பின்பற்றுபவர்கள்

7 டிசம்பர், 2010

கமல் கவிதைக்கு வெளம்பரம் கொடுக்கும் இந்துத்துவாக்கள் !

கமலஹாசன் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அவர் அதையும் தாண்டி பல்கலை அறிஞனாகக் காட்டிக் கொள்ள கவிதை எழுதுவார், பாடுவார். எகிரும் குரலில் (ஹைப் பிச்) பாடவல்லவர், அவ்வாறு நிறைய பாடல் பாடி இருக்கிறார். மாடர்ன் ஆர்ட் எனப்படும் வரைகலையைப் பற்றி (காதலா காதலா) கேலி செய்பவர், அன்பே சிவம் படத்தில் மாடர்ன் ஆர்டை முதன்மைபடுத்தி இருப்பார். புரியாத ஒன்றை கிறுக்கி கவிதை என்று சொல்லி பேசுவார். அவருக்கு ஏன் வேண்டாத வேலை... இருக்கிற திறமைக்கு வேலை செய்யவே நேரம் போதவில்லை, இதுல யாருக்கும் புரியாத கவிதை வேறையா ? கலைத்தாயின் இடுப்பில் இருக்கும் குழந்தைக்கு எப்போதும் கலைதாகம் எடுத்து பால், வெண்ணை, தயிரோடு ஆட்டுக்கால் பாயாவும் கேட்கிறது என்பதாக வைத்துக் கொள்வோம், ஆனால் அவை செறிக்க வேண்டாமா ? :)

*****

மன்மதன் அம்பு கலைப்படையலில் தொட்டுக்கைக்காக கமலே ஒரு பாடலை இயற்றிப் பாடி இருக்கிறாராம். படிச்சுப் பார்த்தேன், எழுத்துகளும் சொற்களும் தமிழ் என்பது தவிர்த்து எனக்கு எதுவும் புரியவில்லை. அதைப் புரிந்து கொண்டதாகச் சொல்லும் இந்துத்துவா(லா)க்கள், இந்து மதத்தை கமல் கொச்சைப்படுத்துவிட்டார் (மீண்டும் சீண்டும் கமல்) என்று குதிக்கிறார்கள். படுக்கை அறையில் நிகழ்வான பாடலில் அரங்கநாதனையும் வரலட்சுமியையும் இழுத்து அசிங்கப்படுத்தியதாகவும், கோடிக்கணக்கான இந்துக்களை புண்படுத்திவிட்டதாகக் கூறி கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களாம்.

இந்து மதம் எங்கே புண்படுகிறது ? கோவிலுக்குள் நுழைந்தால் கோபுரத்தில் இருக்கும், சுற்றில் இருக்கும், தூண்களில் இருக்கும் சிலைகளில் வடிக்கப்பட்டு இருக்கும் எந்த ஒன்றையும் விட பாடல்வரிகளில் என்ன ஆபசம் இருக்கிறது என்றே தேடிப்பார்த்தாலும் புலப்படவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

ஆண்டாள் பாடிய பாடல், இதில் இருக்கும் விரசம், ஆபாசம் அளவுக்கு கமல் எழுதிய பாடலில் இருகிறதா தெரியவில்லை.


''குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல
மெத்தென்ற சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பை வாய்திறவாய்
மைத்தடங் கண்ணீனாய் நீயுள் மணாளனை
எத்தனை போதும் துயிலெழு வொட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லையால்..."38
(மேற்கண்ட ஆண்டாள் பாடலின் பொருளுக்கு இங்கே செல்லுங்கள்)

ஆண்டாள் பாடியவற்றை திருப்பவை, திருவெம்பாவை என்றெல்லாம் பக்தி இலக்கியதில் வைத்து கோவிலிலும் பாடுகிறார்கள். திரையில் நாயகன் நாயகியைப் பாடுவதில் விரசமாம். அதில் ரங்கநாதன் வரலட்சுமி என்ற வரிகள் இல்லாவிட்டால் விரசமாக தோன்றாது போலும்.

கமல் என்ற மன்மதக் கலைஞன் மீது அம்பு வீசுகிறார்கள் என்றும், அந்தப் பாடலில் ஆபாசம் இல்லை என்றோ நான் எழுதவில்லை, ஆபாசம், காமம் என்று வரையறுக்கப்பட்டவை அனைத்துமே (இன்றைய) இந்து மதத்தின் பகுதியாவும் இருக்கிறது, இதில் குறிப்பிட்டு சிலரை எதிர்த்து மதத்தை காப்பாற்றுகிறேன் என்று கிளம்பும் பேர்வழிகள் நாயகி / நாயகன் பாவங்களில் பாடிய வழிபாட்டுப் பாடல்களை தீயிட்டுக் கொளுத்துவார்களா ? இரண்டாவது பொண்டாட்டியை ஏன் இந்த சாமி வச்சிருக்கிறது என்று கேட்கும் இன்றைய சிறுகுழந்தைகளுக்கு பதில் சொல்ல நம்மிடம் பக்தி, சாமி, கதை, கண்ணைக் குத்திடும் என்று சொல்லும் இன்றைய சமய நம்பிக்கையின் மழுப்பல்களைத் தவிர்த்து என்ன இருக்கிறது ?


தொடை தெரிய அணிந்திருக்கும் அண்டர்வேர் ஆசாமிகளுக்கு கோவணம் கட்டியவர்கள் ஆபாசமாகத் தெரியலாமா ?

24 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

தொடை தெரிய அணிந்திருக்கும் அண்டர்வேர் ஆசாமிகளுக்கு கோவணம் கட்டியவர்கள் ஆபாசமாகத் தெரியலாமா ?
//////

ha ha

sivakumar சொன்னது…

இந்து மக்கள் கட்சிக்கு கொடுக்கும் ஒரு தகவல்தான் அந்த எதிர்ப்புக் கட்டுரை. இந்தத் தினமலரின் பின்னூட்டங்களைப் படித்தால் ஒரே நேரத்தில் எரிச்சலும் சிரிப்பும் வரும் உதாரணத்திற்கு ஒன்று பாருங்கள்

"இந்த படத்தை நான் பார்க்க மாட்டேன் , "சத்தியம் , ஒவ்வொரு ஹிந்துவும் சத்தியம் செய்து கொள்ள வேண்டும்.

Test சொன்னது…

//இரண்டாவது பொண்டாட்டியை ஏன் இந்த சாமி வச்சிருக்கிறது என்று கேட்கும் இன்றைய சிறுகுழந்தைகளுக்கு பதில் சொல்ல நம்மிடம் பக்தி, சாமி, கதை, கண்ணைக் குத்திடும் என்று சொல்லும் இன்றைய சமய நம்பிக்கையின் மழுப்பல்களைத் தவிர்த்து என்ன இருக்கிறது ?

இது ஒரு சிறந்த கேள்வி :)

//தொடை தெரிய அணிந்திருக்கும் அண்டர்வேர் ஆசாமிகளுக்கு கோவணம் கட்டியவர்கள் ஆபாசமாகத் தெரியலாமா ? //

இது இரண்டாவது சிறந்த கேள்வி :)

Test சொன்னது…

//இரண்டாவது பொண்டாட்டியை ஏன் இந்த சாமி வச்சிருக்கிறது என்று கேட்கும் இன்றைய சிறுகுழந்தைகளுக்கு பதில் சொல்ல நம்மிடம் பக்தி, சாமி, கதை, கண்ணைக் குத்திடும் என்று சொல்லும் இன்றைய சமய நம்பிக்கையின் மழுப்பல்களைத் தவிர்த்து என்ன இருக்கிறது ?

இது ஒரு சிறந்த கேள்வி :)

//தொடை தெரிய அணிந்திருக்கும் அண்டர்வேர் ஆசாமிகளுக்கு கோவணம் கட்டியவர்கள் ஆபாசமாகத் தெரியலாமா ? //

இது இரண்டாவது சிறந்த கேள்வி :)

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

உங்களுக்கு பொழுது விடிஞ்சா கலைஞரையும்,பொழுது போகலைன்னா அனைத்து மதங்களையும் திட்றதுதான் வேலை.

கோவி.கண்ணன் சொன்னது…

//எம்.எம்.அப்துல்லா said...
உங்களுக்கு பொழுது விடிஞ்சா கலைஞரையும்,பொழுது போகலைன்னா அனைத்து மதங்களையும் திட்றதுதான் வேலை.

//

சோ கால்டு பகுத்தறிவு கருணாநிதியை விமர்சனம் செய்ய நான் காலம் (காலை) நேரம் பார்ப்பதில்லை என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்

Manivannan சொன்னது…

//மாடர்ன் ஆர்ட் எனப்படும் வரைகலையைப் பற்றி (காதலா காதலா) கேலி செய்பவர், அன்பே சிவம் படத்தில் மாடர்ன் ஆர்டை முதன்மைபடுத்தி இருப்பார்.//

எகொசாஇ! காதலா காதலா படத்தில் வரும் கதாபாத்திரம் ஓவியம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பது மாதிரியான படைப்பு. அன்பே சிவத்தில் வரும் நல்லசிவம் கதாபாத்திரம் ஒரு ஓவியரும் கூட.

விட்டால் 16 வயதினிலே படத்தில் கோவணம் கட்டிய கமல் விக்ரம் படத்தில் கோட்டு சூட்டு போட்டது ஏன் என்று கேட்பீர்கள் போல!?

ம.தி.சுதா சொன்னது…

அருமையான பார்வை ஒன்றுங்க... ஆழமாக பார்த்துள்ளீர்கள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

ஹரிஸ் Harish சொன்னது…

தெளிவான விளக்கம்..இருந்தாலும் மூடநம்பிக்கைல ஊர்னவங்க மண்டையில இதெல்லாம் ஏறவா போகுது?.

smart சொன்னது…

அந்த ஆண்டாள் பாடலுக்கு ஆபாசமாக விளக்கம் கொடுத்ததை வைத்து ஆண்டாள் பாடல் ஆபாசம் என்றால் உங்கள் பார்வை தான் தப்பு.
"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்று உணர்ந்துக் கொண்டேன்.

//தொடை தெரிய அணிந்திருக்கும் அண்டர்வேர் ஆசாமிகளுக்கு கோவணம் கட்டியவர்கள் ஆபாசமாகத் தெரியலாமா //
துறவு நிலை என்பதற்கும்,கவர்ச்சி நிலை என்பதற்கும் அர்த்தம் தெரியாதவர்கள் கேள்விகள் கேட்க வேண்டிய அவசியம் என்ன? முன்னது உலக ஆசைகளை தள்ளிவைக்க, பின்னது உலகத்தை தன்மீது எண்ணவைக்க
மீண்டும் அந்த பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//smart said...
அந்த ஆண்டாள் பாடலுக்கு ஆபாசமாக விளக்கம் கொடுத்ததை வைத்து ஆண்டாள் பாடல் ஆபாசம் என்றால் உங்கள் பார்வை தான் தப்பு.
"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்று உணர்ந்துக் கொண்டேன்.//

ஆமாங்க சார் ஆங்கிலத்தில் Penis என்று எழுதுவது டீசண்டாகவும், தமிழில் ஆண்குறி என்று அதையே எழுதினால் ஆபாசமாகத்தான் இருக்கும். பக்தன் கடவுளைப் பாடினால் அது வேதம், காதலன் காதலியைப் பாடினால் சேதம்.......

//துறவு நிலை என்பதற்கும்,கவர்ச்சி நிலை என்பதற்கும் அர்த்தம் தெரியாதவர்கள் கேள்விகள் கேட்க வேண்டிய அவசியம் என்ன? முன்னது உலக ஆசைகளை தள்ளிவைக்க, பின்னது உலகத்தை தன்மீது எண்ணவைக்க
மீண்டும் அந்த பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

1:48 AM, December 08, 2010//

துறவு / திறந்த நிலையில் நிர்வாணமாக இருக்க விரும்புவர்கள் செல்ல வேண்டிய இடம் காடு தான். அந்த சாமியார்களின் திறந்த நிர்வானத்தை பார்க்க பொதுமக்களோ / மாற்று மதத்தினரோ கூட பக்குவப்பட்டிருக்கமாட்டார்கள் என்பதை ஏன் அந்த மட ஆசாமிகள் புரிந்து கொள்வதில்லை ? பட் ஒன் திங்.......நித்தி அந்த கோலத்தில் நடிகையுடன் பார்க்க பொதுமக்கள் ஆவல் கொண்டிருந்தார்கள், அப்போ நித்தி நிர்வானம் புனிதமா ? :)

iniyavan சொன்னது…

//எகிரும் குரலில் (ஹைப் பிச்) பாடவல்லவர், அவ்வாறு நிறைய பாடல் பாடி இருக்கிறார்.//

இதையே கே ஜே ஏசுதாஸ் பல முறை பாராட்டியிருக்கிறார்.

"சுந்தரி நீயும், சுந்தரனும் நானும்" கேட்டுப்பாருங்கள்.

கமல் ஒரு சகலகலா வல்லவன்(ர்) தான்.

ராஜரத்தினம் சொன்னது…

இந்த ஆண்டாள் பாடல் பக்தியால் வந்த விரகதாபத்தால் அவரையே தன் கணவனாய் நினைத்து பாடியது. அதில் பக்திதான் அதிகம். ஒரு தாய் தன் பிள்ளையை அணைத்து முத்தம் கொடுப்பதும், அதே தாய் அவள் கணவனை அணைத்து முத்தம் கொடுப்பதும் ஒன்று என்றால் நீங்கள் உங்கள் செஞ்சோற்று கடன் தீர ஆண்டாளை பற்றி பேசுவதில் தவறில்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

மன்மதன் அம்புக்கு விளம்பரச் செலவு மிச்சம்; இந்துவாக்களால்.
இனிமேல் எல்லோரும் இப்படி இந்துக்கடவுளைப் ஏதோவகையில் இட்டு நிரப்பி; விளம்பரப் பகுதியை
வேலையற்ற இந்துவாக்களைக் கவனிக்க வைத்துக் காசை மிச்சப்படுத்தலாம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//துறவு நிலை =உலக ஆசைகளை தள்ளிவைக்க//

இப்படித் துறந்தவரைச் சொல்லுங்கோ...தெரிந்து கொள்வோம்.
சங்கராச்சாரி, நித்தியானந்தா...மற்றும் அனைவரின் யோக்கியதையைத் தானே பார்த்துவிட்டோம்.
புலுடா விட்டது போதும் பிழைப்பைப் பார்ப்போம்.

ராஜரத்தினம் சொன்னது…

எனக்கு ஒரு விஷயம் புரியல. இதே கமல் இதே கவிதையை முகமது மற்றும் கதிஜா என்று எழுதுவாரா? இல்லை எழுத முடியுமா? அப்படி எழுதினால்
1. எழுதிய விரலை உடைத்திருப்பார்கள்.
2.பாடிய வாயை கொளுத்தியிருப்பார்கள்.
3.அந்த எண்ணம் வந்த மூளையை கசக்கி இருப்பார்கள்.
ஆனால் இந்து என்று சொல்லும் வெட்கம் கெட்டவர்கள் மட்டும் ஏன் இது மாதிரி எழுதிக்கொண்டே (படித்துகொண்டே) இருக்கிறார்கள். எனக்கென்னமோ அந்த உணர்ச்சி என்ற நரம்பை இந்துக்கள் நம்பும் கடவுள்கள் வெட்டி எடுத்துவிட்டானோ?
இது என்னை வைத்து நான் சொல்கிறேன்.

ராவணன் சொன்னது…

//கமலஹாசன் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை//

இதைப் பொதுவாக எப்படிக் கூறலாம்.
அந்த ஆளை ஒரு நடிகனாக ஏற்றுக்கொள்ளாத பலர் உள்ளனர்.

பார்ப்பன ஊடகங்கள் தூக்கித் தூக்கி மேலே நிறுத்தியுள்ளார்கள்.
ஒரு பாப்பானாக இருந்ததினாலே விருதுகளும் இந்திய அரசு கொடுத்தது.

அந்த ஆளின் நடிப்பு பிட்டுப் பட நடிகனின் நடிப்புபோல இருக்கும்.

virutcham சொன்னது…

கமல் படங்களில் so called ஆன்மிகப் படங்களை விட ஆன்மிகம் அழகாகவே சொல்லப் பட்டு இருக்கிறது. ரஜினியின் அபத்த ஆன்மிகக் காட்சிகளை விட சிறப்பாகவே இவர் சொல்லுகிறார். இப்போதைய ஆட்சியின் go by trend விளம்பரத் தந்திரம இப்போதைய இவரது இந்தக் கூத்து

பகுத்தறிவு கமலின் படங்களில் இழையோடும் உள்ளார்ந்த ஆன்மிகம்
http://www.virutcham.com/2010/02/பகுத்தறிவு-கமலின்-படங்கள/

வாணியும் சரிகாவும் செய்த வரலஷ்மி நோன்பு
http://www.virutcham.com/2010/12/கமலஹாசனும்-வரலக்ஷ்மி-நோன/

ஆனால் இதற்கெல்லாம் விமர்சனம் சொல்லும் பகுத்தறிவுவாதிகள் எப்போ பார்த்தாலும் கோவில் கோபுரம் என்று சொல்லுவது அவர்களின் அறியாமை அன்றி வேறில்லை.
சுவாமி ஓம்கார் கிட்டே விளக்கம் கேட்டு தெரிஞ்சுக்கலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜரத்தினம் said...
எனக்கு ஒரு விஷயம் புரியல. இதே கமல் இதே கவிதையை முகமது மற்றும் கதிஜா என்று எழுதுவாரா? இல்லை எழுத முடியுமா? அப்படி எழுதினால்
1. எழுதிய விரலை உடைத்திருப்பார்கள்.
2.பாடிய வாயை கொளுத்தியிருப்பார்கள்.
3.அந்த எண்ணம் வந்த மூளையை கசக்கி இருப்பார்கள்.
ஆனால் இந்து என்று சொல்லும் வெட்கம் கெட்டவர்கள் மட்டும் ஏன் இது மாதிரி எழுதிக்கொண்டே (படித்துகொண்டே) இருக்கிறார்கள்.

8:32 PM, December 09, 2010//

கமலஹாசன் ஒரு இந்து அவர் ஏன் இஸ்லாம், கிறித்துவம் குறித்து எழுதனும் ?

//எனக்கென்னமோ அந்த உணர்ச்சி என்ற நரம்பை இந்துக்கள் நம்பும் கடவுள்கள் வெட்டி எடுத்துவிட்டானோ?
இது என்னை வைத்து நான் சொல்கிறேன்.//

அப்பறம் ஏன் எய்தவன் இருக்க அம்பை உடைக்கனும் என்று சொல்றேள்

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜரத்தினம் said...
இந்த ஆண்டாள் பாடல் பக்தியால் வந்த விரகதாபத்தால் அவரையே தன் கணவனாய் நினைத்து பாடியது. அதில் பக்திதான் அதிகம். ஒரு தாய் தன் பிள்ளையை அணைத்து முத்தம் கொடுப்பதும், அதே தாய் அவள் கணவனை அணைத்து முத்தம் கொடுப்பதும் ஒன்று என்றால் நீங்கள் உங்கள் செஞ்சோற்று கடன் தீர ஆண்டாளை பற்றி பேசுவதில் தவறில்லை.

7:53 PM, December 08, 2010
//

என்னங்க தாயையும் தாரத்தையும் தெய்வமாக நினைக்கனும் என்பது தானே நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது, கூடவே காதலியைச் சொன்னால் மட்டும் (எக்கு) தப்பா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//எம்.எம்.அப்துல்லா said...
உங்களுக்கு பொழுது விடிஞ்சா கலைஞரையும்,பொழுது போகலைன்னா அனைத்து மதங்களையும் திட்றதுதான் வேலை.

2:55 PM, December 07, 2010
//

எது அன்றாடம் வாழ்கையில் பேச்சாக இருக்கோ அதைத்தான் பேசமுடியும். ஒரு மாற்றத்திற்காக அலெக்சாண்டர் படையெடுத்தது தப்புன்னு எழுதினா சிரிக்கமாட்டியளா ?

கோவி.கண்ணன் சொன்னது…

மதி சுதா, ஹரிஸ் நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

உலகநாதன், பிரியமுடன் பிரபு, தமிழ் வினை பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்படித் துறந்தவரைச் சொல்லுங்கோ...தெரிந்து கொள்வோம்.
சங்கராச்சாரி, நித்தியானந்தா...மற்றும் அனைவரின் யோக்கியதையைத் தானே பார்த்துவிட்டோம்.
புலுடா விட்டது போதும் பிழைப்பைப் பார்ப்போம்.

8:36 PM, Decem//

சாமியார்கள் மாட்டாதவரை அவதாரம், மாட்டிவிட்டால் அவருக்கு பலதாரம், போலிசாமியார் :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்