சதீலீலாவதி போன்ற முழுநீள நகைச்சுவைப் படம். படத்தின் தலைப்பு நாயகன் நாயகியின் பெயர் அதாவது மதனகோபால் என்கிற மதன் (மாதவன்), அம்பு (3ஷா). பணக்காரப் பையன் நடிகையைக் காதலித்தால் அவளை பலவாறு சந்தேகப்படுவான் என்கிற ஒருவரிக் கதையை நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்கள். கதை, வசனம், திரைக்கதை கமலஹாசன். கிரேஷியுடன் பல்வேறு படங்களில் பணியாற்றியதன் அனுபவம் கமலஹாசனின் வசனங்களில் தெரிகிறது, கொஞ்சோண்டு வேறுபாடு நகைச்சுவையை கொஞ்சம் தத்துவமாக அவ்வப்போது சொல்கிறார்.
நடிகையைக் காதலிக்கும் மாதவன் அவளின் நடவடிக்கையை நம்பாமல் அவள் சுற்றுலா போகும் வெளிநாட்டிற்கு (பாரிஸ்- வெனிஸ்) அவளைப் பின் தொடர்ந்து கண்காணித்து தகவல் அனுப்ப ஒரு தனியார் புலனாய்வாளரை (ஸ்பை) அனுப்புகிறார். அவ்வாறு அனுப்பப்படுபவர் கமல். கமல் ஒத்துக் கொண்ட செல்லக் காராணம் நண்பருக்கு (ராமேஷ் அரவிந்த்) கேன்ஷராம், அதற்கு நிறைய பணம் தேவைப்படுவதால் இந்த ஒற்றர் வேலைக்குச் செல்கிறாராம். ஊர்வசியும், இராமேஷ் அரவிந்தின் மனைவியாக வெறும் அழுகைக் காட்சிக்காக வந்துபோகிறார். ஒற்றராகச் செல்லும் கமல் த்ரிசாவின் நடவடிக்கையில் சந்தேகப்படும் படி இல்லை என்பதை மாதவனுக்கு தெரிவிக்க, சரி திரும்ப வந்துவிடு என்று கூறி கேன்சருக்கு பணம் கொடுக்க மறுக்கிறார். மாதவன் ஏமாற்றியதால் மாதவனை ஏமாற்ற திரிஷாவைப் பற்றி புதிதாக கிசுகிசுக்க, திரும்பவும் பின் தொடர கேட்டுக் கொள்ளப்பட்டு பண உதவியும் செய்யப்படுகிறது. இதற்கிடையே மாதவன் சந்தேகப்படுவதை திரிசா அறிந்து கொள்வதாகவும், கமலுடைய மனைவி விபத்தில் இருந்ததற்கு திரிஷா முன்பு ஏற்படுத்திய விபத்து என்பதாக கதை செல்ல மாதவன் மீது இருந்த காதல் கமல் மீது மாறுகிறது திரிசாவுக்கு.......முடிவில் என்ன ஆகியது என்பதை சதிலீலாவதி, ஒளவைசண்முகி போன்று நகைச்சுவை குழப்பங்களுடன் சொல்லி இருக்கிறார்கள்.
உஷா உதுப் மாதவனின் அம்மாவாக வந்து பிராமணாள் பாஷை பேசி மாதவனும் திரிஷாவும் எப்போது பிரிவார்கள் என்று காத்திருக்கிறார். சில இடங்களில் கமலின் வசனம் மிகவும் கூர்மையாக உள்ளது. பாரிஸ் நகரத்தி ஈழத்தவர் சிலரை நடிக்க வைத்திருப்பதும், அவர்கள் பேசும் ஈழத்து தமிழும் நகைச்சுவையாக இருந்தது
திரிசாவின் சிறுவயது தோழியாக வரும் சங்கீதாவும், அவருடைய இரு குழந்தைகளாக நடிக்கும் குழந்தைகள் கலக்கி இருக்கிறார்கள். மாதவனும் சிறப்பாக செய்திருக்கிறார். திரிஷா நிறைய (விதவிதமான கவர்ச்சி) ஆடைகளில் வருகிறார். சொந்தக் குரல் போல முதலில் கொஞ்சம் கடுமையாக இருந்தது போல் தெரிந்தது பிறகு அவ்வாறு தெரியவில்லை. ஈஎம்சி ஹனிபா செயயவேண்டிய பாத்திரம் ஒன்றை வேறொரு மலையாள நடிகரை வைத்து செய்திருக்கிறார்கள். கப்பல் கப்பல் என்றெல்லாம் விளம்பரப்படுத்திய அளவுக்கு கப்பல் காட்சிகள் தனியாகத் தெரிவதாக ஒன்றும் இல்லை. நட்புக்காக துவக்கக் காட்சியில் ஆடுகிறார் சூரியா. சிங்கீதம் சீனிவாசராவ் படம் போல் இருந்தது, கே எஸ் இரவிகுமாரின் டச் என்பதாக ஒரு காட்சியும் சொல்ல முடியவில்லை (கமல் படத்தில் இயக்குனர்கள் டம்மி பீஸ் தானே)
தேவி பிராசாத் இசையமைப்பில் மூன்று பாடல்கள். ஒன்றில் பிரஞ்சுக்கார மனைவியுடன் நினைவுகளை பின்னோக்கி, காட்சிகளையும் பின்னோக்கி ஓட்டுகிறார் கமல், காட்சி புதுமையாக இருந்தது, அப்பறம் முக்கியமான ஒன்று படத்தில் நீக்கியதாகச் சொல்லப்பட்ட தொந்திக் கணபதி, நிர்வாNa துறவிகள், வரலட்சுமி ..... கமல் கவிதைப் பாடல் வெட்டாமல் ஓடியது. அதனை காட்சி படுத்திய ஒளிப்பதிவு சிறப்பு ஐந்து நிமிடம் ஓடும் காட்சியில் வெட்டே இல்லை (சிங்கிள் டேக்)
மற்றபடி இது ஒளவை சண்முகி போன்று என்றும் பார்க்கும் அளவுக்கெல்லாம் காட்சிகளுடனான நகைச்சுவையுடன் மீண்டும் பார்தால் ரசிக்குமா என்று தெரியவில்லை, என்னால் இரண்டாம் முறை பார்க்க முடியாது.
மன்மதன் அம்பு கதைன்னு எதையும் தேடமுடியாது, திரைகதை உண்டு மற்றபடி இது கூர்மையற்ற நகைச்சுவை மொக்கை, எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லை என்றால் ஒருமுறை பார்க்கலாம்.
12 கருத்துகள்:
முன்பே எழுதி வச்சுடிங்களா?
அட போங்க பாஸ்....பொதுவா இங்க கத்தாரில குறிப்பிட்ட தமிழ் படம் தான் வரும்.வழக்கம்போல ஆர்வத்துல தான் போனோம்.........முடியல.கமல் நல்ல நடிகர் ஆனா சிறந்த கதை ஆசிரியர் அல்லது வசன கர்த்தா அல்ல.
இடைவேளை வரை படம் பார்க்கலாம்.பிற்பகுதி காமெடி என்கிற பெயரில் சரியான கொத்து.இப்படம் படு தோல்வி என்பதை கதையின் முடிவே சொல்லிவிடும்.யாராலும் ஜீரணிக்க முடியாது.
//
சதீலீலாவதி போன்ற முழுநீல நகைச்சுவைப் படம்.
//
ல, ள வித்தியாசத்தை சரி செய்து கொள்ளுங்கள். தப்பான அர்த்தத்தைத் தருகிறது.
நேர்மையான பார்வை.
@RAJA,
நண்பர் ராஜா.. ரொம்ப நொந்து போயிருப்பீங்க போல. எல்லா இடத்துலயும் கருத்தப் பதிவு செஞ்சிருக்கீங்களே:)
நாளைக்கு பாக்க போறேன்! முதலில் இருந்தே இந்த படம் மேல பெரிய எதிர்பார்ப்பு இல்ல! உங்க விமர்சனம் அதை மேலும் வலுவிழக்க செஞ்சுருச்சு! :-)
நான் பார்க்க வேண்டுமென முடிவு செய்த படங்களின் விமர்சனங்களை எப்போதும் படிப்பதில்லை.
படத்தின் கதையை அப்படியே தந்து விடுவார்கள் என்பதே காரணம்.
நீங்களும் மன்மதன் அம்பை அப்படியே எழுதிவிட்டீர்கள், இதற்குமேல் அதை விசிடியில் கூட பார்க்க முடியாது.
கமல் தான் சிறந்த நடிகர் மட்டுமே என்று புரிந்து கொண்டால் அது அவருக்கு மட்டுமல்ல ஏனைய தமிழர்கள் அனைவருக்கும் நல்லது
//ரிஷபன்Meena said...
நான் பார்க்க வேண்டுமென முடிவு செய்த படங்களின் விமர்சனங்களை எப்போதும் படிப்பதில்லை.
படத்தின் கதையை அப்படியே தந்து விடுவார்கள் என்பதே காரணம்.
நீங்களும் மன்மதன் அம்பை அப்படியே எழுதிவிட்டீர்கள், இதற்குமேல் அதை விசிடியில் கூட பார்க்க முடியாது.
கமல் தான் சிறந்த நடிகர் மட்டுமே என்று புரிந்து கொண்டால் அது அவருக்கு மட்டுமல்ல ஏனைய தமிழர்கள் அனைவருக்கும் நல்லது
10:39 AM, December 29, 2010//
ரிஷபன்,
நகைச்சுவைப் படங்களில் கதைன்னு எதுவும் கிடையாது. காமடி டைம், நகைச்சுவை நேரம் போன்ற தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் போட்டதையே திரும்ப திரும்ப அலுக்காமல் பார்க்கிறோம். எனவே கதை தெரிஞ்சதால் பார்க்க விரும்பல என்று சொல்வதை நான் ஏற்கவிரும்பல :)
//இப்படம் படு தோல்வி என்பதை கதையின் முடிவே சொல்லிவிடும்.யாராலும் ஜீரணிக்க முடியாது.
5:36 AM, December 24, 2010//
கமல்ராசிக்கு ஒரு தோல்வி படம் கொடுத்தால் அடுத்தது மெகா ஹிட்டாம்........அப்படின்னு கிளப்பி விடுவோம் :)
//
பிரியமுடன் பிரபு said...
முன்பே எழுதி வச்சுடிங்களா?
1:14 AM, December 24, 2010//
ம்கூம் படம் பார்த்த பிறகு உடனே வந்து முதல் வேலையாக ....
//ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
நேர்மையான பார்வை.
@RAJA,
நண்பர் ராஜா.. ரொம்ப நொந்து போயிருப்பீங்க போல. எல்லா இடத்துலயும் கருத்தப் பதிவு செஞ்சிருக்கீங்களே:)
2:13 PM, December 24, 2010//
செந்தில்வேலன் மிக்க நன்றி
//வலசு - வேலணை said...
//
சதீலீலாவதி போன்ற முழுநீல நகைச்சுவைப் படம்.
//
ல, ள வித்தியாசத்தை சரி செய்து கொள்ளுங்கள். தப்பான அர்த்தத்தைத் தருகிறது.
10:26 AM, De//
:))) கமல்படம் நீலப்படம்னு சொல்ல இந்தப்படத்தில் ஒண்ணும் இல்லை
//இரா.இளவரசன் said...
நாளைக்கு பாக்க போறேன்! முதலில் இருந்தே இந்த படம் மேல பெரிய எதிர்பார்ப்பு இல்ல! உங்க விமர்சனம் அதை மேலும் வலுவிழக்க செஞ்சுருச்சு! :-)
9:27 PM, December 24, 2010//
நாம சினிமா பொழுதுபோக்கிற்கு பார்க்கிறோம், எழுந்து ஓடும் அளவுக்கெல்லாம் செம மொக்கைன்னு சொல்ல முடியாது பாஸ்
கருத்துரையிடுக