இன்றைய தேதியில் சாதி அமைப்பின் பயன்பாடுகளாக குலதெய்வ வழிபாடு மற்றும் பெண் கொடுத்து / எடுப்பது, மற்றும் ஒரு சில குலம் சார்ந்த பண்டிகைகள் விழாக்கள் மட்டுமே. மற்றபடி சாதிப் பெருமை பேசுபவர்கள் எவரும் செருப்படி வாங்கக் கூடிய தகுதி உடையவர்கள் தான். திருமண உறவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் வாரிசுகளைத் தரும் உத்தியில் அமைக்கப்பட்டு இருப்பதால் சாதிகள் பிறப்பின் வழியாகப் பிண்ணப்பட்டுள்ளது, எனவே அதனை ஒரு சில நூற்றாண்டுகளில் அழிப்பதும் கடினம் தான். இருந்தாலும் சாதிப் பெருமை என்பதும்,. வெளிப்படையாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டாமே என்பதால் தமிழ் நாட்டில் 99 விழுக்காட்டினர் பெயருக்குப் பின்னால் சாதி அடையாளப்படுத்திக் கொள்வதை பெரியாரின் அறிவுறுத்தலுக்கு பிறகு ஒருவாரு ஏற்றுக் கொண்டு தவிர்த்துள்ளனர். ஒரு சிலர் தவிர்த்து சாதி வெளியே தெரிவது அவமானம் என்றே நினைக்கின்றனர். இத்தகைய அவமானம் பார்ப்பனருக்கும் பறையருக்கும் ஒன்றே என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. கொண்டைப் பார்டி, பூணூல் பார்டி என்று சொல்லிவிடுவார்கள் என்பதற்காக பார்பனர்கள் சாதிப் பெயரை வெளியே சொல்லிக் கொள்வதில்லை, பறையர் சமூகப் பொருளாதார நிலை இன்னும் தாழ்வாக இருப்பதால் அவர்களும் சாதியை தங்களாக வெளிப்படுத்திக் கொள்வதில்லை. அரசியல் ஆதாயம் உடையவர்கள் மட்டுமே தாம் இன்னின்ன சாதி என்றும், குறிப்பிட்ட சில சாதிகளை மேலே கொண்டு வந்து சாதி சமூக பொருளாதாரத்தை முன்னேற்றவேண்டும் என்பதற்காக சாதிப் பெயரில் கட்சிகளை, சங்கங்களை அமைத்திருக்கிறார்கள். மற்றபடி இந்த சாதி சங்களை வைத்து பிற சாதி தனிமனிதனை கீழாகக் கொள்ள எந்த ஒரு முகாந்தரமும் இல்லை, அப்படி செய்யும் இடங்களில் சாதிக்கலவரங்களே வெடிக்கின்றன. இன்றைய தேதிக்கு சாதி என்பது குறிப்பிட்ட தெருவோடு அல்லது வீட்டோடு முடிந்துவிடுகிறது. சாதி சார்பில் நெருக்கமானோம் என்கிற நிலை நட்புகளுக்குள்ளேயும் மிகக் குறைவு.
குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சாதி சமூகங்கள் தவிர்த்து பிறர் சாதி அமைப்பாகத் தொடர்வதற்குத் தேவையான காரணங்கள் மிகக் குறைவு. காரணம் குலம் சார்ந்த தொழில் என்று எதுவும் தற்போது இல்லை. முடித்திருத்தகங்கள், ப்யூட்டி பார்லர் என்பதாக பெயரை மாற்றி பார்பனர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் நடத்துகின்றனர். எனக்கு தெரிந்து கொத்தனார் சித்தாள் வேலையை செய்யாத சாதியினரே கிடையாது. கொத்தனார் - சித்தாள் தொழில் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் தொழில் என்பதாக இல்லை. அது போன்று தச்சு வேலை, பர்னிசர் ஷோரூம் இவை எதுவும் குறிப்பிட்ட சாதியினரால் மட்டுமே நடத்தப்படுவதில்லை. நகைசெய்யும் தொழில்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சாதியினரால் தொடர்ந்து நடைபெறுகிறது, ஆனாலும் நகைக்கடைகள் எந்த ஒரு குறிப்பிட்ட சமுகத்தினரின் தொழிலாக இல்லை. துவக்கத்தில் உணவகத் தொழில் கொடிகட்டிப் பறந்த பார்பனர்கள், பின்னர் நாடார் சமூகத்தினரால் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். நாடார் சமூகத்தினர் செய்யாத தொழிலே இல்லை.
பாலியல் தொழில் உட்பட பணம் கொழிக்கும் தொழில்களை அனைத்து சமூகத்தினரும் செய்து வருகின்றனர். சாதி என்பது தற்போதைய சூழலில் குறிப்பிட்ட தொழிலைச் சார்ந்திருக்கவில்லை என்னும் போது தற்போதும் சாதி அமைப்பு தொடர்வதற்கு பெண் கொடுத்து எடுப்பது என்பது தவிர்த்து, குறிப்பிட்ட குலதெய்வ வழபாடுகள் என்பதாகச் சுருங்கிவிட்டன. இந்த சூழலில் ஒருவர் சாதிப் பெயரை பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வதற்கான தேவை என்ன ?
சாதி ஏன் தொடர வேண்டும் என்று ஒரு சாக்கடை சாமியார் சொல்கிறான், குறிப்பிட்ட சாதிப் பெயர்களைக் கூட்டினால் எண் 9 வருகிறதாம்,
"முதலியார் மற்றும் பிள்ளைமார்கள் உட்பட 153 ஜாதியையும் கூட்டினால் ஒன்பது வருகிறது. இது, மனித உடலில் அமைந்த ஒன்பது ஓட்டைகளை சுட்டுவதாகும். இந்த ஓட்டைகள் மனிதன் வாழ்வதற்கான அனைத்து வேலைகளுக்கும் காரணமாக அமைகிறது. அதுபோல இவர்கள் சமுதாயத்திற்கு முக்கியமானவர்கள்" - மதுரை ஆதினம்
இந்த ஒன்பது ஓட்டைகளில் ஆசனவாய் சாதி எது ? அது தானே முக்கியமான சாதி, காலில் இருந்து பிறந்தவன் என்று கற்பித்து ஒதுக்கிவைக்கப்பட்ட இந்திய சாதி அமைப்புச் சூழலில், ஆதீனம் குறிப்பிடும் ஒன்பது ஓட்டைக்குள் ஒன்றாக ஆசனவாய் சாதி இதுதான் என்று அடையாளப்படுத்தினால் களேபரம் ஆகாதா ? அந்த மூட்டாள் பய ஆதினம் ஒன்பது ஓட்டைகளில் ஆசனவாய் சாதி எது என்று தெளிவு படுத்துவானா ? ஆதீனமாம்...... ஆதீனம் நல்லா வருது வாயில.
தொடர்புடைய சுட்டி.
15 கருத்துகள்:
இதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் வேண்டியதில்லை....
சொன்னெதெல்லாம் சரியே.. இருப்பினும் மற்ற சதியை சேர்ந்த எவ்வளவு பேர் முடி வெட்டும் தொழிலை, மலம் அல்லும் தொழிலை, செருப்பு தைக்கும் தொழிலை செய்ய முன் வருவார்கள். இந்த தொழில்கள் எல்லாம் இல்லாமல் போனால் தான் இந்த சாதியினருக்கு விடிவு.
" சாதி இருக்கிறது என்பானும் உள்ளானே' என்று வருந்தி பாரதி தாசன் பாடினார்.. ஆனால் இன்று தமிழகதில் எது வளர்ந்ததோ இல்லையோ, சாதி மட்டும் சீரும் சிறப்புமாக வளர்ந்து வருகிறது. இதை திருமண விளம்பரங்களை கொண்டு தெரியலாம். பெரியார் அறிவை கொடுத்தார்.. அரசு ஆணை போட்டு மக்களுக்கு சிறப்பு சலுகை வழங்கி சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவித்தால் இது மறைய சிறிது வாய்ப்பு உண்டு. (வேலை, வீடு, வரி ....) மேலும் "சாதி அற்றோர்"
என்ற பிரிவு ஏற்படுத்தி குழந்தைகள் பள்ளியில் சேரும் போது, அதற்கும் சலுகை தர இன்னும் சற்று மறையும்.
அப்படியும் மறையவிட்டால் அனைவரும் இந்த தொழில்களை சில காலம் செய்தே தீர வேண்டும் என்பது அரசால் கட்டாயமாக்க பட வேண்டும்.
//சொன்னெதெல்லாம் சரியே.. இருப்பினும் மற்ற சதியை சேர்ந்த எவ்வளவு பேர் முடி வெட்டும் தொழிலை, மலம் அல்லும் தொழிலை, செருப்பு தைக்கும் தொழிலை செய்ய முன் வருவார்கள். இந்த தொழில்கள் எல்லாம் இல்லாமல் போனால் தான் இந்த சாதியினருக்கு //
ப்யூட்டி பார்லர் வைத்து முடிவெட்டுவது மருத்துவர் சமூகம் மட்டுமே இல்லை. பாட்டா ஷோரும் வைத்திருப்பவர்கள் அனைவரும் சக்கிலிய சமூகம் இல்லை. மலம் அள்ளும் தொழில் தற்போது இல்லை, இருந்தால் தெரியப்படுத்துங்கள், அவ்வாறு மலம் அள்ளும் தொழில் செய்விக்கச் சொல்வது, சாக்கடைக்குள் இறங்கச் சொல்வதும் சட்டபடி குற்றம், சிக்கினால் சிறைக்குப் பின்னால் தான்.
//இதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் வேண்டியதில்லை....
5:10 PM, December 20, 2010//
சிவா, ஆசனவாய் மேட்டருக்கு முக்கியதுவம் இல்லையா ? நீங்க தான் இனிமா மேட்டரை படத்தோடு போட்டு விளக்குவிங்க, உங்களுக்கே இது முக்கியம் இல்லையா ? அவ்வ்வ்
அந்த மூட்டாள் பய ஆதினம் ஒன்பது ஓட்டைகளில் ஆசனவாய் சாதி எது என்று தெளிவு படுத்துவானா ? ஆதீனமாம்...... ஆதீனம் நல்லா வருது வாயில
//////
ivanai ellam ethala adikka ??
"சாதி அற்றோர்"
என்ற பிரிவு ஏற்படுத்தி குழந்தைகள் பள்ளியில் சேரும் போது, அதற்கும் சலுகை தர இன்னும் சற்று மறையும்.
//
nice mr.ssk
தின்று விட்டு தூங்குவதோடு இல்லாமல் கண்டதையும் உளறுகிறார்கள்.
கண்ணன்,
இந்தியாவில், எல்லா ரயில்பாதைகளிலும் மலம் அல்லும் வேலையை இன்னும் மனிதர்கள்தான் செய்கிறார்கள். அதேபோல் சாக்கடைக் குழியில் அடைப்பு நீக்கும் வேலை செய்வோர். அதுவும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த மக்கள்தான் செய்கிறார்கள். அதுவும் இவை இரண்டுமே அரசாங்க வேலைகள் வேறு. (ஒரு அரசே சட்டமும் போட்டு அதை அரசே மீறுவதை வேறெங்கும் காண முடியாது).
நேற்று கண்டுபிடிக்கப் பட்ட தொழில்நுட்பம் இன்று இந்தியா வந்துவிடுகிறது. ஆனால் மலத்தை ரயில்களில் ஒரு களத்தில் சேமித்து வெளியேற்றும் சின்ன விசயத்தைக் கூட அரசு செய்யத் தயாரில்லை.
பயன்பெறுவோர் அதிகமானால்தான் தொழில் நுட்பம் வரும் என்பார்கள். உண்மையில் இந்தியாவில் 40 % பேராவது ஒருநாளில் ரயிலைப் பயன்படுத்துகிறார்கள். நிமிடத்தில் பலகோடி கிடைக்கும் தொழிலில் பயனாளிகளுக்கு, ஊழியர்களுக்கும் ஆரோக்கியம் இல்லாத சூழலை வழங்கும் இவர்கள் சாதியைத் தங்கள் கேடயமாக உபயோகிப்பதில் என்ன வியப்பு இருக்க முடியும்?
ஒரு சக மனிதனாய் வெட்கப்படவேண்டிய விஷயம் இது.....
ஒவ்வொரு நாளும் முதல் வேலையாக உங்களின் வலைப்பூவைப் பார்ப்பேன் , என்றும் நீங்கள் ஏமாற்றியதில்லை.
தரமான பதிவு ,
இப்படி 153 என்று பிதற்றுபவனையெல்லாம் ஏன் பேச அழைக்கிறார்கள்.
கண்ணன்,
உங்கள் கோபம் சரியானதே! இதை பேசாமலிருந்தால் இந்தப் பிழை தொடருமென்பதை உணர்ந்தே பெரியார் பேசினார், அது முன்னெடுப்பாக மட்டுமே நிற்காமல், சாதி-களின் பெயராலான சமூக அநீதி முழுதும் போக்கப்படும்வரை சாதியைப் பற்றிப் பேசித்தான் ஆக வேண்டும்.
நம்பி.பா
Nadar samoogathai pattri neengal kurippittathu avarkalai ilivu paduththuvathaka ulladhu
//ஐத்ருஸ் said...
Nadar samoogathai pattri neengal kurippittathu avarkalai ilivu paduththuvathaka ulladhu//
அப்படி ஒன்றும் செய்யவில்லை. பாலியல் தொழில் உள்ளிட்ட பணம் கொழிக்க்கும் தொழில்களை அனைத்து சமூகத்தினரும் செய்துவருகின்றனர் என்றே குறிப்பிட்டுள்ளேன். யாரையும் இழிவுபடுத்தவில்லை
ஆதீனம் ஒரு சமயம் பெண்களுக்கு நல்வாக்கு சொன்னாருங்க.
சாமி மாதிரி கோவிலுக்கு வரணுமுன்னு. ஒரு 500 பவுனுக்கு ஆட்டையைப் போட்டுருக்கலாம்.
மயக்கத்துலே விட்டுப்போச்சு.
http://thulasidhalam.blogspot.com/2005/09/blog-post_12.html
துளசி அம்மா,
உங்கள் சுட்டியைப் படித்தேன் செம காமடி. கூடவே (பழைய) பதிவர்களின் பின்னூட்டங்களும் வயிற்றைக் குலுங்க வச்சிது.
யாராவது அந்தாள் ஆதினத்தை 'லூசாப்பா நீய்யீ.....' ன்னு கேட்காதவரை உளறி கொட்டுவார் போல
அந்தாளே கூட்டி வந்து சாக்கடை சுத்தம் செய்ய சொல்லணும்...
கருத்துரையிடுக