பின்பற்றுபவர்கள்

26 டிசம்பர், 2011

இராஜ பாட்டை !

இந்தவார மூன்று மணி நேரத்தையும் கூடவே 10 ரிங்கிட் பணத்தையும் இந்தப்படம் விழுங்கியதால் நாள் குறிப்பாக இதை எழுதுகிறேன், இதை விமர்சனமாக எடுத்துக் கொள்ளவேண்டாம், விமர்சனமே செய்யமுடியாத மரண மொக்கை இந்தப் படம்.

பெரிய அளவில் விளம்பரங்கள் செய்த சுசி.கனேசன் விக்ரம் கூட்டணியின் 'கந்தசாமி' மெகா சொதப்பல் என்று தெரிந்தும் சுசீந்ந்திரன் இயக்கத்தில் வந்திருக்கும் இப்படம் அப்படியெல்லாம் இருக்காது என்று நினைத்து இந்தப்படத்திற்கு போனது தவறு தான். படத்தில் பெரியவர் கே.விஸ்வனாத்தைப் பயன்படுத்தியது தவிர்த்து பெரிதாக ஒன்றும் இல்லை, தம்பி இராமையாவை சும்மா கிச்சு கிச்சுக்கு பயன்படுத்தி வீணடித்திருக்கிறார்கள், நாயகி தீக்ஷா சேத்' படத்தில் நாயகி வேண்டும் என்ற எழுதப்படாத இலக்கணத்துக்கு வந்து இரண்டு பாடல்களுக்கு ஆடிப் போகிறார், நான் ரொம்பவும் எதிர்பார்த்த ரீமா சென் அவருடன் ஷேரேயா குத்தாட்டம் கடைசியில் வணக்கம் போட வருகிறது, அட அவர்களை முன்பே எங்காவது ஆடவிட்டு இருக்கலாம்.

விக்ரம் ஜீன்ஸ் பேண்ட் கை வைக்காத பணியன் போட்டு சூர்யா கெட்டப்பை போட்டு படுத்துகிறார், வயதுக்கு ஏற்ற வேடம் இல்லை என்பது அவரது முகமே காட்டுகிறது, இதில் காதல் ரெமொன்ஸ் என்று காட்சிகளை வைத்து இயக்குனர் கடுப்படித்துள்ளார். நாளைந்து சண்டை காட்சிகள் இருக்கு, எதோ புது டெக்னிக் காட்டி கடத்தப்பட்ட காதலியை கண்டுபிடிப்பதாக காட்டுகிறார்கள், காதலி அடைப்பட்ட வீட்டில் இருந்து ஒரே ஒரு 'தெரு விளக்கு' தான் தெரிகிறது என்று சொல்ல ஏரியா ஏரியாவாக மின்சாரத்தை துண்டித்து கடைசியாக தெருத்தெருவாக துண்டித்து, பின்னர் அந்த தெருவில் உள்ள ஒவ்வொரு லைட்டு மரமாக கண்டுபிடித்து காதலியை மீட்கிறார், ஸப்பா முடியல.

படத்தோட கதை என்னன்னு கேட்டால்,

'பெண் அரசியல் வாதியால் அபகரிக்கப்படும் ஆதரவற்ற குழந்தைகள் நலக் காப்பகத்தை சினிமா ஸ்டண்ட் நடிகரான விக்ரம் மீட்டு காப்பாற்றுகிறார்'

இசை யுவன் சங்கர் இராஜா பாட்டுகள் நினைவில் நிற்கவில்லை, சண்டைகாட்சிகளில் பின்னனி பரவாயில்லை.

யாரோ முப்பது கோடியை முப்பது நாளில் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் எடுத்தப் படம் போல இந்தப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.


விக்ரம் ஏற்கனவே மார்க்கெட் சரிந்த நிலையில் இது போன்ற படங்களை ஒப்புக் கொள்வதன் மூலம் சேதுவிற்கு முந்தைய நிலைக்கு தள்ளப்படலாம், வயதிற்கேற்ற கதைகளை தேர்வு செய்து நடிப்பது தான் விக்ரமின் திரையுலக எதிர்காலத்திற்கு நல்லது.


அக்கா அக்கா என்று சொல்லப்படும் பெண் அரசியல்வாதியைக் காட்டிய துவக்கங்களில் 'ஆகா'' என்று நிமிர்ந்து உட்கார்ந்திருந்தேன் ஆனா பெருசா ஒண்ணும் இல்லை.இராஜபாட்டை பார்க்கப் போகிறவர்களுக்கு மொட்டையோடு போடப்படும் பட்டை.

7 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

ஏற்கனவே சுசீந்ந்திரன் விக்ரம் கூட்டணியின் 'கந்தசாமி' ,////

சுசி கணேசன் என்பதை மாற்றி எழுதி உள்ளீர்கள்.

Palaniappan Kandaswamy சொன்னது…

ஆகக்கூடி இந்தப் பதிவுக்கு 10 ரிங்கட் ஹோகயா!

முகிலன் சொன்னது…

கந்தசாமி சுசி கணேசன்

kamalakkannan சொன்னது…

படத்தில் வரும் அக்கா "கனிமொழி " யையும் தற்கொலை செய்யும் பாய் "சாதிக் பாட்சா " வையும் நினைவு படுத்துகிறார்கள் .

கோவி.கண்ணன் சொன்னது…

//ஏற்கனவே சுசீந்ந்திரன் விக்ரம் கூட்டணியின் 'கந்தசாமி' ,////

சுசி கணேசன் என்பதை மாற்றி எழுதி உள்ளீர்கள்.//

சுசி கனேசன், சுசீந்திரன் பெயர் குழப்பம் ஆகிட்டு :)

இந்தப்படத்தை விக்ரம் ரொம்பவும் எதிர்பார்த்தாராம். ஹையோ ஹையோ

கோவி.கண்ணன் சொன்னது…

//முகிலன் said...
கந்தசாமி சுசி கணேசன்//

தகவலுக்கு மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// kamalakkannan said...
படத்தில் வரும் அக்கா "கனிமொழி " யையும் தற்கொலை செய்யும் பாய் "சாதிக் பாட்சா " வையும் நினைவு படுத்துகிறார்கள் .//

ஆட்சி மாறினால் இயக்குனர்களுக்கு எங்கிருந்து தான் தெகிரியம் வருதோ.
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்