தற்போதைய தமிழக அரசியல் நிலவரத்தை ஸ்பெக்டரம் விவாகாரம் முன், ஸ்பெக்டர்ம் விவகாரத்திற்கு பின் என்று பார்ப்பது பொருத்தமாக இருக்கும். தமிழகத்தில் எப்போதாவது ஏற்படும் அரசியல் வெற்றிடம் இந்த முறை பெரும்திடல் அளவுக்கு விரிந்து கிடக்கிறது. வெற்றிடத்திற்காக காத்திருப்போர் நன்கு பயன்படுத்திக் கொள்ள ஏற்ற நேரம். ஸ்பெக்டர்ம் விவகாரத்தில் மன்மோகன் சிங்கின் அரசிற்கு தொடர்பு இல்லை என்று கொள்வதற்கு ஒன்றும் இல்லை. இந்தியாவில் அரசியல் தொடர்பு இல்லாதா பெரிய நிறுவனங்களே இல்லை என்னும் போது அவர்களுக்கு அரசுகளின் ஒப்பந்தங்களின் (டெண்டர்களினால்) கிடைக்கும் லாபத்தை எந்த ஒரு அரசியல் கட்சியும் கணக்கு போட்டே கமிசன் பெறுகிறார்கள். இந்திய அரசியல் கட்சிகள் அதுவும் ஆளும் கட்சி தகுதி பெற்ற எந்த ஒரு அரசியல் கட்சியும் தொண்டர்களின் பணத்தையோ தலைவர்களின் கைகாசையோ, கட்சி நிதியையோ தேர்தலுக்கு பயன்படுத்துவதில்லை. அனைத்தும் நிறுவன முதலாளிகளின் கைவண்ணத்தால் நடக்கிறது. இந்திய அமைச்சர்களாக யார் யார் வரவேண்டும் என்பதை பொதுமக்கள், முதலமைச்சர், பிரதமர் முடிவு செய்வதைவிட நிறுவன முதலாளிகளே முடிவு செய்கிறார்கள் என்பதை நீரா ராடியா - ரத்தன் டாட்டா பேர உரையாடல்களில் இருந்து அம்பலமாகி உள்ளது.
ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தனியாருக்கு குறைத்து தாரை வார்த்து கொடுத்ததில் திமுக அமைச்சருக்கு மட்டுமே பங்கு இருக்கிறது என்று நம்புவதற்கு இல்லை. இந்திய அளவில் ஆட்சி நடத்தும் மன்மோகன் அரசிற்கு ராசாவின் செயல்பாடுகள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை, அப்படி ஒப்புக் கொண்டால் பிரதமர் பதவிக்கு தகுதி இல்லை என்றே பொருள். செயல்பாடுகள் தெரிந்து இருந்தால் முறைகேடுகளில் பங்கு என்று தெரிந்துவிடும் சிக்கலில் மத்திய அரசு தவிக்கிறது. கடந்த 14 நாட்களாக பாராளுமன்றம் முடக்கமே இவற்றைச் சொல்கிறது. மடியில் கனம் இல்லை என்றால் கூட்டுக் குழு விசாரணைக்கு ஒப்புக் கொள்ள வேண்டியது தானே என்று பல்வேறு தரப்பினரும் கேட்கின்றனர். இந்த சூழலில் தன்னை கை தூய்மையாக காட்டிக் கொள்ள காங்கிரசுக்கு திமுகவை கழட்டி விடுவதைத் தவிர்த்து வேறு வழி இல்லை. ஜெண்டில் மேன் அக்ரிமெண்ட் போல் போட்டுக் கொடுத்துக் கொள்ளாமல் அவரவர் வழியில் செல்லலாம் என்றே விலகிக் கொள்வார்கள் என்று நினைக்க வேண்டி இருக்கிறது. இருந்தாலும் நீதிமன்றமும், எதிர்கட்சிகளும் இதை அப்படியே விட்டுவிடும் என்று சொல்வதற்கில்லை. திமுகவை காங்கிரஸ் கழட்டிவிடும் சூழலில் காங்கிரஸ் மூன்றாவது அணியாக களம் இறங்கும் வாய்பிருக்கிறது. விஜயகாந்த், பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்த்துக் கொண்டு காங்கிரஸ் மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்று முயற்சிக்கக் கூடும் என்றே கருதுகிறேன். ஏனெனில் சோனியா ஜெ வுடன் கூட்டணிக்கு ஒப்புக் கொள்ளமாட்டார். மூன்று அணியாக தமிழக தேர்தல் களம் இருந்தால் மீண்டும் திமுகவிற்கு வாய்ப்பு கிடைக்கும், அதை காங், ஜெ தொடர விடுவும் மாட்டார்கள். இவை ஊகம் தான். ஆனால்...
*****
இன்றைய தேதியில் தமிழகத்தில் படித்த வாக்காளர்களுக்கும், அரசியல் வெறுப்புணர்வாளர்களுக்கும் ஜெ மற்றும் கருணாநிதியே மீண்டும் மீண்டும் தமிழகத்தை பீடித்திருப்பதில் விருப்பமில்லை. கருணாநிதியின் இலவச டிவி ஓரளவு பயனளித்திருக்கிறது, கிரமாத்தினர் கூட ஸ்பெக்டரம் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள், அரசியல் மாற்றம் பற்றி கிராமத்தினர் விவாதிக்கின்றனர். எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு இருந்த அரசியல் வெற்றிடம் தற்போதும் ஏற்பட்டுள்ளது, அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியவர் குறிப்பாக சூப்பர் ஸ்டார் பயன்படுத்திக் கொண்டால் தமிழக அரசியல் களம் முற்றிலுமாக மாறும், எனக்கு ஜெ, மற்றும் கருணாநிதி மீது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது. அவர்கள் எந்த அளவுக்கு தமிழர் நலன் சார்ந்து செயல்படுகிறார்கள் என்பதை மட்டும் பார்ப்பேன். என்போன்றோர் பலரின் நிலைப்பாடும் இதுவே. ஈழத்தமிழர் நலனை, இராமேஸ்வரம் மீனவர் நலனை புறக்கணித்த, புறக்கணிக்கும் காங்கிரசுடன் கையை விடாது பற்றும் இவர்களையே தொடர்ந்து முதல்வராக வைத்துக் கொள்ள தமிழனுக்கு தலையெழுத்தா என்ன ? அதற்கு பதிலாக இராஜபக்சேவை உதைக்கச் சொல்லி வெளிப்படையாக பேசிய ரஜினி காந்த் அரசியல் அனுபவம் இல்லாவிட்டாலும் தமிழர்கள் எதிர்பார்க்கும் மாற்று அரசியல்வாதிக்கு தகுதியானவராகவே தெரிகிறார். மாறன் சகோதர்களுக்கு இருக்கும் மீடியா பலம் திமுக தலைமையின் மீது இருக்கும் கசப்புணர்வு இவை அவர்களின் எந்திரன் ரஜினி பக்கம் சாதகமாக, பிரச்சாரமாக திருப்பும் வாய்ப்பும் இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் இந்த சூழலில் அரசியலுக்கு வரவேண்டும், இதைவிட்டால் வாய்புகள் சிறப்பாக அமையும் வேளைகள் அமைந்தாலும், அவரது ஏறும் வயதிற்கு சரிவருமா என்பது தெரியவில்லை.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
22 கருத்துகள்:
இந்தப் பதிவில் நீங்கள் சொல்லியிருப்பவை மிகவும் நியாயமான கருத்துக்கள். ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி, எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.
// இராஜபக்சேவை உதைக்கச் சொல்லி வெளிப்படையாக பேசிய ரஜினி காந்த் அரசியல் அனுபவம் இல்லாவிட்டாலும் தமிழர்கள் எதிர்பார்க்கும் மாற்று அரசியல்வாதிக்கு தகுதியானவராகவே தெரிகிறார். //
100/100 உண்மை.
ரசினிகாந்துக்கும் அரசிலுக்கு வரவேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் கருணாநிதி என்ற பெரியவருக்காக தன் ஆசைகளுக்கு கடிவாளம் போட்டு வருகிறார்.
கருணாநிதிக்கு பின் திமுகவில் மிகப்பெரிய பிளவு கலவரம் எல்லாம் வரும். அந்த நேரத்தில் களத்தில் இறங்கலாம் என்பது ரசினி சகாக்களின் ஆலோசணை.
ஆனால் ரசினியின் ஒரே மனநிலை அரசியலுக்கு வரவேண்டும் அதற்கு ஆண்டவன் ஆணையிட வேண்டும்.
எப்போதோ?
........வச்சு காமெடி கீமெடி பண்ணலயே!
கோவி,
அவர்தான் அரசியலே பிடிக்கலைனு ஒதுங்கி இருக்காரே? அவர் வருவார்னு எப்படி நினைக்கறீங்க?
கிரமாத்தினர் கூட ஸ்பெக்டரம் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள், அரசியல் மாற்றம் பற்றி கிராமத்தினர் விவாதிக்கின்றனர். //
ஒரு வாரத்திற்கு முன்பு ஜீதமிழில் பகல் செய்தியில் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என சென்னையிலுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் கேட்டபோது பத்தில் எட்டு பேர் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றனர். குடிசை வாசிகள் 'அதென்னமோங்க எங்களுக்கு நல்லது செய்யிறாங்க. அது போறும்.' என்றனர்.
முன்பு சிறீலங்கா விவகாரம் திமுகவை சாய்க்கும் என்றீர்கள். இப்போது ஸ்பெக்ட்ரம்.... இதுவும் அதுபோலத்தான். பாமர மக்களை பாதிக்காத எந்த விஷயமும் திமுகவையும் பாதிக்காது.
//என். உலகநாதன் said...
கோவி,
அவர்தான் அரசியலே பிடிக்கலைனு ஒதுங்கி இருக்காரே? அவர் வருவார்னு எப்படி நினைக்கறீங்க?
12:09 PM, December 03, 2010//
அப்ப வர வேண்டிய நேரத்தில் கரெக்ட்டாக வந்துடுவேன்ன்னு சொல்வதெல்லாம் ? :)
//Prabhu Rajadurai said...
........வச்சு காமெடி கீமெடி பண்ணலயே!
11:56 AM, December 03, 2010//
வெறெந்த புதியவ்ர்களைவிடவும் ரஜினி அரசியலுக்கு வரனும் என்கிற எதிர்பார்ப்பு பலருக்கு இருக்கு !
//ஆனால் ரசினியின் ஒரே மனநிலை அரசியலுக்கு வரவேண்டும் அதற்கு ஆண்டவன் ஆணையிட வேண்டும்.
எப்போதோ?
11:42 AM, December 03, 2010//
ஆண்டவர்களை துரத்தத்தான் ரஜினி வரனும், ஆண்டவர்களே அதற்கு வரம் கொடுப்பார்களா ? :))))))))
//kggouthaman said...
இந்தப் பதிவில் நீங்கள் சொல்லியிருப்பவை மிகவும் நியாயமான கருத்துக்கள். ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி, எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.
10:46 AM, December 03, 2010//
அரசியல் மாற்றம் தேவை என்பது எனது விருப்பம்
//முன்பு சிறீலங்கா விவகாரம் திமுகவை சாய்க்கும் என்றீர்கள். இப்போது ஸ்பெக்ட்ரம்.... இதுவும் அதுபோலத்தான். பாமர மக்களை பாதிக்காத எந்த விஷயமும் திமுகவையும் பாதிக்காது.
1:32 PM, December 03, 2010//
ஈழ விவகாரம் மீடியாக்களால் மறைக்கப்பட்டது உண்மை. மேலும் வ்ரும் தேர்தலிலும் வி.காந்து தனித்து நின்று வாக்கை பிரிப்பார் என்று நான் நினைக்கப் போவதில்லை :)
டி பி ஆர் அவர்கள் சொல்வது சரிதான்.
வோட்டளிக்கும் மக்களில் படித்தவர்களை விட, படிக்காதவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றார்கள். (படித்தவர்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று கியூவில் நிற்பதற்குக் கூட பொறுமை இல்லாதவர்கள்) படிக்காதவர்கள், சிலர் மீது நல்ல நம்பிக்கை வைத்திருப்பார்கள். யார் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்களோ, அவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பார்கள், (வோட்டு போடுவதற்கு). அதனால்தான் ரஜினி போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால், வெகு ஜன வோட்டுகளைப் பெற முடியும்.
கறந்த பால் மடிபுகாது.
கருவாடு மீனாகாது.
//எம்.எம்.அப்துல்லா said...
கறந்த பால் மடிபுகாது.
கருவாடு மீனாகாது.
2:13 PM, December 03, 2010//
ரஜினி ரசிகர்களிடம் அ(க)டி பட்டால் நான் பொறுப்பு இல்லை. :)
பாங்க ரஜினி..ஏன் அவரை இப்படி பழிவாங்கிகிறீர்கள்! உள்ளே வந்துவிட்டால் நினைத்ததையெல்லாம் பேசவும் முடியாது, செய்யவும் முடியாது.
என்னை பொருத்த வரை அவர் அரசியலுக்கு வராமல் இருப்பது அவருக்கு உத்தமம்.
அண்ணே....கேப்டன் இருக்காரே.....அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாப்போமே...!
// கபிலன் said...
அண்ணே....கேப்டன் இருக்காரே.....அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து //
கேப்டன் பதவிக்கு வரும் முன்பே கட்சி அதிகார பீடங்களில் அவருடைய குடும்பத்தினரே இருக்கின்றனர் என்பது அவருக்கு பின்னடைவு தான்
கலைஞருக்கு மாற்றாக மண்ணின் மைந்தன் அண்ணன் குள்ளமணியை முன்னிறுத்தாத தமிழின விரோதப்போக்கை வண்மையாக கண்டிக்கிறேன்.
உங்கள மாதிரி ஆளுகளுக்காகதான் கவிப்பேரரசு அன்னைக்கே பாடி வச்சாரு.
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கான்னு.
சூம்புற ச்டார் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆச்சியப்பிடிக்கும் போது ஈழத்தமிழர்கள் பேரமைதி பெற்றுப் பெருவாழ்வு வாழ்வது திண்ணம்.
நன்றி! சரியான கட்டுரை! ஆனால் ரஜினி காந்தோ என்ன செய்வார் என்று அவருக்கே தெரியுமோ என்னவோ!
நல்லவன் வேண்டும் என்றால் எனக்கு ஒரு வாய்ப்புத் தரலாமே?
கூட்டுக் கள்வாணிகள் கட்சி!..எப்படி இருக்கு நம்ம கட்சிப் பேரு?
நான் வெற்றிபெற்றால் தகவல் தொழில் நுட்பம் உங்களுக்குத்தான்.
கோவி அண்ணே, நான் இரஜினியின் நல்ல இரசிகன், ஆனா இவரு அரசியலுக்கு லாயக்கில்லை, அவர் குணத்துக்கு அவரால சமாளிக்க முடியாது.
இரஜினி இரசிகர்களையே, மக்களையே நம்ப வில்லை, முன்னர் அந்த வாய்ப்பு வந்த போது, நரசிம்ம ராவின் மிரட்டலுக்கு பயந்து ஒதுங்கினர், இனி மீண்டும் அவருக்கு வாய்ப்பு வருவது கடினம்.
கருத்துரையிடுக