பின்பற்றுபவர்கள்

22 டிசம்பர், 2010

பைவ் ஸ்டார் சமையல் !

தேவையான பொருட்கள் : சின்ன வங்காயம் ஒரு கிலோ, சிறிய எலுமிச்சை அளவுக்கு புளி, பழுத்த தக்காளி இரண்டு, தாளிக்க கருவடம் அல்லது வெந்தயம் சிட்டிகை அளவுக்கு. நல்ல எண்ணை இரண்டு தேக்கரணடி, கறிவேப்பிள்ளை சிறிது, கொழம்புப் பொடி அரை மேசைக்கரண்டி, ஒரு கீற்று தேங்காய், பூண்டு பற்கள் பத்து, தேவையான அளவு உப்பு

சிறிய வெங்காயத்தை ஐந்து நிமிடம் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைக்கவும், கூறிய நகத்தினாலோ அல்லது பேனா கத்தியாலோ ஊறவைத்த வெங்காயத்தை உரிப்பது எளிது, கண்களில் எரிச்சலும் வராது, அதில் ஐந்து முதல் பத்து வெங்காயங்களை எடுத்து குறுக்குவாட்டில் சிறிது சிறுதாக நறுக்கிக் கொள்ளவும், தக்காளியை சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

புளியையும் தேவையான அளவுக்கு வெது வெதுப்பான தண்ணீரில் ஊறவைக்கவும், விரைவில் எளிதில் கரைய வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தலாம், புளியைக் கரைத்து, திப்பிகளை நீக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்

தேங்காயையும், கொழம்புபொடியையும் சிறுதி நீர் சேர்த்து (மைபதம் வருவதற்கு சற்று முன்பாக) அரைத்து வைத்துக் கொள்ளவும்

அடுப்பில், மிதமான சூட்டில் குழம்பு சட்டியை (மண்பாண்டம் சிறப்பு) வைத்து சூடு ஏறியதும், நல்லெண்ணைய ஊற்றி காய்ந்ததும் வெந்தயத்தைப் போட்டு சிவந்ததும், வெட்டி வைத்த வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும், சிவந்ததும், மீதம் இருக்கும் உறித்த வெங்காயங்கள், பூண்டு பற்கள் அனைத்தையும் போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும், பிறகு புளி நீரை ஊற்றி, தேவையான அளவு உப்பைப் போட்டு, தக்காளி துண்டுகளைப் போட்டு ஒரு கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

பிறகு தேங்காய் - கொழம்புப் பொடி சாந்தை கொதிக்கும் குழம்பில் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும், பிறகு தீயைக்குறைத்து ஒரு பத்து நிமிடம் வைக்க குழம்பு சுண்டிய பக்குவதில் சுவையாக இருக்கும், இறக்கும் சற்று முன்பாக கறிவேப்பிள்ளையைப் போட்டு இறக்கவும். இந்தக் குழம்பில் முருங்கைக் காய் அல்லது உருளை கிழங்கு சேர்க்க அவைகள் இன்னும் சுவையாகவும் தொட்டுக் கொள்ளவும் பயனாக இருக்கும்.

பொறித்த அப்பளம், கூழ்வடகம் இந்தக் குழம்புடன் தொட்டுக் கொள்ளச் சுவையாக இருக்கும், இந்தக் குழம்பை பாசுமதி பச்சை அரிசி சாதத்துடன் சாப்பிட இன்னும் சுவையான உணவாக இருக்கும்




இந்தக் குழம்பின் பெயர் வெங்காயக் குழம்பு. வெங்காயம் கிலோ 80 - 100 ரூபாய் விற்கும் போது இது பைவ் ஸ்டார் சமையல்.....காஸ்ட்லியான குழம்பு தானே. :)

பின்குறிப்பு : எழுதி இருப்பவை செயல்முறை குழம்பு (ஒரிஜினல் ரிசிப்பி) தான் சமைச்சுப் பாருங்க

12 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

இது எப்ப இருந்ந்து ?

துளசி கோபால் சொன்னது…

ஐயோ....கட்டுப்படி ஆகாதுங்களே!!!!

பொன் மாலை பொழுது சொன்னது…

சமையல் குறிப்பையும் விட்டுவைக்கவில்லை? :)))
நல்ல சுவையான எளிமையான செய்முறை. வெங்காயம் விலை கீழே வரும் போது செய்துபார்க்கலாம்.
இந்த கொழம்பை புழுங்கலரிசி சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து, உருளைகிழங்கு கறியுடன் சாப்பிட , பைவ் ஸ்டார் ஹோட்டல்களின் சுவையை இதன் காலில் கட்டி அடிக்கலாம்.
பகிர்வுக்கு நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//
பிரியமுடன் பிரபு said...
இது எப்ப இருந்ந்து //

எப்பவும் விருந்து தான் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//
துளசி கோபால் said...
ஐயோ....கட்டுப்படி ஆகாதுங்களே!!!!

11:05 AM, December 22, 2010//

வெங்காயத்தை சேமித்து வைக்க முடியாது, எப்படியும் வெல குறையும் அப்போது செய்யலாமே

கோவி.கண்ணன் சொன்னது…

//கக்கு - மாணிக்கம் said...
சமையல் குறிப்பையும் விட்டுவைக்கவில்லை? :)))
நல்ல சுவையான எளிமையான செய்முறை. வெங்காயம் விலை கீழே வரும் போது செய்துபார்க்கலாம்.
இந்த கொழம்பை புழுங்கலரிசி சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து, உருளைகிழங்கு கறியுடன் சாப்பிட , பைவ் ஸ்டார் ஹோட்டல்களின் சுவையை இதன் காலில் கட்டி அடிக்கலாம்.
பகிர்வுக்கு நன்றி.

1:13 PM, December 22, 20//

கக்கு மாணிக்கம், சமையல் செய்வது எனக்கு பிடித்த பொழுது போக்கு, பாத்திரம் கழுவது தான் கடி. :)

எதிலும் உருளைக் கிழங்கு சேர்த்திருந்தால் விரும்பி சாப்பிடுவேன்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நமக்கு அவ்வளவு வசதி இல்லீங்க.

RAZIN ABDUL RAHMAN சொன்னது…

கோவியார்,நளபாகமும் தெரிந்த நளதமயேந்தி என்பது இப்போதான் தெரிகிறது...

அன்புடன்
ரஜின்

கோவி.கண்ணன் சொன்னது…

//சிநேகிதன் அக்பர் said...
நமக்கு அவ்வளவு வசதி இல்லீங்க.

2:26 PM, December 22, 2010//

:) வெங்காயம் புரட்சி செய்துட்டுப் போல

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவியார்,நளபாகமும் தெரிந்த நளதமயேந்தி என்பது இப்போதான் தெரிகிறது...

அன்புடன்
ரஜின்//

சைவ சமையல் மட்டும் தெரியும். அசைவம் சாப்பிட்டதும் இல்லை

ராவணன் சொன்னது…

//வெங்காயத்தை சேமித்து வைக்க முடியாது, எப்படியும் வெல குறையும் அப்போது செய்யலாமே//

வெங்கயாத்தைச் சேமித்து வைக்க முடியாதா? இத நீங்க எங்க புடிச்சீங்க?

கிலோ வெறும் பத்துப் பைசாவிற்குக் கொடுத்த பின்பும் மீதமிருக்கும்..ஒரு நூறு கிலோவிற்கும் மேல் எங்கள் வீட்டில் ஒரு மூலையில் காத்தாடும். அந்த வெங்காயம் எங்களுக்கு ஒரு ஆண்டுக்கு வரும்.

சரியான விலை இல்லை என்று உளுந்து, மிளகாய், பருத்தி, மல்லி போன்றவற்றை ஒரு வருடத்திற்கும் மேல் எங்கள் வீட்டில் வைத்துள்ளோம்.

இடமிருந்தால் வெங்காயத்தைச் சேமிக்கலாம். கொஞ்சம் விருதுநகர் பக்கம் வந்து பார்த்தால் எதை எதை எப்படி சேமிக்கலாம்..எப்படி எப்படி மாற்றலாம் என்று தெரியும்.

விலை ஏறுவதற்கு முதல் காரணம் உற்பத்திக் குறைவு.இதைப் பயன்படுத்தி விலையை ஏற்றுவது பதுக்கல்காரர்கள்.

குடுகுடுப்பை சொன்னது…

வெங்காயம் ஏன் அதிக விலைக்கு விற்கக்கூடாது? வெங்காயம் விளைவிப்பவனுக்கும் இடைத்தரகர் அடித்தது போக கொஞ்சம் லாபம் கிடைக்கட்டுமே?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்