பின்பற்றுபவர்கள்

16 ஆகஸ்ட், 2014

கணிணிக்கு ஏற்றமொழி என்னும் புரட்டு !

மனிதர்களுக்கு விளங்காது, ஆனால் தேவர்களுக்கு விளங்கும் மொழி அதனால் தான் தேவ பாஷை என்றார்கள், ஆனாலும் வடமொழியை வளர்த்து எடுக்க முடியவில்லை, மனிதர்கள் மனிதர்களோடு உரையாட தேவ பாஷை எதற்கு என்பதாலோ அல்லது அதன் கடின இலக்கண வரையரைகளினாலோ, அண்மைய இலக்கியத்தின் உரைநடை, புதுக்கவிதை போன்ற புதிய உத்திகளை ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லாத தாலோ, அல்லது சொல்லிக் கொடுப்பவர்கள் ஆங்கிலம் என்கிற பிழைப்பு சார்ந்த மொழியை நாடிய தாலோ வடமொழியை 19 ஆம் நூற்றாண்டில் வளர்த்து எடுக்க முடியவில்லை, எனக்கு தெரிந்து 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட புதிய நூல்கள் என்று எதுவுமே வடமொழியில் இல்லை, இருந்தால் தெரிவிக்கவும் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன், தற்பொழுது தான் சங்கரமடம் உள்ளிட்ட வடமொழி பற்றாளர்களால் வடமொழியில் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன, புரியாவிட்டாலும் வடமொழி 'ஸங்கீதத்தை' தலையாட்டி ஆட்டி கேட்பது போல் ஒரு கூட்டம், ஒருவேளை சொர்கத்தில் பலன் தரக்கூடும் தேவர்களுடன் பேச பயன்படக் கூடும், தவறவிடக்கூடாது என்று கேட்கின்றனர். 

மற்றபடி அண்மைய கணக்கு எடுப்பின்படி வடமொழி பேசுவர்களின் எண்ணிக்கை 120 கோடி இந்திய மக்கள் தொகையில் வெறும் 15 ஆயிரம் பேர் மட்டுமே. இந்த எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளதுடன், நாளடைவில் அதுவும் குறைந்து பேசப்படாத வெறும் வழிபாட்டு மொழி என்கிற நிலையை அடையலாம், மாறாக பலரும் கூறும் கருத்து வடமொழி என்றைக்குமே மக்களால் பேசப்பட்ட மொழி கிடையாது, அந்த 15 ஆயிரம் பேரும் வேண்டுமென்றே வடமொழியை வாழவைக்க வேண்டும் என்பதற்காக வலிந்து தான் பேசுகின்றனர் என்கின்றனர்.

நான் அறிந்த அல்லது படித்து தெரிந்த வரையில் வடமொழிக்கு தமிழுக்கு இருப்பது போன்று பிராமி (தமிழி) எழுத்து பின்னர் வட்டெழுத்து என்று தொன்று தொட்டாக, வரலாற்றின் தொடர்ச்சியாக எழுதும் முறைகள் கிடையாது, திருவள்ளுவர் காலத்திற்கு முன்பு தமிழுக்கு எழுத்துகள் பயன்படுத்தப்படுவதால் 'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப...' என்று குறளில் எழுத்துகள் பற்றியும் எழுத முடிந்திருக்கிறது, மீன் இலட்சினை சிந்து சமவெளி நாகரீகத்தில் விண்மீனைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டதாலும் தற்கால அல்லது பண்ணெடுங்காலமாக தமிழில் விண்மீனை  வான் மீன் என்ற இடப்பெயர் சொல்லாக மீன் என வழங்கும் வழக்கும் உள்ளது தவிர சிந்துசமவெளி மக்களின் சிவ வழிபாடு திராவிட வழி வந்தவை என்பதாலும் வேறு சில சான்று அடிப்படையில் சிந்துவெளி நாகரீகம் பண்டைய திராவிட நாகரீகம் தான் என்று ஐராவதம் மகாதேவன் மற்றும் ஐரோப்பிய ஆய்வளர்கள் உரைக்கின்றனர்,  திராவிட மொழிப்பிரிவில் ஒன்றான Brahui மொழி பேசுவர்கள் தற்காலத்திலும் சிந்துசமவெளி அமைந்த பாகிதான் பகுதியில் வாழ்ந்துவருகின்றனர், வடமொழியில் வேதகாலம் முதலாக / முன்பாக மீன் என்ற சொல் 'மச்ச' என்றும்.  வின்மீன் 'நக்‌ஷத்திர' என்றும் வழங்கப்படுவது குறிப்பிடத் தக்கது.


அஃதாவது 11 ஆம் நூற்றாண்டுவரை எழுத்தே இல்லாத மற்றும் ஆண்குறி வழிபாடு என்று சிவ வழிப்பாட்டை வேதங்களினால் பழித்த வடமொழிக்கு சிந்துவெளி நாகரீக தொடர்பு இருக்க கூறுகளே இல்லை என்கிறனர், சிந்துவெளியில் பயன்படுத்தப்பட படக்குறி (சித்ர / Symbol) எழுத்துகளின் தொடர்ச்சியாக திராவிட எழுத்து முறையான பிராமியும், அதே பிராமியில் கூடுதல் எழுத்துக்களுடன் மாற்றம்  செய்து 'அசோகர் பிராமி' பாலி மொழியில் அசோகர் காலத்து கல்வெட்டுகள் எழுதப்பயன்பட்டதாக ஆய்வாளர்கள் கூற்று, முதலில் வடமொழிக்கு எழுத்து முறைகள் தோன்றி அது தமிழுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் நாமும் 31 எழுத்துகளுக்கு (உயிர், மெய் மற்றும் ஆய்தம்) மாற்றாக 51 எழுத்துகளைத் தான்  பயன்படுத்தி இருப்போம், எனவே தமிழ் பிராமி எந்த மொழியிலும் இருந்தும் பெறப்படவில்லை மாறாக அவை தமிழுக்காக உருவாக்கப்பட்டது என்கிறனர்.

வடமொழிக்கு எழுத்து வடிவம் கிடைத்ததே 11 ஆம் நூற்றாண்டுகளில் தான், அதற்கு முன்பு (10 நூற்றாண்டு) வரை குறிப்பாக தஞ்சாவூர் கல்வெட்டுகளில் கூட வடமொழியை தமிழ் எழுத்தில் தான் எழுதி வந்திருக்கின்றனர், விக்கிப்பீடியாவில் வடமொழி தொடர்பான சான்றாவணமாக தமிழ் எழுத்தில் எழுதப்பட்டதைத் தான் காட்டுகின்றனர்,


( இது தற்பொழுது விக்கியில் நீக்கப்பட்டுள்ளது)



அது மட்டும் தான் முதன் முதலில் வடமொழி எழுத்துவடிவாக அமைந்ததற்கான தகவல், பின்னர் தேவநகரி என்னும் (தற்போது உள்ள) எழுத்துவடிவம் 51 எழுத்துகளுடன் அமைக்கப்பட்டு அவற்றை 11 ஆம் நூற்றாண்டுகள் முதல் வடமொழியை எழுதப் பயன்படுத்துகின்றனர். ஒரு பேச்சுக்கு சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் வடமொழி / வேத நாகரீகத்திற்கும் தொடர்பு இருந்தால் இடைப்பட்ட காலத்தில் வடமொழிக்கு எழுத்துகளே இல்லாது போனது ஏன் ? என்று நினைக்க, 'ஸ்மிருதி' அல்லது மனனம் செய்யும் அடைப்படையில் மட்டுமே வடமொழி வழி வழியாக பயிற்று விக்கப்பட்டுவந்திருப்பது தெளிவாகிறது. ஆசிரியர் - மாணவர்கள், பின்னர் அவர்களின் மாணாக்கர்கள் என தொடர்ந்து அவை பாதுக்காப்பட்டது அன்றி எழுதி வைக்கப்பட்ட ஒன்று அல்ல, வால்மிகிக்கு காலத்தில் ஓலைச் சுவடிகளில் வடமொழியை எழுதி வாய்ப்பிருக்கவில்லை, அதாவது 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகள் கட்டிய பாலத்தில் செங்கற்களில் 'राम' (ராம்) என்று 11 ஆம் நூற்றாண்டில் உருவான எழுத்தில் எழுதப்பட்டிருப்பதாக காட்டுவதே ஒரு மோசடியும் முரண்பாடானதும் ஆகும், ஸ்வஸ்திக் சின்னம் தவிர ॐ உள்ளிட்டவை தேவநகரி எழுத்து உருவான பின்பு பயன்படுத்தப்படுவையே. வடமொழியின் எழுத்து வரலாற்றின் சுருக்கம் இவை. 

வடமொழி கணிணிக்கு வேறெந்த மொழியைக்காட்டிலும் ஏற்ற மொழி என்றும், அதை நாசா உறுதி செய்துள்ளதாகவும் இணையம் பொதுப்பயன்பாட்டுக்கு கடந்த 20 ஆண்டுகளாக இட்டுக்கட்டிய கட்டுரைகள் குப்பைகளாக குவிந்துள்ளன, இதையெல்லாம் எந்த சுனாமியும் தூக்காது என்கிற இறுமாப்பில் தொடர்ந்து பரப்புகின்றனர், எந்த வகையில் கணிணிக்கு சிறந்தது என்பதற்கு இவர்கள் வடமொழியில் உள்ள வேற்றுமை உருபுகளாக (they call it is vibhakti) காட்டும் சான்றுகள் அனைத்தும் திராவிட மொழிகள் அனைத்திற்குமே பொதுவானது.

அதாவது பெயரெழுத்தின் விகுதியை மாற்றி வரிகள் அமைப்பது

இராமனை அடைந்தனர்,
இராமனால் கொல்லப்பட்டான்,
இராமனுக்கு பசித்தது,
இராமனின் வேண்டுகோள்,
இராமனது வில்
இராமன்கண் விடப்பட்டது
இராமனிடம் வந்து சேர்ந்தனர்,
இராமனே கொன்றான்,
( ஐ, ஆல், கு, இன், அது, கண், இடம் மற்றும் விளி வேற்றுமை)

இதில் கண் வேற்றுமையும்,  இட வேற்றுமையும் தற்போதைய இலக்கணத்தில் ஒன்றாகவே பயன்பாட்டில் உள்ளது,

ஆக எட்டு வேற்றுமைகள் தமிழிலும் உள்ளது. இதே எட்டு வேற்றுமைகள் தான் வடமொழியிலும் உள்ளன. ஆங்கிலத்தில் இது போன்று பெயர் சொற்களை மாற்றி வரிகள் அமைப்பது கடினம், Belong to Ram > Ram's (இது கூட அண்மையில் ஏற்பட்டவையே) Raamaa feel hungry, Raavana Killed by Raamaa, Raamaa Request... இது போல் இராம் தனித்து மட்டுமே வரும், தவிற ஒவ்வொரு செயலுக்கும் வினைச் சொற்கள் மாறுபடும்m முன்னிலையின் (Subject) விகுதி மாறாது,  இந்த பெயர்ச் சொல் விகுதி மாற்றம் என்னும் வேற்றுமை உருபு இலக்கணம் மட்டும் ஆங்கிலத்தில் மாறுபடுகிறது, இதனால் ஆங்கிலத்தை விட வடமொழி கணிக்கு Object Oriented Program, மற்றும் Class' எழுத மிகவும் பயனுள்ளது, அதனால் கணிக்கு மிகவும் ஏற்ற மொழி என்கிறார்கள். இவர்களுக்கு வடமொழி தவிர்த்து திராவிட மொழியும் அதன் இலக்கண அமைப்பு குறித்து கொஞ்சமும் தெரியாது அல்லது அவற்றை மறைத்துவிட்டு வடமொழியே சிறந்தது என்று நிறுவ முயற்சிக்கின்றனர்.

வடமொழியில் ஒன்றின் பால், இரண்டின் பால், பலவின்பால் என்கிற இலக்கண விதிகள் உண்டு, அதாவது, Baaley (குழந்தையினுள் - Singular) , Baalayo (குழந்தையருள் Dual ), Baaleshu (குழந்தைகளுக்குள் Plural), காலப்போக்கில் தமிழில் உள்ள இருமை 'ர்' விகுதி மதிப்புக்காகப் பயன்படுத்துவதால் தந்தையர், தாயார் என்று ஒருமை சார்ந்த விகுதியாவிட்டது,

குழந்தை அழுதது (Singular)
குழந்தையர் அழுதனர் (Dual)
குழந்தைகள் அழுதனர்  (Many / Plural)

ஒன்றிற்கு மேற்பட்டவை பல என்பதால் தற்காலத்தில் திராவிட மொழிகளில் இருமை குறிப்புகள் எழுவாயின் விகுதியாக வருவதில்லை.

மற்றபடி தமிழிலோ, திராவிட மொழிகளிலோ, இருமை விகுதிகள் இல்லை என்று சொல்வதற்கில்லை, அதுவும் வடமொழிக்கான தனிச்சிறப்பும் இல்லை, பயன்பாட்டில் இல்லாத மொழியின் தனிச்சிறப்புகள் என்பவை வானவில்லின் வண்ணம் போன்றவை அவற்றை எடுத்து வந்து கலந்து சுவற்றில் பூசமுடியுமா ? எனக்கு தெரிந்து வடமொழியில் திராவிட மொழிகளைக்காட்டிலும் அணி இலக்கணங்கள் ஏனெனில் அணி (உவமை அணி, இல்பொருள் உவமை அணி...போன்றவை)  சற்று கூடுதல், அதனால் அது கணிக்கு ஏற்ற மொழி என்று கூற ஒன்றும் இல்லை, அணி இலக்கணத்திற்கும் Computer Program or Object Oriented Program க்கும் எந்த ஆணித் தொடர்பும் இல்லை.

மேலும் 'I Love You' என்பது போன்ற ஆங்கில வரியின் சொற்களை இடம் மாற்றினால் 'You Love I', Love I You' போன்றவை ஆங்கிலத்தில் பொருள் தராது மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும், வடமொழியில் எழுதப்பட்டும் வரிகளின் சொற்களை மாற்றினால் பொருள் மாறாது, இந்த வசதி ஆங்கிலத்தில் இல்லை அதனால் வடமொழியே ஆங்கிலத்தைக்காட்டிலும் சிறந்த மொழி என்கிறார்கள், அதனால் வடமொழியைப் பயன்படுத்துவதால் கணிணியின் விரைவுத் திறன் கூடுமாம், திராவிட மொழிகளிலும் சொற்களை இடம் மாற்றினால் பொருள் மாராது,

இராமதாசு மரத்தை வெட்டினார்,
இராமதாசு வெட்டினார் மரத்தை,
மரத்தை வெட்டினார் இராமதாசு,
மரத்தை இராமதாசு வெட்டினார,
வெட்டினார் மரத்தை இராமதாசு,
வெட்டினார் இராமதாசு மரத்தை ,


ஆறுவகையாக இடம்மாற்றில் எழுதினாலும் இதில் எங்காவது பொருள் மாறுகிறதா ? ஆக சொற்களை இடம் மாற்றி பொருள் மாறாமல் இருக்கும் இலக்கண அமைப்பு திராவிட மொழிகளுக்கும் பொதுவானதாகும் எனவே வடமொழி மட்டும் தான் கணிணிக்கு ஏற்ற மொழி என்பது முற்றிலும் புறக்கணிக்கக் கூடிய கூற்றாகும், ஒருவேளை அவ்வாறு அவற்றை பலரும் ஒரு பேச்சுக்கு ஒப்புக் கொள்ள நேர்ந்தாலும் கணிக்கு ஏற்ற மொழிகள் இந்திய மொழிகள் அனைத்துமே என்பதே சரியானதாக இருக்கக் கூடும். 

என்னைக் கேட்டால் இன்றைய மேம்பட்ட தொழில் நுட்பத்தில் மிகவிரைவு கணிணிகளும் (Super CPU, I7 Processor), அளவுக்கு மிதியான நினைவு சில்லுகளும் (Memory in TB) வந்துவிட்டதால் கணிணியில் பயன்படுத்தப்பட இது சிறந்த மொழி என்று எந்த மொழியையுமே பயன்படுத்திவிட முடியும், ஒரு குறிப்பிட்ட மொழியைப் பயன்படுத்திப் பெறப்படும் விரைவுத் திறன் குறித்த கூற்றெல்லாம் இன்றைய தொழில் நுட்பத்திற்கு முன்பு ஒன்றுமே இல்லை. ஒருவேளை இவர்கள் இந்த பொய்களை பரப்பும் காலத்தில் இருந்த 8 Bit CPU, 16MB Memory க்கு மேல் எதிர்காலத்தில் மேம்பட வாய்ப்பே ஏற்படாது என்று தவறாக நினைத்திருக்கக் கூடும். மற்றபடி இந்த 'வடமொழி மட்டுமே கணிக்கு ஏற்ற மொழி' என்பது முற்றிலும் அடைப்படை அற்ற கூற்று, மற்றும் புறந்தள்ள வேண்டியதும் ஆகும்.

கணிணிகள் பொதுப் புழக்கத்திற்கு (Even Before Internet) வந்த பிறகு வடமொழி கணிக்கு ஏற்ற மொழி என்று ஏறக்குறைய 25 ஆண்டுகளாக பரப்பட்டுவருகிறது, இந்திய அரசுகள் கோடிக்கணிக்கில் மக்கள் வரிப்பணைத்தை வாரி இறைத்து வடமொழி வளர்ச்சிக்கு செலவிட்ட போதிலும் அந்த 36 விழுக்காடு நாசா பொறியார்களில் ஒருவரும் வடமொழியை கணிணியில் ஏற்றி இவர்களின் கூற்றை மெய்ப்பிக்கவும் முயற்சிக்கவில்லை,  தவிர இவ்வாறு தவறான கூற்றை பரப்புவர்களும் இதுவரை அதை செய்து காட்டவும் இல்லை, வெறும் பரப்புரையாக மட்டுமே இவை நம்ப வைக்கப்படுகிறது.



அகண்டபாரதம் இருந்தால் நல்லா இருக்குமே என்பது போன்ற வெறும் கற்பனை கனவே கணிணியில் வடமொழி ஏறும் என்பதும், சிறந்த கணிணி மொழியாக திகழும் என்பதும். இதை மறுப்பவர்கள் தகுந்த சான்றுகளுடன் வந்து வடமொழியே கணிணிக்கு சிறந்தது என்று கூறலாம். எனக்கு மனத்தடை எதுவும் இல்லை.

பின் இணைப்பு :

http://www.vedicsciences.net/articles/sanskrit-nasa.html (புரட்டு 1)
http://uttishthabharata.wordpress.com/2011/05/30/sanskrit-programming/ (புரட்டு 2)

Similarities between Sanskrit and Programming Languages (புரட்டு 3)

http://uttishthabharata.wordpress.com/2011/05/30/sanskrit-programming/ (எதிர்வினை)
http://mushafiqsultan.com/nasa-and-sanskrit-hoax/ (எதிர்வினை)

21 கருத்துகள்:

Unknown சொன்னது…

மாமிசம் சாப்பிடுவது தவறு என்று ஒரு அறிவாளி எழுதி வைத்துள்ளார்.

தாவரம் சாப்பிடுவதும் தவறுதான். விதைகள், கொட்டைகள், கீரைகள், கிழங்குகள் எல்லாமே உயிர்கள்தாம்.இது பாட்டை எழுதிய அந்த அறிவாளிக்குத் தெரியவில்லையே?!

ஒருவன் உண்மையாக உயிர்களை நேசிப்பவனாக இருந்தால், தாவர உணவுகளைக் கூட உண்ணாமல் பட்டினி கிடந்து சாக வேண்டும்.

தன்னைக் கடிக்கும் கொசுவை அடிக்காமல் விட வேண்டும். கொசு மருந்து பயன்படுத்தக் கூடாது.

தயிரைக் குடிக்கக் கூடாது. அதில் பல கோடி நல்ல பாக்டீரியாக்கள் (உயிர்கள்) உள்ளன.

இந்த அறிவியல் உண்மைகள் தெரியாமல் இந்த வகை விஞ்-சாணிகள் பாட்டு எழுதுகிறார்கள்.

Raja சொன்னது…

அருமையான கட்டுரை கண்ணன். நிறைய செய்திகளை உள்ளடக்கி சான்றுகளுடன் எழுதி உள்ளீர்கள்.செத்ததுக்கு அப்பறம் வைக்கிற ஒப்பாரி மாதிரி தான் அரை டவுசர்களின் கூச்சல்களை எடுத்துக்கொள்ள வேண்டும்

//இராமதாசு மரத்தை வெட்டினார்//இதுல உள்குத்து எதுவும் இல்லியே :)

கோவி.கண்ணன் சொன்னது…

//இதுல உள்குத்து எதுவும் இல்லியே :)//

ராஜா. அது நகைச்சுவை மற்றும் சுவையார்வத்திற்காக எழுதியவை. மற்றபடி வேறெந்த அரசியலும் இல்லை

பெயரில்லா சொன்னது…

Computer knows only Binary language 0 & 1. Right?

கவியாழி சொன்னது…

தங்களின் பயனுள்ளத் தகவலுக்கு நன்றி

வவ்வால் சொன்னது…

//மேம்பட்ட தொழில் நுட்பத்தில் மிக விரைவு கணிணிகளும் (Super CPU, I7 Processor), அளவுக்கு மிதியான நினைவு சில்லுகளும் (Memory in TB) வந்துவிட்டதால் கணிணியில் பயன்படுத்தப்பட இது சிறந்த மொழி என்று எந்த மொழியையுமே பயன்படுத்திவிட முடியும்,//

இது பொதுவாக நினைப்பது, உண்மையில் இன்னமும் கணீனிகள் எல்லாம் பழைய எனியாக் மெமரி ஆக்கிடெக்சரில் தான் இயங்குது, பிராசசருக்கு நேரடியாக பயன்படும் மெமரி அளவு இப்போ வரைக்கும் 64 கிலோபைட் தான் L1 cache memory அளவு இதான். இதுல தான் எவ்ளோ பெரிய புரோகிராம், மென்பொருள் என்றாலும் பிராசசரில் வச்சு வேலை செய்ய முடியும் அவ்வ்..

மல்டி கோர் / செர்வர் வகையில் கொஞ்சம் கூடுதல் L1 cache memory வைக்கிறாங்க அப்படி செய்வதால் தான் விலை அதிகம் வைக்கிறாங்க, L1 cache memory தான் நேரடியாக பிராசரின் டிரான்ஸ்சிஸ்டரின் மேலேயே அமைக்கப்படுவது, , இவ்வாறு செய்வது கடினமான வேலை என நினைக்கிறேன் ,ஏன் எனில் ரொம்ப காலமாக 8 கேபில இருந்து இப்போ தான் 64 கேபி ஆக்கியிருக்காங்க,

இதுல இன்னும் உள்ள போனிங்கன்னா கண்ட்ரோல் யூனிட்டில் ரெஜிஸ்டர் கேஷ் மெமரி என இருக்கு அதோட அளவு 5 கிலோ பைட் தான் , அதை வச்சு தான் மொத்தமாக கணினி என்ன வேலை செய்யனும் என பைனரி வச்சு, அசெம்பிளி லேங்வேஜில் கட்டளைகள் எழுதி வச்சிருக்காங்க, பிராசசர் செய்தவுடன் கணீனியில் எடுத்து மாட்டி ஏலை செய்ய முடியாது, அதனை மேற்கண்ட மெமரியில் "பிராசசர் புரோகிராமிங்க்" செய்யணும்.

இப்படி செய்ய எந்த மொழியும் தேவையில்லை, ஆனால் ஒரு அடையாளத்துக்கு , அசெம்ப்ளி மொழியில் எழுதும் போது, ஆங்கில குறியீடுகளை பயன்படுத்துறாங்க, அதுவும் கூட காரணம் என்னவெனில் , ஆங்கில எழுத்துக்கு குறைவான பிட் அலோகேஷன் போதும் என்பதால் தான்.

எனவே சிப் லெவலில் இருக்கும் குறைவான மெமரியில் தமிழோ, சமஸ்கிருதமோ பயன்ப்படுத்தினாலும் அதிக பிட் அலோகேஷன் தேவைப்படும் என்பதால் " பிராசசிங்கிற்கு கிடைக்கும் மெமரி" குறையவே செய்யும். எனவே கணினியின் திறனும் குறைய செய்யும் அவ்வ்!

மற்றபடி அப்ளிகேஷன் நிரல்களை எழுத மொழி ஒரு தடையே இல்லை ,என்ன மொழியில் எழுதினாலும் கம்பைளரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அசெம்ப்ளி மொழியில் தான் பிராசருக்கு "வேலை செய்யக்கொடுக்கப்படும். எனவே அசெம்ப்ளி மொழியில் சமஸ்கிருதத்தின் செயல்பாடு என்னனு யாராவது நிறுபிச்சுக்காட்டினால் , கணினிக்கு சமஸ்கிருதமே ஏற்றதுனு ஒத்துக்கலாம்.

# கணினிலாம் நவீனமாகிடுச்சு, ஏகப்பட்ட ஆபரெட்டிங் சிஸ்டம் வந்துடுச்சு ,எல்லாம் எளிதாகிடுச்சு என்பதான தோற்றம் இருந்தாலும் , இன்னும் பிராசசருக்குள்ள செயல்ப்படுத்த பயன்ப்படுத்தும் வழிமுறைகள் ஆதிகாலத்துல கண்டுப்பிடிச்சது தான் , கணியில் விண்டோஸ், லினக்ஸ்னு ஆபரேட்டிங் சிஸ்டம் போட்டிருக்கோம்னு அதான் வேலை செய்துனு நினைச்சிட்டிருப்போம் , ஆனால் கணினியை இயக்கும் ஆபரேட்டிங் சிஸ்டம் ,BIOS இல் பதியப்பட்ட டாஸ் (disk operative syStem)அடிப்படையிலான நிரலே , அது தான் பிராசசருக்கு கம்பியூட்டரில் இன்னின்ன பாகம் இருக்கு, இதுல விண்டோஸ் இருக்குனு அடையாளம் காட்டும் , கணினியில் இருக்கும் அwindows ஆபரேட்டிங்க் சிஸ்டமே கணினிக்கு செகண்டரி ஆபரேட்டிவ் சிஸ்டமாக தான் அறிவிக்கப்படும் :-))

windows உடைஞ்சிட்டாலும் டாசில் பூட் செய்ய இயல்வது இதனால் தான்.

எனவே ஹார்ட்வேர் லெவலில் கணீனிக்கான மொழி அசெம்ப்ளி லேங்வேஜும் ,அதுக்கு 0,1 உம் தான் தேவை வேற எந்த மண்ணாங்கட்டியும் வேண்டாம் அவ்வ்!

சதுக்க பூதம் சொன்னது…


நல்ல பதிவு.விரிவான பகிவுக்கு நன்றி. சிந்து சம்வெளி நாகரிக விண்மீன்கள் பற்றி தெரிந்து கொண்டேன்
//அஃதாவது 11 ஆம் நூற்றாண்டுவரை எழுத்தே இல்லாத //
பொதுவாக வடமொழி என்று சொல்லாமல், சமஸ்கிரத்துக்கு என்று கூறினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.ஏனென்றால் அசோகர் காலத்தில் வட நாட்டில் எழுத்து தோன்றி முழுமையாக கல்வெட்டுகளில் வெளிவந்துள்ளன.அசோகரது பிராமி முதலில் வந்ததா? அல்லது தமிழ் பிரமி முதலில் வந்ததா என்பது பெரிய விவாதமாக உள்ளது.தமிழ் பிராமி அசோகரது பிராமிக்கு முன் வந்ததற்கு 2 ஆதாரம் உள்ள போதும் ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கூட ஒத்து கொள்ளவில்லை என்பது வருத்தமான செய்தி.அவர்களுடைய கூற்று படி அசோகரது பிராமி எழுத்து சமண மற்றும் புத்த சமய துறவிகள் மூலம் தமிழ் நாட்டுக்கு வந்ததாக கூறிக் கொள்கிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

வவ்வால் கணிணி வேகம் (Frequency) என்று ஒன்றை விட்டுவிட்டீர்கள், உங்களைப் பொருத்த அளவில் நான்கு உருளை ஊர்த்திகள் வெவ்வெறாக இருந்தாலும் அதன் வேகம் ஒன்று தானோ :)

கோவி.கண்ணன் சொன்னது…

// Alien கூறியது...
Computer knows only Binary language 0 & 1. Right?//

They are talking about programming language like c, java all use english

கோவி.கண்ணன் சொன்னது…

//எழுத்தாளர் புதின் கூறியது...
மாமிசம் சாப்பிடுவது தவறு என்று ஒரு அறிவாளி எழுதி வைத்துள்ளார். //

இறப்பு என்பது ஒன்று தான், ஆனால் யானையின் இறப்பும் கொசுவின் இறப்பும் ஒன்று அல்ல, அவற்றின் மறு உற்பத்தி திறனை வைத்து தான் அவற்றின் போற்றுதல்.

மாமிசம் சாப்பிடுவது சரியா தவறா என்பதைவிட எதை எதையெல்லாம் சாப்பிடலாம், எவற்றை அழிவில் இருந்து காப்பது நலம் என்பது தான் இன்றியமையாததாகும்.

உணவு சுழற்சி என்னும் சப்பை காரணம் காட்டி கண்ட உயிர்களையெல்லாம் மென்று விழுங்கும் மனிதன் தன்னை மட்டும் உணவு சுழற்சியில் இருந்து கழட்டிக் கொள்ளாமல் இருந்தால் நானும் மாமிசம் சாப்பிடுவதில் தவறே இல்லை என்பேன் :)

மனிதன் தன்னை உயிரோடு விலங்குகள் புசிக்கக் கொடுக்க வேண்டாம், பிணத்தையாவது கழுகளுக்கு கொடுத்தால் நானும் உணவு சுழற்சியில் உயிர்கள் ஒன்றை ஒன்று அடித்து திண்பது சரி என்பேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//கவியாழி கண்ணதாசன் கூறியது...
தங்களின் பயனுள்ளத் தகவலுக்கு நன்றி//

மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//சதுக்க பூதம் கூறியது...

நல்ல பதிவு.விரிவான பகிவுக்கு நன்றி. சிந்து சம்வெளி நாகரிக விண்மீன்கள் பற்றி தெரிந்து கொண்டேன்//

விரிவாக எழுத விரும்பம் தான், ஆனால் போதிய நேரமில்லை, தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

வவ்வால் சொன்னது…

கோவி,

//கணிணி வேகம் (Frequency) என்று ஒன்றை விட்டுவிட்டீர்கள், உங்களைப் பொருத்த அளவில் நான்கு உருளை ஊர்த்திகள் வெவ்வெறாக இருந்தாலும் அதன் வேகம் ஒன்று தானோ :)//

கணினி வேகம் இவ்விடத்தில் முக்கியமல்ல, மேலும் கணினி என்ன தான் வேகமாக இயங்கினாலும், ஒரு சைக்கிளுக்கு எத்தனை பிட்ஸ் கையாளும் என்பது தான் "அதன் செயல் திறன்" ஆகும். ஆச்சர்யம் என்னனா இப்போ வேகமா இருக்குனு சொல்லுற கணினிகள் எல்லாமே இந்த அளவு கோளில் ரொம்ப நாளா "ஸ்டேட்டிக்" ஆக நிக்குது அவ்வ்!

ராம் அளவை கிகாபைட் சொல்றாங்க, ஹார்ட் டிஸ்க்கில டெர்ரா பைட் வந்துடுச்சு, ஏன் இன்னும் cpu register size 5 KB என கொசுமுட்டை சைசில இருக்கணும் என சிந்தித்ததேயில்லையா, அல்லது L1 கேஷ் மெமரி ஏன் வெறுமனே 64 கேபி இருக்கணும் ஒரு ஜிபி போட்டுக்க கூடாதா என்ன?

இன்டெர்னலா கணினி சிப்புக்குள்ள போய் மாற்ற யாருக்கும் விருப்பம் இல்லையோ என்னமோ தெரியல , 1949 இல் மவுரிஸ் வில்க்ஸ் என்ற கணினியாளர் உருவாக்கின பைனரி லாஜிக்கில் தான் இன்னமும் மெசின் லாங்கேஜ் எழுதுறாங்க, அவர் சொன்ன லாஜிக் யூனிட் சைசில் தான் ரெஜிஸ்டர் மெமரி இன்னமும் இருக்கு.

அப்போ அசெம்ப்ளீ லாங்வேஜில் ஆங்கிலம் பயன்ப்படுத்தியாச்சு , இன்னமும் அதான் பயன்பாட்டில் இருக்கு, எனவே வேற மொழில நிரல் எழுதினாலும் சிபியுக்கு புரியாது, எனவே அதற்கு புரியவைக்க மறுபடியும் ஆங்கிலத்துக்கு மாத்தி அப்புறம் பைனரியாக சிபியுக்கு அனுப்பனும் ,இதனால் ஆங்கிலம் அல்லாத மொழியில் நிரல் எழுதினாலும் வேகமாக இயங்காது.

கூகிள் மொழிமாற்ற சேவை என்ன கொடுமையா இருக்குனு பாத்திருப்பிங்க, இது போல கம்பைலரில் மொழிமாற்றமும் செய்யனும்னா எத்தனை பிழைகள் வரும்னு யோசிக்கவும்.

# உங்கள் தகவலுக்காக , ஏன் வளர்ந்த நாடுகளான ஃபிரான்ஸ், ஜெர்மன் கூட "அவங்க மொழியில" நிரல் எழுதி முயற்சிக்கலை, எல்லாருமே இன்டர்ஃபேஸ் அ மட்டுமே மொழிமாற்றம் செய்துப்பாங்க, நிரல்களை ஆங்கிலத்துலவே கையால்கிறார்கள்.

# ரஷ்யா ஆரம்பத்துலவே ரஷியன் நிரல்கள் ,மெசின் லாங்க்வேஜ் என சொந்தமாக செய்து , பின்னர் பொருளாதார நலிவால் ஊத்தி மூடி இருக்கு, இத்தனைக்கும் அவங்க ternary லாஜிக் , பைனரி அல்ல.

சும்மா மேடைப்பேச்சாக மட்டுமே "சமஸ்கிருதம் கணீனி மொழி, தமிழ் கணினி மொழினு " ஜம்பம் விடலாம் , உண்மையில் பயன்ப்படுத்தவே முடியாது அவ்வ்!

வவ்வால் சொன்னது…

விட்டுப்போச்சு,

கணினி சில்லின் இன்ஸ்ட்ரக்‌ஷன் ஆபரேட்டர் கோட்களில் ஆங்கிலத்தின் "பைனரி" மதிப்பில் தான் எழுதப்பட்டுள்ளதால், கணினிக்கு ஆங்கிலம் தெரியும் எனலாம்.

குலவுசனப்பிரியன் சொன்னது…

//இதுல இன்னும் உள்ள போனிங்கன்னா கண்ட்ரோல் யூனிட்டில் ரெஜிஸ்டர் கேஷ் மெமரி என இருக்கு அதோட அளவு 5 கிலோ பைட் தான் , அதை வச்சு தான் மொத்தமாக கணினி என்ன வேலை செய்யனும் என பைனரி வச்சு, அசெம்பிளி லேங்வேஜில் கட்டளைகள் எழுதி வச்சிருக்காங்க, பிராசசர் செய்தவுடன் கணீனியில் எடுத்து மாட்டி ஏலை செய்ய முடியாது, அதனை மேற்கண்ட மெமரியில் "பிராசசர் புரோகிராமிங்க்" செய்யணும்.

இப்படி செய்ய எந்த மொழியும் தேவையில்லை, ஆனால் ஒரு அடையாளத்துக்கு , அசெம்ப்ளி மொழியில் எழுதும் போது, ஆங்கில குறியீடுகளை பயன்படுத்துறாங்க, அதுவும் கூட காரணம் என்னவெனில் , ஆங்கில எழுத்துக்கு குறைவான பிட் அலோகேஷன் போதும் என்பதால் தான்.//

வவ்வால், முதலில் விளக்கமாக சரியாக எழுதிய நீங்கள், இப்போது சொல்வது தவறு:
//கணினி சில்லின் இன்ஸ்ட்ரக்‌ஷன் ஆபரேட்டர் கோட்களில் ஆங்கிலத்தின் "பைனரி" மதிப்பில் தான் எழுதப்பட்டுள்ளதால், கணினிக்கு ஆங்கிலம் தெரியும் எனலாம்.//

ஆப்பரேட்டர் கோடுகள் ஆங்கில பைனரி மதிப்புகளல்ல. உ.ம்: http://www.win.tue.nl/~aeb/comp/8051/set8051.html

கோவி.கண்ணன் சொன்னது…

//# உங்கள் தகவலுக்காக , ஏன் வளர்ந்த நாடுகளான ஃபிரான்ஸ், ஜெர்மன் கூட "அவங்க மொழியில" நிரல் எழுதி முயற்சிக்கலை, எல்லாருமே இன்டர்ஃபேஸ் அ மட்டுமே மொழிமாற்றம் செய்துப்பாங்க, நிரல்களை ஆங்கிலத்துலவே கையால்கிறார்கள்.//

இதற்கு மற்றொரு காரணம் All the Programming languages has 1000s of reserved words that is in English only.

கோவி.கண்ணன் சொன்னது…

//சும்மா மேடைப்பேச்சாக மட்டுமே "சமஸ்கிருதம் கணீனி மொழி, தமிழ் கணினி மொழினு " ஜம்பம் விடலாம் , உண்மையில் பயன்ப்படுத்தவே முடியாது அவ்வ்!//

நான் அப்படி சொல்லவில்லை, வடமொழிக்கு சொல்லப்படும் அதே போன்ற காரணங்கள் திராவிட மொழிகளுக்கும் பொதுவானது என்று தான் குறிப்பிட்டுள்ளேன். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//கூகிள் மொழிமாற்ற சேவை என்ன கொடுமையா இருக்குனு பாத்திருப்பிங்க, //

இது துவக்க நிலைதானே, இன்னும் 10 ஆண்டுகளில் மேம்படலாம், அல்லது எல்லோருமே ஆங்கிலத்திற்கே மாறி இருப்பார்கள் :)

வவ்வால் சொன்னது…

கோவி,

// All the Programming languages has 1000s of reserved words that is in English only.//

"Reserved english words" என சொல்றிங்களே, ஏன் ஆங்கில சொற்களை மட்டும் ரிசர்வ் செய்யனும், அது மட்டும் கணினிக்கு எப்படி புரியும் என கேள்வி எழவில்லையா?

நான் சொன்னது அக்கேள்விக்கான பதில், உங்கள் தரப்பில் "ஆங்கிலம் எப்படி கணினிக்கு" புரியும் என்பதற்கு விளக்கம் இருந்தால் தரவும்.

Reserved english words" என ஒருப்பதில் சொன்னால் அது அப்படித்தான் என விடாமால் ஏன் என கேட்டால் மட்டுமே , ஆங்கிலம் எப்படி கணினி மொழியாச்சு என்பது புரிய வரும், நாம வழக்கமா என் ,எப்படி,எதற்கு எனக்கேட்டு சுயமாக தேடிப்பார்த்து விடுவது வழக்கம் :-))

#//வடமொழிக்கு சொல்லப்படும் அதே போன்ற காரணங்கள் திராவிட மொழிகளுக்கும் பொதுவானது என்று தான் குறிப்பிட்டுள்ளேன். :)//

நானும் வடமொழி என எல்லா மொழிக்குமே அப்படியான சாத்தியக்கூறு இல்லாத நிலையில் பேச்சுக்கு மட்டுமே "கணினி" மொழி என சொல்லிக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளேன்.

புதுசா பைனரி லாஜிக்கில் "numerical machine code" & assembly language" உருவானால் மட்டுமே பிற மொழிகளில் நிரல்கள் எழுதினால் சிறப்பாக கணினி இயங்கும் என்பதே தற்போதுள்ள நிலை.

---------

குலவுசனப்பிரியன்,

விளக்கத்துக்கு நன்றி!

நீங்க கொடுத்த தளத்தில் அசம்ப்ளி குறியீடுகள் ஆங்கிலத்தில் இருப்பதை வைத்து நான் சொல்லிட்டேன் என நினைக்கிறேன் , ஆனால் பைனரி குறியீட்டில் ஆங்கில எழுத்துக்களுக்கான "பைனரி பயன்ப்படுகிறது. மேலும் ரிஜிஸ்டர்கள் குறிக்கவும் ஆங்கிலம் பயன்ப்படுகிறது.

அந்த தளத்தில் ஹெக்சா டெசிமல் மதிப்பினை கொடுத்திருக்கிறார்கள், அதிலும் ஆங்கில எழுத்துக்கள் இருக்கு, மேலும் ஃப்ளாக்ஸ் என பயன்ப்படுத்துவதிலும் ஆங்கில எழுத்துக்கள் உள்ளன தானே.

மவுரிஸ் வில்க்ஸ் 1949 இல் EDSAC கணீனி வடிவமைத்த போது பைனரி லாஜிக்கில் ஆங்கிலம் பயன்ப்படுத்தியதால் , கணினியின் பிரதான மொழியாக ஆங்கிலம் பயன்ப்படுகிறது என படித்துள்ளேன் , அதன் அடிப்படையிலே நான் சொன்னது.

ஆங்கிலம் பிரதானமாக பைனரி லாஜிக்கில் இருக்க காரணம் அதற்கான பிட் அலோகேஷன் குறைவு என்பதால் , கணினி சில்லில் இருக்கும் குறைவான மெமரியில் பயன்ப்படுத்துவது எளிது என்பதும் ஒருக்காரணம்.

கணினி சில்லின் ரிஜிஸ்டர் ஆக செயல்ப்படும் ஸ்டேட்டிக் மெமரி என்பது இப்ப வரையிலும் 5 கேபி என்றெ இருக்கு, இதில் தான் கணினி சில்லு தயாரிக்கும் போதே அழியாமல் பதிக்கிறார்கள், மின்சாரம் இல்லை என்றாலும் தகவல்கள் அழியாது.

மற்ற மெமரி எல்லாம் மின்சாரம் இல்லை என்றாலும் அழிந்து விடும். ஹார்ட் டிஸ்க் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அது செகண்டரி மெமரி தான், அதை வைத்து சிபியு வை உயிர்ப்பிக்க இயலாது.

எனவே சிபியுவின் உயிர் அந்த 5 கேபி ஸ்டேட்டிக் மெமரில இருக்கு, அதுல ஆங்கில அடிப்படையில் நியுமெரிக் மெசின் கோட் இருக்கு என்பதே எனது புரிதல்.

குலவுசனப்பிரியன் சொன்னது…

//எனவே சிபியுவின் உயிர் அந்த 5 கேபி ஸ்டேட்டிக் மெமரில இருக்கு, அதுல ஆங்கில அடிப்படையில் நியுமெரிக் மெசின் கோட் இருக்கு என்பதே எனது புரிதல்.//
ஆவணங்களில் ஆங்கிலம் புழங்குவதால் மெசின் கோடுகளுக்கும் ஆங்கில எழுத்துக்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது போலத் தோற்றமளிக்கிறது. என் இடுகையில் ஆல்பர்ட் பால் மால்வினோவின் SAP-1 CPU வைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். அதில் 4 பிட் 0000 என்பது - LDA (Load Accumulator) என்ற கட்டளையை செயல்படுத்த எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதைப்போலவே மற்ற சில CPUக்களும், Jump to Address, Jump on Zero, Jump on Non-zero, போன்ற கட்டளைகளின் மெசின் கோடுகளை நெருக்கியடித்து சில பிட்டுகளுக்குள் அடக்கியுள்ளன.

நான் அறிந்த வரை ஆங்கில பைனரி குறியீடுகளான ASCII, EBCDIC, மற்றும் இப்போதுள்ள ஒருங்குறிகள் ஆகியன நிரல்களில்தான் பாவிக்கப்படுகின்றன, CPUக்களில் அல்ல.

பெயரில்லா சொன்னது…

Instead of wasting time to prove sanskrit is use less spend your time in making tamil as a computer language.
Defeating some one is not winning . You are also loser.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்