பின்பற்றுபவர்கள்

14 பிப்ரவரி, 2011

முஸ்லிம்களும் மூன்றாம் பாலினமும் !

ஒரு சில மீன் வகைகள், தவிர இனங்கள் தவிர்த்து ஆண் / பெண் இருத்தன்மை ஒன்றாக அமையப்பட்ட உயிரினம் மிகக் குறைவு. ஒரு செல் உயிரிகளுக்கு பால் அமைப்புகள் கிடையாது அவை தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும். உயிரின இனப் பெருக்கத்திற்கு உயிர்களிடையே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் உயிர்களை எப்போதும் உற்பத்தி செய்து கொண்டிருக்க முடியும் என்கிற விதியில் ஏற்பட்ட பிரிவுகளே ஆண் / பெண் அமைபு. ஈர்ப்பு என்பது இன்பமாகவும் அதன் விளைவுகள் இனப் பெருக்கம், அவ்வாறு பெருகும் இனத்திற்கு பாதுகாப்பான தாயன்பு என்கிற இணைப்பு அவற்றின் பருவ வயது வரையிலான வளர்ச்சிக்கு இயற்கை ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு அமைப்பே ஒரே உயிரினத்தின் பால் வேறுபாடுகள். உடலமைப்பும், இனப்பெருக்க உறுப்புகளும் ஒரு உயிரனத்தை ஆண் பெண் என்று காட்டுகின்றன என்றாலும், இந்த இரண்டு பிரிவும் ஒன்றை ஒன்று உற்பத்தி செய்யும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. பால் உறுப்புகள் தவிர்த்து ஒரு ஆண் தன் வடிவத்தைப் போன்ற பெண்ணிற்கு தந்தையாவதும், ஒரு தாய் தன் உருவத்தை ஒத்த ஆணைப் பெற்றெடுப்பதற்கும் இயற்கை வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது. இவ்வாறு உருவம் பெற்றிருக்கும் உயிரினங்கள் தன்னை ஆணாகவும் பெண்ணாகவும் அறிந்து கொள்ள முதல் காரணம் அவற்றின் உடலமைப்பு தான். மனித இனத்தில் மனிதன் சமூகமாக மாறவில்லை என்றால் இந்த ஆண் / பெண் பிரிவுகளில் உடலும் மனமும் சரியாகவே பொருந்தி இருக்கும் என்று கருதுகிறேன். ஒரு ஆண் தன்னை பெண்ணாக உணர்வதற்கும், ஒரு பெண் தன்னை ஆணாக உணர்வதற்கும் உடல் குறித்த காரணங்களை விட சமூகம் குறித்தக் காரணங்களே முதன்மையாகிறது. பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற சமூக அமைப்பில் தான், இவற்றை மீறிய மூன்றாம் பாலினமாக மனிதர்கள் தோன்றுகிறார்கள்.

ஆண் பெண் பாகுபாடின்றிய காட்டுவாசிகளிடமோ, நரிக்குறவ்ர்களிடையோ மூன்றாம் பாலினர் உற்பத்தி ஆகுவதில்லை என்றே நினைக்கிறேன், அங்கே இனப் பெருக்கம் மட்டும் அதைச் சார்ந்த ஈர்ப்பு என்பதைத் தவிர்த்து ஆண் / பெண் மனங்கள் எதுவும் கிடையாது, வேட்டையாடுதல், தொழில்கள் ஆகியவற்றை இருவரும் சேர்ந்தே செய்கிறார்கள். நாகரீக வளர்ச்சி பெற்ற சமூகத்தில் தான் பெண்ணுக்கான இலக்கணமும், ஆணுக்கான இலக்கணமும் புழக்கத்தில் இருந்து வாழ்க்கைத் தரமாக ஆகிவிட்ட படியால், உடலும் மனமும் ஒன்றிணைந்து மூன்று வயதின் பிறகு ஒரு குழந்தை தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ நினைக்கத் துவங்குகிறது. பருவ வயதினில் ஏற்படும் உடலியல் மாற்றங்களில் அதை உறுதி செய்து கொள்கிறது. எதிர்பாராவிதமாக ஒரு சிலரின் பருவமாற்றங்களில் ஏற்படும் கோளாறுகள் வேறுமாதிரியான (சுரப்பிகளைத் தூண்ட அல்லது கட்டுப்பட்டு) விருப்பங்களை ஏற்படுத்த தன்னுடைய பாலினம் உறுதி செய்ய முடியாத சிக்கலுக்குச் செல்லவே அவர்கள் குழப்பத்தில் சென்று புதிய முடிவுகளை எடுக்கும் நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். இவர்கள் தான் மூன்றாம் பாலினர். இவ்வாறு ஒரு ஆண் தன்னை ஒரு பெண்ணாக நினைத்து மூன்றாம் பாலினர் நிலை அடைவது என்பது அவராக விரும்பி ஏற்றுக் கொண்ட நிலை இல்லை, உடல் மற்றும் மனச் சூழலலால் அமையப் பெற்றதே. பிறக்கும் போது ஒருவர் ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்தாலும் அதன் முழுமை என்பது பருவ மாற்றங்களினால் பெறப்படுவதே. ஆகையால் ஒருவர் ஆணா பெண்ணா என்பதை பிறப்பு முடிவு செய்வதில்லை அதை பருவ வயதே முடிவு செய்கிறது. இவற்றை மதம் மற்றும் குரான் வசனங்களைக் காட்டி இஸ்லாமிய சமூகம் ஒப்புக் கொள்வதில்லை. காரணம் அல்லாவின் படைப்பு ஆணையும் பெண்ணையும் தான் படைக்கிறது. இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் ஒருவரை அல்லா படைக்கவே இல்லை என்கிறார்கள்.

ஒரு சில கட்டுபாடுகளை மூன்றாம் பாலினத்தினர் மீது இஸ்லாமிய நாடுகள் விதித்திருக்கிறது. அதாவது மூன்றாம் பாலினம் என்கிற சொல்லே இஸ்லாத்திற்கு எதிரானது ஆகவே மூன்றாம் பாலினத்தில் ஆணுறுப்பு உடையவர்கள் தன்னை ஆண் என்றோ பெண் என்றோ அழைத்துக் கொள்ள மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஈரான் போன்ற தீவிர இஸ்லாமிய நாடுகளில் மூன்றாம் பாலினர் தன்னை பெண்ணாக அறிவித்துக் கொள்ள ஆண் உறுப்பை நீக்கிக் கொண்டவராக இருக்க வேண்டும், இதற்கு சட்டத்திலும் அனுமதி உண்டு. ஆனால் திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை. அறுவை சிகிச்சை செய்து கொள்ளாதவர்களுக்கு பெண்களைப் போன்று நடந்து கொள்ள அனுமதி கிடையாது. . மலேசிய உள்ளிட்ட வேறு சில நாடுகளில் ஆண் உறுப்பை நீக்கிக் கொண்டாலும் அரசு ஆவணங்களில் அவர்களின் பாலினம் ஆண் என்றே இருக்கும். மதம் சாராத அரசுகள் ஒருவர் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ அறிவித்துக் கொள்ள உரிமை வழங்குகிறது. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் மேற்கண்ட கட்டுப்பாடுகள் நாட்டின் ம்த உணர்வின் ஆழங்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் திருநங்கை அல்லது மூன்றாம் பாலினத்தினர் பற்றிய புரிந்துணர்வு இருந்தாலும் அவர்களை சக மனிதனாக மதிக்கும் நிலை இன்னும் வரவில்லை. அண்மையில் தமிழகத்தில் மூன்றாம் பாலினமாக ஆன ஒருவரை 'இஸ்லாத்துக்கு எதிராக நடந்து கொள்கிறார்' என்று அவரது உறவினரான முஸ்லிம் இளைஞரால் ஓட ஓடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய சமூகத்தில் மூன்றாம் பாலினர் பற்றிய ஒரு தெளிவோ, வழிகாட்டுதலோ சரியாக அமையவில்லை காரணம் இஸ்லாம் உடல் உறுப்புகளை வைத்து தான் ஆண் பெண் என்று முடிவு சொல்கிறது, அதற்கு மாற்றாக அறிவித்துக் கொள்ள குரானிலோ, ஹதீசீலோ வழிகாட்டுதல் கிடையாது, தடையே நிலவுகிறது.

மூன்றாம் பாலினர் மட்டுமின்றி மனவளர்ச்சி இன்றி பிறந்தக் குழந்தைகள் குறித்து இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்டு இத்தகைய படைப்பு அல்லாவின் குறைதானே என்று கேட்டால் ஒப்புக் கொள்ளமாட்டார்கள், பெற்றோர் கர்பம் அடைந்த போது தவறான மருந்துகளை உட்கொண்டிருப்பார்கள் அதனால் இத்தகைய குழந்தை பிறந்திருக்கலாம் மற்றபடி 'அலக்' என்ற நிலையில் கருவுறச் செய்வதுடன் அல்லாவின் வேலை முடிந்துவிட்டது என்கிறார்கள். அல்லா நன்கு அறிந்தவன் என்றால் நாளைக்கு இந்தக் குழந்தை பிறந்தால் இப்படி ஆகிவிடும் என்று அந்த கருவுறுதலையே தடுத்து இருக்கலாமே ? என்ற என்போன்றவரின் அப்பாவித் தனமான கேள்விகள் அல்லாவின் படைப்புத் திறனை என்றுமே குறைத்து மதிப்பிடாது என்றே நினைக்கிறேன். மூன்றாம் பாலினரை மூன்றாம் பாலினர் என்று அழைக்காவிட்டாலும் ஒரு பெண்ணாக ஏற்றுக் கொள்கிறார்களே என்பது மகிழ்ச்சியான ஒன்று தான். என்னைப் பொருத்த அளவில் மூன்றாம் பாலினப் பெருக்கத்தை ஆண் / பெண் சமூக இலக்கணங்களை சரி செய்தால் குறைக்க முடியும் என்றே கருதுகிறேன், ஆணாக பிறந்த ஒருவர் விரும்பி பெண் உடைய அணிந்து கொள்ள முதல் காரணம் பெண்ணிற்கான உடை இவைகள் என்பதை சமூகம் முடிவு செய்திருப்பதும், பெண் என்பவள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமென்ற இலக்கணங்கள் போன்றவையாகும், உடல் ரீதியான பருவ மாற்றங்கள் ஒரு ஆணை பெண்ணாக உணரவைத்தாலும், சமூகம் பால் வேறுபாடின்றி இருக்க தனக்குத் தானே ( ஆண் பெண்ணாக மாறும் ஆசை) தூண்டல் உடல் மற்றும் மன ரீதியில் பயணப்பட ஒன்றும் இருக்காது. மற்றபடி மத ரிதியான கட்டுப்பாடுகளோ, மருந்துகளோ இந்த உணர்வுகளை குறைத்து மூன்றாம் பாலின உற்பத்தியை குறைத்துவிடாது. ஆண் பெண் மன ரீதியான பாகுபாடு இல்லாத இனங்களில், உயிரினங்களில் இத்தகைய இரட்டை தன்மை உடைய மூன்றாம் பாலினம் அரிது அல்லது இல்லை என்றே கூறிவிடலாம்.

மூன்றாம் பாலினத்தினரையும் ஓரின சேர்கையாளர்களையும் ஒன்றாகவே பார்த்து நிராகரிக்கிறது இஸ்லாம்.

பின்குறிப்பு : கட்டுரையில் ஏதும் தவறானவை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள், மாற்றிக் கொள்கிறேன்.

17 கருத்துகள்:

உமர் | Umar சொன்னது…

குர் ஆனில் பல்வேறு வசனங்களில் உயிரினங்களிலும் மற்றவற்றிலும் இருக்கும் ஜோடி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு முக்கிய வசனங்களை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன்.

36: 36 - பூமி முளைக்கச் செய்வதிலிருந்தும், அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள் அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன்.

51:49 - நீங்கள் சிந்திப்பதற்காக ஒவ்வொரு பொருளிலும் ஜோடிகளைப் படைத்தோம்.

---

இந்த வசனங்கள் மிகப்பெரும் அறிவியல் உண்மைகள் என்றும், அனைத்திலும் ஜோடிகள் உண்டு என்றும் கூறுவார்கள். ஆனால் ஜோடிகள் இல்லாத இருபாலின உயிரினங்கள் (Hermaphrodites) இத்தகைய ஜோடி என்னும் விதிமுறைக்குள் அடங்கவில்லையே என்று கேள்வி எழுப்பினால், ஒரே உயிரினத்தில் ஒரு ஜோடியின் பாலின உறுப்புகள் ஒன்றாக அமைந்திருந்தாலும் அவை ஜோடியே என்று கூறுவார்கள்.

அப்படியானால் Bdelloidea வகை உயிரினங்களில் ஆண் உயிரினமும் கிடையாது; ஆண் இனப்பெருக்க உறுப்பும் கிடையாது. பெண் இனப்பெருக்க உறுப்பு மட்டுமே உடைய பெண் உயிரிகள் மட்டுமே இருக்கின்றனவே, அவை எப்படி இந்த ஜோடி என்னும் விதிமுறைக்குள் அடங்கும் என்றால், மௌனமே உந்தன் பேர் பெண்மையோ என்று தோன்றுகின்றது.


இதுதான் இப்படியென்றால், இனப்பெருக்க உறுப்புகளே இல்லாத Polyps போன்ற உயிரனங்களும் இருக்கின்றன. அவையும் இந்த விதிக்குள் பொருந்தாதவை.


----
குர் ஆன் வசனங்கள் மட்டுமே சரியானவை; அவற்றிற்கு முரணாக இருக்கும் விஷயங்கள் எல்லாம் குர் ஆன் பார்வையிலேயே பார்க்கப்பட வேண்டும். எனவே, இத்தகைய விஷயங்களுக்கெல்லாம் புது வார்த்தைகள் கொடுப்பதை விடுத்து குர் ஆனில் இருக்கும் வார்த்தைகளையே உபயோகப்படுத்த வேண்டும். அதனால், மூன்றாம் பாலினம் என்னும் வார்த்தையை உபயோகிக்காமல், அவர்களை ஆண்கள் என்றே நாம் கருத வேண்டும்.

--
இருக்கும் சட்டைக்குள் உங்கள் உடல் பொருந்தாவிட்டால் என்ன? எங்கள் பார்வையில் அந்தச் சட்டை மிகவும் சிறப்பானது. அதனால், உங்கள் உடலில் சட்டைக்கு பொருந்தாத பாகங்களை எல்லாம் வெட்டிவிட்டு சட்டையை அணிந்து கொள்ளுங்கள். இதை விடவும் சிறப்பான சட்டை உலகில் கிடையாது.

Rajan சொன்னது…

//ஆண் பெண் பாகுபாடின்றிய காட்டுவாசிகளிடமோ, நரிக்குறவ்ர்களிடையோ மூன்றாம் பாலினர் உற்பத்தி ஆகுவதில்லை என்றே நினைக்கிறேன்//

விவாதத்திற்கும் ஆய்வுக்கும் உரியது. அவர்களிடம் ஆணுக்கும் பெண்ணுக்குமென்று வகைப் படுத்தப்பட்ட வாழ்முறை ஏதுமில்லையாதலின் வெளித்தெரியாதிருக்கவியலும்.

Rajan சொன்னது…

//வேட்டையாடுதல், தொழில்கள் ஆகியவற்றை இருவரும் சேர்ந்தே செய்கிறார்கள்//

ஒரே விதமாக செய்வது இல்லை என்று நினைக்கிறேன். நம்மூர் பழங்குடியினரை விடுங்கள். வெளியுலக வாடையே அறியாத தென்அமெரிக்க வனமனிதர்கள் குழுக்களிலும் ஆண்/பெண் களுக்கான பிரத்யேக வாழ்வியல் முறைகள் இருக்கத்தான் செய்கின்றன.

Rajan சொன்னது…

//ஒரு ஆண் தன்னை பெண்ணாக உணர்வதற்கும், ஒரு பெண் தன்னை ஆணாக உணர்வதற்கும் உடல் குறித்த காரணங்களை விட சமூகம் குறித்தக் காரணங்களே முதன்மையாகிறது. //

//இவ்வாறு ஒரு ஆண் தன்னை ஒரு பெண்ணாக நினைத்து மூன்றாம் பாலினர் நிலை அடைவது என்பது அவராக விரும்பி ஏற்றுக் கொண்ட நிலை இல்லை, உடல் மற்றும் மனச் சூழலலால் அமையப் பெற்றதே//

முரண்!

Rajan சொன்னது…

//காரணம் அல்லாவின் படைப்பு ஆணையும் பெண்ணையும் தான் படைக்கிறது. இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் ஒருவரை அல்லா படைக்கவே இல்லை என்கிறார்கள்.
//

பழம்புத்தகங்களுக்குள் எங்காவது கருணானிதி சொத்துக் கணக்கைப் போல புரியாத வசனங்கள் மறைந்திருக்கும்! தேடிப் பிடித்து தருவார்கள்! பொறுமையாக இருங்கள்! ;-)

suvanappiriyan சொன்னது…

கோவிக் கண்ணன்!

//அதாவது மூன்றாம் பாலினம் என்கிற சொல்லே இஸ்லாத்திற்கு எதிரானது ஆகவே மூன்றாம் பாலினத்தில் ஆணுறுப்பு உடையவர்கள் தன்னை ஆண் என்றோ பெண் என்றோ அழைத்துக் கொள்ள மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஈரான் போன்ற தீவிர இஸ்லாமிய நாடுகளில் மூன்றாம் பாலினர் தன்னை பெண்ணாக அறிவித்துக் கொள்ள ஆண் உறுப்பை நீக்கிக் கொண்டவராக இருக்க வேண்டும், இதற்கு சட்டத்திலும் அனுமதி உண்டு. ஆனால் திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை.//

நீங்கள் கேட்டிருக்கும் பல கேள்விகளுக்கும் நண்பர் ஆஷிக் ஒரு தொடரே எழுதிக் கொண்டிருக்கிறார். அதில் பல விளக்கங்களும் உங்களுக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.


பதிவை இங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் கேட்டிருக்கும் பல கேள்விகளுக்கும் நண்பர் ஆஷிக் ஒரு தொடரே எழுதிக் கொண்டிருக்கிறார். அதில் பல விளக்கங்களும் உங்களுக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.


பதிவை இங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

4:18 AM, February 15, 2011//

நீங்கள் சுட்டி இருக்கும் பதிவு இஸ்லாமியர் பார்வையில் திருநங்கை அல்லது மூன்றாம் பாலினர் குறித்தப் பதிவு.

காதுகேளாததால் வாய்பேசாத ஒருவர் பயிற்சி கொடுத்தால் வாய் பேசுவார், 'பே.......பே' என்று அவர் பேசுவதே அவர் பேசுவதற்கான சாட்சி என்பது போன்ற தவறான புரிந்துணர்வில் எழுதப்பட்ட இடுகை. மேலும் இதை எழுதிவிட்டு எவரேனும் திருநங்கையிடம் கருத்து கேட்டாரா என்றும் தெரியவில்லை. இஸ்லாமிய பொது புத்தியில் எழுதப்பட்ட இடுகையாக எனக்கு தெரிந்தது

கோவி.கண்ணன் சொன்னது…

////ஒரு ஆண் தன்னை பெண்ணாக உணர்வதற்கும், ஒரு பெண் தன்னை ஆணாக உணர்வதற்கும் உடல் குறித்த காரணங்களை விட சமூகம் குறித்தக் காரணங்களே முதன்மையாகிறது. //

//இவ்வாறு ஒரு ஆண் தன்னை ஒரு பெண்ணாக நினைத்து மூன்றாம் பாலினர் நிலை அடைவது என்பது அவராக விரும்பி ஏற்றுக் கொண்ட நிலை இல்லை, உடல் மற்றும் மனச் சூழலலால் அமையப் பெற்றதே//
//

முரண்!
*********

இராஜன் ஹார்மோன் இன்பேலன்ஸ் என்னும் உடல்குறையுடன் பெண் / ஆண் குறித்த சமூக எண்ணங்களும் சேர்ந்தே அவ்வாறு அமைந்துவிடுகிறது என்று சொல்லி இருக்கிறேன். இதில் முரண் இருப்பதாகத் தெரியவில்லை. உடலுறுப்புகளை நீக்கிக் கொள்ளும் திருநங்கைகள் வெளிநாடுகளில் இந்தியாவை ஒப்பிடுகையில் குறைவுதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெளியுலக வாடையே அறியாத தென்அமெரிக்க வனமனிதர்கள் குழுக்களிலும் ஆண்/பெண் களுக்கான பிரத்யேக வாழ்வியல் முறைகள் இருக்கத்தான் செய்கின்றன//

விலங்கினங்களிலும் கூட அந்த வேறுபாடுகள் வெளிப்படையானவையே. இருந்தாலும் பெண் என்றால் நளினம் ஆண் என்றால் வீரம் போன்ற கட்டுமானங்கள் ஆதிவாசிகளிடம் இல்லை என்றே நினைக்கிறேன்

ஷர்புதீன் சொன்னது…

:)
entry

அருள் சொன்னது…

மூன்றாம் பாலினம், ஓரினச் சேர்க்கை, இருபால் உறவு என்பனவற்றை உலகின் பல்வேறு மதங்களின் சார்பாக பேசுபவர்களும் விமர்சிக்கின்றனர் அல்லது எதிர்க்கின்றனர் என்றே கருதுகிறேன். இசுலாம் சார்பானவர்கள் சற்று கூடுதலான எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்!

முகமது அவர்களின் காலத்தில் மூன்றாம் பாலினம் குறித்த சர்ச்சை எதனையும் அவர் எதிர்கொண்டதாக குறிப்புகள் இல்லை என்கிறார்கள். அவ்வாறே, குர் ஆனும் நேரடியாக மூன்றாம் பாலினத்தை எதிர்க்கவில்லை. 'நாம் உம்மை இணையர்களாக உருவாக்கினோம்' என்று குர் ஆன் கூறினாலும் அந்த இணை என்பது ஆண் - பெண் தான் என்பதற்கும் அடிப்படை எதுவும் இல்லை என்று கருதப்படுகிறது.

இசுலாமிய நாடுகளான - மலேசியாவும் ஈரானும் மூன்றாம் பாலினத்தை அங்கீகரித்துள்ளன.

எனவே, 'மதத்தை விளக்குபவர்கள் தமது கருத்தை உள்ளே திணிப்பதன் விளைவுதான் மூன்றாம் பாலின எதிர்ப்பு' என்று கருதலாம்.

http://www.al-fatiha.org/

பொன் மாலை பொழுது சொன்னது…

மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்ட கட்டுரை.
ஆணோ,பெண்ணோ, அவர்களும் மனிதர்கள், நம்மை போன்ற உயிர்கள்தான் என்ற எண்ணம் வரவேண்டும்.
சிந்திக்க வைக்கிறது கண்ணன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குர் ஆன் வசனங்கள் மட்டுமே சரியானவை; அவற்றிற்கு முரணாக இருக்கும் விஷயங்கள் எல்லாம் குர் ஆன் பார்வையிலேயே பார்க்கப்பட வேண்டும். //

இன்னொரு குர் ஆன் கொடுக்க அல்லாவுக்கே அனுமதி இல்லை, ஏனென்றால் அவர் இறுதி தூதர் பற்றி ஏற்கனவே அறிவித்துவிட்டார் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஷர்புதீன் said...
:)
entry//
சிரிப்பானோடு எஸ்-ஸாகுறிங்க. சொந்தக்கருத்துன்னு எதுவும் இல்லையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//கக்கு - மாணிக்கம் said...
மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்ட கட்டுரை.
ஆணோ,பெண்ணோ, அவர்களும் மனிதர்கள், நம்மை போன்ற உயிர்கள்தான் என்ற எண்ணம் வரவேண்டும்.
சிந்திக்க வைக்கிறது கண்ணன்.

3:06 PM, February 15, 2011//

நன்றி மாணிக்கம் சார்

faizjmc சொன்னது…

In scientific world, third gender is nothing but a physiological problem of a man which can be diagnosed by counselling. In my life, i have seen an real example. One of my friend was having that problem in his childhood. After his parents guidance he is now leading a happy life with his wife and childrens. In god's creation, there are no 3rd gender.

கோவி.கண்ணன் சொன்னது…

//faizjmc said...
In scientific world, third gender is nothing but a physiological problem of a man which can be diagnosed by counselling. In my life, i have seen an real examடe. One of my friend was having that problem in his childhood. After his parents guidance he is now leading a happy life with his wife and childrens. In god's creation, there are no 3rd gender.//

So What, உடற்குறையை நோய் என்று வகைப்படுத்தினால் எதாவது மருந்தினால் குணப்படுத்தலாம், வகைப்படுத்த முடியாத நோய்கள் உண்டு, மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளை எந்த கணக்கில் சேர்க்கச் சொல்லி உங்க மதம் சொல்லிக் கொடுக்குது, அவர்களுக்கு உங்க சொர்கத்தில் இடம் உண்டா ?

உங்களைப் போன்ற அறிவீனர்களின் அவதனிப்பால் பெண் தன்மை உள்ள ஆணை ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுத்தால் அவள் வாழ்க்கையும் சேர்ந்தே பாழாகும், பிறகு அவள் தன் பாலியல் தேவைக்கு வேறு ஆணை நாட வேண்டி இருக்கும், அவளுக்கு வேசி பட்டம் கூடக் கிடைக்கும்.

ஆண் தன்மை உள்ள பெண்ணை ஆண் அப்படி அணுகுகிறானோ, அதையே தான் பெண் தன்மை உள்ள ஆணை அணுகும் பெண்ணுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும்.

கள்ள உறவுகள் பெருகுவதற்கு ஒரு ஆணின் / பெண்ணின் பெருங்காமம் அடங்கா காமம் காரணமாக இருப்பது போல் பாலியல் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பதும் ஒரு காரணம் ஆகும்.

திருநங்கை என்ற ஒரு பகுப்பை நம்பாத எந்த ஒரு முஸ்லிமாக இருந்தாலும் எவரும் தன் பெண்ணுக்கு அப்படி ஒரு வகையில் உள்ள ஆணைத் திருமணம் செய்துவைக்கமாட்டார். மறைத்து கட்டிக் கொடுத்து பின் சந்திசிரிக்கும் போது தெரிந்தால் உண்டு.

உங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றால் திருநங்கையாக பிறந்த முஸ்லிம் ஆணுக்கு முஸ்லிம் பெண்ணையே திருமணம் செய்ய முயற்சித்து தெரிந்து கொள்ளுங்களேன், அதில் உள்ள பிரச்சனைகளை.

வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ வேதப் புத்தகத்தில் உள்ளது தவிர எதுவும் புளிகாது என்று இருக்கும் உங்களைப் போன்றோருக்கு எவ்வளவு சொன்னாலும் கேட்காது என்பது நன்கு தெரியும், ஆனால் நச்சு பிரச்சாரங்களை உங்களுடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்பதைத்தான் என்போன்றோர் சொல்லுகின்றனர்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்