பின்பற்றுபவர்கள்

22 நவம்பர், 2007

திரை(மறைவு) ஊடகம் என்னும் மகா நடிகன் !

சிறுபாண்மை பெரும்பாண்மை என்ற சொல்லாடலில் எனக்கு விருப்பம் இருப்பதில்லை. உடன்படுவதில்லை. ஆனால் சமூகங்கள் அவ்வாறாக வலிய அடையாளப்படுத்தப்படுகின்றன. இனம் அல்லது சாதி, மதம் என பிரித்து அறிய எப்படி அவற்றின் ஒற்றை தன்மையை [எனக்கும் இதுபோன்ற சொற்கள் வருகிறது :) ]. சுட்டி வேறுபாடு காட்டப்படுகிறதோ, அதே போல் பிரித்து அறியப்படும் இனம், மதம் , சாதியும் தம்மை ஒரு குழுவாக 'இனம்' காட்டிக்கொள்ள அதில் உள்ள தனித்தன்மைகள் காரணிகளாக அமைந்திவிடுகின்றன. ( இவை உடல் அரசியலா, மன அரசியலா, வெறும் உளவியல் அரசியலா ? அந்த ஆராய்ச்சியை நண்பர் ஜமாலன் மற்றும் பாரி.அரசுக்கு அவர்களுக்கு விட்டுவிடுகிறேன்)

திரைப்படங்கள் ஆகட்டும், சின்னத்திரை நெடும்தொடர்(மெகா சீரியல்)கள் ஆகட்டும் அவை பெரும்பாண்மை சமூகத்தை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றன. (சின்னத்திரைகளில் குறிப்பாக டிடி யில் ஆரம்ப காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கதைகள், அவர்கள் குடும்பத்தில் நடப்பவை தான் மிக்கவையாக வந்து எரிச்சலை ஏற்படுத்தியது. அதன் பிறகு வேறு வழியின்றி திருத்திக் கொண்டுள்ளது). ஒருபடத்தின் கதை நாயகன் என்பவனது பெயரும், கதையும் இந்தியாவில் 'இந்து' தன்மை வாய்ந்தாகவே இருக்கிறது. விஜய் என்னும் கிறித்துவ நடிகர் கதை நாயகனாக நடித்தாலும் ஒன்றில் கூட அவர் கிறித்துவ பெயரில் நடிக்க முடியாத நிலைமை. மசாலப்படங்களுக்கும் கதை நாயகர்களின் பெயருக்கும் என்ன தொடர்பு ? இருந்தாலும் 'இந்து' பெயரை வைத்துதான் எடுக்கின்றனர். திரை உலக ஜம்பவான்கள் கூட படம் எடுக்கும் போது இந்து இளைஞன் கிறித்துவ / இஸ்லாம் இளம்பெண் அதனால் வரும் புரட்சிக்காதல் என்ற அளவில் தான் கிறித்துவ / இஸ்லாமிய மதங்கள் இயக்குனரின் புரட்சிச் சிந்தனையை சொல்ல வருகின்றன. ( அதற்கும் மாற்றாக இஸ்லாமிய / கிறித்துவ இளைஞன், 'இந்து' பெண் என்று எடுக்க முன்வரமாட்டார்கள் ). மற்றபடி எந்த இயக்குனரும் இயல்பான காதல் கதையிலோ, வேறு மசாலா கதையிலோ அல்லது கலைப்படங்களிலோ கிறித்து / இஸ்லாமிய பெயர்களில் உள்ள பாத்திரங்களை கதை நாயகர்களாக படைப்பது இல்லை. நடப்பு (நிஜ) வாழ்க்கையில் எத்தனையோ உண்மை கதை நாயகர்கள் அப்துல் கலாம், ஏ ஆர் ரஹ்மான் போன்று உயரத்தில் இருக்கிறார்கள்.

எல்லா துறைகளிலும் எல்லா மதத்தினரும் இருக்கின்றன. திரை துறையில் கூட இயக்குனர்கள், நடிகர்கள், இசை அமைப்பாளர்கள் பல மதங்களை சேர்ந்தவராக இருக்கின்றன. அமீர், பாசில் போன்ற இஸ்லாம் சமூகத்து இயக்குனர்கள் உள்ளனர், மம்முட்டி, இராஜ்கிரன் போன்ற இந்துமதம் சாராத நடிகர்கள் உள்ளனர். பொதுவாழ்க்கையில் எந்த மதத்துக்காரராக இருந்தாலும் சமூகத்தில் பொதுவாக எல்லோரும் சந்திப்பவற்றைத்தான் எல்லா மதத்தினரும் சந்திக்கிறார்கள். திரைப்படம் என்ற ஊடகத்தில் காட்டப்படும் பல கதைகளில் மதம் தொடர்புடைய எதுவும் இல்லாவிட்டாலும் அதில் 'இந்து' பெயரை வைத்தே கதை நகர்த்தப்படுகிறது.

ரஜினி காந்த் நடித்த 'பாட்சா' திரைப்படத்தை எடுத்துக் கொண்டால் அவரது பெயரான மாணிக்கம் என்பதை துறந்து நண்பனின் பெயரான 'பாட்சாவை' வைத்துக் கொள்வார். ஒரு ரவுடியாக காட்டுவதற்கு இஸ்லாமிய பெயரும், சாதுவாக காட்டுவதற்கு மாணிக்கம் என்ற பெயரையும் பயன்படுத்தி இருப்பார்கள்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படங்களிலெல்லாம் ரீனா, ரீட்டா, ரோஸி ஆகிய கிறித்துவ பெண் பெயர்களை ஓட்டலில் நடனமாடுவதாக காட்டப்படும் பாத்திரங்களுக்கு வைத்திருந்தார்கள். தற்பொழுது இப்படியெல்லாம் வருவதில்லை. அதைப் பார்பவர்களுக்கு ஓட்டலில் நடனமாடும் பெண்கள் எல்லாம் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது கிறித்துவ பெண்கள் ஓட்டலில் நடனமாடுவார்கள் என்ற எண்ணம் தானே வரும். திரைக்கு வெளியே அரபு நாடுகளுக்கு கலைகுழுக்களாக சென்று ஷேக்குகளுக்கு ஸ்பெசல் ஆட்டம் போடுபவர்கள், மகாபலிபுரம் சாலைகளிலும், டிஸ்கோத்தே கிளப்புகளின் ரைடுகளில் சிக்குபவர்களில் கிறித்துவர்கள் மட்டுமே இல்லை என்பது வேறு விசயம் :). குறிப்பாக கடத்தல் காரன், சமூக பகையாளன் போன்ற பாத்திரங்களுக்கு இஸ்லாமிய, கிறித்துவ பெயர்களை வைப்பது இன்னும் நடைமுறையில் தான் இருக்கிறது. :(

மதநல்லிணக்கம், இந்தியன் என்ற ஒருமைப்பாடு எல்லாம் வாய்கிழிய பேசுகிறோம், திரைத்துரையில் உரையாசிரியர்கள் (வசன கர்த்தா) மற்றும் இயக்குனர்களுக்கும், நடிகர்களும் எல்லாவித சமூக அநீதிகளையும் போட்டு கிழிக்கிறார்கள். போட்டு தாக்குகிறார்கள். ஆனால் திரைக்கதைகளில் பெறும்பாண்மை 'இந்து' அரசியல் என்னும் கிழிபடாத கோர முகம் அவர்களின் வயிற்றுப்பாடு என்ற கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வெளியில் தெரியாமல் நடித்துக் கொண்டு இருக்கிறது.

13 கருத்துகள்:

RATHNESH சொன்னது…

நல்ல கருத்துக்கள்.

கூடவே இதற்கு மறுதலையான எண்ணங்களும் எழக் கூடும். உதாரணமாக எந்தத்திரைப்படத்திலும், கிறித்தவன் இறக்கும் முன் சிலுவைக் குறி இட்டுக் கொள்வதாகவும் இஸ்லாமியர் இறக்கும் முன் லாயிலாஹா என்று சொல்லிவிட்டு இறப்பதும் தவறாமல் காட்டப்படுகிறதே. இது இந்திப்படங்கலுக்க்கும் பொருந்தும். திரைப்படங்களில் இறக்கும் ஒரு இந்து கூட கடவுள் பக்தி உடையவனாக இருக்க மாட்டானா?

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியுது :))

கொஞ்ச நாளைக்கு முன்னாடி பெண்களை முட்டாளா திரைபடத்தில் காண்பிக்கக்கூடாது என்று "லஷ்மி" அடம்பிடித்தார்கள்.

ஏற்கனவே தமிழ்நாட்டுல என் சாதிய திட்டியிருக்கிறான், கேவலமாக காண்பித்திருக்கிறான் என்று வழக்கு தொடுக்கிறார்கள்.

இனிமே கதை எழுதிவிட்டு அதுல சாதி அடையாளமிருக்கா!, மத அடையாளமிருக்கா! யாரெல்லாம் வழக்கு போடுவார்கள் என்று யோசிக்க வேண்டிய அவசியத்திற்க்கு கொண்டு வருவீர்கள் போலிருக்கு!

பாத்திரபடைப்பு, காட்சியமைப்பு இரண்டிலும் தமிழ்சினிமா மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் இது மாதிரியான குறுக்கு சிந்தனைகள் நல்ல ஆரோக்கியமான வளர்ச்சியை தருமா என்று தெரியவில்லை!

படம் ஓட வேண்டும் என்பதற்க்காகவே முன்பு விஜயகாந்த், ரஜினிகாந்த் இப்படி யாரை ஜெயில்ல போட்டாலும் 786 என்ற நம்பர் உள்ள சட்டை போட்டுதான் ஜெயில்ல போடுவார்கள்.

இப்படி இந்த இடுகை சினிமாவின் கதாபாத்திரங்களின் பெயர்களை மத சம்பத்தப்படுத்தி பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை!

Bruno_புருனோ சொன்னது…

//விஜய் என்னும் கிறித்துவ நடிகர்//

John Kennedy
Justin Selvaraj
தெரியுமா

கோவி.கண்ணன் சொன்னது…

//Doctor Bruno said...
//விஜய் என்னும் கிறித்துவ நடிகர்//

John Kennedy
Justin Selvaraj
தெரியுமா
//

Doctor Bruno,
நீங்கள் குறிப்பிட்டது யாரை ? விஜயும், விஜய் அப்பா சந்திர சேகரின் உண்மை பெயரா ?

இருக்கலாம் !
:)

TBCD சொன்னது…

பெரும்பான்மை மக்களை குறிவைத்து எடுக்கப்படும் படங்கள் இப்படித் தான் இருக்கும். பாரதிராஜா போல் குறுகிய எண்ணம் இல்லாமல், தன் சமூகத்தை விட்டு வெளியில் வந்து படம் எடுக்கும், அமிர் பாராட்ட படவேண்டியவர். திரைப்படங்களிலே, நீங்கள் பார்ப்பது பெரும்பான்மை சமூகத்தின் பிரதிபலிப்பு...

திரையிலே, முதலியார்களும், பிள்ளவாழ் கோலோச்சுனாங்க..கொஞ்ச காலம், தேவர்களும், கவுண்டர்களும் கோலோச்சுனாங்க..எப்பவுமே ஐயருங்க...கோலோச்சுறாங்க...இதுல நீங்க...சிறுபான்மையினரை பேச வந்துட்டீங்க...பேசப்படாமலே...இருக்கிற கதைய பத்தி யாரும் பேசுறதில்லை...நம்பியாரின்...,மாயாண்டி..அடிக்க மட்டும் தான் லாயக்கு...அவனுக்கு கதையே கிடையாதா...முனியனுக்கு...தேங்காய் பறிக்கிறதை விட்டு வேற எதுவுமே தெரியாதா...

பேசப்படாதது..ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகக் கதை தான்...கதையிலே கூட தாழ்த்தப்பட்டவன், உயர் சாதி பெண்ணை தொட முடியாதபடி கதை பண்ணுறானுங்க...அது தான்..இப்போதைக்கு தமிழ் நாட்டிலே, சிறந்தப் படமா பேசப்படுது.(காதல், பாரதி கண்ணம்மா)..அப்படி படம் எடுத்தா நீங்க பாப்பீங்களா...எத்தனை பேரு பாப்பாங்க...

அந்த வகையிலே, கூடல் நகர்ன்னு படத்திலே, அடித்தட்டு மக்களோட காதல் அனுபவத்தை தொட முயற்சிப் பன்னியிருப்பாங்க...

அங்கே ஏகப்பட்ட ஓட்டை...எதை சொல்லுறது..எதை விடுறது...

கோவி.கண்ணன் சொன்னது…

//படம் ஓட வேண்டும் என்பதற்க்காகவே முன்பு விஜயகாந்த், ரஜினிகாந்த் இப்படி யாரை ஜெயில்ல போட்டாலும் 786 என்ற நம்பர் உள்ள சட்டை போட்டுதான் ஜெயில்ல போடுவார்கள்.//

அரசு,

தீ என்ற ரஜினிகாந்த் - சுமன் நடித்த படத்தில் 786 எண் போட்ட படத்தைத் தான் ரஜினி சிறை பணியனைத்தான் போட்டு இருப்பார்.

விஜயாந்தின் பல படங்களில் இஸ்லாமியரின் சடலத்தை சுமப்பதாக காட்சிகள் வரும். கள்ளழகர் என்ற படத்தில் கதைபடி அவர் ஒரு இஸ்லாமியர் என்பது கடைசியில் வரும் காட்சி.

//
இப்படி இந்த இடுகை சினிமாவின் கதாபாத்திரங்களின் பெயர்களை மத சம்பத்தப்படுத்தி பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை!
//

பெயர்களை ஏன் பொதுவாக பார்க்கக் கூடாது, ஏன் இந்து தவிர்த்து வேறு பெயர்களை மதம் சாராத கதைகளுக்கு வைப்பதில்லை என்று தான் கேட்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Collapse comments

RATHNESH said...
நல்ல கருத்துக்கள்.

கூடவே இதற்கு மறுதலையான எண்ணங்களும் எழக் கூடும். உதாரணமாக எந்தத்திரைப்படத்திலும், கிறித்தவன் இறக்கும் முன் சிலுவைக் குறி இட்டுக் கொள்வதாகவும் இஸ்லாமியர் இறக்கும் முன் லாயிலாஹா என்று சொல்லிவிட்டு இறப்பதும் தவறாமல் காட்டப்படுகிறதே. இது இந்திப்படங்கலுக்க்கும் பொருந்தும். திரைப்படங்களில் இறக்கும் ஒரு இந்து கூட கடவுள் பக்தி உடையவனாக இருக்க மாட்டானா
//

ரத்னேஷ்,
'நான் அவனில்லை' படத்தில் கூட கடைசியாக இறக்கும் தருவாயில் ஜீவன் சிலுவை குறி போடுவார்.
அதுபோல் குறியீட்டால் காட்டப்படும் காட்சியில் நடிக்கும் பாத்திரங்களை மத அடையளாத்துக்காக காட்டுகிறார்கள், பெயர் அடையாளத்துக்கு அல்ல. எனவே அவை இடம்பெறுவதை இயக்குனர்கள் தவிர்க்க முடியாது.
:)

இந்து கூட கடவுள் பக்தி உடையவனாக இருக்க மாட்டானா ? -பக்திப்படத்தில் நீங்கள் சொல்வதை காட்டுவார்களே.
:)

Bruno_புருனோ சொன்னது…

Doctor Bruno,
நீங்கள் குறிப்பிட்டது யாரை ? விஜயும், விஜய் அப்பா சந்திர சேகரின் உண்மை பெயரா ?

இருக்கலாம் !
:)

Vijay's name is Joseph Vijay. If you see the Chandrasekhars movies in early 1990s, his name will come in the title as Producer / Co - Producer etc

http://en.wikipedia.org/wiki/John_Kennedy_%28actor%29

http://en.wikipedia.org/wiki/S._J._Suryah

How is this :) :) :) :) :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Doctor Bruno said...


Vijay's name is Joseph Vijay. If you see the Chandrasekhars movies in early 1990s, his name will come in the title as Producer / Co - Producer etc

http://en.wikipedia.org/wiki/John_Kennedy_%28actor%29

http://en.wikipedia.org/wiki/S._J._Suryah

How is this :) :) :) :) :)
//

Doctor Bruno,

நீங்கள் சுட்டியுள்ள சுட்டியைப் பார்த்தால் நடிகர்களே 'இந்து' பெயரில் தான் ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள். :(

தகவல்களுக்கு நன்றி !

Me சொன்னது…

அந்த காலத்திலேயே நம்பியாரோட அடியாளுங்களுக்கு எல்லாம் ராபர்ட், தாமஸ், பீட்டர், முனுசாமின்னுதான் பேரு வெச்சிருக்காங்க.

எந்த படத்துலயாவது சமூகவிரோதிகளுக்கு பார்த்தசாரதி, பட்டாபி னு பேரு வெச்சு பாத்திருக்கீங்களா?.

முத்துகுமரன் சொன்னது…

//இப்படி இந்த இடுகை சினிமாவின் கதாபாத்திரங்களின் பெயர்களை மத சம்பத்தப்படுத்தி பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை!//

தொடர்ச்சியாக உங்களை வாசித்து வருபவன் என்ற முறையில்ஏமாற்றமாக இருக்கிறது பாரி.அரசு.

படைப்புச்சுதந்திரம் என்னும் போர்வை கொண்டு தான்(தாங்கள்)விரும்புவதை பொதுப்புத்தியாக்கி நடப்பில் இயல்பானதான ஒன்றைப் போன்று செய்வது காலம் காலமாக நடந்துவரும் ஒன்று.

பெயர்களுக்குள் உள்ளாடும் அரசியலை உணர்ந்து கொள்ளவேண்டும். பெயரில் என்ன இருக்கிறது என்று எளிமையாக விட்டால் அது எல்லாவற்றிலும் மெல்ல மெல்ல ஊடுருவி விடும். அங்கவை சங்கவை பொங்கவை என்பதும் கூட பெயர் தொடர்பான பிரச்சனைகள்தான். பெயரில் உணர்வுகள் கலந்திருக்கின்றன.

குறுக்கு சிந்தனையை விட்டு வெளியே வரச்சொல்வதுதான் கோவி.கண்ணனின் பதிவின் நோக்கமே :-)

நல்லவனும் கெட்டவனும் எல்லா மதங்களிலும் இருக்கிறான். நன்மையாளர்கள் எல்லாம் ஒரு மதம், தீயவர்கள் எல்லாம் வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சிந்திப்பதுதான் குறுகலான பார்வை. அதை சுட்டி காட்டுவதில் தவறு இல்லை. தீ என்றால் சுட்டுவிடாது

குட்டிபிசாசு சொன்னது…

பாவமன்னிப்பு படத்தில் சிவாஜியும், சிரித்துவாழ் வேண்டும் படத்தில் எம்ஜிஆரும் முஸ்லீம் பாத்திரமாக நடித்திருந்தார்கள். சிவாஜி பல படங்களில் கிருத்துவராக நடித்திருக்கிறார். (எ.கா:வெள்ளை ரோஜா, ஞானஒளி).

எல்லா மத சூழல்களிலும் திரைப்படங்கள் வரலாம். ஆனால் ஒழுங்காக காட்டவேண்டும். அதுதான் முக்கியம். குறிப்பாக, அந்த சமூகத்தவர்கள் அதை எடுத்தால் தான் உண்மையான தோற்றம் வெளிப்படும் என்பது என்னுடைய கருத்து. (மணிரத்னம் சேரியைப் பற்றியோ, முஸ்லீம் பற்றியோ எடுக்க இயலாது, மேட்டுக்குடியைப் பற்றி எடுக்கத்தான் பொருந்துவார் என்று நினைக்கிறேன்.)

RATHNESH சொன்னது…

காபரே டான்ஸ் போன்ற மாடர்ன் விஷயங்களோடு பொருத்தமாக இருப்பது மேற்கத்திய பெயர்கள். ஸ்டெல்லா, மர்லின் போன்றவை. மலர்விழி என்ற பெயருடனோ மகாலட்சுமி என்கிற பெயருடனோ ஒரு காபரே டான்ஸரை எண்ணிப் பார்க்க முடியாது.

கடத்தல் என்று வரும் போது வெளிநாட்டுக்காரன் என்று காட்ட வேண்டும். ஒட்டு மொத்த வெள்ளைக்காரன் என்று காட்டுவதை விட துபாய் ஷேக் உடையில் காட்டுவதன் மூலம் எளிதாக கிராமத்தவருக்கும் புரியவைக்க முடியும் என்பதால் தான் அதனையும் கடைப்பிடித்தார்கள். இன்னும் ராணுவத்தில் இருந்து திரும்புபவன் என்று காட்ட அவனை கிராமத்திலும் ராணுவ உடையிலேயே காட்டுவதில்லையா? இவ்வளவு ஏன், கோவி.கண்ணனைப் பற்றி நான் ஒருபடம் எடுத்தால், அவரை சிங்கப்பூர் கண்ணாடியோடு தான் இரவிலும் காட்டவேண்டி இருக்கும்.

786 செண்டிமெண்ட்டை அமிதாப்பச்சனின் படங்களில் மிக அதிகம் பார்க்கலாம். எத்தனையோ முறை அந்த எண் போடப்பட்ட வில்லையினால் தான் குண்டடி படாமல் தப்பி இருப்பார். எனக்குத் தெரிந்து இந்துக் கடவுளின் டாலரால் எந்தக் கதாநாயகனும் காப்பாற்றப்பட்டதாக எடுக்கப்படவில்லை. ஒரே ஒரு அரசியல்தலைவர் கிருஷ்ணசாமி காப்பாற்றப்பட்டதாக்ச் சொன்னார்கள். (அந்த டாலரில் இருந்தது ராமனா முருகனா என்று திருப்பதி கோயில் சர்ச்சை போல் நாடகமாக்கிக் காமெடி ஆக்கி விட்டர்கள் என்பது வேறு விஷயம்)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்