பின்பற்றுபவர்கள்

17 பிப்ரவரி, 2011

மங்குனியின் ஒப்புதலும் சகுனியின் தந்திரமும் !

பிரதமர் மற்றும் அமைச்சர் பதவிகள் என்பது கூட்டாக ஏலம் எடுத்த ஏலத்திற்கு வந்த தனியார் சொத்து உடைமைகள் போலவும், ஏலம் எடுத்தவ்ர்களில் சிலர் அவங்க பங்குக்கு அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தினார்கள் அதற்கும் எங்களுக்கும் தொடர்போ தட்டிக் கேட்கும் பொறுப்போ இல்லை என்பதை நேற்றைய பேட்டியில் மன்மோகன் அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார். இதில் பாராட்டத்தக்கது 'ஊழல் நடை பெற்றதை ஒப்புக் கொண்டு தான். கபில் சிபில் போன்ற காங்கிரசு கைத்தடிகள் ஊழல் நடைபெறவே இல்லை என்று பேசியதன் மறுப்பாக பிரதமரே ராசாவையும் ராசாவுக்கு தொலை தொடர்பு பதவி கொடுக்கச் சொன்ன திமுகவையும் நேரடியாகவே போட்டுக் கொடுத்துள்ளார். இந்த பிரபஞ்சத்தின் மகத்தான ஊழலை செய்தி இதழ்கள் வெளிக் கொணர்ந்ததற்கு பாராட்டும் தெரிவித்திருக்கிறார். அத்தோடு இல்லாமல் ஊழலை பெரிதுபடுத்தாமல் நாட்டின் பிற நல்லத் திட்டங்களை பாராட்டவும் வேண்டும் என்று வேண்டுகோளும் வைத்திருக்கிறார். ஊழல் குறித்து ராசாவை (திமுகவை) கைக்காட்டியதும், செய்தித்தாள்களையும் பாராட்டியது மன்மோகன் தலைமையிலான கூட்டாச்சி அரசின் ஒப்புதல் வாக்கு மூலமாகும். கூட்டணி கட்சிகளின் செயல்களில் தலையிட முடியாமல் போனதன் கையாலாகத நிலைமைதான் எங்களது நிலைமை என்று சொல்லிக் கொண்டது, நாட்டின் வளர்ச்சியை விட காங்கிரசார் எங்களுக்கு பதவிகளே முதன்மையானவை என்பதும் அதில் சொல்லாமல் சொல்லப்படும் தகவல் ஆகும். இது போன்ற வெளிப்படையான பேச்சுகளை பாராட்டலாம், ஆனால் இந்த ஒப்புதல்கள் ஊழல்களை முற்றிலும் பல முனைகளில் இருந்தும், நீதி மன்றமும் தலையிட்ட பிறகே நடந்திருக்கிறது என்பதை பார்க்கும் போது கையும் களவுமாக பிடிபட்டவனின் ஒப்புதல் போன்றது தான் என்பதால் ஒப்புக் கொள்ளும் மனநிலைக்கு பாராட்டாலாம். ஆனாலுன் கருணாநிதியும் கைத்தடிகளும் ராசா வசமாக மாட்டிக் கொண்டாலும் இன்னும் ஊழலை ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மன்மோகனின் பேட்டி பல செய்தி இதழ்களில் வந்து பல்வேறு தரப்பு மக்கள் குறிப்பாக தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் இன்றைய தேதியில் இவற்றை உடனடியாக அறிந்து கொள்வதை தடுக்கவே 'மீனவர்கள் கைதிற்கான போராட்டங்களை' திமுக அரசு நடத்திப்பார்க்கிறது. இதன் நோக்கம் மீனவர் நலன் குறித்து அல்ல. மீனவர்களை கைது செய்திருக்கிறார்கள், முன்பைப் போல் சுட்டுக் கொல்லவில்லை. சுட்டுக் கொன்ற போதெல்லாம் மீனவர்களுக்கான எந்த போராட்டத்தையும் நடத்தி இருக்காத திமுக ஆதரவாளர்கள், கைதுகளுக்கு போராடி கனிமொழி உள்ளிட்டோர் சிறை செல்வதாக செய்தி போடுவதால் மன்மோகனின் ஒப்புதல் வாக்குமூலம் பல்வேறு தரப்பை அடைவதை தடுக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.

சிபிஐ விசாரணைகள் ராசாவிடம் விசாரணை நடத்தி உண்மைகளைப் பெருகிறதோ இல்லையோ தனக்கும் கீழ் பணி புரிந்தவரின் ஊழல் குறித்து பிரதமரே வாய் திறந்த பிறகு ராசா குற்றவாளியே இல்லை என்று திமுக தரப்பில் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. இப்பவும் ராசா குற்றவாளி இல்லை என்று திமுக தரப்பு உறுதியாக நம்பினால் பிரதமர் பொய் சொல்லுகிறார் என்று குற்றம் சாட்டி காங்கிரசுக்கு எதிராக மத்திய அரசு அலுவலங்கள் முன்பு போராட்டம் நடத்தலாமே. மன்மோகன் மற்றும் சோனியாவின் உருவ பொம்மைகளை திமுகவினர் எரித்து போராடலாமே ? முன்வருவார்களா ? கருணாநிதியின் திமுக ஆதரவாளர்கள். மன்மோகன் திமுக - காங்கிரசு சட்டமன்ற கூட்டணி வெற்றி பெரும் என்று வெளிப்படையாகக் கூறினாலும் திமுகவுடன் கூட்டணி தேர்தல் வரையிலும் தொடருமா என்பது ஐயமே. ஒரு மாநிலத்தில் கிடைக்கும் வெற்றிகளை விட ஒட்டுமொத்த இந்தியர்களின் ஆதரவு காங்கிரசுக்கு தேவை என்பதால் தான் ராசாவின் கைது நடவடிக்கையும், பிரதமரின் ஒப்புதலும் நடந்தேறி இருக்கிறது, இந்த ஆதரவுகளை தக்கவைத்துக் கொள்ள காங்கிரசு தன் கையைப் பிடித்திருக்கும் திமுகவின் கையை உதறினாலும் வியப்படைய ஒன்றும் இல்லை. காங்கிரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது, எனவே திமுகவை கழட்டிவிடுவதன் மூலம் தனக்கு 'இமேஜ்' கிடைக்கும், அல்லது 'இமேஜை' தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்று நம்புகிறது.

இதையெல்லாம் பார்த்து கணக்கு போடும் கருணாநிதி மகளை மீனவர்போராட்டத்தினால் கைது செய்வதன் மூலம் மகளை கைது செய்து மான்பு மிகு மன்னவன்' பட்டம் கிடைக்குமா? மீண்டும் திமுக அரியணை ஏறுமா என்று பார்க்கிறார். இனத்துரோகம், இமாலய ஊழல், வாரிசு(ருட்டிக்கொள்ளும்) அரசியல் என தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட பல்வேறு ஓட்டைகளுடன் திமுக கப்பல் தேர்தல் கடலில்.... தேறுவது ஐயமே. ராசாவின் ஊழல் அம்பலம் பார்பன சதி, தலித் விரோதம் என்றெல்லாம் கதைவிட்டுப்பார்க்கும் முதல்வர், இன்னும் என்ன என்ன நாடகம் நடத்தி மேலும் மேலும் பெயரிழுக்குப் படப் போகிறாரோ !

7 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

இன்னும் என்ன என்ன நாடகம் நடத்தி மேலும் மேலும் பெயரிழுக்குப் படப் போகிறாரோ !
////

mmm innum varum...

உமர் | Umar சொன்னது…

//மத்திய அரசு அலுவலங்கள் முன்பு போராட்டம் நடத்தலாமே. மன்மோகன் மற்றும் சோனியாவின் உருவ பொம்மைகளை திமுகவினர் எரித்து போராடலாமே ? முன்வருவார்களா ? கருணாநிதியின் திமுக ஆதரவாளர்கள்.//

ஹிஹி! ஏதும் பகல் கனவு கண்டீங்களா?

மீனவர்கள் கைது என்று ஊடகங்களில் செய்தி வெளியானது, காலை 9:10 க்கு. நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திமுக தலைகள் மயிலையில் ஆஜரானது காலை 9:30 க்கு. அதிலும் ஒரு மணி நேர பயண தூரத்தில் வசிக்கும் தலைகளும் 9:30 க்கே ஆஜர். 106 மீனவர்களோடு என்னும் வாசகம் கொண்ட பேனர் வேறு காலை 9:30 க்கு அங்கு வந்து விட்டது. செய்தி கிடைத்த 20 நிமிடங்களுக்குள் இவ்வளவும் செய்ய முடிந்த இவர்கள், எவ்வளவும் செய்வார்கள்.

ப்ளெக்ஸ் பேனர் கடைகளின் உரிமையாளர் திமுக வைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட, அங்கு வேலை செய்பவர்களை 10 மணிக்கு முன் வேலை வாங்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.

9:10 க்கு செய்தி கிடைத்து, ஆட்கள் இல்லாத ப்ளெக்ஸ் பேனர் கடைகளில் பேனர் செய்து, ஒரு மணி நேரம் பயணம் செய்து 9:30 க்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

என்ன வேடம் போட்டாலும், கொண்டை தெரிந்துவிடுகின்றது.

ரிஷி சொன்னது…

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியாவுக்கும், காங்கிரஸுக்கும் பங்கு போயிருக்கக்கூடிய பட்சத்தில் காங்கிரஸ், திமுகவுடனான உறவை முறித்துக் கொள்ளாது!!

Pranavam Ravikumar சொன்னது…

I am not poitically inclines to any party. But don't see any stunning progress in the yester years. Not in the case of TN but in our state too. We people have hundred reason to complain, the one in the top has hundred and one reason to say...!

The show must go on...!


Regards

Pranavam Ravikumar

ராவணன் சொன்னது…

கொச்சுரவி இங்கேயும் வந்தாச்சா?

எங்க அக்கா..கனிமொழி அம்மையார் சாரி கனிமொழி நாடார் பற்றி அவதூராக எழுதவேண்டாம்.

ராவணன் சொன்னது…

அய்யா கும்மி.... ஒழவுத்துறை என்று ஒன்று உள்ளது. அவர்கள் செய்தியை முன்னமே கூறியிருக்கலாம்.

நம்ம செகத்து கசுபர், டக்குலெஸ், தொண்டைமானு, ராசபட்சே...சே...
எல்லாம் நம்ம கனிமொழி நாடாரின் ஒழவுத்துறையில் உள்ளவர்கள்.

Unknown சொன்னது…

மனமோஹன சிங்கத்திற்கு, புது நாமகரணம் சூட்டியுள்ளார்கள், வட இந்திய மீடியாக்கள்! என்ன தெரியுமா? ... திருதராஷ்டிரர்! துரியோனாதிகளின் லீலைகளை, டர்பனோடு சேர்த்துக் கட்டிய கண்ணாடி போட்டு,பாராமல் இருப்பதால்!( கோவி சார்! இப்போதெல்லாம் தினமலரைத் தாண்டி வெகுதூரம், வந்துவிட்டேன்! ஓ.கே?!)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்