பின்பற்றுபவர்கள்

17 மே, 2006

இரண்டு ரூபாய் தமிழ்முரசு 16 பக்கங்களாக குறைந்தது

சன் குழுமத்தின் மாலை நாளிதழான தமிழ் முரசு நேற்றுவரை 20 பக்கங்களுடன் வெளிவந்த மாலை நாளிதழ் இன்று முதல் 4 பக்கங்களை குறைத்து 16பக்கங்களில் வெளிவருகிறது.

தேர்தல் முடிந்ததும், நோக்கம் நிறைவேறிவிட்டதால் பக்கங்கள் குறைக்கப் பட்டதாக நினைக்க முடிகிறது. தினகரனும் 1ரூபாயில் நிற்குமா என்று தெரியவில்லை. எல்லாம் அந்த சூரியனுக்கே வெளிச்சம்

இன்றைய முக்கிய செய்தி: சன் தொலைக்காட்சியின் கோலங்கள் தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ரேத்தா என்ற சின்னத்திரை நடிகை தற்கொலை.


மேலும் படிக்க
இன்றைய தமிழ்முரசு படிக்க கீழ்க் கண்ட தொடுப்புகளுக்கு செல்க

http://epaper.tamilmurasu.in/2006/may/17/1.html
to ....
http://epaper.tamilmurasu.in/2006/may/17/16.html

12 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சரக்கு இருந்தாதானே போடமுடியும். வேற வழி, குறைச்சிட்டாங்க.

பெயரில்லா சொன்னது…

என்னமோ தமிழ்முரசு இதுக்கு முன்னாடி இருபது பக்கத்துக்கும் நாட்டுக்குத் தேவையான முக்கியச் செய்திகளை மட்டும் தந்த மாதிரி...
அட நீங்க வேற... நாலு பக்கம் குறைந்ததால அப்படி என்ன நடந்து போச்சு...

பெயரில்லா சொன்னது…

5 ஆண்டுக்கு பிறகு மறுபடியும் 1தமிழ் முரசு இலவசமாக வழங்கப்படும்.

பெயரில்லா சொன்னது…

ஒரு ரூபாயை விலை உயர்த்தினால் தானே குத்தம் சொல்லுவீங்க. இப்போ என்ன செய்வீங்க.. இப்போ என்ன செய்வீங்க?!

பெயரில்லா சொன்னது…

சென்ற ஆட்சியின் போது, அரசுக்கு எதிராக இணையதளங்களிலோ அல்லது வேறு ஏதாவது ஊடகங்கள் மூலமாகவோ கிடைக்கும் தகவல்களை பெரிதுபடுத்தி செய்திகள் வெளியிட்டு வந்தது. இந்த ஆட்சியில் அவ்வாரு அவர்களால் செய்யமுடியாதே!. ஆண் விபச்சாரம் போன்ற இன்வெஸ்டிகேஷன் ரிப்போர்ட்?! எல்லாம் இனிமேல் வெளியிட்டால் ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்பட்டுவிடுமே!.

கோவி.கண்ணன் சொன்னது…

//சரக்கு இருந்தாதானே போடமுடியும். வேற வழி, குறைச்சிட்டாங்க. //
இது நாள்வரை சரக்கு இருந்த மாதிரி ஒப்புக்கொள்வது மாதிரி தெரியுது :)

கோவி.கண்ணன் சொன்னது…

//அட நீங்க வேற... நாலு பக்கம் குறைந்ததால அப்படி என்ன நடந்து போச்சு...//
வாங்குறவங்களுக்கு நஷ்டம் தான் முன்பு போல எடை நிக்காதே :)

கோவி.கண்ணன் சொன்னது…

/5 ஆண்டுக்கு பிறகு மறுபடியும் 1தமிழ் முரசு இலவசமாக வழங்கப்படும். //
திமுக சார்பில் உங்களுக்கு பாராட்டு உண்டு 5 வருடம் நீடிக்கும் என்று ஆருடம் சொல்கிறீர்களே. அம்மா தான் கோவிப்பாங்க, பெண்பாவம் பொல்லாதது :)

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்போ என்ன செய்வீங்க.. இப்போ என்ன செய்வீங்க?! //
ஹி ஹி கவர்ச்சி படத்தை எடுக்காதவரை, மொத்தமாக 2 பக்கமாக வந்தாலும் வாங்காமல் போய்விடுவோமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//சென்ற ஆட்சியின் போது, அரசுக்கு எதிராக இணையதளங்களிலோ அல்லது வேறு ஏதாவது ஊடகங்கள் மூலமாகவோ கிடைக்கும் தகவல்களை பெரிதுபடுத்தி செய்திகள் வெளியிட்டு வந்தது//
தேர்தல் வரையில் நம் பதிவுகளைப் போல் தான் அவர்களும் செயல்பட்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நம்முடைய உரிமையில் கைவைத்த அவர்களின் செயல் கண்டிக்கதக்கது. :)

பெயரில்லா சொன்னது…

தேன்கூட்டில் இந்த அறிவிப்பு:

"இரண்டு ரூபாய் தமிழ்முரசு 16 பக்கங்களாக குறைந்தது"
By காலம்

இதுவே ஒரு புதுக் கவிதை மாதிரி இல்லை? ;-)

பெயரில்லா சொன்னது…

தமிழ் முரசு
பதினாறு பக்கம் மட்டுமே
கவர்ச்சி பக்கம் உண்டு

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்