பின்பற்றுபவர்கள்

17 டிசம்பர், 2010

மெயயெழுதது இலலாமல படிகக முடியும !

ஆஙகிலததில எழுததுகள இடம மாறி இருநதாலும பழககப படட சொறகள எனபதால எளிதில படிதது விடலாம. தமிழிலும அதுபோனறு படிகக முடியும, காரணம ரொமப எளிமையானது, பொதுவாக எழுததுக கூடடி படிககும வழககம பளளி பருவததுடன முடிநதுவிடும, பிறகு பததிகளை சொறகளாகததான படிககிறோம மூளையில புழஙகிய சொறகளின பதிவு இருபபதால சொறகளில எழுததுகள இடம மாறி இருநதாலும படிபபது எளிது தான. தமிழில மறறொரு சிறபபு மெயயெழுததுகள அதாவது தலையில புளளி வைதத எழுததுகளே இலலை எனறாலும சொறறொடரை விரைவாகப படிகக முடியும.

எனககு வழககமாக வரும ஒரு தமிழ பிடிஎஃப கோபபை திறநத போது பிடிஎஃப ரீடர குறைபாடடினால அதில இருநத மெயயெழுததுகள அனைததிலும புளளியைக காணவிலலை. இருநதாலும எனனால எளிதாக படிகக முடிநதது, இததனைககும அநத கோபபில நானகு பககஙகளுககு மேல இருநத அனைததையும பொதுவாகப படிககும அதே நேரததில படிதது முடிததேன. இநதியாவின எநத மொழிகளிலும இவை சாததியம அறறது. ஏனெனில வடடெழுததில இருககும, கனனடம, தெலுஙகு, மலையாளம உடபட மறறும தேவநகரி வடிவில எழுதபபடும இநதி உடபடட வடமொழிகள மெயயெழுததுககு அடுதத உயிரமெயயெழுததைச சேரதது ஒரே எழுததாக எழுதும வழககம அவரகளுடையது, பழநதமிழில கையெழுததும, ஓலைசுவடிகளும அவவாறு எழுதும வழககம தமிழிலும இருநதது. பிறகு தமிழ அசசெழுததுககு மாறிய போது, மெய மறறும உயிரமெயயை தனித தனியாகவே எழுதிவநதுளளனர நமமவரகள.

சொறகள அனைததும தமிழாக இருநதால மெயயெழுதது இலலாமல படிககலாம. ஆஙகிலச சொறகளை அபபடியே தமிழில இவவாறு எழுதினால படிகக முடிவது கடினம. மேலே பிடிஎப (PDF) - இதைப பலர பி...டி ...எஃப.....ரீ...ட...ர எனறே படிததிருபபாரகள, ஏனெனில அநத சொல தமிழ இலலை

மெயயெழதது இலலாமல வாசிகக முடிவது தமிழ எழுததுகளின மறறொரு சிறபபு.

19 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

athukkunu pathivaiyum appadiye eluthuvathaa ?

Indian சொன்னது…

//athukkunu pathivaiyum appadiye eluthuvathaa ?//

மெமன்டோ படத்தின் உத்தி.

Indian சொன்னது…

//மெயயெழதது இலலாமல வாசிகக முடிவது தமிழ எழுததுகளின மறறொரு சிறபபு.//

தமிழைபபோல புளளி வைததுக கோலம போடும மொழி வேறேனும உளதா? தெரிந்தால சொலலுஙகள

Indian சொன்னது…

யோசித்துப் பார்க்கிறேன். நாம் ஏற்கனவே கற்றறிந்த மொழியறிவு படிக்கும்போதே இல்லாத புள்ளிகளை இட்டு நிரப்பிச் செல்ல உதவுகிறது. இதுவே முற்றாகத் தமிழைப் பற்றி அறியாத ஒருவர் முதன்முறையாகத் தமிழை இவ்வாறு புள்ளிகள் இல்லாமல் கற்றால் தவறாகத்தானே புரிந்து கொண்டு படிப்பார்?

கோவி.கண்ணன் சொன்னது…

ndian said...
//யோசித்துப் பார்க்கிறேன். நாம் ஏற்கனவே கற்றறிந்த மொழியறிவு படிக்கும்போதே இல்லாத புள்ளிகளை இட்டு நிரப்பிச் செல்ல உதவுகிறது. இதுவே முற்றாகத் தமிழைப் பற்றி அறியாத ஒருவர் முதன்முறையாகத் தமிழை இவ்வாறு புள்ளிகள் இல்லாமல் கற்றால் தவறாகத்தானே புரிந்து கொண்டு படிப்பார்?

10:35 AM, December 17, 2010//

நமக்கு கண்கள் நன்றாகத் தெரிந்தாலும், சாலைகள், தெருக்கள் ஒழுங்காக இருந்தாலும் புது ஊருக்குக்குப் போகும் போது இடம் கண்டுபிடிக்க முதல்முறை பேந்த பேந்த தான் விழிக்கனும் :)

துளசி கோபால் சொன்னது…

உணமை!!!!

சமுத்ரா சொன்னது…

very nice!

ரோஸ்விக் சொன்னது…

உணமையிலே இது சிறப்புதான். :-)

kk சொன்னது…

Bt, n englsh also, u cn skp vwls almst in all cses.

உமர் | Umar சொன்னது…

அருமையான தகவல். தலைப்பில் மட்டும்தான் மெய்யெழுத்து இல்லாமல் இருக்கின்றது என்று நினைத்தேன். பதிவை முழுதும் படித்த பின்பு பதிவிலும் மெய்யெழுத்து இல்லாதது கண்டு அதிசயித்தேன்.

உமர் | Umar சொன்னது…

உங்கள் பதில் பின்னூட்டமும் அருமை.

கோவி.கண்ணன் சொன்னது…

// kk said...
Bt, n englsh also, u cn skp vwls almst in all cses.//

ice - இதில் உள்ள உயிரெழுத்துக்களை எடுத்துவிட்டால் படிக்க முடியாது. சிறிய சொற்களில் அவ்வாறு படிக்க இயலாது.

பல் - இதில் மையெழுத்தை எடுத்து தனியாகப் படித்தால் பொருள் வராது, சொற்றொடராக இருந்தால் படித்துப் புரிந்து கொள்ளலாம்

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

அட, ஆமாமல. கிரேட! ஆனா இதைச சுமமா தகவலுககாக மடடும வைததுககொளவது நலலது. முயனறு பாரககக கூடாது :)

ராவணன் சொன்னது…

எனன எழுதியுளளீரகள எனறே புரியவிலலை. ஒரு வாரததைகூட எனனால படிககமுடியவிலலை.

தமிழை எபபடி...இபபடி..கொலை..

தெளிவாக எழுதினால எனபோனற தறகுறிகளும படிபபோமே!?

தருமி சொன்னது…

நீங்கள் ஒரு நல்ல "புள்ளி".

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல முயற்சி. ஆனா இதை விதிவிலக்காக மட்டுமே கொள்ள முடியும்.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

அட! உணமைதான :)

RAZIN ABDUL RAHMAN சொன்னது…

தமிழை மெய்யெழுத்து இல்லாமல் எளிதாக படிக்க முடிகிறது..முன்பு ஆங்கிலத்தில் ஒரு பாரா குடுத்து படிக்கவும் என மெயில் வரும்,அதில் லெட்டர் எல்லாம் மாற்றி மாற்றி இருக்கும்,அதையும் படிக்க முடிந்தது..

அதற்கு காரணம் தாங்கள் சொன்னதுதான்,மனிதமூளை வார்த்தைகளை பழகி விடுகிறது..

இதுபோல அரபியிலும்,மேல் கீழ் கோடுகள் சிலகுறிகளுடன் எழுதுவார்கள்.அது அரபி அல்லாதவர்களின் எளிமைக்காக..உதாரணமாக்,நானெல்லாம் குர்ஆன் அரபியிலே வாசிக்கிறேன் என்றால் அந்த கோடுகள் மற்றும் குறிகளின் உதவியுடன் தான்,.ஆனால் அரபிகளுக்கு அது தேவை இல்லை.அவர்களின் நியூஸ் பேப்பர்,மற்ற கோப்புகள்,அவர்களின் எழுத்து என அனைத்தும் அந்த குறிகள் இன்றியே இருக்கும்.அவர்களுக்கு அது எளிது,,நமக்கு சுத்தம்...சுட்டு போட்டாலும் வராது..ஏன்னா அவர்கள் அம்மாதிர்யான வார்த்தைகளை பழகி இருப்பார்கள்....

வேறு மொழிகளில் இருக்கிறதா?? என தெரியவில்லை...

அன்புடன்
ரஜின்

கிரி சொன்னது…

கில்லாடியா எழுதி இருக்கீங்க..ரொம்ப நல்லா இருக்கு :-)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்