பின்பற்றுபவர்கள்

7 டிசம்பர், 2011

ஆ ராசாவின் 50 பைசா சாதனை !

குப்பனுக்கும் சுப்பனுக்கும் (இவிங்க தான் இழிச்ச வாய், படிக்காத பாமரன் என்று சொல்ல இவர்களைக் கேட்காமலேயே இவங்க பேரைப் பயன்படுத்தலாம்) 50 பைசா செலவில் அழைத்துப் பேசுவும், ஏழைகளுக்கு அலைபேசியை எட்டும்படி செய்ததுடன் நல்ல விலைக்கு விற்று ஏழை நாடான இந்தியாவை வளர்ந்த நாடாக்கியுள்ளார் ராசா என்ற பரபரப்புரை செய்யப்படுகிறது, இந்த கூத்துக்கு இடையே 'நான் வாய்த் திருந்தால் பலர் ஜெயிலுக்கு போகனும்' என்று ராசா திருவாய் மலர்ந்து சவடால் விட்டு எவனும் உத்தமன் கிடையாது என்று ஒப்புதல் கொடுத்தது வேற அது இந்த மாசம்.

நண்பர் திரு அப்துல்லா இப்படி எழுதுகிறார்,

"குப்பனும்,சுப்பனும் செல் பேசலை யார் சார் இப்ப அடிச்சுகிட்டா? நாட்டுல நாலு பெரிய மனுசன் பேசுனாப் போதாதா? அப்படிப் பார்த்தா இந்தாள் தேசத்துக்கு 1,76,000 கோடி இழப்பு ஏற்படுத்துனது உண்மைதானே சார்? ஆமாம் சார். உண்மைதான். ஏல முறையைத் தவிர்த்தால் இழப்பு ஏற்படும்னு தெரிஞ்சேதான் செஞ்சார். " அட அயோக்கியப் பயலுகாளா? தெரிஞ்சேதான் செஞ்சிகளாடா பாவிகளா"ன்னு தோணுதா? கொஞ்சம் வெயிட் பண்ணி அடுத்த பத்தியைப் படிச்சுட்டு அந்த முடிவு சரியா தப்பான்னு யோசிங்க‌.

நானும் நீங்களும் நாளை மீண்டும் நேரில் சந்திப்பதாக இன்று நேரில் பேசிக்கொண்டு இருக்கும்போது முடிவு செய்கிறோம். சந்தர்ப்ப வசத்தால் நாளை நான் வேறு இடத்திற்கு செல்ல வேன்டிய சூழல். என்ன செய்வேன்? இப்போது மலிவுவிலையில் செல் இருப்பதால் 50 பைசாவிற்கு உங்களை அழைத்து நான் வர இயலாததைச் சொல்லிவிடுவேன். நீங்களும் வரமாட்டிர்கள். ஆனால் நாட்டில் இப்போதும் அவுட் கோயிங் 20 ரூபாய் இன்கம்மிங் 15 ரூபாய் என்ற அளவிலேயே இருந்தால் என்ன ஆகும்? சத்தியமாக இதை எழுதும் என்னிடமும், இதைப் படிக்கும் உங்களிடமும் நிச்சயம் செல்பேசி இருக்காது. நான் உங்களைத் தொடர்புகொள்ள முடியாது" - திரு அப்துல்லா

அவர் சார்ந்துள்ள இயக்கத்தைத் தாங்கிப் பிடிப்பது அவர் விருப்பம் அதில் ஒன்றும் தவறு இல்லை, ஆனால் உண்மைகளை திரித்தும், தவறான தகவல்களைத் தருவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது, 'ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை காசு கொடுத்து வாங்கப்படாத இயற்கைக் கொடை, அதை எவ்வளவுக்கு விற்கிறோமோ அதை லாபம் என்றே கருத வேண்டும்' என்கிறார்

அமெரிக்காவில் 2008ல் நடந்த அலைக்கற்றை ஏலத்தில் அமெரிக்க அரசுக்கு கிடைத்த தொகை $19.592 billion (ஒரு பில்லியன் = ஆயிரம் மில்லியன் = 100 கோடி) = 1900 கோடிகள், இந்திய ரூபாயில் = 76,000 கோடி

2010 கணக்கெடுப்பின் படி அமெரிக்க மக்கள் தொகை 30 கோடி அதில் மொபைல் வைத்திருப்பவர்கள் 30 கோடி பேர் = 30 கோடி இணைப்பு, கிட்டதட்ட எல்லோரிடமும் அலைபேசி உண்டு. அதாவது ஒரு இணைப்பின் 2533 ரூபாய் = 60 அமெரிக்க டாலர் அரசுக்கு கிடைக்கும். இந்தியாவில் இந்த உரிமத்தின் காலக்கெடு 20 ஆண்டுகள், ஒரு இணைப்பை 60 டாலருக்கு வாங்கும் அலைபேசி சேவை நிறுவனம் அதை 20 ஆண்டுகள் பயன்படுத்த முடியும். இந்தியாவில் செல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அமெரிக்கவைக் காட்டிலும் இருமடங்கிற்கும் சற்று கூடுதல் அதாவது 2011 கணக்கின் படி 86.5 கோடி பேர், 2008ல் 75 கோடி பேர் என்றாலும் அரசிற்கு கிடைத்திருக்க வேண்டியது அமெரிக்காவைப் போன்று இரண்டரை மடங்கு 1,75,000 கோடி. இவை உத்தேசக் கணக்கு தான், இவற்றின் அரசு மதிப்பீடு இன்னும் கூடுதலாகவே இருக்கும்.



இராசா ஏலத்தில் விற்றது 10,772 கோடி., ராசா குறைந்த விலைக்கு விற்றதால் தான் 50 பைசாவிற்கு அலைபேச முடிகிறதாம். இதில் 14 விழுக்காட்டை (1537 கோடிக்கு) ஏலத்தில் ஸ்வான் டெலிகாம் அதை 670 விழுக்காடு லாபத்தில் கிட்டதட்ட 10400 கோடிக்கு விற்றுள்ளது, 14 விழுக்காட்டிற்கே ஏலம் எடுத்த நிறுவனத்திற்கே 6.7 பங்குக்கு வருமானம் கிடைத்தால் மீதம் உள்ள 84 விழுக்காட்டிற்கு கிடைக்கும் லாபம் (10773 - 1537) கிட்டதட்ட 61,881 கோடிகள், அதாவது 10 ஆயிரம் கோடிக்கு அரசு விற்பனை செய்தவற்றை ஏலத்தில் வாங்கியவர்கள் விற்றது அல்லது லாபமாக நினைத்தது 70 ஆயிரம் கோடி. ஏலம் எடுத்தவர்களிடம் வாங்கியவர்களுக்கு இது கிட்டதட்ட அவர்கள் மறுவிற்பனையில் வாங்கும் போது அதன் பலன் அதைவிட இரண்டரை மடங்கு என்று தெரிகிறது, அதாவது ஸ்வான் டெலிகாமிடம் ஸ்பெக்டரம் வாங்கிய எடிசலாட்டிக்கு அதன் மதிப்பு இரண்டரை முதல் மூன்று பங்குவரையிலானது. இதைத்தான் மொத்தமாக மறுவிற்பனையில் கிடைக்கும் ஒருலட்சத்து 75 ஆயிரம் கோடி நட்டம் என்கிறார்கள்.

அமெரிக்காவில் 2008 நடந்த 2ஜி ஏலத்தின் மதிப்புகள் ஏற்கனவே தெரிந்தவை தான், இவற்றைப்பற்றி ஒரு மத்திய அமைச்சர் அறிந்திருக்காமல் குறைந்த விலைக்கு கொடுத்துவிட்டார் என்பதும் முந்தைய வழிகாட்டுதலைப் பின்பற்றினார் என்பதும் மாட்டிக் கொண்ட சமாளிப்பு வாதம் தான். உண்மையில் குறைந்த விலைக்கு விற்று அதைப் பயன்படுத்தும் விதிமுறைகளுடன் கொடுத்திருந்தால் ஒரு அழைப்புக்கு 50 பைசா என்ற நிலை 5 பைசா என்ற அளவிற்குக் கூடக் கிடைத்திருக்கலாம்.

இன்னும் சொத்தை வாதமாக 10 ஆண்டுக்கு முந்திய பழைய லேண்ட் லைன் கட்டணங்களை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள், இந்தியா மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் 10 ஆண்டுக்கு முன்பு பேசும் கட்டணங்கள் இன்றைய கட்டணங்களை விட 10 மடங்கு வரையில் இருந்தன. முன்பு அழைப்பு ஒன்றுக்கு ஒரு நிமிடத்திற்கு ஒருவெள்ளி செலவு பிடித்தது, தற்போது அழைப்பு அட்டைகள் மூலம் அதே ஒரு வெள்ளிக்கட்டணத்திற்கு 30 - 50 நிமிடங்கள் வரை பேசலாம், அதே போன்ற சில சலுகைக்கட்டணங்களும் கூட முன்பைக் காட்டிலும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது, இதற்குக்காரணம் இன்றைய தொழில் நுட்ப உத்தியே அன்றி ராசா செய்த சாதனை என்று எதுவும் இல்லை, மற்ற நாடுகளிலெல்லாம் ராசா தான் கட்டணம் குறைக்க சாதனை செய்தாரா ?

20 ஆண்டுக்கு முன்பு 75 ஆயிரம் கொடுத்து வாங்கிய கணிணிகள் அதைவிட பலமடங்கு வசதி வேகத்துடன் 20 ஆயிரத்திற்கே இன்றைக்கு கிடைக்கிறது, இதெல்லாம் ஐடி அமைச்சாராக இருந்ததால் நாட்டு மக்களுக்கு கிடைத்த நற்பலன் என்று சொன்னால் கேட்டுக் கொள்ள நாம் என்ன ஆடுகளா ?.

அண்ணன் அப்துல்லோ போன்றோர் பொறுப்பற்று ராசா மிகப் பெரிய சாதனையாளர், போற்றுங்கள் என்று எழுதுவது அவர் மீதான மதிப்பைக் குறைக்க வில்லை என்றாலும் நேர்மையை ஐயம் கொள்ளச் செய்கிறது.

முழுப்பூசினிக்காயை சோற்றில் மறைத்தாலும்.....எத்தனை நாளைக்கு ? பூசனிக்காயே அழுகி வெடித்து நாறிக் காட்டிவிடும், ராசாவின் சாதனைகள் என்று சொல்லப்படுபவை அப்படித்தான்

13 கருத்துகள்:

purushothaman.p சொன்னது…

நானெல்லாம் சிங்கப்பூர் வந்த புதுசுல 10 வெள்ளி(அப்போது ரூபாய் 260) போன் கார்டுக்கு 10 நிமிசம் தான் பேசமுடியும், அதனால 60 முடிந்து 1 வினாடி ஆகிவிட்டால் இன்னொரு வெள்ளி போயிரும் அதனால் கடிகாரத்தை வைத்து வினாடி கணக்கு பார்த்து தான் பேசமுடிந்தது, ஆனா இப்போ 10 வெள்ளிக்கு கார்டு போட்டு 10 மணி நேரம் பேசலாம், இதுல ராசா சாதனையாம், ஆமாமாம் சாதனைதான் ஒண்ணேமுக்கா லட்சம் கோடி அடித்து ஊழலில் சாதனை தான் :-)

விடுதலை சொன்னது…

ஏன்டா கொள்ளை அடித்தாய் என்று கேட்டால்.
50பைசாவில் மக்களை பேச வைக்க என்று கூற உங்களுக்கு வெட்கம் இல்லையா ?

ஏழைகளிடம் சேறும் சிறு சேமிப்பையும் கொள்ளை அடிக்கும்நோக்கதோடு அவர்களை நுகர்வு கலாச்சார நோய்யில் சிக்க வைத்து திருடும் உலகமயமாக்கல் கொள்கை.

அதை நியாயப்படும் கோ.வி.

விடுதலை சொன்னது…

அண்ணாவோ பெரியாரே நீங்கள் செய்ததை அதை நியாப்படுத்துவதை கேட்டு இருந்தால் தற்கொலை செய்துகொண்டுயிருப்பார்கள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

முழுப்பூசினிக்காயை சோற்றில் மறைத்தாலும்.....எத்தனை நாளைக்கு ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஏழைகளிடம் சேறும் சிறு சேமிப்பையும் கொள்ளை அடிக்கும்நோக்கதோடு அவர்களை நுகர்வு கலாச்சார நோய்யில் சிக்க வைத்து திருடும் உலகமயமாக்கல் கொள்கை.

அதை நியாயப்படும் கோ.வி.//

அண்ணே தலைப்பை மட்டும் படிச்சுட்டு பின்னூட்டத்தில் கொட்டியாசா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//அண்ணாவோ பெரியாரே நீங்கள் செய்ததை அதை நியாப்படுத்துவதை கேட்டு இருந்தால் தற்கொலை செய்துகொண்டுயிருப்பார்கள்//

வீரமணி திமுகவிற்கு அடிச்ச ஜால்ரா சத்தத்தை அண்ணாவோ பெரியாரோ கேட்டு இருந்தால் நாண்டுகொண்டு மாண்டு இருப்பார்களோ ?

Suresh Subramanian சொன்னது…

nice post... www.rishvan.com

bandhu சொன்னது…

//அமெரிக்காவில் 2008ல் நடந்த அலைக்கற்றை ஏலத்தில் அமெரிக்க அரசுக்கு கிடைத்த தொகை $19.592 billion (ஒரு பில்லியன் = ஆயிரம் மில்லியன் = 100 கோடி) = 1900 கோடிகள், இந்திய ரூபாயில் = 76,000 கோடி//
கணக்கில் ஒரு சிறு பிழை.. ஒரு மில்லியன் டாலர் என்பது இன்றைய விலையில் ஐந்து கோடி..

கருத்தில் நூறு சதவிகிதம் உடன் படுகிறேன்..

bandhu சொன்னது…

//இன்னும் சொத்தை வாதமாக 10 ஆண்டுக்கு முந்திய பழைய லேண்ட் லைன் கட்டணங்களை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள், இந்தியா மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் 10 ஆண்டுக்கு முன்பு பேசும் கட்டணங்கள் இன்றைய கட்டணங்களை விட 10 மடங்கு வரையில் இருந்தன. முன்பு அழைப்பு ஒன்றுக்கு ஒரு நிமிடத்திற்கு ஒருவெள்ளி செலவு பிடித்தது, தற்போது அழைப்பு அட்டைகள் மூலம் அதே ஒரு வெள்ளிக்கட்டணத்திற்கு 30 - 50 நிமிடங்கள் வரை பேசலாம், அதே போன்ற சில சலுகைக்கட்டணங்களும் கூட முன்பைக் காட்டிலும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது, இதற்குக்காரணம் இன்றைய தொழில் நுட்ப உத்தியே அன்றி ராசா செய்த சாதனை என்று எதுவும் இல்லை, மற்ற நாடுகளிலெல்லாம் ராசா தான் கட்டணம் குறைக்க சாதனை செய்தாரா ?//
முற்றிலும் உண்மை. பத்து வருடங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் இருப்பவருடன் பேச ஒரு டாலர் வரை ஆனது. இப்போது கிட்ட தட்ட ஐந்து சென்ட்டிர்க்கும் கீழே.. இது உலகெங்கும் ஆனது தான்

புதுகை.அப்துல்லா சொன்னது…

உங்களின் இந்த இடுகையால் எனது பதிவிற்கு அதிகமாக 500 ஹிட்ஸ் கிடைத்துள்ளது. நன்றி.

பித்தனின் வாக்கு சொன்னது…

good article.

பித்தனின் வாக்கு சொன்னது…

//அண்ணாவோ பெரியாரே நீங்கள் செய்ததை அதை நியாப்படுத்துவதை கேட்டு இருந்தால் தற்கொலை செய்துகொண்டுயிருப்பார்கள்//

avangathan erkanavey intha kanravi ellam pakkama sethu poitangaley..

innamum enn avangalai illukkanum...

ம.தி.சுதா சொன்னது…

ராசா ராசா என்று அழைத்த வாயெல்லாத்துக்கும் ரோசா கொடுத்திட்டாரே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்