருவார். லேப்டாப் சகிதமாக வருவார்,

"என்ன சார், அலுவலகத்தில் இருந்தே வந்துட்டுங்களா ?"

"ம் கொஞ்சம் பிசிதான், கஷ்டப்பட்டு உழைக்கலைன்னா, சமாளிக்க முடியாது சார்"

காபி உபசரிப்புக்குபின்பு,

"சார், ஒரு பிசினஸ்"

"ம் சொல்லுங்க"

"இதை நீங்க வீட்டில் இருந்தே செய்யலாம், அருமையான ப்ராடெக்ட்"

கூடவே வைத்திருக்கும், லேப்டாப் பைகளில் இருந்து ப்ராக்டட் பற்றிய விவரங்களை காண்பிப்பார்,

நாமும் வெட்டப் போகிற ஆடு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு மனைவியின் முகத்தைப் பார்க்க, அவளும் நமட்டுச் சிரிப்புடன் நம்மை நக்கலாக பார்ப்பது, 'இந்த தடவையும் இளிச்ச வாய் மாதிரி ஏமாந்திடாதிங்க' என்ற எச்சரிக்கை போல் இருக்கும்.

வந்தவர் அதன் பிறகு பவர் பாயிண்ட் ப்ரசன்டேசன் ஒன்றை காட்டுவார்'

"இந்த ப்ராடெக்ட் பாருங்க, இந்த படத்தில் இருப்பவரை பாருங்க, டாக்டர் கைவிரித்த கேஸ், இந்த மருந்தை சாப்பிட்ட 3 மாதங்களில் பழைய நிலைக்கு திரும்பிட்டாங்க"

"...........ம்"

"இதப் பாருங்க சார், இவர்தான் இந்த கம்பெணியை தொடங்கியவர், அமெரிக்காவில் ஆரம்பிகக்ப்பட்டது'

".........ம்"

"இதுல சேர்ந்து 3 மாதத்தில் எனக்கு தெரிந்த பத்மநாபன் என்பவர் கார் வாங்கிட்டார்"

".......ம்"

"வேலை வேலைன்னு நாம் அலுவலகத்தில் கிடைக்கும் சம்பளம் மட்டும் இருந்தால், நாம் என்னைக்கு வசதி வாய்பை பெருக்கிக் கொள்வது ?"

"........ம்"

"நீங்க ஒன்னும் செய்யத் தேவையில்லை, 2 பேரை அறிமுகப்படுத்தினால் போதும்"

"......ம்"

"அப்பறம் அவுங்க ஆளுக்கு 2 பேரை அறிமுகப்படுத்துவாங்க, இது சங்கிலி தொடர்போல, எவ்வளவு ஆட்கள் சேருகிறார்களோ, அதுக்கு ஏற்றார் போல் உங்கள் அக்வண்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்"

"........ம்"

*********

இது போன்று பல மல்டி மார்கெட்டிங் எனப்படும் சங்கிலி(பறிப்பு ?) தொடர் பிசினெஸ் நிறைய பார்த்திருக்கிறேன். பேச்சு திறமை இல்லை என்பதைவிட தெரிந்தவர்களின் மனதை முறிக்கக் கூடாது என்று அதில் மெம்பராக சேர்ந்துவிட்டு 100 - 200 வெள்ளியை ஒரே முறையில் இழந்து அத்துடன் அதை மறந்திருக்கிறேன். அவர்களும் அதன் பிறகு வரமாட்டார்கள். அந்த பணத்திற்கு அவர்கள் கொடுக்கும் பொருள்களையும், மற்ற விவரங்களையும் அதன் பிறகு இடது கையாலும் தீண்டுவதில்லை.

நேற்று மலேசியா சென்ற போது அங்கு இருக்கும் தமிழ் வார இதழ் ஒன்றை வாங்கினேன். அதில் அது போன்ற ஒரு பிசினெஸ் பற்றி எழுதி இருந்தார்கள். விளம்பரம் போன்று எழுதி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அதை ஒரு முக்கியதுவம் வாய்ந்த செய்தி கட்டுரை போன்று எழுதி இருந்தனர். சிறுபகுதியை மட்டும் தருகிறேன். அதில் ஒருவர் தனது மருத்துவ தொழிலுக்கு முழுக்கு போட்டுவிட்ட ஸெங்கோவில் ஈடுபட்டவர், தந்த தகவல்கள்

இதழின் நிருபர் : ஸெங்கோ என்றால் என்ன ?

ஸெங்கோ பார்டி : ஸெங்கோ என்பது மூலிகை திர்த்தம், சகல வியாதிகளையும் தீர்க்க வல்ல புனித தீர்த்தம். இதை எடுத்துக் கொண்ட எனது நோயளிகள் குணமடைந்தார்கள், அதனால் வேலையை விட்டுவிட்டு ஸெங்கோ வியாபாரத்தில் இறங்கிவிட்டேன்.

நிருபர் : ஸெங்கோ வியாபாரம் எங்கே தொடங்கப்பட்டது ? எதனால் செய்யப்பட்டது ?

ஸெங்கோ பார்டி : ஸெங்கோ தீர்த்தம் மங்குஸ்தான் பழத் தோலில் இருந்து செய்யப்பட்டது, அமெரிக்காவில் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, மூன்றே ஆண்டுகளில், உலகில் அனைத்து கம்பெணி தரவரிசையில் ஐந்தாவது இடத்தை பெற்றிருக்கிறது.

நிருபர் : புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவணம் என்கிறீர்கள், இங்கு 1500 பேருக்கும் மேல் கூடி இருக்கிறார்களே ? இவர்கள் பார்வையாளர்களா ?

ஸெங்கோ பார்டி : இவர்கள் பார்வையாளர்கள் அல்ல, விற்பனையாளர்கள், இந்த தீர்த்ததின் மகிமை இவ்வளவு பேரை இந்த விற்பனையில் ஈடுபடுத்தி இருக்கிறது. இதிலிருந்தே நீங்கள் இதன் விற்பனை திறனை தெரிந்து கொள்ளலாம்.

நிருபர் : உங்களுடைய மாதவருமானம் எவ்வளவு என்று சொல்ல முடியுமா ?

ஸெங்கோ பார்டி : இந்த வியாபாரத்தில் வந்த பிறகு மமதம் 20 ஆயிரம் வெள்ளிக்கு மேல். இன்னும் இது உயரும்.

***********

இவர்கள் குறிப்பிடுவதைப் பார்க்கும் போது பலர் கோடிஸ்வரன் ஆகிவிடுவது போல் சொல்கிறார்கள். இதில் சிலர் சம்பாதிக்கிறார்கள். பலர் ? ஒரே முறை அழுதுவிட்டு செல்கிறார்கள். அவர்கள் குறிப்பிடும் பொருள்கள் தரமிக்கவையா ? என்பது மருத்துவர்கள் தான் உறுதிசொல்ல முடியும். இதுபோன்ற மல்டி லெவல் மார்கெட்டிங் ந(ண்)பர்களை சந்திக்கும் போது கவனம் தேவை.

அடுத்து செல்புட் என்ற நிறுவனத்தினத்தை ஒருவர் எனக்கு அறிமுகமான கதை.

14 கருத்துகள்:

ஜமாலன் சொன்னது…

இங்கேயும் இப்படித்தான் கண்ணன் பேஸ்ட் துவங்கி தங்க டாலர் வரை அது இதுன்னு இந்த MLM தொல்லை தாங்க முடியவில்லை. ஒரு படத்தில் ஜனகராஜ் சொல்வது போல 'மெடராஸ் எக்மோர்ல சூட்கேஸீடன் காக்காய் வலிப்பு வந்தவனுக்கு தண்ணிகொடுத்த காப்பாற்றி கடைசியல் அவர் வாரிசில்லா பணக்காரனாக இருந்து சொத்தை எல்லாம் கொடுத்துட்டு செத்துபோற மாதிரி'.. திடிர் பணக்கார ஆசை யாரை விட்டது. பழகிய நண்பர்களிடம் இதனை சொன்னால் நம்மை பிழைக்கத் தெரியாதவன் என்பர்கள்.

இரண்டாம் சாணக்கியன் சொன்னது…

தமிழகம் முழுவதுமே இப்படி மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனிகள் தங்களது தொழிலை விரிவுபடுத்தியுள்ளன. எனது ரில் வாரத்திற்கு ஒரு நாள் இந்த முகவர்கள் கூட்டம் இருக்கிறது என்று சொல்லி அப்பாவிகளை இழுத்துச் செல்கிறார்கள். ஆனால் கட்டணங்கள்தான் இப்போது சற்று உயர்ந்துள்ளன 3000 ரூபாய்.. நான் இன்னும் 3 பேரை சேர்க்க வேண்டுமாம். அதில் எனக்கு கமிஷனாம். அந்த 3 பேர் இன்னும் 3 பேரைச் சேர்த்து.. இப்படியே பெருகிப் பெருகி.. கனவுகள்தான் பெருகுகின்றன.. ஆனாலும் அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்வதால் தெரியும் ஒரேயொரு விஷயம் ஏமாற்றுபவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள் அல்ல.. பேசத் தெரிந்தவர்கள் மட்டுமே ஏமாற்றுபவர்கள். இவர்கள் கடைசியில் சொல்லும் ஒரேயொரு விஷயம்.. லின்க்தான் முக்கியம்.. முக்கியமானது லின்க்தான்.. மறந்திராதீங்க கண்ணன்..

ஜெகதீசன் சொன்னது…

எனக்கும் இது போன்ற சில அனுபவங்கள் உண்டு.. பேசுபவர்கள் தெரிந்தவர்களாக இருப்பதால் வேறு வழியின்றி அவர்கள் பேசுவதை முழுவதும் கேட்டுக் கொண்டிருப்பேன்.(ஆனால் மனம் முறியக்கூடாது என்பதற்காக மெம்பரால்லாம் ஆகவில்லை...:) )

//
. இதை எடுத்துக் கொண்ட எனது நோயளிகள் குணமடைந்தார்கள், அதனால் வேலையை விட்டுவிட்டு ஸெங்கோ வியாபாரத்தில் இறங்கிவிட்டேன்.
//
ரெம்ப நல்ல டாக்டர்...
//
அமெரிக்காவில் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, மூன்றே ஆண்டுகளில், உலகில் அனைத்து கம்பெணி தரவரிசையில் ஐந்தாவது இடத்தை பெற்றிருக்கிறது.
//
எல்லா எம்.எல்.எம் நிறுவனங்களும் இதைத்தான் சொல்கின்றன. அப்ப எத்தன கம்பெணி தான் டாப் 5 க்குள்ள இருக்கு?
:))))

Unknown சொன்னது…

ஒரு ஹலோ சொல்லி வைப்பபோமே என்று நீண்ட நாட்களாக உங்கள் நம்பரை நான் கூட தேடிக்கொண்டிருக்கிறேன். MLM தொல்லை இல்லை - பயம் வேண்டாம்.

G.Ragavan சொன்னது…

இவங்களயெல்லாம் பாத்தாலே ஓடிப் போயிரனும். இல்லைன்னா நம்மளை ஓட வெச்சிருவாங்க. இதெல்லாம் நம்பாதீங்க. நம்பாதீங்க. நம்பாதீங்க.

ILA (a) இளா சொன்னது…

http://sathyarajkumar.com/hosting/

கோவி.கண்ணன் சொன்னது…

//

ஜமாலன் said...
திடிர் பணக்கார ஆசை யாரை விட்டது. பழகிய நண்பர்களிடம் இதனை சொன்னால் நம்மை பிழைக்கத் தெரியாதவன் என்பர்கள்.
//

ஜமா சார்,

நெருங்கிய நண்பர்கள் யாரும் தொல்லைப்படுத்துவது இல்லை. அறிந்தவர்கள் தான் வாசலுக்கே வந்துவிடுகிறார்கள்.

பிழைக்கத் தெரிந்தால் நாம அவர்களிடம் மண்டையை ஆட்டி கேட்போமோ அவர்களுக்கு தெரியும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//இரண்டாம் சாணக்கியன் said...
தமிழகம் முழுவதுமே இப்படி மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனிகள் தங்களது தொழிலை விரிவுபடுத்தியுள்ளன. எனது ரில் வாரத்திற்கு ஒரு நாள் இந்த முகவர்கள் கூட்டம் இருக்கிறது என்று சொல்லி அப்பாவிகளை இழுத்துச் செல்கிறார்கள். ஆனால் கட்டணங்கள்தான் இப்போது சற்று உயர்ந்துள்ளன 3000 ரூபாய்.. நான் இன்னும் 3 பேரை சேர்க்க வேண்டுமாம். அதில் எனக்கு கமிஷனாம். அந்த 3 பேர் இன்னும் 3 பேரைச் சேர்த்து.. இப்படியே பெருகிப் பெருகி.. கனவுகள்தான் பெருகுகின்றன.. ஆனாலும் அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்வதால் தெரியும் ஒரேயொரு விஷயம் ஏமாற்றுபவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள் அல்ல.. பேசத் தெரிந்தவர்கள் மட்டுமே ஏமாற்றுபவர்கள். இவர்கள் கடைசியில் சொல்லும் ஒரேயொரு விஷயம்.. லின்க்தான் முக்கியம்.. முக்கியமானது லின்க்தான்.. மறந்திராதீங்க கண்ணன்..
//

இ சா அவர்களே,

இதுபோல் நிறைய அனுபவம் எனக்கு இருக்கிறது. கூத்து பட்டரை போல் நடக்கும்.

தகவல் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//எல்லா எம்.எல்.எம் நிறுவனங்களும் இதைத்தான் சொல்கின்றன. அப்ப எத்தன கம்பெணி தான் டாப் 5 க்குள்ள இருக்கு?
:))))//

எல்லாமே டாப் 5ல் நெருக்கமாக இருக்கும் போல தெரிகிறது.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
ஒரு ஹலோ சொல்லி வைப்பபோமே என்று நீண்ட நாட்களாக உங்கள் நம்பரை நான் கூட தேடிக்கொண்டிருக்கிறேன். MLM தொல்லை இல்லை - பயம் வேண்டாம்.
//

சுல்தான் ஐயா,
நண்பருக்கு இல்லாதா நம்பரா ? மெயில் முகவரி தான் உங்களுக்கு தெரியுமே, மெயிலை போடுங்க அனுப்புகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
இவங்களயெல்லாம் பாத்தாலே ஓடிப் போயிரனும். இல்லைன்னா நம்மளை ஓட வெச்சிருவாங்க. இதெல்லாம் நம்பாதீங்க. நம்பாதீங்க. நம்பாதீங்க.
//

ஜிரா,

வீடு தேடி வந்த பிறகு எங்கே ஓடுவது.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...
http://sathyarajkumar.com/hosting/
//

பார்த்தேன் அதே கதைதான் இங்கு உரை நடையில்.
:)

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

(என்னுடைய பின்னூட்டம் எங்கே? மீண்டும் இடுகிறேன்):

உங்கள் அனைவருக்கும் நான் பரிந்துரைப்பது, "DON'T SAY YES WHEN YOU WANT TO SAY NO" என்கிற புத்தகம்.

இப்படி நன் எழுதுவது கூட ஒருவகை ஸெங்கோ வியாபார நுணுக்கம் போலும் என்று கேள்வி கேட்கும் பக்குவம் உள்ளவர்களுக்கு அந்தப் புத்தகமும் தேவையில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கோவி.கண்ணன்,

(என்னுடைய பின்னூட்டம் எங்கே? மீண்டும் இடுகிறேன்):

உங்கள் அனைவருக்கும் நான் பரிந்துரைப்பது, "DON'T SAY YES WHEN YOU WANT TO SAY NO" என்கிற புத்தகம்.

இப்படி நன் எழுதுவது கூட ஒருவகை ஸெங்கோ வியாபார நுணுக்கம் போலும் என்று கேள்வி கேட்கும் பக்குவம் உள்ளவர்களுக்கு அந்தப் புத்தகமும் தேவையில்லை.
//
ரத்னேஷ்,

நிஜமாகவே இந்த இடுகைக்கு பின்னூட்டம் வரவில்லை.

:(

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்