பின்பற்றுபவர்கள்

15 டிசம்பர், 2011

கூகுள் பஸ்(Google Buzz) போயே போச்சு.....!

கடந்த ஒராண்டுக்கு மேல் பழைய பதிவர்களின் பதிவுகள் குறைந்ததற்கு கூகுள் பஸ் தான் முதற்காரணம் அதில் நானும் விலக்கு இல்லை. பொதுவாக பதிவுகளில் சேகரிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் இடுகை இடுவேன், இந்தாண்டு இதுவரை 100க் கும் குறைவான இடுகைகளே எழுதியுள்ளேன், இது சென்ற ஆண்டுகளை ஒப்பிட 50 விழுக்காட்டிற்கும் குறைவு. பிறகு அதற்கான விவாதம், அவற்றையெல்லாம் கூகுள் பஸ்ஸில் செய்துவிட்டதால் திரும்பவும் அதே தகவல் அடிப்படையில் இடுகை எழுதுவது அலுப்பான ஒன்று. இன்று (15/12./2011) காலை 10 மணியுடன் பஸ்ஸை மூடி இருகிறது கூகுள்,



கூகுள் பஸ்ஸை பிற இனத்தினர் / மொழியினர் பயன்படுத்தினார்களா என்று சரியாகத் தெரியவில்லை, வலைப்பதிவர்களுக்கு அது ஒரு நல்ல விவாதக்களமாக இருந்தது. டிவிட்டரில் இருந்து எழுத்து எண்ணிக்கை கட்டுப்பாடுகள் அவற்றில் இல்லை என்பதால் என் போன்றோர் ப்ஸ்ஸில் விரும்பி பயணம் செய்தோம். ஒரு மாதத்திற்கு முன்பே மொபைல் சாதனங்களில் பஸ்சேவை நின்றது. பஸ்ஸை சேமித்து வைக்க கூகுள் வசதி செய்துள்ளது. கூகுள் பஸ்ஸின் ஆயுட்காலம் இரண்டு ஆண்டுக்கும் சற்று குறைவே.

கடைசியாக கூகுள் பஸ்ஸில் மறு பகிர்வு (வேறொருவர் பஸ்ஸில் இருந்து ரீசேர்) செய்த தகவல்,

"ஜெயலலிதா உண்மையிலேயே ஒரு நல்ல தலைவர் என நிரூபித்துக் கொண்டிருக்கிறார ்,,,,,,தவறு செய்பவர் தனது கட்சியை சேர்ந்தவரேயாயின ும் அவரை அப்ப்தவியில் இருந்து தூக்கி எறியும் தைரியம் இவருக்கு மட்டுமே உண்டு,,,,,,,,கோ டிக் கோடியாய், அமைச்சர்களும், குடும்ப உறுப்பினர்களும் கொள்ளையடித்தப் பொழுது, ஒரு கிழ முண்டம், என்ன செய்துக் கொண்டு இருந்தது என்பதை இந்த நாடே அறியும்,,,,,,,, ,,,,

சவுக்கு தளத்தில் ஒருவரின் பின்னூட்டத்திலிருந்து......."

*****

கூகுள் பஸ்ஸில் பட்டதும் கெட்டதும்

வலை எழுதுவதை விட அதிக நேரங்களை விழுங்கியது
2000க் கும் அதிகமான பஸ் தகவல்களை வெளியிட்டது
10,000 பின்னூட்டங்களை 500 பஸ்ஸர்களுக்கும் அதிகமானோருக்கு இட்டது
வலைப்பதிவர்கள் பலருடன் நேரடி விவாதங்களில் பங்கு பெற்றது

திமுக உபி பதிவர்கள் நட்பு வட்டத்திலிருந்து விலகிக் கொண்டனர் அல்லது நானும் அவர்களிடம் இருந்து விலகினேன், ஒருவேளை அவர்களிடம் இருந்த ஒட்டுதல் எனது முன்னாள் திமுக சார்பினால் ஏற்பட்ட ஒன்றாக இருந்திருக்கலாம், அது காணமல் போனதும் அவர்களும் இல்லை. பார்பனப் பதிவர்களுடன் நான் காரசாரமான விவாதம் செய்தாலும் தனிப்பட்ட முறையில் அவர்களிடம் தொடர்புகள் பாதிப்புக்கு உள்ளாவதில்லை, ஏனெனில் கொள்ளை அளவில் அவர்களுடன் நான் 99 விழுக்காடு ஒத்துப் போகததால் புதிதாக மாறுபட்ட கருத்து என்ற ஒன்று அங்கு இல்லவே இல்லை.

இவற்றில் இருந்து ஒன்று புரிந்தது ஒருவரிடம் ஏற்படும் நட்பிற்கான காரணம் ஒத்த சிந்தனைகள் என்றால் அந்த நட்பின் ஆயுட்காலம் நம் சிந்தனை செயல் மாறும் போது முடிவுக்கு வந்துவிடும், அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இலவசமாகக் கிடைப்பதில் வலை நட்புக்கு ஈடான ஒன்று இல்லை, அவை வரும் போகும், தொங்கிக் கொண்டிருக்க, துரோகிப் பட்டம் கொடுக்க, உருகி வழிய, நினைத்து வேதனைப்பட ஒன்றும் இல்லை.

கொள்கை / எண்ணம் இவற்றின் அடிப்படையிலான நட்புகள் உறுதியானவை அல்ல அல்ல என்ற புரிந்துணர்வை அளித்தது கூகுள் விவாதங்களே.



******

கூகுள் + ல் இனி தொடரச் செய்திருக்கிறது கூகுள், இவற்றின் வசதி நாம் விரும்புவோருடன் மட்டும் விவாதிக்கலாம், பகிரலாம், தேவை இல்லை எனில் கழட்டிக் கொள்ளலாம்.

உடன் பயணித்த பஸ் பயணிகள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

8 கருத்துகள்:

RAVI சொன்னது…

//உடன் பயணித்த பஸ் பயணிகள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்// THE SAME BLOOD

iniyavan சொன்னது…

//வலை எழுதுவதை விட அதிக நேரங்களை விழுங்கியது
2000க் கும் அதிகமான பஸ் தகவல்களை வெளியிட்டது
10,000 பின்னூட்டங்களை 500 பஸ்ஸர்களுக்கும் அதிகமானோருக்கு இட்டது
வலைப்பதிவர்கள் பலருடன் நேரடி விவாதங்களில் பங்கு பெற்றது// எப்படி உங்களுக்கு இவ்வளவு நேரம் கிடைத்தது?

கோவி.கண்ணன் சொன்னது…

//எப்படி உங்களுக்கு இவ்வளவு நேரம் கிடைத்தது?//

நேரம் என்பது நம் விரும்புவதற்கு கண்டிப்பாகக் கிடைக்கும்.

வீட்டில் மெகாசீரியல் பார்க்கிறவர்கள் அதுலேயே மூழ்கி இருப்பாங்க என்ற பொருள் தராது, இடையே இடையே தான் எல்லாம்

ரோஸ்விக் சொன்னது…

///இலவசமாகக் கிடைப்பதில் வலை நட்புக்கு ஈடான ஒன்று இல்லை, அவை வரும் போகும், தொங்கிக் கொண்டிருக்க, துரோகிப் பட்டம் கொடுக்க, உருகி வழிய, நினைத்து வேதனைப்பட ஒன்றும் இல்லை.
///

ரோஸ்விக் சொன்னது…

Its true... I agree Anna.

SelvamJilla சொன்னது…

you lines are simply super super super. i written some tamil kavithai in my blog.
please check and give ur comments
http://alanselvam.blogspot.com/

ILA (a) இளா சொன்னது…

நல்ல வேளை .. இதையாவது பதிவுல போட்டீங்களே

ஜோதிஜி சொன்னது…

(வேறொருவர் பஸ்ஸில் இருந்து ரீசேர்

அந்த சரித்திரப்புகழ் எனக்கு கிடைத்ததில் ரொம்பவே மகிழ்ச்சி.


தொங்கிக் கொண்டிருக்க, துரோகிப் பட்டம் கொடுக்க, உருகி வழிய, நினைத்து வேதனைப்பட ஒன்றும் இல்லை.

அற்புதம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்