பின்பற்றுபவர்கள்

1 ஜூன், 2012

ஷக்கலக்கா பேபி !

சீனமொழியை கற்றுக் கொள்ளும் எனது ஆர்வத்தில் கொஞ்சமும் தொய்வின்றி தொடர்ந்து கற்றுக் கொண்டுதான் வருகிறேன், சீனர்கள் மாண்டரின் மொழியில் பேசுவதில் ஏறக்குறையை 60 விழுக்காடு அவர்கள் பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்ற அளவுக்கு சீனமொழித்திறன் என்னுள் வளச்சி பெற்றுள்ளது. பேசுவது மட்டுமின்றி அம்மொழியை படிப்பதற்கும் கற்றுக் கொண்டால் ஒரளவும் முழுமை அடைய முடியும் என்று நினைத்து தற்பொழுது சீன எழுத்துகளையும் மனப்பாடம் செய்து வருகிறேன், சீன எழுத்துகளை மனப்பாடம் தான் செய்யமுடியும், ஏறக்குறையை 80,000 எழுத்துகளில் இன்றைக்கு செய்தித்தாளில் அல்லது அன்றாடம் எழுத்துப் புழக்கத்தில் பயன்படுபவை என்பதாக சுமார் 2000 சீன எழுத்துகள் வரை அவர்கள் பயன்படுத்துகிறார்கள், அவை அனைத்தையும் சொல்குறியீடாக மனப்பாடம் செய்து கொண்டால் தான் சீன மொழியைப் படிக்க முடியும். சீன / கொரிய / ஜப்பானிய மொழியின் எழுத்துகள் தான் உலகிலேயே மிகுதியான எழுத்துகளைக் கொண்ட மொழி. கொரிய / ஜப்பானிய எழுத்துகளுக்கு சீனமொழி எழுத்துகளே அடிப்படை. இந்திய மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கும் பிறமொழிகளைக் கற்றுக் கொள்வதற்கும் பெரிய வேறுபாடு என்னவென்றால் இந்திய மொழிகளைக் கற்றுக் கொள்ள வெறும் மூன்று மாதமே போதும் அதன் பிறகு தெரிந்ததை வைத்து நாம் மேலும் மேலும் குறிப்பிட்ட மொழி அறிவை கூட்டிக் கொள்ள முடியும், கூர்ந்த கவனிப்பும் ஆர்வமும் இருந்தால் ஆங்கிலம் உள்ளிட்ட மற்றொமொழிகள் பேச்சுவழக்காகவும் கற்றுக் கொள்ள முடியும், ஆனால் அவை அறிமுக மொழியாக கற்றுக் கொள்ளும் பொழுது ஓரளவு கற்றுக் கொள்ளவே ஓர் ஆண்டுக்கு மேலாக ஆகும்.

*****

இன்னிக்கு காலையில் சிங்கப்பூர் சீன வானொலி நிகழ்ச்சியின் பாடல்களைக் கேட்டுக் கொண்டே அலுவலகம் வந்தேன்,  ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் முதல்வன் படத்தில் சுஷ்மிதா சென் பாடும் பாடலாக வெளிவந்த ஷக்கலாக்க பேபி சைனீஸ் பாடல் வடிவில் ஒலிப்பரப்பானது. ஒரு தமிழன் இசையமைத்தப்பாடல் சீனமொழியிலும் எடுத்துக் கொள்ளப்பட்டது பெருமையானது. சீனப்பாடலைக் காப்பி அடித்த ரஹ்மானின் இசை என்று யாராவது மாற்றி எழுதி இருக்கிறார்களா ? என்றுத் தேட, இணையத்திலும் அவ்வாறு இல்லை. இப்பொழுது தெரியவருவது போல் ஆண்டு தேதி வழக்குகள் முன்பு இல்லாததால் யாரை யார் காப்பி அடித்தார்கள் என்பதே தெரியாத நிலையில் உரியவருக்கானப் பெருமை என்பவையெல்லாம் வரலாறு எழுதுபவர்களின் கைகளில் தான் இருந்தது, பாட்டும் நானே பாடலும் நானே பாடும் உனை நான் பாடவைத்தேனே - என்கிற திருவிளையாடல் பாடலை இயற்றியவர் ஒரு இஸ்லாமியர் ஆனால் அது கண்ணதாசன் பாடல் என்று சொல்லப்படுகிறது. 'அசையும் பொருளும், இசையும் நானே.....' என்பது அப்பாடல்வரிகளில் ஒன்று இஸ்லாமியர்களின் இணை வைத்தல் பற்றிய கருத்து நாம் அறிந்தவை தான் என்பதால் ஒரு இஸ்லாமியர் கற்பனைக்கும் கூட அசையும் பொருள் எல்லாம் இறைவன் என்ற பொருள் தரும் (இறைவனுக்கு இணை வைக்கும்) வரிகளை எழுதி இருக்க வாய்ப்பில்லை என்பது எனது கருத்து, எனது கருத்து உண்மை இல்லை என்றாலும் கூட அதை ஒரு இஸ்லாமியர் எழுதினார் என்பதற்காக மற்ற இஸ்லாமிய பெருமைப்படும் வரிகளாக அதில் எதுவும் இல்லை என்பது அது குறித்து பெருமை பேசும் இஸ்லாமியருக்கான செய்தி. ஏ ஆர் ரஹ்மான் சம்பாதித்து போதும் இசை அமைப்பதை நிறுத்தலாம், இஸ்லாத்திற்கு துரோகம் செய்வதை ரஹ்மான் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று வாஹாபியர்களின் (கண்டனக்) குரலாக சுவனப்பிரியனே குரல் எழுப்பியுள்ளார். இசைக்கு மனிதன் அடிமையாவதை இஸ்லாம் எதிர்க்கிறது என்கிற அடிப்படையில் அவர் ஏ ஆர் ரஹ்மானை ஏற்கனவே நிறைய சம்பாதித்திவிட்டார் இனி இஸ்லாமிய வளர்ச்சி பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துவிட்டு இசைக்க ரஹ்மான் கட்டாய ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்கிறார் சுபி.


திரும்பவும் சக்கலக்கா பேபிப் பாடலுக்கு வருவோம் இந்தப் பாடல் சிங்கப்பூர் பாப் பாடகி ஒருவரால் பாடப்பட்டு ஆல்பமாக வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. யுடியூபில் இப்பாடல் காணொளியாகக் காணக்கிடைக்கிறது. சிலர் அப்பாடல் குறித்து கருத்து சொல்லி இருக்கிறார்கள். இந்தப்பாடல் முதல்வன் படத்துப் பாடல் பின்னர் ஏர் ரஹ்மானின் பாம்பே ட்ரீம்ஸ் இசைத் தொகுப்பில் (ஆல்பம்) இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார், விக்கிப்பீடியாவிலும் இந்தத் தகவல் உண்மை என்றே கட்டுகிறது, யூடியூபில் இடம் பெற்றிருக்கும் கருத்துகள் ஒன்றில் இப்பாடல் கவனமாக ஏர் ரஹ்மான் பேரைத் தவிர்த்துவிட்டு மேற்கத்திய இசையில் பாம்பே ட்ரீம்ஸின் பாடல் பின்னர் முதல்வன் படத்தில் காப்பியடிக்கப்பட்டதாக ஒருவர் கருத்துவிட்டுள்ளார். பாம்பே ட்ரீம்ஸ் இசை அமைத்ததும் அதே தமிழனாக இருந்தாலும் அந்தப் பாடல் தமிழ் படத்தில் இடம் பெரும் முன் இந்திப்பாடலாக வந்ததுதான் என்பதாக மட்டம் தட்டியுள்ளனர். இப்படியெல்லாம் கூட தமிழனக்கு எதிர்ப்பு இருக்குமா ? வெறுப்பாக இருந்தாலும் வியப்பாகவும் இருக்கிறது. ஒரு தகவலை வெளி இடுபவர்கள் குறைந்தப்பட்சம் உண்மைத் தன்மை குறித்த எண்ணமே இல்லாமல் எழுதி-விடுகிறார்கள்.

நமக்கு தெரியும் அண்மைய காலத்திலேயே தமிழர்கள் குறித்த தகவல்கள் வரலாற்றில் திரிக்கப்படும் போது, நமக்கு தெரியாத காலத்தில் நடைபெற்றவற்றின் வரலாறுகளாகக் காட்டப்படுவதிலும் இருக்கும் உண்மைத் தன்மைகளை நாம் எந்த ஒரு ஆய்வும் இல்லாமல் ஏற்றுக் கொண்டுவிடுகிறோம் என்பவை துரதிஷ்ட வசமானது :(

14 கருத்துகள்:

வலசு - வேலணை சொன்னது…

//
நமக்கு தெரியும் அண்மைய காலத்திலேயே தமிழர்கள் குறித்த தகவல்கள் வரலாற்றில் திரிக்கப்படும் போது, நமக்கு தெரியாத காலத்தில் நடைபெற்றவற்றின் வரலாறுகளாகக் காட்டப்படுவதிலும் இருக்கும் உண்மைத் தன்மைகளை நாம் எந்த ஒரு ஆய்வும் இல்லாமல் ஏற்றுக் கொண்டுவிடுகிறோம் என்பவை துரதிஷ்ட வசமானது :(
//

:-(

# * # சங்கப்பலகை அறிவன் # * # சொன்னது…

சீன மொழியை சுயமாகக் கற்றுக் கொள்கிறீகளா அல்லது ஏதாவது டவுன்கவுன்சில் உதவி இருக்கிறதா?

நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவன்#11802717200764379909 கூறியது...
சீன மொழியை சுயமாகக் கற்றுக் கொள்கிறீகளா அல்லது ஏதாவது டவுன்கவுன்சில் உதவி இருக்கிறதா?

நன்றி.//

ஆன்லைன் பாடங்கள் POD CAST Mp3 தான், இந்திபிரச்சார சபா மாதிரி இங்கே டவுன்கவுன்சிலில் குறைந்த கட்டணத்திற்கு சொல்லிக் கொடுக்கிறார்களான்னு தெரியவில்லை

suvanappiriyan சொன்னது…

ரஹ்மானின ராக்ஸ்டார் படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும கேட்டவுடன் ஒருவரின் மன நிலை எப்படி இருந்தது என்பதை ஒரு அன்பர் பின்னூடடத்தில் கூறியிருக்கிறார். அதையும் பாருங்கள்.

//While listening to this song, I feel like a aghori smoking ganja
Awesome music by ARR//

அதாவது காசியில் அகோரிகள் எவ்வாறு கஞ்சா அடித்து ஒரு வித மயக்க நிலையில இருப்பார்களோ அந்த நிலையில் தானும் இருப்பதாக இவர் கூறுகிறார். இசையை ஒரு அளவுக்கு மீறி நெசிக்க ஆரம்பித்தால் இதுதான் நிலை.

தருமி சொன்னது…

நமக்கு தெரியாத காலத்தில் நடைபெற்றவற்றின் வரலாறுகளாகக் காட்டப்படுவதிலும் இருக்கும் உண்மைத் தன்மைகளை நாம் எந்த ஒரு ஆய்வும் இல்லாமல் ஏற்றுக் கொண்டுவிடுகிறோம் என்பவை துரதிஷ்ட வசமானது :(


:-)

தருமி சொன்னது…

//திருவிளையாடல் பாடலை இயற்றியவர் ஒரு இஸ்லாமியர்//

யாரவர்?

தருமி சொன்னது…

//இசைக்கு மனிதன் அடிமையாவதை இஸ்லாம் எதிர்க்கிறது //

options:

1.இசைக்கு மனிதன் அடிமையாவதை இஸ்லாம் எதிர்க்கிறது
2.இசைக்கு மனிதன் அடிமையாவதை குரான் எதிர்க்கிறது
3.இசைக்கு மனிதன் அடிமையாவதை முகமதுவின் ஹதீஸ் எதிர்க்கிறது
4. எல்லாமே எதிர்க்கிறது.

? சொன்னது…

அந்த யூடியூப் பின்னூட்டத்தில் தமிழனை மட்டம் தட்ட எழுதப்பட்டது போல இல்லையே. தமிழாகட்டும் இந்தியாகட்டும் மேற்கத்திய இசை தொகுப்பிலிருந்து சுடுவதுதானே நமது வழக்கம். இப்படி சுட்டவர்களுள் தமிழிசை அமைப்பாளர்கள் MSV, இளையராசா, ரகுமான் என அனைவரும் அடக்கம்தானே?

பாம்பே டிரிம்ஸ் இந்திப்பாடல் அல்ல, அது ஆங்கில மேடை இசை நிகழ்வு. அதன் இசையமைப்பும் ரகுமானே என அறியாத போது நமக்கும் மேற்கத்திய இசையை சுட்டுதான் (அ) தழுவிதான் அந்த சீன மற்றும் தமிழ் பாடல்கள் புனையப்பட்டது என்றுதானே தோன்றும்.அதனால்தான் அந்த நபர் அவ்வாறு பின்னூட்டி இருக்கிறார், என நினைக்கிறேன். ஆக அவர் முதல்வன் தெலுங்கு (அ)இந்தி படமாகயிருப்பினும் இவ்வாறே பின்னூட்டி இருப்பார்- give him the benefit of doubt!

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் சொன்னது…

//////பாம்பே ட்ரீம்ஸ் இசை அமைத்ததும் அதே தமிழனாக இருந்தாலும் அந்தப் பாடல் தமிழ் படத்தில் இடம் பெரும் முன் இந்திப்பாடலாக வந்ததுதான் என்பதாக மட்டம் தட்டியுள்ளனர். இப்படியெல்லாம் கூட தமிழனக்கு எதிர்ப்பு இருக்குமா ? //////////
தன்யா பாலகிரிஷ்ணன் என்ற பெங்களூரைச்சேர்ந்த நடிகை 7ம் அறிவு படத்தில்கூட ஸ்ருதியின் தோழியாக வருபவராம் நம் மாநிலத்தையும்,நம்மையும் கேவலமாக பேசியிருக்கிறார் என்பதை http://athirchi.com/?p=17309 படித்துதான் தெரிந்துகொண்டேன்.எனது கண்டனத்தையும் அதில் பதிந்தேன்.தமிழ்மணத்தில் இதுபற்றிய‌ தகவல்களை திரட்டலாம் என்று நோட்டம்விட்டால் இதைப்பற்றி யாரும் எழுதாதது மிகவும் வியப்பாக இருந்த‌து(ஒருவேளை கவனக்குறைவாக என் கண்ணில்படாமல் இருந்திருக்கலாம்).இந்த செய்தியை காட்டிலும் நீங்கள் குறிப்பிடும் செய்தி உண்மையில் ஜுஜூபிதான்.

நம்பள்கி சொன்னது…

///"Shakalaka Baby" is a 2002 single by Preeya Kalidas.[1] The song was composed by A. R. Rahman[1] and was initially featured in his 2002 musical Bombay Dreams. It is a reworked version of the track "Shakalaka Baby" from 1999 Tamil film Mudhalvan, a version of which was also featured in the 2001 Bollywood film Nayak. A Mandarin Chinese pop version of the track sung by Singaporean singer Kelly Poon was featured in her 2007 album In the Heart of the World.///

I have cut and pasted the above from the, hyperlink at Wikipedia, that you provided. Is this wrong?

Wiki also permits you to alter with proof; dispute the existing claims...

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப் பிரியன் சொன்னது…
ரஹ்மானின ராக்ஸ்டார் படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும கேட்டவுடன் ஒருவரின் மன நிலை எப்படி இருந்தது என்பதை ஒரு அன்பர் பின்னூடடத்தில் கூறியிருக்கிறார். அதையும் பாருங்கள்.

//While listening to this song, I feel like a aghori smoking ganja
Awesome music by ARR//

அதாவது காசியில் அகோரிகள் எவ்வாறு கஞ்சா அடித்து ஒரு வித மயக்க நிலையில இருப்பார்களோ அந்த நிலையில் தானும் இருப்பதாக இவர் கூறுகிறார். இசையை ஒரு அளவுக்கு மீறி நெசிக்க ஆரம்பித்தால் இதுதான் நிலை.//

மதவாத போதனைக் கேட்டு, சுவனக் கன்னிகைக்கள் மீது காதல் கொண்டு தற்கொலைப் படையாக மாறி உடலில் குண்டு கட்டி தானும் சிதறி அப்பாவிகளையும் கொனறு போடுவதைவிட இசைக் கேட்பதில் பெரிய ஆபத்தில்லை என்று நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றிங்க ? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆக அவர் முதல்வன் தெலுங்கு (அ)இந்தி படமாகயிருப்பினும் இவ்வாறே பின்னூட்டி இருப்பார்- give him the benefit of doubt!//

உறுதியானத் தகவல் போல் எழுதுவர்கள் பொறுப்பாக அந்தத் தகவல் குறித்த உண்மைத் தன்மைகளுக்கும் சான்று கொடுக்க வேண்டும், அந்த நபர் முதல்வன் படம் வெளியான ஆண்டை ஒப்பிட்டுப் பார்த்துச் சொல்லி இருக்கலாமே.

தருமி சொன்னது…

anbudanbuhari.blogspot.in/2012/06/1.html

வேகநரி சொன்னது…

இந்திய இஸ்லாமியர் கோவிக்கு தெரிவிக்கிறார்
//நமது சென்னை நகரை விட சிறிதே பெரிதான சிங்கப்பூரையும் சவுதியையும் எப்படி ஒப்பிடுகிறீர்கள்? சிறிய நாடுகளில் அனைவரையும் சட்டத்தின் பிடியில் கொண்டு வருவது சுலபமான காரியமே//

ஆஹா! மனிதர்களை அடிமைகளக நினைக்கும் இஸ்லாமிய சவூதி அரேபியாவுக்கு எப்படியொரு சப்பை கட்டுதல்!!! இந்தியாவும் பெரிய நாடு தானே. காட்டுமிராண்டி நாடன சவூதியில் பிறக்காம இந்தியவில் பிறந்ததே அதிஷ்டமென்று பேசாம இருக்க வேண்டிது தானே.
சிறிய நாடுகளில் எல்லாம் சிறப்பாகவா அடிப்படை உதவிகள் நடைபெறுகிறது. இஸ்லாமிற்க்கு ஆப்படித்து கொண்டிருக்கும் மேற்க்குலக நாடுகளில் ஒரு தொளிலாளிக்கு விபத்து நடந்தால் அந்த தொழிலாளி யாரிடமும் உதவி கேட்க வேண்டிய தேவையில்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்